Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலேடை நயம்

Featured Replies

நண்பர்களே!!

தமிழின் அழகு எழுத்தில் அடங்காதது. மனித உயிரின் அத்தனை உணர்வுகளையும் எழுத்தில் வடித்தனர் எம் முன்னோர். வீரம், காதல், அன்பு, கோபம், துன்பம், வெறுப்பு என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் தமிழருக்கே உரிய பண்பு காரணமாக, இவற்றை சிலேடையாக வெண்பாக்களிலும் பாடல்களிலும் அழகாக அமைத்தனர். இந்த அழகிய தமிழ்க் களஞ்சியத்தை கோர்த்து ஒரு மாலையாக்க விரும்பி இந்த பகுதியை தொடங்கினேன். உங்களில் பலர் தமிழில் இலக்கியங்களில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்த சிலேடை வெண்பா, பாடல்களை பொருளுடன் இணைத்துவிடுங்கள்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

  • Replies 69
  • Views 37.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒருமுறை ஒளவையாரை நோக்கி காளமேகப் புலவர் நையாண்டியாக ஏதோ கூற, வெகுண்டெழுந்த ஒளவையார் இந்தப் பாடலை பாடினார். கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு நயமாக வந்து விழுந்திருக்கின்றன, பாருங்கள்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

யாரையடா சொன்னாய் அது.

தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது "எருமை". :)

பெரியம்மை என்பது "லட்சுமியின் தமக்கையான மூதேவி". :rolleyes:

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது "மேகம்" (அதாவது காளமேகம் :D )

குலராமன் தூதுவன் "குரங்கு"

அப்படியே "யாரையடா சொன்னாய் அது".

அவ்வையை இப்படி பாடவைக்க காளமேகம் என்ன கூறியிருப்பார் என தெரியவில்லை. தெரிந்தவர்கள் இணைக்கவும்.

  • தொடங்கியவர்

காளமேகத்தின் திறனைப் பாருங்கள். பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒரே வெண்பாவில் வைத்து எவ்வளவு அழகாக பாடிவிட்டார்.

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்

வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்

தேம்பாயும் சோலைத் திருமலைராயன் வரையில்

பாம்பாகும் வாழைப் பழம்.

:lol::lol:

பாம்பில் "நஞ்சு இருக்கும்". வாழைப்பழம் "நைந்து இருக்கும்",

பாம்பும் தோலை உரிக்கும். வழைப்பழத்தை உண்பவர்களும் அதன் தோலை உரிப்பர்.

பாம்பு சிவன் முடியிலும் இருக்கும், வாழைப்பழமும் பஞ்சாமிர்தமாக சிவன் முடியில் இருக்கும்.

பாம்பு சினந்து கடித்தால் மீட்சி இல்லை. அதேபோல் வாழைப்பழத்தை கடித்துவிட்டாலும் அது பூசைக்கு உதவாது.

அதன் பின் திருமலைராயனை புகழ்ந்து எழுதுகிறார்.

நல்ல முயற்சி ஈழத்திருமகன்

நீங்கள் இரசித்த சிலேடை வெண்பாக்களை நானும் இரசித்தேன். நேரம் கிடைக்கும் போது நானும் இணைக்கிறேன். தொடர்ந்து இணையுங்கள்.

Edited by Rasikai

ஒருமுறை ஒளவையாரை நோக்கி காளமேகப் புலவர் நையாண்டியாக ஏதோ கூற, வெகுண்டெழுந்த ஒளவையார் இந்தப் பாடலை பாடினார். கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு நயமாக வந்து விழுந்திருக்கின்றன, பாருங்கள்:எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியேமட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்கூரையில்லா வீடே குலராமன் தூதுவனேயாரையடா சொன்னாய் அது.தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது. எமன் ஏவும் பரி என்பது "எருமை". :lol: பெரியம்மை என்பது "லட்சுமியின் தமக்கையான மூதேவி". :lol: முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது "மேகம்" (அதாவது காளமேகம் :D )குலராமன் தூதுவன் "குரங்கு"அப்படியே "யாரையடா சொன்னாய் அது". அவ்வையை இப்படி பாடவைக்க காளமேகம் என்ன கூறியிருப்பார் என தெரியவில்லை. தெரிந்தவர்கள் இணைக்கவும்.
ஈழத்திருமகன் ஒளவையிடம் முண்டி அவலட்சணமானவர் காளமேகமல்ல கம்பர்.வேறொன்றும் இல்லை ஒளவையை 'அடீ" என்று கம்பன் அழைத்ததால் வந்தவினை என்று பழசுகள் வாய்வழிக்கூற்றாகக் கேட்டிருக்கிறேன்'எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியேமட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனேஆரையடா சொன்னாய் அது."எட்டேகால் லட்சணமே - அவலட்சணமேஎமன் ஏறும் பரியே - எருமையேமட்டில் பெரியம்மை வாகனமே - அளவில்லா துன்பத்தைத் தரும் மூதேவியின் வாகனமான கழுதையேமுட்டமேல் கூரையில்லா வீடே - குட்டிச்சுவரேகுலராமன் தூதுவனே - அனுமனேஆரையடா சொன்னாய் அது - (நீ) சொன்னது ஆரைக்கீரையையடாஅந்தக்கால ஆட்களின் அட்டகாசம் எப்படியிருக்கு?பொல்லாத ஆட்களுங்கோ... ஈழத்திருமகன் நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான் கம்பன் அடீ என்று விளித்ததற்காக, ஒளவை அடா என்று கேட்டு சமநிலைப்படுத்திவிட்டார்.
  • தொடங்கியவர்

ரசிகை, ஆதி மிகவும் நல்லது. நேரம் கிடைக்கும் போது நீங்களும் வெண்பாக்களை இணையுங்கள்.

ஆதி. ஒளவையிடம் அவலட்சணப் பட்டது கம்பரா? இன்றுதான் அறிந்துகொண்டேன். நன்றி.

ஆமாம். புலவர்களிடம் மாட்டிக்கொண்டால் "கையறம் பாடிவிடுவார்கள்" என்று கேள்விப்பட்டிருக்கிறேன். :lol::lol:

ஈழத்திருமகன் நல்லதொரு பதிவு.

காளமேகத்தின் கவிதைகள்; அதனூடான சிலேடைகள் பெயர் போனவை. அவரவர்கள் அறிந்ததைத் தந்தால் இப் பகுதி மேலும் சிறப்புறும்.

எனது பங்குக்கு ஒரு பகுதி

நாகபட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்கு உணவு அருந்துவதற்காக காளமேகம் ஒரு தடைவ சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை. காளமேகம் பொறுமையை முற்றாக இழந்து போன பின்னர்தான் உணவு அருந்த அழைப்பு வந்தது. பசியின் உச்சத்துக்குப் போயிருந்த காளமேகம் அப்பொழுது உதிர்த்த கவிதை,

கத்துக்கடல் நாகைக்

காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில்

அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊர் அடங்கும்;

ஓரகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

பாடலைக் கேட்டதன் பின்னர்தான் உரிமையாளருக்கு வந்திருப்பது காளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கே தனது சத்திரத்திற்கு அவப் பெயர் வந்து விடுமோ என்று பயந்த காத்தான்; காளமேகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். காளமேகம் நிலமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தை இவ்வாறு சொல்லிக் கொண்டார்.

'காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்'.

என்று பதில் சொன்னார். ஆனால் உண்மையான கருத்து வேறு விதமானது என்பது கவிதையைப் பார்த்ததும் புரிந்திருக்கும்.

உணவு உண்ணும் போது இன்னுமொரு கவிதையை காளமேகம் உமிழ்ந்திருக்கிறார். பலர் தங்களது மனைவிமார்களின் சுருக்கவிழ்ந்த குடுமியை வைத்துப் பாட இந்தக் கவிதை காரணமாயிருந்திருக்கிறது.

ஒரு தடைவ குடந்தை என்னும் நகரத்தில் உள்ள சத்திரத்தில் காளமேகம் உணவருந்திக் கொண்டிருந்தார். அருகில் ஒரு பிராமணன் உணவு உட்கொண்டு கொண்டிருந்தான். அவனது குடுமி அவிழ்ந்து அவன் உண்டு கொண்டிருக்கும் உணவில் அது விழ, குடுமியை பிராமணன் எடுத்து உதற, அருகில் உணவருந்திக் கொண்டிருந்த காளமேகத்தின் இலையில் அந்தக் குடுமியில் இருந்த சோற்றுப் பருக்கைகள் விழ, காளமேகம் கோபம் கொண்டு சொன்ன கவிதை,

சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்

பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்

கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி

போட்டாளே வேலையற்றுப் போய்!

ஒளவையின் ஏளனப் பாட்டிற்குள்ளானவர் காளமேகமுமல்ல, கம்பருமல்ல. கம்பர் ஒளவையின் காலத்தில் வாழ்ந்தவருமல்ல. ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர் ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாகவே அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார்.

"ஒரு காலடி நாலிலைப் பந்தலடி"

இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல். இந்தப் பாடலில் அந்தக் கேள்விக்கான பதிலையும் ஒளவை சொல்லியிருந்தார் .

"ஆரையடா சொன்னாய் அடா. "

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும் ( கால் ) நான்கு இலையுமுண்டு.

கவியரசு கண்ணதாசனின் 'வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ '' என்ற பாடலை கேட்டிருக்கிறோம். அதன் கருத்தாழத்தை நினைத்துக் கவியரசு கண்ணதாசனை வாழ்த்தியிரு;கிறோம்.

இதே கருத்துப்பட பாடப்பட்ட சிவவாக்கியாரின் பாடலொன்றை இங்கே இணைக்கிறேன்

மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்

மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்

மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ?

எவ்வளவு மிகுதியாகச் செல்வம் படைத்தவனாயிருந்தாலும், இறந்தபின் விறகில் வைத்துக் கொளுத்தி விடுவார்கள்;. பிறகு வெந்தபின் சாம்பல் ஒன்றே மீதி. மாடு, மனை, மக்கள், சுற்றம் ஆகிய பந்த பாசம் தருபவை எல்லாம் எமன் வந்து அழைக்கும்போது துணை வருவார்களோ?

ஈழதிருமுகன் மாமா எனக்கு சிலேடை என்றா என்னவென்று விளக்கம் சொல்லுங்கோ............ :lol:

  • தொடங்கியவர்

மிகவும் நல்லது, ஆரவல்லி,இறைவன் மற்றும் மணிவாசகன். பாருங்கள் எவ்வளவு தெரியாத விடயங்கள் இருக்கின்றன. அறிந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி.

ஆரவல்லி, நீங்கள் தந்த இரண்டாவது வெண்பாவில் காளமேகத்தின் கோபம் எப்படி இருக்க்கிறது என்று பார்த்தீர்களா? இறுதி அடியில் "போட்டாளே வேலையற்றுப் போய்" என்று எழுதிவிட்டார். பொதுவாகவே ஒரு தாய் மகவை "பெற்றெடுத்தாள்" என்றே கூறுவார்கள். பசுமாடு கன்றை "ஈன்றது" என்றும் நாய் "குட்டி போட்டது" என்றும் வரும். காளமேகத்தின் கோபம் "முன்குடுமிச் சோழியனை" மட்டுமல்ல அவனை பெற்றெடுத்த அன்னையையும் சென்றுதைக்கிறது. இகழ்ந்து பாடுவதில் காளமேகம் ஒரு தனிப்பிறவி.

இறைவன். எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. காளமேகமும் ஒட்டக்கூத்தரும் ஒரே காலத்தவர். பொதுவாகவே காளமேகம்தான் வம்பு வழக்குக்களை விலைகொடுத்து வாங்குபவர். ஒளவைக்கு பிரச்சனை ஒட்டக்கூத்தருடனா? ம்ம்... :lol::lol:

மணிவாசகன். ஆமாம். சமயபெரியார்களும் சிலேடை வெண்பாக்களில் பல உட்பொருள்களை வைத்து எழுதிவிடுகின்றனர். எமது காலத்தில் வாழ்ந்த "கவியரசு கண்ணதாசன்" யாருக்கும் சளைத்தவர் அல்ல. என்னைக் கவர்ந்த கவிஞர் அவர்.

உங்கள் ஆக்கங்களுக்கு மிகவும் நன்றி. தொடருங்கள்.

இதோ நான் ரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்று:

சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க

வெற்றம்பலம் நாடிவிட்டோமே

நித்தம் பிறந்த இடத்தை நாடுதே

பேதை மட நெஞ்சம் - கறந்த

இடத்தை நாடுதே கண்!

  • தொடங்கியவர்

ஈழதிருமுகன் மாமா எனக்கு சிலேடை என்றா என்னவென்று விளக்கம் சொல்லுங்கோ............ :)

குழந்தாய்.!! :lol::lol:

சிலேடை என்பது எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய ஒரு "அணி". ஒரு சொல் அல்லது சொற்றொடர் தனியாகவோ அல்லது பிரிந்தோ பல்வேறு கருத்துக்களை தருவது சிலேடை. ஒருமுறை படிக்கும்போது ஒருவகை கருத்தையும், சொற்களை பிரித்துவிட்டால் இன்னொரு கருத்தையும் தருவது "பிரிமொழிச் சிலேடை". அவ்வாறில்லாமல் சொற்கள் பிரிக்கப்படாமலே வெவ்வேறு கருத்துக்களை தருவது "செம்மொழிச் சிலேடை".

சின்னப்புவை கேட்டுப்பாருங்கள். சிலேடையாக பேசுவார். :P :P

இதோ நான் ரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்று:சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்கவெற்றம்பலம் நாடிவிட்டோமேநித்தம் பிறந்த இடத்தை நாடுதேபேதை மட நெஞ்சம் - கறந்த இடத்தை நாடுதே கண்!

:D:)

Edited by Eelathirumagan

  • தொடங்கியவர்

காளமேகம் "வைக்கோலையும்" "போர்யானையையும்" சேர்த்து எழுதிய சிலேடை. மிகவும் அருமையான வெண்பா.

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்

போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

செக்கோல் மேனித் திருமலைராயன் வரையில்

வைக்கோலும் மால்யானை ஆம்.

யானையும் போர்க்களத்தில் பகைவரை வாரி அள்ளி அடித்துத் துவைக்கும். வைக்கோலையும் களத்துமேட்டில் சூடடிப்பார்கள்.

யானை போர் முடிந்து வந்து கோட்டைக்குள் செல்லும். வைக்கோலும் சூடடித்து முடிந்தபின் நெல் கோட்டை புகும்.

யானைப்படை போர்க்களத்தில் ஒரு பொலிவு. வைக்கோல் கூட "வைக்கோற்போர்" ஆக குவிக்கப்பட்டு அழகுறும்.

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளமேகத்தின் பாடலில் ஒன்று. அர்த்தம் சொல்லுகின்றவைக்கு ஆயிரம் பொற்காசுகள்.

தத்தித் தாதுதி தாதூதித் தத்துதி..

துத்தித் துதைதி தித்தித்த தித்தித்த தாதெது

தித்தித்ததெத்தாதோ

தித்தித்த தோது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதனராசா, 1000 பொற்காசுகள் பேச்சிலும் எழுத்திலும் மட்டும் இல்லைத்தானே?

பொருளைத் தந்திருக்கிறேன். பிழைகள் இருந்தால் பார்த்துக் குறைச்சுக் கொள்ளலாம்.

தோழியின் மூலமாக அனுப்பும் தூது நன்மை பயக்காது. கிளியோ தூதுப் பணியில் தூதை திறம்பட ஓதாது. தோழியின் தூதோ நாளைக் கடத்திக் கொண்டே போகும். தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் தீதாகும். ஆகவே பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என் மேல் படராது எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக.

குழந்தாய்.!! :lol::lol:

சிலேடை என்பது எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய ஒரு "அணி". ஒரு சொல் அல்லது சொற்றொடர் தனியாகவோ அல்லது பிரிந்தோ பல்வேறு கருத்துக்களை தருவது சிலேடை. ஒருமுறை படிக்கும்போது ஒருவகை கருத்தையும், சொற்களை பிரித்துவிட்டால் இன்னொரு கருத்தையும் தருவது "பிரிமொழிச் சிலேடை". அவ்வாறில்லாமல் சொற்கள் பிரிக்கப்படாமலே வெவ்வேறு கருத்துக்களை தருவது "செம்மொழிச் சிலேடை".

சின்னப்புவை கேட்டுப்பாருங்கள். சிலேடையாக பேசுவார். :P :P

மாமோய்!!

உங்களின் விளகதிற்கு மிக்க நன்றி பேபிக்கு ஒரளவு விளங்கிவிட்டது இன்னும் கொஞ்சம் விளங்கியவுடன் நானே சிலேடையை இங்கே கொண்டு வந்து பதிகிறேன்....அதுவரை சின்னா தாத்தாவிடம் சென்று கற்று வருகிறேன் மாமா........ :D :P

நன்றி

காளமேகத்தின் பாடலில் ஒன்று. அர்த்தம் சொல்லுகின்றவைக்கு ஆயிரம் பொற்காசுகள்.

தத்தித் தாதுதி தாதூதித் தத்துதி..

துத்தித் துதைதி தித்தித்த தித்தித்த தாதெது

தித்தித்ததெத்தாதோ

தித்தித்த தோது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது

தித்தித்த தோதித் திதி

ஆரவல்லியக்கோய்!

இங்கு இன்னொரு பாடலை பாருங்கோ

  • தொடங்கியவர்

ஆகா... காளமேகம் சரியான வில்லங்கமான புலவராக இருப்பார் போலும். :lol::lol:

போங்கப்பா ஆதி தலைப்பிற்குள் கட்டுப்படாமல் குழப்புகிறேன் என்று யாரோ முணுமுணுக்கிறார்கள்.

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டபோய்ப்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே.

பெரியவாள் பொருள் சொல்லி ஆதியைக் காப்பாத்திவிடுங்கோ.

ஏதோ தேடும் போது இது கிடைத்தது. இங்கு பொருந்தும் என்பதால் இதனை இணைக்கிறேன்

ஔவையாரின் பதிலடி- ஏ.கே.ராஜகோபாலன்

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே

மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

"பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு."

என்பதாகும் அவ்வரிகள்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பா¢யே

மட்டில் பொ¢யம்மை வாகனமே முட்டமேற்க்

கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாயது."

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பாரி எருமை. எமனேறும் பாரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு!

நன்றி

நிலாச்சாரல்

Edited by Rasikai

  • தொடங்கியவர்

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டபோய்ப்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே.

ஆதி சரியான பொருள் தெரியவில்லை. கீரைப்பாத்தியும் குதிரையுமா? :lol::lol:

அது யாரு இரசிகையம்மாவாக்கும் அதான் ஆதியைக் காப்பாற்ற ஆதாரத்துடன் வந்துவிட்டார். நன்றி இரசிகைஎங்கேப்பா இறைவன் சீக்கிரமாக் கூப்பிடுங்க. இரசிகையம்மாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேக்கோணும்ஈழத்திருமகனே! ஆதி சொல்லிட்டன் அப்பப்ப பொருள் தெரியாட்டாலும் எதையாவது போடுவேன் நீங்க யாராவது ஆதியைக் காப்பாத்தி கரையேத்தினாத் தப்புவன் அவ்வளவுதான். இல்லையெண்டால் தமிழும் நயமும் பகுதியில் தாண்டு போடுவன். :lol:

குலோத்துங்க மன்னனின் மனைவி பாண்டிய நாட்டு ராஜகுமாரி. அவளது குரு புகழ்பெற்ற நளவெண்பா என்னும் காவியத்தை இயற்றிய புகழேந்திப் புலவர். புகழேந்திப் புலவர் ராஜகுமாரியுடனே வந்து சோழ நாட்டில் தங்கி இருந்தார். குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப்பி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். அதன்படியே குலோத்துங்கனும் தனது அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தரை அனுப்பினான். ஒட்டக்கூத்தர் அந்தப்புரத்திற்கு வந்து ராணியின் அறைக்கு முன்னால் நின்றுகொண்டு இவ்வாறு பாடினார்

"நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் விரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே!"

“நளினமான மலரில் இருக்கும் தேன் போன்ற பெண்ணே நீ கதவைத் திறப்பதற்கு நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்ளும் அவசியமில்லை ஏனென்றால் வானளாவிய புகழ் கொண்ட ஆண் சிங்கத்தைப் போன்ற வலிமையுடைய வாள் வீரனாகிய குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வந்தால் தாமரை போன்ற உன் கைகள் தானே கதவைத் திறந்துவிடும்!” எனும் பொருளுடைய பின்வரும் பாடலைக் கூறினார்.

இந்தப் பாடலைக் கேட்ட அரசியின் கோபம் அதிகமாகவே அவள் கதவின் இன்னுமொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டாள். அப்படித்தான் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ சொற்றொடர் உருவானது.

Edited by Rasikai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.