Jump to content

டுவிட்டர் சிஇஓ பதவியை விரைவில் இராஜினாமா செய்கிறேன் ; ஒரு முட்டாளை தேடிப்பிடிப்பேன் - எலான் மஸ்க்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டர் சிஇஓ பதவியை விரைவில் இராஜினாமா செய்கிறேன் ; ஒரு முட்டாளை தேடிப்பிடிப்பேன் - எலான் மஸ்க்

By Digital Desk 2

21 Dec, 2022 | 09:44 AM
image

டுவிட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியை (சிஇஓ) இராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

"டுவிட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி (சிஇஓ) பதவியை நான் விரைவில் இராஜினாமா செய்கிறேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாளை தேடிப்பிடித்துவிட்டு இராஜினாமா செய்வேன். அதன் பின்னர் மென்பொருள், சர்வர் அணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு 2 மாதங்களாக பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் பணி நீக்கம் உட்பட அவர் எடுத்த பல முடிவுகள் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளானது.

8.jpg

இந்நிலையில்,  எலான் மஸ்க் டுவிட்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரி (சிஇஓ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் கருத்துக் கணிப்பு நடத்தினார். கருத்து கணிப்பில், 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் சிஇஓ பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எலான் மஸ்க்கை பின்தொடர்பவர்கள் கூறும்போது, 

“ரஷ்யா - உக்ரைன் போரை எவ்வாறு தீர்ப்பது என்று கூட ஏற்கெனவே கருத்து கணிப்பு நடத்தி உள்ளார். எனவே, பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு ஏற்கெனவே ஒருவரை தெரிவு செய்து விட்டு அவர் இந்த கருத்து கணிப்பை நடத்துவது போலவே தெரிகிறது” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர் முன்னெடுத்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்த நிலையில் ராஜினாமாவை அவர் உறுதி செய்துள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னரே பல்வேறு தருணங்களில் மஸ்க் தான் அளவுக்கு அதிகமாகவே பொறுப்புகளை சுமப்பதாகக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/143690

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளின் நடவடிக்கைகள் இப்ப ஒருமாசமாக பரவாயில்லை என நினைக்கிறேன்.

பலரும் கொடுத்த feedback ஐ உணர்ந்து நடப்பதாக தெரிகிறது. கத்தியை முன்னர் போல் தற்சார்பாக சுழட்டுவது குறைவாகியுள்ளதாக படுகிறது. எனக்கு பிரமையோ தெரியாது.

எலோன் மஸ்கை சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2022 at 08:27, கிருபன் said:

டுவிட்டர் சிஇஓ பதவியை விரைவில் இராஜினாமா செய்கிறேன் ; ஒரு முட்டாளை தேடிப்பிடிப்பேன் - எலான் மஸ்க்

இப்படி மனசுக்குள்ளே சொல்லித்தான் அகர்வால் இராஜினாமா செய்தவர் என்று இவருக்குத்தெரியுமோ.?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, முதல்வன் said:

இப்படி மனசுக்குள்ளே சொல்லித்தான் அகர்வால் இராஜினாமா செய்தவர் என்று இவருக்குத்தெரியுமோ.?

அதுவும் லம்ப்பா 40 பில்லியன் வேற 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்லாவை சரிவிலிருந்து காக்க ஈலோன் மஸ்க் ட்விட்டர் தலைமை பதவியை கைவிட வேண்டுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மோனிகா மில்லர்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
பங்கு வீழ்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி தாமதம் குறித்த கவலைகள் காரணமாக ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. 

 

2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை ஆப்பிள் பங்குகள் கண்டுள்ளன. இதேபோல், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய உச்சத்தில் இருந்த டெஸ்லாவின் பங்குகள், அதனுடன் ஒப்பிடும்போது 73% வீழ்ச்சியை தற்போது சந்தித்துள்ளன. 

 

 

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வாரக்கணக்கான ஊரடங்கு  காரணமாக சீனாவில் உற்பத்தியைத் தொடர நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. தற்போது, பல ஆண்டுகளாக அமலில் இருந்த கட்டுப்பாடுகளை சீனா விலக்கிக்கொண்ட நிலையில், தொழிலாளர்கள் நெருக்கடியை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. 

 

2023ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி  முதல் பயணிகளுக்கான கடுமையான தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக சீனா அறிவித்துள்ளதை, 2023ஆம் ஆண்டில் விநியோகச் சங்கிலி இயக்கம் எளிதாக இருக்கும் என்பதற்கான சாத்தியக் கூறாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். 

அதேவேளையில், கூடுதல் வட்டி விகிதம் உயர்வு, சர்வதேச பெருளாதார மந்தம், யுக்ரேனில் தொடரும் போர் ஆகியவை குறித்தும் சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர். 

தற்போது, முக்கிய உற்பத்தி மையங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி மீண்டும் அதிகரிக்க நேரம் எடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா அலை ஏற்பட்டுள்ளதால் 4 முதல் 6 வாரங்கள் வரை பணியாளர்கள் பற்றாக்குறையை தொழிற்சாலைகள் எதிர்கொள்ளப் போகின்றன. சீன புத்தாண்டிற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஜனவரி இறுதியில் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பி விடுவார்கள்" என்று தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் சைமன் பாப்டிஸ்ட் கூறுகிறார்.

பிப்ரவரி இறுதிவரை உற்பத்தி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பக் கூடிய சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். 

 

"ஐபோன் சிட்டி" என்று அழைக்கப்படும் ஜாங்ஜோ ஆலையில் ஏற்பட்ட உற்பத்தி தாமதங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கானை பாதித்தது. 2021ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பரில் அதன் வருவாய் 11% குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு வீழ்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த வாரம், சீனாவில் கோவிட் நோய்ப்பரவல் அதிகரித்ததால் டெஸ்லாவின் ஷாங்காய் உற்பத்தி ஆலை உற்பத்தியைக் குறைத்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. 

ஆனால், சீனா மற்றும் வட அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியதில், நிறுவனத்தின் மந்தமான விற்பனை தெளிவாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் டெஸ்லா தலைமை நிர்வாகி ஈலோன் மஸ்க் குறித்தும் முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதத்தில் ட்விட்டரை ஈலோன் மஸ்க் தன்வசப்படுத்தினார்.

அதன் பின்னர், சமூக ஊடக தளத்தை நடத்துவதற்கே தனது நேரத்தில் பெரும்பகுதியை அவர் செலவிடுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட கவனச் சிதறலே டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி அடைந்ததற்கான மற்றொரு காரணம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். 

 

ட்விட்டரின் தலைவராக தானே தொடரலாமா என்று கடந்த வாரம் பயனாளர்களிடம் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார். அதில், பெரும்பாலானோர் வேண்டாம் என்பதைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, தகுந்த மாற்று நபர் கிடைத்தால் தான் பதவி விலகுவேன் என்று ஈலோன் மஸ்க் அறிவித்தார். 

 

தற்போது அவர் முதலீட்டாளர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களின் நம்பிக்கையை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cn0yg8xw11zo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
    • பூனை கண்ணை மூடிக்கொண்டாள் . .......!  😍
    • திரு .சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!  💐
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.