Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

6-11.jpg

உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்துள்ள படையெடுப்பானது, இந்த மாத இறுதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சூழலில், உக்ரைனில் சமீப வாரங்களாக ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக எண்ணற்ற அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது. உக்ரைன் தங்களது உறுப்பினர்களில் ஒரு நாடாக ஆவதற்கு முதலில், அந்நாடு ஊழலை ஒழிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டு உள்ளது.

இதன்படி, உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தேசிய பாதுகாப்பு படையின் துணை தளபதியான ருஸ்லான் டிஜூபா பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது. எனினும், பணி நீக்கத்திற்கான காரணங்கள் எதனையும் அந்நாடு வெளியிடவில்லை. அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசும்போது, ஊழலற்ற பாதுகாப்பு அமைச்சகம் அவசியம் என குறிப்பிட்டதுடன், அமைப்புகளை அதுபோன்ற ஊழல் முயற்சிகளுக்கு எதிராக பாதுகாக்கும் செயல் திட்டங்களை கொண்டு வரும்படி பாதுகாப்பு மற்றும் போலீசார் பிரிவுகளிடம் அவர் கேட்டு கொண்டார்.

குற்ற செயல்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமின்றி, பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயம் ஆக்கும் முயற்சிகளும் தொடரும் என ஜெலன்ஸ்கி கூட்டத்தில் பேசும்போது கூறியுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=238063

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

6-11.jpg

உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்துள்ள படையெடுப்பானது, இந்த மாத இறுதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சூழலில், உக்ரைனில் சமீப வாரங்களாக ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக எண்ணற்ற அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது. உக்ரைன் தங்களது உறுப்பினர்களில் ஒரு நாடாக ஆவதற்கு முதலில், அந்நாடு ஊழலை ஒழிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டு உள்ளது.

செலென்ஸ்கியே பெரிய ஊழல்வாதி. இவர் களையெடுக்கிறாராம். :face_savoring_food:

பொதுவாக சொல்லப்போனால் உக்ரேன் இந்தியா , பிரேசிலை விட ஊழல் மிகுந்த நாடு. பல விடயங்களில் ஜேர்மனி பின்னடிப்பதற்கு முக்கிய காரணம் இதுதான். செலென்ஸ்கி ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களும் கொஞ்ச நஞ்சமல்ல. 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

செலென்ஸ்கியே பெரிய ஊழல்வாதி. இவர் களையெடுக்கிறாராம். :face_savoring_food:

பொதுவாக சொல்லப்போனால் உக்ரேன் இந்தியா , பிரேசிலை விட ஊழல் மிகுந்த நாடு. பல விடயங்களில் ஜேர்மனி பின்னடிப்பதற்கு முக்கிய காரணம் இதுதான். செலென்ஸ்கி ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களும் கொஞ்ச நஞ்சமல்ல. 😎

ஊழ‌ல் வாதி என்று தெரிந்தும் தொட‌ர்ந்து முர‌ட்டு முட்டுக் கொடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம்

அமெரிக்கா அள‌வுக்கு யாரும் உக்கிரேனுக்கு உத‌வின‌து கிடையாது..............

அமெரிக்காவின் சொல்லுக்கு இன‌ங்க‌ தான் ஜேர்ம‌னி டாங்கிக‌ளை தாருகிறோம் என்று சொன்ன‌ மாதிரி தெரியுது..................... 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ஊழ‌ல் வாதி என்று தெரிந்தும் தொட‌ர்ந்து முர‌ட்டு முட்டுக் கொடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம்

அமெரிக்கா அள‌வுக்கு யாரும் உக்கிரேனுக்கு உத‌வின‌து கிடையாது..............

அமெரிக்காவின் சொல்லுக்கு இன‌ங்க‌ தான் ஜேர்ம‌னி டாங்கிக‌ளை தாருகிறோம் என்று சொன்ன‌ மாதிரி தெரியுது..................... 

அப்பன்! ஜேர்மனி ஒரு போர் விரும்பி நாடல்ல. கட்டாயத்தின் பேரில் பல செயல்களை செய்கின்றது. ஏனெனில் ஜேர்மனிக்கு அமெரிக்க ஆதரவு அவசியம் தேவை. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் அல்லது அமெரிக்காவின் ஒரு மாகாணம் போலவே ஜேர்மனி இருக்கின்றது.

ஜேர்மனி ரஷ்யாவை நம்பாமலா இரண்டு எரிவாயு குழாய்களை கடலில் இறக்கி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது? வியாபார நோக்கில், அரசியல் நோக்கில் ஜேர்மனி மறுபக்கம் போய்க்கொண்டிருப்பதை அவதானித்த அமெரிக்கா தடலடியாக எரிவாயு குழாய் சமாச்சாரத்தில் கை வைத்தது எல்லாம் தன் நலனுக்காக மட்டுமே.

இந்த உக்ரேன் சண்டை அல்லது ஐரோப்பிய ஆதிகச்சண்டை பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை அமத்தி வைத்திருந்த பெருமை அன்னை அங்கெலா மேர்க்கலையே சாரும்.

நிற்க...

மனிதாபிமானம்.

ஆயுதம் கொடுப்பவனுக்கும் மனிதாபிமானம் இல்லை. ஆயுதம் விற்பவனுக்கும் மனிதாபிமானம் இல்லை. ஆனால் எங்கடை ஜாம்பவன்களுக்கு உக்ரேன் சண்டையில் மட்டும் எங்கிருந்துதான் மனிதபிமானம் வந்ததோ தெரியவில்லை?

அதிலும் எம் இனத்தை நாதியற்றவர்களாக்கி விட்டு அழித்தார்கள். அனால் உக்ரேனுக்கு அப்படியா? எட்டுத்திக்கிலிருந்தும் உதவி செய்கின்றார்கள் அல்லவா?

அப்படியிருந்தும் நாதியற்று அழிந்த முள்ளிவாய்க்கால் அழிவை உக்ரேன் அழிவோடு ஒப்பிட எப்படி மனம் வந்தது?

க்ர்ர்ர் தூ.....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உண்மையை ஏற்றுக்கொள்ள பலருக்கு மனமிருந்தாலும் அதீத சுயநலம் அவர்களது வாயை அடைத்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரகேசரி, தினக்குரல் எல்லாம் எங்க இருந்து இந்த கணக்கெடுப்பு எடுக்கீனம்..✍️.🤭
    • இல்லை. நான் நம்பாமைக்கான காரணம் - என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரையை பார்த்தால் புரியும் - இது மன அளுத்தம் பற்றிய தரவு அடிப்படையில்தான் எழுத பட்டுள்ளது. இலங்கையில் பலரின் மன அளுத்தம் ரெக்கோர்ர்டில் வருவதில்லை. ஆனால் யூகேயில் சும்மா அப்செட்டா இருந்தாலே மைல்ட் டிப்ரெசன் என ரெக்கோர்ர்ட்டில் எழுதி விடுவார்கள். இதுதான் பெரிய காரணம் என நினைக்கிறேன். மற்றும்படி எது மகிழ்சி என்பது வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்றல்லவா? ஆகவே இந்த வகை கணிப்பில் எனக்கு நம்பிக்கை பெரிதாக இல்லை. ஆனால் 5 மணி நேரம் உறங்கும் நாட்டை விட 8 மணி நேரம் உறங்கும் நாட்டில் மக்கள் relaxed ஆக இருப்பார்கள் என்பது சரிதான். நாம் இங்கே இருந்து போய் அந்தரப்படுவோம், அவர்கள் ஆமை வேகத்தில் இருப்பதை பார்க்க சினமும் வரும். ஆனால் இதையே அனுபவித்து வரும் வெள்ளையினத்தவர் உங்கள் நாட்டுக்காரார் very laidback என புழுகுவார்கள். கூடவே சூரிய ஒளியை விட மனதை, உடலை தெம்பூட்டும் அருமருத்து ஏதும் இல்லை என்பது என் கருத்து.
    • நாங்கள் பூமர் அங்கிள்கள் மாரி புறுபுறுக்கிறொமோ எண்டு சில சமயம் யோசிப்பேன். மணவறை செட் எமக்கு எம்மோடு ஒன்றிய ஒன்று, ஆனால் நிச்சயமாக 1920 இல் அந்த வழக்கம் இருந்திராது. அதே போலத்தான் தலைப்பாகை செட்டும். ஏதோ ஹிந்தி காரன் போல அல்லவா இருக்கிறது? முன்பு சால்வையை மடித்து கட்டி இருப்பார்கள். கேக் வெட்டுவது, ஹோம் கமிங், வீடியோ எடுப்பது, இவை எல்லாமுமே எமக்கு கொஞ்சகாலம் முன் போய் பர்த்தால் இருந்திராது. மாறிக்கொண்டே இருப்பதுதானே கலாச்சாரம். புறுபுறுக்கமட்டுமே முடியும்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.