Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஷ்ரப் படானா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 15 ஜனவரி 2023, 11:20 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,ALAMY

எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோர் இந்தியாவின் தெற்கு கரையில் இருந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் திரும்பி விடுவோம் என்று தங்கள் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துவிட்டு சென்றனர். 

ஆனால், வாரக் கணக்கில் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று, சுமார் மூன்று வாரங்களுக்கு நெடுந்தொலைவு கப்பலில் பயணம் செய்த 15 மீனவர்கள் குழுவில் இவர்கள் இருவரும் இருந்தனர். 

பொதுவாக மீனவர்கள் கடலில் நாள் கணக்கில் செலவிடுவார்கள் என்பதால் தொடக்கத்தில் இருவரின் குடும்பத்தினரும் பதற்றம் அடையாமல்தான் இருந்தனர். 

ஆனால்,  கிறிஸ்துமஸ் பண்டிகையே வந்து சென்றும் அவர்கள் திரும்பாதது குடும்பத்தினரை பயம்கொள்ள செய்தது. 2017ஆம் ஆண்டில் கோரத் தாண்டவம் ஆடி மீனவர்கள் இறப்புக்கு காரணமான ஒக்கி புயலின் நினைவுகள் அவர்களின் மனதில் வந்து சென்றன. 

அதேபோன்ற நிலை எதாவது எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்குமோ என்று அவர்களின் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், இருவரும் ஜனவரி 2ஆம் தேதி வீடு திரும்பினர்.

அவர்கள் சென்ற படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் யாருமற்ற  தீவில் அவர்கள் ஒதுங்கினர். பல நாட்களை அவர்கள் அங்கு செலவிட்ட நிலையில், இறுதியாக அவ்வழியாக சென்ற பிரிட்டிஷ் கப்பல் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.

எப்போது மீட்கப்படுவோம் என்பது குறித்து எவ்வித நம்பிக்கையும் இல்லாத நிலையில்,  இளநீர் போல, தீவில் கிடைத்தவற்றை வைத்து உயிர் பிழைத்து இருந்துள்ளார்கள் அந்த மீனவர்கள்.

தமிழ்நாட்டின் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக அவர்கள் க்ரிஷா மோல் என்ற படகில் கடலுக்கு சென்றுள்ளனர்.  ஆனால், 7வது நாளில் அவர்கள் படகின் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால் படகு  கடலுக்குள் நெடுந்தொலைவு செல்லத் தொடங்கியது. இலங்கை படகு ஒன்று வரும்வரை 5 நாட்களுக்கு இந்த நிலை தொடர்ந்தது. 

  “அந்த படகில் இருந்த குழுவினர், நீரின் ஆழம் 8 அடியாக இருக்கும் பகுதிக்கு  எங்களின் படகை இழுத்தனர். நாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நினைத்து அங்கு நங்கூரத்தை பாய்ச்சினோம்  ” என்று பிபிசியிடம் கூறுகிறார் நெமஸ்.

தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,VIVEK R NAIR

படக்குறிப்பு,

அகஸ்டின் நெமஸ்

இலங்கை படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கிடையாது என்பதால், அப்பகுதி வழியாக செல்லும் இந்திய மீனவப் படகுகளிடம் உதவிக் கோர வயர்லெஸ் செய்தி அனுப்புமாறு இருவருக்கும் அவர்கள் அறிவுறுத்தினர்.

மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு படகு இவர்களுக்கு பதிலளித்தது. 

எனினும், எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோரின் படகுகளை கரைக்கு இழுத்து செல்லும் அளவுக்கு அந்த படகின் எஞ்சின் திறன் வாய்ந்ததாக இல்லை. அந்தக் குழுவில் இருந்த க்ரிஷா மோல் படகின் உரிமையாளர், படகின் கியர்பாக்ஸை எடுத்துக்கொண்டு அதை சரிசெய்வதற்காக இந்தியப் படகுடன் புறப்பட்டார். மீனவர்கள் தங்கள் படகை உறுதியாகப் பிணைத்து,  அது அலைபாய்வதை தடுக்கும் வகையில், குழுவினர் தங்கள் நங்கூரத்தை விட்டுச் சென்றனர்.

ஆனால், டிசம்பர் 19ஆம் தேதி ஏற்பட்ட திடீர் காற்றினால் நங்கூரம் ஒன்றின் கயிறு அறுந்தது.  மூன்று நாட்கள் கழித்து 2வது நங்கூரத்தின் கயிறும் அறுந்தது. இதனால், படகு மீண்டும் கடலில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. 

 “கடலின் நடுவில் நம்மால் கடவுளை பிரார்த்திக்க மட்டுமே முடியும். அது எங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்றும் கூறும் நெமஸ் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் குறித்து நினைத்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார். 

படகில் இருந்த திசை காட்டும் கருவியை அவர்கள் பார்த்தனர். 

 “29 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ஒரு தீவு இருப்பதை ஜிபிஎஸ் எங்களுக்கு காட்டியது,” என்று டேவிஸ் கூறினார். பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலில் உள்ள சாலமோன் தீவுகளில் அது அமைந்துள்ளது. 

தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,VIVEK R NAIR

படக்குறிப்பு,

எடிசன் டேவிஸ்

இதனிடையே தங்கள் படகுடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய மரப் படகில் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு 9 மீனவர்கள் தீவை நோக்கி சென்றதாக டேவிஸ் தெரிவித்தார்.   

மீதி 5 பேர் தாய்ப் படகிலேயே காத்திருந்தனர்.

9 பேரை ஏற்றிச் சென்ற சிறிய படகு, தீவை அடைந்த பிறகு அவர்களில் இரண்டு பேர் அந்த சிறிய படகை எடுத்துக்கொண்டு தாய்ப் படகில் காத்திருந்த 5 பேரை மீட்பதற்காக திரும்பிச் சென்றனர்.

ஆனால், அதற்குள் தாய்ப் படகு மேலும் விலகி எங்கோ சென்றுவிட்டது.

“ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகுதான் நாங்கள் படகை கண்டுபிடித்தோம்” என்று டேவிஸ் குறிப்பிட்டார். 

பிறகு அதில் இருந்த ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு தீவுக்குச் செல்ல அவர்களுக்கு 5 மணி நேரம் பிடித்தது.

ஒரு வழியாக அவர்கள் 14 பேரும் தீவை அடைந்தனர். இப்போது அவர்கள் முன்பு புதிய சவால் இருந்தது. இருக்கும் குறைந்த அளவிலான பொருட்களை வைத்து அந்தத் தீவில் எப்படி வாழ்வது என்பதுதான் அது.

10 நாட்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. குடிக்க தண்ணீர் கிடையாது. 

எனவே, இயற்கையின் உதவியை அவர்கள் நாடினர். சமைப்பதற்கு கடல் நீரை பயன்படுத்தினர். தாகமெடுத்தால் தென்னை மரங்களில் இருந்த இளநீரை பருகினர். மழை பெய்யும்போது, பிளாஸ்டிக் கவரை தரையில் விரித்து மழை நீரை அதில் சேமித்து பின்னர் கேன்களில் அடைத்து குடிக்க பயன்படுத்தினர். 

“சாவை நேருக்கு நேர் சந்திப்பது போல் நான் உணர்ந்தேன். நாங்கள் சரியாக தூங்கவில்லை.  மிகவும் சிக்கனமாகவே சமைத்து உண்டோம் ” என்று நெமஸ் கூறினார். 

எங்களிடம் இருந்த பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துபோகலாம் என்று நாங்கள் பயந்தோம். நாங்கள் எங்கு இருக்கிறோம் , இன்னும் எத்தனை நாட்கள் அங்கு சிக்கி இருக்க போகிறோம் என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. 

தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,AFP

ஐந்து நாட்கள் கழித்து, டிசம்பர் 27ஆம் தேதி, அவர்கள் சிக்கியிருந்த தீவில் இருந்து சிறிது தொலைவில் பிரிட்டிஷ் கப்பல் செல்வதை அவர்கள் பார்த்துள்ளனர். பரவசமடைந்த  மீனவர்கள், சிவப்பு துணி ஒன்றை மரத்தின் கிளையில் கட்டி தொங்கவிட்டு உதவி கோரியுள்ளனர். 

“கப்பலில் இருந்த குழுவினரின் கவனத்தை ஈர்க்க எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயன்றோம். 2 மணி நேரம் கழித்து தண்ணீர் மற்றும் கூடை நிறைய பழங்களுடன் 4 பேர் எங்களை அணுகினர். நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று அவர்கள் கேட்டனர்,” என்று டேவிஸ் தெரிவித்தார். பின்னர், சிறிய படகில் மீனவர்களை அவர்கள் கப்பலுக்கு அழைத்து சென்றனர். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு கப்பலில் அவர்கள் குளித்தனர். அவர்களின் உடல்நலத்தை பரிசோதித்த குழுவினர் அவர்களுக்கு பழங்கள், ஆடைகள் போன்றவற்றை வழங்கினர். 

ஜனவரி 2ம் தேதி,  விழிஞ்சம் துறைமுகத்தில் வைத்து மீனவர்களை அந்த குழுவினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் அடையாளங்களை சரிபார்ப்பது மற்றும் இன்ன பிற நடைமுறைகள் முடிய ஒரு நாள் ஆனது. அதன் பின்னர், குடும்பத்தினருடன் அவர்கள் சேர்ந்தனர். 

“நான் வீடு திரும்பியபோது, என் குழந்தைகள்  என்னை கட்டிப்பிடித்து என்ன நடந்தது” என்று கேட்டார்கள் 

“அவர்களிடன் கூற என்னிடம் விசித்திர கதையே இருந்தது. எத்தனை முறை திரும்ப திரும்ப சொன்னேன் என்று தெரியவில்லை. அந்த தொலைதூர தீவில் நாங்கள் சிக்கித் தவித்தபோது, நாங்கள் வீடு திரும்புவோம் என்று யாரும் நினைக்கவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார். ”

இந்த அனுபவம் தன்னை உலுக்கியதாக கூறும் நெமஸ் இனி குறைந்த தூரத்தில் உள்ள பகுதிகளிலேயே மீன் பிடிக்கப்போவதாக தெரிவித்தார். 

“இதுதான் என் வேலை, இதுதான் என் விதி” என்றும் அவர் கூறினார். 

https://www.bbc.com/tamil/articles/c1ew0gd59jeo

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் வாசித்த ரோபின்சன் குருசோ கதை, பின்னர் வெளிவந்த காஸ்ட்எவே திரைப்படம் போல நிஜ கதை.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2023 at 06:00, goshan_che said:

சிறு வயதில் வாசித்த ரோபின்சன் குருசோ கதை, பின்னர் வெளிவந்த காஸ்ட்எவே திரைப்படம் போல நிஜ கதை.

நம்ம ஊர் டீம் ஒன்று லண்டனுக்கு சொந்தமான தீவில் இருந்து போன வருடம் இறுதியில் ஊருக்கு வந்தது அவர்கள் வெளிநாட்டுக்கென படகு ஏறியவர்கள் மீதமானவர்கள் அந்த தீவிலே இருப்பதாகவும் அது ஒரு ஆர்மி பேஸ் எனவும் சொன்னார்கள் 

தங்குமிடம் சாப்பாடு மட்டுமே கொடுத்தார்களாம் மருத்துவ வசதி குறைவு எனவும் விரும்பியவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி விடுகிறோம் என சொல்ல இவர்கள் வந்து விட்டார்கள் ஒரு தொகை பணத்தை பெற்று .

ஆனால் போனவர்களுக்கு அந்த தீவின் பெயர் இதுவரை சரியாக தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்ய வந்த பெண்மணி யாழ்பாணத்தை சேர்ந்தவராம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மாறன் போல யாராவது ஒரு இயக்குனர் இதை படமாக எடுத்தால்.. இதே வெள்ளைக்காரன் கையில் இப்படி ஒரு கதை கிடைத்தால் வேறு லெவலில் இருக்கும் படம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

Guadeloupe அல்லது Réunion என்று நினைக்கிறேன்

இவை பிரெஞ்சு காலணித்துவ நாடுகள். 

இங்கிருந்து தான் விருப்பங்களின் அடிப்படையில் திருப்பி அனுப்புவார்கள்

நீங்கள் எந்த நாட்டில் தஞ்சம் புகுந்தாலும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் 

ஐ.நா விதிகளை ஏற்ற நாடுகள் என்ற வரிசையில் 

அந்த தீவின் பெயர் டியகோ கார்சியா…

பிரிட்டன் வைத்திருந்து பின்னர் அமெரிக்காவுக்கு பேஸ் அமைக்க வாடகைக்கு கொடுத்திருக்கு.

இங்கே இருந்த மக்களை வேரறுத்து சீசெல்ஸ், மாலதீவு என அனுப்பினார்கள். வழக்கு அண்மையில்தான் முடிந்தது.

சொந்த நிலம் மீளும் அம்மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.

https://ta.m.wikipedia.org/wiki/தியேகோ_கார்சியா

28 minutes ago, விசுகு said:

Guadeloupe அல்லது Réunion என்று நினைக்கிறேன்

இவை பிரெஞ்சு காலணித்துவ நாடுகள். 

இங்கிருந்து தான் விருப்பங்களின் அடிப்படையில் திருப்பி அனுப்புவார்கள்

நீங்கள் எந்த நாட்டில் தஞ்சம் புகுந்தாலும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் 

ஐ.நா விதிகளை ஏற்ற நாடுகள் என்ற வரிசையில் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெற்றி மாறன் போல யாராவது ஒரு இயக்குனர் இதை படமாக எடுத்தால்.. இதே வெள்ளைக்காரன் கையில் இப்படி ஒரு கதை கிடைத்தால் வேறு லெவலில் இருக்கும் படம்..

அப்படியான படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்  சில படங்கள் பார்த்தேன் ( ஆங்கில) பெயர்கள் நியாபகம் இல்லை

7 hours ago, விசுகு said:

Guadeloupe அல்லது Réunion என்று நினைக்கிறேன்

இவை பிரெஞ்சு காலணித்துவ நாடுகள். 

இங்கிருந்து தான் விருப்பங்களின் அடிப்படையில் திருப்பி அனுப்புவார்கள்

நீங்கள் எந்த நாட்டில் தஞ்சம் புகுந்தாலும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் 

ஐ.நா விதிகளை ஏற்ற நாடுகள் என்ற வரிசையில் 

ம் ஆனால் அவர்களோ அங்கு வரவேண்டாம் எனவும் வேற நாடுகளுக்கு செல்ல சகல உதவிகளையும் செய்து த்ருகிறோம்  எனகூறி படகை ஆறு மணி நேரம் காக்க வைத்துள்ளார்கள் ஆனால் இவர்களோ இனிமேலும் கடலில் பயணம் செய்ய முடியாது உணவும் தீர்ந்து விட்டது என பெண்கள் அழுக  உள்ளே எடுத்தார்கள் என சொன்னார்கள்   

7 hours ago, goshan_che said:

அந்த தீவின் பெயர் டியகோ கார்சியா…

பிரிட்டன் வைத்திருந்து பின்னர் அமெரிக்காவுக்கு பேஸ் அமைக்க வாடகைக்கு கொடுத்திருக்கு.

இங்கே இருந்த மக்களை வேரறுத்து சீசெல்ஸ், மாலதீவு என அனுப்பினார்கள். வழக்கு அண்மையில்தான் முடிந்தது.

சொந்த நிலம் மீளும் அம்மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.

இதே போலதான் எதோ பெயர் சொன்னார்கள் பல நநூறு ஈழத்தவர்கள் அதாவது 2 வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் கூட அந்த தீவில் இருப்பதாகவும் சொன்னார்கள் அவர்களை மீள எடுக்க மாட்டார்களா அம்மக்களின் நிலை  வெளித்தொடர்பு முற்றிலும் இல்லாததாக சொன்னார்களே அது எப்படி ? இவர்கள் ஊர் வந்த போதே தெரியும் அவர்கள் ஏதோ ஓர் இடத்தில் இருந்திருக்கிறார்கள் என 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியான படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்  சில படங்கள் பார்த்தேன் ( ஆங்கில) பெயர்கள் நியாபகம் இல்லை

ம் ஆனால் அவர்களோ அங்கு வரவேண்டாம் எனவும் வேற நாடுகளுக்கு செல்ல சகல உதவிகளையும் செய்து த்ருகிறோம்  எனகூறி படகை ஆறு மணி நேரம் காக்க வைத்துள்ளார்கள் ஆனால் இவர்களோ இனிமேலும் கடலில் பயணம் செய்ய முடியாது உணவும் தீர்ந்து விட்டது என பெண்கள் அழுக  உள்ளே எடுத்தார்கள் என சொன்னார்கள்   

இதே போலதான் எதோ பெயர் சொன்னார்கள் பல நநூறு ஈழத்தவர்கள் அதாவது 2 வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் கூட அந்த தீவில் இருப்பதாகவும் சொன்னார்கள் அவர்களை மீள எடுக்க மாட்டார்களா அம்மக்களின் நிலை  வெளித்தொடர்பு முற்றிலும் இல்லாததாக சொன்னார்களே அது எப்படி ? இவர்கள் ஊர் வந்த போதே தெரியும் அவர்கள் ஏதோ ஓர் இடத்தில் இருந்திருக்கிறார்கள் என 

விபரம் தெரியவில்லை. ஆனால் சிலரை மருத்துவ சிகிச்சைக்காக உகண்டா அனுப்பியதாக செய்தி வந்தது. பிரித்தானிய உரிமை என்றாலும் ஆளுகை அமெரிக்காவினது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.