Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

அட ஒரு சொல்லு சொல்லியிருக்கலாமே.

ஒருத்தரும் கேட்காததால் சொல்லவில்லை!

7 hours ago, ஈழப்பிரியன் said:

No No No

தம்பி தென்னாபிரிக்கா கப் தூக்குது.

பவுமா விளையாடாமல் விட்டால் சான்ஸ் இருக்கின்றது. அவரின் கையை, காலை வீக்கம் வர ஏதாவது இப்பவே செய்யுங்கள்!

எனது கணிப்பின்படி இந்தியா அல்லது அவுஸ்திரேலியாதான்! 

நரேந்திரமோடி மைதானத்தில் “ஜெய் ஸ்ரீராம்” சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல எந்த அணி ரெடி?

🤪

  • Haha 1
  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, கிருபன் said:

இந்த முறை எனக்கு நேரம் இல்லை. இத்தாலியில் 4 நகரங்களுக்கு விடுமுறைப் பயணம்! இன்னமும் முடியவில்லை!

குடும்பத்தோடு விடுமுறையை நல்ல முறையில் கழியுங்கள். கட்டாயம் ரோம் கொலோசியத்திற்கு உள்ளே சென்று பாருங்கள். ரோம சாம்ராஜ்யத்தின் செழிப்பும் வரலாறும் அறிந்து வந்து சொல்லுங்கள். வெளியில் நின்று பார்த்து விட்டு வந்து விடாதீர்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, புலவர் said:

ரோம் கொலோசியத்திற்கு உள்ளே சென்று பாருங்கள். ரோம சாம்ராஜ்யத்தின் செழிப்பும் வரலாறும் அறிந்து வந்து சொல்லுங்கள். வெளியில் நின்று பார்த்து விட்டு வந்து விடாதீர்கள்.

2018 இல் ரோமாபுரி முழுவதும், கொலோசியம், வத்திக்கான் உட்பட பார்த்தாயிற்று. 😀

இப்போது முக்கியமாக Florence உம்,  Pisa சாய்ந்த கோபுரமும், Milan உம் முடித்து Turin இல் நிற்கின்றேன்😃

Posted

நியூசிலாந்து அணி 401/6

நியூசிலாந்து அணி 401/6

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்று (04) நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகின்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ஓட்டங்களை பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பில் Rachin Ravindra, 108 ஓட்டங்களையும் Kane Williamson, 96 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Wasim Jr, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=179631

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 31/10/2023 at 15:42, ஈழப்பிரியன் said:

பையா அடுத்தடுத்த போட்டிகளில் அவுஸ் தோற்றால் என்ன நடக்கும்?

அவுஸ் அரை இறுதிக்கு வர முடியாதில்ல.

நியுசிலாந் ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா விளையாடிட்டு பின்னைய‌ 4ம‌ச்சும் தோல்வி அடைய‌ போகுது

இவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு போவ‌து ச‌ந்தேக‌ம் அண்ணா..............

Edited by பையன்26
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பையன்26 said:

நியுசிலாந் ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா விளையாடிட்டு பின்னைய‌ 5ஜ‌ந்து ம‌ச்சும் தோல்வி அடைய‌ போகுது

இவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு போவ‌து ச‌ந்தேக‌ம் அண்ணா..............

பாகிஸ்தான் வெற்றி.

Z
401/6
PAK FlagPAK
(25.3/25.3 ov, T:180) 200/1

Pakistan won by 21 runs (DLS method)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

பாகிஸ்தான் வெற்றி.

பாக்கிஸ்தான் ந‌ல்ல‌ அணி
சூதாட்ட‌த்தால் தான் அந்த‌ அணிக்கு ஒரு க‌ட்ட‌த்தில் பாதிப்பு வ‌ந்த‌து..........பாக்கிஸ்தானில் எத்த‌னையோ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் க‌ட‌ந்த‌ கால‌ங்களில் இருந்தும் இருக்கின‌ம்🥰🙏.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா
பாகிஸ்தான்
தென்னாபிரிக்கா
நியூசிலாந்து

அரையிறுதிக்கு போனால் நல்லது.

Quote

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா
பாகிஸ்தான்
தென்னாபிரிக்கா
நியூசிலாந்து

அரையிறுதிக்கு போனால் நல்லது.

 

அடுத்த‌ ம‌ச்
நியுசிலாந்துக்கு மிக‌வும் முக்கிய‌மான‌ ம‌ச்
பாக்கிஸ்தான‌ விட‌ நியுசிலாந் சிறு புள்ளி ப‌ட்டிய‌லில் முன்னுக்கு நிக்குது........

நியுசிலாந் அல்ல‌து பாக்கிஸ்தான் இந்த‌ இர‌ண்டில் ஒன்று சிமி பின‌லுக்கு போனால் ம‌கிழ்ச்சி..........இப்போது பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ச‌ரி இல்லை.............நியுசிலாந் வீர‌ர்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் இன்று ம‌ழையால் வெங்க‌ளூர் பிச்சும் ம‌ட்டைக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து...........401 பெரிய‌ இஸ்கோர்

நியுசிலாந்தில் இந்தியா வ‌ம்சாவ‌ழிய‌ சேர்ந்த‌ ர‌ச்சின் ர‌வின்ரா இந்த‌ உல‌க‌ கோப்பையில் தான் சிற‌ந்த‌ வீர‌ர் என்ற‌தை த‌ன‌து திற‌மையின் மூலம் காட்டி விட்டார்
மூன்று செஞ்ச‌ரி அடிச்சு நியுசிலாந் அணியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர் என்ர‌ பெருமையும் இவ‌ருக்கு தான்🙏.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானுக்கு எதிராக 401 ரன் குவித்தும் தோற்றுப் போன நியூசிலாந்து - மழையால் ஆட்டம் மாறியது எப்படி?

பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகக்கோப்பையில் முக்கியமான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நிர்ணயித்தும் பாகிஸ்தானிடம் தோற்றுப் போயுள்ளது. ஆட்டம் நடந்த பெங்களூருவில் தொடர்ந்து பெய்த மழை, நியூசிலாந்து அணிக்கு எமனாகிப் போனது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகக்கோப்பையின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து அடைந்த 4 தோல்விகளால் தற்போது இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது ஏன்?

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தான் அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் நீக்கப்பட்டு, 4 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டது கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கே வியப்பாக இருந்தது. சதாப் கான், உசாமா மிர் ஆகியோர் நீக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியது.

பெங்களூரு சின்னசாமி அரங்கு மிகவும் சிறைய மைதானம். இங்கு சுழற்பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து, நியூசிலாந்து பேட்டர்கள் வெளுக்கத் தொடங்கினால், ஸ்கோர் எகிறிவிடும். இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக, லைன் லென்த்தில் வீசக்கூடிய 4 வேகப்பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணியில் சேர்த்தது. புதிய பந்தில் லைன் லென்த்தில் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவை என்பதாலும் கூடுதல் வேகப் பந்துவீச்சாளர்களைச் சேர்த்தது.

நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானது என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட்டத்தில் களமிறங்கின. நியூசிலாந்து அணிக்கு டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா தொடக்கம் அளித்தனர்.

பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து சிறப்பான தொடக்கம்

ஹசன் அலி வீசிய 2வது ஓவரில் பவுண்டரி அடித்து ரவீந்திரா கணக்கைத் தொடங்கிவைத்தார். ஹசன் அலி வீசிய 4-வது ஓவரில் ரவீந்திரா, கான்வே தலா ஒருபவுண்டரி அடித்து 9 ரன்கள் சேர்த்தனர்.

அப்ரிடி வீசிய 7-வது ஓவரில் கான்வே 2 பவுண்டரிகளையும், ரவீந்திரா ஒரு பவுண்டரி என 13 ரன்களை விளாசினர். இப்திகார் முகமது பந்துவீசியும் அவரின் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 60 ரன்கள் சேர்த்திருந்தது.

ஹசன் அலி வீசிய 11வது ஓவரில் கான்வே 35 ரன்கள் சேர்த்தநிலையில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த வில்லியம்ஸன், ரவீந்திராவுடன் இணைந்தார்.

ஹாரிஸ் ராஃப் வீசிய 12வது ஓவரில் வில்லியம்ஸன் 2 பவுண்டரிகளை விளாசினார். நிதானமாக ஆடிய ரவீந்திரா 51பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். உலகக் கோப்பைத் தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்து 6 ரன்ரேட்டில் பயணித்தது.

20 ஓவர்களுக்குப்பின் நியூசிலாந்து அணியின் ரன்ரேட் உயரத் தொடங்கியது. வில்லியம்ஸன் அதிரடி ஆட்டத்துக்கு மாறி பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினார்.

சல்மான் வீசிய 23-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்தார். இப்திகார் வீசிய 25-வது ஓவரில் வில்லியம்ஸன் 2 பவுண்டரிகளையும், ரவீந்திரா ஒரு பவுண்டரி என 15 ரன்கள் சேர்த்தனர். வில்லியம்ஸன் 50 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

29 ஓவர்களில் நியூசிலாந்து அணி 200 ரன்களைக் குவித்து 30ஓவர்களில் 211 ரன்களைத் தொட்டது. 20 ஓவர்கள் முடிவில் 125ரன்களாக இருந்த நியூசிலாந்து அடுத்த 10 ஓவர்களில் 86 ரன்கள் அதாவது ஓவருக்கு 8.6 ரன்கள் சேர்த்தது.

ஹசன் அலி வீசிய 32-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒருபவுண்டரி, சிக்ஸரும், ரவீந்திரா பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தனர். வில்லியம்ஸன், ரவீந்திரா இருவருமே சதத்தை நெருங்கினர். ரவீந்திராவுக்கு பின்னர் இறங்கிய வில்லியம்ஸன் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரவீந்திராவின் மிரட்டல் ஃபார்ம்

இளம் வீரர் ரவீந்திரா 88 பந்துகளில் உலகக் கோப்பைத் தொடரில் 3வது சதத்தை நிறைவு செய்தார். அது மட்டுமல்லாமல் 24 வயதில் உலகக் கோப்பைத் தொடரி்ல் அதிக ரன்கள் குவித்த சச்சினின்(523) சாதனையையும் ரவீந்திரா முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பைத் தொடரில் மூன்று சதங்கள் விளாசிய முதல் நியூசிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் ரவீந்திரா பெற்றார்.

உலகக் கோப்பைத் தொடருக்கு முன் ரவீந்திரா 8 இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டும் சேர்த்திருந்தார், சராசரி 23 ரன்களாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் 8 இன்னிங்ஸில் 523 ரன்கள் சேர்த்து 74 சராசரியாக வைத்திருக்கும் 24 வயது ரவீந்திரா, 3 சதங்கள், 2அரைசதங்கள் அடித்து மிரட்டியுள்ளார்.

பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்

சதத்தை நோக்கி நகர்ந்த வில்லியம்ஸன் 95 ரன்கள் சேர்த்தநிலையில் இப்திகார் அகமது வீசிய 35வது ஓவரில் பக்கர் ஜமானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், ரவீந்திரா இருவரும் சேர்ந்து, 180 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்த சிறிது நேரத்தில் ரவீந்திராவும் ஆட்டமிழந்தார். முகமது வாசிம் வீசிய 36-வது ஓவரில், ரவீந்திரா 108 ரன்கள் சேர்த்தநிலையில் சவுத் சகீலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாப்மேன், மிட்ஷெல் அதிரடிஆட்டம்

4வது விக்கெட்டுக்கு சாப்மேன், டேரல் மிட்ஷெல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். குறிப்பாக அப்ரிடி வீசிய 39-வது ஓவரில் சாப்மேன் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 16 ரன்கள் சேர்த்தார். 40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.

40ஓவர்களுக்கு மேல் மிட்ஷெல் அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஹசன் அலி வீசிய 41-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என11 ரன்களை மிட்ஷெல் சேர்த்தார். ஆனால் ஹாரிஸ் ராஃப் வீசிய 42-வது ஓவரில் மிட்ஷெல் 29 ரன்கள் சேர்த்தநிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு சாப்மேன், மிட்ஷெல் இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த கிளென் பிலிப்ஸ், சாப்மேனுடன் சேர்ந்தார். ரன் சேர்க்க வேண்டிய அவசரத்தில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. நிதானமாக பேட் செய்து வந்த சாப்மேன் 39 ரன்கள் சேர்த்தநிலையில் முகமது வாசிம் வீசிய 45-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 318 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து, அடுத்த 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

மிட்ஷெல், சான்ட்னர் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டைச் சுழற்றினர். அப்ரிடி வீசிய 48-வது ஓவரில் சிக்ஸர் உள்ளிட்ட 13 ரன்களையும், முகமது வாசிம் வீசிய 49-வது ஓவரில் சான்ட்னர் ஒரு சிக்ஸர், பிலிப்ஸ் பவுண்டரி அடித்தனர். அதே ஓவரில் பிலிப்ஸ் 40 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.சான்ட்னர், மிட்ஷெல் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர்.

50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் சேர்த்தது. சான்ட்னர் 26 ரன்களும், லாதம் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசமான பந்துவீச்சை இன்று வெளிப்படுத்தினர். இப்திகார் அகமது, முகமது வாசிம் தவிர மற்றவர்கள் 9 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். ஒரு சுழற்பந்துவீச்சாளரைக் கூட அணியில் வைத்துக்கொள்ளாமல் வேகப்பந்துவீச்சை மட்டுமே நம்பி களமிறங்கி பாபர் ஆசம் கையைச் சுட்டுக்கொண்டுள்ளார்.

 
பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்துக்கு பெரிய கூட்டணி

நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதம்(108), கேப்டன் வில்லியம்ஸன்(95) ஆகியோர் மிகப்பெரிய பங்களிப்பு செய்து 180 ரன்கள் சேர்த்தனர். நடுவரிசை பேட்டர்களும் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் சேர்த்ததால் மிகப்பெரிய ஸ்கோரை நியூசிலாந்து எட்டியது. கடைசி 20 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி ஓவருக்கு 9 ரன்கள் வீதம் சேர்த்ததே மிகப்பெரிய ஸ்கோர் வந்ததற்கு காரணம்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் அணிகள் சேர்த்த 11 அதிகபட்ச ஸ்கோர்களில் 10 ஸ்கோர்கள் என்பது, அணியில் உள்ள டாப்-4 பேட்டர்கள் சேர்த்தவை என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் மிக அருகே இருக்கும் என்பதால், மிகப்பெரிய ஸ்கோரை நியூசிலாந்து எட்டியது.

பாகிஸ்தான் அதிர்ச்சித் தொடக்கம்

402 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஓவருக்கு 8 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் திட்டத்துடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

அப்துல்லா ஷபீக், பக்கர் ஜமான் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில், சவுதி வீசிய 2வது ஓவரில் ஷபீக் 4 ரன்னில் வில்லியம்ஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் ஆசம் களமிறங்கி, பக்கர் ஜமானுடன் சேர்ந்தார்.

பக்கர் ஜமான் ருத்ர தாண்டவம்

5-வது ஓவரில் இருந்து பக்கர் ஜமான் அதிரடியை வெளிப்படுத்தினார். போல்ட் வீசிய 5-வது ஓவரில் பக்கர் ஜமான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், பாபர் ஆசம் ஒரு பவுண்டரியும் என 17 ரன்களை வெளுத்தனர். மீண்டும் போல்ட் 6-வது ஓவரை வீச வந்தபோதும் குறிவைக்கப்பட்டார், அந்த ஓவரில் பக்கர் ஒருசிக்ஸரும், பாபர் 2 பவுண்டரிகள் என 16 ரன்களை விளாசினர்.

சவுதி வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்களை பக்கர் ஜமான் சேர்த்தார். சான்ட்னர் வீசிய இரு ஓவர்களிலும் ஜமான், பாபர் இருவரும் தலா ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு பாகிஸ்தான் நல்ல ரன்ரேட்டில் பயணித்தது. 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது.

ஈஷ் சோதி வீசிய 14-வது ஓவரில் பவுண்டரி அடித்து, 39 பந்துகளில் பக்கர் ஜமான் அரைசதம் அடித்தார். அதன்பின் பக்கர் ஜமான் அதிரடி ஆட்டத்துக்கு மாறி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

 
பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

பக்கர் ஜமான் சதம்

குறிப்பாக பிலிப்ஸ் வீசிய 15-வது ஓவரில் பக்கர் 2 சிக்ஸர்கள் உள்ளிட்ட 15 ரன்களையும், 17-வது ஓவரை மீண்டும் பிலிப்ஸ் வீச வந்தபோது அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 15ரன்கள் சேர்த்து தெறிக்கவிட்டார். சான்ட்னர் 20-வது ஓவரை வீசியபோது, அந்த ஓவரில் சிக்ஸர் அடித்து பக்கர் ஜமான் சதத்தை நிறைவு செய்தார். பக்கர் ஜமான் சதத்தில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. 22வது ஓவர்கள் வீசப்பட்டபோது, ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்திருந்தது.

இலக்கு மாற்றி அமைப்பு

மழையால் ஆட்டம் தடைபட்டதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணிக்கு இலக்கு 41 ஓவர்களில் 342 ரன்கள் சேர்க்குமாறு மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி, பாகிஸ்தான் அணி வெற்றி பெற 19.3 ஓவர்களில் 182 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் 8 ஓவர்கள்தான் வீச முடியும், கடைசிப் பவர்ப்ளே 34-வது ஓவரிலேயே எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பாகிஸ்தான் அணி 161 ரன்களுடன் வலுவாக இருந்ததால், பாகிஸ்தான் வெற்றிக்கு 182 ரன்கள் தேவைப்பட்டது. மழை நின்றவுடன் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

ஈஷ் சோதி வீசிய 23-வது ஓவரில் பாபர் ஆசம் 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 12 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார். சோதி வீசிய 25-வது ஓவரில் பாபர் ஆசம் ஒரு சிக்ஸரும், பக்கர் ஜமான் 2 சிக்ஸர்களையும் விளாசி 20 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

அப்போது ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் கூடுதலாக இருந்ததால், நம்பிக்கையுடன் இருந்தனர். பாகிஸ்தான் அணி வெற்றி பெற 93 பந்துகளில் 142 ரன்கள் தேவைப்பட்டது.

 
பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணி வெற்றி என்று அறிவிப்பு

பெங்களூருவில் தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்ததையடுத்து போட்டியை தொடர்ந்து நடத்தும் சூழல் இல்லை. நடுவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்து, போட்டி நடுவர்களிடம் நிலவரத்தைத் தெரிவித்தனர். ஏற்கெனவே டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 21 ரன்கள் கூடுதலாக பாகிஸ்தான் இருந்ததால், பாகிஸ்தான் 21 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது 25.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 179 ரன்கள் சேர்த்திருந்தது, அதே 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்கள் என கூடுதலாக 21 ரன்கள் சேர்த்திருந்தது.

பக்கர் ஜமான் 126 ரன்களிலும், பாபர் ஆசம் 66 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதும் பக்கர் ஜமானுக்கு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து மெத்தனப் பந்துவீச்சு

நியூசிலாந்து அணி 401 ரன்களைச் சேர்த்துவிட்டோமே என்ற மெத்தனத்துடன் பந்துவீசியதுதான் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். 401 ரன்களை எப்படி பாகிஸ்தான் சேஸிங் செய்ய முடியும் என்று நினைத்து லைன் லென்த் மாறி, துல்லியத்தன்மை இன்றி பந்துவீசினர். இதனால்தான், பெங்களூரு போன்ற சின்ன மைதானத்தில் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன.

இதுபோன்ற சிறிய மைதானத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க அதிக வாய்ப்புள்ளதால், பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தை மாற்றாமல் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் வீச வேண்டும். அதை நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் போல்ட், பிலிப்ஸ் செய்யவில்லை. போல்ட் 6 ஓவர்கள் வீசி 50 ரன்கள், பிலிப்ஸ் 42, சோதி 44 ரன்கள் என வாரி வழங்கினர். பக்கர் ஜமான் சேர்த்த 126 ரன்களில் மட்டும் 8 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் அதாவது, 98 ரன்கள் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 
பாகிஸ்தான் vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரையிறுதி - பாகிஸ்தான், நியூசிலாந்து நிலை என்ன?

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 8 போட்டிகளில் 4 வெற்றிகள், 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் பிளசுக்கு முன்னேறி 0.036 என்று இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து அணியுடன் மட்டும் ஒரு போட்டி இருக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வென்றுவிட்டால் பாகிஸ்தான் அணி 10 புள்ளிகள் பெறும்.

நியூசிலாந்து அணி தற்போது 8 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் 0.398 என பாகிஸ்தானைவிட உயர்ந்திருக்கிறது. கடைசி ஆட்டத்தில் இலங்கை அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று, நிகர ரன்ரேட்டை உயர்த்தினால் மட்டும்தான் அரையிறுதிக்குள் செல்ல முடியும். இல்லாவிட்டால், வாய்ப்பு பாகிஸ்தான் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது.

ஏனென்றால், பாகிஸ்தான் அணிதான் கடைசியாக நவம்பர் 11ம் தேதி மோதுகிறது. நியூசிலாந்து அணிக்கு 9-ம் தேதியே லீக் ஆட்டங்கள் முடிந்துவிடுகிறது. அப்படியிருக்கும்போது, பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல எத்தனை ஓவர்களில் இலங்கையை வெல்ல வேண்டும், எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும், நிகர ரன்ரேட்டை எவ்வாறு உயர்த்தலாம் என்பது குறித்த ப்ளூபிரின்ட் கிடைத்துவிடம். இது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில் “ நாங்கள் பேட்டிங்கைத் தொடங்கும்போது எங்களை நம்பினோம். நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். அந்த நேரத்தில் மழையும் குறுக்கிட்டது, இந்த அளவு மழையை எதிர்பார்க்கவில்லை. அடுத்த போட்டியில் வென்றால் ஏதாவது நடக்கும், பொறுத்திருந்து பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cw024kwkrpxo

  • கருத்துக்கள உறவுகள்
Posted
RESULT
36th Match (D/N), Ahmedabad, November 04, 2023, ICC Cricket World Cup
 
 
Australia FlagAustralia                                   286
England FlagEngland                        (48.1/50 ov, T:287) 253/10

Australia won by 33 runs

  • கருத்துக்கள உறவுகள்
Posted

wcpt.jpg

ஆட்ட முடிவில் தரவரிசைwcpt1.jpg

Posted

ஆப்கானிஸ்தானுக்கு 4 ம் இடத்துக்கான தெரிவு  உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, nunavilan said:

ஆப்கானிஸ்தானுக்கு 4 ம் இடத்துக்கான தெரிவு  உள்ளது. 

நியுசிலாந் இல‌ங்கையுட‌ன் பெரிய‌ வெற்றிய‌ ஈட்ட‌ போராடும்
பாக்கிஸ்தான் இங்லாந்தை பெரிய‌ இல‌க்கில் வெல்ல‌னும்

நியுசிலாந் இல‌ங்கையுட‌ன் பெரிய‌ வெற்றி பெற்றால் சிமி பின‌ல் தோத்தா சொந்த‌ நாட்டுக்கு கில‌ம்ப‌ வேண்டிய‌து தான் 

அப்கானிஸ்தான் அவுஸ்ரேலியாவை வெல்லும் என்று நான் நினைக்க‌ல‌
அவுஸ் அப்கானிஸ்தான் கூட‌ தோத்தா த‌ங்க‌ட‌ மான‌ம் போய் விடும் என்று வெல்ல‌ தான் நினைப்பினம் 
பாப்போம் விளையாட்டில் எதும் ந‌ட‌க்க‌லாம்.........

  • Like 1
Posted
4 minutes ago, பையன்26 said:

நியுசிலாந் இல‌ங்கையுட‌ன் பெரிய‌ வெற்றிய‌ ஈட்ட‌ போராடும்
பாக்கிஸ்தான் இங்லாந்தை பெரிய‌ இல‌க்கில் வெல்ல‌னும்

நியுசிலாந் இல‌ங்கையுட‌ன் பெரிய‌ வெற்றி பெற்றால் சிமி பின‌ல் தோத்தா சொந்த‌ நாட்டுக்கு கில‌ம்ப‌ வேண்டிய‌து தான் 

அப்கானிஸ்தான் அவுஸ்ரேலியாவை வெல்லும் என்று நான் நினைக்க‌ல‌
அவுஸ் அப்கானிஸ்தான் கூட‌ தோத்தா த‌ங்க‌ட‌ மான‌ம் போய் விடும் என்று வெல்ல‌ தான் நினைப்பினம் 
பாப்போம் விளையாட்டில் எதும் ந‌ட‌க்க‌லாம்.........

இந்தியாவோடு இறுதி விளையாட்டில் அவுஸ் வந்தால் அவுஸ் வெல்லும். என்ன நினைக்கிறீர்கள்  இதைப்பற்றி பையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

wcpt.jpg

ஆட்ட முடிவில் தரவரிசைwcpt1.jpg

உல‌க‌ கோப்பை வ‌ர‌லாற்றில் இங்லாந் புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ் ம‌ட்ட‌த்தில் நிப்ப‌து இதுவே முத‌ல் முறை ஆகும்

அடுத்த‌ விளையாட்டு
பாக்கிஸ்தான் எதிர் இங்லாந்

பாக்கிஸ்தான் சிமி பின‌லுக்கு போக‌ எப்ப‌டியாவ‌து இங்லாந்தை தோக்க‌டிக்கும்

ப‌ட்ல‌ருக்கு இந்த‌ உல‌க‌ கோப்பை ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை

ப‌ட்ல‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாட‌ முத‌ல் ச‌ம‌செட் கில‌ப்புக்கு 2010க‌ளில் விளையாடின‌ போது ப‌ட்ல‌ரின் விளையாட்டை பார்த்து ர‌சிக்க‌ தொட‌ங்கி நான்

ஆனால் ப‌ட்ல‌ர் த‌ல‌மையில் இங்லாந் அணி ப‌டு தோல்வி அடைந்த‌து வ‌ருத்த‌ம் அளிக்குது 😥

3 minutes ago, nunavilan said:

இந்தியாவோடு இறுதி விளையாட்டில் அவுஸ் வந்தால் அவுஸ் வெல்லும். என்ன நினைக்கிறீர்கள்  இதைப்பற்றி பையா?

இந்தியான்ட‌ ப‌ந்து வீச்சுக்கு ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை எதிர் அணியின‌ர் விக்கேட்டை ப‌றி கொடுக்கின‌ம் அண்ணா

இந்தியாவின் வேக‌ப் ப‌ந்து எதிர் அணியின‌ர‌ மிர‌ட்டுது

அவுஸ்சின் ப‌ந்து வீச்சில் என‌க்கு ந‌ம்பிக்கை இல்லை அண்ணா

அவுஸ் க‌ப்ட‌ன் ந‌ல்ல‌ திட்ட‌மிட‌ல் செய்து அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தினால் இந்தியாவுக்கு நெருக்க‌டி கொடுக்க‌லாம் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

உல‌க‌ கோப்பை வ‌ர‌லாற்றில் இங்லாந் புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ் ம‌ட்ட‌த்தில் நிப்ப‌து இதுவே முத‌ல் முறை ஆகும்

உலகத்துக்கு கிரிக்கட்டையே அறிமுகப்படுத்தியவர்களுக்கு இந்த நிலமையா?

3 hours ago, பையன்26 said:

அப்கானிஸ்தான் அவுஸ்ரேலியாவை வெல்லும் என்று நான் நினைக்க‌ல‌
அவுஸ் அப்கானிஸ்தான் கூட‌ தோத்தா த‌ங்க‌ட‌ மான‌ம் போய் விடும் என்று வெல்ல‌ தான் நினைப்பினம் 
பாப்போம் விளையாட்டில் எதும் ந‌ட‌க்க‌லாம்..

இந்த ஒரு படபடப்பிலேயே அவுஸ் தோற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து வெளியேற்றம்: ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து நான்காவது வெற்றி - 1999 வரலாறு திரும்புகிறதா?

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 நவம்பர் 2023

உலகக்கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வெளியேற்றி ஆஸ்திரேலியா தனது அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கிக் கொண்டுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை 33 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்தை முந்தி மூன்றாவது இடத்திற்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

வார்னர், ஹெட் ஏமாற்றம்

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை, ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், மார்ஷ்க்கு பதிலாக கேமரூன் கிரீன், ஸ்டாய்னிஷ் சேர்க்கப்பட்டனர்.

டேவிட் வார்னர், டிராவிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் பவுண்டரியுடன் 9ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. வோக்ஸ் வீசிய 2வது ஓவரில் ஹெட் 11 ரன்கள் சேர்த்தநிலையில் ஸ்லிப்பில் நின்றிருந்த ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஸ்மித், வார்னருடன் இணைந்து ஆடினார். வார்னரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 6-வது ஓவரைவீசிய வோக்ஸ் பந்துவீச்சில் மிட்விக்கெட் திசையில் வில்லேயிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பவர்ப்ளே ஓவருக்குள் ஆஸ்திரேலியா 2விக்கெட்டுகளை இழந்து, 48 ரன்கள் சேர்த்தது.

7-வது முறையாக ரஷித்-ஸ்மித்

3வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். ஸ்மித் பவுண்டரிகள் பெரிதாக அடிக்காமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார், ஆனால், லாபுஷேன் சில பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்தது.

அரைசதத்தை நோக்கி நகர்ந்த ஸ்மித் 44 ரன்கள் சேர்த்தநிலையில் ரஷித் வீசிய 22-வது ஓவரில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக அதில் ரஷித் பந்துவீச்சில் ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் கூட்டணி 75 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 3 ரன்கள் சேர்த்தநிலையில் ரஷித் பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிவந்த லாபுஷேன் 63 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதி ஓவர்களை கட்டுக்கோப்புடன் வீசியதால், லாபுஷேன், கேமரூன் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். இருப்பினும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்களைச் சேர்த்தனர்.

மார்க் உட் வீசிய 33-வது ஓவரில், லாபுஷேன் கால்காப்பில் வாங்கி 71 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்தனர். ்டுத்து வந்த ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஷ், கேமரூனுடன் சேர்ந்தார். இருவரும் அடித்து ஆட முற்பட்டாலும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியதால், ரன் சேர்க்க கடும் சிரமப்பட்டனர். 40ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்தது.

41-வது ஓவரை வீசிய வில்லேயின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி கேமரூன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் அடித்து ஆட ஸ்டாய்னிஷ் முற்பட்டு விக்கெட்டை இழந்தார். லிவிங்ஸ்டோன் வீசிய 44வது ஓவரில் ஸ்டாய்னிஷ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து, கடைசிப்பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 35 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கம்மின்ஸ் 10 ரன்கள் சேர்த்தநிலையில் மார்க்வுட் வீசிய 45ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெய்லெண்டர்களின் போராட்டம்

41 முதல் 45ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டெய்லண்டர்கள் ஆடம் ஸம்பா, ஸ்டார்க் இருவரும் கடைசி நேரத்தில் சில பவுண்டரிகள் அடித்து ரன் சேர்க்கப் போராடினர். மார்க்வுட் வீசிய 47-வது ஓவரில் ஸம்பா 2 பவுண்டரிகளை விளாசினார்.

முக்கிய வீரர்களை வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடைசி வரிசையில் டெய்லண்டர்கள் விக்கெட்டைச் சாய்க்க கடுமையாகப் போராடினர். ஆனாலும், ஸம்பா, ஸ்டார்க் இருவரும் ரன் சேர்க்கப் போராடினர்.

வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஸம்பா 29 ரன்னில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 3வது பந்தில் ஸ்ட்ராக் 10 ரன்கள் சேர்த்தநிலையில் மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார்.

49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோர்ஸ் 4 விக்கெட்டுகளையும், அதில் ரஷித், மார்க் உட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேர்ஸ்டோ, ரூட் ஏமாற்றம்

287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆரம்பமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் பேர்ஸ்டோ ரன் ஏதும் சேர்க்காமல் விக்கெட் கீப்பர் இங்கலிஸிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்துவந்த ஜோ ரூட், மலானுடன் சேர்ந்தார். ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் ஜோ ரூட் அடித்த பந்து கவர் திசையில்நின்றிருந்த ஸ்டாய்னிஷ் கைகளுக்குச் சென்றும் அவர் பிடிக்காமல் கோட்டைவிட்டார்.

ஸ்டார்க் வேகப்பந்துவீச்சுக்கு திணறிய ரூட் 13 ரன்னில் இங்கிலிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஸ்டோக்ஸ், மலான் நிதான ஆட்டம்

மலான், பென் ஸ்டோக்ஸ் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் பேட் செய்ததால், ரன்ரேட் மெல்ல உயர்ந்தது. 11வது ஓவரிலிருந்து 15வது ஓவர்கள் வரை ஒரு பவுண்டரிகூட இங்கிலாந்து அடிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள்தான் சேர்த்திருந்தது.

21 ஓவர்களுக்குப்பின் மலான், ஸ்டோக்ஸ் அதிரடியில் இறங்கி பவுண்டரி, சிக்ஸர் விளாசியதால் 22வது ஓவரில் இங்கிலாந்து 100 ரன்களை எட்டியது. 63 பந்துகளில் அரைசதம் அடித்த டேவிட் மலான் நீண்டநேரம் நிலைக்கவில்லை.

கம்மின்ஸ் வீசிய 23-வது ஓவரில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து 50 ரன்னில் மலான் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 84 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்லருக்கு என்னாச்சு!

அடுத்துவந்த பட்லர், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். இந்தத் தொடர் முழுவதுமே பட்லர் தனது இயல்பான ஆட்டத்துக்கு வரமுடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கேப்டன் பொறுப்பு சமையாக மாறிவிட்டதா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த போட்டிகளைப் போன்று இந்த ஆட்டத்திலும் பட்லர் ஏமாற்றினார்.

ஆடம் ஸம்பா வீசிய 25-வது ஓவரில் பட்லர் ஒரு ரன்னில் கேமரூன் கீரீனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிதானமாக ஆடினார். 30 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டோக்ஸ் அரைசதம்

பொறுமையாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸுக்கு துணையாக மொயின் அலியும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தார்.

ஆடம் ஸம்பா வீசிய 36-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 64 ரன்களில் ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக ஆடக்கூடிய லிவிங்ஸ்டோன் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆடம் ஸம்பா வீசிய 40-வது ஓவரில் மொயின் அலி 42 ரன்னில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டேவிட் வில்லே, வோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காகப் போராடினர். 42 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 75 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசிவரிசை பேட்டர்கள் மட்டுமே இருந்ததால், வெற்றி விலகிச் சென்றது.

ஹேசல்வுட் வீசிய 44-வது ஓவரில் வில்லே 15 ரன்களில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 216 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கித் தடுமாறியது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெய்ல் எண்டர்கள் போராட்டம்

ஸ்டாய்னிஷ் வீசிய 48-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 32ரன்கள் சேர்த்திருந்த நிலையில் லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹசல்வுட் வீசிய 49-வது ஓவரில் ரஷித்20 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

48.1ஓவர்களில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

1999 வரலாறு திரும்புகிறதா?

1999-ம் ஆண்டு உலகக்கோப்பையில் லீக் சுற்றில் தட்டுத்தடுமாறி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த ஆஸ்திரேலியாவுக்கு அதன் பிறகு அனைத்துப் போட்டிகளையும் வென்றால்தான் அரையிறுதி என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் இருந்து அந்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் 3 போட்டிகள், அரையிறுதி, இறுதி என அனைத்திலும் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. ஸ்டீவ வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றி, அடுத்த 12 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணியாக அதனை மாற்றியது. 3 உலகக்கோப்பைகளை அந்த அணி வரிசையாக வென்றது.

அதேபோல், நடப்பு உலகக்கோப்பையின் தொடக்கத்தில் தோல்விகளால் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, தற்போது அதிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 1999 வரலாற்றை ஆஸ்திரேலியா மீண்டும் நிகழ்த்திக் காட்டுமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cxe1n1jgy9do

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/11/2023 at 16:09, நிழலி said:

இவ்வளவு கேவலமாகவா சிங்கள அணி இந்தியாவுடன் தோற்க வேண்டும்..

இந்தியாவுடன் எவர் விளையாடினாலும் அதற்கு எதிரான அணிக்கு மட்டுமே ஆதரவு கொடுப்பதனால் இந்தியாவுடன் விளையாடும் போது மட்டுமே நான் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுப்பது. இன்று தோற்பார்கள் என்று தெரியும், ஆனால் இந்தளவுக்கு மோசமாக என நினைக்கவில்லை.

 

On 2/11/2023 at 16:37, பையன்26 said:

ஆசியா கோப்பையிலும் இந்தியா
இல‌ங்கைய‌ இதே ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கின‌து

இந்த‌ தோல்வி வெக்க‌க் கேடான‌ தோல்வி

எத்த‌ன‌ ஜ‌ம்ப‌வாங்க‌ள் விளையாடின‌ இல‌ங்கை அணியில் இப்ப‌டி குப்பை வீர‌ர்க‌ளா................

 

On 2/11/2023 at 16:43, ஈழப்பிரியன் said:

 

இன்று பல நல்ல செய்திகள் வருகின்றன.

இப்படி ஒரு தோல்வியை இந்த நேரத்தில் பார்க்க மிகமிக சந்தோசமாக உள்ளது.

 

spacer.png

 

spacer.png

 

398215368_724380363060272_68189164616793

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து நொக் அவுட் ஆனது : அரை இறுதியை நோக்கி நகர்கிறது அவுஸ்திரேலியா

05 NOV, 2023 | 06:21 AM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் (36ஆவது லீக்) போட்டியில் நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தை உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற்றிய அவுஸ்திரேலியா, அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.

உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறும் இங்கிலாந்துக்கு, பாகிஸ்தானில் 2025இல் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் பறிபோயுள்ளது.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் வெற்றி இலகுவாக வந்துவிடவில்லை.

மத்திய வரிசையில் கிறிஸ் வோக்ஸும் பின்வரிசையில் டேவிட் வில்லி, ஆதில் ரஷித் ஆகியோரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

எனினும் கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாயிற்று.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா, மத்திய வரிசை வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான ட்ரவிஸ் ஹெட் (11), டேவிட் வோர்னர் (15) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது. (38 - 2 விக்.)

ஆனால், ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.

ஸ்டீவன் ஸ்மித் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய மானுஸ் லபுஷேன் 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (178 - 5 விக்.)

இந் நிலையில் அவுஸ்திரேலியா 220 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்படலாம் என கருதப்பட்டது.

ஆனால், மத்திய வரிசை வீரர்கள் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கையை 286 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கெமரன் க்றீன் (47), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (35), அடம் ஸம்பா (29) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீ;ச்சில் கிறிஸி; வோக்ஸ் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க் வூட் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்தின் ஆரம்பம் மிக மோசமாக அமைந்தது. ஜொனி பெயாஸ்டோவ் முதல் பந்திலும், ஜோ ரூட் (13) 5ஆவது ஓவரிலும் ஆட்டம் இழந்தனர். (19 - 2 விக்.)

அதனைத் தொடர்ந்து டாவிட் மலான் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

3ஆவது விக்கெட்டில் அவர்கள் இருவரும் 84 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டாவிட் மலான் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஒரு ஓட்டத்துடன் களம் விட்டகன்றார். (106 - 4 விக்.)

எனினும் பென் ஸ்டோக்ஸும் மொயீன் அலியும் 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.

பென் ஸ்டோக்ஸ் 64 ஓட்டங்களுடனும் மொயீன் அலி 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

மத்திய வரிசையில் கிறிஸ் வோக்ஸ் (32), டேவிட் வில்லி (10), ஆதில் ரஷித் (29) ஆகியோர் இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்ய எடுத்த முயற்சி கைகூடாமல் போனது.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அடம் ஸம்ப்பா

 

அரை இறுதிக்கான வாய்ப்புகள்

நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இன்னும் 9 லீக் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் இதுவரை இந்தியா (14 புள்ளிகள்), தென் ஆபிரிக்கா (12 புள்ளிகள்) ஆகிய இரண்டு அணிகள் மாத்திரமே அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.

10 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலிருக்கும் அவுஸ்திரேலியா மீதம் உள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுவிடும்.

தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 ஆணிகளில் ஒன்று 4ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேற முயற்சிக்கவுள்ளன. இந்த 3 அணிகளில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. மற்றைய இரண்டு அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் இருக்கிறது.

 

அணிகள் நிலை (04-11-2023 வரை)

 

poi.JPG

https://www.virakesari.lk/article/168525

  • கருத்துக்கள உறவுகள்
Posted

399086293_724376146394027_11991331487490

@தமிழ் சிறி இந்தப் படத்தைப் பார்த்ததும் இலங்கை அணி பட்டிலில்த் தான் விளையாடக் கூடிய ஆட்கள் என எண்ணிவிட்டேன்.

மலர் வளையத்தை பின்னர் தான்  கவனித்தேன்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
37th Match (D/N), Eden Gardens, November 05, 2023, ICC Cricket World Cup
India FlagIndia                                              326/5
South Africa FlagSouth Africa                     (17/50 ov, T:327) 64/6

South Africa need 263 runs from 33 overs.

Current RR: 3.76  • Required RR: 7.96  • Last 5 ov (RR): 27/3 (5.40)

Win Probability:SA 3.97%  IND 96.03%

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, nunavilan said:

இந்தியாவோடு இறுதி விளையாட்டில் அவுஸ் வந்தால் அவுஸ் வெல்லும். என்ன நினைக்கிறீர்கள்  இதைப்பற்றி பையா?

தென் ஆபிரிக்கா

இல‌ங்கை வீர‌ர்க‌ள் போல் விளையாடின‌ம்...........சொந்த‌ மண்ணில் ஹிந்தியாவை வெல்வ‌து க‌டின‌ம் அண்ணா😯 

11 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிக்க அணிக்கு என்ன நடந்தது?

அது தான் புரியாத‌ புதுரா இருக்கு 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.