Jump to content

உக்ரைன் மீது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் – 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மீது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் – 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு

921979-300x168.jpg

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தரை, வான், கடல் வழியாக நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. உக்ரைன் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.

கடந்த நவம்பரில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது 10 அம்ச அமைதி திட்டத்தை உக்ரைன் முன்மொழிந்தது. தற்போது அதே 10 அம்ச திட்டத்தை முன்வைத்து அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது.

இதன்படி 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்தபோது இருந்த எல்லைகள் உறுதி செய்யப்பட வேண்டும். உக்ரைன் பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா தீபகற்ப பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது நடைபெறும் போரில் உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டோனஸ்க், லுகான்ஸ்க், கார்சான், ஜாபோரிசியா ஆகிய 4 பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உக்ரைனின் 20 சதவீத பகுதிகள் ரஷ்யாவிடம் உள்ளன.

அந்த பகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். மக்களின் விருப்பத்தின்பேரில் கருத்துக் கணிப்பு நடத்தி அவை ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன. அப்பகுதிகளில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்படாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்கவும் ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், லீவிவ், நிப்ரோ உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மின் விநியோக கட்டமைப்புகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. லீவிவ் நகரில் 90 சதவீத பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனின் 2-வது பெரிய நகரான கார்கிவ் உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

18,000 பேர் உயிரிழப்பு: உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 80 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் தலா ஒரு லட்சம் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சூழலில் 10 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போரை நிறுத்த உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் நேரிலும் தொலைபேசியிலும் பிரதமர் மோடி பலமுறை பேசியுள்ளார். இப்போதைய நிலையில் உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா தலைமையில் எதிரணியும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

நடுநிலைமையுடன் இரு அணிகளுடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் இந்தியாவால் மட்டுமே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அண்மையில் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றது. இதையொட்டி இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ராஜ்ஜியரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மீது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் – 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு – குறியீடு (kuriyeedu.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உக்ரேனுக்கு கால வகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் 2014 மின்க்ஸ் உடன்பாடு எனும் அஞ்செலா மார்க்கலின் கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் பிரான்ஸ் அதிபர்"

உக்ரேன்  யுத்தம் தொடர்பாக முன்னாள் பிரான்ஸ் சனாதிபதி கருத்து.  

Ex-French president names real reasons for 2014 Donbass truce

Francois Hollande agreed with Angela Merkel’s description of the Minsk agreements and hoped for their “resurrection”
 

Ex-French president names real reasons for 2014 Donbass truce

FILE PHOTO. French President Francois Hollande (R) and German Chancellor Angela Merkel. ©  Thierry Chesnot/Getty Images

The 2014 Minsk Agreement was indeed a ploy to buy Ukraine time and should be credited for Kiev’s “successful resilience” now, former French president Francois Hollande said on Friday. Confirming former German chancellor Angela Merkel’s assessment of the truce, Hollande also blamed US weakness for the failure to deter Russia.

Earlier this month, Merkel described Minsk as “an attempt to give Ukraine time” to build up its military. Speaking with the Kyiv Independent, a pro-government Ukrainian outlet, Hollande agreed, saying Merkel was “right on this point.”

“Since 2014, Ukraine has strengthened its military posture. Indeed, the Ukrainian army was completely different from that of 2014. It was better trained and equipped. It is the merit of the Minsk agreements to have given the Ukrainian army this opportunity,” Hollande said, adding that it also stopped the advance of Donbass “separatists” on Mariupol.

Hollande was president between 2012 and 2017, choosing not to run for re-election after polls showed him as the least popular French leader in recent history, with a 97% disapproval rating. In Friday’s interview, he credited himself for wanting “maximal” sanctions against Russia, while other EU leaders were reluctant.

 

Ukraine falsifying history and ‘replacing’ memory – Moscow

Here Hollande diverged from Merkel, pointing out she greenlit the Nord Stream 2 gas pipeline in 2015, while he canceled the sale of Mistral-class ships to Moscow. The former French leader also had harsh words for his American counterparts, accusing Barack Obama of “American withdrawal from the international scene” in Syria, Donald Trump of undermining NATO, and Joe Biden of “the rout in Afghanistan” that signaled “weakness in the Western camp” to Russian President Vladimir Putin.

By contrast, Hollande praised Ukrainian President Vladimir Zelensky for the “ability to appeal to the whole world and mobilize the Ukrainian nation,” saying this will be “central to the outcome of the war and the respect of Ukraine’s territorial integrity.” 

According to Hollande, the conflict will end when Russia fails, and then the Minsk agreements “can be resurrected to establish a legal framework already accepted by all parties.”

Moscow has yet to comment on the former French leader’s statements. Putin has responded to Merkel’s revelations by saying he had thought her honest, and that trust between Russia and the West was currently “almost at zero,” making future negotiations difficult at best. He also said her comments vindicated his decision to send troops into Ukraine and that in hindsight, the military operation should have started sooner. 

https://www.rt.com/news/569201-hollande-merkel-minsk-ukraine/

ஆக, சமாதானத்தில் ஒருவருக்குமே ஆர்வமில்லை என்பது வெட்ட வெளிச்சம். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஆக, சமாதானத்தில் ஒருவருக்குமே ஆர்வமில்லை என்பது வெட்ட வெளிச்சம். 

ஆனால் தாங்கள் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதவுரிமை ஜனநாயக நாடுகள் என்பார்கள். அள்ளியள்ளி ஆயுதங்களையும் கொடுப்பார்கள்.  😁

தங்களுக்குள்ளேயே பேசித்தீர்க்க முடியாதவர்கள் எல்லாம் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு சமாதான புறாக்களாக பறந்து திரிகின்றார்களாம். :cool:

அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

Earlier this month, Merkel described Minsk as “an attempt to give Ukraine time” to build up its military. Speaking with the Kyiv Independent, a pro-government Ukrainian outlet, Hollande agreed, saying Merkel was “right on this point.”


இதை விட, மெர்கல் சொல்லியதாக, இந்த நோக்கத்தை அடைவாதத்திற்கே உக்ரைன் உடன்படிக்கையில் கையெழுத்து வைக்க உடன்பட்டது எனவும், இந்த நோக்கத்தை அடைந்தவுடன் உக்கிரைன் ஒப்பந்தத்தை முறிக்கும் எண்ணத்தில் இருந்ததை மேற்கு / நேட்டோ அறிந்து இருந்தது எனவும், ஒப்பந்தம் கையெழுத்திட்டு சில மணி நேரங்களில்  உக்கிரைன் ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காது என்று nato / மெற்கிட்ற்கு அறிவித்ததாகவும் . முக்கியமானது ஒன்று,, ரஷ்யா பெரும்பான்மை பிரதேசங்களுக்கான சுயாட்சியை கொடுக்காதது /  நீக்கியது .

மேலும் மெர்கல் ஒரு விடயத்தை சொல்ல்லி இருந்ததாக , அதாவது, ரசியாவும் கடைப்பிக்காது என்ற தோற்றமே இருந்ததாகவும். 

அனால், சிலவற்றில் பிரள்வு இருந்தாலும் பல அம்சங்களை கடை பிடித்ததாக (இது பின்னோக்கிய அனுபவத்தில் கண்டது, இது மெர்கல் சொல்லவில்லை). 

ஆகவே நேட்டோ வும், உகிரைன் உடன் சேர்ந்தே ருசியாவை (பேயராக்குவது) என்ற ஆட்டம் ஆடி உள்ளது, சண்டையில் வந்து நிற்கிறது.     

இதனால் தான் சொல்கிறேன், இது களத்திலேயே  தீர்மானிக்கப்படும்.   

பென்டகன்  பாதுகாப்பு சரத்துகளுக்களான, ரஷ்யா தங்கத்தை முடக்குதல் என்பதும், அதையே கட்டியம் கூறி நிற்கின்றது.  

எனவே , ருஸ்சிங் இது வரை சொல்லி வந்த நேட்டோ . மேற்கு ரஷ்யாயவை துண்டாட முனைகிறது என்பதில் விடயம் இருக்கிறது என்பதை நம்ப வேண்டி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உக்ரேன் போர் ஆரம்பித்ததிற்கான முக்கிய காரணம் மேற்குலகு ரஷ்யாவிற்கு செய்த துரோகமே ஆகும்.இதை யாராவது மறுத்தால் உண்மை நிலவரங்கள் தெரியாதவர் என்றே அர்த்தம்.

உதாரணத்திற்கு வல்லரசு அணு ஆயுத குறைப்பில் அமெரிக்கா நேர்மையாக நடக்கவில்லை. நேட்டோ எனும் போர்வையில் ஆயுத அதிகரிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியாவின் தகர டப்பாவை அடிக்க.. இஸ்ரேல்.. அமெரிக்கான்னு ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுத்தும்.. தகர டப்பா இறங்க வேண்டிய இடங்களில் இறங்கிக்கிட்டே தான் இருக்குது. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.