Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்!

நாட்டில் நிலவும் கடும் குளிரால் கால்நடைகள் பல்வேறு நோய் நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் பல இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடைகளில் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.
 

http://www.samakalam.com/கடும்-குளிரால்-இறக்கும்/

 

  • கருத்துக்கள உறவுகள்

2 நாளாக சூரியனைக் காணவில்லை! கண்டா வரச்சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் பலி ! பெரும் சோகத்தில் மக்கள்

By T. SARANYA

09 DEC, 2022 | 02:34 PM
image

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. 

22.jpg

இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றனர்.

கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும்,நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும்,  பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05  மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

54.jpg

அத்தோடு திருவையாறு  கிராமத்தில்  கடும் காற்று காரணமாக மரம்  முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.

 

23.jpg

கடும் குளிருடன் கூடிய  மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்,  இன்று (09) மதியம்வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ள கால்நடை திணைக்களம்  இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/142633

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுவதும் கடும் குளிரான கால நிலை இயற்கையும் எம்மை உருட்டி பிரட்டிவிட்டு போகிறது  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை முழுவதும் கடும் குளிரான கால நிலை இயற்கையும் எம்மை உருட்டி பிரட்டிவிட்டு போகிறது  

Bild

சும்மா தமாஷ்.....😂

Bild

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சின்ன குளிருக்கு இப்படி கால்நடை இறக்குமா? இது வேறு என்னவோ நோய் போல படுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இந்த சின்ன குளிருக்கு இப்படி கால்நடை இறக்குமா? இது வேறு என்னவோ நோய் போல படுகிறது?

நேரா குளிருக்கைநின்றால் இறக்கும். முன்பு மாரிநேரம் வேப்பம் புகை போட்டு கொட்டில் முழுக்க ஒதுக்கு அடைச்சுத்தான் ஆடு மாடு விடுறது. கடுமையான வாடைக்காற்று கூடாது

Edited by வாதவூரான்
word mistake

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

Bild

சும்மா தமாஷ்.....😂

Bild

எனக்கு பழகிய ஒன்று  தான் ஆனால் இங்குள்ள பலருக்கு அது புதுசு சாமியார் 

மத்திய கிழக்கில் இதைவிட குளிர் ஐரோப்பாவை விட குறைவு 

13 minutes ago, goshan_che said:

இந்த சின்ன குளிருக்கு இப்படி கால்நடை இறக்குமா? இது வேறு என்னவோ நோய் போல படுகிறது?

ஆடு மாடு இறப்பது வழமை குளிர் , மழைக்கு  மாட்டுக்கு புகை வைப்பார்கள் ஆட்டை திறக்காமல் கொட்டகைக்குள் ஒரு ஓரத்தில் நெருப்பை எரிப்பார்கள் அதன் சூடு ஆட்டை  சூடாக வைத்திருக்கும் என்பதால் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாதவூரான் said:

நேரா குளிருக்கைநின்றால் இறக்கும். முன்பு மாரிநேரம் வேப்பம் புகை போட்டு கொட்டில் முழுக்க ஒதுக்கு அடைச்சுத்தான் ஆடு மாடு விடுறது. கடுமையான வாடைக்காற்று கூடாது

ஓ..அப்படியா? எனக்கு இதில் அனுபவம் இல்லை. தகவலுக்கு நன்றி🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாதவூரான் said:

நேரா குளிருக்கைநின்றால் இறக்கும். முன்பு மாரிநேரம் வேப்பம் புகை போட்டு கொட்டில் முழுக்க ஒதுக்கு அடைச்சுத்தான் ஆடு மாடு விடுறது. கடுமையான வாடைக்காற்று கூடாது

ம்ம் எங்க பக்கமும் இதுதான் செய்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரிலை இருக்கேக்கை  குளிர் நேரம் தென்னம் கோம்பை மூட்டி குளிர் காய்ஞ்சிருக்கிறன்....

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மாண்டஸ் சூறாவளியால் 40 குடும்பங்கள் பாதிப்பு

By T. SARANYA

09 DEC, 2022 | 04:53 PM
image

மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக நான்கு பிரதேச செயலகப் பிரிவிகளில் 40  குடும்பங்கள் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இரவு  மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தால் மன்னார் ,  மாந்தை மேற்கு, நானாட்டான், மடு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. மீன்பிடி வலைகள் என்பன கடல் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போய் உள்ளன.

இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 40 குடும்பங்களைச் சார்ந்த 159 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்கள்.

11 வீடுகள், ஒரு சிறு வியாபார குடிசை மற்றும்  கடை  சேதமடைந்துள்ளதோடு,  100 வாழை மரங்களும் சேதமாகியுள்ளன. மீன்பிடி படகுகள் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. அத்தோடு, 10 மீன்பிடி வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/142675

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேப்பம் இலை போட்டு நெருப்பு மூட்டினால் நுளம்பு வராது

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கு பழகிய ஒன்று  தான் ஆனால் இங்குள்ள பலருக்கு அது புதுசு சாமியார் 

மத்திய கிழக்கில் இதைவிட குளிர் ஐரோப்பாவை விட குறைவு 

ஆடு மாடு இறப்பது வழமை குளிர் , மழைக்கு  மாட்டுக்கு புகை வைப்பார்கள் ஆட்டை திறக்காமல் கொட்டகைக்குள் ஒரு ஓரத்தில் நெருப்பை எரிப்பார்கள் அதன் சூடு ஆட்டை  சூடாக வைத்திருக்கும் என்பதால் 

நன்றி தனி

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை  குளிர் நேரம் தென்னம் கோம்பை மூட்டி குளிர் காய்ஞ்சிருக்கிறன்....

பாவம் மனுசன் அங்க எந்த மட்டை வச்சி பத்த வைக்குதோ தெரியல🤔🤣

39 minutes ago, குமாரசாமி said:

வேப்பம் இலை போட்டு நெருப்பு மூட்டினால் நுளம்பு வராது

ம்  தேங்காய் உரிச்ச மட்ட ( உரிமட்டை என்பார்கள் சாமி ) அதை எரித்து அதனுள் இலையை போட்டு எரிப்பம் இப்பவும் நுளம்புக்கு அதை விட எந்த  மருந்தும் இல்ல 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாவம் மனுசன் அங்க எந்த மட்டை வச்சி பத்த வைக்குதோ தெரியல🤔🤣

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

ஆக 2000 மோ,இங்கை இந்தமுறை £5000 மேலை பொகும்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாவம் மனுசன் அங்க எந்த மட்டை வச்சி பத்த வைக்குதோ தெரியல🤔🤣

ரொமேனியன் மட்டை இதுக்கெண்டு சொல்லி எடுக்கிறவர்🤣. Wood burner 

Just now, வாதவூரான் said:

ஆக 2000 மோ,இங்கை இந்தமுறை £5000 மேலை பொகும்

அது போன வருசம். இந்த வருசம் …அவ்….

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

ம் அதிக தொகைதான் இஞ்ச இப்ப கரண்டுக்கு , தண்ணிக்கும் , கேசுக்கும் , பெற்றல் , மண்ணெண்ணெய்)  

1 minute ago, goshan_che said:

ரொமேனியன் மட்டை இதுக்கெண்டு சொல்லி எடுக்கிறவர்🤣. Wood burner 

செம கட்டையா இருக்கும் போல நான் கட்டையைத்தான் சொன்னன் பிளீஸ் நம்புங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, வாதவூரான் said:

ஆக 2000 மோ,இங்கை இந்தமுறை £5000 மேலை பொகும்

இது இவ்வளவு காலமும் வந்த நோர்மல் கணக்கு 😁

இனி வாற கணக்கு வேற லெவல்.....😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

இது மாண்புமிகு உக்ரேனில இறங்க முதலா, பிறகா?

ஆனால் ஐரோப்பாவிலேயே வீடுகள் வெப்பத்தை தக்க வைக்காமல் கட்டி இருப்பது யூகேயில்தான்.

ஸ்கெண்டிநேவியா, ஜேர்மன் வீடுகள் அமைப்பு 👌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் அதிக தொகைதான் இஞ்ச இப்ப கரண்டுக்கு , தண்ணிக்கும் , கேசுக்கும் , பெற்றல் , மண்ணெண்ணெய்)  

செம கட்டையா இருக்கும் போல நான் கட்டையைத்தான் சொன்னன் பிளீஸ் நம்புங்க

ரஷ்யன் கட்டையும் ரஷ்யன் வொட்காவும் வைச்சிருந்தால் வீட்டு கீற்றர் செலவு குறையும்.....😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ரஷ்யன் கட்டையும் ரஷ்யன் வொட்காவும் வைச்சிருந்தால் வீட்டு கீற்றர் செலவு குறையும்.....😂

நான் நம்ப மாட்டன் படத்த போடுங்க பார்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

இது மாண்புமிகு உக்ரேனில இறங்க முதலா, பிறகா?

மா  உ இ மு.....🤣

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Vetti - Discover & Share GIFs | Gif,  Cute gif, Discover

  • கருத்துக்கள உறவுகள்

500 கால்நடைகள் வடக்கில் உயிரிழப்பு ; நாட்டில் 10 ஆயிரம் பேர் சீரற்ற காலநிலையால் பாதிப்பு

By T. SARANYA

10 DEC, 2022 | 05:41 PM
image

(எம்.மனோசித்ரா)

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி  சனிக்கிழமை (10) அதிகாலை வடக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடந்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை நிலவியது.

கடும் காற்று மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக வடக்கில் ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கள் 500 ஐ கடந்துள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுமார் 358 மாடுகளும், 141 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

இதேவேளை, கடும் காற்று மற்றும் மழை காரணமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 இற்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,000 இற்கும் அதிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் 3,006 குடும்பங்களைச் சேர்ந்த 10,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இரு வீடுகள் முழுமையாகவும் 2,721 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் மாண்டஸ் சூறாவளி தமிழகத்தை கடந்து சென்றுள்ளமையினால் இதனால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை படிப்படியாக சீராகும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் காற்று காரணமாக வடக்கு மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பான நிலை காணப்படும் என்பதோடு, காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 40 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/142732

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.