Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்!

 

Sam-Curran.jpg

டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை இந்திய ரூபா மதிப்பில் 5.75 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

https://thinakkural.lk/article/229868

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் ஏலம் 2023: வரலாறு படைத்த சாம் கரன்; கவனிக்க வைத்த 'டாப் 3' வீரர்கள்

சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சுட்டிக்குழந்தை என சி.எஸ்.கே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சாம் கரன், இன்று ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் எனும் வரலாறை படைத்திருக்கிறார். கொச்சியில் நடைபெற்ற 2023 ஐபிஎல் ஏலத்தில் கடுமையான போட்டிகளுக்கிடையே 18.50 கோடி ரூபாய்க்கு சாம் கரணை ஏலம் எடுத்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன டாப் - 3 வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. சாம் கரன் - ரூ.18.50 கோடி

சாம் கரனின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய். முதலில் ஏலம் கேட்டது மும்பை இந்தியன்ஸ். களத்தில் குதித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 6 கோடி ரூபாய் வரை இரு அணிகள் மட்டுமே மோதின. பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலப்போட்டியில் குதித்தது.

பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சாம் கரனுக்காக போட்டிப்போட்டன. இறுதியில் 18.50 கோடி ரூபாய்க்கு சாம் கரனை வென்றது பஞ்சாப் அணி. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனை படைத்தார் சாம் கரன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

2022 டி20 உலக கோப்பையை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் இங்கிலாந்தின் சாம் கரன். பாகிஸ்தானை ரன் குவிக்க விடாமல் செய்து முக்கிய விக்கெட்களை கைப்பற்றிய இடது கை பந்துவீச்சாளர் சாம் கரன் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மட்டுமின்றி தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதையும் வென்றார். முதல் முறையாக ஒரு பவுலராலும் தொடர் நாயகன் விருதை வெல்ல முடியும் என நிரூபித்தார். பிப்ரவரி 2022ல் நடைபெற்ற மெகா ஏலத்தில் காயம் காரணமாக சாம் கரண் பங்கெடுக்கவில்லை. அது ஒருவகையில் அவருக்கு நல்லதாகவே அமைந்திருக்கிறது. 2019-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமானார் சாம் கரன் 2020, 2021 சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடினார்.

 

2. கேமரோன் க்ரீன் - ரூ. 17.5 கோடி

சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏப்ரல் 2022ல் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமான அதிரடி ஆல்ரவுண்டருக்கு இன்றைய ஏலத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. 2 கோடி அடிப்படையில் விலையில் இருந்து ஏலம் தொடங்கியது. பெங்களூரு, மும்பை, டெல்லி அணிகள் போட்டிப்போட்டன. இறுதியில் 17.5 கோடி ரூபாய்க்கு கேமரோனை வாங்கியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2வது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

23 வயதான கேமரோன் க்ரீன், இதுவரை 8 முறை மட்டுமே சர்வதேச டி20 போட்டியில் ஆடியிருக்கிறார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 173.75. இதில் 2 அரைசதங்களும் அடங்கும். அதுவும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலேயே அவர் விளாசியிருந்தார். ஒரு போட்டியில் 30 பந்துகளில் 61 ரன்களும் மற்றொன்றில் 21 பந்துகளில் 52 ரன்களும் குவித்திருந்தார். “2 - 3 ஆண்டுகளாகவே க்ரீனை கவனித்து வருகிறோம். அவர்தான் எங்களுக்கு சரியான இருப்பார் என நினைத்தோம். இளம் வீரர்களை வாங்க முனைப்பு காட்டுகிறோம்” என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்

3. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி

2022 டி20 உலக் கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஒரு கிரிக்கெட் ஃபார்மட்டாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் ஸ்டோக்ஸ் வல்லவர். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைத்தேர்ந்தவர்.

2022 மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் அணியால் கழற்றிவிடப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என கணிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் இருந்து ஏலத்தொகையை எகிற வைத்து 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வந்து சேர்ந்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

பெங்களூரு, ராஜஸ்தான், லக்னெள, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் பென் ஸ்டோக்ஸை வாங்க ஆர்வம் காட்டின. விடாப்பிடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக தொகை கொடுத்து அவரை ஏலம் எடுத்திருக்கிறது. சென்னை அணியால் வாங்கப்பட்டதை தொடந்து இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cn0yl3xjy0xo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் ஏலம் 2023: தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்? கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே?

கிரிக்கெட்

பட மூலாதாரம்,CSK/TWITTER

49 நிமிடங்களுக்கு முன்னர்

“சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்திருப்பதால் பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியுடன் இருப்பார். காரணம், ஒவ்வொரு வீரரும் எம்.எஸ்.தோனியின் தலைமையில் விளையாட விரும்புவார்கள். அவரை பலரும் நேசிக்கிறார்கள்” - இவை ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் உதிர்த்த வார்த்தைகள்.

பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ஏலத்தில் எடுத்த அடுத்த கணமே, ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடத் துவங்கி விட்டனர். தோனி - பென் ஸ்டோக்ஸ் காம்போவில் இந்த முறை கோப்பை சென்னைக்குத்தான் என பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

பென் ஸ்டோக்ஸுக்கு ரூ. 16.25 கோடி

2019, 50 ஓவர் உலக கோப்பை, 2022 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்.

டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஒரு கிரிக்கெட் ஃபார்மட்டாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் ஸ்டோக்ஸ் வல்லவர்.

 

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைத்தேர்ந்தவர். உலகின் டாப் ஆல் ரவுண்டர். அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று வெற்றியுடன் திரும்பியவர்.

இப்படி பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அதிரடி நாயகனை வலைவீசி தூக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூரு, ராஜஸ்தான், லக்னெள, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் பென் ஸ்டோக்ஸை வாங்க ஆர்வம் காட்டின.

ஆனால் கைக்கு எட்டவில்லை. ஐபிஎல் 2023 ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் இருந்து ஏலத்தொகையை எகிற வைத்து 16.25 கோடி ரூபாய்க்கு சி.எஸ்.கே-இடம் வந்து சேர்ந்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸின் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவரும் பென் ஸ்டோக்ஸ்தான்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்?

ஐபிஎல் வரலாற்றில் 2017 பென் ஸ்டோக்ஸுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. முதல்முறையாக ஐபிஎல்லில் ரைசிங் புனா சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அப்போது விளையாடாததால் புனா அணியில் தோனி விளையாடினார்.

பென் ஸ்டோக்ஸின் ஐபிஎல் பயணத்தில் அந்த ஆண்டுதான் அவர் அதிகபட்ச ரன்களை குவித்திருந்தார். 12 போட்டிகளில் விளையாடி 316 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். பந்து வீச்சிலும் 12 விக்கெட்களை சாய்த்தார். அந்த ஆண்டில் புனா அணி இறுதிப்போட்டி வரை சென்று மும்பையிடம் வீழ்ந்தது.

ஏற்கெனவே தோனியுடன் இணைந்து விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் பென் ஸ்டோக்ஸை கையாளுவது கேப்டன் தோனிக்கு எளிதாகவே அமையலாம்.

அதுமட்டுமின்றி 41 வயதாகும் தோனி எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம்.

அவருக்கு மாற்றாக ஒரு கேப்டன் முகமாகவும் பென் ஸ்டோக்ஸை சென்னை அணியால் முன்னிறுத்த முடியும். கூடவே டுவெய்ன் பிராவோ இல்லாத வெற்றிடத்தை அதிக பலத்துடன் நிரப்ப முடியும்.

பென்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஒரு அணியை வழிநடத்தும் அனுபவம் அவருக்கு இருக்கிறது.

தோனிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை அழங்கரிக்கும் வகையில் கூட ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என கிரிக்கெட் முன்னணி ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

“பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மிகவும் பொருத்தமானவர்” என ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெய்லும் கூறியுள்ளார்.

இதேபோன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “எம்.எஸ்.தோனி ஸ்டோக்ஸை சிறப்பாக வழிநடத்துவார்.

ஸ்டோக்ஸ் ஒரு உலக சாம்பியன். டி20 உலக கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர். அவரது கிரிக்கெட் மூளை சென்னையின் இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சென்னை ரசிகர்கள் அவரை மிகவும் விரும்புவார்கள்.

ஸ்டோக்ஸ், ரஹானே இருவருமே தோனியுடன் விளையாடியுள்ளார்கள். பிராவோவுக்கு மாற்றாக பென் ஸ்டோக்ஸ் நல்லதொரு தேர்வு” என தெரிவித்தார்.

சென்னை அணியின் புது முகங்கள்

'ஐபிஎல் 2023' ஏலத்தில் சென்னை அணி தனக்கான 7 காலி இடங்களையும் முழுமையாக நிரப்பியது. இதில் பென் ஸ்டோக்ஸை தவிர்த்து இதர 6 பேரும் குறைந்த தொகையில் எடுக்கப்பட்டவர்கள். நியூசிலாந்து பவுலர் கைல் ஜேமிசன் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இதைதவிர்த்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த ஆல் ரவுண்டர் நிஷாந்த் சிந்து 60 லட்ச ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

இந்திய வீரர் அஜின்கியா ரஹானே 50 லட்ச ரூபாய்க்கு தனது முதல் ஏலப்பட்டியலில் சேர்த்தது சி.எஸ்.கே. இதை தவிர்த்து, இளம் வீரர்கள் ஷேக் ரஷீத், அஜய் மண்டல், பகத் வர்மா ஆகியோர் தலா 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

5வது முறையாக கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே?

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம்,BCCI/IPL

கடந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தோனி சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ஜடேஜா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் மீண்டும் கேப்டனானார் தோனி. இருப்பினும் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட நுழைய முடியவில்லை.

14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை சந்தித்தது. புள்ளிப்பட்டியலில் 9ம் இடத்தை பிடித்தது. இந்த முறை சென்னை அணி தோனி தலைமையில் தொடக்கம் முதலே உத்வேகத்துடன் களமிறங்கக்கூடும். 2020ல் மோசமான தோல்விகளை எதிர்கொண்ட சென்னை அணி 2021-ல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தற்போது அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்திருப்பது கூடுதல் பலமாக அமையும். அதே சமயம், தோனியின் வியூகம், இதர வீரர்களின் கன்சிஸ்டன்ஸி உள்ளிட்ட அம்சங்களே சி.எஸ்.கே.வின் கோப்பை கனவை தீர்மானிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c804rpk1k39o

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல தகவல்கள் .......நன்றி ஏராளன் .........!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் 2023: தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட இல்லாத சிஎஸ்கே

Dhoni at IPL

பட மூலாதாரம்,BBCI/IPL

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேலும் இருக்கும் ஐபிஎல் தொடரில், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் சென்னை அணிக்கு மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் முன்னிலைப்படுத்தபடுவதில்லை.

2023ஆம் ஆண்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த யாருமே இல்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ஐபிஎல் 'மினி' ஏலம்

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 16வது ஐபிஎல் தொடருக்கான 'மினி' ஏலம் சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக புதிதாக 7 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு சென்னைக்காக ஆடிய 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதையடுத்து 16வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் 25 வீரர்கள் அடங்கிய பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி செய்தது.

 

தோனி தலைமையிலான இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளிட்ட 8 வெளிநாட்டு வீரர்களும், 17 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

2023ஆம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வோர் அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் எடுத்து முடித்துள்ளன. இந்நிலையில், 25 பேர் அடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் கூட இடம்பெறவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தங்கராசு நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏன் ஏலம் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஏலத்தில் என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் இந்த ஆண்டு தக்கவைக்கவில்லை.

மாறாக சமீபத்தில் நடந்த ஏலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான ஜெகதீசனை மட்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது சென்னை அணி. கொல்கத்தா அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே ஜெகதீசன் நாராயணை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவிய நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி ஜெகதீசனை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.சென்னை அணி தனது கையிருப்பில் இன்னும் 1.5 கோடி ரூபாய் மீதம் வைத்திருக்கும் நிலையில், ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க 85 லட்சம் வரை கேட்டது.

சென்னை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி விளையாடும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரான ஜெகதீசனை கடந்த ஆண்டு வரை சென்னை அணி விளையாட வாய்ப்பு வழங்காமல் பென்ச்சில் அமர வைத்து இருந்தது.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெகதீசனைத் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த வேறு எந்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை.

"ஐபிஎல் என்பது பொழுதுபோக்கை மையப்படுத்தி நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் போட்டி. அதனால் சென்னைக்கு அணிக்கோ, வேறு எந்த அணிக்கோ ஒரு மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை" என்கிறார், சென்னையை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகருமான செல்வ முத்துகுமார். ஆனால் சென்னை அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களை பெயரளவில் கூட எடுக்காமல் இருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Selva Muthukumar
 
படக்குறிப்பு,

செல்வ முத்துகுமார்

இந்த ஆண்டு விளையாடும் தமிழக வீரர்கள் யார்?

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இல்லை என்றாலும், வேறு சில அணிகள் தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணி

  • விஜய் சங்கர்
  • சாய் கிஷோர்
  • சாய் சுதர்ஷன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • ஜெகதீசன் நாராயண்
  • வருண் சக்ரவர்த்தி

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • முருகன் அஸ்வின்
  • ரவிச்சந்திரன் அஸ்வின்

சன் ரைசர்ஸ் ஐதராபாத்

  • தங்கராசு நடராஜன்
  • வாஷிங்டன் சுந்தர்

பஞ்சாப் கிங்ஸ்

  • ஷாருக் கான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ

  • தினேஷ் கார்த்திக்
  • இணையவன் changed the title to ஐபிஎல் 2023 செய்திகள்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய தலைவர்!

Aiden-Markram.jpg

2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://thinakkural.lk/article/241587

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் மோதல்

 

ipl-2023-1.jpg

கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 31ஆம் திகதி தொடங்கி மே 28ஆம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது.

ipl-match.jpeg

முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.

இரண்டாவது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த சீசனில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21ஆம் திகதி நிறைவடைகின்றன.

இறுதிப்போட்டி மே 28ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும்.

https://thinakkural.lk/article/240501

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் ம‌க‌ளிர் ஜ‌பிஎல் ந‌ட‌க்க‌ போகுது இன்னும் இர‌ண்டு கிழ‌மையில்..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@கிருபன்

என்ன‌ பெரிய‌ப்பா இந்த‌ முறையும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்துவிங்க‌ள் தானே..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/2/2023 at 09:07, பையன்26 said:

@கிருபன்

என்ன‌ பெரிய‌ப்பா இந்த‌ முறையும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்துவிங்க‌ள் தானே..............

அடுத்த போட்டி ஆரம்பமா?🤨

பத்துப் பேருக்கு மேல் பங்குபற்றினால் நடாத்தலாம். கேள்விக்கொத்தைப் பார்க்கவேண்டும் @பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

அடுத்த போட்டி ஆரம்பமா?🤨

பத்துப் பேருக்கு மேல் பங்குபற்றினால் நடாத்தலாம். கேள்விக்கொத்தைப் பார்க்கவேண்டும் @பையன்26

உந்த‌ ப‌த்துப் பேர் என்ற‌த‌ கை விடுங்கோ...........நீங்க‌ள் கேள்வி கொத்த‌ தயார் செய்யூங்கோ..........போட்டிபியில் குறைந்த‌து 20பேர் த‌ன்னும் க‌லந்து கொள்ளுவின‌ம்.................

  • 2 weeks later...
Posted

ஐபிஎல் அணியின் வீரர் விலகல்!

 
1678588926-IPL-2-586x365.jpg

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜை ரிச்சர்ட்சன். கடந்த ஜனவரி மாதம் பிபிஎல் போட்டியில் விளையாடியபோது ஜை ரிச்சர்ட்சனுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்ததால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் காயத்தினால் உண்டான பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருப்பதால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸி. ஒருநாள் அணியில் நாதன் எல்லீஸ் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் தனது காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ஜை ரிச்சர்ட்சன். இத்தகவலை சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஆஷஸ் தொடரிலும் அவரால் பங்கேற்கமுடியாது எனத் தெரிகிறது.
ஐபிஎல் ஏலத்தில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி.

https://oosai.lk/12567/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ப‌ல‌மான‌ இங்லாந் அணி வ‌ங்க‌ளாதேஸ்சிட‌ம் இர‌ண்டு தோல்வி

 

ஜ‌பிஎல்ல‌ அதிக‌ விலைக்கு வேண்ட‌ ப‌ட்ட‌ சாம் க‌ர‌ன் வ‌ங்ளாதேஸ் தொட‌ரில் பெரிசா சாதிக்க‌ வில்லை.............ஜ‌பிஎல்ல‌ இவ‌ரின் விளையாட்டு எப்ப‌டி இருக்குதுன்னு பாப்போம் 🤣😁😂..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விஜய் பாடலுக்கு நடனமாடிய டோனி- வைரலாகும் வீடியோ

ms.jpg

16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் 31ஆம் திகதி தொடங்கும் இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதன் காரணமாக இந்த அணிகளின் ஹோம் மைதானங்களில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் பட பாடலுக்கு டோனி உள்பட 4 வீரர்கள் நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் டோனி கிட்டார் வாசிப்பது போன்றும் அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்று இருந்தது.

கடந்த 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

Published By: DIGITAL DESK 5

21 MAR, 2023 | 09:47 AM
image

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். 

யாழ்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். 

மேலும் தெரிவிக்கையில், 

பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் , சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. 

தற்போது IPL இல் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடன் குமார் சங்கக்கார கதைத்து இருந்தார். எனது கிரிக்கெட்டை அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்ல கவனிக்கிறேன் என்றார். அது தொடர்பில் சிலருடன் கதைத்து எனக்கான வாய்ப்புக்களை பெற்று தந்துள்ளார். அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை நான் முடிந்தளவு பயன்படுத்தி என்னை வளர்த்துக்கொள்வேன் என்றார். 

அதேவேளை ஜூன் மாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் அக்கடமி ஆரம்பிக்கப்பட்டு , கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிரிக்கெட் அக்கடமியின் இயக்குனர்களில் ஒருவரான வைத்தியர் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

கிரிக்கெட்டை உயர்த்த உதவி செய்கிறோம். தரமான வீரர்களை உருவாக்கி, சர்வதேச தரத்தில் வீரர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் , யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக அக்கடமி உருவாக்கப்பட்டுள்ளது. 

அதனூடாக வீரர்களுக்கு உயர் தர பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் கொழும்புக்கு வீரர்களை அழைத்து சென்று, புற்தரைகளில் விளையாட வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

தேசிய சர்வதேச வீரர்களுடன் விளையாடும் அவர்களின் அனுபவங்களை பெற்று கொள்ளும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/151009

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வார‌ கிழ‌மை ஜ‌பிஎல் ஆர‌ம்ப‌ம்...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IPL 2023: காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்கள்!

JegadeeshMar 25, 2023 15:44PM
ஷேர் செய்ய : 
ZzylX70Q-image-1-1.jpg

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர். 

இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி உட்பட 10 அணிகள் மோத உள்ளன.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்ததால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி 20 போட்டியில் கம்பேக் கொடுக்கும் முயற்சியுடன் களமிறங்குகின்றன.

அதே போல் டெல்லி கேபிட்டல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் தங்களுடைய முதல் கோப்பையை வெல்வதற்கு போராட உள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் நீண்ட சீசன்களாக சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்ல போராட உள்ளன.

இதனிடையே, இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே சில வீரர்கள் காயத்தால் வெளியேறியுள்ளது அந்தந்த அணிகளுக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி காயத்தால் வெளியேறியுள்ள வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம்:

ஜஸ்பிரித் பும்ரா

120 போட்டிகளில் 145 விக்கெட்டுகளை எடுத்து 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 3 கோப்பைகளை மும்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவர் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். 

WhatsApp-Image-2023-03-25-at-15.20.04-1.

இருப்பினும் கடந்த ஜூலை மாதம் காயத்தை சந்தித்த அவர் அதன் பின் 2 முறை காயமடைந்து மீண்டும் வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைக்கு இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள பும்ரா 2023 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்பதால் இந்த ஐபிஎல் தொடரில் வெளியேறியுள்ளது மும்பைக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ரிஷப் பண்ட்

இவர் 2021 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதை விட இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் கடந்த டிசம்பர் மாதம் சந்தித்த கார் விபத்தால் இந்த 2023 ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2023 உலகக்கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் விளையாட மாட்டார் என்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

WhatsApp-Image-2023-03-25-at-15.18.41-1.

குறிப்பாக கேப்டனாக இருக்கும் டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.

கெய்ல் ஜெமிசன்

நியூசிலாந்தின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் சுமாராக விளையாடியிருந்தாலும் இம்முறை சென்னை அணிக்காக 1 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் முதுகு பகுதியில் சந்தித்த காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இவர் குணமடைய 3 – 4 மாதங்கள் தேவைப்படும் என்பதால் ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார்.

WhatsApp-Image-2023-03-25-at-15.15.41-2.

கடந்த சீசனில் தீபக் சஹர் இல்லாதது சென்னைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இம்முறை உயரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் விலகியுள்ளது ஓய்வு பெற்ற ட்வயன் ப்ராவோ இடத்தை பூர்த்தி செய்வதற்கு ஏற்பட்ட வாய்ப்பை உடைத்துள்ளது.

ஜே ரிச்சர்ட்சன்

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான இவர் 1.5 கோடிக்கு மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

WhatsApp-Image-2023-03-25-at-15.14.04-1.

ஆனால் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்த இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியுள்ளது ஏற்கனவே பும்ரா இல்லாத மும்பைக்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசித் கிருஷ்ணா

2022 ஐபிஎல் தொடரில் 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 2008க்குப்பின் ராஜஸ்தான் ஃபைனலுக்கு செல்ல பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும் தேர்வாகி கணிசமான போட்டிகளில் விளையாடிய அவர் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்தார். 

WhatsApp-Image-2023-03-25-at-15.12.35-1.

அதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியது மட்டுமல்லாமல் 2023 உலகக் கோப்பை பவுலர்கள் பட்டியலில் இடம்பெறுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியே.

வில் ஜேக்ஸ்

இங்கிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டரான இவரை பெங்களூரு அணி 3.2 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. 

WhatsApp-Image-2023-03-25-at-15.07.08-1.

ஆனால் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் தொடைப்பகுதியில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் தனது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்குவதற்கு முன்பாகவே விலகியுள்ளார்.

 

https://minnambalam.com/sports/ipl-2023-here-complete-list-of-injured-players-who-of-this-season/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் இம்பாக்ட் பிளேயர்: போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக்க வரும் 'பாகுபலி' வீரர்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பொல்லன் கேட்
  • பதவி,பிபிசி மராத்தி செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

16-வது ஐ.பி.எல். தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது. கொரோனா பேரிடருக்குப் பின்னர் அனைத்து அணிகளும் சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை முதன் முறையாக காணப் போகின்றன. இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்திலும், எதிரணி மைதானத்திலும் தலா ஒரு போட்டிகளை விளையாடும் வழக்கம் மீண்டும் வருகிறது.

இதுபோன்ற மாற்றங்களால் எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியமான ஒன்றாக இருக்கப் போகிறது.

ஐ.பி.எல். தொடரில் என்னென்ன புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இதுநாள் வரையிலும், ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடுவதற்கு முன்பே எதிரணி கேப்டனுக்கு தனது அணி வீரர்கள் விவரத்தை ஒவ்வொரு கேப்டனும் அளிப்பார்கள். புதிய விதிகளின்படி, வரும் ஐ.பி.எல். தொடரில் டாஸ் போட்ட பிறகு அணி வீரர்கள் விவரம் வெளியாகும்.

 

ஆம். நீங்கள் வாசித்தது சரிதான்.

டாஸ் போடுகையில், கேப்டன்கள் தனது அணிக்கான 11 வீரர்கள் அடங்கிய இருவேறு பட்டியலை அளிப்பார்கள். டாஸ் போட்டதும், முதலில் பேட்டிங்கா அல்லது பந்துவீச்சா என்பது தெளிவான பிறகு, அதற்கேற்ப தனது அணி வீரர்கள் பட்டியலை எதிரணி கேப்டனுக்கு அளிப்பார்கள்.

ஆடுகளத்தின் தன்மை, மைதானத்தின் சுற்றளவு, போட்டி எந்த நேரத்தில் விளையாடப்படுகிறது?, பனிப்பொழிவுக்கான சாத்தியம் இருக்கிறதா? என்பன போன்றவற்றைப் பொருத்து, டாஸ் போட்ட பிறகு கேப்டன்கள் தங்களது அணியைத் தீர்மானிப்பார்கள்.

இதுவரையிலும், டாசுக்கு முன்னதாகவே அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். அதன் காரணமாக, டாஸில் தோற்கும் அணிக்கு பின்னடைவைச் சந்திக்க நேரிடுகிறது.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உதாரணமாக, போட்டி நடக்கும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்று எடுத்துக் கொள்வோம். அங்கே, டாஸ் வெல்லும் கேப்டன் சிறிதும் தயங்காமல் முதலில் பந்துவீச முடிவு செய்து, அதன் மூலம் பயனடையலாம்.

அந்த போட்டியில், டாஸில் தோற்கும் அணி முதலில் பேட்டிங் செய்ய நேரிடும். தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடிய அந்த ஆடுகளத்தில், இரண்டாவதாக பந்துவீசப் போகும் அந்த அணிக்கு எந்தவொரு அனுகூலமும் கிடைக்காது. புதிய விதிகளின்படி, டாஸில் தோற்கும் கேப்டன், சூழலுக்கு ஏற்ப தனது 11 பேர் அடங்கிய அணியை அறிவிக்க முடியும்.

ஆட்டத்தின் நடுவே வீரரை மாற்றிக் கொள்ளலாம் (Impact Player)

தென் ஆப்ரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. வீரர்களும், அணி உதவியாளர்களும் இந்த விதி குறித்து அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்த புதிய விதிகள் குறித்து 'தி ஹிந்து' நாளிதழின் விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் அமோல் கர்ஹாட்கரிடம் பேசினோம்.

"இந்த புதிய விதிகளால் போட்டி இன்னும் சுவாரஸ்யமானதாக மாறும். கேப்டன், பயிற்சியாளர், நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு கொண்ட அணி மற்ற அணிகளை விட ஒரு படி மேலே இருக்கும். அந்த அணி புதிய விதிகளை சிறப்பாக கையாள வாய்ப்புள்ளது." என்று அவர் கூறினார்.

"புதிய விதிகளின்படி, வெறும் 2 அல்லது 3 ஓவர்கள் மட்டுமே விளையாடும் வீரர்கள் கூட போட்டியின் முடிவை மாற்றிவிட முடியும். தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (Impact Player) என்ற இந்த விதியை ஏலத்தின் போதே அனைத்து அணிகளும் அறிந்திருந்தன. அதற்காகவே, பல அணிகளும் உள்நாட்டு வீரர்களை எடுத்தன. இந்த புதிய விதியின்படி, பேட்டிங் முடிந்த பிறகு ஒரு பந்துவீச்சாளரை அணியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதால் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை குறையும்." என்று அவர் மேலும் கூறினார்.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்ஸ்மேன் அல்லது பேட்ஸ்மேனுக்குப் பதிலாக பந்துவீச்சாளர் என்பது அவசியமல்ல. ஒரு அணி 40 ரன்களை எடுப்பதற்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு நல்ல ஸ்கோரை எட்டுவதற்காக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் இணைத்துக் கொள்ளலாம். இதனால், கூடுதலாக ஒரு பவுலரை பெற முடியாமல் போகும் சவால் உண்டு. ஆனால், பவுலிங் செய்கையில் அதற்கேற்ப அணியில் மாற்றம் செய்து கொள்ளலாம்." என்று அவர் விளக்கம் அளித்தார்.

"ஒரு வீரரின் குறிப்பிட்ட ஓரிரு திறமைகள் கூட அவரது அணிக்கு பெரிய அளவில் உதவக் கூடும். உடல் சரிவர ஒத்துழைக்கவில்லை என்று கருதும் வீரர் தனது பணி முடிந்ததுமே சிறிதும் தாமதமின்றி மற்றொரு வீரருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம்" என்றார் அவர்.

வரும் ஐ.பி.எல். தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற இந்த புதிய விதி நடைமுறைப்படுத்தப்படுவதில் சில குழப்பங்கள் வரலாம். பேட்ஸ்மேனுக்குப் பதிலாக பந்துவீச்சாளர் அல்லது பந்துவீச்சாளரின் இடத்தில் பேட்ஸ்மேனை கொண்டு வருவது இதன் நோக்கமல்ல. போட்டியின் நடுவே முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். போட்டியின் நடுவே தேவையான நேரத்தில் சரியான வீரரை களமிறக்கி ஆட்டத்தின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் என்பதே இந்த புதியை அறிமுகப்படுத்துதன் நோக்கம்.

புதிய விதிகள் என்னென்ன?

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற புதிய விதியை சுருங்கச் சொல்வதென்றால், ஆட்டத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியலில் இல்லாமல் சேர்க்கப்படும் புதிய வீரர் இவர்.

டாஸ் போடும் முன்பாகவே, ஒவ்வொரு அணி கேப்டனும் தனது அணியில் இடம் பெறும் 11 வீரர்கள் பட்டியலையும், 4 தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களின் பெயர்களையும் அளித்துவிட வேண்டும்.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் எப்போது அணியில் இணையலாம்?

ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின் தொடக்கத்தில் அறிவிக்கும் 4 வீரர்கள் பட்டியலில் இருந்து ஒரே ஒரு வீரரை மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக ஆட்டத்தின் நடுவே களமிறக்க முடியும்.

ஒரு அணி விரும்பினால், இன்னிங்சின் 14-வது ஓவருக்குள் இந்த வீரரை களமிறக்கிவிட வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் ஏதோ ஒரு காரணத்தால் வெளியேற நேரிடுகையில், இன்னிங்ஸ் தொடங்கும் போதோ, ஓவர் முடிவிலோ இந்த வீரர் இணைந்து கொள்ளலாம்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் இணைந்து விட்டதை எப்படி அறிவது?

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் களமிறக்குவது குறித்து கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர், நான்காவது நடுவர் ஆகியோர் களத்தில் இருக்கும் நடுவருக்கு தெரியப்படுத்துவர். உடனே கள நடுவர், தனது இரு கைகளையும் மேலே குறுக்காக உயர்த்திக் காட்டி அவர் களத்திற்குள் வருவதை அறிவிப்பார்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரின் வருகைக்காக வெளியேற்றப்படும் வீரர் அதன் பிறகு எந்தவொரு வகையிலும் ஆட்டத்தில் பங்களிக்க முடியாது.

ஒரு ஓவரின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் பந்துவீச முடியுமா?

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீசும் அணி ஒரு ஓவர் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு வீரரை களமிறக்கினாலும் அவரால் உடனே பந்துவீச முடியாது. அதாவது, அவரால் அந்த ஓவரின் எஞ்சிய பந்துகளை வீச முடியாது.

அந்த ஓவர் முடியும் வரை காத்திருந்து, அடுத்த ஓவரையே அவர் வீச முடியும்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் இந்தியராகவே இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

ஐ.பி.எல். விதிப்படி, ஒவ்வொரு அணியிலும் ஆடும் லெவனில் 11 வீரர்கள் இடம் பெறலாம்.

இந்த விதியின்படி பார்த்தால், தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அணியில் சேர்க்கப்படும் வீரர் இந்தியராகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஒரு அணி ஏற்கனவே ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொண்டு விடும் பட்சத்தில், தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக மற்றொரு வெளிநாட்டு வீரரைப் பயன்படுத்த முடியாது. ஆகவே, அந்த அணி பயன்படுத்தும் வீரர் கண்டிப்பாக இந்தியராகவே இருப்பார்.

அதேநேரத்தில் ஒரு அணி ஆடும் லெவனில் 3 அல்லது அதற்கும் குறைவான வெளிநாட்டு வீரர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டிருந்தால், அந்த அணி வெளிநாட்டு வீரரை தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக ஆட்டத்திற்கு நடுவே களமிறக்கலாம்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் எத்தனை ஓவர்கள் பந்து வீசலாம்?

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரும், மற்ற வீரர்களைப் போலவே அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்துவீச முடியும். ஒருவேளை அவருக்குப் பதிலாக வெளியேற்றப்பட்ட வீரர் தனக்கான ஓவர்களை முழுமையாக வீசியிருந்தாலும் கூட, தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் முழுமையாக 4 ஓவர்களையும் வீசுவதில் தடையில்லை.

மழையால் பாதிக்கப்படும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விளையாட முடியுமா?

மழையால் பாதிக்கப்படும் போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை களமிறக்க முடியும். ஆனால், அந்தப் போட்டி குறைந்தபட்சம் 10 ஓவர்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதி ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதா?

ஐ.பி.எல். தொடருக்கு முன்பாகவே, சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதித்துப் பார்த்துவிட்டது.

அந்த வகையில், மணிப்பூர் அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக களம் கண்ட ஹிரித்திக் ஷோகீன் என்ற வீரரே தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இந்தியாவில் களமிறங்கிய முதல் வீரர்.

அந்த தொடரில், மும்பை அணி பந்துவீச்சாளர் தவால் குல்கர்னிக்குப் பதிலாக சாய்ராஜ் பட்டீலை தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக களமிறக்கியது.

சூப்பர்சப் விதியில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதி எந்த வகையில் வேறுபட்டது?

2005-ம் ஆண்டு சூப்பர்சப் விதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) அறிமுகப்படுத்தியது. ஆனால், அது வெற்றிகரமானதாக அமையவில்லை.

இந்த விதியின்படி, சூப்பர்சப் வீரர் யார் என்பதை டாஸ் போடும் முன்பே கேப்டன் தெரியப்படுத்த வேண்டும்.

இதனால், டாசில் தோற்கும் அணிக்கு சூப்பர்சப் விதி எந்தவொரு பலனையும் தரவில்லை.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரும் ஐ.பி.எல்.லில் அறிமுகமாகும் பிற விதிகள்

  • ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிடப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதனைத் தடுக்க அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். புதிய விதிகளின்படி, பீல்டிங் செய்யும் அணிக்கு புதிய தண்டனை விதிக்கப்படும். அதாவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் இன்னிங்சை தொடங்க ஒத்துழைக்கத் தவறினால், அந்த அணி கூடுதலாக மேலும் ஒரு வீரரை உள் வட்டத்திற்குள் நிறுத்த வேண்டியிருக்கும். இதனால், அந்த அணிக்கு எல்லைக்கோடு அருகே 4 பீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள்.
  • விக்கெட் கீப்பரிடம் நேர்மையற்ற அசைவுகள், சைகைகள் தென்பட்டால் டெட் பால் கொடுக்கப்படும். பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அதேபோன்ற அசைவுகள் பீல்டரிடம் கண்டறியப்பட்டாலும் டெட்பால் கொடுக்கப்பட்டு எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.
  • வரும் தொடரில், வைட், நோ பால் ஆகியவற்றிற்கும் கூட நடுவரின் தீர்ப்பை எதிர்த்து கேப்டன்கள் டி.ஆர்.எஸ். முறைப்படி மேல்முறையீடு செய்ய முடியும்.

https://www.bbc.com/tamil/articles/c514l4zj37zo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல் ; மார்ச் 31 இல் ஆரம்பம்

Published By: DIGITAL DESK 5

29 MAR, 2023 | 03:18 PM
image

(நெவில் அன்தனி)

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் மார்ச் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி அஹமதாபாத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன.

நான்கு வருடங்களின் பின்னர் பழைய முறைமைப்படி சகல அணிகளும் சொந்த மைதானத்திலும், அந்நிய மைதானத்திலும் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் எல்பிஎல் சுற்றுப் போட்டி நடைபெறவிருக்கிறது.

மார்ச் 31ஆம் திகதி ஆரம்பித்து எட்டு வாரங்கள் தொடரும் 16ஆவது எல்பிஎல் அத்தியாயத்தில் 74 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக கடைசி 3 அத்தியாயங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய மைதானங்களிலேயே நடத்தப்பட்டன. 2020இல் இந்தியாவுக்கு வெளியே ஐக்கிய அரபு இராச்சியத்தில் முழுப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2021இல் ஆரம்பப் போட்டிகள் இந்தியாவின் சில மைதானங்களிலும் கடைசிப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் அரங்கேறின. 2022இல் லீக் போட்டிகள் மும்பை, புனே ஆகிய மைதானங்களிலும் இறுதிச் சுற்று கொல்கத்தா, அஹமதாபாத் மைதானங்களிலும் நடத்தப்பட்டன.

இருபது 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கிண்ணஸ் சாதனையை ஏற்படுத்தும் வகையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 101,556 இரசிகர்கள் 2022 இறுதிப் போட்டியைக் கண்டுகளித்தனர்.

அந்த இறுதிப் போட்டியில்  முதலாவது எல்பிஎல் சம்பியன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை  முற்றிலும் எதிர்பாராத விதமாக  7 விக்கெட்களால் வெற்றிகொண்ட ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் சம்பியனாகியிருந்தது.

குஜராத் டைட்டன்ஸ் தனது அறிமுக அத்தியாயத்திலேயே சம்பியனானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

 

போட்டி முறைமை

2023 ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளை சொந்த மைதானத்திலும் 7 போட்டிகளை அந்நிய மைதானத்திலும் விளையாடவேண்டும்.

10 அணிகளும் 2 குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு குழுவில் இடம்பெறும் அணிகள் ஒன்றையொன்று சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் 2 தடவைகள் எதிர்த்தாடும். அதாவது ஒவ்வொரு அணியும் தத்தமது குழுவில் 8 போட்டிகளில் விளையாடும். அதேவேளை மற்றைய குழுவில் இடம்பெறும் 4 அணிகளை ஓரு தடவையும் எஞ்சியிருக்கும் அணியை 2 தடவைகளும் எதிர்த்தாடும்.

 

இறுதிச் சுற்று (ப்ளே ஓவ்ஸ்)

இறுதிச் சுற்று 4 போட்டிகளைக் கொண்டதாகும்.

லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் முதலாவது தகுதிகாண் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

அணிகள் நிலையில் 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும். நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணி முதலாவது தகுதிகாணில் தோல்வி அடைந்த அணியை 2ஆவது தகுதிகாண் போட்டியில் சந்திக்கும்.

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதலாவது தகுதிகாண் போட்டியில் வெற்றியீட்டிய அணியை 16ஆவது ஐபிஎல் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்

 

அணித் தலைவர்கள்

சென்னை சுப்பர் கிங்ஸ்: மஹேந்த்ர சிங் தோனி.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: டேவிட் வோர்னர்.

குஜராத் டைட்டன்ஸ்: ஹார்திக் பாண்டியா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பதில் தலைவர் நிட்டிஷ் ரானா (வழமையான அணித் தலைவர்  ஷ்ரேயாஸ் ஐயர் உபாதையிலிருந்து மீளவில்லை).

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்: கே. எல். ராகுல்.

மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் ஷர்மா.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிக்கர் தவான்.

ராஜஸ்தான் றோயல்ஸ்: சஞ்சு செம்சன்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: பவ் டு ப்ளெசிஸ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஏய்டன் மார்க்ராம்.

gujarat_titans_pandiya.png

https://www.virakesari.lk/article/151679

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரையில் செம்மஞ்சள் தொப்பி வென்ற வீரர்கள் யார், யார்?

 

967250-1024x576.jpg

எதிர்வரும் வரும் 31ஆம் திகதி 16ஆவது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் நடப்பு சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்துள்ள 15 ஐபிஎல் சீசன்களில் செம்மஞ்சள் தொப்பியை வென்ற வீரர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.

ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக இந்த செம்மஞ்சள் தொப்பி உள்ளது. இதனை 2008 முதல் கடந்த 2022 வரையில் பல்வேறு துடுப்பாட்ட வீரர்கள் வென்றுள்ளனர்.

செம்மஞ்சள் தொப்பி வென்றவர்கள்..

  • 2008: ஷான் மார்ஷ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • 2009: மேத்யூ ஹேடன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • 2010: சச்சின் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்)
  • 2011: கிறிஸ் கெய்ல் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • 2012: கிறிஸ் கெய்ல் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • 2013: மைக்கேல் ஹஸ்ஸி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • 2014: ரோபின் உத்தப்பா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • 2015: டேவிட் வோர்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  • 2016: விராட் கோலி (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • 2017: டேவிட் வோர்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  • 2018: கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  • 2019: டேவிட் வோர்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  • 2020: KL ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • 2021: ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • 2022: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
  • 2023: ?

https://thinakkural.lk/article/246938

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை சூப்பர் கிங்ஸின் 'முக்கியமான' பலவீனத்தை சரி செய்ய முடியுமா?

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

16-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் உடன் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது.

வெற்றிகரமான கேப்டன் எனும் பேர் பெற்ற எம்.எஸ்.தோனி இதுவரை 2010, 2011, 2018, 2021 என 4 முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னைதான். அதேசமயம், கடந்த ஆண்டு சி.எஸ்.கேவுக்கு சற்று கடினமான ஆண்டாக அமைந்தது. தோனி கேப்டன்சியில் இருந்து விலகியது, ஜடேஜா தலைமையில் சி.எஸ்.கே தொடர்ந்து சறுக்கியது என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது சென்னை அணி.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு ஐபிஎல் தொடர் எப்படி அமையும்? தோனி தலைமையில் 5வது முறையாக கோப்பையை வெல்லுமா சி.எஸ்.கே?கவனிக்கப்பட வேண்டிய புது முகங்கள்

ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு சிறந்த ஆட்டக்காரர்தான் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர். 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல உறுதுணையாக திகழ்ந்தவர். மஞ்சள் சீருடையில் அவர் களமிறங்குவது ரசிகர்களைத் தாண்டி மொத்த அணிக்கு உத்வேகம் அளிக்கக்கூடும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

 

ஐபிஎல் இறுதிப்போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டால், தொடரின் இறுதி நாட்களில் அவர் சி.எஸ்.கேவுக்கு ஆட முடியாமல் போகலாம்.

இதுதவிர, ஜடேஜாவுக்கு மாற்றாக, நிஷாந்த் சிந்து, அஜய் மன்டல் என இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறது சி.எஸ்.கே. மஹீஷ் தீக்சனா சுழற்பந்துவீச்சில் முக்கிய வீரராக திகழ்வார் என்றும் சேப்பாக்கம் அவருக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத்தரக்கூடும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேப்பாக்கம் கைகொடுக்குமா?

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டியில் விளையாடவுள்ளன. இதில், 7 லீக் ஆட்டங்கள் வெளி மைதானங்களிலும் 7 லீக் ஆட்டங்கள் அவர்களது சொந்த மைதானங்களிலும் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்கு உற்சாகமும் உத்வேகமும் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டியின் மூலம் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எவ்வளவு சாதகமாக இருப்பது என்பதை அறிய முடிகிறது. சென்னை அணியில் வெவ்வேறு முறைகளில் பந்தை சுழற்ற பலர் இருக்கின்றனர். அதேபோல சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே, மொயின் அலி போன்றோர் இருக்கின்றனர். சென்னை மைதானம் என்பதால் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு கூடுதல் எனர்ஜியை தரும்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங் ஒகே, பவுலிங் எப்படி?

மேலோட்டமாக பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கம்போல பேட்டிங்கில் வலுவாகவே திகழ்கிறது. கான்வே - ருத்துராஜ் தொடக்க ஆட்டக்காரர்களாக அணிக்கு வலுசேர்ப்பார். உத்தேசமாக அவர்களைத் தொடர்ந்து மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, ஷிவன் துபே, எம்.எஸ்.தோனி, தீபக் சஹர் போன்றோர் உள்ளனர். இந்த 9 பேருமே பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை செய்யக்கூடியவர்கள். அதே அளவுக்கு பந்துவீச்சிலும் கைத்தேர்ந்தவர்கள்.

ஆனால் வழக்கம்போல இந்த முறையும் பந்துவீச்சில் சி.எஸ்.கேவுக்கு ஒரு ஓட்டை இருக்கிறது. டெத் ஓவர்களை வீசுவதற்கு சொல்லிக்கொள்ளும்படியாக வீரர்கள் இல்லை. கைல் ஜேமிசனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் சிசான்டா மகாலா இந்த பிரச்னைக்கு சற்று தீர்வு அளிக்ககூடும். வீரர்களை சரியாக தேர்ந்தெடுப்பதும், டெத் ஓவர்களில் கைத்தேர்ந்தவர்களை பயன்படுத்துவதும் தோனிக்கு முன்னால் உள்ள சவாலாக பார்க்கப்படுகிறது.

சி.எஸ்.கே.வில் யார் இல்லை?

நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசான் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் சிசான்டா மகாலா அணியில் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அவதிப்படும் முகேஷ் சவுத்ரி விரைவில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா ஆகிய இருவரும் முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை. இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளால் ஏப்ரல் 8ம் தேதி வரை அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனிக்கு கடைசி சீசனா?

இந்த சீசனோடு தோனி ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வுபெறுவாரா என்கிற கேள்வி கடந்த 3,4 ஆண்டுகளாகவே கிரிக்கெட் வட்டாரங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது. 2021-ல் சி.எஸ்.கே கோப்பையை வென்றபோது அத்துடன் தோனியும் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2022-ல் கேப்டன்சியில் இருந்து தோனி விலகியபோது அந்த தொடரோடு ஐபிஎல் பயணம் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்டது.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக சென்னையின் புதிய முகமாக ஜடேஜாவை மாற்றும் பொருட்டு அவர் கேப்டனாக்கப்பட்டார். ஆனால் தொடர் தோல்வியால் ஜடேஜா கேப்டன்சியில் இருந்து விலக நேரிட்டதால் மீண்டும் தலைமைப் பொறுப்பு தோனி வசம் வந்தது.

சென்னையில்தான் என் கடைசி ஆட்டம் இருக்கும் என தோனி தெரிவித்தது அவரது ஓய்வு குறித்த பேச்சுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. தோனிக்கு 41 வயதாகிறது. சென்னை சேப்பாக்கத்தில் சாதித்து, கோப்பையுடன் ஐபிஎல் பயணத்திற்கு தோனி முடிவுரை எழுதுவாரா என்பதே பலரது எண்ணம். ஆனால், தனது ஓய்வு குறித்த விசயத்தில் தோனிதான் முடிவு செய்ய வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c2errdzp2zyo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள், எந்த அணியில் யார் யார்?

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது.

ஐபிஎல் 2023ல் 10 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகள்- டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்.

இந்தப் போட்டியில் மொத்தம் 74 பந்தயங்கள் நடைபெறவுள்ளன. இதில் 70 லீக் போட்டிகளும், நான்கு பிளேஆஃப் போட்டிகளும் இருக்கும்.

இந்தப் போட்டிகள் அகமதாபாத், மொஹாலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 நகரங்களில் நடைபெறும்.

 

லீக் ஆட்டத்தின் போது எல்லா அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடும். அதில் ஏழு போட்டிகள் சொந்த மைதானத்திலும், மற்ற ஏழு பிற அணிகளின் சொந்த மைதானத்திலும் நடைபெறும்.

அதன் பிறகு, மே 24 முதல் 27 வரை பிளேஆஃப் பந்தயங்கள் நடைபெறும். மேலும் மே 29 அன்று, ஐபிஎல் 2023 இன் இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்த முறை ஐபிஎல்லில் எந்த அணியில் எந்த கிரிக்கெட் வீரர்கள் களம் இறங்குகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

chennai super kings

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன்: மகேந்திர சிங் தோனி

பயிற்சியாளர்: ஸ்டீபன் ஃப்ளெமிங்

ஹோம் கிரவுண்ட்: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை

அணி: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டேவன் கான்வே, ரிதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் தூபே, ராஜ்வர்தன் ஹாங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் செளத்ரி, மஹீஷா பத்திரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் டிக்ஷானா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேம்சன், அஜய் மண்டல் மற்றும் கே பகத் வர்மா.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,TWITTER/GUJARAT TITANS

குஜராத் டைட்டன்ஸ்

கேப்டன்: ஹர்திக் பாண்டியா

பயிற்சியாளர்: ஆஷீஷ் நெஹ்ரா

ஹோம் கிரவுண்ட்: நரேந்திர மோதி ஸ்டேடியம், அகமதாபாத்

அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மன் கில், முகமது ஷமி, ராஷித் கான், ராகுல் தெவதியா, ஷிவம் மாவி, மேத்யூ வேட், கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹா, ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், கே.எஸ்.பாரத், ஒடியன் ஸ்மித், மோஹித் ஷர்மா, ஜோஜூவா லிட்டில், யஷ் தயாள், டேவிட் மில்லர், ஆர் சாய் கிஷோர், அபினவ் சந்ரங்கானி, அல்ஜாரி ஜோசப், நூர் அகமது, உர்வில் படேல், பிரதீப் சாங்வான், தர்ஷன் நால்கண்டே மற்றும் சாய் சுதர்ஷன்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,ANI

மும்பை இந்தியன்ஸ்

கேப்டன்: ரோஹித் ஷர்மா

பயிற்சியாளர்: மஹேலா ஜெயவர்தனே

ஹோம் கிரவுண்ட்: வான்கடே ஸ்டேடியம், மும்பை

அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), டேவில்ட் ப்ரேவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது அர்ஷத் கான், என் திலக் வர்மா, ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, கேமரூன் கிரீன், ஜே ரிச்சர்ட்சன், குமார் கார்த்திகேயா சிங், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பீயூஷ் சாவ்லா, விஷ்ணு வினோத், டுவான் ஜான்சன், , ஷம்ஸ் முலானி, நேஹால் வடேரா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால் மற்றும் ராகவ் கோயல்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,ANI

டெல்லி கேப்பிடல்ஸ்

கேப்டன்: டேவிட் வார்னர்

பயிற்சியாளர்: ரிக்கி பாண்டிங்

ஹோம் கிரவுண்ட்: அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம், புது டெல்லி

அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, யாஷ் துல், ரோவ்மன் பாவேல், சர்ஃபராஸ் கான், ரிலே ரோசாவ், பிலிப் சால்ட், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், அக்ஷர் பட்டேல், லலித் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், ரிப்பிள் படேல், மிட்செல் மார்ஷ், என்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, லுங்கி எங்கிடி, சேத்தன் சகாரியா, பிரவீன் துபே, கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் ஹக்கிம் கான், இஷாந்த் ஷர்மா மற்றும் முகேஷ் குமார்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,ANI

பஞ்சாப் கிங்ஸ்

கேப்டன்: ஷிகர் தவான்

கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் இயக்குனர்: அனில் கும்ப்ளே

ஹோம் கிரவுண்ட்: பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி

அணி: ஷிகர் தவான் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஷாருக்கான், ஹர்பிரீத் சிங் பாட்டியா, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, பால்தேஜ் டாண்டா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண், சிக்கந்தர் ரஸா, மோகித் ராட்டி, சிவம் சிங், அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான், ராஜ் அங்கத் பாவா, நாதன் எல்லிஸ், அதர்வா தாய்டே, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிஸோ ரபாடா மற்றும் வித்வத் கவேரப்பா.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,ANI

ராஜஸ்தான் ராயல்ஸ்

கேப்டன்: சஞ்சு சாம்சன்

பயிற்சியாளர்: குமார் சங்ககாரா

ஹோம் கிரவுண்ட்: சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்

அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், கே.சி கரியப்பா, குல்தீப் சென், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஓபேட் மெக்காய், கே.எம். ஆஸிஃப், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், முருகன் அஷ்வின், யுஜ்வேந்திர சாஹல், ஆகாஷ் வஷிஷ்ட், ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ராத்தோர் மற்றும் அப்துல் பி.ஏ.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,IPL/BCCI

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கேப்டன்: ஐடன் மார்க்ராம்

பயிற்சியாளர்: டாம் மூடி

ஹோம் கிரவுண்ட்: ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஹைதராபாத்

அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஹாரி புரூக், அன்மோல்பிரீத் சிங், கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் ரெட்டி, உபேந்திர யாதவ், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் டாகர், விவ்ராந்த் ஷர்மா, சன்வீர் சிங், சமர்த் வியாஸ், உம்ரான் மல்லிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், அகில் ஹொசைன், மயங்க் மார்கண்டே மற்றும் ஆதில் ரஷீத்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,@RCBTWEETS

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கேப்டன்: ஃபாஃப் டுப்ளேசி

பயிற்சியாளர்: சஞ்சய் பாங்கர்

ஹோம் கிரவுண்ட்: எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

அணி: ஃபாஃப் டுப்ளேசி (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பாடிதார், சுயாஷ் எஸ் பிரபுதேசாய், ஃபின் ஆலன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லி, மஹிபால் லோம்ரோர், ஷாபாஸ் அகமது, வானிந்து ஹசரங்கா, மனோஜ் பாண்ட்கே, வில் ஜாக், சோனு யாதவ், முகமது சிராஜ், கர்ண் ஷர்மா, சித்தார்த் கெளல், ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ராஜன் குமார், அவினாஷ் சிங் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கேப்டன்: நிதீஷ் ராணா

பயிற்சியாளர்: சந்திரகாந்த் பண்டிட்

ஹோம் கிரவுண்ட்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

அணி: நிதீஷ் ராணா (கேப்டன்), ரின்கு சிங், மன்தீப் சிங், லிட்டன் தாஸ், என் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், சுனில் நாராயண், அனுகுல் ராய், ஷாகிப் அல் ஹசன், வைபவ் அரோரா, டேவிட் விஸே, வருண் சக்ரவர்த்தி , டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன், சுயாஷ் ஷர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, ஹர்ஷித் ராணா.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,IPL/BCCI

லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேப்டன்: கேஎல் ராகுல்

பயிற்சியாளர்: ஆண்டி ஃப்ளவர்

ஹோம் கிரவுண்ட்: பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் இகான் கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னெள

அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், மனன் வோஹ்ரா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கைல் மேயர்ஸ், கரண் ஷர்மா, கிருஷ்ணப்பா கெளதம், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, பிரேரக் மான்கட், டேனியல் சைம்ஸ், நவீன்-உல்-ஹக் , யுத்வீர் சிங் சரக், ஸ்வப்னில் சிங், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், அவேஷ் கான், மார்க் வுட், ஜெய்தேவ் உநத்கட், யஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அமித் மிஷ்ரா.

https://www.bbc.com/tamil/articles/cl466e8yj5go

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பான தகவல்கள்........!  👍

பகிர்வுக்கு நன்றி ஏராளன்.....!  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னையை இறுதி வரை திணற வைத்த குஜராத் பேட்டர்கள்: அசால்டாக வெற்றி பெற்ற டைட்டன்ஸ்

IPL 2023: CSK vs GT

பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER

31 மார்ச் 2023
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

எப்போது என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன. அதிலும் முதல் போட்டியே தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டி. சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது.

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில், விஜய் சங்கர், ரஷீத் கான், ராகுல் தெவாதியா என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் சென்னை வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ்

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்யவே, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

 

கடந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து, இறுதியில் 9வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சென்னை அணி, இந்த முறை தனது பழைய வெற்றிப் பட்டியலில் இடம் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளாசத் தொடங்கியது.

சென்னை அணியின் கேப்டன் 41 வயதான தோனிக்கு இது அநேகமாக கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வருவதால், அவர் சுழற்றியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அதேவேளையில், அவரது ஆட்டம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பைப் போல் முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தோனி இன்னும் 22 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய சீசனில் சென்னை அணியை குஜராத் அணி இரண்டு முறை வீழ்த்தியுள்ளது.

IPL 2023: CSK vs GT

பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER

 
படக்குறிப்பு,

ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டை வீழ்த்தியபோது

முகமது ஷமியின் 100வது விக்கெட்

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தரப்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரில் விக்கெட் எதையும் இழக்காமல் நின்ற சென்னை அணி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே, கெய்க்வாட் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இரண்டாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா நேரடித் தாக்குதலைத் தொடங்கினார். ஆனால், அவரது பந்தை லாகவமாகத் தட்டிய கெய்க்வாட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்டம்புக்கு குறி வைத்து பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே நிதானமாக அதை எதிர்கொண்டார்.

முதல் மூன்று ஓவர்களில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா இருவரது பந்துவீச்சையும் எதிர்கொண்டதில், மூன்றாவது ஓவரின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்களை சென்னை எடுத்திருந்தது.

டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி தனது 100வது விக்கெட்டை எடுத்தார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். ஷமியின் சுழற்பந்தை எதிர்கொண்ட மொயீன் அலிக்கு தனது பந்துவீச்சின் சுவையைத் தொடக்கத்திலேயே கொஞ்சம் காட்டி விளையாடினார் ஷமி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஆறாவது ஓவர் முடிவில் ரஷீத் கான் பந்துவீச்சில் மொயீன் அலியும் அவுட்டானார். ஆறு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 51 ரன்காளை எடுத்திருந்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு ரன்னிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி ஒரு சிக்சர், 4 பவுண்டரி அடித்து 24 ரன்களோடும் ஆட்டமிழந்தனர்.

ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து களத்தில் நின்று விளாசினார். மொயீன் அலியை தொடர்ந்து கெய்க்வாட் உடன் கூட்டணி சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் களமிறங்கிய நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பந்துவீசத் தொடங்கினார். ஏழாவது ஓவரில் ஹர்திக் பந்துவீச்சை எதிர்கொண்ட கெய்க்வாட், பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு லாங்-ஆஃபில் சிக்சர் அடித்தார்.

நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ரஷீத் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை மிக அழகாக வீழ்த்தினார் ரஷீத். அவரது பந்துவீச்சை கணிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமானது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

கேன் வில்லியம்சன் காயம்

பவர்பிளே முடிவதற்கு முன்பாக ரஷீத் ஆஃப்-ஸ்டம்பை சுற்றி ஒரு பந்து வீசினார். அந்தப் பந்தை இறங்கி லாங் ஷாட்டில் அடிக்க முயன்றார் மொயீன் அலி. அவரை அப்படி அடிக்க வைப்பதே ரஷீத்தின் திட்டமாக இருந்தது. ஆனால், அப்படி அவர் செய்யும்போது மொயீன் அலி அடித்த பந்தை அழகாக சாஹா கேட்ச் செய்தார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் அழகாக எடுத்தார் ரஷீத் கான்.

ஒன்பது ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியவர், அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தார்.

13வது ஓவர் முடிவில் சிக்சர் அடிக்க முயன்றார் ஜோசுவா லிட்டில். அந்த நேரத்தில் அதைத் தடுக்க முயன்ற வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் பந்து ஃபோர் போனதாக நடுவரும் சைகை செய்தார். அதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு ஜோசுவா லிட்டிலை 12 ரன்களில் அவுட்டாக்கி திருப்பி அனுப்பினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர்களில் தனது 12 வது அரைசதத்தை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் 11 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியதில் இருந்து கே.எல்.ராகுல் 18 அரைசதங்களையும் டுப்ளெஸ்ஸிஸ் 13 அரை சதங்களையும் அடித்துள்ளார்கள்.

அடுத்தடுத்து சிக்சரும் ஃபோரும் விளாசிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 18வது ஓவரில் 92 ரன்களில் அவுட்டானார். அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஃபுல் டாஸில் வந்த பந்தை லாங் ஷாட் அடிக்க முயன்றபோது ஷுப்மன் கில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவையும் அதே ஓவரில் தமிழக வீரரான விஜய் சங்கர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

இறுதியாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த தோனியின் என்ட்ரிக்கு நேரம் வந்தது. தோனி களமிறங்கி அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடிக்கவே ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் அரங்கத்தை அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டார்.

கடைசியாக களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 14 ரன்களை அடித்து சென்னையின் ரன் கணக்கை 178 ஆக உயர்த்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து பேட்டிங்கை நிறைவு செய்தது.

ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,ANI

இம்பாக்ட் ப்ளேயர்கள்

இந்த ஐபிஎல் தொடரின் முதல் இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக களமிறங்கினார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கூட்டணியாக ஷுப்மன் கில், விரித்திமான் சாஹா களமிறங்கினர். 179 ரன்கள் இலக்கோடு குஜராத் தனது ஆட்டத்தைத் தொடங்கியது.

முதல் ஓவரை வெறும் மூன்று ரன்களோடு குஜராத் தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இரண்டாவது ஓவரிலேயே சாஹா இறங்கி ஆடத் தொடங்கினார். தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் சாஹா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தனர். ஷுப்மன் கில்லும் தன் பங்குக்கு ஒரு ஃபோர் அடித்தார்.

மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசவே அதிலும் சாஹா மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மூன்று ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 29 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், நான்காவது ஓவரில் குஜராத் அணிக்கு அதிர்ச்சியளிக்க வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சாஹாவுக்கு ஒரு யார்க்கர் பந்தை வீசினார். நான்காவது ஓவரில், சாஹா தூக்கி அடித்த பந்தை துபே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கினார் சாய் சுதர்சன். களத்திற்கு வந்தவுடன் ஸ்கொயர் லெக்கில் ஒரு ஃபோர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். ஐந்தாவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்தது.

பத்தாவது ஓவரில் குஜராத் அணிக்கான அடுத்த விக்கெட் விழுந்தது. நான்காவது ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன், அதுவரை மூன்று பவுண்டரிகளை அடித்து 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவரது விக்கெட்டை ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்துக் கொடுத்தார். அவரது பந்தில் பின்பக்கமாக வந்த பந்தை கேப்டன் தோனி கேட்ச் பிடித்தார். இது மிகவும் தேவையான விக்கெட்டாகவும் கருதப்பட்டது.

IPL 2023

பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER

ஷுப்மன் கில் அதிரடி

அவரைத் தொடர்ந்து முழு ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்தார். ஷுப்மன் கில் மிக அழகாக ஆட்டத்தைக் கொண்டு சென்றார். தேவையான நேரத்தில் இறங்கி அடித்து பந்தை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கிள்ஸ் ஓடுவதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஷுப்மன் கில் 11வது ஓவரில் கச்சிதமான சிக்ஸ் ஒன்றை அடித்து குஜராத் அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டு விக்கெட் இழப்பிற்கு 106 ஆக உயர்த்தினார். சரியாகக் கணித்து, திட்டமிட்டு அடித்த சிக்ஸ் அது. மிகக் கடினமான சிக்ஸரை அட்டகாசமாக அடித்துக் காட்டினார் கில். 54 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தொடங்கினார்.

தொடர்ந்து அதே அதிரடியைக் காட்டிய ஷுப்மன் கில், 12வது ஓவரில் 30 பந்துகளில் 50 ரன்களை அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

“சென்னை, குஜராத் இரு அணிகளிலும் பார்த்தால், அனுபவம், திறமை ஆகியவற்றில் பெரியளவு வித்தியாசம் உள்ளது. ஆனால், குஜராத் அணிக்கான உத்வேகம் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டாவிடம் இருந்து கிடைத்துள்ளது களத்தில் பிரதிபலிக்கிறது” என்று வர்ணனையாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் குறித்துக் குறிப்பிட்டனர்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே 11 பந்துகளில் 8 ரன்களை அடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஐந்தாவதாக விஜய் சங்கர் களத்தில் இறங்கினார். 13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்திருந்தது.

தனது மூன்றாவது ஓவரை வீசுவதற்காக 15வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார். 13 பந்துகளில் 30 ரன்களைக் கொடுத்து, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் இருந்தார். 15வது ஓவரில் சென்னை இருந்த நிலைமைக்கு, ஷுப்மன் கில் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது.

அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஆட்டம் குஜராத்தின் கைகளிலேயே இருந்துகொண்டிருந்தது. துல்லியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக விளையாடினால் வெற்றி எளிது என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், ஷுப்மன் கில்லின் விக்கெட்டை எடுத்துவிட்டால் சென்னையின் தரப்புக்கு ஆட்டம் வந்துவிடக்கூடிய சிறிதளவு வாய்ப்பும் இருந்தது.

தேஷ்பாண்டேவின்மீது அதிக அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் மீண்டுமொரு லாங் ஆன் சிக்ஸ் அடித்து ஷுப்மன் கில் மேலதிக அழுத்தத்தை அவர்மீது திணித்தார். இருந்தும் தனது பந்துவீச்சை அதே ஃபார்மில் தொடர்ந்த துஷார் தேஷ்பாண்டே மிக முக்கியமான விக்கெட்டை சரியான நேரத்தில் எடுத்தார்.

IPL 2023

பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER

சென்னையின் நம்பிக்கையை உடைத்த ரஷீத் கான்

அவர் சிக்ஸ் அடித்த பிறகு, அதற்கு அடுத்த பந்திலேயே ஷார்ட் பாலை கில் அடிக்கவே பறந்து சென்ற பந்து ருதுராஜ் கெய்க்வாடின் கைகளில் அழகாக அமர்ந்தது. 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கில் வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் தெவாதியா களமிறங்கினார். இன்னும் ஒரேயொரு விக்கெட்டை எடுத்துவிட்டால், குஜராத் அணியில் பேட்டிங் செய்ய ஆள் இல்லை என்ற நிலை நிலவியது.

15 ஓவர் இறுதியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்திருந்தது குஜராத். களத்தில் விஜய் சங்கர், ராகுல் தெவாதியா ஆடிக் கொண்டிருந்தனர். இப்போதும்கூட ஆட்டத்தை குஜராத் தனது கைகளிலேயே வைத்திருந்தது. கடைசி நான்கு ஓவர் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 34 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது.

தீபக் சாஹர் 17வது ஓவரில் களமிறங்கி நான்கு ரன்களை கொடுத்திருந்தார். மூன்று ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 149 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 18 பந்துகளில் 30 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இருந்தது. 10.59 என்ற ரன்ரேட் அந்த அணிக்குத் தேவையாக இருந்தது.

இந்நிலையில், ஹங்கர்கேகர் 18வது ஓவரில் பந்துவீசினார். மிக மிக முக்கியமான ஓவராக கருதப்படும் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் டாட் பாலாக வீசினார் ஹங்கர்கேகர்.

IPL 2023

பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER

மூன்றாவது பந்தில் ஒரேயொரு ரன்னை கொடுத்து ரன் ரேட்டை 11க்கும் மேல் அதிகரிக்க வைத்து குஜராத் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து அந்த ஓவரில் ஏற்பட்ட அழுத்தத்தை அசால்டாக வி்ஜய் சங்கர் குறைத்தார்.

ஆனால், அவருக்கு ஈடுகொடுத்துப் போராடிய ஹங்கர்கேகர், விஜய் சங்கரின் விக்கெட்டை வீழ்த்தினார். அவருடைய பந்துவீச்சில் விஜய் சங்கர் ஷாட்டை மிட்செல் சான்ட்னர் கேட்ச் பிடித்தார். அவருக்கு அடுத்ததாக ரஷீத் கான் களமிறங்கினார். ஆனால், 10 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் ராகுல் தெவாதியா.

இன்னும் இரண்டு ஓவர்களே பாக்கியிருந்தன. 19வது ஓவரில் ஐந்து பந்துகளில் 15 ரன்களை எடுத்துக் காட்டினார் ரஷீத் கான். விஜய் சங்கர் விக்கெட்டை இழந்ததும் வெற்றிக்கான கதவு மூடிவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக ரஷீத் கான் களத்தில் சிக்ஸ், ஃபோர் எனப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் குஜராத் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பெரியளவு ரன் எடுக்காமல் இருந்த ராகுல் தெவாதியா 20வது ஓவரில் சிக்ஸ் அடித்து சாவகாசமாக ஆட்டத்தை முடிக்க உதவினார்.

இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

https://www.bbc.com/tamil/articles/c3g5998v5g1o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் 2023: முதல் போட்டியில் சறுக்கிய சிஎஸ்கே!

Apr 01, 2023 07:38AM IST ஷேர் செய்ய : 
Ruturaj-Gaikwad-started-his-IPL-season-w

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

16வது ஐபிஎல் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மார்ச் 31) இரவு கோலாகலமாகத் தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணி வலுவான பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது.

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்வாட் அரைசதம் அடித்து தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

கெய்க்வாட்டை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சுமாரான ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ஆட்டத்தின் தொடக்கத்தில் களமிறங்கி ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8வது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிர்ச்சி கொடுத்தார்.

20 ஓவர் இறுதியில் சிஎஸ்கே 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில், ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோசுவா லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார்.

தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. குஜராத் அணியின் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 63 ரன்களை எடுத்திருந்தார்.

அதிகப்படியான விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடி வந்த குஜராத் அணி 19.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே தோல்வியடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஐபிஎல் தொடரின் 2வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. மாலை 3.30 மணிக்கு மேகாலயாவில் தொடங்கும் முதல் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மற்றும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதவுள்ளன. 

மோனிஷா

https://minnambalam.com/sports/ipl-2023-chennai-super-kings-vs-gujarat-titans/
 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.