Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் விசயத்தில் மீண்டும் சீமானின் சரியான நிலைப்பாடு

Edited by Nathamuni

  • Replies 185
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரபாகரன் விசயத்தில் மீண்டும் சீமானின் சரியான நிலைப்பாடு

ஆம் மூத்த‌வ‌ரே
அண்ண‌ன் சீமான் எல்லாத்தையும் ச‌ரியா புரிந்து கொண்டு சொல்லி இருக்கிறார்..................நான் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌து போல் மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிக்க‌ வேண்டாம் என்று அதையே தான் அண்ண‌ன் சீமானும் சொல்லி இருக்கிறார்..............🙏

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'SHORT NEWS /ShortnewsTV EHIND 5000S மக்கள் M மල්රර லமை அது போன மாசம், இது இந்த மாசம்! வடிவேல் பாணியில் பழ. நெடுமாறன் பல்டி பிரபாகரனின் முக்கிய தளபதிகள் பேசியதை வைத்து தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் கூறினேன். என்னுடன் பிரபாகரன் தொடர்பில் இல்லை. நெடுமாறன் பல்டி www.shortnews.lk/ f ShortnewsTV 19.02.2023'

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'SHORT NEWS /ShortnewsTV EHIND 5000S மக்கள் M மල්රර லமை அது போன மாசம், இது இந்த மாசம்! வடிவேல் பாணியில் பழ. நெடுமாறன் பல்டி பிரபாகரனின் முக்கிய தளபதிகள் பேசியதை வைத்து தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் கூறினேன். என்னுடன் பிரபாகரன் தொடர்பில் இல்லை. நெடுமாறன் பல்டி www.shortnews.lk/ f ShortnewsTV 19.02.2023'

முத‌ல் த‌லைவ‌ரின் குடும‌த்தின‌ர் த‌ன்னுட‌ன் பேசினார்க‌ள்
இப்போது த‌ள‌ப‌திக‌ள்

அடுத்த‌ அறிக்கையில் சிங்க‌ள‌ ராணுவ‌த்தால் விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ள் சொல்லித் தான் தெரியும்

இப்ப‌ தெரியுதா ஏன் என் போன்ற‌வ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்திலே இவ‌ரின் அறிக்கையை எதிர்த்தோம் என்று...............ம‌ண்ணோடு ம‌ண்ணா போன‌ மாபெரும் மாவீர‌னை கொச்சைப் ப‌டுத்த‌ வேண்டாம் என்ப‌த‌ற்காக‌................

இப்ப‌டி அறிக்கை விட்டு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா சாதிச்ச‌து என்ன‌................

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

இப்ப‌டி அறிக்கை விட்டு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா சாதிச்ச‌து என்ன‌................

என்ன இப்படி கேட்டுடீங்க பையன். எத்தனை யூரியூப் சனல்களின் views அதிகரித்து எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் தெரியுமா? அது பெரிய சாதனை தானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, island said:

என்ன இப்படி கேட்டுடீங்க பையன். எத்தனை யூரியூப் சனல்களின் views அதிகரித்து எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் தெரியுமா? அது பெரிய சாதனை தானே. 😂

அண்ணா யூடுப் நிறுவ‌ன‌ம் கொடுக்கும் சில்ல‌ரை காசுக்காக‌ 

ஒரு இன‌த்தின் த‌லைவ‌ரின் தியாக‌த்தை இப்ப‌டியா சித்த‌ரிப்ப‌து முடிய‌ல‌ 😢

ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவின் அறிக்கையால் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து ஈழ‌ ம‌ண்ணில் வ‌சிக்கும் எம் உற‌வுக‌ள் தான்..................இதை த‌ட்டி கேட்க்க‌ வேண்டிய‌வையே ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முர‌ட்டு முட்டு கொடுத்த‌வை😡...............

சில‌ர் வாத்து ஆயிர‌ம் முட்டை போட்ட‌ க‌தை

த‌வ‌ளை க‌தை அது இது என்று தேவை இல்லா ந‌க்க‌ல் நையாண்டி இந்த‌ திரியில் .............இந்த‌ ந‌க்க‌லை போல் யாழில் ப‌ல‌நூறு ந‌க்க‌ல் நையாண்டியை பார்த்து க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌ன்..................

முன்னுக்கு பின் மாறி மாறி ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா அறிக்கை விடும் போது தெரிந்து விட்ட‌து ஜ‌யாவும் க‌ற்ப‌னை உல‌கில் வாழுகிறார் நிஜ‌ உல‌கில் இல்லை என்று................

இந்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு அவ‌தூற‌ ப‌ர‌ப்பி அதுக‌ள் கூட‌ இன்னும் 10அல்ல‌து 20வ‌ருட‌ம் க‌ழித்தோ த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் அகிம்சை வ‌ழியில் கூட‌ போராடாதுக‌ள் கார‌ண‌ம் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்ர‌ புர‌ளிய‌ கில‌ப்பி விட்டாச்சு தானே த‌லைவ‌ரே பார்த்து கொள்ளுவார் என்று இருந்து விடுங்க‌ள்.......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் பிரபாகரன் வருகிறார்...!சிங்கள மக்கள் மீது நிகழ்த்தபட இருக்கும் பேரழிவின் பின்னணி சக்திகள் .

NESAKKARAM MEDIA

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவிப்பிற்கான பின்னணி என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்கிளப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.

  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்கும் புதிய குண்டு

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் பற்றிய நெடுமாறனின் கூற்று நிதி திரட்டலுக்கானது" - இலங்கை எம்.பி சித்தார்த்தன்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கை, விடுதலை புலிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் வெளியிட்ட தகவல், நிதி சேகரிப்புக்கான ஓர் அறிவிப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த நிதி சேகரிக்கும் நடவடிக்கைக்கான கூட்டம் சுவிட்ஸர்லாந்து நாட்டிலேயே முதன் முதலில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகவும், அவருடைய வாழ்வாதாரத்துக்காக நிதி சேகரிக்கப் போவதாகவும் - அந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சித்தார்த்தன் எம்பி தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிட்ஸர்லாந்திலுள்ள ஒருவர், பிரபாகரனின் மகளைப் பார்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும், அந்த நபரின் மகளும் பிரபாகரனின் மகளும் ஒன்றாகப் படித்தவர்கள் எனவும் சித்தார்த்தன் கூறினார்.

இதனையடுத்து அந்த நபர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு பிரபாகரனின் மகள் என ஒரு பெண் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டார்.

பிரபாகரன் மகள் என்றவரிடம் தொடுக்கப்பட்ட கேள்வி

அந்தப் பெண்ணிடம் சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்றவர், 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுத் தந்தவர் யார்' என கேட்டுள்ளார்.

”பிரபாகரனின் மகளுக்கு யார் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார் என்று சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்ற நபருக்குத் தெரியும். புலிகளின் பெண்கள் படையொன்றிலுள்ள ஒருவர்தான் பிரபாகரனின் மகளுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்”.

”அந்தக் கேள்விக்கு பிரபாகரனின் மகள் எனக்கூறப்பட்ட பெண், தவறான ஒரு பதிலை வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த நபர், இந்த விடயத்தை உடனடியாக சுவிட்ஸர்லாந்தில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தி, அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையை முறியடித்தார்". எனவும் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.

இலங்கை, விடுதலை புலிகள்

கேவலமான நடவடிக்கை

தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், தான் அறிந்த வகையிலும் பிரபாகரன் உயிரோடு உள்ளதாக அறிவிக்கப்பட்டமையானது, நிதி சேகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்றவர்களும் தன்னிடம் இதையே சொன்னதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

"இது கேவலமானதும், மலினப்படுத்துகின்றதுமான ஒரு செயல்பாடாகும்" எனவும் அவர் மேலும் கூறினார்.

"தம்பி பிரபாகரன் மீது - நான் மதிப்பு வைத்துள்ளேன். காரணம், அவர் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அர்ப்பணித்தவர் என்பதனாலாகும். அந்த அர்ப்பணிப்புகளை மலினப்படுத்தி, நாலு பேர் சீவியம் நடத்துவதற்காக பணம் சேர்க்கும் வேலையாகவே இது உள்ளது" எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

"பழ. நெடுமாறன் எங்களுடனும் நெருக்கமாக இருந்தவர். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் கூறியதை, பின்னர் - 'சொன்னார்கள், சொன்னேன்' என, அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதாவது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று, யாரோ சொல்லச் சொன்னதை அவர் சொல்லியிருக்கிறார்” என்கிறார் சித்தார்த்தன்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது; புலிகள் இயக்கம் செயற்பாட்டில் இருந்த காலத்தில், அவர்களின் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தராக இருந்த ஒருவரும், சுவிஸர்லாந்தில் நடத்தப்பட்ட நிதி சேகரிப்புக்கான கூட்டத்தில் பங்கேற்றிருந்தாக கூறினார்.

பிரபாகரன் ஒளிந்திருக்கும் ஆள் இல்லை

"யுத்தம் முடிந்து 13 வருடங்களாகி விட்டன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் இவ்வளவு காலம் அவர் ஒளிந்திருக்கும் ஒருவர் அல்ல".

"சரி, பிழைகளுக்கு அப்பால் தனிநாட்டுப் போராட்டத்துக்கு அவர் விஸ்வாசமாக இருந்தார். எங்கள் எல்லோரையும் விடவும் அவர் ஆகக்கூடியளவில் அதற்கு விஸ்வாசமாக இருந்தார். அது கேள்விக்கு அப்பாற்பட்டது".

"இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாங்கள் ஜனநாயக அரசியலுக்குத் திரும்பினோம். ஆனால், தனி நாட்டுக்காக கடைசி வரை பிரபாகரன் போராடினார்” என சித்தார்த்தன் கூறினார்.

தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை போராட்டத்துக்காக பிரபாகரன் அர்ப்பணித்தமைச் சுட்டிக்காட்டிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், "தனது குடும்பத்தவர்களை வெளிநாட்டில் வைத்திருப்பதற்கான சந்தர்ப்பம் பிரபாகரனுக்கு இருந்தது. அவர்கள் முன்பு டென்மார்கில் இருந்தார்கள். ஆனால், அவர்களை பிரபாகரன் பின்னர் தன்னிடம் அழைத்துக் கொண்டார்" என்றார்.

இவ்வாறான ஒரு மனிதர் இவ்வளவு காலமும் ஒளிந்து கொண்டு இருக்க மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்களுடைய உடல்களை கண்டு, அவற்றினை ஏற்றுக் கொண்டவர்கள், பிரபாகரனின் உடலை - அவருடையதுதான் என ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என கேள்வியெழுப்பும் அவர், "பிரபாகரனின் மரணத்தை ஏன் பொய் எனக் கூறுகின்றனர்?" எனவும் வினவினார்.

பிரபாகரனின் உடலைப் பார்த்த பலர், அது அவரின் உடல் என கூறியுள்ளனர் எனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

ஆயுத போராட்டத்தை இனி இந்தியா ஆதரிக்காது

இலங்கை, விடுதலை புலிகள்
 
படக்குறிப்பு,

தர்மலிங்கம் சித்தார்த்தன்

மறுபுறமாக, பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வைத்துக் கொண்டாலும், அவரால் பழையபடி புலிகள் இயக்கத்தை மீளக் கட்டமைக்க முடியாது என சித்தார்த்தன் கூறுகின்றார். "அவருடைய வயது அதற்கு முக்கியமான தடையாக இருக்கும். வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை, அங்குள்ள இளைஞர்களின் மனநிலை, ராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரின் கட்டுப்பாடு போன்றவற்றைத் தாண்டி, அங்கு ஒரு போராட்ட இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது" என்கிறார்.

இவற்றுக்கெல்லாம் அப்பால், இந்தியாவின் பின்புலம் இருந்தமையினால்தான் தமிழர் போராட்ட இயக்கங்களை இலங்கையில் கட்டியெழுப்ப முடிந்தது என்று குறிப்பிட்ட அவர், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வித்தியாசமாக உள்ளது என்கிறார். "இனி தமிழர் தரப்பிலிருந்து ஆயுதப் போராட்டம் நடப்பதை ஆதரிப்பதற்கான சமிக்ஞைகளை இந்தியா காட்டாது என நான் நம்புகிறேன்" எனவும் தெரிவித்தார்.

"இந்தியா தற்போது தனது பலத்தை பொருளாதார ரீதியில்தான் காட்ட விரும்புகிறது. தமிழ் நாட்டிலுள்ளவர்களில் குறைந்தளவானவர்களே ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

பெரும்பான்மையானோர் மனதளவில் முழுமையாக மாற்றமடைந்துள்ளார்கள். அங்கு - மேல் நடுத்தர வர்க்கத்தினர் (Upper middle class) அதிகளவில் உள்ளனர். பொதுவாகவே இந்த வர்க்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவதுமில்லை, அக்கறையும் காட்டுவதில்லை" என, தனது கருத்துக்கான நியாயங்களை அவர் முன்வைத்தார்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் - தமிழ் நாட்டு மக்களிடம் ஓர் அனுதாப உணர்வு உள்ளதாக கூறும் சித்தார்த்தன், அவர்களில் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்கிறார். "இலங்கைத் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிட்ட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆயுதப் போராட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள்". என்றார்.

இனப் பிரச்சினை விவகாரத்தில் - தமிழர்களுக்கான உடனடித் தீர்வாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், "13ஆவது திருத்தமும், மாகாண சபை முறைமையும்தான் தமிழர்களுக்கான தீர்வு என்று நான் கூறவில்லை. இருந்தபோதும், தமிழர்களுக்கு ஓரளவு தீர்வை வழங்கும் வகையில் - அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயமாக 13ஆவது திருத்தமே உள்ளது" என்றார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கே சிங்கள அரசியல்வாதிகளிடம் இவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கும் நிலையில், 70 வருடங்களாக தமிழர்கள் கோரி வரும் - சமஷ்டி அமைப்பை வென்றெடுப்பது எவ்வளவு கடினமான விடயம் என - தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"அதற்காக அந்தக் கோரிக்கையை நாம் கைவிட மாட்டோம்" என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்.

https://www.bbc.com/tamil/articles/c2572d80153o

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் ஆதாரங்களுடன் வருவேன் – பழ.நெடுமாறன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்திச்சேவை இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளது.< எனினும் முன்னதாக இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

https://thinakkural.lk/article/243354

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.