Jump to content

உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இது  தெரியாமலா உலக அரசியலிலும் ஈழத்து அரசியலிலும் இங்கே கருத்து எழுதுகின்றீர்கள்?!?!?!?!?!?

“சேம்.. சேம் பப்பி சேம்”   :bl:

ஆனைக்கும்… அடி சறுக்கும். 😂 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இது  தெரியாமலா உலக அரசியலிலும் ஈழத்து அரசியலிலும் இங்கே கருத்து எழுதுகின்றீர்கள்?!?!?!?!?!?

“சேம்.. சேம் பப்பி சேம்”   :bl:

ஓம்…தவறுதான்…மன்னிச்சு கொள்ளுங்கோ.

அடுத்த முறை கருத்து எழுத முன் யார் யாரை கட்டியுள்ளார்கள், யார் யாரை வைத்துள்ளார்கள் போன்ற முக்கிய தரவுகளை அறிந்து எழுத முயல்கிறேன்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஓம்…தவறுதான்…மன்னிச்சு கொள்ளுங்கோ.

அடுத்த முறை கருத்து எழுத முன் யார் யாரை கட்டியுள்ளார்கள், யார் யாரை வைத்துள்ளார்கள் போன்ற முக்கிய தரவுகளை அறிந்து எழுத முயல்கிறேன்🤣.

ஆமாம், தற்போது அதுதான் முக்கியம். ஆழம் அறியாமல் காலை விட்டிட்டு பிறகு காலை இழக்கவேண்டியும் வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஓம்…தவறுதான்…மன்னிச்சு கொள்ளுங்கோ.

அடுத்த முறை கருத்து எழுத முன் யார் யாரை கட்டியுள்ளார்கள், யார் யாரை வைத்துள்ளார்கள் போன்ற முக்கிய தரவுகளை அறிந்து எழுத முயல்கிறேன்🤣.

நான் கலியாணங்களை குறிப்பிடவில்லை. ஈழத்து அரசியலில் முக்கியமாக பேசப்பட்ட விடயம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அடுத்த முறை கருத்து எழுத முன் யார் யாரை கட்டியுள்ளார்கள், யார் யாரை வைத்துள்ளார்கள் போன்ற முக்கிய தரவுகளை அறிந்து எழுத முயல்கிறேன்🤣.

எனக்கும் இலங்கையில் யார் யாருக்கு மகன் எங்கே திருமணம் செய்தார்கள் ஒன்றுமே தெரியாது. ஆனால் இலங்கையில் வாக்களிப்பவர்களுக்கு கூட இது தேவையில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நம்ம தலைவர்கள், அரசியலில் மக்களுக்காக பேசப்படும் அளவில் எதுவும் செய்வதில்லை, அவர்கள் பிடிக்கும் குடுமிச் சண்டைகளையும், தெருக்கூத்துகளையுந்தான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 minutes ago, satan said:

ஆமாம், தற்போது அதுதான் முக்கியம். ஆழம் அறியாமல் காலை விட்டிட்டு பிறகு காலை இழக்கவேண்டியும் வரலாம். 

அதுதான் விசயகாரிடம் கேட்டேன்

26 minutes ago, குமாரசாமி said:

நான் கலியாணங்களை குறிப்பிடவில்லை. ஈழத்து அரசியலில் முக்கியமாக பேசப்பட்ட விடயம்.:cool:

அப்படியா? தெரியும்தானே எனக்கு ஈழ அரசியல் பற்றி அதிகம் தெரியாது.

சும்மா எங்கயும் வாசிச்சதை வச்சு நேரத்து ஒரு உருட்டை உருட்டி விடுவன்.

உலக அரசியல் கூட அப்படித்தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் மக்கள் அரசியல் குடும்பங்களின் பின்னணி வாழ்கை நிலவரம் தெரியாமல் கட்சியின் பெயரை மட்டும் வைத்து வாக்களித்ததின் விளைவுகளால் தான் நாடு சொல்லணா துயரங்களை அனுபவிக்கின்றது. கட்சியின் பெயரை வைத்து வாக்குகள் சேகரித்து கொழும்பு சென்றபின் தங்கள் வாழ்க்கையை மட்டும் கணக்கிட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் மாட மாளிகையுடன் வாழும் அரசியல்வாதிகளின் நிலைமை தெரியாமல் யாழ்களத்தில் கருத்தாளர் எனும் பெயரில் கருத்தெழுதுபவர்களை என்னவென்பது? :frowning_face:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

🤣 ஈழத்தமிழர் 77 க்கு பின் கட்சியையும் பார்க்கவில்லை, தலைவர்களின் நதி மூலம், ரிசி மூலமும் பார்க்கவில்லை.

அவர்கள் எப்போதும் தமிழ் தேசிய கொள்கையை, தமது அபிலாசைகளை யார் வென்றெடுப்பார் என நினைத்தார்களோ அவர்களையே தெரிந்தார்கள்.

அதனால்தான் உதய சூரியனை ஒரு காலத்தில் கொண்டாடிய போதும், அதை ஆனந்தசங்கரி தலைமையில் முன் கொணர்ந்த போது - அவமானகரமான தோல்வியை கொடுத்தார்கள்.

இதே காரணத்தால்தான் 1988 தேர்தலில் ஒரு நாள் அவகாசத்தில் புலிகள் ஆதரிக்க சொல்லிவிட்டார்கள் என்ற செய்தி அறிந்து, அதுவரை அறியப்படாத அரசியல்கட்சியாக இருந்த ஈரோசை பெரு வெற்றி பெற வைத்தார்கள்.

சும்மா, குதர்கம் பேச வேண்டும் என்பதற்காக ஈழ தமிழ் மக்களின் 75 வருட கால கொள்கை பற்றான அரசியலை, கேவலமாக எழுதுவோரை என்னவென்பது.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சும்மா, குதர்கம் பேச வேண்டும் என்பதற்காக ஈழ தமிழ் மக்களின் 75 வருட கால கொள்கை பற்றான அரசியலை, கேவலமாக எழுதுவோரை என்னவென்பது.

உங்கள் போன்றோர் சிங்கள இனவாதத்திற்கு இன்னும்  நூறுவருட அவகாசம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உங்கள் போன்றோர் சிங்கள இனவாதத்திற்கு இன்னும்  நூறுவருட அவகாசம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

நான் எங்கே சிங்களத்துக்கு அவகாசம் கொடுத்தேன்?

நீங்கள் 80 களில் ஆரம்பத்தில் நாட்டை விட்டு விலகியவர்.  ஈழதமிழர் கட்சி பார்த்து வாக்கு போட்டார்கள் என சுலபமாக ஒரு அபாண்டத்தை ஒட்டு மொத்த மக்கள் மீதும் தூக்கி போட்டீர்கள்.

துப்பாக்கிகள் பாத்திருக்க, சாகும் தறுவாயில் கதிரையோடு தூக்கி வந்து, போகும் வழியில் நாம் வெல்லாவிட்டால் நாளை ஊருக்குள் வருவோம் என மிரட்டிய பின்னும்,

ஒவ்வொரு தேர்தலிலும் கொள்கை அடிப்படையில், உயிரை பணயம் வைத்து என் மக்கள் வாக்கு போட்டதை நேரில் பார்த்தவன் நான். 

தேர்தலை கூட கொள்கை அடிப்படையில் 1931 இல் இருந்தே புறக்கணித்தவர்களும் கூட.

உங்களின் இந்த அபாண்டத்தை கேள்வி கேட்டு, கூட்டணி, ஈரோஸ் என இரு உதாரணங்களையும் காட்டி - நீங்கள் சொன்னது தவறு என நான் கூறினேன்.

இதில் எங்கே வருகிறது சிங்களவருக்கு அவகாசம் கொடுப்பது? அதுவும் நான்?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

🤣 ஈழத்தமிழர் 77 க்கு பின் கட்சியையும் பார்க்கவில்லை, தலைவர்களின் நதி மூலம், ரிசி மூலமும் பார்க்கவில்லை.

அவர்கள் எப்போதும் தமிழ் தேசிய கொள்கையை, தமது அபிலாசைகளை யார் வென்றெடுப்பார் என நினைத்தார்களோ அவர்களையே தெரிந்தார்கள்.

இதன் அர்த்தம் என்ன?

அந்த அரசியல்வாதிகளில் குடும்பங்கள் எப்படி வாழ்கின்றார்கள் என தெரியாமல் தமிழரசு தமிழர் கூட்டணி என்ற காரணத்திற்காக அவர்களுக்கு வாக்களித்து அவர்களின் வாழ்க்கை டரத்தை உயர்த்தியதுதான் தமிழ்வாக்காளர்க்கு கிடைத்த பாக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இல்லை. தமிழரசு, கூட்டணி என்ன சொன்னது, என்ன செய்கிறது என்பதை பார்த்தே வாக்களிதார்கள்.

தலைவர்களின் மகன் யாரை கலியாணம் முடித்தார் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. 

ஏன்?

யார் யாரை முடித்தாலும், மாவை, ரவிராஜ் எல்லாருமே வெல்வது கொள்கையை ஏந்தி செல்வதால் அல்லது செல்வதாக சொல்வதால்.

மாவையின் மகன் - தலைவரின் மகளை திருமணம் செய்திருந்தாலும் (பேச்சுக்கு சொல்கிறேன்) - போய் தமிழ் தேசிய எதிர் முகாமில் சேர்ந்தால் அவருக்கு தமிழ் தேசிய வாக்காளர் போடமாட்டாகள்.

ஆகவே மக்கள் கொள்கை ஒன்றுக்காக மட்டுமே வாக்களித்தனர். ஒரு 10% க்கும் குறைவானோரே சலுகைக்காக வாக்களித்தனர்.

 அண்மைய தேர்தலில் இந்த சதவீதம் குறைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 ஒரு நேர்மையில்லாமல் எப்படியெல்லாம் உங்களால் எழுத முடிகின்றது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 ஒரு நேர்மையில்லாமல் எப்படியெல்லாம் உங்களால் எழுத முடிகின்றது? 

இதில் என்ன நேர்மை குறைபாட்டை கண்டீர்கள்?

சொல்லபோனால் தர்க்கத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக - தமிழ் நாட்டு வாக்காளர் போல எம்மக்களும் கட்சிக்கு போடுகிறார்கள் என அபாண்டம் கூறிய உங்கள் கருத்துதான் நேர்மைக்கேடானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதில் என்ன நேர்மை குறைபாட்டை கண்டீர்கள்?

குடும்ப வரலாறு தெரியாமல் மக்கள் வாக்களிப்பதை..... அதனால்தான் நாடு இப்படி இருக்கின்றது என சொல்ல வருகின்றேன். தமிழ் எனும் சொல்லை வைத்து பாமர மக்களை ஏமாற்றுகின்றார்கள் என......

Quote

இதில் என்ன நேர்மை குறைபாட்டை கண்டீர்கள்?

இஞ்சை என்ன நக்கீரன் விளையாட்டே நடக்குது? :hehehe:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

குடும்ப வரலாறு தெரியாமல் மக்கள் வாக்களிப்பதை..... அதனால்தான் நாடு இப்படி இருக்கின்றது என சொல்ல வருகின்றேன். தமிழ் எனும் சொல்லை வைத்து பாமர மக்களை ஏமாற்றுகின்றார்கள் என......

நிச்சயமாக இல்லை.

எமது மக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை.

தமிழ் மட்டும் அல்ல, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என பெயர் தாங்கி வந்தவர்களை கூட கடந்த தேர்தல் வரைக்கும் தோற்கடித்தவர்கள் எம் மக்கள். கல்வியறிவு குறைவாக உள்ள தொகுதிகளில் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை.

எமது மக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை.

தமிழ் மட்டும் அல்ல, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என பெயர் தாங்கி வந்தவர்களை கூட கடந்த தேர்தல் வரைக்கும் தோற்கடித்தவர்கள் எம் மக்கள். கல்வியறிவு குறைவாக உள்ள தொகுதிகளில் கூட.

முகரையள் மாற இருக்கு விளையாட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அண்ணா உண்மையான போராளி அவர் குடும்ப வரலாறை எம் மக்கள் கருதவில்லை.

பாலா அண்ணை உண்மையான போராளி அவர் குடும்ப வரலாறை எம் மக்கள் கருதவில்லை.

நானும் அந்த கூட்டத்தில் ஒருவந்தான்.

சீவி வந்த போது, குடும்பவரலாறை விட்டு விட்டு கொள்கை, செயலை மட்டும் பாருங்கள் என எழுதினேன்.

நீங்கள் உட்பட பலர் அவரை சிங்கள சம்பந்தி என வசை பாடினீர்கள். பின்னர் அவரின் ஆதரவாளராயும் ஆகினீர்கள் 🤣.

மக்களும் என்னை போலவே குடும்ப வரலாறை புறம்தள்ளி அவரை தேர்ந்தார்கள்.

77-23 இதுதான் எம்மக்களின் அணுகுமுறை.

1 minute ago, குமாரசாமி said:

முகரையள் மாற இருக்கு விளையாட்டு

காலத்தை கணிக்கும் இயந்திரம் என்னிடம் இல்லை.

ஆனால் 77-23 எம்மக்கள் கட்சி பார்த்தோ, முக வசீகரம் பார்த்தோ வேறு எதை பார்த்தோ வாக்கு போடவில்லை என்பதை நான் ஆதாரபூர்வமாக நிறுவுவேன்.

இப்போ, சமயம், சாதி, வர்க்கம், பிரதேசம் என எம்மக்கள் மீது பழைய கறையானகள் புற்றெடுப்பதை காணும் போது, இனி காலங்கள் முன்பை போல் கொள்கை பிடிப்பான அரசியலுக்கான காலமாக இராது என்பதை நானும் ஊகிக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழரசு, கூட்டணி என்ன சொன்னது, என்ன செய்கிறது என்பதை பார்த்தே வாக்களிதார்கள்.

என்னது ...... கூட்டணி, தமிழரசு செய்கிறது என்பதை பாத்தா? அப்படி என்னத்தை பாத்தார்கள்? வெறும் பெயரையும், உணர்ச்சியையும் வைத்து அரசியல் செய்கிறது. இல்லையென்றால் எழுபத்தொன்பது வருடங்களாக தீர்வேதுமில்லாமல் தீய்ந்துபோய்க்கிடக்குது. சும்மா பகிடி விடாதீங்கோ!  அவர்கள் சொன்னதை செய்திருந்தால் எப்படி பெரும்பான்மை கட்சியின் பிரதிநிதிகள் நுழைந்தார்கள்? வென்றார்கள்? மக்கள் இவர்களை நம்பி இனி பயனில்லையென அபிவிருத்தியென விரிக்கும் வலைக்கு பின்னால் இழுபடுகிறார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

மக்கள் எதை எதிர்பார்த்து வாக்கு போட்டார்கள் என்பது வேறு சாத்ஸ். அதை இந்த கட்சிகள் நிறைவேற்றவில்லை என்பது வேறு.

77-87 கூட்டணிக்கு வாக்கு போட்டார்கள். 77 இல் மக்கள் இவர்கள் சொன்னதை செய்வார்கள் என பூராணமாக நம்பினார்கள் (சொல்வதை பார்த்து வாக்கு போடல்). 

83 இல் ஜப்பான் ஜீப் ஓடியது, 87 இல் அமிர்தலிங்கம் இறப்பர் செல் அடித்ததோடு அந்த நம்பிக்கை முற்றாக போய்விட புறம் தள்ளினார்கள் (செயலை பார்த்து வாக்கு போடுவது).

இதேதான் த.தே.கூ/ தமிழரசுக்கு இப்போ நடக்கிறது.

மக்கள் இன்று வரைக்கும் இருக்கும் அமைபுக்களில் தமிழ் தேசிய கொள்கையை ஒப்பீட்டளவில் முன் எடுத்து செல்ல கூடியோர் யார் என பார்த்தே அவர்களை தெரிகிறார்கள்.

அதனால்தான் கூட்டமைப்பை நம்பாதவகள் கஜேஸ், விக்கி என தாவினார்கள்:

ஆனால் தெரியப்படும் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், தம் சுயலாப அரசியலை செய்கிறார்கள்.

அவர்களுக்கு மாற்றீடாக வருவோரும் தமக்குள் ஈகோ சண்டை பிடிக்கும், சுயநலமிகளாகவே உளர்.

வெறுத்து போன மக்கள் ஒரு தொகுதியினர் சிங்கள கட்சிகளுக்கு போடுகிறார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@satan@குமாரசாமி இப்போ நீங்கள் இலங்கையில் இருந்தால் யாருக்கு வாக்கு போடுவீர்கள்?

உள்ளதில் ஓரளவு தமிழ் தேசிய கொள்கைகை முன் எடுப்போர் என நீங்கள் நினைக்கும், கஜேஸ், விக்கி அல்லது dTNA? 

சரிதானே? மக்களின் நிலையும் இப்படித்தான்.

தமிழ் தேசியத்தை சுமக்க ஒரு குதிரையும் இல்லை என்ற போது, அதை கழுதைகளை வைத்தாவது சுமக்ககலாமா என பார்கிறார்கள்.

தொடர்ந்து தமிழரசுக்கு போடுவோர் கூட ஏனைய கழுதைகளை விட அந்த கழுதைகள் பராவாயில்லை என நினைத்தே போடுவார்கள்.

நாளைக்கே ஒரு குதிரை வருமாயின் எல்லா கழுதைகளையும் துரத்திவிட்டு குதிரைக்கு போடுவார்கள்.

ஆனால் நோக்கு ஒன்றுதான் தமிழ் தேசியம் என்ற பொதியை சுமத்தல். குதிரை, கழுதைகளின் பெயர், நிறம், யாரோடு சினை பிடித்ததன என்பதெல்லாம் கருது பொருட்கள் அல்ல.

இதுவரை இதுதான் எம் மக்களின் அரசியல் போக்கு. இனி மாறலாம்.

திரைபடம், சாதி, சமயம் என பலதில் இந்தியாவை கொப்பி அடிக்கும் மக்கள் - இனி அரசியலிலும் அதே பாணியை எடுக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம், தமிழரசு இந்த பெயர்களை இழக்கவோ அல்லது யாருக்கும் விட்டுகொடுக்கவோ விரும்பாமல் அதை வைத்து மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்கிறார்கள். அதனாற்தான் சுமந்திரன் விக்கினேஸ்வரனுக்கு சவால் விட்டார். "முடிந்தால் த. தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும்" என்றார். நின்றார் வென்றார். தற்போது கூட பங்காளிக்கட்சிகளை விரட்டிவிட்டு போட்ட தடை த.தே. கூட்டமைப்பின் தேர்தல் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பதே. அதாவது தேசியப்பெயர், சின்னம் எல்லாம் தாங்கள் பாவித்து மக்களை முட்டாளாக்கி அதன்மூலம் வெற்றி பெற்று அதை இல்லாமல் அழித்து பேரினவாத கட்சியின் பிரதிநிதிகளை களமிறக்கி இறுதியில் பேரினவாதத்தின் கையில் ஒப்படைப்பது. தமிழரசுக்கட்சி இளைஞரை உசுப்பேத்தி அழித்து முடிந்தது, இருப்பவர்களையும் அடிமைகளாக விற்று விட்டு, அவர்கள் சிங்கள இனத்தோடு கலந்து அவர்களோடு வாழ்வது எமது அதிஷ்டம் என்று அறிக்கை விட்டு தப்பிவிடுவார்கள். இழப்பு, அடிமை வாழ்வு எல்லாம் இந்த போக்கத்ததுகளை நம்பியவர்களுக்கே.

கொஞ்சம் பொறுங்கள் மக்களின் தீர்ப்பு கிடைக்கும்வரை! ஆனால் சுமந்திரன் போடுற ஆட்டதைப்பாத்தால் போன முறை தேர்தலில் நடந்த குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கு. இப்பிடியொரு இளிச்சவாயன் சிங்களத்துக்கு கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஓம் சுமந்திரன் இப்படித்தான் நினைக்கிறார். மக்கள் த தே கூ / தமிழரசு பாதாகையில் எந்த தும்புதடி நின்றாலும் போடுவார்கள் என.

ஆனால் மக்கள் அப்படி அல்ல. இதுக்கு சிறந்த உதாரணம் நீங்கள் சொன்னபடி விக்கியரின் வெற்றி. 

1 hour ago, satan said:

கொஞ்சம் பொறுங்கள் மக்களின் தீர்ப்பு கிடைக்கும்வரை! ஆனால் சுமந்திரன் போடுற ஆட்டதைப்பாத்தால் போன முறை தேர்தலில் நடந்த குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கு. இப்பிடியொரு இளிச்சவாயன் சிங்களத்துக்கு கிடைக்குமா?

பார்ப்போம். இந்த முறை முடிவுகள் பலருக்கு துன்ப அதிர்ச்சியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப்போட்ட மக்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் பார்க்கவேண்டியும் வரலாம். எல்லாவறையும் மக்கள் தலையிலேயே கட்டி தப்பி விடுவது அரசியல் வியாதிகளின் பழக்கம். கெஞ்சி கூத்தாடி, லஞ்சம் கொடுத்து வெற்றி பெறுவது, பிறகு தாங்கள் அடிக்கிற  கூத்துகளுக்கு மக்கள் தான் எங்களை தெரிந்தார்கள், ஆணை தந்தார்கள் என்று குற்றம் சுமத்துவது. 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.