Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு

Published By: SETHU

24 MAR, 2023 | 02:36 PM
image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நீரடி ஆயுதமொன்றை தான் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், நேரடியாக இந்த சோதனையை மேற்பார்வை செய்தார் என வட கொரிய ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

தென் ஹம்ஜியோங் மாகாணத்தின் கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ரகசிய ஆயுதக் கலம் கடலில் விடப்பட்டதாகவும், 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணித்தியாலங்கள் இந்த ஆயுத கலம் பயணம் செய்து பின்னர் கிழக்கு கரையோரத்தில் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

ஹேய்ல் என இந்த ஆயுதத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு கொரிய மொழியில் சுனாமி என அர்த்தமாகும்.

எந்தவொரு கடற்கரையிலும் துறைமுகத்திலும் இந்த ஆளில்லா கலத்தை பயன்படுத்த முடியும் என கேசிஎன்ஏ மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களுக்கு அது விலை கொடுக்கச் செய்யப்படும் என தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/151325

  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரியா,யப்பானின் பாதுகாப்பு கேள்விகுறி ஆகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

தென் கொரியா,யப்பானின் பாதுகாப்பு கேள்விகுறி ஆகியுள்ளது.

இது வட கொரொயாவின் பிராந்திய பாதுகாப்பு சம்பந்த பட்ட விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தென் கொரியா,யப்பானின் பாதுகாப்பு கேள்விகுறி ஆகியுள்ளது.

அப்படியானால்

தென் கொரியாவும் யப்பானும் வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு

வடகொரியா  தான் செய்ததை வெளியிலை வெளிப்படையாய்  சொல்லுது. 😎
மற்றவனுகள் வாயே திறக்கானுகள் :rolling_on_the_floor_laughing:

மற்றவனுகள் செய்திட்டு வாயே திறக்கானுகள் :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இது வட கொரொயாவின் பிராந்திய பாதுகாப்பு சம்பந்த பட்ட விடயம்.

தென் கொரியா, யப்பான் அயல்நாடுகள் அல்லவா?  செயற்கை சுனாமி தனிய வடகொரியாவை மட்டும் தாக்குமா?

1 hour ago, விசுகு said:

அப்படியானால்

தென் கொரியாவும் யப்பானும் வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

ஈராக்கை அமெரிக்கா அழித்த போது எப்படி உலகம் மெளனம் காத்ததோ அதே போல் எல்லோரும் மெளனம் காக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு விதி தானே??

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

ஈராக்கை அமெரிக்கா அழித்த போது எப்படி உலகம் மெளனம் காத்ததோ அதே போல் எல்லோரும் மெளனம் காக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு விதி தானே??

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

மகிந்தவுக்கும் இப்போ ஆதரவு இல்லை என்பதை பார்த்தோம். ஏன் அங்கு அமெரிக்கா அங்கு போகவில்லை என்று  கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

தென் கொரியா, யப்பான் அயல்நாடுகள் அல்லவா?  செயற்கை சுனாமி தனிய வடகொரியாவை மட்டும் தாக்குமா?

இல்லை.

உக்ரேனில் அணுகுண்டு வீசினாலும் உக்ரேனை மட்டும் தாக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

மகிந்தவுக்கும் இப்போ ஆதரவு இல்லை என்பதை பார்த்தோம். ஏன் அங்கு அமெரிக்கா அங்கு போகவில்லை என்று  கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?
 
மகிந்த அமெரிக்காவுடன் சவால் விட்டால் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

North Korea: நீருக்கடியில் சென்று தாக்கும் Under Water Nuclear Drone-ஐ சோதனை செய்த Kim Jong Un

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

ஆதாரம்?, மேற்குலகின் பரப்புரை, அதை நம்பி மக்களின் ஆதரவைப்பற்றி கேள்வி கேட்கின்றீர்கள்?😁

இந்த அமெரிக்கன் ஈராக்கில் பெண்களுக்கு செய்த அட்டூழியங்கள் வீடியோ வீடியோவாக இருக்கு, எப்படி கிந்திய இராணுவம் எமது மண்ணில் செய்திச்சோ, அதே அட்டுழீயம் வியாட்னாமில், ஈராகில், ஆப்கானிஸ்தானில், .......... அவர்களின் ஆட்டத்திற்கு இது ஒரு இடைவேளை, தொடரும்...

அதற்கு நீங்கள் ஆதரவு🤔

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

அப்படியானால்

வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

அமெரிகாவளை ஒரு புல்லை கூட பிடுங்க முடியவில்லை வடகொரியாவில், இவர்கள் கைப்பற்ற போகின்றார்களா?, நீங்கள் நகைச்சுவையாக தானே இதை பதிவிட்டீர்கள்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

ஆதாரம்?, மேற்குலகின் பரப்புரை, அதை நம்பி மக்களின் ஆதரவைப்பற்றி கேள்வி கேட்கின்றீர்கள்?😁

இந்த அமெரிக்கன் ஈராக்கில் பெண்களுக்கு செய்த அட்டூழியங்கள் வீடியோ வீடியோவாக இருக்கு, எப்படி கிந்திய இராணுவம் எமது மண்ணில் செய்திச்சோ, அதே அட்டுழீயம் வியாட்னாமில், ஈராகில், ஆப்கானிஸ்தானில், .......... அவர்களின் ஆட்டத்திற்கு இது ஒரு இடைவேளை, தொடரும்...

அதற்கு நீங்கள் ஆதரவு🤔

அமெரிக்கா செய்ததை ஆதரித்து எழுதவில்லை 

ஏன் அவர் தனது நாட்டின் மக்களால் தூக்கி எறியப்பட்டார்? மேற்குலகு எனக்கு அடைக்கலம் அடைந்தனர். அதனால் ஆதரிக்காது விட்டாலும் துரோகம் செய்வதில்லை. 

3 minutes ago, உடையார் said:

அமெரிகாவளை ஒரு புல்லை கூட பிடுங்க முடியவில்லை வடகொரியாவில், இவர்கள் கைப்பற்ற போகின்றார்களா?, நீங்கள் நகைச்சுவையாக தானே இதை பதிவிட்டீர்கள்😂🤣

ஓம் உங்கள் சிரிப்பு எனக்கும் தோன்றிவிட்டது உண்மை தான் 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அமெரிக்கா செய்ததை ஆதரித்து எழுதவில்லை 

ஏன் அவர் தனது நாட்டின் மக்களால் தூக்கி எறியப்பட்டார்? மேற்குலகு எனக்கு அடைக்கலம் அடைந்தனர். அதனால் ஆதரிக்காது விட்டாலும் துரோகம் செய்வதில்லை. 

ஓம் உங்கள் சிரிப்பு எனக்கும் தோன்றிவிட்டது உண்மை தான் 😀

உண்மையை கூறியதிற்கு நன்றி, அடைகலம் தந்ததிற்காக எதுவும் செய்யவீர்கள்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

மகிந்த அமெரிக்காவுடன் சவால் விட்டால் பார்க்கலாம்.

ஓ அமெரிக்காவுக்கு சவால் விட்டால் செத்தான் என்கிறீர்கள்?

20 hours ago, goshan_che said:

இல்லை.

உக்ரேனில் அணுகுண்டு வீசினாலும் உக்ரேனை மட்டும் தாக்காது.

இது 4ம் வகுப்புக்கே தெரியுமே

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 ஏன் அவர் தனது நாட்டின் மக்களால் தூக்கி எறியப்பட்டார்?

அவர் தூக்கி எறியப்பட்டாரா மக்களால்?, அமெரிக்கா தனது துனை நாடுகளின் (தனியாக இல்லை😁) உதவியுடன் அவரை கைது செய்தார்கள்.  இது ஒரு குழந்தைக்கு கூட தெரியும் வெள்ளிடை மலையாக, உங்களுக்கு தெரியாத து வியப்பாக இருக்கு

4 minutes ago, nunavilan said:

ஓ அமெரிக்காவுக்கு சவால் விட்டால் செத்தான் என்கிறீர்கள்?

ஆதிக்க வெறி😎

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, உடையார் said:

உண்மையை கூறியதிற்கு நன்றி, அடைகலம் தந்ததிற்காக எதுவும் செய்யவீர்கள்😂🤣

கேள்வியையும் வாசிப்பதில்லை 

பதிலையும் வாசிப்பதில்லை.

மீண்டும் 

ஆதரவு தராவிட்டால் துரோகம் செய்வதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

ஓ அமெரிக்காவுக்கு சவால் விட்டால் செத்தான் என்கிறீர்கள்?

அமெரிக்க   அண்ணனுக்கு  தண்ணி காட்டுற  இந்த மனிசனை அப்பப்ப ஞாபகப்படுத்த  வேண்டிக்கிடக்கு....  

Kim Jong Un GIFs | Tenor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, உடையார் said:

அவர் தூக்கி எறியப்பட்டாரா மக்களால்?, அமெரிக்கா தனது துனை நாடுகளின் (தனியாக இல்லை😁) உதவியுடன் அவரை கைது செய்தார்கள்.  இது ஒரு குழந்தைக்கு கூட தெரியும் வெள்ளிடை மலையாக, உங்களுக்கு தெரியாத து வியப்பாக இருக்கு

எமக்கு மேற்குலக ஊடகங்கள் எது என்னென்ன சொல்லுதோ அதெல்லாம் தாரகமந்திரம்.

அன்றைய காலங்களில் ஈழப்பிரச்சனைகள் சம்பந்தமாக எதையெல்லாம் குற்றமாக சுமத்தினார்களோ அதையெல்லாம்  நம்பினோமா இல்லையே.ஏனெனில் உண்மை நிலவரம் எமக்கு மட்டும் தானே தெரிந்தது. மக்களுக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்றனர்.எமக்கெல்லாம் எப்படி வலித்தது?????  இன்று கூட பயங்கரவாதிகள் என்றுதானே சொல்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 10:58, விசுகு said:

அப்படியானால்

தென் கொரியாவும் யப்பானும் வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

தென் கொரியாவும் வடகொரியாவும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் ஒரே நாடுகள்,ஒரே மக்கள் கூட்டம் என்பதையும், அவர்களை யார் எதற்காகப் பிரித்தார்கள் என்பதையும்  தாங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். 

அதுதவிர, 

சப்பான் கடலால் பிரிக்கப்பட்டிருப்பதையும், சப்பான் கொரியா, சீனா மீது படையெடுத்து என்னவெல்லாம் செய்தது என்பதைய் தாங்கள் மறந்துவிட்டீர்கள். 

On 24/3/2023 at 12:49, nunavilan said:

தென் கொரியா, யப்பான் அயல்நாடுகள் அல்லவா?  செயற்கை சுனாமி தனிய வடகொரியாவை மட்டும் தாக்குமா?

ஈராக்கை அமெரிக்கா அழித்த போது எப்படி உலகம் மெளனம் காத்ததோ அதே போல் எல்லோரும் மெளனம் காக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு விதி தானே??

இந்தச் செய்தி முழுமையானதல். 

On 24/3/2023 at 13:09, விசுகு said:

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

மக்கள் ஆதரவு இல்லாத தலைவர்களை மட்டும்தான்  அழித்தார்களா?  

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

தென் கொரியாவும் வடகொரியாவும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் ஒரே நாடுகள்,ஒரே மக்கள் கூட்டம் என்பதையும், அவர்களை யார் எதற்காகப் பிரித்தார்கள் என்பதையும்  தாங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். 

முதலில் எனது கேள்வி எங்கிருந்து எதிலிருந்து ஆரம்பித்தது??

என் கேள்வி எதற்காக யாரிடம் வைக்கப்பட்டது என்று தெரிந்து கொண்டு வாருங்கள். எனக்கு நேரம் பொன்னானது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

இது 4ம் வகுப்புக்கே தெரியுமே

நான் முதலாம் வகுப்பு 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் முதலாம் வகுப்பு 😎

அப்போ டைப்பர் தான்.🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

அப்போ டைப்பர் தான்.🤣🤣🤣

இல்லை கட் அண்ட் பேஸ்ட்😝

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.