Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு!

மட்டக்களப்பு ஶ்ரீ சுமங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரர் நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் அவரின் அறைக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-(3)

 

http://www.samakalam.com/அம்பிட்டியே-சுமனரட்ன-தேர/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, கிருபன் said:

அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு!

மட்டக்களப்பு ஶ்ரீ சுமங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரர் நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் அவரின் அறைக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-(3)

 

http://www.samakalam.com/அம்பிட்டியே-சுமனரட்ன-தேர/

 

நாதம், இவர் தானா அவர்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் @Nathamuniசொல்லும் தூ. பிக்கு இவர்தான்.

பவித்திரா வன்னியாராச்சி பயன்படுத்தும் பலவித தந்திரங்கள், உத்திகள் பற்றி முன்னர் ஒரு முறை பிரஸ்தாபித்திருந்தார்🤣

2 minutes ago, புங்கையூரன் said:

நாதம், இவர் தானா அவர்?

 

பிகு

தமிழருக்கு பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் பிக்குமாரின் நிலை வடக்குகிழக்கில் இதுதான் என்பதை சிங்கள மக்களுக்கு விளக்கும் விழிப்புணர்வு நாடகம் இது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

😲

தாரோ, எங்கண்ட தூசண பிக்கரை சுட பார்த்துடாங்கள்.

சரியான டென்ஷனா போட்டுது...😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு கிழக்கிலே பிக்குகளுக்கு பாதுகாப்பில்லை ஆனா ஒவ்வொருநாளும் அங்கே விகாரைகள் முளைக்குது, ராஜயபோக வாழ்வும் வாழ்கிறார்கள் அது எப்படி?

17 minutes ago, Nathamuni said:

சரியான டென்ஷனா போட்டுது.

ரென்சன் வேண்டாம், அவருக்கு ஒரு பாதிப்புமில்லை நாளைக்கே அடுத்த எரியூட்டலுக்கு புறப்படப்போறார் ஆள்! மின்சார ஊழியரை,  கிறிஸ்தவ மதபோதகரை தாக்கியதும், எங்கேயோ உயர ஏறிநின்று வெறியாட்டம் போட்டதும் குடிகாரர் செய்யிற வேலையளல்லோ. ஒரு மதபோதகர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும், மதுவெறியாட்டம் ஆடுவதுபோலவும் நடந்தால் எப்படி மரியாததை கொடுக்கத்தோன்றும்?

அது சரி ... ஞானசார தேரருக்கு என்ன நடந்தது? ஆளை காணேல்ல, அவரும் சேர்ந்தால் இன்னும் நகைச்சுவையாக இருக்கும்.

Posted

சுட்டும் சாகவில்லை. ம்ம் நன்றாக நடாத்துகிறார்கள் நாடகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, satan said:

அது சரி ... ஞானசார தேரருக்கு என்ன நடந்தது? ஆளை காணேல்ல, அவரும் சேர்ந்தால் இன்னும் நகைச்சுவையாக இருக்கும்.

எல்லா கழுசடை பிக்குமாரும், அரசியலமைப்பு சட்டத்தினை எரிக்க கிளம்பி வந்தா, நம்ம கவுரம் என்னவாவது என்று இந்த பெரும் கழுசறை போகேல்ல. 

அதோட, அவர் மேல் முன்னமும் கேஸ் இருக்கிறது. உள்ளே போய், மைத்திரி மன்னிப்பில் வெளிய வந்தவர். அதாலை கொஞ்சம் விலத்தி இருக்கிறார்.

நம்ம மட்டக்கிளப்பு தூசண பிக்கர், அடுத்த பெரும் கழுசடை. ஆளை காமெடியா பார்ப்பதால், கோபம் வருவதில்லை.

கரண்ட் காசு கட் டவில்லை என்று கட் பண்ண வந்த மின்சாரத்துறை அலுவர்களுக்கு பேச்சும், அடியும். மின்சாரத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியை, ஜனாதிபதி மகிந்தவுடன் தொடுத்து, கொஞ்சம் வில்லங்கமா கதைச்சும் உயிரோட இருக்கிறார் எண்டால்.... இவருக்கு வெடி விழுந்திருந்தால், மகிந்தா மனிசி சிராணி, சந்தேகப்படுவா எண்டதால் தான் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் கேட்க வேண்டி இருக்கே என்று பொம்பிளை போலீஸ் அக்கே நிலத்தை பார்த்துக்கொண்டு நிக்கிறா.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞானசார தேரர் மஹிந்த கொம்பனியை சேர்ந்தவர், நிலைமையை அவதானிச்சுக்கொண்டிருப்பார், மோசமானால் களமிறக்கப்படுவார்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கைது!

Published By: DIGITAL DESK 5

15 FEB, 2023 | 11:00 AM
image

மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை,  13ஆம் திகதி  இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.  

 இந்த துப்பாக்கிச் சூட்டில்  தேரருக்கு  எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.  

அம்பிட்டிய சுமண தேரர்  தனது அறையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

 

https://www.virakesari.lk/article/148240

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.