Jump to content

பிபிசி-க்கு எங்கிருந்து பணம் வருகிறது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி-க்கு எங்கிருந்து பணம் வருகிறது?

பிபிசி

பட மூலாதாரம்,SOPA IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சில நாட்களாக பிபிசியின் நிதி ஆதாரங்கள் பேசுபொருளாக இருந்து வருவதுடன், ஊடகங்களில் பல தவறான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

பல வகையான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிபிசியின் பணிகள் மற்றும் நிதியாதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கின்றன.

உங்கள் வசதிக்காக, பிபிசியின் கட்டமைப்பு மற்றும் நிதியாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்களே தொகுத்து வழங்குகிறோம்.

பிபிசியின் தோற்றம்

பிபிசி 18 அக்டோபர் 1922 இல் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில், மார்கோனி உட்பட சிறந்த வயர்லெஸ் தயாரிப்பாளர்களால் இது உருவாக்கப்பட்டது.

அதன் உருவாக்கத்தின் போது, அதன் பெயர் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங்க் கம்பெனி என்பதாகும்.

பிபிசியின் வழக்கமான ஒளிபரப்பு 1922 நவம்பர் 14 அன்று மார்கோனியின் லண்டன் ஸ்டுடியோவில் இருந்து தொடங்கியது.

33 வயதான ஸ்காட்டிஷ் பொறியியலாளர் ஜான் ரீத் பிபிசியின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.

இன்றைய பிபிசி அதாவது பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் 1927 ஆம் ஆண்டு அரச சாசனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது, அதாவது பிரிட்டிஷ் அரசு அல்ல, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ஆணையின் படி இது உருவானது. இன்றும் அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது.

பிபிசி பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய இடத்தில் இருந்தாலும், அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது முற்றிலும் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். தன் சுயாட்சியை உறுதிப்படுத்த மிகவும் கடுமையான விதிகள் மற்றும் தரநிலைகள் கொண்ட நிறுவனமாகும்.

சர் ஜான் ரீத் பிபிசியின் முதல் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

சார்ட்டர் எனப்படும் அரச குடும்ப சாசனம் பிபிசியின் நோக்கம், அதன் உரிமைகள் மற்றும் அதன் பொறுப்புகளை விவரித்தது. இந்நிறுவனத்தின் கொள்கை விளக்கமும் சாசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது இயக்குநர் ஜெனரல் மற்றும் மூத்த ஊழியர்களின் வேலை.

பிபிசி

பட மூலாதாரம்,SOPA IMAGES

மிகவும் பிரபலமான சர்வதேச ஒளிபரப்பு நிறுவனம்

பிபிசி உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மிகப்பெரிய பொது சேவை சர்வதேச ஒளிபரப்பு நிறுவனமாகும்.

பிபிசியின் நோக்கம், பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற, பிரத்தியேகமான உலகளாவிய நிகழ்வுகளைக் கொண்டு சேர்ப்பதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்திப் பொழுதுபோக்குத் தளமாகவும் செயல்படுவதாகும்.

உலகம் முழுவதும், டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிபிசி செயல்பட்டு வருகிறது. இவற்றில், பிரிட்டனில் அதிகம் பார்க்கப்பட்ட சேனல் 'பிபிசி ஒன்' ஆகும், இது ஒரு தேசிய ஒளிபரப்பு ஆகும்.

இங்கிலாந்தைத் தவிர வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளிலும் பிபிசி தொலைக்காட்சி சேனல்களை நடத்துகிறது. இது தவிர, பிரிட்டனில் பிபிசியின் பல ரேடியோ நெட்வொர்க்குகள் உள்ளன.

பிபிசி மிகவும் சிறிய குழந்தைகளுக்கு சிபிபிஸ், சற்று மூத்த சிறார்களுக்கு சிபிபிசி மற்றும் இளம் வயதினருக்காக சேனல் 3 ஐயும் நடத்துகிறது.

இங்கிலாந்தில் உள்ள அனைத்து பிபிசி ஒளிபரப்புகளும் (ரேடியோ, டிவி, டிஜிட்டல்) முற்றிலும் விளம்பரங்கள் இல்லாதவை. ஏனெனில் அங்கு வசிக்கும் மக்கள் பிபிசியை இயக்க உரிமக் கட்டணம் செலுத்துகிறார்கள்.

இங்கிலாந்துக்கு வெளியே செயல்படும் அமைப்புகளில் பெறப்படும் விளம்பர வருவாய், பிபிசியில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த, நியாயமான மற்றும் சுதந்திரமான செய்திகளை வழங்குகிறது.

அனைத்து விளம்பரங்களும் மிகவும் தெளிவான வழிகாட்டுதலின் கீழ் தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விளம்பரங்களுக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கவில்லை.

பிபிசி

ராயல் சார்ட்டர் என்பது என்ன?

பிபிசி உலக சேவை தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் தளங்களில் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகிறது.

ராயல் சார்ட்டர் விதிகளின்படி, பிபிசி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பத் தேவையான உரிமக் கட்டணப் பணத்தைப் பெறுகிறது.

ராயல் சார்ட்டர் விதிகளின்படி பிபிசி ஒவ்வொரு ஆண்டும் அதன் நிதி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

தற்போதைய சார்ட்டர், ஜனவரி 1, 2017 அன்று தொடங்கி, டிசம்பர் 31, 2027 அன்று காலாவதியாகிறது.

ஆனால் அரசு இடைப்பட்ட காலத்திலும் சாசனத்தை மறுஆய்வு செய்கிறது.

உரிமக் கட்டணம் செலுத்தும் அனைவராலும் பிபிசியின் செயல்பாடு உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

தற்போது, தொலைக்காட்சி வைத்திருக்கும் அனைத்து வீடுகளும் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும், உரிமக் கட்டணம் செலுத்தாதது குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதை மாற்ற வேண்டும் என்று இப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிபிசி உலக சேவைக்கு ஒரு வாரியம் உள்ளது. அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளுக்கான செயல்பாட்டுக்கு இது பொறுப்பாகிறது.

பிபிசி உலக சேவை வாரியம் குளோபல் நியூஸ் டைரக்ஷன் குழுவிற்கு அறிக்கை அளிக்கிறது.

பிபிசி

பட மூலாதாரம்,PETER MACDIARMID

பிபிசி உலக சேவையின் தொடக்கம்

1932 டிசம்பர் 19 அன்று பிபிசி தனது எம்பயர் சேவையை (அந்தக் காலத்தில் உலக சேவை, எம்பயர் சர்வீஸ் என்று அழைக்கப்பட்டது) தொடங்கியது. அந்த நேரத்தில், இந்த சேவைக்குப் புதிய சிற்றலைத் தொழில்நுட்பத்தின் உதவியால் தொலைதூர ஒளிபரப்பு சாத்தியமானது.

இரண்டாம் உலகப் போரின் போது எம்பயர் சேவை மிகவும் பரவலாகியது. அப்போது இது ஓவர்சீஸ் சேவை என்று பெயர் மாற்றப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், இந்த சேவை 40 மொழிகள் என்ற அளவில் விரிவடைந்தது.

1965 இல், அதன் பெயர் பிபிசி உலக சேவை என மாற்றப்பட்டது.

பனிப்போர் காலம் பிபிசி உலக சேவைக்குச் சவாலான காலமாக இருந்தது. பல நாடுகளில் சேவைகள் தடை செய்யப்பட்டன. பல நாடுகளில் பிபிசி பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டனர்.

இதில் அதிகம் பேசப்பட்டவர் பிபிசியின் பல்கேரிய நிருபர் ஜார்ஜி மார்கோவ், 1978ல் லண்டனில் விஷம் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

பனிப்போரின் முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பல ஐரோப்பிய மொழிகளுக்கான சேவைகளை நிறுத்த வேண்டியிருந்தது. மேலும், பிபிசி உலக சேவை அதன் முன்னுரிமைகளை மாற்றியமைத்தது.

பிபிசி

பட மூலாதாரம்,JEFF OVERS

அதன்படி, 2008-ம் ஆண்டு அரபு மொழியிலும், 2009-ல் ஃபார்ஸி டிவியிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது.

பிபிசி உலக சேவைத் தொலைக்காட்சியின் தொடக்கம்

இதற்கிடையில், 1991 இல் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் தனது சொந்த தொலைக்காட்சி செய்தி சேனலையும் தொடங்கியது. இது ஐரோப்பாவில் உருவானது, ஆனால் பின்னர் அது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விரிவடைந்தது.

பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் டிவி நியூஸ் பிபிசியின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதற்கான பணம், சந்தாக்கள் மற்றும் விளம்பரங்களில் இருந்து வருகிறது.

வேர்ல்ட் சர்வீஸ் டெலிவிஷன் நியூஸ் முதலில் பிபிசி வேர்ல்ட் என்று பெயரிடப்பட்டது, பின்னர் 1998 இல் பிபிசி வேர்ல்ட் நியூஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.

பிபிசி வேர்ல்ட் நியூஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது. வாரந்தோறும் 76 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

லண்டனில் உள்ள புஷ் ஹவுஸ் 1941 ஆம் ஆண்டு முதல் பிபிசி உலக சேவையின் தலைமையகமாக இருந்தது, ஆனால் 2012 இல் உலக சேவை, புஷ் ஹவுஸை காலி செய்து, பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு மாறியது, அங்கு மற்ற பிபிசி பத்திரிகையாளர்களும் பணியாற்றினர்.

பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் ஒரு சர்வதேச மல்டிமீடியா ஒளிபரப்பாளர். இது வானொலி, டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில், பல மொழிகளிலும் பிராந்திய சேவைகளிலும் கிடைக்கிறது.

பிபிசி எவ்வளவு மக்களைச் சென்றடைந்துள்ளது?

பிபிசி

பட மூலாதாரம்,SIMON MAIN

அதன் பார்வையாளர்கள் மற்றும் நேயர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பரவியுள்ளனர்.

பிபிசி உலக சேவையின் வாராந்தரப் பார்வையாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

உலக சேவையின் மற்றொரு பகுதியான BBC Learning English இன் நோக்கம் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதாகும். இது, தன் பார்வையாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக இலவச ஆடியோ, வீடியோ மற்றும் உரைப் பொருட்களையும் வழங்குகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் பிபிசி உலக சேவை 1940 களுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.

பிபிசி உலக சேவையானது இப்போது உலகின் பல பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளது. இது இப்போது கெய்ரோ, சியோல், பெல்கிரேட் மற்றும் பாங்காக்கில் சேவைகளைக் கொண்டுள்ளது.

இங்கிலாந்துக்கு வெளியே பிபிசி உலக சேவையின் மிகப்பெரிய செயல்பாடுகள் டெல்லி மற்றும் நைரோபியில் உள்ளன.

பிபிசி உலக சேவையின் டிஜிட்டல் ரீச் – 14.8 கோடி (வாரத்திற்கு)

பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் தொலைக்காட்சி ரீச் – 13 கோடி (வாரத்திற்கு)

பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் ரேடியோ ரீச் – 15.9 கோடி (வாரத்திற்கு)

பிபிசிக்கு நிதியுதவியும் உரிமக் கட்டணமும்

பிபிசி

பட மூலாதாரம்,PA MEDIA

பிபிசி உலக சேவைக்கு இங்கிலாந்தின் உரிமக் கட்டணத்தின் மூலம் நிதியளிக்கப்படுகிறது. இதனுடன், 'வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்' (FCDO) யிலிருந்தும் நிதி பெறப்படுகிறது.

பிரிட்டனில் டிவி பார்க்கும் ஒவ்வொரு குடும்பமும் டிவி உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, நிலையான வருடாந்திர உரிமக் கட்டணம் 159 பவுண்டுகள் அதாவது தோராயமாக 15 ஆயிரம் ரூபாய்.

முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் பிபிசி உலக சேவைக்குப் பாராளுமன்றம் மூலம் மானியங்களை வழங்கியது.

வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் (FCO) பாராளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட உதவிகளை வழங்கியது.

2014-15 ஆம் ஆண்டு முதல், பிபிசி உலக சேவை உரிமக் கட்டணத்தில் இருந்து மட்டுமே நிதியளிக்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு இங்கிலாந்து அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உரிமக் கட்டண உயர்வை முடக்கியது, அதாவது, அதை உயர்த்துவதைத் தடைசெய்தது.

கடந்த ஆண்டு மதிப்பாய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளில் பிபிசி உலக சேவைக்கு 283 மில்லியன் பவுண்டுகளை இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்தது. இது ஒவ்வொரு ஆண்டும் 94.4 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும் இருக்கிறது.

பிபிசி

பிபிசியின் வர்த்தக நிறுவனங்கள்

உரிமக் கட்டணத்தைத் தவிர, பிபிசி அதன் மூன்று வணிக நிறுவனங்களிடமிருந்தும் வருவாய் ஈட்டுகிறது. இதில் பிபிசி ஸ்டுடியோஸ் மற்றும் பிபிசி ஸ்டுடியோவொர்க்ஸ் ஆகியவை அடங்கும்.

வணிக நிறுவனங்களின் வருமானத்தைப் புதிய திட்டங்கள் மற்றும் உள்ளடக்கத்தில் பிபிசி முதலீடு செய்கிறது.

பிபிசி வேர்ல்ட் நியூஸ் என்பது பிபிசியின் வணிகச் செய்தி மற்றும் தகவல் தொலைக்காட்சி சேனலாகும். இந்த சேனல் உலகின் பல நாடுகளில் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படுகிறது.

பிபிசி உலகச் செய்திகளை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்க முடியும். செய்தி, வணிகம், விளையாட்டு தவிர, இந்த சேனல் நடப்பு விவகாரங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய ஆவணப்படங்களையும் ஒளிபரப்புகிறது.

BBC.com என்பது பிபிசியின் வணிகச் செய்தி இணையதளமாகும். இந்த இணையதளம் சர்வதேச பார்வையாளர்களுக்காகச் செய்திகளையும் தொகுப்புகளையும் வழங்குகிறது.

https://www.bbc.com/tamil/articles/cn02kpymdx8o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில ரிவி பார்க்க லைசண்ஸ் கட்டணம் என்று UK யில்வரி வாங்கும் ஒரே நிறுவனம் BBC. 

விரைவில் ஆப்பு என்கிறார்கள்!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

உலகத்தில ரிவி பார்க்க லைசண்ஸ் கட்டணம் என்று UK யில்வரி வாங்கும் ஒரே நிறுவனம் BBC. 

விரைவில் ஆப்பு என்கிறார்கள்!

இணையத்தில் உள்ள netபிலிக்ஸ்  தான் நான் பார்ப்பது உண்டு மற்றபடி கேம் தான் விளையாடுவது 2௦12லிலே டிவி வரி வசூலிக்க வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்து இதுவரை வரி கட்டுவதில்லை டிவி வரி சம்பந்தமாக எந்த லெட்டரும் வருவதில்லை.

எச்சரிக்கை iPlayer சிமார்ட் டிவிகளில் நான் bbc பார்ப்பது இல்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது 1௦௦௦பவுன் தண்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

ரிவி வரி கட்டுவதில்லையா? 

கிரடிட் ரெக்கோட்டை கவனியுங்கள். பதிந்து விடுவார்கள். ரிவி இல்லை என்றால் கூட, கைபேசியில் கம்பூட்டரில் பார்த்தாலும் கட்டு வரி என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

ரிவி வரி கட்டுவதில்லையா? 

கிரடிட் ரெக்கோட்டை கவனியுங்கள். பதிந்து விடுவார்கள். ரிவி இல்லை என்றால் கூட, கைபேசியில் கம்பூட்டரில் பார்த்தாலும் கட்டு வரி என்பார்கள்.

நெட்பிலிக்ஸ் பார்பதுக்கும் கேம் விளையாட தான் டிவி என்று காட்டினால் வரி கட்ட தேவையில்லை அதே போல் வெள்ளை கருப்பு டிவிக்கும் வரி முன்றில் ஒன்று வந்த புதிதில் எங்களுடன் இருப்பவர் சனிக்கிழமை மார்கெட் இப்ப அப்படியான் மார்க்கெட் தேட வேண்டி உள்ளது அல்லது கார்பூட்மார்கெட் அதில் வெள்ளைகள் முதல் லண்டன் வாழ் மக்கள்  தாங்கள் பாவித்த பொருள்களை கொண்டுவந்து அரை விலை கிடைக்கும் விலைக்கு வித்து விடுவார்கள் அதில் ஐந்து பவுனுக்கு ஒரு பிளாக் அண்ட் வைட் டிவி கொண்டுவந்து பார்த்தார் சொல்லிவைத்த மாதிரி அடுத்தநாளே டிவி வரிக்காரன் வந்து அப்போ 15 பவுன் என்று நினைக்கிறேன் முதல்தடவை என்று தண்டப்பணம் எடுக்கவில்லை இப்பவும் பிளாக் அண்ட் வைட் 5௦ பவுன் கலர் 1௦௦தாண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிவைத்தமாதிரி அடுத்தநாளே டிவி வரிக்காரன் ……

http://www.bbctvlicence.com/Detect the Detector vans.htm
 
இவை தான் வருற ஆட்கள் 🥴
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன காசில்லைத்தான் ஆனாலும் வருடத்துக்கு £159 தானே? பிபிசியை தனியார் மயப்படுத்தினால் குறைந்தது மாதம் £30 ஆவது கேட்பார்கள்.

அதில் வரும் அற்புதமான விபரணங்களை 4k யில் பார்க்கவே (frozen planet, blue planet, Serengeti etc) இந்த £159 கட்டலாம். அதை தவிர சிறுவர்களுக்கு, பாடசாலை மாணவருக்கு என பலவிசயம், பிறகு ரேடியோ அதிலும் உள்ளூர் ரேடியோ…

தமிழோசை குப்பைதான். ஆனால் மிகுதி உலக சேவை அப்படி அல்ல.

பிகு

1. உலக சேவையை முன்னர் லைசன்ஸ் கட்டணத்தில் அன்றி, foreign office காசில்தான் நடத்தினார்கள். கமரென் வந்து அதை நிப்பாட்டினார். ஆனாலும் உலக சேவை தவிர் ஏனைய சேவைகளை வெளிநாட்டில் இருந்து பெற பிபிசிக்கு காசு கட்ட வேணும்.

2. பிபிசியை தனியார் மயமாக்கினால் பங்குகளை வாங்கி போடலாம். அவர்களிடம் இருக்கும் கட்டிடம், கொப்பிரைட், ஆவணம், தொழில் நுட்ப வல்லமை உலகில் வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பிபிசியை தனியார் மயமாக்கினால் பங்குகளை வாங்கி போடலாம்.

😍

Quote

தொழில் நுட்ப வல்லமை

அப்படி என்கிறீர்களா? அமெரிக்காவில் இல்லாத தொழில் நுட்பமா? தனியார் மயமானால், விளம்பர பணம் மட்டுமே.

அது இருக்கட்டும்.

YouTube இந்த டிவி நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக உருமாறுகிறது. பிபிசி, ஏபிசி போன்ற முன்னணி நிறுவனங்கள் YouTube ல் துண்டை போட்டு விட்டன.

தமிழ் டிவி களில், தீபம் உள்பட பல படுத்து விட்டதன் காரணமும் இதுதான். ஐபிசி கூட youtube பக்கமே மினக்கெடுகிறது.

YouTube ஐ அடிப்படையாக வைத்து, பல சேனல் வந்துவிட்டன அவை மெயின் ஸ்ட்ரீம் (பிரதான) டிவி நிலையங்களுக்கு இணையாக போட்டி போடுகின்றன.

உங்களுக்கு பிடிக்காதாயினும், சொல்கிறேன். சீமானின் நேற்றய பிரச்சாரத்தினை நேரலை YouTube ல் செய்த நியூஸ் 18, லைவ் viewership வரலாறில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

ஆக, நீங்களும், நானும் நினைத்தால், கையில் பணமிருந்தால், நாலு, ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தி, YouTube ல் டிவி சானல் தொடங்கலாம் என்பதே இன்றய நிலை.
இதுவே புதிய தொழில் நுட்பம் சொல்லும் செய்தி.   

https://www.tastyedits.com/richest-youtuber-strategies/#:~:text=The richest YouTuber in 2022 is Jimmy Donaldson%2C better known,of funding are sponsored videos.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அப்படி என்கிறீர்களா? அமெரிக்காவில் இல்லாத தொழில் நுட்பமா?

அமெரிக்காவில் தொழில்நுட்பம் இருக்கிறது ஆனால் டிவியில், குறிப்பாக விபரணம் எடுப்பதில் தொழில் சார் நேர்த்தி இல்லை. ஒரே technology எல்லாரிடமும் இருக்கலாம் ஆனால் அதை வைத்து உச்ச output ஐ கொடுக்கும் technical ability ஒரு மனித வலு. அதை பிபிசியில் வைத்திருப்பது போல் அமெரிக்க நிறுவனங்கள் வைத்திருப்பதில்லை. டிஸ்கவரி/ நேஷனல் ஜியோகிரபி, ஸ்மித்சோனியன் சானல்களின் ஒரு flagship விபரணத்தையும், பிபிசியின் அதே போல் ஒரு விபரணத்தையும் போட்டு பாருங்கள் - நான் சொன்ன output இன் தரம் (quality) விளங்கும்.

அடுத்து தனியார் என்றால் எல்லாவற்றையும் தீர்மானிப்பது லாபம். Profit margin. ஆகவே சில அதீத செலவுகள் செய்து சிலதை செய்ய மாட்டார்கள். காரணம் எவ்வளவுக்கு லாபத்தை கூட்ட முடியுமோ? என்பதே அவர்கள் நோக்கு.

யூடியூப்பும் இப்படி ஒரு monetize எனும் பணம் பண்ணுவதின் ஓரங்கமே.

ஆனால் பிபிசியின் இயங்குதளமும், நோக்கும் இந்த தளம் அல்ல.

யுடியூப் காலத்துக்கு முன்னான மீடியா உலகில், commercial broadcasting, public services broadcasting என அழைப்பார்கள்.

இ பிபிசி இதில் இரெண்டாம் வகை. இப்படி பிபிசி இருப்பதால்தான் அதனால் மேலே கூறிய சிறப்பான வேலைகளை செய்ய முடிகிறது.

அதை இலாபநோக்கு துறையோடு ஒப்பிட கூடாது, முடியாது.

அப்படி இருந்தும் இன்றும் Sky TV, BT, Virgin எல்லாவற்றிலும் பார்க்க value for money என்றால் அது பிபிசிதான்.

பிபிசிக்கு 1 வருடம் கட்டும் காசு, இவர்களுக்கு 3 மாதம் கட்டவே காணுமாய் இருக்கும்.

2 hours ago, Nathamuni said:

உங்களுக்கு பிடிக்காதாயினும், சொல்கிறேன். சீமானின் நேற்றய பிரச்சாரத்தினை நேரலை YouTube ல் செய்த நியூஸ் 18, லைவ் viewership வரலாறில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

இதில் எனக்கு பிடிக்காமல் போக என்ன இருக்கிறது. சீமானின் பேச்சின் முதல் ரசிகன் நான்.

ஆனால் ஒருவர் பேசுவதை மட்டும் லைவ் ரிலே பண்ணுவது மட்டும் அல்ல, செய்தியின் பின் புலத்தை, வரலாற்று ஆவணங்களை, ஆராய்சி கட்டுரைகளை, தரவுகளை, நேரிடை நேர்முகங்களை என ஒரு செய்தியை நம்பகமாக கொண்டு செல்ல தேவைப்படும் உழைப்பு அபரிமிதமானது.

அதை லாபநோக்கு அமைப்புகள் சரியாக செய்யாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஆக, நீங்களும், நானும் நினைத்தால், கையில் பணமிருந்தால், நாலு, ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தி, YouTube ல் டிவி சானல் தொடங்கலாம் என்பதே இன்றய நிலை.
இதுவே புதிய தொழில் நுட்பம் சொல்லும் செய்தி.  

ஓம் ஆனால் நாம் ஒரு போதும் ஒரு நிறுவனத்தின் நம்பகதன்மையை பெற மாட்டோம். காரணம் எமக்கு பின்னால் ஒரு ரிசேர்ச் டீம் இல்லை.

எதையாவது தப்பாக சொல்லி வழக்கு என வந்தால் சானலை மூடி விட்டு ஓட்டம் எடுப்போம்🤣.

BBC Hardtalk கோட்ட அபய பேட்டி பார்த்திருப்பீர்கள். ஒரு நாலு பேர் இயக்கும் யூடியூப் சானலினால் இப்படி தரவுகளை சேகரித்து, சரி பார்த்து, சட்ட சிக்கல் வராத படி கேள்வி கேட்க முடியாது.

கேபிள் டிவி வந்ததும், சினிமா அழிந்து விடும் என்றது போலத்தான், கொமேர்சல் டிவி, யூடியூப்பால் பப்ளிக் புரோட்காஸ்டிங் அழியும் என்பதும். ஆனால் இவற்றுக்கான இடம் தொடர்ந்தும் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அமெரிக்காவில் தொழில்நுட்பம் இருக்கிறது ஆனால் டிவியில், குறிப்பாக விபரணம் எடுப்பதில் தொழில் சார் நேர்த்தி இல்லை. ஒரே technology எல்லாரிடமும் இருக்கலாம் ஆனால் அதை வைத்து உச்ச output ஐ கொடுக்கும் technical ability ஒரு மனித வலு. அதை பிபிசியில் வைத்திருப்பது போல் அமெரிக்க நிறுவனங்கள் வைத்திருப்பதில்லை. டிஸ்கவரி/ நேஷனல் ஜியோகிரபி, ஸ்மித்சோனியன் சானல்களின் ஒரு flagship விபரணத்தையும், பிபிசியின் அதே போல் ஒரு விபரணத்தையும் போட்டு பாருங்கள் - நான் சொன்ன output இன் தரம் (quality) விளங்கும்.

அடுத்து தனியார் என்றால் எல்லாவற்றையும் தீர்மானிப்பது லாபம். Profit margin. ஆகவே சில அதீத செலவுகள் செய்து சிலதை செய்ய மாட்டார்கள். காரணம் எவ்வளவுக்கு லாபத்தை கூட்ட முடியுமோ? என்பதே அவர்கள் நோக்கு.

யூடியூப்பும் இப்படி ஒரு monetize எனும் பணம் பண்ணுவதின் ஓரங்கமே.

ஆனால் பிபிசியின் இயங்குதளமும், நோக்கும் இந்த தளம் அல்ல.

யுடியூப் காலத்துக்கு முன்னான மீடியா உலகில், commercial broadcasting, public services broadcasting என அழைப்பார்கள்.

இ பிபிசி இதில் இரெண்டாம் வகை. இப்படி பிபிசி இருப்பதால்தான் அதனால் மேலே கூறிய சிறப்பான வேலைகளை செய்ய முடிகிறது.

அதை இலாபநோக்கு துறையோடு ஒப்பிட கூடாது, முடியாது.

அப்படி இருந்தும் இன்றும் Sky TV, BT, Virgin எல்லாவற்றிலும் பார்க்க value for money என்றால் அது பிபிசிதான்.

பிபிசிக்கு 1 வருடம் கட்டும் காசு, இவர்களுக்கு 3 மாதம் கட்டவே காணுமாய் இருக்கும்.

தரம் குறைவில்லை என்பதை மறுக்கவில்லை. ஆனால் கிட்டத்தட்ட £4 பில்லியன் பவுண்ட்ஸ் எந்த வித commercial pressure இல்லாமல் சட்டத்தின் உதவியுடன் அவ்வளவு காசை வாங்கி கொண்டு தொழில் செய்தால், தரத்தினை சிறப்பாக கொடுக்கத்தானே வேணும்.

உலகில் வேறு எங்கும் இந்த வரியை சட்டம் போட்டு பிடுங்கி ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்பதும் உண்மைதானே.   

The BBC's license fee income in the United Kingdom (UK) 2010-2022. In 2022, the BBC generated a license fee income of 3.8 billion British pounds.

9 minutes ago, goshan_che said:

ஓம் ஆனால் நாம் ஒரு போதும் ஒரு நிறுவனத்தின் நம்பகதன்மையை பெற மாட்டோம். காரணம் எமக்கு பின்னால் ஒரு ரிசேர்ச் டீம் இல்லை.

எதையாவது தப்பாக சொல்லி வழக்கு என வந்தால் சானலை மூடி விட்டு ஓட்டம் எடுப்போம்🤣.

BBC Hardtalk கோட்ட அபய பேட்டி பார்த்திருப்பீர்கள். ஒரு நாலு பேர் இயக்கும் யூடியூப் சானலினால் இப்படி தரவுகளை சேகரித்து, சரி பார்த்து, சட்ட சிக்கல் வராத படி கேள்வி கேட்க முடியாது.

கேபிள் டிவி வந்ததும், சினிமா அழிந்து விடும் என்றது போலத்தான், கொமேர்சல் டிவி, யூடியூப்பால் பப்ளிக் புரோட்காஸ்டிங் அழியும் என்பதும். ஆனால் இவற்றுக்கான இடம் தொடர்ந்தும் இருக்கும். 

நாலு பேர் என்று நான் சொன்னதை கவனித்தீர்களா?

தகுதியான, copyright பிரச்சனைகளில் சிக்காமல் தரமான நிகழ்ச்சிகளை படம் எடுக்க கூடிய அனுபவம் மிக்க நால்வர் தான் நான் சொன்னது.

காசு ரெடி பண்ணுங்கள். மிச்சத்தினை நான் பார்க்கிறேன். 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

உலகில் வேறு எங்கும் இந்த வரியை சட்டம் போட்டு பிடுங்கி ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்பதும் உண்மைதானே.

டிவி லைசன்ஸ் என்பது ஒரு வகை வரி, ring-fenced, direct taxation. வழமை போல் வரியை திறைசேரிக்கு எடுத்து, பின் அதை எப்படி செலவழிப்பது என அரசு முடிவு எடாமல் (உதாரணம் road tax) - இது நேரடியாக பிபிசிக்கு எண்டு சொல்லி வசூலிக்கப்படும், பிபிசிக்கு கொடுக்கப்படும் வரி.

உலகில் பல நாடுகளில் இது வழமைதான். சந்திரிகா ஆட்சியில்தான் இலங்கையிலும் இந்த டிவி லைசன்ஸ் வரி வசூலிப்பது கைவிடப்பட்டது
 
https://en.m.wikipedia.org/wiki/Television_licence

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

உலகில் பல நாடுகளில் இது வழமைதான். சந்திரிகா ஆட்சியில்தான் இலங்கையிலும் இந்த டிவி லைசன்ஸ் வரி வசூலிப்பது கைவிடப்பட்டது
 
https://en.m.wikipedia.org/wiki/Television_licence

நான் சொன்னது, இன்று. சந்திரிகா நேற்று நடந்த கதை.  😁

சரி விடுங்கோ

ஆனால் பிரிட்டிஷ் அரசு, இந்த லைசென்ஸ் தொடர்பில் வரும் ஆண்டுகளில் கொள்கை முடிவு ஒரு எடுக்க இருப்பதாக சொல்லி உள்ளது. அது குறித்து, பிபிசி பல வேறு வகை பிசினெஸ் மாடல் குறித்து ஆலோசனை நடாத்தி வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

அமெரிக்காவில் தொழில்நுட்பம் இருக்கிறது ஆனால் டிவியில், குறிப்பாக விபரணம் எடுப்பதில் தொழில் சார் நேர்த்தி இல்லை. ஒரே technology எல்லாரிடமும் இருக்கலாம் ஆனால் அதை வைத்து உச்ச output ஐ கொடுக்கும் technical ability ஒரு மனித வலு. அதை பிபிசியில் வைத்திருப்பது போல் அமெரிக்க நிறுவனங்கள் வைத்திருப்பதில்லை. டிஸ்கவரி/ நேஷனல் ஜியோகிரபி, ஸ்மித்சோனியன் சானல்களின் ஒரு flagship விபரணத்தையும், பிபிசியின் அதே போல் ஒரு விபரணத்தையும் போட்டு பாருங்கள் - நான் சொன்ன output இன் தரம் (quality) விளங்கும்.

அடுத்து தனியார் என்றால் எல்லாவற்றையும் தீர்மானிப்பது லாபம். Profit margin. ஆகவே சில அதீத செலவுகள் செய்து சிலதை செய்ய மாட்டார்கள். காரணம் எவ்வளவுக்கு லாபத்தை கூட்ட முடியுமோ? என்பதே அவர்கள் நோக்கு.

யூடியூப்பும் இப்படி ஒரு monetize எனும் பணம் பண்ணுவதின் ஓரங்கமே.

ஆனால் பிபிசியின் இயங்குதளமும், நோக்கும் இந்த தளம் அல்ல.

யுடியூப் காலத்துக்கு முன்னான மீடியா உலகில், commercial broadcasting, public services broadcasting என அழைப்பார்கள்.

இ பிபிசி இதில் இரெண்டாம் வகை. இப்படி பிபிசி இருப்பதால்தான் அதனால் மேலே கூறிய சிறப்பான வேலைகளை செய்ய முடிகிறது.

அதை இலாபநோக்கு துறையோடு ஒப்பிட கூடாது, முடியாது.

அப்படி இருந்தும் இன்றும் Sky TV, BT, Virgin எல்லாவற்றிலும் பார்க்க value for money என்றால் அது பிபிசிதான்.

பிபிசிக்கு 1 வருடம் கட்டும் காசு, இவர்களுக்கு 3 மாதம் கட்டவே காணுமாய் இருக்கும்.

இதில் எனக்கு பிடிக்காமல் போக என்ன இருக்கிறது. சீமானின் பேச்சின் முதல் ரசிகன் நான்.

ஆனால் ஒருவர் பேசுவதை மட்டும் லைவ் ரிலே பண்ணுவது மட்டும் அல்ல, செய்தியின் பின் புலத்தை, வரலாற்று ஆவணங்களை, ஆராய்சி கட்டுரைகளை, தரவுகளை, நேரிடை நேர்முகங்களை என ஒரு செய்தியை நம்பகமாக கொண்டு செல்ல தேவைப்படும் உழைப்பு அபரிமிதமானது.

அதை லாபநோக்கு அமைப்புகள் சரியாக செய்யாது.

ஐரோப்பாவில் எந்த மொழி தொலைக்காட்சிகளிலும் விவரண திரைப்படங்கள் ஒளிபரப்பாகினால் இறுதியில் தயாரிப்பு கொப்பி ரைட்ஸ் என்று காட்டப்படுவது 90 வீதம் பிபி சி தான். இதை நன்கு அவதானித்தவன் என்ற அடிப்படையில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். 

இன்றைய யூருயுப் இல்  காணொளிகளை உருவாக்குவோர்  கூட  அதற்கு ஆதாரங்களை தேடினால் கிடைப்பது பழைய பிபிசி. காணொளிகள் தான்.  பிபிசி யின் நேர்ததிக்கு உலகில் நிகர் எதுவும் இல்லை.

உலகில் பல மொழித்  தொலைக்காட்சிகள் பிபிசியை தமது றோல் மொடலாக வரித்து கொண்டவைதான். ஜேர்மனிய பிரெஞ்சு இத்தாலி மொழி தொலைக்காட்சிகளும்  இதற்கு விதி விலக்கு இல்லை 

 கான மயிலாட கண்டிருந்த வான் கோழி என்பது போல் ஐபிசி தமிழும் பிபிசியை பார்தது அதனை கொப்பியடித்து உருவானது தான்.

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

நான் சொன்னது, இன்று. சந்திரிகா நேற்று நடந்த கதை

மேலே தந்த விக்கி இணைப்பில் இன்றும் license fees நடைமுறையில் உள்ள, கண்டம் வாரியாக பகுத்து, பல நாடுகளின் பட்டியல் உள்ளது. 

47 minutes ago, Nathamuni said:

ஆனால் பிரிட்டிஷ் அரசு, இந்த லைசென்ஸ் தொடர்பில் வரும் ஆண்டுகளில் கொள்கை முடிவு ஒரு எடுக்க இருப்பதாக சொல்லி உள்ளது. அது குறித்து, பிபிசி பல வேறு வகை பிசினெஸ் மாடல் குறித்து ஆலோசனை நடாத்தி வருகிறது.

ஓம். நான் மேலே சொன்ன public service broadcasting ஐ யூகேயில் இல்லாது ஒழித்து அமெரிக்காவின் Fox, CNN போல குப்பாடி ஊடகங்கள் கையில், ரூபர்ட் மேர்டோக்கின் கையில் தொலைக்காட்சி ஊடகதுறையை  கொடுத்து விட வேண்டும் என்பது கன்சவேட்டிவ் கட்சியில் உள்ள ஜேக்கப் ரீஸ் மொக் போன்ற சில அதி வலதுசாரிகளின் நீண்ட நாள் அரிப்பு.

பிரெக்சிற் போல இதையும் அதிகம் விளக்கம் இல்லாதவர்களுக்கு மண்டையை கழுவுவதன் மூலம் செய்ய எத்தனிக்கிறர்கள்.

அதன் ஒரு அங்கம்தான் இந்த லைசன்ஸ் காசு வீண் விரயம் என்ற முன்னெடுப்பு.

ஆனால் இதை செய்யமுதல் அவர்கள் பதவி அடுத்த எலக்சனில் போய்விடும் என்பது என் எதிர்பார்ப்பு.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, island said:

ஐரோப்பாவில் எந்த மொழி தொலைக்காட்சிகளிலும் விவரண திரைப்படங்கள் ஒளிபரப்பாகினால் இறுதியில் தயாரிப்பு கொப்பி ரைட்ஸ் என்று காட்டப்படுவது 90 வீதம் பிபி சி தான். இதை நன்கு அவதானித்தவன் என்ற அடிப்படையில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். 

இன்றைய யூருயுப் இல்  காணொளிகளை உருவாக்குவோர்  கூட  அதற்கு ஆதாரங்களை தேடினால் கிடைப்பது பழைய பிபிசி. காணொளிகள் தான்.  பிபிசி யின் நேர்ததிக்கு உலகில் நிகர் எதுவும் இல்லை.

உலகில் பல மொழித்  தொலைக்காட்சிகள் பிபிசியை தமது றோல் மொடலாக வரித்து கொண்டவைதான். ஜேர்மனிய பிரெஞ்சு இத்தாலி மொழி தொலைக்காட்சிகளும்  இதற்கு விதி விலக்கு இல்லை 

 கான மயிலாட கண்டிருந்த வான் கோழி என்பது போல் ஐபிசி தமிழும் பிபிசியை பார்தது அதனை கொப்பியடித்து உருவானது தான்.

நன்றி.

எல்லா ஊடகங்களுக்கும் ஒரு நோக்கு (agenda) இருக்கும். அதே போல் அவர்களின் கதையாடலும் (Narrative) அவர்களின் போஷகர்கள் நலன்பால்பட்டே இருக்கும். அந்த வகையில் பிபிசியின் நோக்கும், கதையாடலும் கூட பிரித்தானிய அரசின் நலன் சார்ந்தே இருக்கும் (அரசாங்கத்தின் அல்ல), குறிப்பாக வெளிநாட்டு விடயங்களில்.

அதே போல் தமிழோசையில் கடந்த 25 ஆண்டுகளாக ரோவின் கை ஓங்கி இருப்பதும், பணத்தை மிச்சம் பிடிக்கிறோம் என டெல்லிக்கு மாற்றி இதை பிபிசி இன்னும் மோசாமாக்கியதும் உண்மையே.

ஆனால் இவற்றை வைத்து ஒட்டுமொத்த பிபிசியையும், குழந்தை கழுவிய நீரோடு குழந்தையையும் தூக்கி எறிவது போல, எறியக்கூடாது.

குறிப்பாக பிபிசி direct tax எனும் நேரடி வரி மூலம் fund பண்ண படுவதே - அதை உள்ளூர் அரசியலில் அன்றைய அரசுக்கு பயப்படாமல் ஓரளவு நடுநிலையாக நடக்க வைக்கிறது.

இதுதான் பல தீவிர வலதுசாரிகள், தீவிர இடதுசாரிகள் கண்ணை உறுத்துகிறது.

பிபிசியையும், direct tax-funding modelஐயும், public service broadcasting principles ஐயும் நாட்டில் இருந்து அகற்றி விட்டால், தத்தம் நிலை சார்ப்பு பிரச்சாரங்களை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு மக்களை இட்டு வருவது சுலபமாக இருக்கும் என்பது அவர்கள் கணக்கு.

தொலைக்காட்சி ஊடகங்கள், உள்ளூர் அரசியல் விடயங்களை பக்கசார்பின்றி கையாள்வதில் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.

இந்த வித்தியாசத்தை தக்க வைப்பதே நான் மேலே சொன்ன பிபிசி, அது எப்படி போசிக்கபடுகிறது, பொதுநலன்சார் ஒளிபரப்பு விழுமியம் என்ற மூன்றும்தான்.

அவற்றை அகறிவிட்டால் - மெர்டோக்கின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா தான்🤣 (ஏலவே யூகேயின் print media அப்படித்தான் உள்ளது).

  • Like 2
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேசிய மட்டத்தில் 5 %  யில்லை. தேசிய மட்டத்தில் 29 பேரை தெரிவு செய்வார்கள்.  100%/29 = 3.45%  3.448% மேல் கிடைத்தால் ஒரு இடம் கிடைக்கும். சென்ற தேர்தலில் சைக்கிளுக்கு ஒரு இடம் கிடைத்தது. கொழும்பில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவதும் தேசிய மட்டத்தில் கிடைக்கலாம் என்பதினால் தான்.  வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களினால் ஜேவிபி உட்பட சிங்கள கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு இடம் கிடைக்க உதவபோகிறது. 
    • முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட டெல்லியை இலங்கை தமிழர் கடற்பரப்பில் கொள்ளை அடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கும் படி கொழும்பற்கு  அழுத்தம் கொடுக்கும் படி கமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைக்கபடுகின்றது. ஆனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்ற கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
    • ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
    • நீங்க (Bar) பாரைத் தானே சொல்றீங்க.
    • ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்… உடான்ஸ் சாமியாய நமஹ… மகனே….. நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே… அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது…. அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்… எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே…. பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை. புரிந்தவன் பிஸ்தா…. புரியாதவன் பாதாம்…. ஓம்…கிரீம்…டோநட்….
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.