Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: நடுக்கடலில் படகில் பட்டினியுடன் மாதக்கணக்கில் இருந்தவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: நடுக்கடலில் படகில் பட்டினியுடன் மாதக்கணக்கில் இருந்தவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

Rohingya refugees
 
படக்குறிப்பு,

இந்தோனேசியாவுக்கு புகலிடம் தேடி வந்த ரோஹிஞ்சா முஸ்லிம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அடைக்கலம் தேடி பயணித்த படகின் இன்ஜின் பழுதானதால், நடுக்கடலில் உணவின்றி ஒரு மாத காலமாக தவித்துள்ளனர் அதில் பயணித்த 180 ரோஹிஞ்சா முஸ்லிம்கள். எங்கு நடந்தது இந்த சம்பவம்? அவர்களுக்கு என்ன ஆனது?

1900 கிலோ மீட்டர் கடல் பயணத்திற்கு பிறகு இறுதியாக இந்த படகில் பயணித்தவர்களை இந்தோனீசியாவின் அட்சே பிராந்தியத்திற்குள் நுழைய கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.

என்ன நடந்தது?

கடந்த நவம்பர் 25ஆம் தேதியன்று தெற்கு வங்கதேசத்தில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் முகாமில் இருந்து பெண்கள், குழந்தைள் உட்பட 180 பேருடன் இந்தோனீசியா நோக்கி புறப்பட்ட மீன்பிடிப் படகு, 6 நாட்கள் கழித்து நடுக்கடலில் இன்ஜின் பழுதாகி நின்றது.

அந்த படகை பழுது பார்க்க வழியில்லாத நிலையில், கடலின் நீரோட்டத்தாலும், காற்றின் திசை வேகத்தாலும் அந்த படகு இந்தோனேசீயாவின் வட முனை நோக்கி தானாக மிதந்து செல்லத் தொடங்கியது. 

படகில் புறப்பட்டு சென்றவர்களை தொடர்பு கொண்டு இன்ஜின் பழுதான விவரம் தெரியவந்த பின்னர் உறவினர்கள் அகதிகளுக்கான ஐநா அமைப்பின் உதவியை நாடினர்.

பழுதான படகில் உணவின்றி ஒரு சிலர் இறந்த விட்ட நிலையில், இந்தியா மற்றும் இந்தோனீசியா அதிகாரிகளின் உதவியை நாடியது அகதிகளுக்கான ஐநா அமைப்பு.

Wrecked boat used by Rohingya refugees

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

கரை ஒதுங்கிய பழுதான படகு

உதவிய இந்திய கடற்படை

பின்னர் தெற்கு நிகோபார் தீவுகளுக்கு அருகே இந்த படகு வந்த போது, அதனை கண்ட இந்திய கடற்படை, படகில் இருந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி உதவியது. மேலும் அந்த படகை தங்களது கப்பல் மூலம் இந்தோனீசியாவின் கடல்பகுதிக்கு அருகே இழுத்து வந்து விட்டுச் சென்றது இந்திய கடற்படை. 

இந்தோனீசியாவின் நிலப்பரப்புக்கு அருகே கடலில் நின்று கொண்டு இருந்த படகில் இருந்தவர்களில் சிலருக்கு மட்டும், அந்நாட்டிற்குள் நுழைய 6 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டது.

இதே போல வேறொரு படகு மூலம் இந்தோனீசியாவிற்கு வந்த 57 நபர்கள் மீட்கப்பட்டதாக அட்சே பெசார் மாவட்ட உள்ளூர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பசியுடன் மீட்கப்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

படகில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் பல நாட்களாக உணவின்றி கடலில் தவித்த நிலையில், மீட்கப்படும் போது அனைவரும் பசியுடனும், சோர்வாகவும் இருந்ததாக அட்சே பெசார் மாவட்டத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதில் 3 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

மீட்கப்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்களை அரசின் காப்பகங்களில் தற்காலிமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் குடியுரிமை அதிகாரி, ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்பவர்களுக்கான சர்வதேச அமைப்பு, கடந்த காலங்களில் உயிரை பணயம் வைத்து மலேசியா, இந்தோனீசியாவுக்கு அடைக்கலம் தேடி படகில் வரும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது.

மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அகதிகள் மையத்தில் இருந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 படகுகள் வரை அடைக்கலம் தேடி புறப்பட்டு சென்று இருக்கிறது. 

Rohingya refugees

பட மூலாதாரம்,GETTY IMAGES

காணாமல் போன் 180 பேர் நிலை என்ன?

வங்கதேசத்தில் இருந்து 180 ரோஹிஞ்சா முஸ்லிம்களுடன் புறப்பட்ட மற்றொரு படகின் நிலை குறித்து எந்த வித தகவலும் கிடைக்காதது கவலையளிப்பதாக, ஐநாவின் அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.  

அவர்கள் பயணித்த படகு உடைந்து மூழ்கி இருப்பதற்கான சாத்தியம் இருப்பதால், அதில் பயணித்த 180 பேரும் இறந்திருக்கக்கூடும் என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பாபர் பலோச் தெரிவித்துள்ளார். 

காணாமல் போன படகில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Rohingya

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு என்ன பிரச்னை?

மியான்மர் நாட்டில் வசிக்கும் இன சிறுபான்மையினரான ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ அத்துமீறல்கள் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினர்.

இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு வங்கதேசத்தில் உள்ள அகதிகள் மூகாமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அகதிகள் மூகாமில் இருக்கும் அதிக மக்கள் நெருக்கடி காரணமாகவும், பிழைப்புக்காகவும் புகலிடம் தேடி ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படகுகள் மூலமாக மலேசியா மற்றும் இந்தோனீசியா நாடுகளுக்கு அண்மை காலமாக செல்லத் தொடங்கியுள்ளனர். 

https://www.bbc.com/tamil/articles/c51lm2el8epo

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

காணாமல் போன் 180 பேர் நிலை என்ன?

வங்கதேசத்தில் இருந்து 180 ரோஹிஞ்சா முஸ்லிம்களுடன் புறப்பட்ட மற்றொரு படகின் நிலை குறித்து எந்த வித தகவலும் கிடைக்காதது கவலையளிப்பதாக, ஐநாவின் அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

மனது கனக்கிறது. முடிவற்ற அகதிவாழ்வு. இதில் பாருங்கள் சிரிய,உக்ரேனிய அகதிகளுக்கு உள்ள வாய்ப்பை. ஆனால் தொடர் அழிவுகளைச் சந்தித்துவரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மற்றும் தமிழீழவர்கள் குறித்து இந்த உலகு வெற்று அறிக்கைகளோடு நிற்பதே அழிவிற்கு அணுசரனை வழங்குவது போன்றதே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

மனது கனக்கிறது. முடிவற்ற அகதிவாழ்வு. இதில் பாருங்கள் சிரிய,உக்ரேனிய அகதிகளுக்கு உள்ள வாய்ப்பை. ஆனால் தொடர் அழிவுகளைச் சந்தித்துவரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மற்றும் தமிழீழவர்கள் குறித்து இந்த உலகு வெற்று அறிக்கைகளோடு நிற்பதே அழிவிற்கு அணுசரனை வழங்குவது போன்றதே.

முஸ்லீம் என்றால் ஒற்றுமையாக ஓரணியில் திரளும்… முஸ்லீம்களும்
அவர்களின்  பணக்கார நாடுகளும் இவர்களை ஏறெடுத்தும் பார்க்க வில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் என்றால் ஒற்றுமையாக ஓரணியில் திரளும்… முஸ்லீம்களும்
அவர்களின்  பணக்கார நாடுகளும் இவர்களை ஏறெடுத்தும் பார்க்க வில்லையே.

ஒருவகையில் அவர்களது தனி உலகில் இருந்து பொது உலகுக்குள் உள்ளீர்க்கப்பட்டுவருவதன் வெளிப்பாடு மற்றும் பராமரித்தல் செலவுகள் இடங்களை அமைத்தல் போன்ற நிலைமைகளால் பெரும் பணக்கார முஸ்லீம் நாடுகளும் அரசுகளும் கண்டும் காணாதது போல் கைகழுவி விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் என்றால் ஒற்றுமையாக ஓரணியில் திரளும்… முஸ்லீம்களும்
அவர்களின்  பணக்கார நாடுகளும் இவர்களை ஏறெடுத்தும் பார்க்க வில்லையே.

இல்லை பணக்கார முஸ்லீம் நாடுகளின் திட்ட்மிடப்பட்ட இன பரம்பல் முடிந்தால் ரோஹிஞ்சா முஸ்லீம் இலிருந்து நாங்கள் வெளியில் வந்து விட்டோம் என்று கூற சொல்லுங்கள் பார்க்கலாம் ?

முடியாது அவர்களால் . அவர்களின் கடைசி புகலிடம் அவுஸ் அல்லது செழுமையான ஆள் குறைவான தீவுகள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இல்லை பணக்கார முஸ்லீம் நாடுகளின் திட்ட்மிடப்பட்ட இன பரம்பல் முடிந்தால் ரோஹிஞ்சா முஸ்லீம் இலிருந்து நாங்கள் வெளியில் வந்து விட்டோம் என்று கூற சொல்லுங்கள் பார்க்கலாம் ?

முடியாது அவர்களால் . அவர்களின் கடைசி புகலிடம் அவுஸ் அல்லது செழுமையான ஆள் குறைவான தீவுகள் .

ஓ…. முஸ்லீம்களின் இரத்தத்தில் ஊறிய, காணி பிடிக்கும் கோஸ்டிகள் போலுள்ளதே. 😂
 
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

இல்லை பணக்கார முஸ்லீம் நாடுகளின் திட்ட்மிடப்பட்ட இன பரம்பல் முடிந்தால் ரோஹிஞ்சா முஸ்லீம் இலிருந்து நாங்கள் வெளியில் வந்து விட்டோம் என்று கூற சொல்லுங்கள் பார்க்கலாம் ?

முடியாது அவர்களால் . அவர்களின் கடைசி புகலிடம் அவுஸ் அல்லது செழுமையான ஆள் குறைவான தீவுகள் .

சரியான தகவல்கள் இல்லாத இடத்தில் பொய்யான தகவல்களும், சந்தேகங்களும் புகுந்து கொள்ளும் வெளி ஏற்படும் என்பதற்கு உதாரணமான கருத்து இது👆.

எனவே, அடிப்படைத் தகவல்களை கீழே குறுங்கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன்👇

றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு உலகைன் முஸ்லிம் நாடுகள் எவையும் உதவுவதில்லை. இப்போது நினைத்துப் பார்க்கிற போது, ஏதிலிகளாக இடம்பெயரும் எந்த முஸ்லிம் குழுக்களுக்கும் பணக்கார முஸ்லிம் நாடுகள் பெரிதாக உதவுவதில்லை - பஸ்தீனியர், ஆப்கானியர், சிரியர்கள் இப்படிப் பல குழுக்கள் பெருமளவு மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளால் ஏற்றுப் பராமரிக்கப் படுவதில்லை. ஆனால், வாழும் நாடுகளில் மதராசாக்கள் அமைத்து முஸ்லிம் மதத்தை மேலும் மேலும் நாகரிக   உலகிலிருந்து அன்னியப் படுத்த இதே பணக்கார நாடுகள் பணத்தை வாரி இறைக்கும்: இலங்கையின் கிழக்கே இதற்கு நல்ல உதாரணம்.

யார் இந்த மக்கள்?

வரலாற்று ரீதியாக இவர்கள் வங்க தேசம், அதை நிலப்பரப்பு ரீதியாக ஒட்டிய இந்தியப் பகுதிகளில் வாழ்ந்து, மியன்மாரின் றகைன் (Rakhine) மாநிலத்தினுள் குடியேறிய முஸ்லிம் மக்கள் எனக் ஐ.நா அமைப்புக் கூறுகிறது. ஆனால், நடை முறையில் இவர்கள் உலகின் மிகப் பெரிய நாடற்ற (stateless) மக்கள் குழுவாக இருக்கின்றனர். பௌத்தம் பெரும்பான்மையான மியன்மார் இவர்களைத் தங்கள் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. வங்க தேசமும் இவர்களைக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த மக்களின் பூர்வீக நிலத் தொடர்பினால், இந்த இரு தேசங்களும் நியாயமாக றோஹிங்கியாக்களைக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.

றோஹிங்கியா அகதிப் பிரச்சினை

இது 2015 முதல் மியன்மாரில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக இடம்பெயர் ஆரம்பித்ததோடு சர்வ தேச கவனம் பெற்றது. ஆனால், 2017 இல் தான் மியன்மார் பௌத்த குண்டர்களும் , இராணுவமும் சேர்ந்து பல றோஹிங்கியா கிராமங்களை அவர்களின் பாரம்பரிய வசிப்பிடமான றகைன் மாநிலத்தில் எரியூட்டி, ஒட்டு மொத்தமாக ஒரு மில்லியன் வரையான மக்களை இடம்பெயர  வைத்தார்கள். இந்த ஒரு மில்லியன் வரையான றோஹிங்கியா மக்களில் பெரும்பாலானோர், மியன்மார் வங்க தேச எல்லைக்கருகில் இருக்கும் கொக்ஸ் பசார் (Cox Bazar) எனப்படும் வங்க தேசப் பகுதியில் அகதி முகாம்களில் வசிக்கின்றனர்.ஏனையோர், தாய்லாந்திலும், மிகச் சொற்பமானோர் இந்தியாவிலும் அகதிகளாக இருக்கின்றனர். ஐ.நா இந்த மக்களை நாடற்றவர்களா ஏற்றுக் கொண்டிருந்தாலும், பல நாடுகள் இவர்களை அகதிகள் நிலையில் கூட உள்ளே அனுமதிக்காத நிலை இருக்கிறது. எனவே, இவர்கள் அடிக்கடி மாதக்கணக்கில் வங்கள் கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது.

என்ன தான் முடிவு இதற்கு?

எல்லா அகதி மக்கள் போலவே, றோஹிங்கியா மக்களுக்கும் மேற்கு நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் அவர்களுடைய நலன்களை முன்னிறுத்தும் அமைப்புகள் இருக்கின்றன. மியன்மாரில் றோஹிங்கியாக்களுக்கு நடப்பது இனச்சுத்திகரிப்பு என இந்த அமைப்புகள் தெரிவித்து , ஐரோப்பிய நாடுகளில் சட்ட, கொள்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த முயற்சிகளின் ஒரு மைல் கல் கடந்த ஜூலையில் நிகழ்ந்திருக்கிறது. ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றில் (ICJ), ஒரு மூன்றாம் தரப்பின் மூலம் வழக்குத் தொடரும் ஏற்பாட்டின் மூலம், கெம்பியா (Gambia) என்ற ஆபிரிக்க நாடு றோஹிங்கியா மக்கள் மீது மியன்மார் செய்யும் இனப்படுகொலை தொடர்பாக ஒரு வழக்கைப் போட்டிருக்கிறது. இந்த வழக்கைப் போட கெம்பியாவிற்கு உரிமை (standing) இல்லை என்று மியன்மார் தொடுத்த எதிர்ப்பை கடந்த ஜூலையில் சர்வதேச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

இந்த இடத்தில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக் குற்றச் சாட்டை எப்படி சர்வதே நீதிமன்றில் முன்னெடுப்பது என்றும் யோசிக்க ஒரு முன்னுதாரணம் கிடைத்திருக்கிறது. றோஹிங்கியா மக்கள் அமைப்புகள் செய்தது போல, ஒரு மூன்றாம் தரப்பின் வழியாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை சர்வ தேச நீதிமன்றில் ஒரு வழக்காகத் தொடுக்கும் முயற்சி பிரித்தானியாவில் இருக்கும் ஒரு தமிழர் அமைப்பினால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது, அதன் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.

தொகுப்புக்கான மூலங்கள்: 

https://www.unhcr.org/en-us/rohingya-emergency.html

https://www.cfr.org/backgrounder/rohingya-crisis

https://www.icj-cij.org/en/case/178

வாசித்துப் பயன்பெறுங்கள். ஊகங்கள், அதன் வழி வரும் வெறுப்புகள்-இவற்றை எங்களை விட மோசமான நிலையில் அவதியுறும் மக்கள் மீது பரப்பாதிருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சரியான தகவல்கள் இல்லாத இடத்தில் பொய்யான தகவல்களும், சந்தேகங்களும் புகுந்து கொள்ளும் வெளி ஏற்படும் என்பதற்கு உதாரணமான கருத்து இது👆.

எனவே, அடிப்படைத் தகவல்களை கீழே குறுங்கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன்👇

மற்றவனின் கருத்தை பிழை என்று சொல்லிவிட்டு பின்பு அதே கருத்தை சட்டை  போட்டு உலாவ விடுவது ஒன்றும் புதினம் அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

வாசித்துப் பயன்பெறுங்கள். ஊகங்கள், அதன் வழி வரும் வெறுப்புகள்-இவற்றை எங்களை விட மோசமான நிலையில் அவதியுறும் மக்கள் மீது பரப்பாதிருங்கள்!

அதே இனக்குழு லண்டன் வந்தால்  சவூதியின் கள்ள நிறுவனம் பெர்மிங் காமல் உண்டு கண்ணை மூடிக்கொண்டு ஐந்து தொடக்கம் பத்து பில்லியன் பவுன்சுக்கு தொழுவதுக்கு நல்ல மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் உள்ள பழைய பாரம்பரியமிக்க கட்டிடம் ஒன்றை வாங்கி கொடுப்பார்கள் . ஆனால் இதே இனக்குழு ஆசியாவில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்தால் ஒருத்தரும் கண்டு கொள்ள மாட்டிணம் அவர்களும் பட்டினி கிடந்தாலும் முஸ்லீம் என்பதை விட்டு வெளியில் வரமாட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

மற்றவனின் கருத்தை பிழை என்று சொல்லிவிட்டு பின்பு அதே கருத்தை சட்டை  போட்டு உலாவ விடுவது ஒன்றும் புதினம் அல்ல .

பெருமாள், உங்கள் தமிழ் பற்றுப் போல தமிழ் அறிவு இல்லையென்கிறீர்களா?

தங்கள் இன, மத அடையாளத்தினால் நாடில்லாமல் அந்தரிக்கிற மக்களைப் பார்த்து, முடிந்தால் மத அடையாளத்தை விட்டு விட்டு வரட்டும் என்ற தொனியில் கருத்து வைத்தீர்கள். அருகிலிருக்கும் நாடுகளுக்கே ஓட்டைப் படகுகளில் தப்பி ஓடும் றோஹிங்கியாக்கள் அவுஸ் போல இடம் தேடுகிறார்கள் என்றீர்கள்.

இந்தக் குருட்டுத் தனமான இன/மதவாதக் கருத்திற்கு "சட்டை" போட்டால் நான் எழுதிய கருத்து வருகிறதா?, உங்கள் வாசிப்பு விளக்கம் என்ன? இவ்வளவு பட்டு, ஓடி அகதியாகி, இன்னொரு நாட்டு மக்களின் தயவினால் பாதுகாப்புடன் வாழ்கிற ஒரு சமூகத்தில் இருந்தபடி, இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெக்கம், சூடு, சொரணை எதுவும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

விதண்டா வாத  உங்களின் கருத்துக்களுக்கு என்னால் பதில் கருத்து வைக்க முடியாது நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

அதே இனக்குழு லண்டன் வந்தால்  சவூதியின் கள்ள நிறுவனம் பெர்மிங் காமல் உண்டு கண்ணை மூடிக்கொண்டு ஐந்து தொடக்கம் பத்து பில்லியன் பவுன்சுக்கு தொழுவதுக்கு நல்ல மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் உள்ள பழைய பாரம்பரியமிக்க கட்டிடம் ஒன்றை வாங்கி கொடுப்பார்கள் . ஆனால் இதே இனக்குழு ஆசியாவில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்தால் ஒருத்தரும் கண்டு கொள்ள மாட்டிணம் அவர்களும் பட்டினி கிடந்தாலும் முஸ்லீம் என்பதை விட்டு வெளியில் வரமாட்டினம் .

நீங்கள் ஈழத்தமிழன் என்ற அடையாளத்தை துறந்து விட்டு விட்டா லண்டனில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்? நேற்று கிறிஸ்மஸ் விருந்தில் வான்கோழி வைத்தாலே ஏதோ பெரிய துரோகம் என்பது மாதிரி அளந்த போது, பிரிட்டிஷ் அடையாளத்தோடா பேசினீர்கள்?😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.