Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

“கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது” - சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியானது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூட்டமைப்பின் பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்த கூடாது என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமைந்துள்ள புதிய கூட்டணியில் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.samakalam.com/கூட்டமைப்பின்-பெயரை-வேற/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

“கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது” - சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியானது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூட்டமைப்பின் பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய கூட்டணி… “ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு” என்ற
வேறு பெயரைத்தானே பயன் படுத்துகிறார்கள்.
அதுக்கு ஏன்… சுமந்திரனுக்கு, அரிக்குது….? 🤔
தமிழரசு கட்சிக்கு…. இப்பவே, தோல்வி பயம் வந்து… உதறல் எடுக்குதோ… 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கை தமிழரசுக் கட்சி உரிமை கோர முடியாது - சுரேஷ், செல்வம் தெரிவிப்பு

By Vishnu

15 Jan, 2023 | 01:18 PM
image

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி உரிமை கோரமுடியாது என்று சுரேஷ் பிரேச்சந்திரன் மற்றும், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்பினர் பயன்படுத்த முடியாது என்று சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்துவெளியிட்ட சுரேஷ்பிரேமச்சந்திரன், 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்படாத வொன்றாகும். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தி அக்கட்சியின் மத்தியகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக வெளியேறியுள்ள நிலையில் கூட்டமைப்பில் உள்ள ஏனை இரு கட்சிகளும் தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே செயற்படவுள்ளன.

அந்தக் கூட்டமைப்பில் நாம் இணைந்துள்ளோம். ஏனைய இரு தரப்பினரும் இணைந்துள்ளனர். ஆகவே, தமிழரசுக்கட்சிக்கு கூட்டமைப்பை உரிமைகோரும் உரித்துக் கிடையாது என்றார். 

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை தமிழரசுக்கட்சியோ அல்லது, அதிலிருக்கும் ஏனைய தரப்புக்களான ரெலோ,புளொட்டோ பயன்படுத்துவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதனிடத்தில் வினவியபோது, “இறுதியாக சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு இணக்கப்பாட்டை எட்டமுடியும்”என்று கேள்வி எழுப்பினார். 

 

https://www.virakesari.lk/article/145833

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, கிருபன் said:

“இறுதியாக சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு இணக்கப்பாட்டை எட்டமுடியும்”என்று கேள்வி எழுப்பினார். 

ஆபிரஹாம்  சுமந்திரன்…. மீண்டும் மீண்டும், பொய்த் தகவல்களை… பொறுப்பற்ற  விதத்தில்,
பத்திரிகைகளில் வெளியிடுவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. 
 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம்  சுமந்திரன்…. மீண்டும் மீண்டும், பொய்த் தகவல்களை… பொறுப்பற்ற  விதத்தில்,
பத்திரிகைகளில் வெளியிடுவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. 
 

 சிங்களத்துக்கு வாழ்க்கைப்பட்டு முந்தநாள் வந்ததுக்கு இந்த தினாவெட்டு 😬

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம்  சுமந்திரன்…. மீண்டும் மீண்டும், பொய்த் தகவல்களை… பொறுப்பற்ற  விதத்தில்,
பத்திரிகைகளில் வெளியிடுவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. 
 

திண்ணையில மிளாசி எரிவது காணாது என்று இங்கேயும் கொழுத்திப்போடுங்கோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம்  சுமந்திரன்…. மீண்டும் மீண்டும், பொய்த் தகவல்களை… பொறுப்பற்ற  விதத்தில்,
பத்திரிகைகளில் வெளியிடுவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. 
 

அவர் வேண்டுமென்றா வெளியிடுகிறார்? இரத்தத்தில் ஊறியது அதை மாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாருங்கள் அடிபடுவதை   இப்படியான நிலை தீர்வு பெற்றுக்கொள்வதில் இருந்ததில்லை     இந்தமுறை.  தமிழ் மக்கள் நல்ல ஒரு பாடம் படிப்பார்கள். தமிழ் கட்சிகள் மேலும் பல துண்டுகளாக  உடைய.....அல்லது பிரிய. வேண்டும்...தமிழ் மக்கள் யாருக்கு வாக்கு போடவேண்டும். என்பதை ஆவது கற்றுக் கொள்ளட்டும்   😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, கிருபன் said:

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை தமிழரசுக்கட்சியோ அல்லது, அதிலிருக்கும் ஏனைய தரப்புக்களான ரெலோ,புளொட்டோ பயன்படுத்துவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பில்

இதென்னடா அனிஞாயமாய் கிடக்கு! அவர்களை பிரித்து விட்டவர்கள், தங்களுக்குக்கென  கட்சி பெயர் இருக்கு, அவர்களும் இணைந்தபடியாலே கூட்டமைப்பு என்கிற பெயர் உருவானது, அவர்களை பிரித்து விட்டு பிறகு பெயரை பாவிக்கக்கூடாது என்று உத்தரவு போட இவருக்கு என்ன உரிமையிருக்கு? அதைவிட சம்பந்தனின்ர அறிக்கை, அவர்கள் தேர்தலில் போட்டியே இடக்கூடாது மக்களை பிரிக்கின்ற வேலை என்கிறார். இப்போ இவர்களின் உள்நோக்கம் அப்பட்டமாய் தெரிகிறது. தங்கள் கட்சிதான் மக்களின் ஏகோபித்த கட்சியாம். இந்தக்கட்சிமேல் மக்கள் எவ்வளவு கோபத்திலிருக்கிறார்கள் என்பதை வெகு விரைவில் காணத்தான் போகிறார்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.