Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்கொடை பணத்தில் நிர்மாணிக்கப்படும் போலி தலதா மாளிகை! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளார்.

குருநாகல் வடகட வீதியில் பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

நன்கொடை பணத்தில் நிர்மாணிக்கப்படும் போலி தலதா மாளிகை! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Urgent Letter To The President Mahanayaka Thero

ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்

 

மேலும், பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு கட்டுப்பட்ட அரசாங்கம் இவ்வாறான பௌத்த விரோதச் செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Gallery

https://tamilwin.com/article/urgent-letter-to-the-president-mahanayaka-thero-1672875225

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தந்த தாதுக்களை அவமதித்தமைக்காக சேபாலவுக்கு விளக்கமறியல் - போலி தலதா மாளிகை நிர்மாணம் தொடர்பிலும் தனி விசாரணை

By DIGITAL DESK 5

06 JAN, 2023 | 07:59 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

புத்த பெருமானின் புனித தந்த தாதுக்களை அவமதித்து பௌத்த மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை சமூக வலைத் தலங்களில் வெளிப்படுத்தியமை தொடர்பிலான  குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்  சேபால அமரசிங்கவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு  மேலதிக நீதவான் தரங்கா  மஹவத்த வெள்ளிக்கிழமை (06)  இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளுக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இரு சம்பவங்கள் குறித்த விசாரணைகளை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவுக்கு பாரப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பெளத்த பீடங்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இவ்வாறு அம்முறைப்பாடுகள் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று, சமூக ஊடக ஆர்வலர்  சேபால அமரசிங்க புத்த பெருமானின் புனித தந்த தாதுக்கள் குறித்து முன் வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்த விசாரணைகளாகும்.

களனி புகையிரத நிலைய வீதி, பௌத்த தகவல் நிலையத்தின்  தலைவர் அஹுங்கல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர், பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெருமவிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்த முறைப்பாடு, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம்  அனுப்பட்டதை அடுத்து, இவ்வாறு  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொது மக்கள்  முறைப்பாட்டுப் பிரிவுக்கு ,  விடயத்தை விசாரிப்பதற்காக பொறுப்பளிக்கப்பட்டதாக  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இது குறித்து உதவி பொலிஸ்  அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று இரவு ( 05) சேபால அமரசிங்கவின் பெல்லன்விலவில் அமைந்துள்ள  வீட்டுக்கு சென்ற சிறப்புக்குழு அவரைக் கைது செய்தது.

சேபால அமரசிங்க, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் அரசியல் உரிமைகளுக்கான இணக்கப்பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றங்களை புரிந்துள்ளதாக கூறி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

 இந் நிலையிலேயே அவரை சி.ஐ.டி.யினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பயன்படுத்திய கணனியை கைப்பற்றி கணனி தடயவியல் ஆய்வு கூடத்தில் வைத்து பகுப்பாய்வுகளை  மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந் நிலையிலேயே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே,  குருணாகல் - பொத்துஹர, வதாகட பகுதியில்  போலி தலதா மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடும் பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அது குறித்தும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

ஜானக சேனாதிபதி என்பவர் இந்த வழிபாட்டிடத்தை பொத்துஹர , வதாகட பகுதியில் நிர்மாணிப்பதாகவும், இது குறித்து பல பக்தர்கள்  தமது நிதி பங்களிப்புக்களை,  நல்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந் நிலையிலேயே போலி தலதா மாளிகை தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

https://www.virakesari.lk/article/145164

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா…. தலதா மாளிகையை பற்றி ஒருவர் தவறான தகவலை தெரிவித்தவுடன்….
மகா நாயக்க பீடங்கள், உள்ளூர் பொலிஸ், புலனாய்வுத் துறை, நீதவான், பிரதி பொலிஸ் மா அதிபர், சிறப்புக் குழு, ஜனாதிபதி என்று… எல்லாரும் பதறி அடித்து, கதறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழர் நாம்தான்…  வெத்து வேட்டுகள் மாதிரி…  
பழம் புண்ணை, மாறி மாறி… சொறிந்து கொண்டு இருக்கின்றோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

செபால நல்லதொரு ஆய்வாளர். இவர் எல்லா மத மூட நம்பிக்கைகளையும் விமர்சிப்பவர். 
சமீபத்தில் தன்னை ஒரு தீர்கதரிசி என கூரிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ போதகரையும் இவர் விமர்சித்து இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, colomban said:

செபால நல்லதொரு ஆய்வாளர். இவர் எல்லா மத மூட நம்பிக்கைகளையும் விமர்சிப்பவர். 
சமீபத்தில் தன்னை ஒரு தீர்கதரிசி என கூரிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ போதகரையும் இவர் விமர்சித்து இருந்தார். 

பாவம்… ஆளை, ஒரு வழி பண்ணிப் போட்டுத்தான், வெளியில் விடுவார்கள் போலுள்ளது. 
சும்மா விகாரையில் கை வைத்தாலே… பதறியடிப்பவர்கள்,
தலதா மாளிகை என்றால் விசேட கவனிப்பு இருக்கும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடக ஆர்வலர் சேபால அமரசிங்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் !

தலதா மாளிகையை  அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமூக ஊடக ஆர்வலர் சேபால அமரசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான்  பிரசன்ன அல்விஸ் இன்று (17)  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை பெற்றுக்கொள்ள முடியும் என நீதிவான் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடக ஆர்வலர் சேபால அமரசிங்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் ! | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.