Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் சிலாவத்துறை நோக்கி படையினர் முன்னகர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் சிலாவத்துறை நோக்கி படையினர் முன்னகர்வு

வீரகேசரி இணையம்

பாதுகாப்பு படையினர் இன்று மன்னார் சிலாவத்துறை நோக்கி புதிய படை முன்னகர்வொன்றை ஆரம்ம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அப்பாவி பொது மக்களை மீட்கு முகமாக இப் படை நகர்வை ஆரம்பித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  • Replies 58
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தங்கள் மனிதாபிமானப் படையெடுப்பை பூர்த்தி செய்த களைப்பைப் போக்கிக் கொண்டு வடக்கில் மன்னாரில் தமது மனிதாபிமானப் படையெடுப்பை சிறீலங்கா இராணுவம் ஆரம்பித்துள்ளது..!

இதன் முதற்கட்டமாக மன்னார் முருங்கனில் இருந்து சிலாவத்துறை நோக்கி புலிகளிடம் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்கும் மனிதாபிமான பணியை ஆரம்பித்துள்ளதாம் சிங்களப் படை.

இதன் ஆரம்பத்தில்.. படை நடவடிக்கைக்கு பயந்து இடம்பெயர்ந்த பொதுமக்களின் வாகனத்தைக் குறிவைத்து சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டு 4 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துச் செல்ல முனைந்த போது அதை சிறீலங்கா படைகள் தடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கிழக்கில் இருந்து வடக்கே விரியும் ஆக்கிரமிப்புப் போர்..!

--------------

DPU Claymore kills fleeing civilians in Mannaar

[TamilNet, Saturday, 01 September 2007, 07:09 GMT]

Four civilians fleeing from a Sri Lanka Army offensive towards Chilaavattu'rai in Liberation Tigers of Tamileelam (LTTE) controlled territory in Musali, Mannaar, were killed and four wounded in a Claymore attack carried out by Sri Lanka Army (SLA) Deep Penetration Unit (DPU) Saturday around 8:15 a.m. The ambulances, sent from Mannaar, to bring the injured civilian were not allowed by the SLA to travel beyond Malwattuoya in Murungkan, initial reports said.

The civilians were fleeing in a van from a fresh offensive operation begun by the SLA from Murungkan towards Chilavattu'rai.

The DPU attack took place at Paasiththen'ral.

Hundreds of civilians have fled towards Arippu church seeking safety.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கிளைமோர் தாக்குதல்: 8 பொதுமக்கள் படுகொலை

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 13:50 ஈழம்] [மன்னார் நிருபர்]

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பாசித்தென்றலில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

பொதுமக்கள் பயணித்த வான் ஒன்றை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது மூவர் உயிரிழந்தனர்.

கிளைமோரில் சிக்கிய அந்த வாகனத்தில் பெண்களும், சிறுவர்களுமாக 10 பேர் இருந்தனர் என்று மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற நோயாளார் காவு வாகனத்தை முருங்கனில் உள்ள மல்வத்து ஒயாப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மறித்து மன்னார் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து மற்றொரு நோயாளர் காவுவண்டி மூலம் கரையோரப்பாதையூடாக காயமடைந்தவர்களை மன்னார் மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதினம்.கொம்.

----------------

chilaavatturai_09_01_07_03_63635_435.jpg

chilaavatturai_09_01_07_02_63639_435.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23152

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கிளைமோர் தாக்குதல்: 8 பொதுமக்கள் படுகொலை

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 13:50 ஈழம்] [மன்னார் நிருபர்]

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பாசித்தென்றலில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

பொதுமக்கள் பயணித்த வான் ஒன்றை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது மூவர் உயிரிழந்தனர்.

கிளைமோரில் சிக்கிய அந்த வாகனத்தில் பெண்களும், சிறுவர்களுமாக 10 பேர் இருந்தனர் என்று மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற நோயாளார் காவு வாகனத்தை முருங்கனில் உள்ள மல்வத்து ஒயாப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மறித்து மன்னார் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து மற்றொரு நோயாளர் காவுவண்டி மூலம் கரையோரப்பாதையூடாக காயமடைந்தவர்களை மன்னார் மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதினம்.கொம்.

----------------

chilaavatturai_09_01_07_03_63635_435.jpg

chilaavatturai_09_01_07_02_63639_435.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23152

------------------

Sri Lanka army 'begins new push'

Sri Lankan government soldiers have begun a new drive to push Tamil Tiger rebels out of the north-western Mannar district, a military spokesman says.

"This is a humanitarian mission to liberate some 6,000 people being held in the area," Brigadier Prasad Samarasinghe said.

There was no immediate word from the Tamil Tigers.

Fighting has risen over the past year, with thousands of people killed. A 2002 truce exists now only on paper.

Government forces recaptured the last rebel base in the east of the island in July, but the Tigers still control large parts of the north.

The rebels want independence for the 2.5m-strong minority Tamil community in the north and east, who they say are discriminated against by majority Sinhalese.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6973687.stm

------------------------

Sri Lanka says new offensive to evict Tigers

COLOMBO, Sept 1 (Reuters) - Sri Lankan soldiers started a new offensive on Saturday to drive the Tamil Tiger rebels from the northeastern district of Mannar while the military killed eleven rebels in a confrontation elsewhere in the restive north.

The offensive comes days after Foreign Minister Rohitha Bogollagama said the country had no plans for a major operation on rebel-held territory.

The clashes in Mannar and Vavuniya are the latest in a spate of land and sea clashes, ambushes and air raids between the armed forces and Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels.

Military Spokesman Brigadier Prasad Samarasinghe said the new operation was a "humanitarian offensive to liberate about 6,000 to 7,000 people".

Samarasinghe said that in a separate incident, the military killed 11 Tamil Tiger rebels.

An estimated 5,000 people have died since last year in renewed fighting after a peace process collapsed.

The Tigers, who say they are fighting for an independent state for minority ethnic Tamils in the north and east, were not immediately available for comment.

http://www.reuters.com/article/homepageCri...06070._CH_.2400

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை தொடக்கம்: சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 15:24 ஈழம்] [கொழும்பு நிருபர்]

மன்னார் சிலாவத்துறை ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறியதாவது:

இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய இத்தாக்குதல் தொடர்ந்தும் நடைபெறுகிறது. அப்பகுதியில் கடும் மோதல் வெடித்துள்ளது.

முள்ளிக்குளம் கொக்குப்பிடியான் நோக்கி இராணுவத்தினர் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்றார் அவர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் இந்த முன்னேற்ற முயற்சிக்கு ஆதரவாக தள்ளாடி மற்றும் வவுனியா தளங்களில் இருந்து கடும் ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(3 ஆம் இணைப்பு) மன்னார் கிளைமோர் தாக்குதல்: 9 பொதுமக்கள் படுகொலை

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 13:50 ஈழம்] [மன்னார் நிருபர்]

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான முசலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

மன்னார் சிலாவத்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் வலிந்த தாக்குதலை இன்று மேற்கொண்டதையடுத்து அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர்.

இடம்பெயர்ந்த பொதுமக்கள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து கொக்குப்படையானுக்கும் முள்ளிக்குளத்துக்கும் இடையில் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு இத்தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கிளைமோரில் சிக்கிய அந்த வாகனத்தில் பெண்களும், சிறுவர்களுமாக 13 பேர் இருந்தனர் என்று மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற நோயாளார் காவு வாகனத்தை முருங்கனில் உள்ள மல்வத்து ஒயாப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மறித்து மன்னார் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து மற்றொரு நோயாளர் காவு வாகனத்தை மூலம் கரையோரப்பாதை ஊடாக காயமடைந்தவர்களை மன்னார் மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலையடுத்து 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் அரிப்புப் பகுதியிலிருந்து நானாட்டான் ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்ற போதும் அவர்கள் அரிப்பு வீதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பலவீனமான பகுதிகள் எல்லாவற்றையும் சிங்களப் படைகள் முதலில் கைப்பற்றும். பின்னர் பலமான பகுதிகளையும் சிறிது சிறிதாகக் கைப்பற்றும்.. கடைசியாக அபிவிருத்தி என்ற போர்வையில் பெளத்த விகாரைகளை கட்டியெழுப்பும்.

சிறிலங்காப் படைகள் மன்னாரில் அரிப்பு என்ற இடத்தை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளன.

சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளா?

இவைகள் மன்னாரில் தெற்கில் அமைந்துள்ளன. மன்னாரை ஊடறுத்துச் செல்கின்ற வவுனியா மன்னார் வீதி மற்றும், மதவாச்சியில் இருந்து மன்னாரை நோக்கி செல்கின்ற வீதி போன்றவை சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்று நினைக்கின்றேன்.

அந்த வகையில் அதற்கு அப்பால் தெற்கில் உள்ள அரிப்பு என்னும் இடத்தை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்களா?

யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத, விடுதலைப் புலிகளின் சிறிய அணிகள் வந்து செல்கின்ற இடங்களை நோக்கி படைகளை நகர்த்தி விட்டு சிறிலங்கா அரசு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது.

இனி நாங்கள் மன்னாரும் போய்விட்டது என்று புலம்பப் போகிறோம்

அரிப்பு யாருடைய பகுதி என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

ஆனா தென்தமிழீழம் பறிபோய்விட்டது. வாகரை கைப்பற்றப்படும் என்று றம்பக்வெல சொல்ல அதுக்கு எங்கடை ஆக்கள் நக்கலா பதில் சொல்ல நாங்களும் சேர்ந்து சிரித்தோம். ஆனால் வாகரையை கைப்பற்றி விட்டார்கள்.

இப்போது வடக்கில் வலிந்த தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இப்பொழுது நாங்கள் சிரிக்கிறோம். ஆனால் ........

தமிழர் படை என்ன செய்கிறது. ஒன்றுமே புரியவில்லை.

எங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவு காலத்திற்குத் தான் இந்த மௌனம்??????

  • கருத்துக்கள உறவுகள்

சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளா?

தமிழ்நெற் அப்படித்தான் சொல்கிறது. இராணுவம் பிடித்தால், அப்பகுதிகள் நம் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை அல்லது முக்கியமற்ற பகுதிகள் என்று சொல்லுவது வழமைதானே. தமிழீழத்தின் வரைபடத்தில் உள்ள பகுதிகள் எல்லாமே முக்கிய பகுதிகள்தான். இல்லாவிட்டால் சிங்களவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கவேண்டியதுதானே.

தமிழர் படை என்ன செய்கிறது. ஒன்றுமே புரியவில்லை.!

தமிழர் படையை அவத்தாரா கொண்டிருக்கிறவருக்கு கூட தெரியாத என்ன செய்யுது என்று?

என்ன கொடுமை சார் :rolleyes:

அது சரி சமால் ராஜபக்ச வன்குஸ் டொயிலெற் ரிசு இறக்குமதி செய்திருக்கிறாராம் உண்மையோ? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கிளேமோர் தாக்குதலில் ஒன்பது பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட சிலாவத்துறையில் இன்று காலை பொதுமக்கள் பயணம் செய்த வாகனமொன்று கிளேமோர் குண்டு தாக்குதலில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்து மன்னார் மற்றும் முருங்கன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமது கட்டுப்பாட்டு பகுதியில் இடம் பெற்ற இந்த சம்பவத்திற்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே பொறுப்பு என குற்றம் சுமத்தியுள்ள விடுதலைப் புலிகள் தமது பிரதேசம் நோக்கி இராணுவத்தினரால் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது வலிந்து தாக்குதல் என்றும் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பகுதியில் தற்போது இராணுவ நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதியலுள்ள மக்களை விடுதலைப் புலிகளின் பிடிpயிலிருந்து விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை இது என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளினால் மன்னார், வில்பத்து மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு அச்சுறுத்தல் காரணமாகவே இந் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒமந்தைக்கு மேற்கே இடம்பெற்ற மோதலின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் 6 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், இராணுவ உத்திரவையடுத்து அரிப்பு பகுதியைச் சேர்ந்த அனைவரும் வெளியேறி நானட்டான் பகுதிக்கு செல்லுகின்றனர், என்றும் அவர்கள் நானட்டன் மகா வித்தியாலயத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்

அப்பகுதி செயலர் பி பி சியிடம் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(4 ஆம் இணைப்பு) மன்னார் கிளைமோர் தாக்குதல்: 9 பொதுமக்கள் படுகொலை

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 13:50 ஈழம்] [மன்னார் நிருபர்]

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான முசலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

மன்னார் சிலாவத்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் வலிந்த தாக்குதலை இன்று மேற்கொண்டதையடுத்து அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர்.

இடம்பெயர்ந்த பொதுமக்கள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து கொக்குப்படையானுக்கும் முள்ளிக்குளத்துக்கும் இடையில் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு இத்தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கிளைமோரில் சிக்கிய அந்த வாகனத்தில் பெண்களும், சிறுவர்களுமாக 13 பேர் இருந்தனர் என்று மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற நோயாளார் காவு வாகனத்தை முருங்கனில் உள்ள மல்வத்து ஒயாப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மறித்து மன்னார் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து மற்றொரு நோயாளர் காவு வாகனத்தை மூலம் கரையோரப்பாதை ஊடாக காயமடைந்தவர்களை மன்னார் மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலையடுத்து 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் அரிப்புப் பகுதியிலிருந்து நானாட்டான் ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்ற போதும் அவர்கள் அரிப்பு வீதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டோர் விபரம்:

1. திருமதி ஜேன்ஸ் (வயது 32)

2. திருமதி ஜேன்சின் மைத்துனரான ஒஸ்கார் (வயது 22)

3. தாக்குதலுக்கு இலக்கான வாகனத்தின் சாரதியான செல்குமார்

4. திருமதி செல்வகுமார் (வயது 32)

5. திரு திருமதி செல்வகுமாரின் மகன் (வயது 5)

6. செல்வகுமாரின் மாமியார் (வயது 55)

7. சுபாஸ்கரன்

8. பெண்ணொருவரின் பெயர் கிடைக்கப்பெறவில்லை.

9. குழந்தையின் பெயர் கிடைக்கப்பெறவில்லை.

நன்றி - புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் ரொயிட்டேர்ஸ் புலிக்கொடி போட்டு தாயக இராணுவச் செய்திகளை விரிவா போடுற அளவுக்கு வந்திருக்குது. நல்ல முன்னேற்றம்..!

Sri Lanka says new offensive to evict Tigers

By Ranga Sirilal

COLOMBO, Sept 1 (Reuters) - Sri Lankan soldiers launched an offensive on Saturday to drive Tamil Tiger rebels from the northwestern district of Mannar, a military spokesman said.

Rebels said a military claymore killed three civilians in the same area.

போராளிகள் வழங்கிய தகவலில் 3 பொதுமக்கள் கிளைமோரில் கொல்லப்பட்டுள்ளனர்.

The offensive comes days after Foreign Minister Rohitha Bogollagama said the country had no plans for a major operation on rebel-held territory.

சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் வடக்கில் தாக்குதல் இல்லை என்று அறிவித்த பின் நடந்த தாக்குதல் எங்கிறது ரொயிட்டர்ஸ்.

The clashes in Mannar and Vavuniya are the latest in a spate of land and sea clashes, ambushes and air raids between the armed forces and Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels.

Military Spokesman Brigadier Prasad Samarasinghe said the new operation was a "humanitarian offensive to liberate about 6,000 to 7,000 people".

Samarasinghe said that in a separate incident on Friday, the military killed 11 Tamil Tiger rebels and nine soldiers were wounded in the fighting.

"There was a threat to Forward Defence Lines from LTTE and we went and attacked them," Brigadier Prasad Samarasinghe said.

An estimated 5,000 people have died since last year in renewed fighting after a peace process collapsed.

Since the civil war erupted in 1983, about 70,000 people have died and hundreds of thousands ahve been displaced.

The Tigers, who say they are fighting for an independent state for minority ethnic Tamils in the north and east, were not immediately available for comment on the new offensive, but said three civilians were killed by a Sri Lankan "Deep Penetration Unit" operating in the rebel held aria.

"A claymore was exploded targeting the fleeing civilians. Three dead bodies...have been taken to the hospital," Selvy Navaruban, Tiger spokeswomen on humanitarian issues and human rights, told Reuters by phone.

The military denied that any unit had exploded a claymore targeting civilians. But it said five civilians had been admitted to hospital with injuries.

"We have not detonated any claymore mine targeting civilians. It's not our one. We deny (it)," said Samarasinghe.

In an e-mailed statement, the rebels said they killed one soldier as the military attempted to infiltrate rebel held areas.

"One LTTE front liner (also) lost his life in that incident," the statement said.

Fighting between the state and rebels is now focused in the north after the military evicted the Tigers from their last stronghold in the east. However, analysts see no clear winner on the horizon and fear the fighting could grind on for years.

http://www.reuters.com/article/homepageCri...04444._CH_.2400

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்பத்தும் போகுது என்ரியள். எப்பிடியெண்டாலும் வடக்கு பக்கம் வன்னிப்பக்கம் போகட்டும் பாப்பம், அண்ணன்மார் உவய பாடயிலதான் அனுப்புவினம். :rolleyes:

மன்னர் தீவுக்கும் வெளியில் மாந்தை பிரதேசம் தள்ளாடி பெரும் படை தளைத்தை சுற்றி உள்ள இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் இருந்து கடற்கரையோரமான சிலாவத்துறை அல்லது கொண்டச்சி நோக்கி ( இன்னும் விளக்கமாக சொன்னால் புத்தளம் நோக்கிய படை எடுப்பு அது....! நானாட்டான் இராணுவ வேலியில் இருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் முசலி பிரதேசபைக்குள் உள்ள கிராமம் தான் அரிப்பு...!

மதவாச்சி காடுப்புறம் , வவுவியா மாவட்டம், மன்னார் படை தளம் எண்று மூண்று பக்கமாக இரானுவத்தால் சூழப்பட்டு ஒரு பக்கம் கடல் , ஒரு பக்கம் புலிகள் கட்டுப்பாடு எண்று ஐந்து பக்கங்களை கொண்ட பிரதேசம் அது... அதை கட்டுக்குள் வைத்திருப்பது சுலபமான வேலை அல்ல... தமிழர் தரப்பு அதிகமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும்....

புலிகள் கவனதை சிதறடித்து திசை திருப்பி.. மன்னாருக்கு ஒரு தரை வளி பாதையை அதாவது A14 மதவாச்சி வீதியை (அனுராதபுரம் வீதியை) திறப்பதுதான் திட்டமாக இருந்தால் அது இலகுவானதாக இருக்காது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு

[ஞாயிற்றுக்கிழமை, 2 செப்ரெம்பர் 2007, 05:11 ஈழம்] [தாயக செய்தியாளர்]

மன்னாரில் நேற்று காலை முதல் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ள சிறிலங்காப் படையினர் அரிப்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேறும்படி நேற்று மாலை திடீர் அறிவிப்பை வெளியிட்டதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து இரவோடிரவாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

படையினரின் தாக்குதலை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலை முதல் அரிப்புப் பகுதியை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். அரிப்பு செங்கோல் மாதா ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலை வரை 170 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தனர்.

இந்நிலையிலேயே அரிப்புப் பகுதியில் இருந்தும் உடனடியாக மக்கள் வெளியேற வேண்டும் என்று படையினர் அறிவித்துள்ளனர்.

இடம்பெயரும் மக்களை வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு படையினர் தகவல் தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படையினரின் இந்த அறிவித்தலை அடுத்து கையில் கிடைத்தவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அருவியாற்றின் ஊடாக ஒரேயொரு படகின் மூலம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இரவு, இரவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறு இடம்பெயரும் மக்கள் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் படையினரின் கண்காணிப்பின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வித்தியாலயத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்திலேயே படையினரின் பாரிய படைத்தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு வரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் குவிந்ததால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நானாட்டான் பிரதேச செயலாளர் திருஞானசம்பந்தர் இந்த மக்களை வேறு இடங்களுக்கு அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக முருங்கன் பகுதியில் உள்ள டொன்பொஸ்கோ வித்தியாலயத்தில் இந்த மக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அவர் நேற்றிரவு தெரிவித்தார்.

மன்னாரில் படையினர் முன்னேற முயற்சிக்கும் பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிப்பதாகவும் இவர்கள் அனைவரும் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதினம்

அரிப்பு யாருடைய பகுதி என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

ஆனா தென்தமிழீழம் பறிபோய்விட்டது. வாகரை கைப்பற்றப்படும் என்று றம்பக்வெல சொல்ல அதுக்கு எங்கடை ஆக்கள் நக்கலா பதில் சொல்ல நாங்களும் சேர்ந்து சிரித்தோம். ஆனால் வாகரையை கைப்பற்றி விட்டார்கள்.

இப்போது வடக்கில் வலிந்த தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இப்பொழுது நாங்கள் சிரிக்கிறோம். ஆனால் ........

தமிழர் படை என்ன செய்கிறது. ஒன்றுமே புரியவில்லை.

எங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவு காலத்திற்குத் தான் இந்த மௌனம்??????

-------------------------------------------------------------------

சிங்களத்துக்கு முறையான ஒரு அடி போட வேணும் என்ற எதிர்பார்ப்பு ஒன்று பொதுவாக உள்ளது. அதில் தவறும் இல்லை. சிங்களம் முகமாலையில் மூக்குடைபட்டது. வவுனியா மன்னார் ஊடாக முன்னேற பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. கிழக்கை கைப்பற்றியது ஆனால் அதற்கு எதிராக புலிகள் சமர் செய்து பலத்தை வீணடிக்கவில்லை. இன்று மன்னாரில் கைப்பற்றப் பட்ட இடங்கள் எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் இல்லை.

புலிகள் பலமாக இருக்கும் பகுதிகளில் படைகளால் முன்னேற முடியாது. அதே நேரம் சிங்களத்துக்கு ராணுவ வெற்றிகள் அவசியமாக உள்ளது. இதற்காக சிங்களம் தனது ராணுவரீதியில் முக்கியத்துவமான நிலைகளில் இருந்து முக்கியத்துவம் இல்லாத நிலைகளுக்கு விரிவாக்குகின்றது. புலிகள் ராணுவ ரீதியில் முக்கியத்துவம் இல்லாத பகுதிகளில் இருந்து முக்கியத்துவமான பகுதிகளை நோக்கி தமது பலங்களை ஒருங்கிணைக்கின்றனர்.

இவற்றின் அடிப்படையில் சிங்களம் இடங்களை ஆக்கிரமிப்பதும் முன்னேறுவதும் கூட ஒரு விதமான வெற்றியாக இருக்கலாம். அந்த வெற்றியை தற்போது உணர முடியாது. வன்னியில் ஒரு சிறு இடத்தை விட மிச்ச இடங்களை மன்னார் வவுனியா ஆனையிறவு போன்ற தளங்களில் இருந்து முன்னேறி ஜெயசிக்குறு நடவடிக்கையில் சிங்களம் பிடித்தபோது இதைவிட கூடுதலாக மக்கள் அங்கலாய்தனர். இனி என்ன எல்லாம் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தவர்கள் பலர். ஆனால் ஆனையிறவின் வீழ்சி அன்றைய சிங்களத்தின் அகலக்கால் வைப்பில் மறைந்திருந்தது. இன்றும் அது சம்மந்தமாக ஒன்று இருக்காலாம் அல்லது அதற்கு மேலாக ஒன்று இருக்கலாம். படை என்ன செய்கின்றது என்ற கேள்விக்கு விடை யாருக்குத்தான் தெரியும். என்னவோ செய்யும் என்ற நம்பிக்கையை கடந்த காலங்கள் உணர்த்தி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாக்குதலின் நோக்கங்களாக இவை அமையலாம்..

1. வடக்கே போர் தொடுப்பதில் அரசு தடுமாறுகிறது.. விலைவாசி ஏறிப் போச்சு எனியும் போர் செய்ய அரசால் முடியாது என்பது போன்ற எதிர்கட்சிகளின் குரலை அடக்க உடனடியாக வடக்கில் இருந்து ஒரு இராணுவ வெற்றிச் செய்தியை சிங்கள தேசத்துக்கு வழங்க வேண்டிய கட்டாயம்.

2. தென்னிலங்கை அரசியல் போக்குகளை இராணுவ வெற்றிகளால் மூடி மறைக்க.. அல்லது திசை திருப்ப.

3. அந்நிய சக்திகளுக்கு அரசு விலைபோய் வடக்கை புலிகளிடம் கையளித்துவிட்டதாக ஜேவிபி செய்யும் பிரச்சாரத்தையும்.. அதன் தாக்கத்தையும் சமாளிக்க.

4. விடுதலைப் புலிகள் பலாலி தள்ளாடி மீது மேற்கொண்ட தாக்குதலால் அச்சமுற்றுள்ள படையினருக்கு தெம்பூட்ட.

5. விடுதலைப்புலிகளின் தாக்குதல் திட்டங்களின் கவனத்தை திசை திருப்பிடலாம் என்ற நோக்கில்.

6. வடக்கே ஒரு இராணுவ நடவடிக்கை எடுத்தால் வரும் சர்வதேச எண்ண ஓட்டத்தை நாடி பிடித்தறிய.

7. தற்காலிகமாக என்றாலும் வன்னிப் படைத்தளங்கள் மீதான புலிகளின் அச்சுறுத்தலை தவிர்த்தல்.

8. புலிகள் இராணுவ ரீதியில் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர் என்று காட்ட.

9. மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளை போர் நிறுத்த ஒப்பந்தம் எங்கும் தடுக்காது. போர் நிறுத்த ஒப்பந்தம் அரசுக்கு கூடிய சாதகமானது என்பதை புலிகளுக்கு உணர்த்தி புலிகளை அதில் இருந்து விலக தூண்ட..! அதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் நிராகரிப்பதாக சர்வதேசத்துக்கு காட்டி புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை... அங்கீகரிக்க முற்படுதல்.

10. தமது படையினர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து.. தமது படையினர் புலிகளால் துன்பப்படும் மக்களை மீட்டு மனிதாபிமான உதவியளிக்கின்றனர் என்பதைக் காட்ட இராணுவ ரீதியில் முக்கியமற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களை இராணுவ இலக்காக்குதல்.

11. புலிகளின் சில இராணுவ நிலைகளைப் பின்னகர்த்துதல். அல்லது இராணுவ ரீதியில் தமக்கு சாதகமான பகுதிக்குப் புலிகளை சண்டைக்கிழுத்து அவர்களை பலவீனமாக்குதல்.

12. புலிகளின் போர்த் திட்டங்களை நாடி பிடித்தறிய.

13. புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வடக்கிலும் அவர்களைப் பலவீனமாக்க இராணுவ நடவடிக்கை அவசியம் என்பது போல சர்வதேசத்துக்கு காட்டுதல். இதன் மூலம் தனது தமிழர் தாயகத்தில் இராணுவ விரிவாக்கத்துக்கு உதவியும் ஆதரவும் தேடுதல்.

மொத்தத்தில் அரசினதும் அரச படைகளினதும் நெருக்கடி நிலையையே இப்படை நகர்வு சொல்லி நிற்கிறது. இது அரசு எதிர்பார்த்ததைப் போல அரசுக்கு சர்வதேச அளவில் ஆதரவை அளிக்கவில்லை என்பதை ரொயிட்டர் மற்றும் பிபிசி செய்திகள் சுட்டி நிற்கின்றன. இருந்தாலும் உள்ளூரில் அரசுக்கு தற்காலிக பிரச்சார தேவைக்கு இவை நல்ல முதலீடுகள். சிங்களப் பொடியளின் உயிரை வைத்துக் கொலைக்கள அரசியல் நடத்தும் நிலையில் மகிந்த குடும்பம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரைபட ரீதியில் பார்த்தால் அரிப்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகக் கருதப்படாது. ஆனால் நடைமுறையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவே அனைவராலும் கருதப்பட்டு வந்தது. யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிறிலங்கா இராணுவம் பெருமெடுப்பில் தேடுதல் ஒன்றை நடத்திக்கொண்டு அரிப்புக்கு வரும். அன்று இரவுக்கு முன்பே திரும்பிவிடும். மற்றும்படி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிபோலவே நடைமுறையிருந்தது.

புரிந்துணர்வு உடன்படிக்கையின்போது அரிப்பு யாருடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. (திருமலையில் குரங்குப்பாஞ்சானையே சொந்தமாக்கிய புலிகள் இதை விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்).

இராணுவ ரீதியில் அரிப்பு பறிபோனது முக்கியமன்று. அதைக்காப்பாற்ற சண்டை செய்யவும் முடியாத தரைத்தோற்றம்தான் உண்டு.

ஆனால் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய இழப்பாக இருக்குமென்று கருதுகிறேன். வன்னிக்குரிய முக்கிய வழங்கற்பாதையாக அரிப்பு இருந்ததென்பது மட்டும் உண்மை.

இந்த நடவடிக்கைகள் புலிகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். வலிந்த தாக்குதல்களுக்குள் இறங்கவேண்டிய கட்டாயத்தைப் புலிகளுக்கு வழங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka's military says it captured Tamil Tiger sea base in north

The Associated PressPublished: September 2, 2007

COLOMBO, Sri Lanka: Sri Lanka's military captured a Tamil Tiger rebel sea base on Sunday, the second day of a new offensive in the country's rebel-held north, the Defense Ministry said.

The camp belonging to the Sea Tigers, the separatist rebels' naval wing, was in Silavathurai village in northern Mannar district, an official at the Defense Ministry's information center said on condition of anonymity, citing policy.

Three boats and a large number of anti-personnel mines and detonators were found, the official said, without providing details.

There were no reports of casualties, he said.

Mannar, about 220 kilometers (135 miles) northwest of Colombo, has become a flashpoint in the country's escalating conflict.

The military began an offensive on Saturday aimed at seizing control of areas south of Mannar, where it says the rebels are holding some 6,000 civilians who want to escape conscription.

Military troops routed the rebels from Eastern Province in early July, giving the government total control of the region for the first time in 13 years. However, much of the north remains under the control of the rebels, who run a virtual state there.

The rebels want to create an independent state for ethnic minority Tamils who have suffered decades of discrimination by ethnic Sinhalese-controlled governments.

A Norwegian-brokered cease-fire signed in 2002 brought temporary relief, but more than 5,000 people have been killed in resumed fighting in the past 22 months, bringing the death toll from more than two decades of fighting above 70,000.

Despite the collapse of the cease-fire, neither side has officially withdrawn from the pact, fearing international isolation.

http://www.iht.com/articles/ap/2007/09/02/...a-Civil-War.php

முக்கிய வழங்கல் பாதை என்று சொல்லக் கூடிய பகுதி ஒன்று எப்படி இராணுவரீதியில் முக்கியமில்லாததாக இருக்கும் சார்? :lol:

டம்லர்கள் சரிந்து விழுந்து கிடந்து காத்துக்கு உருளுதுகள் இனி மேசையாலை விழுந்திடும் எண்டு பயமாகிடக்கோ? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka takes Tamil Tiger territory after intense fighting

Sun Sep 2, 1:51 AM ET

COLOMBO (AFP) - Sri Lanka said Sunday that troops have consolidated a hold on territory seized from Tamil rebels during intense weekend fighting that the guerrillas said killed nine civilians.

Security forces seized territory that had been held by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) just south of Mannar in the northwest of the island nation on Saturday, military officials said.

"The army is now engaged in consolidation operations to retain control of the area," the defence ministry said in a statement.

The LTTE in a statement said nine people were killed and four injured in a landmine blast caused by Sri Lankan troops during the fighting.

The defence ministry however accused the LTTE of attacking civilians for allegedly trying to enter government-held parts of the Mannar.

The LTTE also said Sunday that they killed a government soldier and lost one of their men in Saturday's fighting. The defence ministry said intercepts of rebel radio communications indicated that 11 guerrillas were killed.

Both sides regularly make casualty claims that cannot be independently verified.

Government forces have been trying to break into rebel-held territory in the Mannar district for weeks, but have faced stiff rebel resistance.

The two sides have been locked in combat since 1972, with the Tigers fighting for a separate state for minority Tamils. The 35-year-old ethnic conflict has claimed more than 60,000 lives.

http://news.yahoo.com/s/afp/20070902/wl_st...st_070902055109

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் பிடித்ததாகச் சொல்லும் இடம் வில்பத்து நோக்கிய மன்னாரின் பகுதியில் உள்ளது. அங்கு புலிகளின் வலுவான படையணிகளோ தளங்களோ இல்லை..! இந்தச் சிலாவத்துறை.. மன்னார் - மதவாச்சி பெருந்தெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கரையோரக் கிராமமாகும்.

அரசுக்கு அரசியல் மற்றும் சர்வதேச களத்தில் காண்பிக்க வடக்கில் ஒரு இராணுவ வெற்றி வேண்டி செய்யப்படும்.. ஒரு இராணுவத்துக்கு சார்பான களத்தில் நடக்கும் தாக்குதலே இது.

புலிகளைப் பொறுத்தவரை முக்கியமானதன்று. கடற்புலிகளின் வலுவான தளங்கள் எதுவும் அங்கிருக்க வாய்ப்பே இல்லை..!

mannar22hz7.jpg

இராணுவம் நகர்ந்துள்ள பகுதி படத்தில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.