Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, இணையவன் said:

ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை இது பகிடியா ? நீங்களும் ரஸ்ய ஆதாரவாளர்களும் எழுதிய கருத்துகள் அப்படியே யாழில் உள்ளன.

ரஷ்யா இடத்தில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருந்தால் இன்று உக்ரேன் சுடுகாடாகியிருக்கும். உக்ரேன் அழிவுகளை பார்க்கும் போது மனித அழிவுகள் மிகமிக குறைவு.  உக்ரேன் யுத்தத்தில்  மனித அழிவுகளை பற்றி மேற்குலக ஊடகங்களே பெரிதாக பேசவில்லை.

புட்டினின் நோக்கமும் பொது மக்களை அழிப்பதல்ல....

5 hours ago, இணையவன் said:

இதற்கு 3 அப்பாவிகள விருப்பு வாக்கு வேறு போட்டுள்ளனர் 🙂

நான் அங்கே மூன்று விடயங்களை எழுதியுள்ளேன். எதற்கு விருப்பு போட்டார்கள் என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

  • Replies 55
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை  ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை 

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம் அல்லது

போரை  முடிவுக்கு  கொண்டு  வரும் பாதை இது  தான்  என்று புரியவே  இல்லையண்ணா

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால்  எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Sasi_varnam said:

இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால்  எப்படி?

புட்டினை எனக்கு தனிப்பட பிடிக்கும் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍
ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர்  முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

இதையே திருப்பி போட்டால்....???

நமது  அத்தனை கொள்கைகளும் தியாகங்களும் வரலாறும்  கேலியாகிவிடும் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

ரஷ்யாவின் தாக்குதலில் மக்கள் இறப்புக் குறைய பிரதான காரணம் உக்ரைனிய மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளேயொழிய புட்டினின் தூய இதயமல்ல!😂 எச்சரிக்கை சைரன், நிலக்கீழ் ரயில் நிலையங்களை (இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் செய்தது போல) பதுங்குமிடங்களாக மாற்றியிருப்பது போன்ற நடவடிக்கைகள்   தான் இழப்புக் குறையப் பிரதான காரணம்.

பிரான்ஸ் ஹிற்லரிடம் சரணடந்ததால் விளைந்த நன்மைகளை எங்காவது வரலாற்று நூலில் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பிரான்ஸ் சரணடையாமல் போராடியிருந்தால் ஹிற்லரை மஜினோ கோட்டுக்கு (Maginot line) அப்பால் நகராமல் முடக்கியிருக்கலாம் என்பது தான் உண்மை. அப்படி முடக்கியிருந்தால், பிரிட்டனும், பிரான்சும் சேர்ந்தே அமெரிக்காவின் துணையின்றி நாசி ஜேர்மனிக்குப் பாடம் படிப்பித்திருக்கலாம்.

அந்தப் பாடம் கிடைக்காமல் தான் ஹிற்லர் பிரிட்டனைப் பிடிக்க முனைந்து, அமெரிக்காவும் தலையிட வேண்டி வந்தது. சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் மட்டும் ஹிற்லருக்குப் பணியாமல் போராடியிருக்கா விட்டால் இன்றைய உலகம் தலை கீழாக இருந்திருக்கும். நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை [ புரின், ரஷ்யா ]ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை [உக்ரேன்]

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம்

எவ்வளவு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் அய்யா 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

ரஷ்ய புரின் உக்ரைன் முழுவதும் மக்களின் குடியிருப்பு பகுதிகள், உள்கட்டமைப்புகள், குழந்தைகள் விளையாட்டு மைதானம் என்று குறிவைத்து தாங்கி போர் குற்றம் செய்கிறார் என்பது உலகறிந்தது. ரஷ்யா ஆக்கிரமிக்க வரும்போது உக்ரைன் கைகட்டி கொண்டு இருக்க வேண்டும் என்று  ஈழத்து புதின் விசுவாசிகள் விரும்புவது அவர்கள் பிரார்த்தனை முழுவதுமே உக்ரைன் ஆக்கிரமிக்கபட்டு அகன்ற  ரஷ்யா உருவாக வேண்டும் என்று இருப்பதால்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Sasi_varnam said:

புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍
ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர்  முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏

வியாபார மேற்குலகு  உலகில் செய்யாத அத்துமீறல்களையா ரஷ்யா செய்து விட்டது?
அண்மைக்கால அரபு வசந்தத்தில்  மக்கள் சிதறி ஓடி அலைந்து திரிந்த போது உங்கள் பொன்னான மனிதாபிமானம் எங்கே போனது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

இதையே திருப்பி போட்டால்....???

நமது  அத்தனை கொள்கைகளும் தியாகங்களும் வரலாறும்  கேலியாகிவிடும் அண்ணா

விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும்.

மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல.

குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இறந்த உடல்களை காட்டாமல்   புதைகுழிகளை காட்டுவதும் ஒரு சிறப்பு யுக்திதான்.

3 hours ago, Justin said:

பிரான்ஸ் ஹிற்லரிடம் சரணடந்ததால் விளைந்த நன்மைகளை எங்காவது வரலாற்று நூலில் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஒம்.....அரசியல் பாடத்தில் உண்டு.

3 hours ago, Justin said:

அந்தப் பாடம் கிடைக்காமல் தான் ஹிற்லர் பிரிட்டனைப் பிடிக்க முனைந்து, அமெரிக்காவும் தலையிட வேண்டி வந்தது. சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் மட்டும் ஹிற்லருக்குப் பணியாமல் போராடியிருக்கா விட்டால் இன்றைய உலகம் தலை கீழாக இருந்திருக்கும். நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

இது ஒவ்வாத கருத்து இருந்தாலும் பரவாயில்லை.:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இறந்த உடல்களை காட்டாமல்   புதைகுழிகளை காட்டுவதும் ஒரு சிறப்பு யுக்திதான்.

ஒம்.....அரசியல் பாடத்தில் உண்டு.
 
உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

இது ஒவ்வாத கருத்து இருந்தாலும் பரவாயில்லை.:beaming_face_with_smiling_eyes:

மொட்டையாக ஓமெண்டு விடாமல் சொல்லுங்கோவன் அந்த நன்மைகளை? இது ஜேர்மனியின் அரசியல் பாடமா அல்லது சிறிலங்காவா?😂

உலகம் முழுக்க "தூய ஆரியர்" ஆட்சியில் இருந்திருந்தால் நிறைய விடயங்கள் இருந்திருக்காது தான்! அவற்றுள் சில - பிறவுண் தோல் மனிதர்கள், யூதர்கள், உடல் ரீதியான குறைபாடுடையோர், கம்யூனிஸ்டுகள் (பழைய ரஷ்யா போச்சே சார்😎!), வேலைக்குப் போகும் குடும்பப் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இடைப்பாலினர், ..

👆மேலே இருக்கும் சில குழுவினர் மீதான உங்கள் "காண்டு" தான் உங்களை நாசி மற்றும் புட்டின் ஆதரவாளராக மாற்றுகிறதென நினைக்கிறேன் - சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியாளர் சே குவேரா சொன்ன‌து தான் இந்த‌ நூற்றாண்டில் நினைவில் வ‌ந்து போகுது ]

நான் இதை முதலில் படித்த போது யாழ்களத்து கோஷான் சே  என்று நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புரட்சியாளர் சே குவேரா சொன்ன‌து தான் இந்த‌ நூற்றாண்டில் நினைவில் வ‌ந்து போகுது ]

நான் இதை முதலில் படித்த போது யாழ்களத்து கோஷான் சே  என்று நினைத்துவிட்டேன்.

🤣

அவர் புரட்டு-வாளர் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அவர் புரட்டு-வாளர் 🤣

நன்றி.
ஓம்  கேள்விபட்டிருக்கிறேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

சில நேரம் யோசிக்க ஹிட்லர் வெண்டிருக்கலாம் எண்டும் தோணுது 🤣.

———

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

ஜெர்மனிக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதாக சொல்லி கொள்ளும் நீங்கள், நவீன ஜேர்மனியின் அடித்தளத்தையே அசைக்க வல்ல இந்த கொடிய விசத்தை எப்படி போற்றி எழுதுகிறீகள்.

அப்புறம் ஹிட்லர் ஒண்டும் மகான் அல்ல. அவர் கட்டு கோப்புடன் ஒன்றும் ஆட்சி செய்யவுமில்லை. குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம் முதல் பலது அங்கேயும் நடந்தது.

ஹிட்லரின் ஆட்சியும் ஊழல் மலிந்தே இருந்தது.

1 hour ago, குமாரசாமி said:

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும்.

மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல.

குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.

மிகவும் தவறான புரிதல் அண்ணா

இங்கே உங்கள் தம்பிகள் எல்லோரது பணிவான வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

என்னை வேறு குழுவில் நீங்கள் போட்டாலும் உங்கள் தம்பிகளுடன் உங்கள் தம்பியாகத்தான் நிற்கிறேன் நிற்பேன் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

———

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

ட்ரம்ப் விடயத்தில் ஒன்று சொல்வார்கள்: "இதோ ட்ரம்ப் அரசியல் நாகரீகத்தின் அடிமட்டத்தைத் தொட்டு விட்டார் என்று எல்லோரும் நினைக்கும் போது, அவர் இன்னொரு காரியம் செய்து, அந்த அடியும் புட்டுக் கொண்டு இன்னொரு அடிமட்டத்திற்கு இறங்கி விடுவார். இப்படி புதிய அடிமட்ட நிலைகள் உருவாகிக் கொண்டே இருக்கும்!"😂

அதே போன்ற நிலை தான் புலத் தமிழர்களுள் ஒரு பிரிவினரது கருத்துகளில் வெளிப்படும். இந்த உக்ரைன் -ரஷ்ய பிரச்சினை பற்றிய உரையாடல்களில், சில புலத் தமிழர்கள் "he ain't so bad" என்ற வரையறைக்குள் ஹிற்லரையும் கொண்டு வந்து விட்டார்கள். இதை யாழில் மட்டுமன்றி யாழிணையத்திற்கு வெளியேயும் காண்கிறேன்.

இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன். காலங்காலமாக யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை!

இப்படிப் பட்ட ஒரு மனநிலை மாற்றத்தால் பிலிப்பைன்ஸ் அடைந்த பலனை கடந்த ஆண்டுத் தேர்தலில் உலகம் கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன்.

உண்மை.

நீண்டகாலமாக மேற்குலகநாடுகளின் வசதிவாய்புக்களை அனுபவித்தபடி

4 hours ago, Justin said:

யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, goshan_che said:

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

ஜெர்மனிக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதாக சொல்லி கொள்ளும் நீங்கள், நவீன ஜேர்மனியின் அடித்தளத்தையே அசைக்க வல்ல இந்த கொடிய விசத்தை எப்படி போற்றி எழுதுகிறீகள்.

அப்புறம் ஹிட்லர் ஒண்டும் மகான் அல்ல. அவர் கட்டு கோப்புடன் ஒன்றும் ஆட்சி செய்யவுமில்லை. குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம் முதல் பலது அங்கேயும் நடந்தது.

ஹிட்லரின் ஆட்சியும் ஊழல் மலிந்தே இருந்தது.

அரசியல் மீம்ஸ் Images ஆதித்யா முருகேசன் - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

பெரிய பிரித்தானியா ஆசிய ஆபிரிக்க  நாடுகளில் செய்யாத கொடுமைகளையா  ஹிட்லர் செய்தார்?

ஹிட்லர் யூதர்களில் கை வைக்கா விட்டிருந்தால்......??????

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அரசியல் மீம்ஸ் Images ஆதித்யா முருகேசன் - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

பெரிய பிரித்தானியா ஆசிய ஆபிரிக்க  நாடுகளில் செய்யாத கொடுமைகளையா  ஹிட்லர் செய்தார்?

ஹிட்லர் யூதர்களில் கை வைக்கா விட்டிருந்தால்......??????

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

என்ன அண்ணை இது சிங்களவன் செய்தது தப்பு எண்டால் - பர்மாகாரன் செய்யாததையா சிங்களவன் செய்தான் எண்ட மாரி போகுது கதை🤣.

யூத எதிர்ப்பு இல்லாவிட்டால் ஹிட்லரும் இல்லை, நாசிசமும் இல்லை. அடிப்படையே ஜேர்மனியை, உலகை ஆரிய தூய இனத்தின் பிடியில் கொண்டு வருவதுதான். அதில் யூதர் மட்டும் அல்ல, நாம் உட்பட பலர் அடக்கம்.

ஆனால் யூத படுகொலை மட்டும் அல்ல, ஹிட்லர் ஒன்றும் பொற்கால ஆட்சியை ஜேர்மனியிலோ, வெளியிலோ வழங்கவில்லை. 

மிக மோசமான வகுப்புவாத ஏற்ற தாழ்வு, ஊழல், பாலியல் லஞ்சம், குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம், அதிகார துஸ்பிரயோகம், கொள்ளை எல்லாம் மலிந்து கிடந்த ஒரு நரனின் ஆட்சிதான் ஹிட்லர் ஆட்சியும்.

பிகு

நான் கேட்டது அதை அல்ல, ஹொலோகாஸ்டை மறுப்பதை, நாஜிகள் பற்றி நல்லவர், வல்லவர் என பொய் பிரச்சாரம் செய்வதை இன்றைய ஜேர்மன் சட்டங்கள் தடுக்கிறன. 

ஒரு ஜேர்மன் குடியாக நீங்கள் இப்படி எழுதுவது ஜேர்மனிக்கு செய்யும் தேசதுரோகம் இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விசுகு said:

மிகவும் தவறான புரிதல் அண்ணா

இங்கே உங்கள் தம்பிகள் எல்லோரது பணிவான வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

என்னை வேறு குழுவில் நீங்கள் போட்டாலும் உங்கள் தம்பிகளுடன் உங்கள் தம்பியாகத்தான் நிற்கிறேன் நிற்பேன் 

விசுகர்! புலம்பெயர் மக்கள் மேலைத்தேய அரசியல் நடவடிக்கைகளில் எப்படியான கருத்துக்களை / மனோநிலையை கொண்டிருக்க வேண்டும்  என கருதுகின்றீர்கள்? இதனால் ஈழதேசம் அடையும் நன்மைகள் எவை? உங்களின் பதிலை மட்டும் எதிர்பார்க்கின்றேன்.

எமது ஐயாம் புள்ளைகளின் கருத்துக்கள் தேவையில்லை..:rolling_on_the_floor_laughing:

Coming Walking GIF - Coming Walking Sexy - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எமது ஐயாம் புள்ளைகளின் கருத்துக்கள் தேவையில்லை..:rolling_on_the_floor_laughing:

நேரடியாக  பெயர்களை குறித்து சொல்லி விட்டால், விலகி நடக்க வசதியாய் இருக்கும்🙏🏾

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

நேரடியாக  பெயர்களை குறித்து சொல்லி விட்டால், விலகி நடக்க வசதியாய் இருக்கும்🙏🏾

முதலில் காரணகர்த்தா விசுகர் பதில் சொல்லட்டும். :cool:
அதுக்கு பிறகு ஐயம்புள்ளையளை நானே வெத்திலை வைச்சு கூப்புடுவன். :beaming_face_with_smiling_eyes:

50 minutes ago, goshan_che said:

யூத எதிர்ப்பு இல்லாவிட்டால் ஹிட்லரும் இல்லை, நாசிசமும் இல்லை. அடிப்படையே ஜேர்மனியை, உலகை ஆரிய தூய இனத்தின் பிடியில் கொண்டு வருவதுதான். அதில் யூதர் மட்டும் அல்ல, நாம் உட்பட பலர் அடக்கம்.

இதே யூத இனம் இன்று பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள்? செய்வதெல்லாம் சரியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.