Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

By VISHNU

02 FEB, 2023 | 04:53 PM
image

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை (02) யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு:

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினராகிய நாம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து சிறிலங்காவின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்கு முறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் எமது மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையின் இன்றைய பொருளாதாரப் பின்னணியில் எழுந்துள்ள சூழலில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டிய அவசியத்தாலும், கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலும் வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணியொன்றைத் திட்டமிட்டு ஊடகத்தினரை கடந்த ஜனவரி 26ஆம் திகதி சந்தித்திருந்தோம்.

பின்னர் எமது கரிநாள் பிரகடனம் மற்றும் பேரணிக்கான நிலைப்பாடுகளை எமது மக்களுடன் கலந்துரையாடும் நோக்குடன் கடந்த ஒரு வார காலமாக வடக்கு கிழக்கெங்கும் மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் மற்றும் மாணவர்களுடனும் பல சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தோம்.

அனைத்து தரப்பினரும் மாணவர்களாகிய நாம் முன்னெடுத்துள்ள நிலைப்பாடுகளையும், செயற்பாடுகளையும் மிகவும் வரவேற்றதோடு, முழு ஒத்துழைப்பை நல்குவதாகவும் கூறி நின்றனர். அத்தோடு பேரணி தமிழர் தேசத்தின் அடிப்படைகளை முன்னிறுத்தி நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நின்றனர்.

இது மட்டுமல்லாது, இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் நிலைமைகளில் மாணவர்களே தீர்க்கமாக விடுதலை போராட்டத்தினை கையிலெடுத்து முன்செல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இக்கருத்துக்கள் யாவும் எம்மையும், நாம் முன்னெடுக்கும் எழுச்சிப் பேரணியையும் வலுப்படுத்துவதாகவே நாம் காண்கிறோம்.

அந்த வகையில், தமிழ் மக்கள் மிகப் பேரெழுச்சியுடன் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த தேசியம் என்பவற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இப் பேரணியை மேலும் வலுப்படுத்த வடக்கு கிழக்குத் தழுவிய எமது வர்த்தக சமூகத்தினரையும், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற் சங்கங்களையும் பெப்ரவரி 4 கரிநாள் அன்று தொழில் புறக்கணிப்பையும், முழுமையான கடையடைப்பையும் மேற்கொண்டு ஹர்த்தாலை முழுமையாக அனுஸ்டித்து சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதை சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும் உரிமையுடன் கேட்டு நிற்கின்றோம். 

அத்துடன் இத்தினத்தில் உங்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள், தொழில் இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு காலாகாலமாக நாம் சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர் தேசமாக முன்னெடுக்கும் போராடத்தில் இணைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்படும் இப் பேரணியானது பெப்ரவரி 4ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி நாச்சிமார் கோவிலடியூடாக பிரதான தபால் அலுவலகம், தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக் கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும். செம்மணியிலிருந்து வாகனங்களில் பயணிக்கும் பேரணியானது நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து முதலாம் நாளின் இறுதி நிகழ்வை இரணைமடுவில் நிறைவு செய்து கொள்ளும்.

இரண்டாம் நாள் பேரணி பெப்ரவரி 5ஆம் நாள் காலை 9மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்துக் கொண்டு காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி புறப்படும். செல்லும் வழியில் புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை வந்தடையும், அங்கிருந்து முள்ளிவாய்க்கால் சென்று உறுதியெடுத்துக் கொண்டு முல்லைத்தீவைச் சென்றடையும்.

ஊடறுத்துச் செல்லும் அனைத்து ஊர்களிலும் அணிதிரளும் மக்களுடன் எழுச்சியாய் முன்னேறி முல்லைத்தீவை சென்றடையும் பேரணி இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வை முல்லைத்தீவில் நிறைவு செய்யும்.

மூன்றாம் நாள் பெப்ரவரி 6ஆம் திகதி காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடியூடாக திருகோணமலையை மதியம் 1.30 மணியளவில் வந்தடையும் பேரணி திருகோணமலையின் எழுச்சி நிகழ்வுகளில் இணைந்த கொள்ளும். பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் வெருகலில் மூன்றாம் நாள் நிகழ்வினை நிறைவு செய்யும்.

நான்காம் நாள் பெப்ரவரி 7ஆம் திகதி காலை 10 மணிக்கு பேரணி வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டுநகரை வந்தடையும் அதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சசியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொது கூட்டத்துடன் பேரெழுச்சியாக நிறைவு பெறும்.

இப்பேரணிகளில் மாணவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலை அலையாக இணைத்து தமிழ் தேசத்தின் நிலைப்பாட்டினை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/147289

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

எழுபதுகளின் ஆரம்பத்தில் கறுப்புகொடி கட்டியவர்களைத் தான் பொலிஸ் முதலில் தூக்கத் தொடங்கியது.

அந்தநேரம் நானும் அகப்பட்டிருப்பேன்.ஏதோ கண்காணாத இடத்தில் மச்சம் இருந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அட அந்தாள் தங்கத் தாம்பாளத்திலை வைத்து ...தீர்வைக் கொண்டுவருகுது ...இவங்கள் என்னெண்டால் ..அபசகுனமாய் கறுப்புக்கொடியோட வெளிக்கிடுறாங்கள்... சம் சும் புது பட்டுவேட்டி சால்வையும்வாங்கி ரெடியாயிட்டாங்கள்...ஆசுப்பத்திரியிலை துண்டும் வெட்டியாச்சாம்...😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தில் முடங்கியது யாழ்

By DIGITAL DESK 5

04 FEB, 2023 | 10:24 AM
image

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

IMG-20230204-WA0038.jpg

யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

IMG-20230204-WA0032.jpg

மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.

இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.

IMG-20230204-WA0034.jpg

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.

IMG-20230204-WA0046.jpg

IMG-20230204-WA0048.jpg

IMG-20230204-WA0053.jpg

IMG-20230204-WA0054.jpg

IMG-20230204-WA0056.jpg

IMG-20230204-WA0057.jpg

IMG-20230204-WA0058.jpg

IMG-20230204-WA0059.jpg

IMG-20230204-WA0025.jpg

IMG-20230204-WA0060.jpg

IMG-20230204-WA0027.jpg

IMG-20230204-WA0026.jpg

IMG-20230204-WA0028.jpg

IMG-20230204-WA0030.jpg

https://www.virakesari.lk/article/147400

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் ஹர்த்தாலுக்குள் சாதாரண சிங்கள மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கி இருக்கலாம். ஏனெனில்.. பெரும்பாலான கொழும்பு வாழ் மற்றும் சிங்கள மக்கள்.. இவ்வளவு செலவு செய்து இந்த நிகழ்வை நடத்தனுமா என அங்கலாய்ப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

தென்னிலங்கை மாணவ சமூகத்தையும் இதில் இணைய அழைத்திருக்கலாம்.

இப்ப எல்லாம் சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் 1983 கலவரமே.. பெளத்த மதகுருமாரின்.. அவர்களின் சொல்லுக்கு ஆடுபவர்களின் திட்டமிட்ட செயல் என்று தாமாக கருத்துச் சொல்லவும் சிந்திக்கவும் ஆரம்பித்துள்ள நிலையில்.. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை அதன் தேவையை அவர்களும் தெரிந்து கொள்ளனுன்னா.. இரண்டு இனத்திற்கும் பொதுவான உணர்வில்.. ஒற்றுமையோடு சேர்த்து தமிழ் மக்களின் அரசியல் சமூக பொருண்மிய உரிமைகள் தனித்துவமானவை அதனை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வது எல்லோருக்கும் பொது நன்மையாகும்.. என்ற புரிதலுக்கு இட்டுச் செல்வது.. கூடிய பயனளிக்கும். எதிர்காலத்தில். குறிப்பாக சிங்கள மக்களிடம் பேரினவாத வெறியூட்டி அதில் குளிர்காய முனையும் சிங்கள பெளத்த மேலாதிக்க புத்த பிக்குகள்.. அரசியல்வாதிகள்.. சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை திணிக்க விரும்பும் இராணுவத் தலைமைகளுக்கு அது ஒரு சவாலாகும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு

By DIGITAL DESK 5

04 FEB, 2023 | 09:31 AM
image

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது.

pos.jpg

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  யாழ்ப்பாண  பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி  ஏற்றப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/147398

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள்தான் முன்னின்று நடத்தியது என்று காட்ட சிலபேர் பூருவினம், கவனமாய் கையாளுங்கோ அவர்களை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.