Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 100 பேர், சிரியாவில் 111 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 100 பேர், சிரியாவில் 111 பேர் பலி

By Sethu

06 Feb, 2023 | 11:34 AM
image

துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அயல் நாடான சிரியாவில் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன. 

துருக்கி பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன.

துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டடங்கள் உடைந்தன. 

இப்பூகம்பத்தினால் துருக்கியில்  நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை, சிரியாவின் அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன் 516 பேர் காயமடைந்துள்ளனர்  என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
 

https://www.virakesari.lk/article/147501

 

  • கருத்துக்கள உறவுகள்

600 பேர் வரை இறந்துள்ளதாக, வானொலி செய்தியில் கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் மக்கள் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என அஞசப்படுகிறது. மேற்படி அதிர்வு லெபனான் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பு எண்ணிக்கை 1000 ஐ தாண்டுகிறதாம்.

2வது பூகம்பம் சற்று முன் துருக்கியை தாக்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Powerful quake kills more than 1,800 people in Turkey and Syria

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி

6 பிப்ரவரி 2023, 07:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்
பிபிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் கூறினர்.

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

 

சிரியா, துருக்கி, லெபனான், சைப்ரஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்

பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்தார்.

கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி அதிபர் எர்துவான் கூறியுள்ளார். 1939-ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

காசியான்டெப்புக்கு வடகிழக்கில் அமைந்துள்ள மலாத்யாவில் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தால் நொறுங்கிய வாகனங்கள்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்காக ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

காசியான்டெப்புக்கு வடகிழக்கில் அமைந்துள்ள தியர்பாகிரில் சேதமடைந்த கட்டடங்களில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்னும் பல நூறு பேர் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பது கடுமையான பருவநிலை காரணமாக மிகவும் சிரமமாக உள்ளது.

தியர்பாகிரில் உள்ள பிபிசி துருக்கி செய்தியாளர், நகரத்திலுள்ள ஒரு வணிக வளாகம் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தார்.

சிரியாவில், அலெப்போ, ஹமா, லதாகியா ஆகிய பகுதிகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வடக்கு சிரியாவில், ஹாமா நகரில் பல கட்டடங்கள் நிலநடுக்கத்தால் தரைமட்டமாகின.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள முகமது எல் சாமா என்ற மாணவர் பிபிசியிடம் பேசியபோது, "நான் எதையோ எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரென்று முழு கட்டடமும் குலுங்கியது. என்ன செய்வது என்று என்னால் சிந்திக்க முடியவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும், "நான் ஜன்னலுக்கு அருகில் இருந்தேன். அதனால், அவை உடைந்துவிடுமோ என்று அஞ்சினேன். இது நான்கு-ஐந்து நிமிடங்கள் நீடித்தது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது," என்று அவர் கூறினார்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் சிரிய மக்கள்

காசா பகுதியில் உள்ள பிபிசி தயாரிப்பாளரான ருஷ்டி அபுவலூஃப், அவர் தங்கியிருந்த வீட்டில் சுமார் 45 விநாடிகள் நடுக்கம் ஏற்பட்டதாகக் கூறினார்.

இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளதாக துருக்கிய நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களில் இரண்டாவது நிலநடுக்கம் அப்பகுதியில் தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

துருக்கிய எல்லையில் அமைந்துள்ள அஹ்மரின் என்ற பகுதியில் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடும் பணியில் குடியிருப்புவாசிகள்

துருக்கி உலகின் மிகவும் தீவிரமான நிலநடுக்க மண்டலங்களில் ஒன்று.

1999ஆம் ஆண்டில், நாட்டின் வடமேற்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?

பூமியின் மேலடுக்கு தட்டுகள் எனப்படும் தனித்தனி பாகங்களாக உள்ளன. ஒவ்வொன்றும் மற்றொன்றை நெருக்கியபடி அமைந்திருக்கின்றன.

கிராபிக்

இந்த அமைப்பு அவ்வப்போது நகருவதற்கு முயற்சி செய்கிறது. ஒரு தட்டு நகர முயற்சிக்கும்போது மற்றொரு தட்டு அதைத் தடுக்கிறது. இதனால் உராய்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் ஒன்று மற்றொன்றின் மீது மோதி மேற்பரப்பில் அதிர்வை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ஆய்வாளர்கள் நிலநடுக்கம் என்கிறார்கள்.

தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் அரேபியன் தட்டும் அனத்தோலிய தட்டும் உரசியதால் ஏற்பட்டிருக்கிறது.

பூமித் தட்டுகள் நகர்ந்து உராய்ந்ததால் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-64534511

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த கைக்குழந்தை மீட்பு

By RAJEEBAN

06 FEB, 2023 | 10:00 PM
image

சிரியாவில்  பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த கைக்குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.

துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் பெரும் துயரம் ஏற்பட்டுள்ள அதேவேளை அங்கிருந்து வெளியாகும் தகவல்களில் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து கைக்குழந்தையொன்று மீட்கப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது.

FoRUyHtWcAA-QGY.jpg

சிரியாவின் அஜாஸ் நகரில் பூகம்பத்தின் பின்னர் இடிபாடுகளிற்குள்ளிருந்து கைக்குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் மீட்டுக்கொண்டு செல்வதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

சிரியாவின் வைட்ஹெல்மெட் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்டு கைக்குழந்தையொன்றை பாதுகாப்பாக கொண்டு செல்வதை காணமுடிகின்றது.

பின்னர் அந்த குழந்தை மருத்துவ நிலையமொன்றில் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/147563

  • கருத்துக்கள உறவுகள்

 

இறந்தவர்களின் எண்ணிக்கை 3800 ஐ தாண்டுகின்றதாம். Free Sad Emoji Wallpaper Downloads, [100+] Sad Emoji Wallpapers for FREE |  Wallpapers.com

  • கருத்துக்கள உறவுகள்

329147811_1405952973479497_7280236150633

323886742_1250046292609431_4022537108921

329255054_885556422777293_71011843526225

329576453_1245792342683200_5280094351052

328509771_661685799066593_83035972474278

329128158_868762247749429_86815699262363

329343553_874165877170526_18908900798747

 

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி - சிரியா நிலநடுக்கம்: "இடிபாடுகளில் குரல் கேட்கிறது, காப்பாற்ற யாரும் இல்லை"

  • மராஸிலிருந்து அன்னா ஃபாஸ்டர் மற்றும் லண்டனிலிருந்து அன்டோயினெட் ராட்ஃபோர்ட்
  • பிபிசி நியூஸ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

துருக்கியின் இஸ்கென்டெருன் பகுதியில் மக்கள் இரவை சாலைகளில் கழித்தனர்.

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர் இன்னும் கண்டெடுத்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

 

திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில் துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.

துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை துருக்கியில் குறைந்தது 2,291 பேர் இந்த நிலநடுக்கத்தால் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அதில் உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.

துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என இடிபாடுகளுக்கிடையே தங்களின் வெறும் கைகளால் தோண்டி மீட்புப்பணியில் மீட்புக்குழுவினர் சிலர் ஈடுபட்டனர்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,BURAK KARA / GETTY IMAGES

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஒஸ்மானியே நகரில் கனமழை காரணமாக தேடுதல் பணி தடைபட்டது.

கடும் குளிர் மற்றும் மழைக்கு நடுவே அந்நகரில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.

உறையும் குளிருக்கு நடுவே சாலையில் முகாம் அமைத்துத் தங்கியுள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம், மீண்டும் கட்டடத்திற்குள் செல்லவே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அளவிலான நில அதிர்ச்சியின்போது, அந்தக் குடும்பத்தினர் அச்சத்தின் காரணமாக சாலைக்கு நடுவே சென்றுவிடுகின்றனர்.

தங்கள் உணவகத்தில் தங்கியிருந்த 14 பேரில் ஏழு பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக, உணவக உரிமையாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணிகளுக்காக சிறப்பு குழுக்கள், மோப்ப நாய்கள், உபகரணங்களை வழங்கி உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

ஆனால், துருக்கியில் உள்ள மூன்று விமான நிலையங்களும் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்டுள்ளதால், இத்தகைய உதவிகள் வந்து சேர்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

துருக்கி நிலநடுக்கம்

வடக்கு சிரியாவில் இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரியா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தனர்.

இந்தப் பகுதியின் கட்டுப்பாடு சிரியா அரசாங்கம், குர்திஷ் படையினர், மற்ற புரட்சிக் குழுக்கள் என மூன்று தரப்பிடமும் உள்ளது. நிலநடுக்கத்திற்கு முன்பிருந்தே, உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் சிரியா அகதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் தங்களால் எங்கும் செல்ல முடியவில்லை என, அலெப்போ நகரைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

சிரியா நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

அலெப்போவில் சேதமடைந்துள்ள கட்டடங்கள்

ஜண்டைரிஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் குடும்பத்தினர் 12 பேர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். தன்னுடைய குடும்பத்தினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாக, மற்றொரு நபர் தெரிவித்தார்.

"அவர்களின் குரல் கேட்கிறது. அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால், காப்பாற்ற யாரும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

வடக்கு சிரியாவின் இட்லிப்பில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றியவர் பிரிட்டனை சேர்ந்த ஷஜுல் இஸ்லாம். பிபிசி ரேடியோ 4-இன் 'தி வேர்ல்ட் டுநைட்' நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்கள் மருத்துவமனை மிக மோசமான மரணங்களை இந்த நிலநடுக்கத்தால் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.

"எங்கள் மருத்துவமனை நிரம்பியுள்ளது. சுமார் 300-400 பேர் தற்போது எங்கள் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு படுக்கைக்கு இரண்டு முதல் மூன்று பேர் உள்ளனர்," எனத் தெரிவித்தார்.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள 40-45 பேரை, தான் ஐசியூவுக்கு அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். "மற்றவர்களிடமிருந்து வென்டிலேட்டரை அகற்றி, உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்குப் பொருத்துகிறோம். மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்துகொண்டு யாரைக் காப்பாற்ற முடியும் என்பது குறித்து முடிவு செய்கிறோம்," எனத் தெரிவித்தார்.

சிரியா நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சிரியாவில் நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இட்லிப் உள்ளது.

சர்வதேச உதவிக்காக வேண்டுகோள் விடுத்த நிலையில், 45 நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளதாக, துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் சர்வதேச உதவிக்காக அழைப்பு விடுத்தார். பேரழிவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் "ஏற்கெனவே உதவியை அணுகுவதில் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அப்பகுதிகளில் மனிதாபிமான உதவி தேவை," என்று அவர் தெரிவித்தார்.

துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், நெதர்லாந்து மற்றும் ரொமானியாவை சேர்ந்த மீட்புக்குழுவினர் துருக்கிக்கு செல்கின்றனர். 76 பேர் அடங்கிய சிறப்புக்குழு, உபகரணங்கள், மீட்பு நாய்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் உதவுவதாக அறிவித்துள்ளார். அவ்வாறே இரானும் தெரிவித்துள்ளது.

உலகத்தில் நிலநடுக்கம் அதிகமாக ஏற்படும் நாடுகளுள் ஒன்று துருக்கி.

அந்நாட்டின் வட-மேற்குப் பகுதியில் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேபோன்று, கிழக்கு மாகாணமான எர்ஸின்கன் பகுதியில் 1939ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33,000 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சைப்ரஸ், லெபனான் மற்றும் இஸ்ரேல் வரை உணரும் வகையில் மிக மோசமானது.

https://www.bbc.com/tamil/global-64550258

  • கருத்துக்கள உறவுகள்

மீட்புபணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை துருக்கியை தாக்கிய இரண்டாவது பூகம்பம்

By RAJEEBAN

06 FEB, 2023 | 08:38 PM
image

துருக்கியை  தாக்கியுள்ள இரண்டாவது பூகம்பம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

ரொய்ட்டரின் வீடியோவொன்று இரண்டாவது பூகம்பம் நிகழ்ந்த தருணத்தை பதிவு செய்துள்ளது.

நேரலையில் ஈடுபட்டிருந்தவேளை கட்டிடமொன்று இடிந்துவிழுவதையும்  ஊடக பணியாளர்கள் அச்சத்துடன் ஒடுவதையும் பாரிய சத்தமொன்று கேட்பதையும் பின்னர் புகைமண்டலம் எழுவதையும் அவதானிக்க முடிகின்றது.

முதலாவது பூகம்பத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகளை மலட்யா நகரில் பதிவு செய்துகொண்டிருந்தவேளை தங்களிற்கு அருகிலிருந்த கட்டிடமொன்று சரிந்து விழுந்தது என யுக்செல் அகலன் என்ற நிருபர்தெரிவித்துள்ளார்.

மக்கள் அலறிக்கொண்டு வீதிக்கு ஒடுவதையும் இடிபாடுகளையும் அவதானிக்க முடிகின்றது.

https://www.virakesari.lk/article/147560

  • கருத்துக்கள உறவுகள்

5000 வரை இறப்புக்கள் என செய்திகள் கூறுகின்றன. 20000 வரை வரலாம்  என WHO  சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பூகம்ப இடிபாடுகளில் இருந்து கால்பந்தாட்ட வீரர் உயிருடன் மீட்பு

By RAJEEBAN

07 FEB, 2023 | 03:28 PM
image

கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சு பூகம்ப இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அவரது கிளப்பின் முகாமையாளர் தொடர்ந்தும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/147635

  • கருத்துக்கள உறவுகள்

பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை அனுப்புகின்றனர்- துருக்கி பத்திரிகையாளர்

By RAJEEBAN

07 FEB, 2023 | 08:59 PM
image

பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டு;ள்ள மக்கள் குரல் செய்திகளை அனுப்புகின்றனர் என துருக்கியை தளமாக கொண்ட பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்னமும் இடிபாடுகளிற்குள் உள்ளனர் அவர்களிற்கு உதவி தேவை என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மலட்யாவை சேர்ந்த பத்திரிகையாளரே இதனை தெரிவித்துள்ளார்.

உதவுவதற்காக தனது நகரத்திற்கு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும் மற்றுமொரு பத்திரிகையாளர்களிற்கும் அவர்கள் வீடியோக்களையும் குரல்செய்திகளையும் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர்என்ற செய்திகளையும் அனுப்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர் என அவர்கள் தெரிவிக்கின்றனர் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/147657

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பிறந்த குழந்தை இடிபாடுகளிலிருந்து மீட்பு - தாய் தந்தை இறந்த சோகம்

38 நிமிடங்களுக்கு முன்னர்
துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹத்தாய் நகரில் குளிரில் நடுங்கும் பெண்கள்

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,000-ஐ நெருங்கியது. 7,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் 5,894 பேரும் சிரியாவில் குறைந்தது 1,932 பேரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை தெரிவித்தது.

துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் தடையாக உள்ளது. அதேபோன்று, நிலநடுக்கத்திற்கு முன்பிருந்தே, உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் சிரியா அகதிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரியா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தனர். இந்நிலநடுக்கத்தால் சிரியா அகதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில் துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்தது. துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அதில் உயிர் பிழைத்தவர்கள் கூறினர்.

துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவானது.

 

மீட்புப்பணிகள் தொடர்பான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

சிரியா நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

மீட்கப்பட்ட குழந்தை

வட-மேற்கு சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பின் பிறந்த குழந்தையை மீட்புக்குழுவினர் கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்டனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு, அக்குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண் உயிரிழந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவருடைய தந்தை, உடன்பிறந்த 4 பேர் உள்ளிட்டோரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர்.

இட்லிப் மாகாணத்தில் துருக்கிய எல்லைக்கு அருகாமையில் உள்ள நகரமான ஜின்டாய்ரிஸில் கட்டட இடிபாடுகளிலிருந்து அக்குழந்தை மீட்கப்பட்டது.

அக்குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாலைகளில் வசிக்கும் மக்கள்

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

இஸ்கெந்தருனில் ஏற்பட்ட பாதிப்புகள்

பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் சாலைகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தெற்கு ஹத்தாய் மாகாணத்தில் உள்ள இஸ்கெந்தருனில் சாலையின் ஒரு வரிசையில் உள்ள கட்டடங்கள் முழுவதும் இடிந்தன. தன்னுடைய நண்பர் ஒருவர் நிலநடுக்கத்தால் உயிரிழந்த நிலையில், தன் நான்கு நண்பர்களை காணவில்லை என பெண் ஒருவர் தெரிவித்தார்.

மக்கள் பலரும் உதவிக்குழுக்கள் அளிக்கும் சில பிரெட் துண்டுகள் மற்றும் தக்காளிகளை உண்டு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேரழிவை உணர்த்தும் செயற்கைக்கோள் படங்கள்

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,SATELLITE IMAGE ©2023 MAXAR TECHNOLOGIES

 
படக்குறிப்பு,

இஸ்லாஹியேவில் ஏற்பட்ட பாதிப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பேரழிவை உணர்த்தும் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகின.

நேற்று (பிப். 07) வெளியான இந்த செயற்கைக்கோள் படங்கள் துருக்கி தெற்கு நகரங்களான இஸ்லாஹியே, நுர்தாகி, டுஸிசி உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட சேதங்களை காட்டுகின்றன.

அதேபோன்று, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் பல்வேறு புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

சிரியா நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீட்புக்குழுவினர் மீது கோபம்

தெற்கு துருக்கியில் உள்ள நுமுனே மாவட்டத்தில் அர்ஸு டெடியேக்வா என்ற பெண் ஒருவர், தன்னுடைய உறவினரின் குழந்தைகள் இருவர் இன்னும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாக மீட்புக்குழுவினரை நோக்கி, "நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள்" எனக்கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தியதாக, பிபிசி துருக்கி நிருபர் ஃபண்டனூர் ஆஸ்டுர்க் தெரிவிக்கிறார்.

"நாங்கள் வெகுநேரமாக காத்திருந்தோம், ஆனால் யாரும் வரவில்லை. எங்களிடம் உள்ள உபகரணம் மூலம் நிலத்தைத் தோண்டவும் அனுமதிக்கவில்லை" என அந்த பெண் தெரிவித்தார்.

"இரு குழந்தைகள் அதில் சிக்கியுள்ளனர். அவர்கள் (இறந்து) போய்விட்டனர். அவர்கள் ஏற்கனவே போய்விட்டனர், உறுதியாக சொல்கிறேன். ஏன் மீட்புக்குழுவினர் விரைவாக வரவில்லை?" என அவர் கேள்வியெழுப்பினார்.

உயிரிழந்த கால்பந்து வீரர்

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,YENI MALATYASPOR

துருக்கி கால்பந்து வீரரான அஹ்மெத் ஈயுப் துர்கஸ்லானும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுள் ஒருவர். அவருடைய கால்பந்து அணி யெனி மலாடியஸ்போர் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

"எங்களுடைய கோல்கீப்பர் அஹ்மெத் ஈயுப் துர்கஸ்லான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்,"" என அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்பதிவில், "உங்களை நாங்கள் மறக்க மாட்டோம், நீங்கள் மிகச்சிறந்த மனிதர்," என பதிவிடப்பட்டுள்ளது.

28 வயதான துர்கஸ்லான், 2021ஆம் ஆண்டிலிருந்து ஆறுமுறை அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.

அழிவுக்கு மேல் அழிவை சந்திக்கும் சிரியா

Getty Images

சிரியா நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சிரியாவில் இடிந்துவிழுந்த கட்டடம்

'டாக்டர்ஸ் வித்தௌட் பார்டர்ஸ்' (Doctors without Borders) அமைப்பின் பிரிட்டன் செயல் இயக்குநர் நட்டாலி ராபர்ட்ஸ், சிரியாவில் தங்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

"பேரழிவுக்கு மேல் பேரழிவு ஏற்பட்டுள்ளது. துருக்கியின் காஸியான்டெப் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான சிரியா அகதிகள் வலுவற்ற கட்டடங்களில் வாழ்கின்றனர். இதனால், இத்தகைய பேரழிவால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் நீண்ட நேரமாக சிக்கியுள்ளவர்களுக்கு ஏற்படும் காயங்களால் அவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பேரிடரைத் தொடர்ந்து காலரா உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவுகளால் பல மாதங்களுக்கு வடக்கு சிரியா பாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-64565122

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்கள் வீட்டில் வீட்டுவேலை பார்க்கின்றேன் - இடிபாடுகளிற்குள் சிக்கி மன்றாடிய சிறுமி

By RAJEEBAN

08 FEB, 2023 | 02:56 PM
image

cnn

சிரியாவின் வடபகுதியில் பூகம்பத்தினால் தரைமட்டமான வீட்டின் கொன்கீறீட் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த இருசகோதரங்கள்   36 மணித்தியாலத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் ஹராம் கிராமத்தை தாக்கிய பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த இவர்கள் 

 

 மீட்கப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்களிற்கு என்னவேண்டும் என்றாலும் செய்வேன் வீட்டில் வேலைபார்ப்பதற்கும் நான் தயார் என சிறுமி தன்னை காப்பாற்ற முயலும் நபரிடம் தெரிவிக்கின்றார்.

இல்லை இல்லை அப்படி சொல்லவேண்டாம் என மீட்புபணியாளர் தெரிவிக்கின்றார்

அந்த சிறுமியின் பெயர் மரியம்-எஞ்சியிருக்கின்ற கட்டிலில் தனது இளைய சகோதரனுடன் காணப்படும் மரியம் சகோதரனின் தலையை மெதுவாக வருடுகின்றார்.

தனது கையால் சகோதரனின் முகத்தை மூடி சகோதரனின் முகத்தில் இடிபாடுகளின் தூசி படுவதை அவர் தடுக்கின்றார்.

இளைய மகனின் பெயர் இலாவ் என்கின்றார் தந்தை - அதன் அர்த்தம் பாதுகாவலன்.

syrian-children-rescue-020723.jpg

தாங்கள்( மனைவி - மூன்று பிள்ளைகள்) உறங்கிக்கொண்டிருந்தவேளை அதிகாலையில் பூகம்பம் தாக்கியது  என தெரிவிக்கின்றார் தந்தை.

நாங்கள் நிலம் அதிர்வதை உணர்ந்தோம்.கட்டிடத்தி;ன் பகுதிகள் எங்கள் தலைமீது விழத்தொடங்கின நாங்கள் இரண்டு நாட்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்தோம்  என தந்தை தெரிவித்தார்.

எவரும் அனுபவிக்க கூடாத வேதனையை நாங்கள் அனுபவித்தோம் என்கின்றார் அவர்.

இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த படி நாங்கள் உரத்த குரலில் குரான் வாசித்தோம்- எங்களை யாராவது கண்டுபிடிப்பார்கள் என நினைத்தோம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

எங்கள் குரல்களை மக்கள் கேட்டார்கள் எங்களை காப்பாற்றினார்கள்  கடவுளுக்கு நன்றி நாங்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றோம் காப்பாற்றியவர்களிற்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.

மரியத்தையும் இலாபையும் போர்வையில் சுற்றி வெளியே பாதுகாப்பாக மீட்பு பணியாளர்கள் கொண்டுவருவதையும் மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் குளிரின் மத்தியில் மக்களை மீட்பது குறித்த நம்பிக்கைகள் நிமிடத்திற்குநிமிடம் குறைவடைகின்றன.

முற்றிலும் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து உயிர்தப்பியவர்கள் கூட கடுங்குளிரை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

அல்சயிட்டின் வீடு இட்லிப்பில் உள்ளது - கிளர்ச்சியாளர்களின் பகுதியில்- இங்கு1200 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/147713

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி நிலநடுக்கம்: பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை - 72 மணி நேரத்திற்கு பிறகு பெண் உயிருடன் மீட்பு

2 மணி நேரங்களுக்கு முன்னர்
சோகத்தில் பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

துருக்கி, சிரியாவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதால், காணாமல் போன மேலும் பலர் உயிருடன் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்கேண்டிருன் நகரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், அங்கே நிலநடுக்கத்தால் சரிந்து கிடந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளை உணர்ந்தனர். இதையடுத்து, அங்கு சுற்றிலும் குழுமியிருந்த மக்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய அவர்கள், கிரேன் போன்ற தங்களது இயந்திரங்களின் இயக்கத்தையும் நிறுத்தினர்.

சில நிமிட அமைதிக்குப் பின்னர், அங்கு பெண் ஒருவர் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக் குழுவினர், ஆம்புலன்சை வரவழைத்தனர்.

நிலநடுக்கம் தாக்கிய 3 நாட்களுக்குப் பிறகு பெண் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்டதும் சுற்றிலும் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதே கட்டடத்தில் வசித்த தனது உறவினர்களின் கதி என்னவென்று இன்னும் தெரியாத ஒரு பெண், அங்கிருந்த காரின் முன்பகுதியில் முகம் புதைத்து அழுததைக் காண முடிந்தது.

பெண் உயிருடன் மீட்கப்பட்டதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த நபர் பிபிசியிடம் பேசுகையில், திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த 6 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமான பிறகு இப்போதுதான் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

"சுமார் 50 வயதான அந்த பெண், தனியாக வசித்து வந்தார். அவரை மீட்புக்குழுவினர் பத்திரமாக தூக்கிச் சென்றதை ஆம்புலன்ஸ் அருகே நின்றிருந்த அவரது மகன் பார்த்துக் கொண்டிருந்தார்" என்று உள்ளூர் மக்கள் கூறினர்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

அங்கிருந்த பலருக்கும், காணாமல் போன அவர்களது உறவினர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த மீட்புக் காட்சி கொடுத்துள்ளது. இதுபோன்ற அற்புதம் நிகழும் என்று பெண் ஒருவர் கூறினார்.

துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கிடையே, இந்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட காட்சி நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தரக் கூடிய மிகவும் அரிதான ஒன்றாக அமைந்தது.

இடிபாடுகளுக்கு நடுவே வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறியும் பணியை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளாலேயே மீண்டும் தொடங்க, பணி மெதுவாக நடந்ததால் அங்கே சுற்றிலும் கூடியிருந்தவர்களின் மனநிலை மீண்டும் அமைதியற்றதாக மாறிப் போனது.

பிபிசியிடம் பேசிய உள்ளூர் மருத்துவர் மெஹ்மத் ரியாத், திங்கட்கிழமை முதல் மருத்துவ ஊழியர்கள் அதிகமாக உள்ளனர் என்று கூறினார்.

"இடிபாடுகளில் சிக்கி நசுங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். எலும்பு முறிவு, உடைந்த கழுத்துகள், தலையில் காயங்களுடன் ஏராளமானோரை கண்டிருக்கிறோம். அதிக உயிரிழப்புகளையும் கண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

"மருத்துவர்களாக நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய வேண்டும். ஆனால் உதவிக் குழுக்கள் பொறுப்பேற்கும் போது, நாங்கள் சொந்த குடும்பங்களைப் பற்றி சிந்திக்கிறோம்." என்றார் அவர்.

இஸ்கேண்டிருன் நகரில் திரும்பும் இடமெல்லாம் பேரழிவின் கோரத்தை பார்க்க முடிகிறது. பரபரப்பான மருத்துவமனைகள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து கிடக்கின்றன.

உறவுகளைத் தேடி நீண்ட பயணம்

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

இஸ்தான்புல் நகரில் விமானத்தைப் பிடிக்க காத்திருந்த சாமெட் இல்மாஸ் என்பவர், தனது செல்போனில் சகோதரரின் புகைப்படத்தைக் காட்டுகிறார். நிலடுக்கத்தால் இடிந்து போன வீட்டின் சிதைவுகளுக்குள் அவர் புதையுண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

பஹ்ரைனில் வசிக்கும் சாமெட், நிலநடுக்கத்திற்குப் பிறகு உறவுகளைத் தேடி தெற்கு துருக்கி நோக்கி பயணிக்கும் ஏராளமான மக்கள் திரளில் ஒருவர். மற்றவர்களைப் போலவே அவரும், தானே நேரடியாக சென்று கட்டட இடிபாடுகளை அகற்றினால் சகோதரனை மீட்டுவிட முடியும் என்று நம்புகிறார்.

26 வயதான சகோதரர் இஸ்மாயில், ஹாதே மாகாணத்தில் உள்ள உறவினர்களுடன் தங்கி, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மைத்துனர் உள்ளிட்ட மற்றவர்கள் மீட்கப்பட்டு விட்ட நிலையில், இஸ்மாயில் எங்கே என்று இன்னும் தெரியவில்லை என்கிறார் சாமெட்.

"அவன் இல்லாத வெறுமையை என்னால் உணர முடிகிறது. அவனைத் தேடவே நான் பஹ்ரைனில் இருந்து துருக்கிக்கு வந்துள்ளேன். அவன் என்னுடைய ஒரே சகோதரன்," என்று மிகவும் உருக்கத்துடன் அவர் கூறினார்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

சாமெட் மட்டும் அல்ல, காணாமல் அன்புக்குரியவர்களைத் தேடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் செல்லும் துருக்கி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரிடம் பிபிசி பேசியுள்ளது.

அன்டாக்யா நகரில், செவ்வாய்க்கிழமையன்று நிலநடுக்கத்தால் இடிந்து கிடக்கும் கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றி, உள்ளே யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்று சிலர் தேடிக் கொண்டிருந்தனர். கட்டிடத்தில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்றும், இஸ்தான்புல்லில் இருந்து தங்கள் உறவினர்களைத் தேடி வந்திருப்பதாகவும் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

நிலநடுக்க பாதிப்புகளை அரசு எதிர்கொண்ட விதம் குறித்து அதிருப்தி அதிகரித்துள்ள சூழலில், விமர்சனங்களுக்கு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் பதிலடி கொடுத்துள்ளார்.

"இவ்வளவு பெரிய பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது இயலாத காரியம்," என்று அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-64580626

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த சகோதரிகளை மீட்க நடந்த போராட்டம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
இடிபாடுகளுக்கு நடுவே மீட்பு பணி
 
படக்குறிப்பு,

இடிபாடுகளுக்கு நடுவே மீட்பு பணி

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

"மெர்வ்! ஐரேம்! மெர்வ்! ஐரேம்" என்று மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த முஸ்தஃபா ஓஸ்டுர்க் கத்திக்கொண்டு இருந்தார். எங்களைச் சுற்றி இருந்த அனைவரும் அமைதியாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இரண்டு சகோதரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக மீட்கப்பட்ட மற்றவர்கள் கூறியதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.

எதாவது பதில் கிடைக்கிறதா என்று உணர்திறன் சாதனங்களுடன் அவர்கள் காத்திருந்தனர். அனைவரும் எதிர்பார்ப்பில் உறைந்திருந்தனர்.

அப்போது, முஸ்தஃபா, "ஐரேம், நாங்கள் உன் அருகேதான் இருக்கிறோம். நான் பேசுவது கேட்கிறதா" என்று அழைத்தார்.

தற்போது, உள்ளே இருந்து பதில் கிடைத்தது. ஆனால், சுற்றிருந்த எங்களுக்கு எதுவும் கேட்கவில்லை. உள்ளே சிக்கியிருந்த பெண்ணின் தோழிகள் சிலரும் எங்களுடன் அமைதியாக நின்றிருந்தனர்.

 

"பேசுவது மெர்வ் தானே, நிதானமாக இரு, நான் கேட்பதற்கு மட்டும் பதில் கூறு" என்று முஸ்தஃபா தெரிவித்தார்.

மெர்வ்(24) மற்றும் அவரது தங்கை ஐரேம்(19) இருவரும் தெற்கு துருக்கியின் ஆந்தாக்யாவில் உள்ள 5 மாடி கட்டடத்தில் வசித்து வந்தனர். நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் அவர்கள் வசித்து வந்த குடியிருப்பும் இடிந்து தரைமட்டமானது. இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் சிக்கி 2 நாட்கள் ஆகிறது. ஆனால், அவர்களுக்கு அது பல வாரங்களைப் போல் தோன்றத் தொடங்கியது.

"இன்று புதன்கிழமைதான் ஆகிறது. நீங்கள் சிக்கி 14 நாட்களெல்லாம் ஆகவில்லை. எங்களுக்கு வெறும் 5 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள். நீங்கள் இருவரும் மீட்கப்படுவீர்கள்," என்றார் முஸ்தஃபா.

மீட்புப் பணிகளுக்குச் சில மணி நேரம் எடுத்துகொள்ளும் என்பது அவருக்குத் தெரியும். எனினும், "அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால், அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லாமலும் போகும்" என்று எங்களிடம் அவர் தெரிவித்தார்.

மெர்வ் மற்றும் ஐரேம் தற்போது தங்களுக்குள்ளேயே நகைச்சுவை கூறி சிரிக்கத் தொடங்கினர். முஸ்தஃபாவின் முகத்தில் நான் புன்னகையைப் பார்த்தேன். "அவர்களுக்கு மட்டும் போதிய இடம் இருந்தால் அவர்கள் ஒருவேளை நடனம் ஆடியிருப்பார்கள்," என்று அவர் தெரித்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் கணக்கீடுகளின்படி, சகோதரிகள் இருவரையும் அடைய 2 மீ (6.6 அடி) தூரம் உள்ளது. ஆனால் மீட்புக் குழுவின் தளபதியான ஹசன் பினாய், கான்கிரீட்டிற்குள் சுரங்கம் தோண்டுவது மிகவும் நுட்பமான செயல் என்று கூறுகிறார். மேலும், ஒரு சிறு தவறான நடவடிக்கை பேரழிவிற்கு வழிவகுக்கும்.

அவர்கள் இடிபாடுகளைத் தோண்டும்போது, கட்டடம் இடிந்து விழாமல் தடுப்பதற்காக கான்கிரீட்டை தாங்கிப் பிடிக்க ஒரு புல்டோசர் அழைக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியிருந்த சகோதரிகளிடம் விரைவில் நாங்கள் உங்களுக்குப் போர்வைகள் தருகிறோம் என்று முஸ்தஃபா கூறுகிறார். அதற்கு உள்ளே இருந்து, "எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாங்கள் சோர்வையோ, குளிரையோ உணரவில்லை," என பதில் வருகிறது.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் நிலை குறித்து மெர்வ் கவலைப்பட்டதாக முஸ்தஃபா தெரிவித்தார். உள்ளூர் நேரத்தின்படி அப்போது மணி இரவு 8.30. மிகவும் குளிராக இருக்கிறது. மேலும், மக்களால் மறக்கமுடியாத வகையிலான மிகவும் குளிர்ந்த காலத்தை அப்பகுதி கொண்டிருந்தது.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்கள் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், சில மணிநேரங்களுக்குப் பிறகு, எங்கள் கால்களுக்குக் கீழே தரை அதிர்வது போன்று நாங்கள் உணர்ந்தோம். உடனடியாக மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டு அனைவரும் வெளியேறினோம்.

"இதுதான் நிதர்சனமான உண்மை, எங்கள் குழுவின் பாதுகாப்புதான் எங்களின் பிரதான நோக்கம்," என்று ஹசன் கூறினார்.

30 நிமிடங்களுக்குப் பின் முஸ்தஃபா மற்றும் 3 பேர் உள்ளே சென்று மீண்டும் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

தங்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர் என உள்ளே இருந்த பெண்கள் நினைத்திருந்தனர். "பயப்பட வேண்டாம். உங்களை இங்கேயே விட்டுவிட்டு நாங்கள் செல்ல மாட்டோம். இருவரையும் நாங்கள் மீட்டு வெளியே கொண்டு வருவோம். நீங்கள் எங்களுக்கு நல்ல மதிய உணவு வாங்கித் தரவேண்டும்," என்று முஸ்தஃபா சத்தமாகக் கூறினார்.

Merve
 
படக்குறிப்பு,

Merve after being brought out the rubble asked: "Am I really alive?"

தற்போது நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது. பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது. மீட்புப் பணியினர் கடந்த சில நாட்களாகவே சரியாகத் தூங்கவில்லை. கட்டடத்திற்கு அருகே சிறிய அளவில் நெருப்பு மூட்டி அங்கே கூடினோம்.

'அமைதி' என்ற சத்தம் மட்டும் அவ்வப்போது ஒலித்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு, முழுவதும் இருட்டாக இருந்தது. முஸ்தஃபாவின் டார்ச் லைட்டில் இருந்து வரும் வெளிச்சத்தை உள்ளே சிக்கியிருக்கும் பெண்களால் பார்க்க முடிகிறதா என்பதை அறிய கான்கிரிட் சுவரில் சிறிய துளையிடப்பட்டது.

"மேர்வ், ஐரேம், உங்களால் வெளிச்சத்தைப் பார்க்க முடிகிறதா! சிறப்பு, தற்போது நாங்கள் சிறிய கேமராவை உள்ளே அனுப்புகிறோம். அதை உங்களால் பார்க்க முடிந்தால் கூறுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்," என்று முஸ்தஃபா கூறுகிறார்.

"நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், அதிகமாக அசைய வேண்டாம். ஐரேம் கேமராவை இழு, அப்போதுதான் எங்களால் மேர்வை பார்க்க முடியும்," என்று அவர் தெரிவித்தார்.

கேமராவில் நாங்கள், ஐரேம் சிரிப்பதைப் பார்த்தோம். நல்வாய்ப்பாக, இடிபாடுகளுக்கு இடையே அவர்களுக்குப் போதிய இடவசதி இருந்தது.

மீட்க முடியும் என்ற எண்ணம் அனைவர் முகத்திலும் தோன்றியது. பெண்கள் நன்றாகத் தெரிகிறார்கள். மேலும், துளையைக் கொஞ்சம் பெரிதாக்கினால் தன்னை வெளியே இழுத்துக்கொள்ளும் அளவுக்கு ஐரேமுக்கு இடம் இருந்தது.

ஆனால், உடனடியாகவே மீட்புக்குழுவினரை கவலைத் தொற்றிக்கொண்டது. உள்ளே அதிக குளிராக இருப்பதாகவும், தனது காலில் அழுத்தமாக உள்ளதாகவும் மெர்வ் கூறினார்.

போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் மெர்வின் பாதம் மரத்துப்போய்விட்டதா அல்லது உடலின் வெப்பநிலை குறைந்துள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டனர்.

தற்போது, அதிகாலை 5.00 மணி. மீட்புக்குழுவில் உள்ள ஒல்லியான நபர் உள்ளே செல்வதற்குப் போதுமானதாக அந்தத் துளை இருந்தது. உள்ளே சென்று ஐரேமின் கையைச் சிறிது நேரம் தாங்கிப் பிடிக்கவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த நபரால் முடிந்தது.

மீட்புப் பணியாளர்கள் கேமிராவை கொண்டு இந்தப் பெண் உயிரோடு இருப்பதை கண்டுபிடித்தனர்.
 
படக்குறிப்பு,

மீட்புப் பணியாளர்கள் கேமிராவை கொண்டு இந்தப் பெண் உயிரோடு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

எந்த அளவில் துளையிட வேண்டும் என்பது குறித்து அவர்கள் அளவிட்டுக் கொண்டிருந்தனர். தெர்மல் கம்பளி மற்றும் ஸ்டெர்ட்சர் ஆகியவற்றுடன் மருத்துவக் குழு தயாரானது. அனைவரும் ஆர்வமாக இருந்தனர். தற்போது நேரம், காலை 6.30 மணி. ஐரேம் முதலில் வெளியே வந்தார். அவர் ஆனந்தக் கண்ணீருடன் காணப்பட்டார்.

`மெர்வையும் உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வாருங்கள்` என்று மீட்புக்குழுவினரிடம் ஐரேம் தெரிவித்தார். `மெர்வ் நிச்சயம் மீட்கப்படுவார்` என்று அவரிடம் ஹசன் உறுதியளித்தார்.

ஆனால், மெர்வை மீட்கக் கூடுதலாக 30 நிமிடங்கள் ஆனது. கான்கிரீட்டில் இருந்து மெர்வின் பாதங்களை விடுவிக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றனர்.

இறுதியாக மெர்வும் மீட்கப்பட்ட பின்னர், அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்று மெர்வ் கூச்சலிட்டது என் காதில் விழுந்தது.

இரவு முழுவதும் மீட்புப் பணியின்போது காத்திருந்த அவர்களது நண்பர்கள் தற்போது கண்ணீருடம் கூச்சலிட்டனர். உடனடியாக சகோதரிகள் இருவரும் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களின் மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு மாறுதல் ஏற்படுகிறது. அனைவரும் அமைதியாக இருக்கும்படி மீட்புப்படையினர் கூறுகின்றனர்.

`நான் பேசுவது கேட்டால் பதில் அளியுங்கள், உங்களால் பேச முடியவில்லை என்றால் தரையை உந்தி சைகை தரவும்` என்று ஹசன் தொடர்ந்து குரல் எழுப்புகிறார். பின்னர் துரதிர்ஷ்டவசமாக, அவர் கான்கிரீட் மீது சிவப்பு தெளிப்புடன் கையெழுத்திட்டார், மற்ற மீட்புக் குழுக்கள் கட்டடத்தைத் தேடாதபடி குறியீடுகளை எழுதுகிறார்.

"மனிதர்களை மீட்பது என்பது மிக அழகான உணர்வு. அதேநேரத்தில் இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்ற நிலை ஏற்படவும் நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். அவரது முகத்தில் சோகத்தின் ரேகைகள் இருப்பதை நான் பார்த்தேன்.

மெர்வ் மற்றும் ஐரேமுடன் இணைந்து மதிய உணவு சாப்பிடுவீர்களா என்று ஹசனிடம் நான் கேட்டபோது புன்னகைத்த அவர், "ஒருநாள் சாப்பிடுவேன் என்று நான் நம்புகிறேன். ஆனால், தற்போது அவர்கள் உயிருடன், பாதுகாப்பான கரங்களில் உள்ளார்கள் என்பதுதான் முக்கியம்," என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-64616717

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 3 நாட்களில் இரு முறை மீட்கப்பட்ட தாயும் பச்சிளம் குழந்தையும் - துரத்தும் துயரம்

  • டேவிட் க்ரிட்டன்
  • பிபிசி நியூஸ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அட்னான்

பட மூலாதாரம்,SAMS

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒரே வாரத்தில் இருமுறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சிரியாவை சேர்ந்த பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் குணமடைந்து வருகின்றனர் என தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஜிண்டய்ரிஸ் நகரில் உள்ள டிமாவின் வீடு நிலநடுக்கத்தில் சேதமடைந்தபோது அவர் ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நிலநடுக்கத்தில் சிறு காயங்களுடன் தப்பித்த டிமா, மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அட்னான் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை ஆப்ரின் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சிரிய அமெரிக்க மருத்துவ அமைப்பின் (சாம்ஸ்) உதவியுடன் பிறந்தான்.

குழந்தையுடன் டிமா தனது வீட்டிற்கு வந்தார். ஆனால் மூன்று நாட்கள் கழித்து அந்த வீடு இடிந்துவிழுந்தது.

 

மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்ட அட்னான், அஃப்ரினில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அழைத்து செல்லப்பட்டான். நீர்ச்சத்து குறைபாடு, மஞ்சள் காமாலையால் அவன் பாதிக்கப்பட்டிருந்தான். டிமாவுக்கு கீழ் மூட்டில் தீவிர காயம் ஏற்பட்டிருந்தது.

குழந்தைகள் நல மருத்துவரான அப்துல்கரிம் ஹுசைன் அல் இப்ராஹிம், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவன் தேறி வருகிறான் என்றும் வாட்சப் மூலம் பிபிசியிடம் தெரிவித்தார்.

கையில் க்ளூகோஸ் ஏற்றப்பட்டு இன்குபேட்டரில் அமைதியாக உறங்கும் அட்னானின் வீடியோவும் வெளியிடப்பட்டது.

டிமா மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்து தனது கணவருடன் ஒரு கூடாரத்தில் உள்ளார், அவருடன் அவர்களின் உறவினர்களின் குழந்தைகள் ஒன்பது பேர் உள்ளனர், அட்னானை அவர் தினமும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகிறார்.

ஜிண்டய்ரிஸில் தங்குவதற்கு இடம் ஏதும் இல்லாததால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீட்டில் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர் டிமாவும் அவரது உறவினர்களும்.

வட மேற்கு சிரியாவில் இருக்கும் ஜிண்டய்ரிஸ், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை எந்த உதவிகளும் கிட்டவில்லை. பல ஆயிரம் மக்கள் எந்த உதவியும் இன்றி தவித்து வருகின்றனர்.

டிமா மற்றும் அவரின் கணவர்

பட மூலாதாரம்,SAMS

 
படக்குறிப்பு,

டிமா மற்றும் அவரின் கணவர்

ஜிண்டய்ரிஸ் பகுதி 12 வருடங்களாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு அதரவான படைகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஜிகாதிகள் மற்றும் போராளிகளின் கோட்டையாக உள்ளது. எனவே நிலநடுக்கத்திற்கு முன்னதாகவும் அங்குள்ள 41 லட்சம் பேர் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மனிதநேய உதவிகளை நம்பித்தான் இருந்தனர்.

அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலால் பாதியளவிலான மருத்துவமனைகளே தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பெரும்பாலும் சிரிய அரசும் ரஷ்யாவும் காரணம் என்று சொல்லப்பட்டது. அல் ஷிஃபாவில் உள்ள மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஷெல் குண்டு தாக்குதலில் அந்த மருத்துவமனையின் பெரும் பகுதி அழிந்துவிட்டது. பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் பலர் கொல்லப்பட்டனர்.

திங்களன்று வெறும் 58 லாரிகளில் மட்டுமே ஐ.நாவின் உதவிப் பொருட்கள் துருக்கியிலிருந்து இட்லிப் மாகாணத்தில் உள்ள பப் அல் ஹாவின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்தது. இந்த ஒரு எல்லையில் மட்டுமே ஐ.நாவுக்கான உதவிகள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திங்களன்று மேலும் இரண்டு எல்லைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஐநா தெரிவித்தது.

அதேபோல துருக்கியில் உள்ள மோசமான சாலைகள் காரணமாகவும் உதவிகள் சென்றடைவது தாமதமானது.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள், மருத்துவ உதவிகள், படுக்கைகள், போர்வைகள் என எதுவும் இல்லை என மருத்துவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

"எல்லா மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன." என்றார் அவர்.

அந்த பகுதியில் 55 மருத்துவ சேவை மையங்கள் நிலநடுக்கத்தால் சேமடைந்துவிட்டன என்றும், 31 மையங்கள் தங்களின் சேவையை நிறுத்தி வைத்துள்ளன என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தண்ணீர், சுத்தம் செய்து கொள்வதற்கான மருந்துகள், உறைவிடம் எனவும் எதுவும் இல்லை என சாம்ஸ் அமைப்பின் நிறுவனர் பசேல் டெமானினி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதி

பட மூலாதாரம்,SAMS

இந்த அமைப்பு இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேரை காப்பாற்றியுள்ளது.

"பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு நாங்கள் சிகிச்சையளிக்க முடியும். ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். போஷாக்கான உணவு, சுத்தமான நீர் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் மிக மோசமாக திட்டமிட்டு உதவிகளை சரியாக கொண்டு சேர்க்க தவறிவிட்டன என பசேல் குற்றம்சாட்டியுள்ளார்.

சாம்ஸ் அமைப்பு, ஒயிட் ஹெல்மட் மற்றும் சிரியா ஃபோரம் ஆகிய உதவி அமைப்புகள் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உதவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் தேவைகள் மிக அதிக அளவில் உள்ளதாகவும், மனிதநேய நெருக்கடியை தடுப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிரியா மற்றும் துருக்கியில் 7.8 அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலப்போ நகருக்கு திங்களன்று வருகை தந்த ஐநா உதவிகளுக்கான தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் அரம்பக் கட்ட பணிகள் முடிவை எட்டவுள்ளதாகவும் அடுத்து உறைவிடம், உணவு, உளவியல் சிகிச்சைகள், குழந்தைகளுக்கான கல்வி போன்ற எதிர்காலத்திற்கான உதவிகள் அவசரமாக தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு உடனடியாக உறைவிடம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுகின்றன.

அதேபோல சிரியா அரசுக்கு எதிரான படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என ஐநா நம்புவதாக அவர் தெரிவித்தார். சிரியா உள்நாட்டு போர் சமயத்திலும்கூட இது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-64641209

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/2/2023 at 10:14, ஏராளன் said:

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் தங்களால் எங்கும் செல்ல முடியவில்லை என, அலெப்போ நகரைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

சிரியா நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFP

எவ்வளவுதான் அழிவுகள் வந்தாலும்....துருக்கி இன்றும் குர்திஷ் குடியிருப்புகள் மீது  போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசிக்கொண்டுதான் இருக்கின்றது.
நேசக்கார நேட்டோ.....பாசக்கார பணக்கார நாடுகள்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா நிலநடுக்கம்: தலை சாய்க்கவும் இடமில்லாமல் தவிக்கும் 4 ஆயிரம் குடும்பங்கள்

  • அகஸ்டினா லேட்டோரெட்
  • பிபிசி உலக சேவை
4 மணி நேரங்களுக்கு முன்னர்
கடந்த வார நிலநடுக்கத்தில் ஜிண்டாய்ரிஸ் நகருக்கு ஏற்பட்ட பாதிப்பின் கொடூரத்தைக் காட்டும் ட்ரோன் புகைப்படம்.
 
படக்குறிப்பு,

கடந்த வார நிலநடுக்கத்தில் ஜிண்டாய்ரிஸ் நகருக்கு ஏற்பட்ட பாதிப்பின் கொடூரத்தைக் காட்டும் ட்ரோன் புகைப்படம்.

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உள்நாட்டுப் போரால் ஏற்கெனவே சீரழிவை சந்தித்துவருகிற சிரியாவின் ஜிண்டாய்ரிஸ் நகரில் 70 சதவீதம் கட்டுமானங்கள் தற்போது நடந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயுள்ளன; சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் தலைசாய்க்கவும் இடமில்லாமல் தவித்து வருகின்றன.

உடல்களை மீட்கும் பணியிலும் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் மீட்பு பணியாளர்கள் காலநேரம் பார்க்காமல் ஈடுபட்டு வருகின்றனர். வடமேற்கு சிரியாவில் உள்ள ஜின்டாய்ரிஸ் நகரில் இடிபாடுகளில் சிக்கியுள்ள உயிர்களை காப்பாற்றுவதற்கான காலம் கடந்துவிட்டது. சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் சேர்த்து சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்த இப்பகுதி, தற்போது எதுவும் இன்றி வெறுமையாக காணப்படுகிறது. ஜின்டாய்ரிஸ் கவுன்சிலின் துணைத் தலைவர் யாசின் அல் நாசர், பிபிசி-யிடம் பேசும்போது நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 800 பேராவது மரணமடைந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

"நகரின் 70 சதவீத பகுதிகள் அழிந்துவிட்டன. இது ஒரு பேரழிவு" என்று அவர் கூறுகிறார்.

4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறங்க இடம் இல்லாமல் தவிக்கின்றன.

 

"ஜிண்டாய்ரிஸ் தான் தற்போது என்னுடைய மிகப்பெரிய எதிரி. ஏனெனில் என்னுடைய குடும்பம் மொத்தத்தையும் நான் இங்கு இழந்துவிட்டேன் " என்று கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கூறினார் அப்துல்லா முகமது அல்- இசா.

"என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 17 பேரை நான் இழந்துவிட்டேன். இது மிகவும் கொடுமையானது. " என்று தெரிவித்த அவர், தன்னுடைய சகோதர்கள் வசித்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இடிந்த கட்டிடம் பிஸ்கட் போல் இருந்தது. அடித்தளம் மற்றும் சுவர்கள் அனைத்தும் பிஸ்கட் துண்டுகள் போல் இருந்தன. அனைத்தும் இடிந்து விழுந்துவிட்டன. இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை அடைய நாங்கள் மூன்று நாட்களுக்கு தோண்ட வேண்டியதாக இருந்தது. அவர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். சரியான நேரத்தில் உதவி வழங்கப்படவில்லை; போதுமான மீட்புக் குழுக்கள் இல்லை," என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் குழுக்கள் தங்களிடம் உள்ளவற்றை வைத்து சிறந்த முறையில் மீட்பு பணியில் ஈடுபட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர் கூறினார். தற்போது, அப்பகுதியில் நிலவும் உறைபனியை தாங்கும் வகையில் தங்குமிடம் ஒன்றை அவர் தேடி வருகிறார்.

"நாம் ஏன் கூடாரத்தில் தங்கக் கூடாது என்று என் மகள் என்னிடம் தொடர்ந்து கேட்கிறாள். ஆனால், யாருமே எங்களுக்கு உதவி வழங்கவில்லை " என்று அவர் தெரிவித்தார்.

மத்திய ஜின்டாய்ரிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரழிவு

சாலையோரத்தில் போர்வைக்குள் இரண்டு குழந்தைகள்.
 
படக்குறிப்பு,

தங்குவதற்கு புகலிடம் கிடைக்காத பலர் குடும்பம் குடும்பமாக உறையும் குளிரில் வெட்ட வெளியில் தூங்குகின்றனர்.

டிரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில், நகரம் முழுவதும் கட்டிடம் இல்லாமல் எங்கும் இடிபாடுகள் மற்றும் கான்கிரீட் குவியல்கள் இருப்பது பதிவாகியுள்ளது.

" ஜின்டாய்ரிஸ் இந்த அளவு பாதிப்பை சந்தித்ததற்கு காரணம், அது துருக்கி எல்லை அருகில் நிலநடுக்க அபாயம் மிகுந்த பகுதியில் அமைந்திருப்பதுதான்," என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள முகமது, பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு பத்தாண்டுக்கும் மேலான உள்நாட்டுப் போரில் இந்த நகரம் ஏற்கனவே பலரது கைகளுக்கு மாறியுள்ளது. குர்திஷ் படைகள் தொடக்கத்தில் தங்களது எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக வடக்கு முழுவதிலும் இருந்து சிரியா ராணுவத்தை வெளியேற்றியது. பின்னர், துருக்கி தனது படைகளை இந்த பகுதிக்கு அனுப்பி, எல்லை அருகேயுள்ள பகுதிகளை வசப்படுத்தியது. ஜின்டாய்ரிஸ் தற்போது துருக்கிய ஆதரவு சிரிய போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அதன் குடியிருப்பாளர்களில் பலர் பல முறை இடம்பெயர்ந்துள்ளனர்.

"யுத்தம் காரணமாக இப்பகுதிக்கு இடம்பெயர்ந்த பலரும், ஒருநாள் நிச்சயம் தங்கள் இல்லங்களுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். அதனால், இங்குள்ள கட்டடங்களை உறுதியுடனும் பாதுகாப்பு அம்சங்களுடனும் அமைக்க அவர்கள் பெரிய அளவில் முயற்சிக்கவில்லை," என்று நாசர் கூறுகிறார். இவர் அந்நகரில் பேரிடர் குழு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஒயிட் ஹெல்மெட்ஸ் என்று அறியப்படும் சிரியன் சிவில் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் சடலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
 
படக்குறிப்பு,

ஒயிட் ஹெல்மெட்ஸ் என்று அறியப்படும் சிரியன் சிவில் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் சடலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பலமான அடித்தளத்துடன் கட்டப்பட்ட ஒருசில கட்டிடங்களால் மட்டுமே நிலநடுக்கத்தை தாங்கி நிலைத்திருக்க முடிந்தது . சமீப காலமாக, சட்ட விரோத கட்டுமானங்களை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதற்கு போதுமானதாக அவை இல்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது, அனைத்தையும் இழந்து வறிய நிலையில் உள்ள மக்கள், சுகாதாரமற்ற சூழல் ஆகிய நெருக்கடிகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.

"கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் வேலைசெய்யவில்லை. அவற்றில் 40-60 சதவீதம் வரை சேதமடைந்துள்ளன. " என்று குறிப்பிட்ட நாசர், நிலநடுக்கத்தால் கிணறுகளும் அழிந்துவிட்டதால், அவற்றையும் சார்ந்து இருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

சண்டையின்போது அலெப்போவிலிருந்து ஜிண்டாய்ரிஸுக்குத் தப்பிச் சென்ற அபு ஈல்ஃப் தற்போது வீதியில் வசிக்கிறார். "நங்கள் வசித்த நான்கு மாடி குடியிருப்பு இடிந்துவிட்டது. அனைத்தும் தற்போது மண்ணோடு மண்ணாகிவிட்டது " என்று கூறிய அவர் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியதும் கட்டடத்தில் இருந்து தனது மனைவி, குழந்தைகளுடன் எப்படி தப்பிக்க முடிந்தது என்பதையும் விவரித்தார்.

ஜிண்டாய்ரிஸ் கவுன்சிலின் துணைத் தலைவர் என்ற முறையில் எல்லா முனையிலும் சிக்கலை எதிர்கொள்கிறார் யாசின் அல் நாசர்.
 
படக்குறிப்பு,

ஜிண்டாய்ரிஸ் கவுன்சிலின் துணைத் தலைவர் என்ற முறையில் எல்லா முனையிலும் சிக்கலை எதிர்கொள்கிறார் யாசின் அல் நாசர்.

"நாங்கள் ஐந்து பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டோம். எனினும், 23 பேர் இறந்தனர், அவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்" என்று தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் சாலைகளில் படுத்து உறங்குவதாகவும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு தங்குமிடம் கண்டுபிடித்து அவர்களை அங்கு தங்க வைத்துவிட்டு தான் தற்போது சாலையில் படுத்து உறங்குவதாகவும் கூறினார்.

ஆரிஃப் அபு முகமது போன்ற உயிர் பிழைத்த சிலர், நிலநடுக்கம் தாங்கள் அனுபவித்த எல்லாவற்றையும் விட மோசமானது என்று கூறுகிறார்கள்.

"மின்சாரம் இல்லை, எங்களுக்கு தண்ணீரோ சரியான உணவோ இல்லை. "வடக்கு சிரியாவில் உள்ள மக்கள் கடினமான காலங்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட இந்த சோகம் எங்கள் நம்பிக்கைகளை எல்லாம் பறித்துவிட்டது " என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-64659441

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்கு பிறகு 17 வயது சிறுமி உயிருடன் மீட்பு

 

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ஆம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன.

40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்கு பிறகு, கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை துருக்கி மீட்புக்குழுவினர் நேற்று உயிருடன் மீட்டனர்.

அவருக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகின்றது. மீட்புக்குழுவினரை சிறுமியின் மாமா கட்டிப்பிடித்து நன்றி கூறியுள்ளார்.

248 hours after earthquake, Turkish teen rescued from rubble - Al-Monitor:  Independent, trusted coverage of the Middle East

மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அலி அக்டோகன் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களின் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருள்ள ஒருவரை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது ஒரு பூனையாக இருந்தாலும் கூட மகிழ்ச்சி அடைவதாக அலி அக்டோகன் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.