Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லஞ்சக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உப தலைவர் உட்பட ஐவர் பெல்ஜியத்தில் கைது ! 23 கோடி ரூபா பணம் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லஞ்சக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உப தலைவர் உட்பட ஐவர் பெல்ஜியத்தில் கைது ! 23 கோடி ரூபா பணம் மீட்பு

By SETHU

11 DEC, 2022 | 11:06 AM
image

வளைகுடா நாடொன்றுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உப தலைவர்களில் ஒருவரான ஈவா கெய்லி, முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட ஐவரை பெல்ஜிய பொலிஸார் நேற்றுமுன்தினம் (09) கைது செய்துள்ளனர்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் கத்தார் மீது மறைமுகமாக குற்றம் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் தொடர்பில் இவரகள் கைது செய்யப்பட்டுள்ளாக  செய்தி வெளியாகியுள்ளது. 

44 வயதான ஈவா கெய்லி, முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளரான கிறீஸ் பிரஜையாவார்.

2014 ஆம் ஆண்டு முதல் அவர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். அப்பாராளுமன்றத்தின் 14 உப தலைவர்களில் ஒருவராக கடந்த ஜனவரி மாதம் அவர் தெரிவாகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரும் இத்தாலிய பிரஜைகள் அல்லது இத்தாலியிலிருந்து வந்தவர்கள் என இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. 

இவ்விசாரணைகள் தொடர்பில் பெல்ஜியத்தின் தலைநகர், பிரசல்ஸில் 16 இடங்களில் சோதனைகள் நேற்றுமுன்தினம்  நடத்தப்பட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இச்சோதனைகள் மூலம் 600,000 யூரோ (சுமார் 23 கோடி இலங்கை ரூபா/ 5.2 கோடி இந்திய ரூபா) பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணினிகள், தொலைபேசிகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் அறிக்கையொன்றில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமான டிசெம்பர் 9 ஆம் திகதி இம்முற்றுகைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

European-Parliament-Vice-President-Eva-K

ஈவா கெய்லி

ஐரோப்பிய பாராளுமன்றத்தின், பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்களில் வளைகுடா நாடொன்று செல்வாக்கு செலுத்தியதாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் செல்வாக்குள்ள நபர்களுக்கு பெருந்தொகைப் பணம் அல்லது அன்பளிப்புகளை வழங்குவதன் மூலம் இது செய்யப்பபட்டதாக குற்றம்சுமத்தப்படுகிறது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

மேற்படி நாடு எது என்பதை பெல்ஜிய அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.  ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவ்விசாரணைகள் கத்தார் தொடர்பானது என பெல்ஜிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாலிய சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரை  ஊழலில் ஈடுபட வைப்பதற்கு கத்தாரினால் முயற்சிக்கப்படுவதாக இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை விசாரணைகளுடன் தொடர்புடைய வட்டாரமொன்று உறுதிப்படுத்தியதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது. 

Luca-Visenthini-arrested-iin-Belgium.jpg

லூகா விசேன்தினி

மேற்படி முன்னாள் உறுப்பினர் பியர் அன்டோனியோ பான்ஸேரி  என பெல்ஜிய ஊடகங்களான 'ல சுவார்' மற்றும் 'நெக் ஆகியன குறிப்பிட்டுள்ளன. 67 வயதான பான்ஸேரி 2004 முதல் 2019 வரை ஐரோப்பிய நாடாளுன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.

சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நாயகமான இத்தாலியைச் சேர்ந்த லூகா விசேன்தினியும் கைது செய்யப்பபட்டுள்ளார் என பெல்ஜியத்தின் 'ல சுவார்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இச்செய்திகள் தொடர்பாக தான் அறிந்துள்ளதாக அச்சம்மேளனம் கூறியுள்ளது. ஆனால் மேலதிக கருத்து எதையும் வெளியிடவில்லை.

ஈவா கெய்லியின் துணைவர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் ஆகியோரும் கைதியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் கத்தார் மீது தொழிலாளர் பாதுகாப்பு, மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் தனது தனது விம்பத்தை சிறப்பாக்குவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டது. இப்பின்னணியில் மேற்படி ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

Pier-Antonio-Panzeri.jpg

 அன்டோனியோ பான்ஸேரி 

உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னர் கத்தாரின் தொழிலாளர் அமைச்சர் அலி பின் சமிக் அல் மாரியை ஈவா கெய்லி சந்தித்திருந்தார். 

அரேபிய உலகக் கிண்ணமானது அரசியல் பரிணாமங்களுக்கு மறுசீரமைப்புகளுக்கும் சிறந்த கருவியாக அமையும் என தான் நம்புவதாகவும், தொழிலாளர் மறுசீரமைப்பு விடயங்களில் கத்தாரின் முன்னேற்றத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரித்து கௌரவிப்பதாகவும் ஈவா கெய்லி கூறிய வீடியோ வெளியாகியிருந்தது.

நவம்பர் இறுதியில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றுகையில், அப்பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் சிலர், கத்தாரை வெருட்டுவதாகவும் கத்தாருடன் பேசுகின்றன அல்லது தொடர்புடைய அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் கூறியிருந்தார்.

ஈவா கெய்லி கைது செய்யப்பட்டதையடுத்து அவரை தமது கட்சியிலிருந்து நீக்குவதாக கிரேக்க சோஷலிஸ்ட் கட்சியும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சோஷலிஸ மற்றும் ஜனநாயகக் முற்போக்குக் கூட்டணியும் அறிவித்துள்ளன. (சேது)

https://www.virakesari.lk/article/142783

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

லஞ்சக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உப தலைவர் உட்பட ஐவர் பெல்ஜியத்தில் கைது ! 23 கோடி ரூபா பணம் மீட்பு

ஆசியாவில எல்லோரும் அடிக்கிறாங்கள்.

நாமளும் அடித்து பார்போம் என எண்ணியிருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஆசியாவில எல்லோரும் அடிக்கிறாங்கள்.

நாமளும் அடித்து பார்போம் என எண்ணியிருப்பார்களோ?

ஆசியா மாதிரி நாட்டை கெடுப்போம் என்று தான் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது கைது பணம் பறிமுதல் என்று நல்ல உடனடி நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆசியா மாதிரி நாட்டை கெடுப்போம் என்று தான் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது கைது பணம் பறிமுதல் என்று நல்ல உடனடி நடவடிக்கை.

ஆசியாவைப் பார்த்து பல நாடுகளும் மெதுமெதுவாக தொடங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆசியா மாதிரி நாட்டை கெடுப்போம் என்று தான் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது கைது பணம் பறிமுதல் என்று நல்ல உடனடி நடவடிக்கை.

16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆசியாவைப் பார்த்து பல நாடுகளும் மெதுமெதுவாக தொடங்குகிறார்கள்.

ஐரோப்பாவில் கிறீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் ஆசியாவை மிஞ்சுவார்கள்.

ஜேர்மனி, யூகே, பிரான்சில் கமுக்கமாக அடிப்பார்கள் - கருணாநிதி போல விஞ்ஞான ரீதியில் ஊழல் 🤣.

குறிப்பாக ஐரோப்பிய் யூனியன் - அதிகாரிகள் செலவு சொல்லி மாளாது. அதே போலவே யூகே எம்பி மாரும் expenses scandal இல் மாட்டினார்கள்.

எங்கிருந்தாலும் அரசியல்வாதி எண்டால் கள்ளந்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் பாருங்கோ உக்ரேன் பிரச்சனையில  ரஷ்யன்கள் மட்டும் கள்ளர்,காசுக்கொள்ளையர், சர்வாதிகாரியள். 🤣

மேற்கத்தையான்கள் சுத்த தங்கப்பவுண்ஸ்கள் 😂

இதுக்கு பதில் சொல்ல வேண்டாம்  🤪

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

ஆனால் பாருங்கோ உக்ரேன் பிரச்சனையில  ரஷ்யன்கள் மட்டும் கள்ளர்,காசுக்கொள்ளையர், சர்வாதிகாரியள். 🤣

மேற்கத்தையான்கள் சுத்த தங்கப்பவுண்ஸ்கள் 😂

இதுக்கு பதில் சொல்ல வேண்டாம்  🤪

வேண்டாம் எண்டாலும் சொல்லுவோமே🤣.

ரஸ்யா அரசியல்வாதிகள் மட்டும் கள்ளர், மேற்கின் அரசியல்வாதிகள் பவுண் எண்டு எங்கும் சொல்லவில்லை.

இத்தனை வருட மேற்குலக வாழ்க்கையின் பின் யாரும் அப்படி சொன்னால் அவர்களுக்கு மேல்வீடு சரியில்லை எண்டுதான் அர்த்தம்.

ஆனால் இதை வைத்து ரஸ்யாவில் இருக்கும் மாபியா ஆட்சி முறையும் மேற்கில் இருக்கும் ஜனநாயக ஆட்சி முறையும் ஒன்று என வாதாட முடியாது.

இங்கே ஐரோப்பிய பாராளுமன்றின் உபதலைவர் கைதாகியுள்ளார். இது ரஸ்யாவில் நடக்குமா? அவர் புட்டினுடன் முரண்பட்டால் மட்டுமே நடக்கும். 

அப்போதும் கூட அவர் மாடியில் இருந்து “தவறி” விழுவாரே ஒழிய விசாரணை நடவாது (நடந்தால் புட்டினை மாட்டி விடுவார்).

இதுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

ஆனால் இதை வைத்து ரஸ்யாவில் இருக்கும் மாபியா ஆட்சி முறையும் மேற்கில் இருக்கும் ஜனநாயக ஆட்சி முறையும் ஒன்று என வாதாட முடியாது.

மேற்குலக ஆட்சியாளர்கள் ஜனநாயக முறையில் ஆட்சி கதிரையில் அமர்ந்த பின் சர்வாதிகளை விட மோசமாகத்தான் நடக்கின்றார்கள்.   ஓரிரு நாடுகளை தவிர.....

அரசியல் கொலைகள் மேற்குலக நாடுகளில் அறவே இல்லை என்கிறீர்களா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மேற்குலக ஆட்சியாளர்கள் ஜனநாயக முறையில் ஆட்சி கதிரையில் அமர்ந்த பின் சர்வாதிகளை விட மோசமாகத்தான் நடக்கின்றார்கள்.   ஓரிரு நாடுகளை தவிர.....

நான் மேற்கு என கருதுவது யூஎஸ் + கனடா + யூகே + சுவிஸ்+ ஈயூ + அவுஸ்+ நியூசி+நோர்வே.

இதில் ஓபன், டிரம்ப் போன்ற விதிவிலக்குகள் இருந்தாலும் அவர்கள் உள்நாட்டில் ஆட்சி செய்யும் முறையை ஒரு நாளும் புட்டின், சதாம், கடாபி அவரவர் நாட்டில் ஆட்சி செய்யும் முறையோடு ஒப்பிடவே முடியாது.

நான் முன்பே சொல்லி உள்ளேன் மேற்கின் தாராள ஜனநாயகம் 100% சிறந்தது என்பது அல்ல என் நிலை.

இப்போ உள்ளதில் இதுவே சிறந்தது. இதை ரஸ்யாவில், சீனாவில், நடப்பதோடு ஒப்பிடமுடியாது.

2 hours ago, குமாரசாமி said:

அரசியல் கொலைகள் மேற்குலக நாடுகளில் அறவே இல்லை என்கிறீர்களா? 

ஏன் இல்லாமல்? ஆனால் அவை ஒரு கலாச்சரமாக இல்லை. பல வருடங்களுக்கு ஒரு மர்ம கொலையை - இது அரசியல் கொலையோ என் சந்தேகிக்கும் படி இருக்கும்.

ரஸ்யாவில், சீனாவில், இலங்கையில் அப்படி அல்ல. அங்கே அரசியல் கொலை ஒரு கலாச்சாரம். இதுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

நான் மேற்கு என கருதுவது யூஎஸ் + கனடா + யூகே + சுவிஸ்+ ஈயூ + அவுஸ்+ நியூசி+நோர்வே.

இதில் ஓபன், டிரம்ப் போன்ற விதிவிலக்குகள் இருந்தாலும் அவர்கள் உள்நாட்டில் ஆட்சி செய்யும் முறையை ஒரு நாளும் புட்டின், சதாம், கடாபி அவரவர் நாட்டில் ஆட்சி செய்யும் முறையோடு ஒப்பிடவே முடியாது.

நான் முன்பே சொல்லி உள்ளேன் மேற்கின் தாராள ஜனநாயகம் 100% சிறந்தது என்பது அல்ல என் நிலை.

இப்போ உள்ளதில் இதுவே சிறந்தது. இதை ரஸ்யாவில், சீனாவில், நடப்பதோடு ஒப்பிடமுடியாது.

ஏன் இல்லாமல்? ஆனால் அவை ஒரு கலாச்சரமாக இல்லை. பல வருடங்களுக்கு ஒரு மர்ம கொலையை - இது அரசியல் கொலையோ என் சந்தேகிக்கும் படி இருக்கும்.

ரஸ்யாவில், சீனாவில், இலங்கையில் அப்படி அல்ல. அங்கே அரசியல் கொலை ஒரு கலாச்சாரம். இதுதான் வித்தியாசம்.

அரசியல் என்றால் எல்லாம் அண்ணன் தம்பிகள் தான். பெரிதாக அவன் பெரிது இவன் பெரிது என அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.