Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு

By DIGITAL DESK 5

17 DEC, 2022 | 05:04 PM
image

( எம்.நியூட்டன்)

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது.

IMG-20221217-WA0035.jpg

இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

IMG-20221217-WA0040.jpg

இதன் போது கட்சியின் தலைவராக சி.வேந்தன், உபதலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், பொருளாளராக த.விதுரன், தேசிய அமைப்பாளராக க.துளசி, மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ந.நகுலேஸ், வவுனியா மாவட்ட இணைப்பாளராக நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நவமேனன், யாழ் மாவட்ட இணைப்பாளராக கவியரசன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக கருணாகரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக ஆதவன், மன்னார் மாவட்ட இணைப்பாளராக ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20221217-WA0050.jpg

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, வடமாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்

IMG-20221217-WA0053.jpg

IMG-20221217-WA0055.jpg

தமிழ்த் தேசிய  பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143366

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது.

உப்பிடித்தான் பலர் சொல்லி அரசோடு இணைந்து ஜனநாயகத்தை கெடுத்து வயிறு வளர்க்கிறார்கள், இதில இவர்கள் வேறு. ஜனநாயகமே இல்லாத நாட்டில் இணைந்து எதை சாதிப்பது? ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படத்தான் முடியும். 

3 hours ago, ஏராளன் said:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, வடமாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்

இதுக்குள்ளுமா? உருப்பட்ட மாதிரித்தான்!

59 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்திய தூதரகம் தான் இவர்களை வழி நடாத்துவதாக கூறினார்களே?

எனக்கென்னவோ இதில ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிகிறது, வி. முரளிதரனும் இவர்களோடு இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அங்காலை சுதந்திர தினத்துக்கு முதல் இனப்பிரச்சனைக்கு தீர்வு என ஒரே ஆரவாரம், இவர்கள் வேறு இல்லாத ஊருக்கு வீதி அமைக்கினம். என்னதான் நடக்கப்போகிறது சுதந்திர தினத்தில்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

இவர்கள் அண்மையில் புதுடில்லி போய் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

1 hour ago, satan said:
4 hours ago, ஏராளன் said:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, வடமாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்

இதுக்குள்ளுமா? உருப்பட்ட மாதிரித்தான்

இந்த பட்டியலில் உள்ளோர் இந்தியா கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் அண்மையில் புதுடில்லி போய் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

ஆமாம்! அப்போது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கும்படி கோரியிருந்தார்கள். அதற்கு பதில்லிலை தங்கள் காரியத்தில் இறங்கியுளார்கள். இவர்கள் வெறும் அம்பே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னாள் போராளிகள் என்று எவரும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அரசியல் செய்வது பொருத்தமற்றது. 

அந்த பெயரை தவிர்த்து தமது கடமைகளை மக்களுக்கு சேவை செய்து அவர்கள் மனங்களில் இடம்பெறுவதே சரியான அரசியல்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, விசுகு said:

முன்னாள் போராளிகள் என்று எவரும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அரசியல் செய்வது பொருத்தமற்றது. 

அந்த பெயரை தவிர்த்து தமது கடமைகளை மக்களுக்கு சேவை செய்து அவர்கள் மனங்களில் இடம்பெறுவதே சரியான அரசியல்.

சரியகச் சொன்னீர்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

முன்னாள் போராளிகள் என்று எவரும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அரசியல் செய்வது பொருத்தமற்றது.

தமிழ் தேசியத்தை வைத்து மக்களை ஏமாற்றியது முடிவுக்கு வருவதால் பெயர், ஆள், கட்சி மாற்றம். இவர்கள் வெறும் நடிகர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

எனக்கென்னவோ இதில ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிகிறது, வி. முரளிதரனும் இவர்களோடு இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அங்காலை சுதந்திர தினத்துக்கு முதல் இனப்பிரச்சனைக்கு தீர்வு என ஒரே ஆரவாரம், இவர்கள் வேறு இல்லாத ஊருக்கு வீதி அமைக்கினம். என்னதான் நடக்கப்போகிறது சுதந்திர தினத்தில்?

 தான் தலைவர் பதவி என்ற போதையில் நிற்பாரே…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்டிப்பாக, அவர் ஏற்கெனவே சுழி போட்டுள்ளார். ஆனால் அதற்கு பல கண்டங்களை தாண்ட வேண்டும். இது தமிழ் தேசியத்திற்கு ஒப்பான ஒன்று அதாவது அதற்கு மறு பெயர். அது வலுவிழப்பதால்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.