Jump to content

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு... இனி விரைவில் தமிழகத்தில் ஆதார் ஐடி போல் மக்கள் ஐடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு... இனி விரைவில் தமிழகத்தில் ஆதார் ஐடி போல் மக்கள் ஐடி!

IMG-20221227-214316.jpg

தமிழ்நாட்டின் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஆதார் எண் என்பது அனைவரும் பயன்படுத்து முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் எண், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு எண் என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இது அனைவரது அடையாளங்களையும் கொண்ட முக்கிய ஆவணமாக மத்திய அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்திய அளவில், பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அரசு நலத்திட்டங்கள் உட்பட மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டு தற்போது அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கென புதிய ஐடி எண் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 10 முதல் 12 இலக்கங்களுடன் வரும் மக்கள் ஐடி MAKKAL ID ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணியை மாநில குடும்ப தரவு தளம் தமிழ்நாடு அரசின் மூலம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://tamil.economictimes.com/news/general/tamilnadu-government-will-create-makkal-id-for-tamilnadu-peoples-same-like-aadhar/articleshow/96541431.cms

டிஸ்கி

முதலில் " திராவிட கார்டு" என பெயரிடாமைக்கு வாழ்த்துவம் 💐.இரண்டாவது நோகாமல் நோன்பு கும்பிடும் வடவர்களுக்கு ஆப்பு..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி

முதலில் " திராவிட கார்டு" என பெயரிடாமைக்கு வாழ்த்துவம் 💐.இரண்டாவது நோகாமல் நோன்பு கும்பிடும் வடவர்களுக்கு ஆப்பு..👍

இதை பற்றி ஏனைய எதிர் கட்சிகள் என்ன சொல்கிறன?

பிஜேபி எதிர்க்கும் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

பிஜேபி எதிர்க்கும் என்றே நினைக்கிறேன்.

 

2 hours ago, goshan_che said:

💐.இரண்டாவது நோகாமல் நோன்பு கும்பிடும் வடவர்களுக்கு ஆப்பு..

வடக்கில் இருந்து மக்களை கொண்டு வந்து  தமிழ்நாட்டில் இறக்குவதில் பிஜேபி தான் மும்முரமாக ஈடுபடுகிறது. கட்டாயம்  அவர்கள் எதிர்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

 

வடக்கில் இருந்து மக்களை கொண்டு வந்து  தமிழ்நாட்டில் இறக்குவதில் பிஜேபி தான் மும்முரமாக ஈடுபடுகிறது. கட்டாயம்  அவர்கள் எதிர்ப்பார்கள்.

ஓம். கோவை பக்கம் இப்பெல்லாம் ஒரே பானி பூரி ஹை என்று கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இதை பற்றி ஏனைய எதிர் கட்சிகள் என்ன சொல்கிறன?

பிஜேபி எதிர்க்கும் என்றே நினைக்கிறேன்.

 

5 hours ago, nunavilan said:

 

வடக்கில் இருந்து மக்களை கொண்டு வந்து  தமிழ்நாட்டில் இறக்குவதில் பிஜேபி தான் மும்முரமாக ஈடுபடுகிறது. கட்டாயம்  அவர்கள் எதிர்ப்பார்கள்.

லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கும் மக்கள் ஐ.டி.,; நாராயணன் திருப்பதி.

IMG-20221228-063602.jpg

தமிழக அரசு அறிவித்துள்ள மக்கள் ஐ.டி,.. லஞ்சம் , ஊழலுக்கு வழி வகுக்கும் என பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருப்பதாவது,

ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் 'மக்கள் ஐடி' என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முயற்சி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கடும் விளைவுகளை உருவாக்கும். மேம்போக்காக பார்க்கும் போது, மக்கள் நலத்திட்டங்களை ஒரு எண் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடாக கூறப்பட்டாலும், இந்த சிந்தனையின் பின்னணியில் பெரும் உள்நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் இருப்பதால், 2014ம் ஆண்டு வரை மாநில அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே பயனாளிகளை அடையாளம்கண்டு அவர்களுக்கு சேரவேண்டிய உதவி தொகை, சம்பளம் அல்லது மானியத்தை பணமாக செலுத்தி கொண்டிருந்தன. இடைத்தரகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் மூலம் போலி பயனாளிகளை அதிக அளவில் சேர்த்து முறைகேடுகளை செய்து, பயனாளிகளை மிரட்டி, ஏமாற்றி அவர்களுக்குரிய தொகையினை செலுத்தாமல் ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் நடைபெற்று வந்தன.

உதாரணத்திற்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பு 150 ரூபாய் தின சம்பளத்தில், ரூபாய் ஐம்பது மட்டுமே பயனாளிகளுக்கு சென்றடைந்தது. ஆனால், ரூபாய் 150 கொடுக்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, மீதி பணமானது இடைத்தரகர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதே நிலை தான் மற்ற அனைத்து திட்டங்களிலும் நீடித்து வந்தது.

தற்போதைய பாஜக ஆட்சியில் தான் ஜன்தன், ஆதார், மொபைல் (JAM) இணைப்பு மூலம் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய மானியம் மற்றும் உதவிகள் நேரிடையாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் முழுமையாக செலுத்தப்பட்டு அரசின் மானியம் மற்றும் உதவி தொகை முழுவதும் பயனாளிகளை முழுமையாக சென்றடைந்து கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்), முதியோர் உதவி தொகை, விவசாயிகள் கௌரவ நிதி, எரிவாயு உருளை மானியம், உர மானியம், கல்வி மானியம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கான மானியம் மற்றும் உதவி தொகை தற்போது நேரடியாக உரிய பயனாளிகளின் ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போலிகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டு, இடைத்தரகர்கள் அகற்றப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டதன் மூலம் மட்டுமே இது வரை கடந்த எட்டு ஆண்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 2.5 லட்சம் கோடி என்பது மகத்தான சாதனை. இதன் மூலம் பரிதவித்து கொண்டிருக்கும் மக்கள் பெருமளவில் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள் கட்டுவதில் முறைகேடுகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் தேவையில்லாதவர்களுக்கு நிதியுதவி, விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் போலி பயனாளிகளை சேர்த்தது, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் என பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற பல்வேறு மோசடிகளை ஆதார் அட்டை (JAM)மூலம் கண்டுபிடித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதோடு, சில திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட தொகையும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் ஊழல், மோசடி செய்யப்பட்ட தொகை மீட்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து பயனாளிகளுக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ள இந்த நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை (JAM) பயனாளிகளுக்கு பேருதவி திட்டமாகவும், ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் அமைந்துள்ள நிலையில், மாநில அரசு, ஏற்கனவே அமலில் உள்ள கட்டமைக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றாமல் தனியாக ஒரு எண் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாகவே அமையும்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், தவிர்க்கப்பட்ட போலி பயனாளிகள், பலனடைந்த அதிகாரிகள், ஊழல் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் துளிர்த்தெழுந்து, மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

ஆகவே, உண்மையை உணர்ந்து மக்கள் நலத்திட்டங்களில் ஊழலை தடுக்க வேண்டிய தமிழக அரசு, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பலவேறு சட்டரீதியான பிரச்சினைகளும் இந்த விவகாரத்தில் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதார் அட்டையை பயன்படுத்தி, ஊழலற்ற, முறைகேடுகளற்ற வகையில் மக்களுக்கு உதவிகளை செலுத்தும் தற்போதைய முறையை மேலும் பலப்படுத்த வேண்டுமேயன்றி, உறுதியாக லஞ்ச,ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படக் கூடாது. இந்த முயற்சியை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்.

https://m.dinamalar.com/detail-amp.php?id=3204587

டிஸ்கி

கிந்திய அரசியலை அக்குவேறு ஆணிவேறாக புரிந்திருக்கும் தீர்க்கதரிசி தோழர்கள் இருவருக்கும் வாயில் சர்க்கரை அள்ளி போட வேண்டும்..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிந்திய அரசியலை அக்குவேறு ஆணிவேறாக புரிந்திருக்கும் தீர்க்கதரிசி தோழர்கள் இருவருக்கும் வாயில் சர்க்கரை அள்ளி போட வேண்டும்..👍

நன்றி தோழர். நுணாவை பற்றி தெரியாது, எனக்கு டயபிடீஸ் ஆகவே virtual சக்கரையாக போடுங்கோ😂.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தெரிந்து கொண்டது இந்திய ஆதார் என்பது இந்திய அடையாள அட்டை. எனது நாட்டில் அடையாள அட்டை இல்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் அடையாள அட்டை முறை உண்டு.
எப்படி இந்தியாவில் மட்டும் இரு அடையாள அட்டைகள்? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாம் கதைத்து கொண்டிருப்பது பிள்ளையானுக்கு வீழ்ந்த, விடும் வாக்குகள் பற்றி. பிள்ளையானின் அரசியல், அதை நீங்கள் இன்றும்(?) ஆதரிப்பது பற்றியது. இதில் ஏன் கருணாவுக்கு வீழ்ந்த வாக்குகள் எண்ணப்படுகிறன. அப்படியே ஆயினும், முஸ்லிம் ஆதிக்கம், கல்முனை தரமுயர்த்தல் இரெண்டும் கருணா, பிள்ளையானால் தீர்க்கப்பட்டு விட்டதா? ஆகவே உங்கள் ஹீரோக்களும் சீரோக்கள்தான்.  மற்றையவர் தேசிக்காய்கள் என்றால் உங்கள் ஹீரோக்கள் சுண்டங்காய்கள்🤣. அவர்கள் எலக்சனுக்காக பேசுவதை அப்பாவி பாமர மக்கள் நம்பினால் கூட பரவாயில்லை. ஆனால் படித்தவர்கள் கூட? அப்படியே ஆயினும், மகிந்த இனவாதிதான், இனப்படுகொலையாளந்தான் ஆனால் முஸ்லீம்களின் வாலை வெட்டினார், வீதிகளை புனரமைத்தார் எனவே அவருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் எனும் சிங்கள வாக்காளருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர் இனவாதி. நீங்கள் …. இது அந்த சமயம் நீங்கள் யாழில் எழுதியமைக்கு மாற்றாக உள்ளது.  அந்த தேர்தலில் பிள்ளையான் மட்டிலும், கருணா அம்பாறையிலும் கேட்டார்கள். நீங்கள் தெளிவாக சொல்லி இருந்தீர்கள்…இந்த முறை உங்கள் வாக்கும், உங்களை சூழ உள்ளோர் வாக்கும் இவர்களில்ளுக்கே என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என. ஆதாரம் கேட்டு திரியை நீளடிப்பதாயின் அது உங்கள் விருப்பம். எனக்கு இந்த ஆதாரம் காட்டும் விடயத்தில் முன்பு போல் ஆர்வம் இல்லை, அதே போல் யாழில் இப்போ தேடுவதும் கடினமாக உள்ளது - இது மாத்தி மாத்தி எழுதுவோருக்கு வசதியாயும் போய்விட்டது.
    • இதுதான் பிரச்சினையே  கருணாவிற்கு அன்று வாக்கு விழுந்தது கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் , முஸ்லிம்களிடமிருந்து வரும் அரசியல் நெருக்குவாரங்களில் இருந்து பாதுகாப்பு இந்த இரண்டையும் பட்டவர்த்தனமாக சொல்லி வேறு எந்த தமிழரும் போட்டியிடவில்லை. கரெக்ட்டு ஆனால் டிக்கடித்தது செல்வம் அடைக்கலநாதனும் கூத்தமைப்பு மத்திய சபையும். அதனால் தான் பிள்ளையான் பிரதேசவாதத்தால் வெல்லவில்லை என்று சொல்கிறேன். திருமலையில் வத்சா, மட்டுநகரில் தனுசிகா இரண்டும் பிள்ளையான் குழுவின் கைங்கர்யம் தான்,  பிள்ளையான் மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பிள்ளையான் செய்த அபிவிருத்திகள் அப்படி அதனை மறுக்கமுடியாது.  ஆனால் நிட்சயமாக பிள்ளையானுக்கு வாக்கு போட்டிருக்கமாட்டேன். மட்டுநகருக்கு என்னுடைய வாக்குரிமை மாற்றப்பட்ட பின் இரண்டு முறை வாக்களித்திருக்கிறேன் இரண்டும் பிள்ளையானுக்கு இல்லை. கல்முனையில் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலுக்காக கருணாவிற்கு ஒரு முறை. ஒன்று கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக யார் வந்து நின்றாலும் வாக்குப்போடுவேன் ஏனென்றால் அது என் ஆன்மா. நான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே இந்த ஒன்றை பிடுங்க முடியாமல் உலகில் எங்கு போய் எதை பிடுங்கினாலும் அது எனக்கு ஹைகோர்ட் மட்டுமே இந்த லட்சியம் உங்களுக்கு மேலே சொல்வது போல் தெரிந்தால் I don't care.
    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.