Jump to content

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது - 4 பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதியிடம் நேரடியாக வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

யாருக்கு எண் கணித சாத்திரத்தில் நம்பிக்கை  உண்டு? மேலைநாடுகளில் 13தவிர்க்கப்படும் ஒரு எண். சில வேளைகளில் 13ல் கூறப்படும் மேற்கண்ட சட்ட சரத்துக்கள் வேறோர் இலக்கத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டால் ஏதும் விமோசனம் கிடைக்குமோ? 13என எழுதாமல் மேற்கண்ட செய்தியை வேறு எப்படி தலைப்பிட முடியும்?

சும்மா ஒரு மாற்று யோசனை தான் யாழ் கருத்துக்களத்தின் விஞ்ஞானிகள், பகுத்தறிவாளர்கள் கோபிக்க வேண்டாம் 😝

சாத்திர, எண்கணிதத்தில் நம்பிக்கை கொண்ட பிரேமதாசவின் காலத்தில், இலங்கையின் பெயர், அதிஷ்டமில்லாதது என்று, Shri Lanka என மாற்றப்பட்டது. அவரே மரணிக்க, டி பி விஜயதுங்க மீண்டும் பழையபடி மாத்தினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

சாத்திர, எண்கணிதத்தில் நம்பிக்கை கொண்ட பிரேமதாசவின் காலத்தில், இலங்கையின் பெயர், அதிஷ்டமில்லாதது என்று, Shri Lanka என மாற்றப்பட்டது. அவரே மரணிக்க, டி பி விஜயதுங்க மீண்டும் பழையபடி மாத்தினார்.

இது வதந்தியோ? உண்மையோ? நானும் கேள்விபட்டுள்ளேன். 

அப்ப ஒரு செய்திவாசிப்பவர் ஷிறி லங்கா என வாசிப்பார்.

ஆனால் நாட்டின் பெயரை மாற்றுவது எண்டால் அரசியல்சட்டத்தை எல்லோ முதலில் மாத்தி இருக்க வேணும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

இது வதந்தியோ? உண்மையோ? நானும் கேள்விபட்டுள்ளேன். 

அப்ப ஒரு செய்திவாசிப்பவர் ஷிறி லங்கா என வாசிப்பார்.

ஆனால் நாட்டின் பெயரை மாற்றுவது எண்டால் அரசியல்சட்டத்தை எல்லோ முதலில் மாத்தி இருக்க வேணும்?

ஒரு ஜனாதிபதி ஆணை பெண் ஆக்கவோ பெண்ணை ஆண் ஆக்கவோ மட்டுமே முடியாது. மற்றும் படி எல்லாம் செய்ய முடியும் எண்டு சொன்னவர் JR. அவர் பின்னால் வந்தவர் பிரேமர்.

13: அரசியல் அமைப்பில் இருக்குதே. ஒன்று அமுல்படுத்து அல்லது தூக்கு என்று ரணில் கத்த, அதெல்லாம் இருக்கட்டும், மக்களால் தெரிவு செய்யப்படாத உன்னால், அதனை செய்யமுடியாது என்று அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதியானவருக்கு, சரத், கம்மன்பிள்ள சொல்லி உள்ளார்களே.

அதுசரி, சந்திரிகா இலங்கை நேரத்தினை, இந்தியாவினத்திலும் பார்க்க 30 நிமிடம் கூட்டி குழப்பம் உண்டாக்கினார் தெரியுமே? 

இலங்கை!! அதுக்கு ஒரு அரசியல் அமைப்பு.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

ஒரு ஜனாதிபதி ஆணை பெண் ஆக்கவோ பெண்ணை ஆண் ஆக்கவோ மட்டுமே முடியாது. மற்றும் படி எல்லாம் செய்ய முடியும் எண்டு சொன்னவர் JR. அவர் பின்னால் வந்தவர் பிரேமர்.

அதுசரி, சந்திரிகா இலங்கை நேரத்தினை, இந்தியாவினத்திலும் பார்க்க 30 நிமிடம் கூட்டி குழப்பம் உண்டாக்கினார் தெரியுமே? 

ஓம் அப்படி சொன்ன ஜே ஆர் ஜனாதிபதியாக இருக்கும் போதே தான் விரும்பாத பிரேமதாச அடுத்த ஜனாதிபதியாவதை, யூ என் பி தலைவராவதை தடுக்க முடியவில்லை என்பதும் தெரியும்.

நான் நினைக்கிறேன் உச்சரிப்பை Sri-Shri என மாற்றும்படி மறைமுக அளுத்தம் அரச அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். 

ஆனால் நாட்டின் உத்யோகபூர்வ பெயர் Democratic Socialist Republic of Sri Lanka  என்றே 1972 யாப்பில் இருந்து இருக்கிறது.

ஓம் நாட்டின் நேர வலயம் (time zone) எது என்பது குறித்து அரசியல்சட்டம் எதுவும் சொல்லவில்லை என்பதால் - சந்திரிக்காவால் இதை ஒரு ஜனாதிபதி ஆணை + அமைச்சரவை & பாராளுமன்ற ஒப்புதலோடு மட்டும் செய்ய முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிசயம் ஆனால் உண்மை!
தலை கிறுகிறுத்தால் கம்பனி பொறுப்பாகாது.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.