Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) செய்திகள் 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண்

 
Play video, "ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண்", கால அளவு 2,15
 
02:15p0dvmkp3.jpg
காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குருவக்குடி கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் வளர்ப்பு முறையை ஆவணப்படுத்தி வருகிறார்.

இதற்காக காளைகள் இருக்கும் இடத்திற்கே தனியாகப் பயணம் செய்து காணொளிகளை உருவாக்கி வரும் லாவண்யா, அதை ‘மண்வாசம் லாவண்யா’ என்ற யு டியூப் சேனலில் வெளியிடுகிறார்.

தயாரிப்பு, படத்தொகுப்பு & ஒளிப்பதிவு : ஆ. லட்சுமி காந்த் பாரதி

மண்வாசம் லாவண்யா
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை வளர்ப்பில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்: “வீரத்தமிழச்சி ஆக்கிய பிள்ளைகள்”

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நடராஜன் சுந்தர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜல்லிக்கட்டு காளையுடன் சிந்தாமணி.
 
படக்குறிப்பு,

ஜல்லிக்கட்டு காளையுடன் சிந்தாமணி.

பானிபூரி கடையில் தினக்கூலிக்கு வேலை செய்யும் திருநங்கை சிந்தாமணி, தான் ஈட்டும் வருமானத்தை ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கும் காளைகளுக்கு மட்டுமே செலவிடுகிறார். எதனால் காளையின் மீது இவருக்கு இவ்வளவு ஈர்ப்பு? எந்த சூழல் இவரை இப்படி மாற்றியது?

 

மதுரை அலங்காநல்லூர்  அருகில் உள்ள கல்லணை என்ற ஊரைச் சேர்ந்த திருநங்கை வினோத் என்கிற சிந்தாமணி கடந்த 2017ல் இருந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தனது காளையை இறக்கி வருகிறார். பொருளாதாரத்தில் மிகப்பெரிய வசதி ஏதும் இல்லாத இவர், தற்போது தனது பெற்றோர், குடும்பத்தினருடன் கல்லணையிலேயே  வசிக்கிறார். குடும்பத்தில் கடைசியாக பிறந்த இவருக்கு  ஒரு அண்ணன், ஒரு அக்கா உண்டு.

 

 

சிந்தாமணியின் பெற்றோர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்தவர்கள். இருவருமே தற்போது வயது மூப்பு காரணமாக வீட்டில் இருக்கின்றனர். சிந்தாமணியும் அவரது அண்ணன்கள் இருவரும் கூலி தொழிலில் ஈட்டும் வருமானத்தில் தற்போது குடும்பத்தை கவனித்து வருகின்றனர்.

"ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு என் கனவு"

சிந்தாமணி காளை

சிறிய வயதிலிருந்தே ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் பங்கேற்பதைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட சிந்தாமணி, எதிர்காலத்தில் தானும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையைக் களமிறக்க வேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டார்.

 

இந்தக் கனவை நனவாக்கிக்கொள்ளும் வகையில், கடந்த 8 ஆண்டுகளாக காளைகளை வளர்த்து வருகிறார். 2016ல் ஜல்லிக்கட்டுக்கு தடை என்று அறிவித்த கணத்திலிருந்து ஜல்லிக்கட்டுக்காகக் காளையை வளர்க்கத் தொடங்கியதாக சிந்தாமணி பிபிசியிடம் தெரிவித்தார்.

 

"எங்கள் ஊரில், சுற்றியிருக்கும் ஊர்களிலும்  பலரும் காளைகள் வளர்க்கிறார்கள். இவர்கள் எல்லாம்  தங்கள் காளையை ஜல்லிக்கட்டில் களமிறக்கி, அந்த காளைகளை ஊருக்குள் ஆரவாரத்துடன் கொண்டாடியபடி அழைத்து வருவார்கள். சிறிய வயதில் அவற்றைப் பார்க்கும்போது நாமும் காளைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அப்போது, சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். 

 

அப்போது என்னைப் பார்ப்பவர்கள் கேலி, கிண்டல் செய்வார்கள். கடை கடையாகச் சென்று கைத் தட்டி காசு வாங்குவதை எல்லோரும் கேவலமாகப் பேசினார்கள். அப்போது ஏன் நம் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று எண்ணி மனசு வலித்தது. நாம் ஏன் மாறக்கூடாது? நாமும் ஒரு வீர தமிழச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த ஆசை போகப் போக அதிகமானது," என்றார்‌ சிந்தாமணி.

"திருநங்கையாக இருந்து வீரத் தமிழச்சியாக..." 

சிந்தாமணி

தமக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து 2016ல் மதுரை மேலூர் பக்கத்தில் உள்ள கொடிக்குளம் என்ற ஊரில் இருந்து தமக்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை கொடுத்தனர் என்கிறார் சிந்தாமணி. ஆனால், அந்தக் காளையை அவர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இறக்கவில்லை. வெறுமனே வளர்க்க மட்டுமே செய்தார்.

 அதன்பின் தாம் சித்தாள் வேலைக்குச் சென்று சிறுக சிறுக சேமித்த பணத்தில் பால் மாட்டு கன்றுக்குட்டி ஒன்றை வாங்கியதாகவும். அந்த பால் மாடு மூலம் கிடைத்த வருமானத்தில் சொந்தமாக ஒரு ஜல்லிக்கட்டு காளை வாங்கியதாகவும் அவர் கூறுகிறார். இந்தக் காளையைத்தான் அவர் போட்டிகளில் இறக்கினார்.

 

"2017ல் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சக்குடி இப்படிப் பல ஊர்களில் காளையைக் களமிறக்கினேன். திருநங்கையாக இருந்து, வீரத் தமிழச்சியாக என் அடையாளத்தை மாற்றியது என் காளைதான். 2017ல் இருந்து தொடர்ந்து எல்லா ஊர்களிலும் காளையைக் களமிறக்கி, இன்று திருநங்கை சிந்தாமணி என்றாலே தமிழ்நாடு முழுக்க தெரியும் அளவுக்கு இது சென்றுள்ளது,” என்கிறார் சிந்தாமணி.

கூலி வேலை செய்து காளை பராமரிப்பு 

காளையுடன் சிந்தாமணி
 
படக்குறிப்பு,

'பிள்ளையை' கொஞ்சும் சிந்தாமணி.

“தற்போது பானிபூரி கடையில் தினக்கூலியாக பணியாற்றுகிறேன்.  அன்றாடம் வாங்கும் ரூ.250 சம்பளத்தில்தான் என் பிள்ளைகளுக்கு (காளைகள்) தேவையான தீவனத்தை வாங்கி கொடுத்துப் பார்த்துக்கொள்கிறேன். இது தவிர அவ்வப்போது என்னை சமையல் வேலைக்கும் அழைப்பார்கள். அதில் ஈட்டும் வருமானத்திலும் எனக்கும், என் காளைகளுக்கும் செலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் சிந்தாமணி.

 

தன்  “பிள்ளைகளுடன்” ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறும் அவர்,  “இவற்றை எல்லோரும் ‘காளைகள்’ என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு இவை மிகவும் நெருக்கமான என் பிள்ளைகள்” என்று  உணர்ச்சி பொங்க கூறுகிறார் சிந்தாமணி. 

 

"ஒரு காலத்தில் தப்பான பொருளில் பார்த்து தப்பாக கேலி செய்து அழைப்பார்கள். அப்போதெல்லாம் மனசு ரொம்பவே வலிக்கும். நாம் ஏன் வாழ்கிறோம்; எதற்கு உயிருடன் இருக்கிறோம் என்று நினைத்து தனிமையில் நிறைய அழுவேன். 

 

எப்போது என் பிள்ளைகளுடன் எனது வாழ்க்கையைத் தொடங்கினேனோ அதிலிருந்து மனசில் எந்த கவலைக்கும் இடமளிக்காமல், என் பிள்ளைகள் மட்டும் போதும் என்று வாழ்கிறேன். வாழ்க்கையில் வேறெதுவும் வேண்டாம். கடைசி வரை இதே மகிழ்ச்சியுடன் என் பிள்ளைகளுடன் வாழ்வதே நிம்மதி தரும்," என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் சிந்தாமணி.

https://www.bbc.com/tamil/articles/cn06xpej15no

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு ஆறுதல் பரிசை வாங்க மறுத்த மதுரை மாணவி: இந்த ஆண்டு என்ன செய்கிறார் தெரியுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நடராஜன் சுந்தர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜல்லிக்கட்டு காளையுடன் யோகதர்ஷினி
 
படக்குறிப்பு,

தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையுடன் யோகதர்ஷினி

கடந்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையைப் பங்கேற்க வைக்கும் மாணவி யோகதர்ஷினிக்கு, நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. காரணம் என்ன?

 

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி (வயது 17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவர்களது முன்னோர்களைத் தொடர்ந்து வழி வழியாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் இருவரைத் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையை களமிறக்கி வருகிறார்.

 

 

கடந்த ஆண்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 'வடமுகத்து கருப்பு' என்று பெயரிடப்பட்ட யோகதர்ஷினியின் காளை பங்கேற்றது. காளை வாடிவாசலிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதும், அந்தக் காளையை இருவர் சேர்ந்து பிடித்தனர். இருவர் சேர்ந்து ஒரு காளையைப் பிடிப்பது விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் காளையைப் பிடிமாடு என்று அறிவித்த ஒருங்கிணைப்புக் குழு, அந்த பரிசு விழா குழுவுக்கு சேரும் என்று அறிவித்தது. மேலும் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷினிக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக விழாக் குழு தெரிவித்தது.

 

ஆனால், ஆறுதல் பரிசு வேண்டாம் என்று யோகதர்ஷினி நிராகரித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையைக் களமிறக்க இவர் ஆயத்தமாகி வருகிறார். மேலும் கடந்த ஆண்டு வெற்றிபெற முடியாமல் போனதால், நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளை வெற்றி பெறவேண்டும் என்ற ஊக்கத்துடன் தனது காளைக்குப் பயிற்சியளித்து வருகிறார் அவர்.

வெற்றிபெற முனைப்பு  

யோகதர்ஷினியும் காளையும்.

"கடந்த ஆண்டு எங்கள் மாடு பிடிபட்டதால் அதற்கு அறிவித்த ஆறுதல் பரிசை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, அடுத்த ஆண்டு வெற்றி பெற்று பரிசை வாங்கிக் கொள்வதாகக் கூறி வந்துவிட்டேன். இந்த ஆண்டும் அதே எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்,” என பிபிசி தமிழிடம் பேசிய யோகதர்ஷினி தெரிவித்தார்.

 

"மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று வாடிகளில் எந்த வாடியில் எங்கள் மாட்டைக் கட்டவிழ்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டு  அனுமதிக்கான அடையாள அட்டை தற்போது இணையத்தில் கொடுக்கப்படுவதால் எந்த ஊரில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை.

 

மூன்று ஊர்களிலும் பதிந்து இருக்கிறோம். அதில் எந்த வாடி கிடைத்தாலும் எங்கள் காளையைக் கட்டவிழ்த்து விடுவோம்.  ஒவ்வோர் ஆண்டும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் காளையை அவிழ்த்து விடுவோம். கடந்த ஆண்டு இணைய அடையாள அட்டை முறை என்பதால் அவனியாபுரத்தில் கிடைத்தது. அதனால் அங்கு மட்டுமே காளையை அவிழ்த்தோம். இந்த ஆண்டு எந்த வாடி  கிடைத்தாலும் அவிழ்ப்போம்," என்றார் யோகதர்ஷினி.

"அவனியாபுரத்தில் வெல்ல வேண்டும்"

சகோதரனோடு மாட்டைப் பராமரிக்கும் யோகதர்ஷினி
 
படக்குறிப்பு,

சகோதரனோடு மாட்டைப் பராமரிக்கும் யோகதர்ஷினி

“கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் மட்டும்தான் மாடு பிடிபட்டது. அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட  ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை வென்றது. ஆனால் இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளைக் காட்டிலும் அவனியாபுரத்தில் காளையைக் கட்டவிழ்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதற்கு ஒரு காரணம் உள்ளது,”  என்று யோகதர்ஷினி கூறினார்.

 

அந்தக் காரணம் என்ன என்று கேட்டபோது,

 

"தொலைத்த இடத்தில்தான் தேடனும், தோற்ற இடத்தில்தான் ஜெயிக்கனும் என்று என் அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த ஒரு நோக்கத்திற்காகவே அவனியாபுரத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றாகவேண்டும் என்று வெறியோடு காத்திருக்கிறோம். எந்த வாடி கிடைத்தாலும் எங்களுக்கு  சந்தோஷமான விஷயம்தான். ஆனால், அவனியாபுரம் கிடைத்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். இந்த முறை எங்கள் மாடு ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது," எனத் தெரிவித்தார் யோகதர்ஷினி.

மகளின் ஆசையை நிறைவேற்றும் தந்தை  

தந்தை முத்துவுடன் யோகதர்ஷினியும் காளையும்
 
படக்குறிப்பு,

தந்தை முத்துவுடன் யோகதர்ஷினியும் காளையும்

யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு மீது கொண்ட ஆர்வத்தினால், அவருக்கு காளையை வளர்க்க வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதாக தந்தை முத்து பிபிசியிடம் தெரிவித்தார்.

 

"சின்ன வயதிலிருந்தே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டுகளில் களமிறக்குகிறேன். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு எனது மகள் யோகதர்ஷினி காளையை களமிறக்க விரும்பினாள். அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக அவளும் ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையை அவிழ்த்து வருகிறாள்.

கடந்த ஆண்டு மாடு பிடிபட்டதால் இந்த ஆண்டு ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காளையை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

என் மகளுக்கு தேவையானதை நாங்களும் செய்து வருகிறோம். இந்த ஆண்டு எங்கள் காளை ஜெயிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் யோகதர்ஷினியின் தந்தை.

"ஜல்லிக்கட்டில் ஒன்றிவிட்டேன், இதை விடமுடியாது"

யோகதர்ஷினியும் காளையும்

தொடர்ந்து பேசிய யோகதர்ஷினி, "6ஆம் வகுப்பிலிருந்தே ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையை களமிறக்கி வருகிறேன். அப்போது என் அம்மா காளை அருகே செல்ல மாட்டார், ரொம்பவும் பயப்படுவார்.

நான் முதன் முதலில் ஜல்லிக்கட்டுக்குக் காளை கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்தபோது அம்மா என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் அப்பா என்னை ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்பிக்க மட்டுமே அழைத்துச் செல்வதாக அம்மாவிடம் அனுமதி பெற்று என்னை என்னை ஜல்லிக்கட்டுக்குக் கூட்டிச் சென்றார்," என்றார் அவர்.

 

அதன்பின் அங்கே சென்றதும் தன் அப்பா, அண்ணன் மற்றும் அண்ணனின் நண்பர்கள் சேர்ந்து தன்னை காளை அவிழ்க்க வைத்தனர் என்று கூறும் அவர், அதிலிருந்து ஜல்லிக்கட்டில் காளை அவிழ்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது என்றும் கூறுகிறார். அதையடுத்து பாரப்பட்டி, அவனியாபுரம், அலங்காநல்லூர் என தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்க்க ஆரம்பித்ததாகவும் யோகதர்ஷினி கூறுகிறார்.

மேலும் அவர், "இப்போதும் என் அம்மா என்ன வஞ்சிகிட்டேதான் இருப்பாங்க. ஜல்லிக்கட்டுக்கு காளையை அவிழ்த்தது எல்லாம் போதும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் இப்போது நானே இதை விட நினைத்தாலும், என்னால் விடமுடியாது. அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டில் ரொம்பவும் ஒன்றிவிட்டேன். இனி இதை யாருக்காகவும் விடமாட்டேன்," என்று யோகதர்ஷினி கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cv2nkmllxl8o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சாதி குறுக்கிடுகிறதா? தொடரும் பிரச்னைக்கு என்ன காரணம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் ராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 13 ஜனவரி 2023, 06:45 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜல்லிகட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜல்லிகட்டு

"அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவதில் ஆண்டுதோறும் பிரச்னை எழுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு ஜல்லிக்கட்டை நடத்துவதில் சாதி குறுக்கிடுவது காரணமா?" போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழரின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றக்கூடிய ஒன்று. இன்றைய தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளே பிரதானமானவை. அவற்றில், தை ஒன்றாம் தேதி பொங்கல் தினத்தன்று முதன்முதலாக அரங்கேறும் பெருமைக்குரியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.

பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் அவனியாபுரமும் ஒன்று. பீட்டாவின் குறுக்கீட்டால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படவே, அதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் அஹிம்சை போராட்டம் வாயிலாக ஒன்றுபட்டு குரல் கொடுத்தனர்.

சென்னை மெரினாவில் பல லட்சம் பேர் திரண்ட அமைதிப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் அதிக கவனம் கிடைத்தது. 

 

அதன் பிறகு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. 

ஆனால், "அவனியாபுரத்தில் மட்டும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பிரச்னை எழுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழரின் ஒன்றுபட்ட போராட்டத்தால் உலக அளவில் கவனம் ஈர்த்த ஜல்லிக்கட்டில் சாதியை முன்னிறுத்தி பிரச்னை எற்படுவது கவலை தரத்தக்க ஒன்றாக இருக்கிறது," பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

நோட்டீஸ்

குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளாகவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவது யார் என்ற கேள்வி கடைசி நாள் வரையிலுமே நீடித்து, முடிவில் அரசையே ஏற்று நடத்துமாறு நீதிமன்றம் பணித்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும்கூட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றம் சென்றுள்ளது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு தரப்பும், அவனியாபுரம் கிராம கமிட்டி என்ற பெயரில் மற்றொரு தரப்பும் ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமையைக் கோருகின்றன.

"தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் எல்லாம் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு அமைதியாக நடந்தேற, அவனியாபுரத்தில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் பிரச்னை வர என்ன காரணம்? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை ஏற்படுவது ஏன்?" என்பன போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஜல்லிகட்டு, மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த முனியசாமியிடம் இதுகுறித்துப் பேசியபோது, "பிரச்னை, ஜல்லிக்கட்டில் யார், யார் பங்கேற்பது, யார் காளைகளை அவிழ்ப்பது, சீறி வரும் காளைகளைப் பிடிப்பது யார் என்பதில் அல்ல. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை யார் நடத்துவது என்பதே இன்றைய பிரச்னை," என்றார்.

"அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1980ஆம் ஆண்டு சாதி மோதல் ஏற்பட்டதால் அடுத்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டே நடத்தப்படவில்லை. 1988ஆம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராம், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோரின் முன்முயற்சியால் அனைத்துக் கட்சியினர், அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்கள் இணைந்து அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது," என்கிறார் முனியசாமி.

ஜல்லிகட்டு, மதுரை

"அது முதல் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் சார்பில் கமிட்டி அமைக்கப்படுவது வழக்கம். இந்த கமிட்டி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றியமைக்கப்படும். 1990களில் அந்த கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.கே.கண்ணன், 3 ஆண்டுகளுக்குப் பின்னரும் பதவி விலகாமல் விடாப்பிடியாக அதில் தொடர்ந்தார்," என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.

"பிற்காலத்தில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் தனியாக ஓர் அமைப்பை உருவாக்கி, அதில் தனது குடும்ப உறுப்பினர்களையே பிரதான பொறுப்புகளில் அமர்த்தி, தன் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நடத்துகிறார். அவரது தன்னிச்சையான செயல்பாடுகளால், ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளது" என்று முனியசாமி கூறுகிறார். 

"மாவட்ட நிர்வாகம் நடத்திய சமாதானக் கூட்டங்களில் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் பிடிக்கும் ஏ.கே.கண்ணன், கிராம மக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும், ஜல்லிக்கட்டை நானே நடத்துவேன், இல்லாவிட்டால் நம்மூருக்கு ஜல்லிக்கட்டே வேண்டாம் என்று விடாப்பிடியாகக் கூறிவிட்டார்," என்று முனியசாமி தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, ஓரணியாக நிற்கும் அவனியாபுரம் கிராம மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சியிலும் கண்ணன் ஈடுபடுவதாக அவர் புகார் கூறினார். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பல ஆண்டுகள் தலைமை தாங்கி நடத்தியவரும், தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவருமான ஏ.கே.கண்ணன், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

"அவனியாபுரத்தில் தொன்றுதொட்டு ஜல்லிக்கட்டை நடத்தி வந்தது விவசாயிகள்தான்" என்பது அவரது கூற்று.

ஏ.கே.கண்ணன்
 
படக்குறிப்பு,

ஏ.கே.கண்ணன்

"தென்கால் பாசன விவசாயிகள்தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தொடக்கம் முதல் நடத்தி வந்தனர். ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டிகளை அமைத்ததும் அவர்கள்தான். அந்த அடிப்படையில்தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளேன்," என்றார் அவர். 

"ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா குறுக்கிட்டபோது மத்திய, மாநில அரசுகளை நாடியும், உச்சநீதிமன்றம் வரை சென்றும் போராடியது நாங்கள்தான். தென்கால் பாசன விவசாயிகளின் பணத்தைக் கொண்டுதான் உச்சநீதிமன்றத்தில் வழக்காடப்பட்டது.

பீட்டா குறுக்கீட்டிற்குப் பிறகு எழுந்த புதிய சூழலில், கிராம மக்கள் என்ற பெயரில் பொதுவாக ஜல்லிக்கட்டை நடத்தினால், அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே, தென்கால் பாசன விவசாயிகள் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நலச் சங்கம் என்ற பெயரில் முறைப்படி பதியப்பட்டது" என்று ஏ.கே.கண்ணன் விளக்கம் அளித்தார். 

ஜல்லிகட்டு, மதுரை

"2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு அனைவர் கவனமும் ஜல்லிக்கட்டுப் பக்கம் திரும்பிய பிறகுதான் தற்போதுள்ள பிரச்னை எழுந்தது. வெறும் 4 பேர் மட்டுமே பிரச்னையை கிளப்புகிறார்கள்.

அவர்கள் விவசாயிகள் அல்ல என்பதால்தான் எங்கள் சங்கத்தில் சேர்க்கவில்லை. அதனால், ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. உண்மையில், அவர்களுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

விழாக்கமிட்டி என்று கூறிக் கொள்ளும் அவர்கள் இதுவரை ஒருமுறை கூட ஜல்லிக்கட்டை நடத்தியதே இல்லை. ஆனால், எங்கள் சங்கமோ நான் தலைமையேற்ற பிறகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளது. வெறும் விளம்பரத்திற்காகவும் ஜல்லிக்கட்டை  பணம் சம்பாதிப்பதற்காகவும் மட்டுமே அவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்," என்று கண்ணன் சாடுகிறார். 

ஜல்லிகட்டு, மதுரை

ஆனால், முனியசாமியோ, "எதிர் தரப்பினர் இப்போதே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் கொடுப்பதாக பணம் வசூல் செய்கிறார்கள் என்று வீடியோக்கள் வந்துள்ளன. எதிர்காலத்தில் ஐ.பி.எல். போல் ஜல்லிக்கட்டையும் பணம் சம்பாதிக்கும் விளையாட்டாக மாற்றி விடுவார்கள். ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமையை தனிநபர் சொத்தாக்கி விடுவார்கள்," என்று அச்சம் தெரிவிக்கிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உரிமை கோரும் இரு தரப்புமே, இதில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று விடாப்பிடியாக இருக்கின்றன. இரு தரப்புமே பிடிவாதத்தை தளர்த்த மறுப்பதால், கடந்த 3 ஆண்டுகளைப் போல இம்முறையும் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்தும் நிலை வரக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/cz7y8142110o

  • இணையவன் changed the title to ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) செய்திகள் 2023
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொம்பு வெச்ச சிங்கம்' - யாருக்கும் அடங்காத மதுரை வெள்ளையன் | Jallikattu 2023

 

  • கருத்துக்கள உறவுகள்

சீறிப்பாயும் காளைகள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

KaviJan 15, 2023 08:47AM
Fme3UfIaUAAXY4U.jpg

தமிழகமே எதிர்பார்த்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

வாடிவாசலிலிருந்து முதலில் அவிழ்த்துவிடப்பட்ட மாட்டை அடக்கிய இளைஞருக்கு அமைச்சர் மூர்த்தி ஒரு தங்கக் காசை பரிசாக வழங்கினார்.

அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலையில், மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

800காளைகள், 300 வீரர்கள், இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக முதல்வர் சார்பில் காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு பைக்குகளும் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர சைக்கிள், தங்கக் காசு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

3 பேருக்குக் காயம்

இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காளைகள் அழைத்து வரும் போதே மாடுகள் முட்டி 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோன்று போட்டி நடைபெறும் இடத்தில் 30 மருத்துவர்கள், 54 செவிலியர்கள் அடங்கிய 3 மருத்துவர் குழு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளன.

பாதுகாப்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றுள்ளனர்.

 

https://minnambalam.com/tamil-nadu/avaniyapuram-jallikattu-has-started/

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ........காளைகள் களமிறங்கி விட்டன ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

சுரத்திழந்து கொண்டிருந்த ஒரு பழந்தமிழர் விளையாட்டை, கலாச்சார அடையாளத்தை, மீண்டும் இளையோர் மத்தியில் பிரபலமாக்கிய பீட்டா, மத்திய அரசுக்கு நன்றி கோடி 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

சுரத்திழந்து கொண்டிருந்த ஒரு பழந்தமிழர் விளையாட்டை, கலாச்சார அடையாளத்தை, மீண்டும் இளையோர் மத்தியில் பிரபலமாக்கிய பீட்டா, மத்திய அரசுக்கு நன்றி கோடி 🤣

பீட்டாவும் பிரபல்யமானது   ஜல்லிக்கட்டை வைச்சுத்தானேமே? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கசாப்பு கடைக்கு செல்லவிருந்த கன்றை மீட்டு ஜல்லிக்கட்டு காளையாக மாற்றிய போலீஸ்காரர்

 
Play video, "கசாப்புக்கு கடைக்கு செல்லவிருந்த கன்றை மீட்டு ஜல்லிக்கட்டு காளையாக மாற்றிய போலீஸ்காரர்", கால அளவு 3,03
03:03p0dwcqkp.jpg
காணொளிக் குறிப்பு,

கசாப்பு கடைக்கு செல்லவிருந்த கன்றை மீட்டு ஜல்லிக்கட்டு காளையாக மாற்றிய போலீஸ்காரர்

15 ஜனவரி 2023, 04:46 GMT

மதுரை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த வினோத் 1998ல் இருந்து ஜல்லிக்கட்டில் காளை பிடி வீரராகக் களமிறங்கி வருகிறார். அதுமட்டுமின்றி இவரது குடும்பத்தில் முன்னோர்கள் தொடங்கி பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுக்குக் காளைகளை வளர்க்கின்றனர்.  தமிழ்நாடு காவலராக பணியாற்றி வரும் வினோத் ஜல்லிக்கட்டில் மிகவும் பிரபலமானவர். 

கடந்த ஓராண்டுக்கு முன்பு விருதுநகர் காரியாபட்டி அருகே இறைச்சி கூடத்திற்கு விற்கப்பட்ட கன்றை மீட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தயார் செய்துள்ளார்.  ஒப்பந்ததாரருக்கு ரூ.3000க்கு விற்கப்பட்ட கன்றை ரூ.13 ஆயிரத்திற்கு மீட்டுள்ளார். 

 

அடிமாட்டுக்குச் சென்ற காளையை மீட்ட காவலர் வினோத் முறையாகப் பயிற்சி வழங்கியதைத் தொடர்ந்து, இந்தக் காளை முதன் முறையாக வாடிவாசலில் அடியெடுத்து வைக்கிறது.

ஜல்லிக்கட்டு காளை

https://www.bbc.com/tamil/articles/ce7ze9l31zno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை கீர்த்தனாவின் காளையிடம் திணறிய மாடுபிடி வீரர்கள் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
15 ஜனவரி 2023, 03:02 GMT

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கீர்த்தனாவின் காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சுற்றில் வெற்றி பெற்றது. வாடிவாசலைத் திறந்தவுடன் பாய்ந்து வந்த அவருடைய காளையைப் பிடிக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் திணறிய காட்சியைக் கண்ட கீர்த்தனாவால், மகிழ்ச்சிச் சிரிப்பை மறைக்க முடியவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் அவருடைய மாடுகள் களமிறங்கியுள்ளன.

அவர் பிபிசியிடம் முன்பு பேசியபோது, “ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வந்தபோது, காவல்துறை, ஐடி என்று பல துறைகளில் சாதிக்கிறார்களே, நாம் ஏன் மாடு வளர்க்கக்கூடாது எனத் தோன்றியது.

எனக்குத் தெரிந்த விஷயத்தில் இறங்கி ஏன் சாதிக்கக்கூடாது என்று நினைத்தேன். அப்போது தொடங்கி மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு வளர்த்து வருகிறேன்,” என்று கூறினார்.

 

2022-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிலும் மாடுகளைக் களமிறக்க அவர் தயார்படுத்தினார். இப்போது 2023 ஜல்லிக்கட்டையும் அவருடைய காளை வெற்றியோடு தொடக்கி வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.45 மணிக்குத் தொடங்கியது. 318 மாடுபிடி வீரர்கள், 1004 காளைகள் பங்கேற்புடன் தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் தமிழ்நாடு பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் தொடங்கியது.

தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டின் முதல் நாள் போட்டிகள் அவனியாபுரத்தில் நடக்கின்றன.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர். 45 நிமிடங்களுக்கு ஒரு சுற்று வீதம், இன்று மாலை வரை 8 முதல் 10 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். காலை 7.45 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி 16 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைத்து மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துகிறது.

அவனியாபுரம் ஜல்லுக்கட்டு

போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழுவினருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்குப் பரிசோதனை மற்றும் முதலுதவி அளிக்கக் கால்நடை இயக்குநர் சரவணன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என்று 93 பேர் அடங்கிய 40 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இணையம் மூலம் 9699 காளைகள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 1000 காளைகள் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன. குறிப்பாக போட்டிகளில் நாட்டு இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறப்புப் பரிசாகச் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார் வழங்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்குப் பசுமாடுகள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படுகின்றன. மேலும் பல்வேறு தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரத்தில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து, சுமார் 1,500 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c1rpzpvpndro

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

சுரத்திழந்து கொண்டிருந்த ஒரு பழந்தமிழர் விளையாட்டை, கலாச்சார அடையாளத்தை, மீண்டும் இளையோர் மத்தியில் பிரபலமாக்கிய பீட்டா, மத்திய அரசுக்கு நன்றி கோடி 🤣

இந்த இனங்களை இனப் பெருக்காமல் தடை செய்ய போவதாக கூறினார்களே?

தடை செய்தால் இன்னும் சில காலங்களில் இந்த இனமே இருக்காதே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு: வெற்றியாளர் அறிவிக்கப்படுவது எப்படி? பரிசுகள் என்ன? - சுவாரஸ்ய வரலாறு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 15 ஜனவரி 2023
ஜல்லிக்கட்டு பரிசு வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜல்லிக்கட்டு தமிழரின் வீர விளையாட்டு என்று வர்ணிக்கப்பட்டாலும், அண்மைக் காலமாக அதில் வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் மிகுந்த கவனம் பெறுகின்றன. கார், பைக், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பரிசுகள் வாரி வழங்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு தொடங்கியது முதல் அதில் வழங்கப்படும் பரிசுகள் பரிணாம வளர்ச்சி பெற்றது எப்படி என்ற வரலாறு சுவாரஸ்யமானது. 

 

ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக தொன்று தொட்டு விளையாடப்பட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு விளையாட்டு வழக்கில் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டி, நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் உள்ளிட்ட இடங்களில் அதனை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்துளளன. 

 

சீறி வரும் காளையின் திமிலைப் பற்றிய படி, குறிப்பிட்ட தொலைவை கடப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பதால் இந்த விளையாட்டை ஏறு தழுவல் என்றே பண்டைய தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பல இடங்களில் காளைகளின் கொம்புகளில் 'சல்லிக் காசு' என்னும் அன்றைய நாணயங்களைத் துணியில் வைத்து கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். 

கொம்பில் சல்லிக்காசு வைத்துக் கட்டப்படுவதன் அடிப்படையில் இந்த விளையாட்டு சல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் மருவி ஜல்லிக்கட்டு என்றாகிப் போனதாக தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, காளையின் கொம்பில் சல்லிக்காசுகளை வைத்துக் கட்டும் வழக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சல்லிக்காசுகள் செல்லாதவையாகிப் போனதால், காளைகளை வெல்வோருக்கும், அடங்காத காளைகளுக்கும் வேறு வகை பரிசுகளை வழங்கும் பழக்கம் தொடங்கியது. 

ஜல்லிக்கட்டு பரிசு வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரவாரமான ஜல்லிக்கட்டுக்கு தனது வார்த்தை ஜாலத்தால் மேலும் சுவாரஸ்யம் சேர்க்கும் மைக் சரவணனிடம், ஜல்லிக்கட்டு பரிசு குறித்து கேட்டோம். 

அவர் பதிலளிக்கையில், "40 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி-சட்டை, துண்டு என்கிற அளவிலேயே பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. 1990-களில் டிபன் பாக்ஸ், வீட்டில் அன்றாட பயன்பாட்டிற்கான எவர் சில்வர் பாத்திரங்கள், வெண்கலம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன," என்றார். 

மேலும் அவர், "அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெறும் வீரர்கள் அல்லது காளைகளுக்கு பைக், தங்க நாணயம், மொபைல் போன், பீரோ, கட்டில், மெத்தை, பணம் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டன. இளவட்டக்கல்லை தூக்கினால்தான் திருமணம் என்பதைப் போல, ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவோருக்கு பெண் கொடுக்கும் வழக்கமும் இருந்தது" என்றும் கூறினார். 

ஜல்லிக்கட்டு பரிசு வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2017-ம் ஆண்டில் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு தடைபட, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொதித்தெழுந்தது. இதன் விளைவாக, தமிழ்நாடெங்கும் ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமை மீட்டெடுக்கப்பட்டது. தேச எல்லை கடந்து உலகத்தின் கவனமும் ஜல்லிக்கட்டு மீது விழுந்தது. குறிப்பாக, அலங்காநல்லூரைத் தாண்டி அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளும் உலகின் கவனத்தை ஈர்த்தன.

உலகமே உற்றுநோக்கும் ஒன்றாக மாறிவிட்ட பிறகு இந்திய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஜல்லிக்கட்டுடன் ஏதாவது ஒரு வகையில் தங்களை இணைத்து அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டனர். 2021-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். 

அதே ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணித் தலைவரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு பரிசு வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளில் அந்தந்த பகுதி அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கெடுப்பது எழுதப்படாத விதியாகவே ஆகிப் போனது. 

வெளிநாட்டினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் கவனம் பெற்ற பிறகு ஜல்லிக்கட்டிற்கு ஸ்பான்சர்கள் குவியத் தொடங்கிவிட்டன. இதனால், விலை மதிப்பு மிக்க  பரிசுகளை வழங்குவது சாதாரணமாகி விட்டது. குறிப்பாக, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளில் முதல் பரிசாக கார் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

"ஜல்லிக்கட்டில் இன்று விலை மதிப்பு மிக்க கார்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டாலும், வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பாளர்களின் குறிக்கோள் அதுவல்ல" என்கிறார் ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் மைக் சரவணன். 

"தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் வீரத்தையும்,  தீரத்தையும் களத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே வீரர்களின் குறிக்கோள். காளை வளர்ப்போரைப் பொருத்தவரை தங்களது காளையின் வேகத்தையும், தாங்கள் வளர்த்த, பயிற்சி அளித்த விதத்தையும் உலகறியச் செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.

அவர்களைப் பொருத்தவரை வேட்டியோ அல்லது காரோ எல்லாமே ஒன்றுதான். ஒவ்வோர் ஆண்டும் ஜல்லிக்கட்டில் ஏதாவது ஒரு வகையில் தங்களது பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது," என்று மைக் சரவணன் விவரிக்கிறார். 

ஜல்லிக்கட்டு பரிசு வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அத்துடன், "ஜல்லிக்கட்டு விளையாட்டுதான் இளைஞர்கள் தீயப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் காக்கிறது. காளைகளை அடக்க விரும்பும் வீரர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் அவர்கள் பயிற்சி, சத்தான  சரிவிகித உணவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். அதுபோல், ஜல்லிக்கட்டுதான் நாட்டு மாடுகளை வளர்க்க விவசாயிகளைத் தூண்டுகிறது. வீட்டில் ஒருவராக செல்லப் பிள்ளை போல சகல வசதிகளுடன் ஜல்லிக்கட்டு காளைகளை அவர்கள் வளர்க்கின்றனர்," என்று அவர் கூறுகிறார். 

மைக் சரவணனின் கருத்தையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டு முதல் பரிசை வென்ற மண்ணின் மைந்தன் கார்த்திக்கும் பிரதிபலிக்கிறார்.  24 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழஙகப்பட்டது.

தற்போது, கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு உடற்கல்வியியல் பயிலும் அவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தின் பொருளாதார நிலை கருதி விடுமுறை நாட்களில் கொத்தனார் வேலைக்குச் சென்று வருபவர். 

இத்தகைய குடும்ப பின்னணி கொண்டுள்ள கார்த்திக்கால், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கிடைத்த காரை பெருமை சேர்க்கும் கவுரமிக்க பொருளாக நீண்ட நாள் வைத்திருக்க முடியவில்லை. குடும்பத்தின் கடனை அடைக்க, ஷோரூமில் இருந்து வந்ததுமே அவர் காரை விற்றுவிட்டார். 

ஜல்லிக்கட்டு பரிசு வரலாறு
 
படக்குறிப்பு,

கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் வென்ற கார்த்திக்

இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வழக்கம் போல் உற்சாகமாக கார்த்திக் தயாராகி வருகிறார். கார்த்திக் மட்டுமல்ல, ஜல்லிக்கட்டில் காளைகளை எதிர்கொள்ளும் வீரர்கள் அனைவருமே அதற்காக தவம் போல் தயாராகின்றனர். 

உடலை வலிமையாக்கி, பயிற்சி பெறுவது மட்டும் ஜல்லிக்கட்டு வீரர் தயாராகும் விதமல்ல. ஒரு மாதத்திற்கு முன்பே காப்பு கட்டி விரதமிருந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க வீரர்கள் தயாராகின்றனர். ஏனென்றால், ஜல்லிக்கட்டு என்பது அவர்களுக்கு வெறும் விளையாட்டு அல்ல, மாறாக மண்ணின் வீரத்தை பறைசாற்றும் களம் என்கிறார் மைக் சரவணன். 

ஆகவே, பரிசுகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கிய வீரர் என்ற பெருமையை பெறுவதிலேயே இளைஞர்கள் பெருமிதம் கொள்வதாக மைக் சரவணன் தெரிவித்தார். 

https://www.bbc.com/tamil/articles/cyjyx44m1kyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை அடக்கிய விஜய் “இனி போட்டியிடுவதில்லை" என அறிவிப்பு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நடராஜன் சுந்தர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 15 ஜனவரி 2023
விஜய்
 
படக்குறிப்பு,

விஜய்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றைப் பரிசாக வென்ற விஜய் என்ற மாடுபிடி வீரர், இனி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

 

 

 

அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

11 சுற்றுகளாக...  

காளையை அடக்கும் விஜய்
 
படக்குறிப்பு,

காளையை அடக்கும் விஜய்

இதையடுத்து இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இணையம் மூலம் பதிவு செய்துகொண்டவற்றில் 1004 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி பெற்ற காளைகளில் சில பரிசோதனையில் நிராகரிப்பட்டன.  இது தவிர, மாலை 5 மணிக்கு  போட்டியை முடிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்ததால், இறுதியாக 737 காளைகள் களமிறக்கப்பட்டன. சுற்றுக்கு 25  மாடுபிடி வீரர்கள் வீதம் 11 சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 

முதல் 10 சுற்றுகளில் தலா 3 சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 11வது சுற்றில் கலந்துகொண்டனர்.

மிரட்டிய காளைகளை அடக்கிய வீரர்கள்  

பல காளைகள் வீரர்களுக்குச் சவால் விடுக்கும் வகையில்  களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டிப் பறக்கவிட்டன. அப்படிப்பட்ட காளைகளுக்கு விழாக் குழுவினர் பரிசுகளை வழங்கினர். இதேபோன்று காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகளை வழங்கினர்.

கார் - பைக் பரிசு

இரண்டாவது பரிசு பெற்ற கார்த்திக்
 
படக்குறிப்பு,

இரண்டாவது பரிசு பெற்ற கார்த்திக்

போட்டியில் மொத்தம் 28 காளைகளை அடக்கிய மதுரை ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த  விஜய்க்கு முதல் பரிசாக 7லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது. இரண்டாவதாக 17 காளைகளைப் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாவதாக 13 காளைகளைப் பிடித்த விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்குப் பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளை தேர்வு

முதல் பரிசு பெற்ற காளைக்குப் பரிசு
 
படக்குறிப்பு,

முதல் பரிசு பெற்ற காளைக்குப் பரிசு

போட்டியில் சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காமேஷ் என்பவருக்கு முதல் பரிசாக மோட்டார்  சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்ட மாட்டின் உரிமையாளர் வில்லாபுரம்  ஜி.ஆர்.கார்த்தி என்பவருக்கு வாஷிங்மெஷின் வழங்கப்பட்டது. மூன்றாவது சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மாட்டின் உரிமையாளர் மதுரை அவனியாபுரம் லோடுமேன் முருகனுக்கு பசுமாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியில் மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள்,  சிறுவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 61 பேர் காயமடைந்தனர். இவர்களில் சுமார் 10 பேர்  சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

"இனி விளையாடப் போவதில்லை"

28 காளைகளை அடக்கிய விஜய், பிபிசியிடம் பேசும்போது, “எனது கனவு நிறைவேறிவிட்டதால் இனி எனது தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சியளிக்கப் போகிறேன்,” என்றார்.

மேலும் இது பற்றிப் பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டாம் பரிசாக மோட்டார் சைக்கிள்கள் பரிசாகப் பெற்றேன். இப்போது முதல் இடத்தைப் பிடித்ததில் என் கனவு நிறைவேறிவிட்டது. நான் அடுத்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறங்க போவதில்லை. இதன்பிறகு நான் என் தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சி அளித்து அவர்களை சிறந்த மாடுபிடி வீரர்களாக உருவாக்குவேன்.  

எனது பெற்றோர், உறவினர்கள் அனைவருமே எனக்கு தொடக்கம் முதல் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் எனக்கு அளித்த ஆதரவால் மட்டுமே என்னால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது. நான் தற்போது மின்வாரியத்தில் கேங்மேனாகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு வேலையில் பதவி உயர்வு கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்," என்று  கூறினார் விஜய்.

சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்ட  காளையின் உரிமையாளர் காமேஷின் சகோதரர் ராஜா கூறுகையில், "எங்களது காளை இந்த ஆண்டு முதல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் காளையின் பெயர் வீரன். அது இந்த ஆண்டு சிறந்த காளையாகத் தேர்வாகும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எங்கள் அனைவருக்கும் இது இன்ப அதிர்ச்சி. இதற்கு நாங்கள் கொடுத்த பயிற்சி மட்டுமே காரணம் அல்ல. காளையின் திறமையே முக்கியக் காரணமாக உள்ளது," எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cgl5y3vm9yjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு - 9 மாடுகளை அடக்கிய வீரர் மாடு முட்டியதில் உயிரிழப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை
16 ஜனவரி 2023, 03:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்

பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு 9 மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன், மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இணையம் மூலம் 9699 காளைகள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 1000 காளைகள் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன.

குறிப்பாக போட்டிகளில் நாட்டு இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

இரண்டாவது நாளான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

 

அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றைப் பரிசாக வென்ற விஜய் என்ற மாடுபிடி வீரர், இனி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

காலை 8 மணி முதல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கெடுப்பதற்குச் சுமார் 900 மாடுகள் வந்துள்ளன. அவற்றைப் பிடிப்பதற்கு 335 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். ஒரு சுற்றுக்கு 25 வீரர்களுக்கு அனுமதி. ஒரு சுற்று என்பது 45 நிமிடங்கள்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்ற பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

போட்டி தொடங்கியவுடன் முதலில் வாடிவாசலில் இருந்து பாலமேட்டில் உள்ள கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கக்கூடாது என்பது வழக்கம். போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் கார், பைக், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்படும்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

போட்டியின்போது வெளியே சீறிப்பாயந்த ஒரு காளையை மிகுந்த வீரத்தோடு ஒரு மாடுபிடி வீரர் திமிலைப் பிடித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் துள்ளிக் குதித்து அவரை விலக்கிவிடப் போராடிய காளை, ஒரு சுற்றாகச் சுழன்று அவரைக் கீழே வீசிவிட்டுப் பறந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

மாடு முட்டி உயிரிழப்பு

மாடு முட்டியதில் உயிரிழந்த அரவிந்த்ராஜன்

பட மூலாதாரம்,MADURAI PRO

 
படக்குறிப்பு,

மாடு முட்டியதில் உயிரிழந்த அரவிந்த்ராஜன்

பாலமேடு ஜல்லிக்கட்டில், ஐந்தாம் சுற்றுக்கு பிறகு 18 காளைகளை பிடித்த, மணி என்பவர் முதலிடத்தில் இருந்து வருகிறார். அதற்கு அடுத்த இடங்களில் 15 காளை பிடித்த ராஜாவும், 11 காளைகளை அடக்கிய தமிழரசனும் இருக்கின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு 9 மாடுகளைளைப் பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன், மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அரவிந்த்ராஜன் உயிரிழந்தார். அதேபோல பாலமேட்டில் அதிக காளைகளைப் பிடித்து மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழரசனையும் மாடு முட்டியதில், அவர் காயமடைந்தார். சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையாளர் அரவிந்த், மாடு முட்டியதில் உயிரிழந்தார். இவர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்திருந்த நிலையில், மாடு முட்டி உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழுவினர் 160 பேர் உள்ளனர். மாடுகளுக்கு சிகிச்சையளிக்க 60 கால்நடை மருத்துவக் குழுவினர் உள்ளனர்.

2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cg3qze0pex7o

  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த உதயநிதி

KaviJan 17, 2023 08:40AM
ud.jpg

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 17) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

காளைகளை துன்புறுத்த மாட்டோம் என காளையர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பின், உதயநிதி ஸ்டாலின் ஊர் காளைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பச்சை கொடி காட்டி போட்டியைத் தொடங்கி வைத்ததும் ஊர் மரியாதை காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முதலில் முனியாண்டி கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

தொடர்ந்து காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலையில், சிறப்பாக விளையாடிய தஞ்சையை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி தங்க மோதிரம் அணிவித்தார்.

அதுபோன்று அதிக காளைகளைத் தழுவி முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பைக் பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக் காசு வழங்கப்படவுள்ளது.

மொத்தம் 1000 காளைகள், 300க்கும் மேற்பட்ட காளையர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 2 எஸ்பிக்கள், 8 உதவி எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 60 காவல் ஆய்வாளர்கள் என 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

அதுபோன்று 20 ஆம்புலன்ஸுடன் மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர்.

 

https://minnambalam.com/tamil-nadu/minister-udhayanidhi-stalin-started-by-udhayanidhi-stalin/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - மாட்டின் பேரை கேட்டு அலறிய மாடுபிடி வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
17 ஜனவரி 2023, 03:44 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு நிமிடமாக தனியாக நின்ற காளையின் அருகில் யாரும் செல்ல முடியாத வகையில் அசத்தலான ஆட்டத்தைக் காட்டி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது மதுரையை சேர்ந்த ஒரு காளை.

பயத்தை காட்டிய மாடு

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், மாடு ஒன்று வாடிவாசலில் இருந்து வெளியே வருவதாக அறிவித்த மறுநொடியே களத்தில் இருந்த மாடுபிடி வீரர்கள் அனைவரும் சுற்றியிருந்த மதில் மற்றும் வேலிகள் மீது ஏறி ஒதுங்கினார்கள். மதுரை ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த மாட்டை பிடிக்க ஒருவர் கூட அருகே செல்லவில்லை. வாடிவாசலில் இருந்து மாட்டை அவிழ்த்து விட்ட உடன், அனைவரும் அருகில் இருந்த தடுப்புகளில் ஏறி பாதுகாப்பாக நின்று கொண்டனர். காளையை பிடிப்பவருக்கு வழக்கமாக அறிவிக்கப்படும் பரிசுகளை விட கூடுதல் ரொக்கப் பரிசு அறிவித்த பிறகும், இந்த மாட்டின் அருகில் செல்ல யாரும் முயலவில்லை.

களத்தில் இரண்டு நிமிடத்திற்கும் மேல் தனியாக நின்ற காளையின் அருகில் வீரர்கள் செல்லாத வகையில் அந்த காளை அனைவருக்கும் பயம் காட்டியது. இறுதியில் மாட்டை பிடிக்க யாரும் முயற்சி செய்யாத நிலையில், மாடு வெற்றி பெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முதன்மையானது. ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை, இந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரையை அடுத்த அலங்காநல்லூர் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் பிரபலமான போட்டி. இந்தப் போட்டியைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இருந்து பலர் வருவார்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை விட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகழ் பெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

காளையை வளர்க்கும் ஒவ்வொரு மாட்டின் உரிமையாளருக்கும், தனது மாடு அலங்காநல்லூர் வாடியில் மாட்டை அவிழ்த்து வெற்றி பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதே போல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளைப் பிடித்து வெற்றி பெறும் வீரர் மீதும் அதிக கவனம் கிடைக்கும்.

இந்நிலையில், இன்று தொடங்கிய போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகள் பிடிபடாமல் வெற்றி பெற்றுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பல சிறப்புகளைக் கொண்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7. 30 மணிக்குத் தொடங்கியது. போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி மற்றும் நடிகர் சூரி எனப் பலரும் கூடியுள்ளனர். இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அலங்காநல்லூருக்கு வந்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இன்றைய போட்டியில் கலந்து கொள்ள இந்த ஆண்டு 1200 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காளைகளைப் பிடிக்க 300 வீரர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

4ஆம் சுற்றின் முடிவில், 275 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இதுவரை 13 காளைகளை பிடித்த அபி சித்தர் முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் 9 காளைகளை பிடித்த அஜய்யும், முன்றாவது இடத்தில் 7 காளைகளை பிடித்த கோபாலகிருஷ்ணனும், ரஞ்சித்தும் இருக்கின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இப்போது வரை, 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் 2000 காவலர்கள் வரை ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

வெற்றி பெறும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. 

அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதல் பரிசாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c4n8745jy1vo

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=853715115739563  👈

👆 மாடு பிடி வீரர்களை..  தூக்கி எறியும், வெள்ளியங்குன்ற புதூர் ஆண்டி சாமி கோவில் காளை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர் கண்ணில் குத்திய மாடு, 14 வயது சிறுவன் பலி: ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரணங்கள் தொடர்வது ஏன்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரணங்கள் தொடர்வது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வேடிக்கை பார்க்கச் சென்ற 14 வயது சிறுவன் உட்பட பலர் மரணமடைந்திருப்பது அந்தப் போட்டிகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் ஜனவரி 22ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளைப் பார்க்க பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில், பாலக்கோட்டை சேர்ந்த பூ வியாபாரியின் மகனான கோகுல் என்ற 14 வயது சிறுவனும் அந்தப் போட்டிகளைப் பார்க்கச் சென்றிருந்தான்.

பார்வையாளர்களுக்கான மாடத்திலிருந்து போட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன், ஒரு கட்டத்தில் ஆர்வ மிகுதியால் வாடிவாசலுக்கு அருகில் சென்றான். அப்போது திடீரென ஓடி வந்த காளை ஒன்று வயிற்றில் முட்டியதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தான். கோகுல் மட்டுமல்ல, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உயிர் பலி நடந்துள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி. மலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வடசேரி பள்ளப்பட்டியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் சிவக்குமார் சோர்வடைந்து ஓரமாக உட்கார்ந்திருந்தபோது, ஆவேசமடைந்த காளை ஒன்று அவரைக் கண்ணில் முட்டியது. சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரவிந்த் ராஜ் என்ற வீரரை காளை குத்தி வீசியதில், படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே நாளில் சூரியூர் ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்க்கப் போன ஒருவர் மாடு முட்டி உயிரிழந்தார். பிறகு, சிராவயல் ஜல்லிக்கட்டிலும் ஒருவர் உயிரிழந்தார்.

திருமயம் அருகில் உள்ள ராயவரம் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டைப் பார்க்க வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் மூன்று பேர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கச் சென்றவர்கள். சுமார் 450 பேர் வரை இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளால் காயமடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கம். சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக நடந்த மிகப் பெரிய போராட்டத்தை அடுத்து, மீண்டும் அனுமதிக்கப்பட்டன.

 

இதற்குப் பிறகு, இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஊடகங்களும் அரசு நிர்வாகமும் கொடுக்கும் கவனம் வெகுவாக அதிகரித்தது. தடைக்கு முந்தைய காலகட்டத்தைவிட, இந்தப் போட்டிகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால், அதேநேரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், விதிமுறைகள் போன்றவை கடுமையாகச் சீரமைக்கப்பட்டிருக்கின்றன. வாடிவாசலுக்குள் மாடுகள் வருவதற்கு முன்பாக முழுமையாக கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்படுகின்றன. மாடு பிடிக்கும் வீரர்கள் குடித்திருக்கிறார்களா என்பதும் மாடுகள் துன்புறுத்தப்படாமல் பிடிக்கப்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு

இதற்கு முன்பாக, சாதாரண மண் தரையில் நடந்து வந்த போட்டிகளின்போது கீழே விழுவதால் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது தென்னை நார் விரிக்கப்பட்ட களங்களிலேயே போட்டிகள் நடக்கின்றன. அதேபோல, பார்வையாளர்களுக்கான மாடங்கள் போன்றவையும் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவர்கள் மாடு பிடிக்கும் இடத்திற்குள் வராமல் தடுக்கப்படுகிறார்கள். ஆனால், இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறித்தான் மரணங்களும் காயங்களும் ஏற்படுகின்றன. இம்மாதிரி காயமடைபவர்களும் உயிரிழப்பவர்களும் பெரும்பாலும் எளிய பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பதும் இளைஞர்களாக இருப்பதும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தால், இந்த உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என்கிறார்கள் இந்தப் போட்டி ஏற்பாடுகளோடு தொடர்புடையவர்கள்.

"அலங்காநல்லூரைப் பொறுத்தவரை 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு உயிரிழப்புகளே கிடையாது. காரணம், இங்கே களத்தில் மாடு பிடிப்பவர்களை மட்டும்தான் அனுமதிக்கிறோம். மாடு பிடிக்கும்போது குத்துப்பட்டு காயமடைபவர்கள் உண்டு.

ஆனால், வேடிக்கை பார்க்க வந்து காயமடைவர்கள் மிகக் குறைவு. மாடு வாடிவாசலில் வெளியேறியதில் இருந்து, அந்த மாடு ஓடி முடிந்து மாட்டுக்காரர்கள் பிடிக்கும் வரை கண்காணிக்கிறோம். கலெக்ஷன் பாயிண்ட் எனப்படும் இடத்தில் மாட்டுக்காரர்கள் கண்டிப்பாக மாட்டைப் பிடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அவை ஊருக்குள் ஓடி, போகிறவர்கள், வருகிறவர்களைக் காயப்படுத்தும். அதேபோல, பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி வெளியில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக இரட்டைத் தடுப்பு அமைக்கப்படுகிறது. இதனாலும் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயிரிழப்புகள் பெரிதும் ஏற்படுவது மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளில்தான். அவற்றில் காளைகள் பல இடங்களில் அவழ்க்கப்படுவதால், எதிர்பாராதவிதமாக சிலர் குத்துப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன," என்கிறார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியின் தலைவர் ரகுபதி. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது என்கிறார் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் மாநிலத் தலைவரான முடக்கத்தான் மணி.

"போட்டிகளில் காயமடைந்தவர்களை 600 - 700 மீட்டர் தூக்கிச் சென்றுதான் ஆம்புலன்சில் ஏற்ற வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இதில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய பொன்னான நேரம் வீணாகிறது.

ஜல்லக்கட்டுப் போட்டிகளுக்கென அமைக்கப்படும் விஐபி கேலரிகளுக்கு பின்னால், கார்கள் நிறுத்தப்படுகின்றன. அந்த இடத்திலேயே ஒரு சிறிய மருத்துவமனை அமைப்பை ஏற்படுத்தி, முதலுதவி செய்யலாம். இதன்மூலம் பல உயிர்களைக் காக்கலாம்" என்கிறார் மணி. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் கண்டிப்பாக ஆயுள் காப்பீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் மணி.

"பாலமேட்டில் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய குடும்பத்திற்கு என்ன பதில் சொல்வது. அரசு அளிக்கும் உதவித் தொகை போதாது. ஆகவே ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடும் கட்டாயமாக்கப்பட்டால் நன்றாக இருக்கும்," என்கிறார் மணி.

தமிழ்நாட்டில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பிரபலமான ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன என்றாலும், தை மாத இறுதி வரை பல கிராமங்களில் சிறிய அளவில் போட்டிகள் தொடர்ந்து நடக்கவுள்ளன. இன்னும் பலர் காயமடைவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நிகழக்கூடும். பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்துவதும் விரைவில் மருத்துவ உதவி கிடைக்கச் செய்வதும், போட்டிகளின்போது உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க உதவலாம்.

https://www.bbc.com/tamil/articles/cd1l702kwwqo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.