வழி நெடுக காட்டு மல்லி.. யாரும் அதை பார்க்கலியே..!
By
ராசவன்னியன்
in ரசித்தவை
Share
-
Tell a friend
-
Topics
-
0
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம் 10 Dec, 2024 | 12:51 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியையோ, எமது உரிமை ?, எமது எதிர்காலம் ? இப்போது, எமது உறவுகள் எங்கே, என பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/200884 -
By கிருபன் · பதியப்பட்டது
O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு December 10, 2024 09:24 am 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரிகள் இணைய வழி முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, “பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எக்காரணம் கொண்டும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை ஏற்க வாய்ப்பில்லை. எனவே, இந்தப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் எவரும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஒன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக வலியுறுத்துகிறேன். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணங்களை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது." https://tamil.adaderana.lk/news.php?nid=197079 -
அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் - வர்த்தமானி வௌியீடு December 10, 2024 06:18 am உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் படி, ஒரு கிலோகிராம் உள்நாட்டு கிரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197070
-
சபாநாயகருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன? சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பாக வெளிவரும் பல்வேறு கருத்துகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான செய்திகள் உண்மையாக இருந்தால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சபாநாயகரின் அறிக்கைக்குப் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார். “சபாநாயகர் தகுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட பிறகு பரிசீலிப்போம்.அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் சொல்கிறேன் " என்றார். சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருவதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தற்போதைய சபாநாயகரிடம் கலாநிதி பட்டம் இருப்பது உண்மையென்றால் அதனை நிரூபித்து காட்டுமாறு அண்மையில் சபாநாயகருக்கு சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகருக்கு-எதிராக-எடுக்கும்-நடவடிக்கை-என்ன/175-348522
-
By கிருபன் · பதியப்பட்டது
நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்! December 10, 2024 சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையப்பகுதியில் முடிவடைந்தது. https://eelanadu.lk/நீதி-கோரி-தீச்சட்டியை-ஏந/
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts