Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரியார் சிலைகளை உடைத்தது ஏன்?

Featured Replies

பெரியார் சிலைகளை உடைத்தது ஏன்?

பெரியார் ராமர், பிள்ளையார் சிலைகளை செருப்பால் அடித்தம், போட்டு உடைத்தும் போராட்டம் நடத்தினார் என்பது வரலாறு. இதைய யாரும் மறுக்க முடியாது.

பெரியார் செய்தது சரியா? அவர் இப்படி செய்து கோடானகோடி இந்துக்களின் மனதை புண்படுத்தியது நியாயமா என்று சிலர் கேட்கிறார்கள்.

அதற்கு என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

பெரியாருடைய சிலை உடைப்பு போராட்டம் போன்றவைகள் ஒரு எதிர்விழைவாகத்தான் இருந்தன. இராமர், பிள்ளையார் போன்றவைகள் தமிழர்களின் சுயமரியாதையை புண்படுத்துவதை பெரியார் உணர்ந்தார். இந்தக் கடவுள்கள் ஆபாசமான, அருவருப்பான கதைகளின் மூலம் உருவாக்கப்பட்டிருப்பதையும், அந்தக் கதைகளை நம்பி மக்கள் அதன் அடிப்படையில் விழா எடுப்பதையும் கண்டார்.

ஒரு சிறிய கூட்டம் இந்தச் சிலைகளை மக்களிடம் கடவுள் என்று காட்டி, மக்களை ஏமாற்றி மோசடி செய்வதை எதிர்த்தார்.

ஆகவே மக்களை மோசடி செய்ததற்கும், மக்களின் சுயமரியாதையை புண்படுத்தியதற்கும் பெரியாருடைய எதிர்விழைவே இந்தப் போராட்டங்கள்.

வேறொரு தலைப்பில் இளைஞன் சொன்ன அதே தியரிக்கே வருகிறேன். ஒருவர் கல்லெறிகிற போது, பதிலுக்கு கல்லெறியப்படும் என்பதை கல்லெறிபவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பெரியார் கல்லெறிந்தவர் அல்ல. அவர் பதிலுக்கு திருப்பி கல்லெறிந்தவர்.

இந்த இடத்திலும் பெரியாரின் பண்பைப் பாருங்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் இதுவரை கோயில்களை, மசூதிகளை, தேவாலயங்களை இடித்து தள்ளியிருக்கிறார்கள். கடவுளை நம்புகின்ற மற்றைய மதத்தவரை கொன்று குவித்திருக்கிறார்கள். மற்றவர்களின் கடவுள் சிலைகளை இடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

ஆனால் பெரியார் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த சிலைகளையோ, கோயில்களையோ இடிக்கவில்லை. கடையில் பணம் கொடுத்து பிள்ளையார் சிலையை வாங்கி அதனையே உடைத்தார்.

பெரியாரின் சிலை உடைப்பு போராட்டத்திற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

மக்கள் முட்டாள்தனமாக சிலைகளை கடவுள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதும் நம்புகிறார்கள். அந்தச் சிலைக்கு அர்ச்சனை செய்வதும், பாலூற்றுவதுமாக இருக்கிறார்கள்.

இப்படி எவ்வித சிந்தனையும் இன்றி அறிவு மயங்கி இருக்கின்ற மக்களை தட்டி எழுப்ப சில அதிர்ச்சி வைத்தியங்கள் தேவைதான்.

ஒரு சம்பவம் சொல்கிறேன்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனியில் ஹம் கோயிலில் தூக்குக்காவிடி ஒன்று முறிந்து வீழ்ந்தது. காவடியின் கயிற்றை பிடித்து இழுத்துக் கொண்டிருந்த பக்தரின் தலை இடுக்குக்குள் சிக்குப்பட்டு படு காயமுற்றார்.

தேர் வீதி உலா வரும் போது இந்தக் கோர சம்பவம் நடந்தது. பக்தர்களுக்குள் அதிர்ச்சி பரவியது. பல பெண்கள் அழுதார்கள். இந்தப் பக்தர்கள் சொன்ன வார்த்தைகள் சில

"அம்மன் இந்த விபத்தை ஏன் தடுக்கவில்லை?"

"நான் இனிமேல் இந்த அம்மனிடம் வர மாட்டேன்"

"காயமடைந்தவர் ஏதாவது தவறு செய்திருப்பார்"

இப்படித்தான் அவர்கள் பேசினார்கள். உண்மையில் விபத்து நடந்ததிற்கும் கடவுளுக்கும் ஏதும் சம்பந்தமில்லை. அது முற்றுமுழுதான மனித தவறு. ஆனால் இந்த அம்மனுக்கு சக்தி இல்லை என்று சொல்லி அன்றிலிருந்து சிலர் ஹம் கோயிலுக்கு போவதில்லை.

"கோயிலுக்குள் இருப்பது ஒரு சிற்பம், மனஅமைதிக்காக மட்டும்தான் அதை வணங்கலாம், மற்றையபடி அது விபத்தை எல்லாம் ஓடிவந்து தடுக்காது" போன்ற விடயங்கள் சில மரமண்டைகளுக்கு புரிவதற்காக ஒரு மனிதன் படுகாயமடைய வேண்டியிருக்கிறது. மரணத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.

அண்மையில் கடவுளை தீவிரமாக நம்புகின்ற என்னுடைய நண்பன் ஒருவன் என்னிடம் சீரியசாகச் சொன்னான்

"நீங்கள் கடவுளை மிகக் கடுமையாக கிண்டல் அடிக்கிறீர்கள், ஆனால் உங்களை கடவுள் எதுவும் செய்யவில்லை, கடவுள் உண்மையாக இருந்தால் உங்களுக்கு ஏதாவது நடந்திருக்கும், எனக்கு கடவுள் இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது"

இப்படிச் சொன்னான்.

என்னுடைய கட்டுரைகள், வாதங்கள், விளக்கங்கள் எதுவும் அவனுடைய கருத்தை மாற்றவில்லை. ஆனால் கடவுளை கண்டபடி கிண்டல் அடித்துவிட்டு நான் எதுவும் நேராது இருப்பது அவனுடைய கடவுள் பற்றிய கருத்தை மாற்றுகிறது.

எனக்கு இருக்கிற அச்சமே இதுதான். ஏதாவது ஒரு மனித தவறால் எனக்கு எதாவது நேர்ந்து விட்டால், அவ்வளவுதான். என்னை சுற்றி உள்ளவர்கள் நான் கடவுளை பழித்ததால்தான் இது நடந்தது என்று சொல்லிவிடுவார்கள். மேலும் மூடநம்பிக்கையில் வீழ்ந்து விடுவார்கள்.

பெரியாரின் வெற்றியும் இங்கேதான் இருக்கிறது.

பெரியார் ராமன் சிலையை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை போட்டு உடைத்தார். ஆனால் அவரை தண்டிப்பதற்கு ராமனோ பிள்ளையாரோ வரவில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே வருவதற்கு?

ஏன் பெரியாருக்கு எதுவுமே நேரவில்லை என்று கேள்வியை தமக்குள் கேட்டு, கடவுள் பயத்திலிருந்து மீண்டவர்கள் பலர் உள்ளார்கள்.

எமது மக்கள் மதத்தை விட்டு வெளிவருவதற்கு தயங்குவதற்கு முக்கிய காரணமே கடவுள் பற்றிய அச்சம்தான். அந்த அச்சத்தை பெரியாரின் இது போன்ற போராட்டங்கள்தான் இல்லாமல் செய்யும்.

சபேசன் சொவதில் இருந்து ஒருவிடயம் எனக்கு புரிகிறது...

உடலுக்குள் உயிர் எண்ற ஒண்று இல்லை... காரணம் அப்படியான பொருள் விஞ்ஞான ரீதியாக நிறூபிக்க படவில்லை... உயிரின் இருக்கை என்பது கூட உடலுக்குள் எங்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை.... ஆகவே உயிர் சம்பந்தமான கட்டுகதைகளை வெறுக்கிறார்...

அதோடு உயிர்(உயிர் உள்ளவை மட்டுமே செய்யும் செயல்) என்பது புணச்சிக்கு உதவுவதாக(காரணமாக இருப்பதாக)) கதைகள் இருப்பதால் அது ஆபாசமானது ஆகவே அவர் உயிர் வைத்து இருப்பவர்களையோ, அல்லது உயிர் உள்ளவற்றையோ வெறுக்கிறார்...

  • தொடங்கியவர்

தயா சொல்வதில் இருந்தும் எனக்கு ஒரு விடயம் புரிகிறது.நான் எழுதியது அவருக்கு புரியவில்லை என்று புரிகிறது.(புணர்ச்சியை நான் ஆபாசமாகக் கருதவதில்லை என்பது இங்கே நான் குறிப்பிட விரும்பும் ஒரு தகவல்.)

பெரியாருடைய சிலை உடைப்பு போராட்டம் போன்றவைகள் ஒரு எதிர்விழைவாகத்தான் இருந்தன. இராமர், பிள்ளையார் போன்றவைகள் தமிழர்களின் சுயமரியாதையை புண்படுத்துவதை பெரியார் உணர்ந்தார். இந்தக் கடவுள்கள் ஆபாசமான, அருவருப்பான கதைகளின் மூலம் உருவாக்கப்பட்டிருப்பதையும், அந்தக் கதைகளை நம்பி மக்கள் அதன் அடிப்படையில் விழா எடுப்பதையும் கண்டார்.

ஓ...! எனக்கு புரியவில்லையா சபேசன்..??

ஆபாசம் எண்டால் அம்மணம் எண்டு நான் நினைச்சு போட்டன்...!

ஆகவே.. ஏதோ புனை கதைகள் அதாவது தமிழரின் சுய மரியாதைக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் சொல்ல பட்டதை பெரியார் கண்டார்... அதனால் சிலைகளை உடைத்தார்.... தமிழருக்கான எண்ட பதத்தை வீரிவாக்கி திராவிடருக்கு எண்டார்...

அதனால்தான் திராவிடர் களகத்தை அறிஞர் அண்ணா துரை துவங்கி பெரியார் மீது கரிசனை காட்டினாரா...?? தமிழனை அவமதித்த இந்திகாறர்களை எல்லாம் எதிர்த்து இந்தி எதிர்பு போராட்டங்களை எல்லாம் பெரியார் தலைமை தாங்க்கினார் எண்டுறீர்களா...???

இப்படி எல்லாம் நீங்கள் சொல்ல இல்லை ஆனால் அப்படி சொன்ன மாதிரி ஒரு உணர்வு தோண்றுவதை தவிர்க்க முடியவில்லை....!

ஒரு சிறிய கூட்டம் இந்தச் சிலைகளை மக்களிடம் கடவுள் என்று காட்டி, மக்களை ஏமாற்றி மோசடி செய்வதை எதிர்த்தார்.

ஆகவே மக்களை மோசடி செய்ததற்கும், மக்களின் சுயமரியாதையை புண்படுத்தியதற்கும் பெரியாருடைய எதிர்விழைவே இந்தப் போராட்டங்கள்.

வேறொரு தலைப்பில் இளைஞன் சொன்ன அதே தியரிக்கே வருகிறேன். ஒருவர் கல்லெறிகிற போது, பதிலுக்கு கல்லெறியப்படும் என்பதை கல்லெறிபவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பெரியார் கல்லெறிந்தவர் அல்ல. அவர் பதிலுக்கு திருப்பி கல்லெறிந்தவர்.

அதாவது அவர்கள் சிலைகளை காட்டி மக்களுக்கு வாழ்வு அமைவை புரிய வைக்க அதுக்கு பதிலாக பெரியார் வன்முறையை கற்றுதந்தார் என்கிறீர்கள்... அதே வன்முறை பெரியாருக்கு எதிராக திரும்பியது...

யாரோ ஒரு சைவன் கல் எண்றிகிறான் எண்றால் அதை மதம்தான் அவனுக்கு கற்று தந்தது எண்று நீங்கள் நினைப்பது உங்களின் அறியாமை....

  • கருத்துக்கள உறவுகள்

தயா சொல்வதில் இருந்தும் எனக்கு ஒரு விடயம் புரிகிறது.நான் எழுதியது அவருக்கு புரியவில்லை என்று புரிகிறது.(புணர்ச்சியை நான் ஆபாசமாகக் கருதவதில்லை என்பது இங்கே நான் குறிப்பிட விரும்பும் ஒரு தகவல்.)

புணர்ச்சி என்பதை ஆபாசமாகக் காட்டச் சொல்லவும் இல்லை.. காட்டிட்டு.. நான் ஆபாசமாக் கருதவில்லை என்றும் அதை பகுத்தறிவு என்றும் நோக்கச் சொல்லேல்ல. புணர்ச்சி என்பது உயிர்களிடத்தில் உள்ள ஒரு சாதாரண உடற்தொழில் செயன்முறையின் வெளிப்பாடு. மனிதன் உட்பட சில உயிரினங்கள் அதை மறைத்துச் செய்கின்றன. சில மனிதர்கள் அதை தெருவிலேயே செய்கின்றனர். இதில் என்ன ஆபாசம். றோட்டில இரண்டு நாய் புணர்ந்தால் ஐயோ ஆபாசம் நடக்குது என்று.. சொல்லுறமா.. இல்லையே..!

மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவதை ஆபாசமாக வேண்டும் என்றால் வரையறுக்கலாம். மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில் அவை தடைசெய்யப்படுகின்றனவே தவிர.. ஐயோ யாரும் இவற்றைச் செய்யக் கூடாது என்றேல்ல. திருமணம் முடிக்காமலே உறவு கொள்வதும் கூட இயற்கையான சாத்தியம் தான். ஆனால் மனிதன் தானே தனக்கென்று சில நாகரிக எல்லைகளை இட்டு.. இந்த இயற்கைக்கு செயற்கையான ஒழுங்குகளை வைத்திருக்கிறான். அது அவனுக்கு உதவியாகவும் உள்ளன. அது தான் நாகரிகம். அது ஆள் ஆளுக்கு.. பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடும். அந்த மாற்றங்கள் எல்லாம் பகுத்தறிவும் அல்ல.. ஆபாசம் என்று காட்டி.. அதை நிராகரிப்பது போல இன்னொன்றைச் சொல்வதும் பகுத்தறிவல்ல. உள்ளதை இரண்டு வகையில் பிரதிபலித்தல். :lol::)

  • தொடங்கியவர்

நான் ஆபாசம் என்று சொல்வது வெறும் புணர்ச்சி சார்ந்த கதைகள் அல்ல

பார்வதி குதிரையை பார்த்து காமம் உற்றது

சிவன் முனிபத்தினிகளை வன்புணர்வு செய்தது

அதற்கு முனிவர்கள் கொடுத்த சாபம்

அதை பார்வதி தடுத்த முறை

விநாயகர் உருவான கதைகள் (கதை அல்ல கதைகள்)

ஸ்கந்தன் உருவானதற்கு வான்மீகி இராமாயணம் சொல்கின்ற கதை

விநாயகர் ஒரு பெண்ணிடம் இருந்து வந்த அரக்கர்களை கொன்ற கதை

இப்படியானவைகள் என்னுடைய பார்வையில் ஆபாசமாகத் தெரிகின்றன. இப்படி ஆயிரக்கணக்கான விடயங்களை இந்து மதம் தனக்குள் வைத்திருக்கிறது. இந்தக் கதைகளின் அடிப்படையில்தான் இந்து மத விழக்களும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

தமிழர்களுக்கு விளங்காத மொழியில் தமிழர்களை திட்ட கண்டபடி ஏசி பூசை செய்வது, அவனை தாழ்த்தப்பட்டவன் என்று விலக்கி வைப்பது, அவனை அசுரனாகச் சித்தரிப்பது.......இப்படி நிறைய அக்கிரமங்களை ஒரு சிறு கூட்டம் தமிழ் மக்கள் மீது செய்கிறது.

இதை உணராத தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை. உலகில் எத்தனையோ இனங்கள் தாம் அடக்கப்படுவதையும் சுரண்டப்படுவதையும் புரியாதுதான் இருக்கிறார்கள்.

ஆனால் புரிந்தவர்கள் போராடத்தான் செய்வார்கள். வடமொழியில் உங்களுக்கு புரியாதவரை, நீங்கள் தூற்றுப்படுவதும், சிறுமைப்படுத்தப்படுவதும் உங்களுக்கு தெரியாது இருக்கலாம். ஆனால் தெரிந்தவர்கள் கொதித்துத்தான் போவார்கள்.

இவைகளை அறிந்த பலர் எதிர்த்தார்கள். பல சித்தர்கள் எதிர்த்தார்கள். பாரதியார் எதிர்த்தார். சிலருடைய எதிர்ப்பு மென்மையாக இருந்தது. சிலருடைய கடுமையாக இருந்தது.

இங்கே நான் சொல்வது பெரியாரினுடைய போராட்டம் ஒரு எதிர்விளைவு என்பதைத்தான். அவர் பதிலுக்கு திருப்பிக் கல்லெறிந்தவர் என்பதைத்தான் (கல்லெறிதல் என்பது ஒரு குறியீடு. உண்மையாக கல்லால் எறிவது அல்ல)

இந்து மதம் தமிழர்களை அசிங்கப்படுத்தவதோடு பெரியரின் போராட்டங்களை ஒப்பிடுகின்ற போது, எனக்கு பெரியாருடைய போராட்டம் எந்த விதத்திலும் கடுமையானதாக தெரியவில்லை.

பெரியார் கடவுளை நம்புகின்றவனை காட்டுமிராண்டி என்றுதான் சொன்னார். ஆனால் இந்து மதமோ தன்னுடைய ஆட்களையே பல தகப்பன்களுக்கு பிறந்தவர் என்று தூற்றுகிறது. இது உங்களுக்கு தேவையா?

கதைக்கள் என்பது எழுத பட்டவை அல்லது இயற்ற பட்டவை... மதம் என்பதையும் தாண்டி பின்னால் வந்தவர்கள் சொன்ன கதைகள் எல்லாமே உண்மை எண்றும் இல்லை அப்படி இல்லை எண்றும் இல்லை....

சைவர்களிலேயே பல பிரிவுகளை தாண்டி வந்தது எங்களின் சமயம்... ஆதில் வைனவம், சைவங்களுடனான முரன்பட்டல்கள் பல இருந்தன... ஒருவரை ஒருவர் கெடுதியாக சொல்ல வேண்டும் என்பதுக்காக இயற்றிய கதைகளைதான் நீங்கள் உண்மை கதைகள் போல நம்பிகொள்கிறீர்கள்... அவை எல்லாமே இடைச்செருகல்கள்... அல்லது விளக்க மின்மையால் வந்தவை....!

  • தொடங்கியவர்

விளக்கமின்மையாலும், இந்துப் பிரிவுகளுக்குள் ஏற்பட்ட மோதல்களாலும் உருவான கதைகளை இன்றுவரைக்கு ஏன் வைத்து விழா நடத்துகிறீர்கள்?

வைணவத்தை தாக்கி எழுதப்பட்ட அடிமுடி தேடுகிற கதைகளை சைவ பாடப் புத்தகங்கள் இன்றைக்கும் வைத்திருப்பது ஏன்?

சிவனை இழிவுபடுத்துகின்ற புராணக் கதைகளை இன்றுவரை வைணவர்கள் வைத்திருப்பது எதற்கு?

இன்றைக்கு பூசையின் போது "ஏகமாதா பகுபிதா சற்சூத்திராய நமஹ" என்று சொல்லப்படுவது ஏன்?

திருமணத்தின் போது ஆபாசமான மந்திரங்களை சொல்வது ஏன்?

தந்தை இறந்தால் ஈமைக்கிரியைகளின் போது சொல்லப்படுகின்ற மந்திரம் இது:

'யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.

இதனுடைய அர்த்தம் தெரியுமா? இவைகளை எல்லாம் எதற்காக இன்னும் வைத்திருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சபேசன் முந்தித் திருமண நிகழ்வின் போது, அசிங்கமான மந்திரங்கள் ஓதப்படுகின்றன என்பதை வலியுத்தினார் என்பதை நினைவில் கொள்கின்றேன். அப்படிப்பட்ட அசிங்கமான மந்திரங்களை இங்கே, திராவிடக் கொள்கை என்று வாதிடுகின்ற எத்தனை பேர் அந்த மந்திரங்களைச் செய்யாமல் திருமணம் செய்தார்கள், அல்லது வழமை போல பெற்றோருக்காகவும், மனைவிக்காகவும் அந்த மந்திரங்களை சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டீர்களா?

நடைமுறை வாழ்க்கையில் செயற்படுத்தாக எந்தக் கொள்கைகளும் என்றைக்குமே நினைக்காது. இந்தக் கன்னடக்காரனின் கொள்கைகளும் கடந்து போகும்.

  • தொடங்கியவர்

நான் இந்த மந்திரங்கள் எதுவும் ஓதாதுதான் திருமணம் செய்தேன்.

எனக்குத் தெரிந்து உண்மையை உணர்ந்த பலர் இந்த மந்திரங்களை தவிர்த்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

ஈழத்தில் போராளிகளும் இந்த மந்திரங்களைத் தவிர்த்துத்தான் திருமணம் செய்தார்கள்.

ஒரு தமிழர் திருமணம் பற்றிய வீடீயோ ஒன்றை சின்னக்குட்டி யாழிலும் இணைத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

தன்மானம் என்பது இருந்தால் எதற்கும் பயப்படாது பணியாது இந்த மந்திரங்களை புறக்கணிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமின்மையாலும், இந்துப் பிரிவுகளுக்குள் ஏற்பட்ட மோதல்களாலும் உருவான கதைகளை இன்றுவரைக்கு ஏன் வைத்து விழா நடத்துகிறீர்கள்?

இந்து மதத்தவரை பிரித்தாள எண்ணி.. பல திரிபுகளையும் மூடக்கதைகளையும் எழுதி இருக்கிறார்கள். அது இந்துவுக்கு மட்டுமல்ல.. கிறிஸ்தவம்.. இஸ்லாம்.. புத்தம்.. எங்கும் பிரிவுகள் உண்டு..!

ஆனால் இன்று இந்து மதம் அந்தப் பிரிவினைகளை எல்லாம் தாண்டி.. தனது ஆன்மீக மதக் கோட்பாட்டைத் தெளிவாக்கிக் கொண்டு பயணிக்கிறது. அதுதான் அவசியம்.

வைணவத்தை தாக்கி எழுதப்பட்ட அடிமுடி தேடுகிற கதைகளை சைவ பாடப் புத்தகங்கள் இன்றைக்கும் வைத்திருப்பது ஏன்?

இந்து மதத்துக்குள் பிரிவினைகள் சோடிக்கப்பட்ட புனை கதைகள் மூலம் வளர்க்கப்பட்டன. மதத்தைப் பலவீனப்படுத்தி மக்களை அடிமைகளாக்க.. மேற்குலக காலனித்துவ சக்திகளும் இதில் பங்கெடுத்தனர் அல்லது ஊக்குவித்தனர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப.. மேற்குலக மிசனறிகள் மற்றைய மதங்களை பலவீனப்படுத்த செய்யாத பிரிவினைத் தூண்டல்கள் இல்லை என்றே சொல்லலாம்..! இப்படி சமணர்கள்.. பெளத்தர்கள் என்று பலரும்.. இந்து மதத்தை சீரழிக்க விளைந்ததில் அந்த மதத்தை கொச்சைப்படுத்த புனைந்து விட்டவைகள் தான்.. இன்று சபேசன் போன்றோர்.. மத விரோத எண்ணங்களாக்கிக் காவித் திரிகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த மந்திரங்கள் எதுவும் ஓதாதுதான் திருமணம் செய்தேன்.

எனக்குத் தெரிந்து உண்மையை உணர்ந்த பலர் இந்த மந்திரங்களை தவிர்த்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

ஈழத்தில் போராளிகளும் இந்த மந்திரங்களைத் தவிர்த்துத்தான் திருமணம் செய்தார்கள்.

ஒரு தமிழர் திருமணம் பற்றிய வீடீயோ ஒன்றை சின்னக்குட்டி யாழிலும் இணைத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

தன்மானம் என்பது இருந்தால் எதற்கும் பயப்படாது பணியாது இந்த மந்திரங்களை புறக்கணிக்கலாம்.

இப்போ கொஞ்சம் முதல் சொன்னீர்கள்.. நான் புணர்தலை ஆபாசமாகக் கருதவில்லை என்று. திருமணம் என்பதே ஆணும் பெண்ணும்.. உடல் உள ரீதியா சேரத்தானே நடத்தினம். இல்ல வேறை ஏதேனும் தேவை இருந்தா சொல்லுங்கோ...??! அதைப் பற்றி உச்சரிக்கிறது.. ஆபாசமா..??! அதென்ன ஆபாச மந்திரம் என்பது.. உங்கள் பார்வையில் அவை ஆபாசமா இருக்கக் கூடாதே.. நீங்கள் தான் கண்டதும் கண்ட இடத்தில் புணர்ந்து.. திருமணம் செய்யாமலே வாழப் போதிக்கும் சுயமரியாதை.. சா பகுத்தறிவு வாதியான ஈ வெ ராமசாமியின்.. சீடன் அச்சே..!

திருமணம் என்பதே ஒரு ஆபாச நிகழ்வுதான். சட்ட ரீதியா.. ஒப்பந்தம் செய்யும் திருமண எழுத்துத்தான் நடைமுறை உலகுக்கு அவசியம். திருமணம் என்ற அந்த ஆபாச அர்த்தமுள்ள நிகழ்வுக்கு சமஸ்கிரத்தத்தில ஆபாசம் பேசினால் என்ன தமிழில் வாழ்த்தினா என்ன எல்லாம் ஒன்றுதான்.

சட்டத்துக்கு தேவையான பதிவை செய்யுங்கள். திருமண நிகழ்வைப் புறக்கணியுங்கள் என்பதுதான் சரியே தவிர.. இந்து மதம் சொல்லிக் கொடுத்த மந்திரம் ஆபாசம் என்று சொல்வது மிகத்தவறானது. இந்து மதத்தை சாட்டு வைத்து திருமண நிகழ்வுகளில் காசுழைக்கும் கும்பல்.. செய்த மந்திரங்கள் திருமணம் எனும் ஆபாச நிகழ்விருக்கும் வரை தொடரும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தம்பி நெடுக்காலபோவான்!

திருமணம் செய்வது ஆபாசம் இல்லை. ஆனால் திருமணத்தின் போது உன்னுடைய மனைவி ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தாள், இப்பொழுது நான்காவதாக உனக்கு மனைவியாகிறாள் என்று சொல்வது ஆபாசம்.

தான் மனைவியைப் புணரும் முன் கோடிக் கணக்காண தேவர்களும், அந்தப் பார்ப்பானும் புணர்வதற்கும் சம்மதம் தெரிவிப்பது இன்னொரு ஆபாசம்.

இதையெல்லாம் புரியாத மொழியில் சொல்வது எல்லாவற்றையும் விட மிக பெரிய அக்கிரமம்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்காலபோவான்!

திருமணம் செய்வது ஆபாசம் இல்லை. ஆனால் திருமணத்தின் போது உன்னுடைய மனைவி ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தாள், இப்பொழுது நான்காவதாக உனக்கு மனைவியாகிறாள் என்று சொல்வது ஆபாசம்.

தான் மனைவியைப் புணரும் முன் கோடிக் கணக்காண தேவர்களும், அந்தப் பார்ப்பானும் புணர்வதற்கும் சம்மதம் தெரிவிப்பது இன்னொரு ஆபாசம்.

இதையெல்லாம் புரியாத மொழியில் சொல்வது எல்லாவற்றையும் விட மிக பெரிய அக்கிரமம்.

உங்களைப் பொறுத்தவரை புணர்ச்சி என்பது ஆபாசமில்லாத போது.. உங்கள் மனைவியை ஒருத்தன் புணர்ந்தால் என்ன பலர் புணர்ந்தால் என்ன..! உங்கள் மனைவியை.. கண்ணுக்குத் தெரியாத தேவரும் முனிவரும் புணர்ந்தார்கள் என்று சொல்வதற்கு என்பதற்கு ஆத்திரப்படும் நீங்கள்.. பலராலும் புணரப்பட பெண்களை வழிகாட்டுறீங்களே.. விபச்சாரத்துக்கு ஒத்த தன்மையிலான கருத்துக்களுக்கு துணை போகும் கருத்துக்களை விதைக்கிறீர்களே அப்ப ஏன் இப்படி ஆத்திரம் வரவில்லை..! கண்ணுக்குத் தெரியாத காற்றும், நீரும்.. பல்லாயிரம்.. நுண்ணங்கிகளும் புணரும் போது.. தேவர்கள் புணர்ந்தது என்று கூறுவதில் என்ன ஆபாசம்..! உண்மை தானே.. நீங்கள் முன்னர் கூறிய புணர்ச்சி என்பது என்ன..??! என்ற அடிப்படையில் நோக்குங்கள் அவர்கள் சொன்னது உங்களைப் பொறுத்தவரை ஆபாசமாக இருக்கக் கூடாது என்பது புலனாகும்..! ஆனால் அப்படியன்றி அது ஆபாசமாக இருக்கிறது என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. முன் பின் முரணாக ஆபாசத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் நீங்கள் வரையறுப்பதை எம்மால் ஏற்க முடியாது..! :rolleyes: :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றின் ஆரம்பமே சூனியம்தானே. எனவே எல்லாரும் எதுவும் செய்யலாம் என்று இருப்பதில் தப்பு இருக்கமுடியுமா? சூனியத்தில் இருந்து உருவானவை மீண்டும் சூனியமாக முன்னர் ஆடும் விளையாட்டுக்கள்தானே என்று விட்டுத் தள்ளவேண்டியதுதானே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றின் ஆரம்பமே சூனியம்தானே. எனவே எல்லாரும் எதுவும் செய்யலாம் என்று இருப்பதில் தப்பு இருக்கமுடியுமா? சூனியத்தில் இருந்து உருவானவை மீண்டும் சூனியமாக முன்னர் ஆடும் விளையாட்டுக்கள்தானே என்று விட்டுத் தள்ளவேண்டியதுதானே :)

நீங்கள் சூனியத்துக்குள்ளேயே இருங்கள். அதில் தவறில்லை. ஆனால் அதே சூனியத்துக்குள் அடுத்தவனும் அவுத்துப் போட்டு நிற்கனும் என்று எதிர்பார்ப்பதுதான் தவறு. தான் ஜேர்மனியில் நிர்வாணமா நின்றதை நியாயப்படுத்த ஈவெ ராவுக்கு "காட்டு மிராண்டித்" தமிழர்கள் கிடைச்சது போல... இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள்.. மேய்படுவதற்கு. :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஜேர்மனியில் நிர்வாணமா நின்றதை நியாயப்படுத்த ஈவெ ராவுக்கு "காட்டு மிராண்டித்" தமிழர்கள் கிடைச்சது போல... இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள்.. மேய்படுவதற்கு.

சும்மா இருங்கோ!

ஜேர்மனியில் ஆடிய நிர்வாணக் கூத்திற்கும் ஒரு தத்துவம் உதிர்க்கப் போகின்றார்கள், எம் ராமசாமிப் பக்தர்கள். அதைப் பிறப்பின் வடிவம் என்பார்கள். அல்லது புத்தர் நிர்வாண கோலத்தில் தவம் இருந்ததை ராமசாமி கூட இணைத்துக் கதைத்து, புத்தரின் மறுவடிவம் தான் ராமசாமி என்றும் வாதிடக் கூடும்.

தம்பி நெடுக்காலபோவான்!

திருமணம் செய்வது ஆபாசம் இல்லை. ஆனால் திருமணத்தின் போது உன்னுடைய மனைவி ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தாள், இப்பொழுது நான்காவதாக உனக்கு மனைவியாகிறாள் என்று சொல்வது ஆபாசம்.

தான் மனைவியைப் புணரும் முன் கோடிக் கணக்காண தேவர்களும், அந்தப் பார்ப்பானும் புணர்வதற்கும் சம்மதம் தெரிவிப்பது இன்னொரு ஆபாசம்.

இதையெல்லாம் புரியாத மொழியில் சொல்வது எல்லாவற்றையும் விட மிக பெரிய அக்கிரமம்.

ஈ.வே.ராமசாமி சில ஆண்டுகளுக்கு முன் சொன்னதெற்கெல்லாம் ஆதாரம் கேட்கும் நீங்கள், ஆதாரம் கொடுத்தாலும் கூட அவை பக்கசார்பானவை என்று ஒரு பக்கம் சார்ந்தே கருத்து வைக்கும் நீங்கள், இங்கே கள நண்பர்கள் பலருக்கு வடமொழி அறிவு இருக்காது என்ற தைரியத்தில் சும்மா திருமணம்/மந்திரம்/ஆபாசம் என்று பிதற்றி கொண்டிருக்காமல், நீங்கள் சொல்லும் மந்திரங்களின் மூலத்தையும் அவற்றிற்கான தமிழ் மொழிபெயர்ப்பையும் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற விபரத்தையும் தந்தால், அந்த மந்திரங்களின் சரியான அர்த்தத்தை என்னால் தரமுடியும்.

கோர்வையாக வரும் மந்திரங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டி அவற்றின் அர்த்தங்களை மாற்றி சொல்லும் செப்படிவித்தைகாரர்களை எல்லாம் நாம் இந்த களத்திற்கு வருமுன்பே சந்தித்தாகி விட்டது.

உதாரணத்திற்கு திருக்குறளையே எடுத்துக் கொள்ளுங்கள்

தெய்வம் தொழாற் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

இந்த குறளை மட்டும் வைத்துக்கொண்டு எவராவது திருக்குறள் ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கிறது, ஆணின் காலில் விழுந்து வணங்க சொல்கிறது என்று நிறுவ முனைவது எவ்வளவு பெரிய மோசடி.

திருக்குறள் சொல்லும் கருத்துக்களை ஒரு குறளை வைத்து புரிந்து கொள்ள நினைப்பது எப்படி பகுத்தறிவாக இருக்காதோ அப்படியே கோர்வையாக வரும் மந்திரங்களை அங்கொன்றும் இங்கொன்றும் வெட்டி கத்தரித்து விளக்கம் தர முனைவதும் பகுத்தறிவல்ல.

அது மட்டும் அல்ல, பேச்சு வழக்கில் இல்லாத மொழிகளான சமஸ்கிருதம், லத்தீன், பழைய ஹீப்ரூ இவற்றில் எழுதப்பட்டவற்றை கிரகிக்க பக்கசார்பின்றி சரிவர மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மொழியியலாளார்கள் எல்லோரும் ஒப்புக்கொண்ட கருத்தாகும்.

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

இந்த மந்திரங்கள் பற்றி இங்கே சில மாதங்களிற்கு முன்பு விவாதம் நடந்தது.

அப்பொழுது ராஜாதிராஜா என்கின்ற ஒரு கள உறுப்பினர் என்னிடம் சவால் விட்டு, இந்த மந்திரங்கள் பொய் என்று நிரூபிக்கிறேன் என்று போனார். இன்று வரை அவர் திரும்பி வரவில்லை.

அவைகள் எல்லாம் இங்கேதான் யாழ் களத்தில் இருக்கின்றன. வேண்டுமென்றால் அந்தப் பகுதியிலேயே உங்கள் கருத்தை தரலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16197

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ராமசாமியைப் பற்றி நீங்கள் பூசி மெழுகுவது எல்லாம் உண்மையாகிவிடுமா? அது போலத் தான் ராஜாதி ராஜா சவால் விட்டு விட்டு பேசாமல் இருந்தால் அது தப்பு என்று ஆகிவிடுமா? ராஜாதிராஜா தனக்கு மந்திரங்களைப் பற்றித் தெரியாது. யாரிடமாவது கேட்டுச் சொல்கின்றேன் என்றார். அதற்குப் பின்னர் காணாமல் போய்விட்டார்.

ஆனால் அரை குறை மந்திரங்களை நறுக்கியும், வெட்டியும் கொண்டு வந்து பிழை பிடித்து போலித்தனமான விவாதங்களில் அவர் ஈடுபடவில்லை என்பது தான் முக்கியமான அம்சம்.

தொங்குக

தாவுக!

தாவிப் பின்

தொங்குக!

கிளை முறிந்து

விழும் வரை

தொங்குக!

தாவுக! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தொங்குக

தாவுக!

தாவிப் பின்

தொங்குக!

கிளை முறிந்து

விழும் வரை

தொங்குக!

தாவுக! :rolleyes:

என்னாச்சு இளைஞன்

நேற்று கதைக்கும் போது கூட நன்றாகத் தானே இருந்தீர்கள்???

பரிணாம வளர்ச்சி இன்னும் முழுமை பெறவில்லை. அதன் வெளிப்பாடுதான் இது. இடையிடையே எட்டிப் பார்க்கிறது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சூனியத்துக்குள்ளேயே இருங்கள். அதில் தவறில்லை. ஆனால் அதே சூனியத்துக்குள் அடுத்தவனும் அவுத்துப் போட்டு நிற்கனும் என்று எதிர்பார்ப்பதுதான் தவறு.

ஆராய்ச்சிகள், புதிய சிந்தனைகள் எப்போதும் தேவையானவை. பெரியாரின் சிந்தனைகளும் (சிலர் பார்வையில் நிந்தனைகள்) தேவைதான். அறிவற்ற நிலை மிருக நிலை. எனவே மனிதர்கள் எல்லோரும் அறிவுத் தேடலை மேற்கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் எப்போதும் நமது சிந்தனைகள் மீது ஐயம் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் எமது சிந்தனைகளை எப்போது வேண்டுமானாலும் தோற்கடிக்க பெருவெளி காத்திருக்கிறது. ஆகவே எந்த சித்தாந்தங்களை முன்வைக்கும்போதும் இறுதியில் "ஆனால்" என்ற வார்த்தையையும் மறக்காமல் வைக்கவேண்டும்!

எனினும் இப் பிரபஞ்சமே சூனியத்தில் இருந்து உருவாகி, வளர்ந்து, பேரிருப்பாக மாறி, மீண்டும் சுருங்கி சூனியமாக மாறும். இந்த உண்மை தெரிந்தாலும் அதனை உணர மறுத்து நாங்கள் விரும்புவன எப்போதும் நிலைத்து நிற்கும் என்ற மாய வாழ்க்கை வாழ்கிறோம். மாய வாழ்க்கை சலிக்காமல் இருக்க இப்படியான விவாதங்களும் வேண்டித்தான் இருக்கிறது!

பரிணாம வளர்ச்சி இன்னும் முழுமை பெறவில்லை. அதன் வெளிப்பாடுதான் இது. இடையிடையே எட்டிப் பார்க்கிறது :D

கோமோசேப்பியன் சேப்பியன் தானே...???

அதிலையும் மொங்கலைட்,, நீக்ரேற், கொவ்கோசெய்ட், அஸ்ரால்லட் எண்டு இருக்கு அதுலை எதுங்க..??? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.