Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழமும் திராவிடமும்

Featured Replies

"மெய்யெனப் படுவது" இப்பகுதியிலே ஆழமான பல கருத்துக்கள் சிறந்த முறையில் எம் யாழ் கள உறவுகளால் ஆராயப்பட்டு வருவது சிறப்பாக இருக்கிறது. சிலவற்றைப் படித்தேன், பல இன்னும் படிக்க வேண்டியிருக்கிறது.

ஆராய்வதே மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவின்(6வது அறிவு என்று நாமே செல்லிக்கொண்டிருப்பது) சிறப்பு.

காரணம் இல்லாமலோ அல்லது காரணம் தெரியாமலோ எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பன் சிந்திக்கும் மனிதனாக இருக்க முடியாது.

மனிதானாய் வாழ்வதற்கும், மந்தையாய் இருப்பதற்கும் இதுதான் வேறுபாடு.

இங்கு தற்போது எனது சந்தேகம்:

தமிழகத்தில் பொதுவாக பார்த்தால் எமது ஈழப்பிரச்சினைக்கு நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வரும் அமைப்புக்களின் பின்னணியில் திராவிடக் கொள்கை இருப்பது தெளிவாக தெரிகிறது.

தவிர அந்த இந்த சாமிகள், 'சொ' க்கள், அம்மாக்கள் (அம்மா அ.திராவிட. மு. க. வாக இருந்தாலும், காட்டில் சுதந்திராமாய் திரிய வேண்டிய யானையை எல்லாம் கோவில்களில் தன் நலன் வேண்டி சிறைவைத்ததில் பெயர் பெற்றவர்) போன்றவர்கள், அடிப்படையில் ஈழக் கருத்துக்கு எதிராகவே காணப்படுகிறார்கள்.

அனேகமாக திராவிடக் கொள்கை பகுத்தறிவுக் கொள்கையுடன் பின்னிப் பிணைந்ததாகவே காணப்படுகிறது.

யாழ்க் களத்தின் இப்பகுதியில் மதம் தொடர்பாக இரு எதிர்க்கருத்துக்கள் தர்க்கிக்கப் படுகின்றன.

இதில், கற்காலத்திற்கு முற்காலமெல்லாம் ஆராய்வதை சற்று நிறுத்தி தற்கால எமது பிரச்சினையுடன் ஒப்பு நோக்கும் போது: சமய, மத ஆதரவுக் கருத்து நிலையில் உள்ளவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகின்றது.

திராவிட பகுத்தறிவு கொள்கை நிலையில் உள்ளோர் பெரும்பாலும் ஈழக் கோரிக்கையை ஆதரிப்பவர்களாக காணப்படும் அதே வேளை, மத ஈடுபாடு அதிகம் காணப்படும் அரசியல் தலைவர்கள் அனேகர் ஈழக் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களாக காணப்படுவது ஏன்?

இதில் நான் பெரிய பழைய ஆய்வெல்லாம் செய்யத் தேவையில்லை,

ஐயா நெடுமாறன், திருமாவளவன், வை.கோ, திராவிடர் கழக வீரமணி, ராமதாஸ் மற்றும் அரசியல் தவிர்த்து பகுத்தறிவுக் கொள்கை கொண்ட சில பிரபலங்களான இயக்குணர்கள் சேரன், சீமான், மணிவண்ணன் போன்றவர்களை ஒரு பக்கத்திலும் மறுபக்கத்தில் சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, விசு போன்றவர்களையும் வைத்துப் பார்க்கும் போது,

பகுத்தறிவுக் கொள்கையை பின்பற்றுபவர்களே அனேகமாக மற்றவர் படும் கஸ்டங்களையும் பார்்த்து மனித நேயத்துடன் செயல்ப்பட தலைப்படுவதையும், மற்றவர்கள் ஈழத்தமிழன் படும் இன்னல்கள் அவனது முற்பிறப்பிற்காய், கடவுள் இப்பிறப்பில் கொடுக்கும் தண்டனை, இதற்கெதிராக நடப்பது தெய்வக்குற்றம் என்று எண்ணி ஒதுங்கியிருப்பது போலவும் தோற்றப்பாடு காணப்படுகிறது.

பகுத்தறிவுக் கொள்கையுடயவனே சிந்திப்பதோடு மட்டுமல்லாது செயற்படவும் துணிகிறான், ஒருவர் படும் இன்னகளை ஏன் என்று சிந்திக்கிறான், நியாயங்களை மதிப்பீடு செய்கிறான், அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் எதிராக குரல் கொடுக்கவும், செயல்ப்படவும் துணிகிறான் என்று எண்ணத் தோன்றுகின்றது.

மாறாக மறு தரப்பில் எதிர்த் தரப்பில் இச் செயற்பாட்டிற்கு தேவையே இல்லாமல் போகிறது. எல்லாம் அவன் செயல் என்பதால் நாம் என்ன செய்வது? என்ற நிலை காணப்படுவதாகத் தான் தெரிகிறது.

"மெய்யெனப்படுவது" பகுதியில் படித்த விடயங்களை, சும்மா அலசிப் பார்த்த போது, நாயன்மார் காலத்தை விட்டு நமது காலத்தின் தேவையை எண்ணிப் பார்த் போது என்மனதில் தோன்றியவை இவை.

உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது. அலசுவோம் வாருங்கள்.

தமிழ்னீ உங்கள் பார்வை விரிவாக அலச வேண்டிய ஒன்று. இது சம்மந்தமாக நான் எழுதிய கருத்துக்களை தற்காலிகமாக நீக்கியுள்ளேன். திருத்தங்கள் செய்து மீண்டும் இணைக்கின்றேன்.

Edited by sukan

  • தொடங்கியவர்

SUKAN அவர்களே நன்றிகள்.

தங்களின் விரிவான கருத்துக்களை காண மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

விரைவில் இணைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஆழமாக அலசுவோம் வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் திராவிடம் என்ற பதத்தை உச்சரிக்கும் கட்சிகள் எவையும் இருக்கவில்லை. இன்றும் இல்லை..!

தமிழ்நாடு உருவாக முதல் மாநிலப் பிரிப்புகள் நிகழ முதல்.. தென்னிந்தியாவில் தமிழ் மட்டுமன்றி தமிழ் சார்ந்த பிறமொழிகளும் பேசப்பட்டன. தென்னிந்திய மொழிகள், வட இந்திய மொழி வடிவத்தில் இருந்து மாறுபட்டிருந்ததும்.. தமக்குள் ஒருங்கிணையக் கூடிய பண்புகளைக் கொண்டிருந்ததாலும்.. திராவிடம் என்ற ஒன்றைப் புகுத்தி.. தென்னிந்தியர்களை திராவிடர்களாக இனங்காட்டிக் கொண்டனர். திராவிடர் என்பது தமிழர்களைக் குறிப்பதல்ல. அது தென்னிந்தியர்கள் அனைவரையும் குறிக்கும். கேரளா முதல் ஒரிசா வரை அது பரந்துள்ளது என்றே எண்ணுகிறேன்.

தனித் தமிழ் நாடு ( தனித்திராவிட நாட்டைத்தான் திமுக வினர் கேட்டனர்.. பின்னர்.. திராவிடம் என்பது தமிழ் தேசியத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்ததால்.. தனித் தமிழ்நாடு என்று மாற்றமடைந்தது என்பார்கள்).. ஹிந்தி எதிர்ப்பு என்பனவே திராவிடம் என்பதன் மீது தமிழர்களுக்கு ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணி இருக்க வேண்டும். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியல் ரீதியாக காங்கிரஸின் ஆதிக்கம் இந்தியா பூராவும் எழ ஆரம்பித்ததன் பின்னர்.. ஹிந்தி திணிப்பின் பின்னர்.. திராவிடம் என்றதன் அடிப்படையில் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைகள்.. ஹிந்து எதிர்ப்பு போராட்டங்கள் போன்றன முளைவிட்டன. பின்னர் அவை சுயநலங்களுக்காக உருவாகக்கப்பட்டவர்களாலேயே சிதைக்கபட்டுவிட்டன.. அல்லது அரசியல் தேவைகளுக்காக மட்டும் உச்சரிக்கப்பட்டு வருகின்றன.

திராவிட முழக்க மிட்ட திமுக வின் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடு இப்படி இருந்தது..

"திராவிடன் என்ற மரபு இனத்தை தி.மு.க முன் வைத்தது, தமிழ்த் தேசியக் கோட்பாட்டிற்குப் புறம்பான நிலைப்பாடு. தமிழன் என்ற தேசிய இனத்தை மட்டும் முன் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பிற்காலத்தில் இக்கழகம் நாட்டால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்று கூறிக் கொள்ளத் தொடங்கியது. இது தேசிய இனவரையறைக்குப் புறம்பான உளறல் மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தை ஊனப்படுத்தும் போக்கும் ஆகும்[1]"

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் ஆதரவு நிலை என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ராஜீவ் படுகொலை வரை நல்ல அரசியல் இலாபம் தரும் விடயமாக இருந்ததால்.. எல்லாத் திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டு குரல் கொடுத்தன. ராஜீவின் படுகொலைக்குப் பின்னர் அரசியல் தளம் மாறுபடுவதை அவதானித்த திராவிட முதலைத் கட்சிகள்.. தங்களின் சுய ரூபத்தைக் காட்டிக் கொண்டு.. ஈழத்தமிழரை தமிழராகவும் தங்களை திராவிடராகவும் எண்ணி தூர வைத்துவிட்டன. திராவிட முதலைத் கட்சிகளாக திமுகவும் அதிமுகவும் உள்ளன.

வை.கோ.. நெடுமாறன் ஐயா.. ராமதாஸ் ஐயா, (இன்னும் சில தலைவர்கள்) போன்றவர்கள் ஈழத்தமிழர்கள் மீது மாறாத அக்கறை கொண்டவர்கள். அவர்களின் அக்கறை அரசியலுக்கு அப்பால் மொழி, இன ரீதியானது. தமிழர்கள் என்ற பற்றுறுதிக்குள் அடங்கியது. இருந்தாலும் இவர்களின் ஆதரவுத்தளம் திராவிடக் கட்சிகளின் மத்திய விசுவாச இடுக்குப் பிடிக்குள் உட்பட்டே இருந்தது. அவர்களும் சில இக்கட்டான சமயங்களில் மெளனத்தை பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதில் அவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய கவலையும் அடங்காமல் இல்லை.

இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகக்கு வாக்கு வங்கி என்ற ஒன்று.. நிரந்தரம் என்ற படியால்.. அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் பிரச்சனை என்பது "ரொனிக்" போல. தேவை என்றால் குடிப்பார்கள். முதலுக்கு மோசம் வரும் என்று கண்டால் விட்டு விடுவார்கள்.

பெரியார் ஆதரவுக் கட்சிகளின் ஈழப்போராட்ட ஆர்வம் என்பது.. தமிழ்நாட்டில் நாதியற்றுக் கிடக்கும் அவர்களின் கட்சிகளுக்கு.. ஒரு விளம்பரம். அதுமட்டுமன்றி.. ஈழ விடுதலைப் போராளிகளின் சமூக விடுதலை என்பதில் அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே இருந்த சில ஒருமைப்பாடுகள் இரு தரப்பையும் நெருங்க வைத்தன. குறிப்பாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிரானவை. பெரும்பாலான பெரியார் ஆதரவுக் கட்சிகளை நடத்துவோர் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்டோர் அடங்கும் சமூகங்கள் என்று வரையறுக்கப்பட்டவற்றில் இருந்து வந்தவர்கள். தாம் வாழும் சூழலிலேயே தாம் புறக்கணிக்கப்படுவதை.. வெளிக்கொணர முயன்றும் மக்கள் ஆதரவை பெரிய திராவிடக் கட்சிகள் சுருட்டிக் கொண்டு விடுவதால்.. அரசியல் செல்வாக்கிழந்த நிலையில் உள்ள இந்தக் கட்சிகளுக்கு தங்கள் கொள்கையை என்றாலும் பரப்புரை செய்ய, கட்டிக்காக்க ஈழத்தமிழர் ஆதரவு நிலை என்பது உதவியாக அமைந்திருப்பதால் அவர்களின் அக்கறை ஈழத்தமிழர்கள் மீது இருக்கிறது. அது இந்த நிலை தமிழ்நாட்டில் இருக்கும் வரை இருக்கும். ஒருவேளை இவர்களும் பெரிய திராவிடக் கட்சிகள் போல.. ஆட்சிக்கு வந்துவிட்டால்.. மக்கள் ஆதரவைப் பெற்றுவிட்டால் மத்திய அரசின்.. செல்லப்பிள்ளைகள் ஆனாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை..!

ஆக தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ஈழத்தமிழர் ஆதரவு நிலை என்பது இன உணர்வுக்கு என்று இருப்பது சிறிதளவுதான். தமது கட்சி இருப்புக்கான தேவை.. அரசியல் தேவை கருதிய அவர்களின் ஆதரவே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை வரவும் போகவும் ஒரு எல்லைக்குள் கட்டுண்டு கிடக்கவும் காரணம். இருந்தாலும் சில தலைவர்களின் இன உணர்வு ரீதியான அக்கறை கரிசணை என்றும் மாறாத நிலையில் இருப்பது.. ஈழத்தமிழர்களுக்கு அவசியமான ஒன்றும் கூட. அதை ஈழத்தமிழர்கள் என்றென்றும் நன்றியுணர்வுடன் நோக்குதல் வேண்டும். அந்த ஆதரவுத்தளம் என்பதே ஈழத்தமிழர்களின் பின்னால் உலகத்தமிழர்கள் உள்ளனர் என்பதை உலகுக்கு அப்பப்ப உணர்த்த உதவி வருகிறது. சிங்களவர்களுக்கு அடிக்கடி வயிற்றில் புளிகரைக்கும் விடயமாகவும் உள்ளது. :P :D

உசாத்துணை.

1. http://www.tamilnation.org/forum/sabesan/050305dravida.htm

Edited by nedukkalapoovan

நல்ல அலசல் தான் ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் தானே இந்த அலசல்.

திராவிடக் கட்சிகள் தமது 'சுய' நலத்தால் தான் ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறார்கள் என்றால், ஈழத் தமிழர்களை ஆதரிக்காது வெளிப்படையாகவே எதிர்க்கும் இந்து இராம்,சோ,ஜெயலலிதா,சுபிரமணிய சாமி, நாராயணன்,மணி சங்கர அய்யர் போன்றோரும் தமது 'சுய ' நலத்திற்காகவா ஈழத் தமிழரை எதிர்க்கிறார்கள்?

இதைத் தானே நாக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அவரவர் அவர் அவரின் 'சுய' நலங்களின் அடிப்படையிலையே ஆதரவாகவும் எதிராகவும் இருக்கிறார்கள் என்று.

ஆரிய - திராவிடர் என்பது எவர் எவரின் சுயம்? இல்லை இல்லை ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் :3d_039:

இந்தியாவில் திராவிட கட்சிகள் என்பவை (கர்நாடகம், தெலுங்கு தேசம் உட்பட) வட இந்தியரின் பெருண்பாண்மை பலதை போக்கி காங்கிரஸ், ஜனதாதளம் போண்ற கட்ச்சிகளையும் பலவீனப்படுத்துவதுக்காக தென்னிந்தியர்களை ஒண்று படுத்தும் நோக்கில் உருவாக்க பட்டவை...

"திராவிடம்" என்னும் சொல்லே வடமொழி சொல்லின் உருவாக்கம்தான்... திராவிடம் எண்றால் பழமையான எண்று அர்த்தம்வரும்...

அதுக்கும் முந்தய காலங்களில் "" சிவசேனை, விஸ்வ ஹிந்து பரிசத், RSS" எனும் இந்து அமைபுகள் தோற்றம் கண்ட அதேவேளை ஜனதாதளத்தில் இருந்த இந்து அடிப்படை வாதிகள் பிரிந்து பாரதிய ஜனதா கட்ச்சியை தோற்று வித்தனர்...

இந்தியாவின் திராவிடர் கட்சிகள் என்பவற்றை விட இரண்டாவது பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி, மகாரஸ்ரிர சிவசேனை போண்ற இந்து முன்னணிகளும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன... அதையும் விட மத்திய அமைச்சராக இருந்த வட இந்தியர் ஜோர்ஜ் பெனாண்டஸ் அவர்கள் கூட தமிழீழதை ஆதரிக்கிறார்...

பாரதிய ஜனதாக் கட்சி மட்டும் அல்ல, சுப்பிரமணிய சுவாமியும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்தான். ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு சமஸ்டி ஆட்சி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இந்து ராமும் ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதைத்தான் விரும்புகிறார். துக்ளக் சோ என்று அனைவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள்தான்.

தயா!

இந்த இணைப்பை நீங்கள் தந்ததன் நோக்கம் என்ன?

தயா!

இந்த இணைப்பை நீங்கள் தந்ததன் நோக்கம் என்ன?

தங்கள் இன்னல்களை சொல்ல போன ஈழதமிழர்களுக்கு திராவிட தமிழ் தலைவன் கலைஞர் கொடுத்த முன்னுரிமை... தமிழ் பாஜக தலைவர்கள் கொடுத மரியாதை, இந்திய தேசிய தலைமையை சந்திக்க செய்து கொடுத்த எற்பாடு...... சந்திக்காமல் விடப்பட்ட தலைவர்கள் எண்டு பட்டியல் பெரிசாக இருக்கிறது..

ஹிந்தி சொல்லான திராவிடர் மட்டும் அல்ல இந்தியாவில் மனிதம் நிறைந்தவர்கள் பற்றிய தகவல்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.