Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவைத் தகர்த்த நியூசிலாந்து

உலகக்கோப்பை 2023 - பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அபிஜித் ஸ்ரீவஸ்தவா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 25 நிமிடங்களுக்கு முன்னர்

உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா அணி பெற்றது.

இந்தியா ஏற்கனவே 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அணி தென்னாப்பிரிக்கா அணியாகும்.

இப்போது, அரையிறுதிக்குள் நுழைய ஒரேயொரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன.

எனினும் நேற்று இரவு (நவ. 09) இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெறும் 23.2 ஓவர்களில் வெற்றி பெற்ற நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.743-ஐ எட்டியதோடு, அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விடவும் முன்னிலையில் உள்ளது.

இன்று (நவ. 10), வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் அகமதாபாத்தில் மோத உள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட் மைனஸில் உள்ளது. -0.338 என்ற நிகர ரன் ரேட்டுடன் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி 0.036 என்ற நிகர ரன் ரேட்டுடன் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

 
உலகக்கோப்பை 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

எனினும், தில்ஷன் மதுஷங்க மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா இருவரும் இணைந்து 10-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் அடித்தனர். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும்.

இருந்தபோதிலும் இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து அபாரமாக பந்துவீச்சு செய்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக இலங்கையை வென்றது.

இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை நியூசிலாந்து அணி பலப்படுத்த விரும்புகிறது.

இந்த வெற்றியின் மூலம் 160 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.74 ஆக அதிகரித்து அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட வெகுவாக முன்னேறியுள்ளது.

இந்த தோல்விக்குப் பிறகு இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனால் 2025ம் ஆண்டில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இலங்கை விளையாடும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராஃபிக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில், பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?

உலகக்கோப்பை 2023 - பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றியால் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதாவது இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணியைவிட நிகர ரன் ரேட் சிறப்பாக இருக்கும் வகையில் பெரிய வித்தியாசத்தில் இருக்க வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. எனவே, முதலில் பாகிஸ்தான் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. சாதாரண வெற்றி பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்ல அனுமதிக்காது.

சனிக்கிழமை (நவ. 11) இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் விளையாடி 300 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் இந்த இலக்கை 6.1 ஓவர்களில் மட்டுமே அடைய வேண்டும். அதாவது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் 6 ரன்கள் எடுத்தாலும், அவர்களால் 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும்.

இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 100 ரன்களில் ஆல் அவுட் செய்தாலும், 2.5 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்.

அதேசமயம், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து அணியை வெறும் 13 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும்.

அதாவது, அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்.

நியூசிலாந்துடனான போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங், "பாகிஸ்தானுக்கு இப்போது அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் போட்டியில் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவர்கள் அவ்வளவு ரன்களை எடுக்காமல் கூட போகலாம்," என தெரிவித்தார்.

”இதுபோன்ற சூழ்நிலையில், 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், பாகிஸ்தான் 450 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இல்லையென்றால், நியூசிலாந்து அணி முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் விளையாடும்" என தெரிவித்தார்.

"பாகிஸ்தான் முதலில் பேட் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு டைம்டு அவுட் முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நகைச்சுவையாகக் கூறியதாக பாகிஸ்தானின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

அரையிறுதிப் போட்டியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிய ஆப்கானிஸ்தான்

உலகக்கோப்பை 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேசமயம், ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் மைனஸில் இருப்பதால் அதைவிட பெரிய இலக்கு அவர்களுக்கு முன்னால் உள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டும். இதனால் அதன் நிகர ரன் ரேட் நியூசிலாந்தை விட சிறப்பாக இருக்கும்.

இதனுடன், முன்பே சொல்லப்பட்டது போன்று பாகிஸ்தான் வெற்றி பெறாது அல்லது வெற்றிபெற வேண்டிய பெரிய வித்தியாசத்தை அடையாமலும் இருக்க வேண்டும்.

2023 உலகக்கோப்பைக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்று, நவ. 10 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறவுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv2zrx9981jo

  • Replies 546
  • Views 32.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருங்கோ ஏராளன்  சும்மா நீட்டிமுழக்காமல் இந்தியா,  தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகியவைதான் முதல் மூன்று அணிகள் என்று சொல்ல வேண்டியதுதானே......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவைத் தகர்த்த நியூசிலாந்து

உலகக்கோப்பை 2023 - பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அபிஜித் ஸ்ரீவஸ்தவா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 25 நிமிடங்களுக்கு முன்னர்

உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா அணி பெற்றது.

இந்தியா ஏற்கனவே 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அணி தென்னாப்பிரிக்கா அணியாகும்.

இப்போது, அரையிறுதிக்குள் நுழைய ஒரேயொரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன.

எனினும் நேற்று இரவு (நவ. 09) இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெறும் 23.2 ஓவர்களில் வெற்றி பெற்ற நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.743-ஐ எட்டியதோடு, அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விடவும் முன்னிலையில் உள்ளது.

இன்று (நவ. 10), வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் அகமதாபாத்தில் மோத உள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட் மைனஸில் உள்ளது. -0.338 என்ற நிகர ரன் ரேட்டுடன் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி 0.036 என்ற நிகர ரன் ரேட்டுடன் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

 

உலகக்கோப்பை 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

எனினும், தில்ஷன் மதுஷங்க மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா இருவரும் இணைந்து 10-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் அடித்தனர். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும்.

இருந்தபோதிலும் இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து அபாரமாக பந்துவீச்சு செய்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக இலங்கையை வென்றது.

இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை நியூசிலாந்து அணி பலப்படுத்த விரும்புகிறது.

இந்த வெற்றியின் மூலம் 160 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.74 ஆக அதிகரித்து அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட வெகுவாக முன்னேறியுள்ளது.

இந்த தோல்விக்குப் பிறகு இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனால் 2025ம் ஆண்டில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இலங்கை விளையாடும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராஃபிக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில், பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?

உலகக்கோப்பை 2023 - பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றியால் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதாவது இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணியைவிட நிகர ரன் ரேட் சிறப்பாக இருக்கும் வகையில் பெரிய வித்தியாசத்தில் இருக்க வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. எனவே, முதலில் பாகிஸ்தான் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. சாதாரண வெற்றி பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்ல அனுமதிக்காது.

சனிக்கிழமை (நவ. 11) இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் விளையாடி 300 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் இந்த இலக்கை 6.1 ஓவர்களில் மட்டுமே அடைய வேண்டும். அதாவது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் 6 ரன்கள் எடுத்தாலும், அவர்களால் 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும்.

இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 100 ரன்களில் ஆல் அவுட் செய்தாலும், 2.5 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்.

அதேசமயம், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து அணியை வெறும் 13 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும்.

அதாவது, அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்.

நியூசிலாந்துடனான போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங், "பாகிஸ்தானுக்கு இப்போது அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் போட்டியில் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவர்கள் அவ்வளவு ரன்களை எடுக்காமல் கூட போகலாம்," என தெரிவித்தார்.

”இதுபோன்ற சூழ்நிலையில், 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், பாகிஸ்தான் 450 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இல்லையென்றால், நியூசிலாந்து அணி முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் விளையாடும்" என தெரிவித்தார்.

"பாகிஸ்தான் முதலில் பேட் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு டைம்டு அவுட் முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நகைச்சுவையாகக் கூறியதாக பாகிஸ்தானின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

அரையிறுதிப் போட்டியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிய ஆப்கானிஸ்தான்

உலகக்கோப்பை 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேசமயம், ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் மைனஸில் இருப்பதால் அதைவிட பெரிய இலக்கு அவர்களுக்கு முன்னால் உள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டும். இதனால் அதன் நிகர ரன் ரேட் நியூசிலாந்தை விட சிறப்பாக இருக்கும்.

இதனுடன், முன்பே சொல்லப்பட்டது போன்று பாகிஸ்தான் வெற்றி பெறாது அல்லது வெற்றிபெற வேண்டிய பெரிய வித்தியாசத்தை அடையாமலும் இருக்க வேண்டும்.

2023 உலகக்கோப்பைக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்று, நவ. 10 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறவுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv2zrx9981jo

நியூசிலாந்து தகர்க்கேலை இலங்கை தான் தகர்த்தது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இஞ்ச பாருங்கோ ஏராளன்  சும்மா நீட்டிமுழக்காமல் இந்தியா,  தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகியவைதான் முதல் மூன்று அணிகள் என்று சொல்ல வேண்டியதுதானே......!  😂

தற்போதைக்கு இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா முதல் மூன்று அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகி உள்ளன. 4 ம் இடத்துக்கான போட்டி தொடர்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

தற்போதைக்கு இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா முதல் மூன்று அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகி உள்ளன. 4 ம் இடத்துக்கான போட்டி தொடர்கிறது.

4ஆம் இடம் நியூசிலாந்து என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மக்ஸ்வெல் ஆடியது போல் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் விளையாடினாலும் நிகர ரன் விகிதத்தை எட்டுவது கடினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிசங்க, மென்டிஸ், சமரவிக்கிரம, அசலங்க, தீக்சன போன்ற வீரர்களை கொண்ட அணி எவ்வாறு மோசமாக விளையாடமுடியும் ? - ஹர்சா போக்லே

Published By: RAJEEBAN   10 NOV, 2023 | 11:46 AM

image

நிசங்க, மென்டிஸ், சமரவிக்கிரம, அசலங்க, தீக்சன போன்ற வீரர்களை கொண்ட அணி எவ்வாறு இவ்வாறு மோசமாக விளையாடமுடியும் என இந்திய கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்சா போக்லே கேள்வி எழுப்பியுள்ளார்

இலங்கை அணி 2023 உலக கிண்ணப்போட்டிகளில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியுள்ள இந்த தருணத்தில் கிரிக்கெட் வர்ணணையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்

இலங்கை அணி பதிலளிக்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன  நிசங்க, மென்டிஸ், சமரவிக்கிரம, அசலங்க தீக்சன  போன்ற வீரர்களை கொண்ட அணி - எவ்வாறு இவ்வாறு மோசமாக விளையாடமுடியும் என ஹர்சா போக்லே கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னுடைய கருத்து வெளியிலிருந்து பார்ப்பவனின் கருத்து என்னுடைய கருத்து முற்றிலும் மிகச்சரியானதாக இல்லாமலிருக்கலாம்.

இடைக்காலம் என்ற வார்த்தை தொடர்ச்சியாக இருக்க முடியாது இலங்கை மீண்டும் எழுச்சி பெறும் என நினைக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை அணியின் ஏமாற்றமளித்த உலககிண்ணதொடர் முடிவிற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ள வர்ணணையாளர் பர்வீஸ் மகரூவ் சிறந்த விளையாட்டிற்கான சாயல்கள் தென்பட்டாலும்போட்டித்தொடர் முழுவதும்  அவர்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமாக விளையாடினார்கள் என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் வீரர் என்ற அடிப்படையில் தற்போதைய வீரர்கள் எங்களின் பாணியில் விளையாடுவார்கள் என்றே எதிபார்த்தேன் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என மஹரூவ் தெரிவித்துள்ளார்.

நீண்டகால குறுகிய கால இலக்குகளை முன்வைத்து சில கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168966

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் இன்றைய போட்டி ஏனோ தானோ என்ற மாதிரி விளையாடுகிறார்கள்.

ஏதோ சூது இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌க் கிழ‌மையுட‌ன் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிவ‌டைவ‌து

 

பாக்கிஸ்தான் சிமி பின‌லுக்கு போகுவில் பெரிய‌ வெற்றி பெற‌னும்

 

இங்லாந் க‌ட‌சி விளையாட்டை வெற்றியுட‌ன் முடிக்க‌ பாப்பார்க‌ள்............அது பாக்கிஸ்தானுக்கு பின்ன‌டைவு தான் 

 

 

14 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிக்காவின் இன்றைய போட்டி ஏனோ தானோ என்ற மாதிரி விளையாடுகிறார்கள்.

ஏதோ சூது இருக்குமோ?

இது தென் ஆபிரிக்காவுக்கு முக்கிய‌த்துவ‌ம் இல்லாத‌ விளையாட்டு

 

அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே சிமி பின‌லுக்கு போய் விட்டார்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🥰🙏.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LIVE
42nd Match (D/N), Ahmedabad, November 10, 2023,    ICC Cricket World Cup

Afghanistan FlagAfghanistan                                  244
South Africa FlagSouth Africa                     (38.2/50 ov, T:245) 188/5

South Africa need 57 runs in 70 balls. 

Current RR: 4.90  • Required RR: 4.88  • Last 5 ov (RR): 26/1 (5.20)

Win Probability:SA 75.36%  AFG 24.64%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதியில் இந்தியாவுடன் மோதுவது கடும் சவாலாக இருக்கும்: கேன் வில்லியம்சன்

Capture-11.jpg

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும் 2 ஆவது அரை இறுதியில் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுவது உறுதியாகிவிட்டது.

15ஆம் திகதி நடைபெறும் முதல் அரைஇறுதியில் இந்தியாவுடன் மோதுவது நியூசிலாந்தா அல்லது பாகிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ரன்ரேட்டில் நல்ல நிலையில் உள்ள நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து கெப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-

அரை இறுதியில் விளையாடுவது சிறப்பானது. ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவது கடும் சவாலானதாக இருக்கும். அதை எதிர்நோக்கி இருக்கிறோம்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக செயற்பட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆடுகளத்தில் பந்து மெதுவாக சென்றது. ரன் சேஸிங்கில் பெட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதிக்கு முன்னேற முடியும். இது மிகவும் கடினம் என்பதால், நியூசிலாந்து ஏறக்குறைய அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

https://thinakkural.lk/article/280843

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RESULT

 

Afghanistan FlagAfghanistan                       244
South Africa FlagSouth Africa               (47.3/50 ov, T:245) 247/5

South Africa won by 5 wickets (with 15 balls remaining)

wcpt2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

400689839_729056512592535_58198676134197

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

400689839_729056512592535_58198676134197

இதில் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் 200ர‌ன்ஸ் அடிச்ச‌ முத‌ல் வீர‌ர் ( ச‌சின் ) ச‌சின் 2010ம் ஆண்டு அடிச்ச‌வ‌ர்

 

உல‌க‌ கோப்பையில் 200ர‌ன்ஸ் அடிச்ச‌ முத‌ல் வீர‌ர் (மெக்ஸ்வேல் ) அதும் ஆக‌ குறைந்த‌ ப‌ந்தில்

அப்கானிஸ்தான் ப‌ல‌மான‌ அணி அவ‌ர்க‌ளுக்கு எதிரா அடிச்ச‌து பாராட்ட‌ த‌க்க‌து👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா வெற்றி - இறுதி வரை போராடிய ஆப்கானிஸ்தான்

இது பழைய ஆப்கானிஸ்தான் அல்ல! தோற்றாலும் மனங்களை வென்ற ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 நவம்பர் 2023

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது கடைசிப் போட்டி.

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய அஸ்மத்துல்லாஹ் 97 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கோட்சீ 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 76 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் வான் டர் டஸ்ஸன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இது பழைய ஆப்கானிஸ்தான் இல்லை!

ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த உலகக்கோப்பையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஓர் அணி என்றால் அது ஆப்கானிஸ்தான்தான். கடந்த 2015 மற்றும் 2019 உலகக்கோப்பைகளில் ஸ்காட்லாந்து அணியை மட்டுமே வீழ்த்திய பழைய ஆப்கானிஸ்தான் அணி கிடையாது இது.

நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் என மூன்று முன்னாள் சேம்பியன்களை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது.

தங்களது நாட்டின் அரசு தாலிபன்களின் கையில் இருக்கும் நிலையில் மிகவும் குறைந்த அளவிலான நிதியையும் வசதியையும் வைத்துக்கொண்டு நடப்பு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

எப்போதுமே ரஷித் கான் போன்ற ஒரு சில வீரர்கள்தான் ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால், இந்த முறை நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், இப்ராஹிம் ஸத்ரான் உள்ளிட்ட வீரர்கள் ஆப்கன் அணிக்காக சிறப்பாக விளையாடி ஜொலிக்கின்றனர். ஆப்கன் அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் இந்த உலகக்கோப்பையில் 250க்கும் அதிகமாக ரன்கள் அடித்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பையில் தங்களது கடைசிப் போட்டியான தென்னாப்பிரிக்கா உடனான இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. ஏனென்றால் இந்தப் போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்றால் மட்டுமே 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தின் இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலையில் அதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது.

ஆனால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்கானிஸ்தான் அணி 10 புள்ளிகளோடு தொடரில் இருந்து வெளியேறும். 4வது இடம் பிடித்து அரையிறுதிக்குச் செல்லும் அணி பெற்றிருக்கும் அதே புள்ளியைத்தான் தாங்களும் பெற்றோம் என்ற தன்னம்பிக்கையோடு ஆப்கானிஸ்தான் இந்தத் தொடரை நிறைவு செய்ய முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை.

 

தனி ஒருவனாகப் போராடிய அஸ்மத்துல்லாஹ்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றியின் விளிம்பிற்குச் சென்று மேக்ஸ்வெல்லின் அசுர ஆட்டத்தால் வெற்றியைப் பறிகொடுத்தது. அந்தப் போட்டியில் சதம் விளாசிய இப்ராஹிம் ஸத்ரானும் குர்பாஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஒன்பதாவது ஓவரில் கேஷவ் மஹாராஜ் வீசிய பந்தில் குர்பாஸ் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரே ஸத்ரானும் ரன்களுக்கு ஜெரால்ட் கோட்ஸீயிடம் விக்கெட்டை இழந்தார். பவ்ர்ப்ளே முடியும்போது ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்த ஓவரிலேயே கேஷவ் மஹாராஜ் வீசிய பந்தில் அஸ்மத்துல்லாஹ் அவுட்டானார். இருபது ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழந்து 78 ரன்கள்தான் அடித்திருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு அஸ்மத்துல்லாஹ் ஒமர்சாயோடு சேர்ந்து 49 ரன்கள் கொண்டுவரப் பங்காற்றிய ரஹ்மத் ஷா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த இம்ரான் அலிகிலும் 12 ரன்களுக்கு அவுட்டானார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முகமது நபியும் 2 ரன்களில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மற்றொரு பக்கம் அஸ்மத்துல்லாஹ் ஒமர்சாய் பொறுப்பாக விளையாடி 71 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

 

அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க பவுலர் கோட்சீ

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒமர்சாயோடு சேர்ந்து அடுத்து வந்த ரஷித் கான் வழக்கம்போல அதிரடியாக 4, 5 சிக்சர்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கத்திற்கு மாறாக 30 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட்டானார். 40 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 173/7 என்ற நிலையில் இருந்தது.

நூர் அகமது 26 ரன்களுக்கு அவுட்டாக ஒமர்சாய் மற்றும் தனி ஆளாக ஆடி வந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒமர்சாய் 107 பந்துகளில் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி பந்தில் நவீன் உல் ஹக் ரன் அவுட்டாக 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் இழந்து 244 ரன்கள் அடித்திருந்தது.

தென்னாப்பிரிக்கா சார்பில் கோட்சீ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். லுங்கி இங்கிடியும் கேஷவ் மஹாராஜும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபெலுக்வாயோ ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

 

தென்னாப்பிரிக்காவிற்கு நெருக்கடி கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலர்கள்

ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென்னாப்பிரிக்க அணி 245 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா அணிக்கு ஒரு நிலையான ஆரம்பத்தை அளித்தனர்.

பவர்ப்ளே முடிவில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது. 11வது ஓவரில் முஜீப் வீசிய பந்தில் 23 ரன்கள் எடுத்திருந்த பவுமா அவுட்டானார். இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில்ல் டி காக் உள்ளார்.

இந்தப் போட்டியிலும் டி காக்கின் ஃபார்ம் தொடர்ந்தது. பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நபி வீசிய 14வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கச் சென்று 41 ரன்களுக்கு டி காக் அவுட்டானார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம் மற்றும் வேன் டர் டஸ்ஸன் இணை 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கானின் சுழலில் மார்க்ரம் சிக்கி விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த க்ளாசனும் 10 ரன்களுக்கு ரஷித் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில், சிறப்பாக விளையாடிய டஸ்ஸன் 66 பந்துகளில் அரை சதம் கடந்தார். நபி வீசிய 38வது ஓவரில் மில்லர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நபியிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். சீரான இடைவெளியில் தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நாற்பது ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 192/5 என்ற நிலையில் இருந்தது. கடைசி பத்து ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 53 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.

 

வெற்றியைத் தேடித் தந்த வேன் டர் டஸ்ஸன்

ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆறாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து ஆடிய டஸ்ஸன் மற்றும் ஃபெலுக்வாயோ ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த பார்ட்னெர்ஷிப்பை உடைக்கத் தவறிய ஆப்கானிஸ்தான் அணி வெற்றியைக் கைவிட்டது.

தென்னாப்பிரிக்க அணி 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 247 ரன்கள் அடித்து இந்தத் தொடரில் தனது 7வது வெற்றியைப் பெற்றது.

சிறப்பாக ஆடிய டஸ்ஸன் 95 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். ஃபெலுக்வாயோ தனது பங்கிற்கு 39 ரன்கள் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முஜீப் 1 விக்கெட் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளோடு 2ஆம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகளோடு 6வது இடத்தில் இந்த உலகக்கோப்பை தொடரை நிறைவு செய்தது.

https://www.bbc.com/tamil/articles/ce7p5nndxr3o

  • கருத்துக்கள உறவுகள்

ஆர‌ம்ப‌ சுற்று கிரிக்கேட் முடிந்து விட்ட‌ன‌

 

நாளை ஒரு போட்டி இருக்கு இந்தியாவுக்கும் நெத‌ர்லாந்துக்கும் இது முக்கிய‌த்துவ‌ம் இல்லா போட்டி

 

அதிக‌ம் எதிர் பார்த்த‌ பாக்கிஸ்தான் ம‌ற்றும் இங்லாந் வெளிய‌.............இங்லாந் இப்ப‌டி ப‌டு தோல்வி அடைந்து வெளி ஏறும் என்று நான் நினைத்து கூட‌ பார்க்க‌ வில்லை............

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் பின்னான தரவரிசை.
நாளைய போட்டியின் பின்பும் புள்ளி கூடினாலும் தரவரிசை மாறாதென நினைக்கிறேன்.

pt2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தும் சம்பியன்ஸ் கிண்ண வாய்ப்பை பற்றிப்பிடித்துக்கொண்டது பங்களாதேஷ்

11 NOV, 2023 | 07:30 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பூனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்ளாதேஷ் தோல்வி அடைந்த போதிலும் சிறந்த நிகர ஓட்ட வித்தியாச அடிப்படையில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில்    விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டது.

இன்றைய போட்டியில் பங்களாதேஷின் வழமையான அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் விளையாடாததால் அவருக்குப் பதிலாக நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தலைவராக விளையாடினார்.

அவுஸ்திரேலிய அணியில் மிச்செல் ஸ்டார்க், க்ளென் மெக்ஸ்வெல் ஆகியோருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித், சோன் அபொட் ஆகிய இருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.  

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 307 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 44.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டியது.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியா விரட்டிக்கடந்த மிகப் பெரிய வெற்றி இலக்கு இதுவாகும்.

இந்த வெற்றியில் மிச்செல் மார்ஷ் குவித்த அதிரடி சதம், டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் பெற்ற அரைச் சதங்களும் அவர்களிடையே பகிரப்பட்ட இரு வேறு இணைப்பாட்டங்களும் பெரும் பங்காற்றின.

இதேவேளை, அவுஸ்திரேலியா 22.4 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை கடக்கத் தவறிதால் சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு இருந்த அற்ப சொற்ப வாய்ப்பு அற்றுப்போனது.

ட்ரவிஸ் ஹெட் (12) மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலிய ஆட்டம் கண்டதுடன் பங்களாதேஷ் மகிழ்ச்சியால் மிதந்தது. ஆனால், பங்களாதேஷின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

டேவிட் வோர்னரும் மிச்செல் மார்ஷும் 2ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவைப் பலமான நிலையில் இட்டனர்.

டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

தொடர்ந்து மிச்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 175 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கினர்.

மிக வேகமாகத் துடுப்பெடுத்தாடிய மிச்செல் மார்ஷ் 132 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 9 சிக்ஸ்கள் உட்பட  ஆட்டம் இழக்காமல் 177 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் மிகத் திறமையாக அவுஸ்திரேலிய இழந்து 306 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் 6 துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக பங்களாதேஷ் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் தலா 36 ஓட்டங்களைப் பெற்றதுடன் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (106 - 2 விக்.)

அவர்களைத் தொடர்ந்து நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ஷன்டோ 45 ஓட்டங்களையும் ரிதோய் 74 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து மஹ்முதுல்லா (32), முஷ்பிக்குர் ரஹிம் (21), மெஹிதி ஹசன் மிராஸ் (29) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் அடம் ஸம்பா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 22ஆக உயர்த்திக்கொண்டார். அவரை விட சோன் அபொட் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/169083

கடைசிப் போட்டியில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

11 NOV, 2023 | 10:29 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஏற்கனவே உலக சம்பியன் பட்டத்தைப் பறிகொடுத்திருந்த இங்கிலாந்து, தனது கடைசிப் போட்டியில் ஈட்டிய ஆறுதல் வெற்றியுடனும் பாகிஸ்தான் கடைசிப் போட்டியில் அடை;நத தோல்வியால் ஏமாற்றத்துடனும் நாடு திரும்பவுள்ளன.

பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜொனி பெயாஸ்டோவ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டிருந்தன.

நடப்பு உலக சம்பியனாக இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இங்கிலாந்து ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தது.

அடுத்த போட்டியில் பங்களாதேஷை வெற்றிகொண்ட இங்கிலாந்து அதன் பின்னர் தொடர்ச்சியாக 5 தோல்விகளைத் தழுவியது.

எனினும் கடைசி 2 போட்டிகளில் நெதர்லாந்தையும் பாகிஸ்தானையும் வெற்றிகொண்டு  இங்கிலாந்து  திருப்தி அடைந்தது.

பாகிஸ்தானுடனான தனது கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ஓட்டங்களைக் குவித்தது.

இங்கிலாந்தின் முன்வரிசை வீரர்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை வலுவான நிலையில் இட்டனர்.

டாவிட் மலான், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் 80 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

டாவிட் மாலன் 31 ஓட்டங்களையும் ஜொனி பெயாஸ்டோவ் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து 60 ஓட்டங்களைப் பெற்ற ஜோ ரூட்டும் 84 ஓட்டங்களைப் பெற்ற பென் ஸ்டோக்ஸும் 3ஆவது விக்கெட்டில் 132 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

மத்திய வரிசையில் அணித் தலைவர் ஜொஸ் பட்லர் 27 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 30 ஓட்டங்களையும் பின்வரிசையில் டேவிட் வில்லி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் வசீம் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தானின் கடைசி விக்கெட் ஜோடியான ஹரிஸ் ரவூபும் மொஹமத் வசிமும் இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

38ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது 9ஆவது விக்கெட் வீழ்த்ததால் பாகிஸ்தான் 200 ஓட்டங்களை நெருங்காது என எண்ண வைத்தது.

ஆனால், ஹரிஸ் ரவூப், மொஹமத் வசிம் ஆகிய இருவரும் 10ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அசத்தினர்.

அவர்கள் இருவரது இணைப்பாட்டமே பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

ஹரிஸ் ரவூப் 23 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 36 ஓட்டங்களையும் மொஹமத் வசிம் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட மற்றொரு பின்வரிசை வீரரான ஷஹின் ஷா அப்றிடி 25 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக பாகிஸ்தானின் முதல் இரண்டு விக்கெட்கள் 10 ஓட்டங்களுக்கு சரிந்தன.

எனினும், பாபர் அஸாம் 38 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வான் 36 ஓட்டங்களையும் அகா சல்மான் 51 ஓட்டங்களையும் பெற்று அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில்   டேவிட் வில்லி 56  ஓட்டங்களுக்கு   3 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொயீன் அலி 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: டேவிட் வில்லி.

https://www.virakesari.lk/article/169085

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் .......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானுடான போட்டியை வென்றிருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் - மஹேல கருத்து - பந்துவீச்சாளர்களின் உடற்தகுதி குறித்தும் விமர்சனம்

Published By: RAJEEBAN     12 NOV, 2023 | 01:40 PM

image

பாக்கிஸ்தான் அணியை வென்றிருந்தால் உலக கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணியின் பயணம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ள மகேல ஜெயவர்த்தன பந்து வீச்சாளர்களின் உடற்தகுதி மற்றும் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

wQPI1-pr.jpg

நாங்கள் இந்தியாவிற்கு சென்றதும் ஆடுகளங்களை அவதானித்ததும் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடவேண்டும் சிறந்த வேகத்துடன் விளையாடவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டோம்.

நாங்கள் இது குறித்து துடுப்பாட்டவீரர்களுடன் கலந்துரையாடினோம்,

இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்களிற்கு அது பழக்கமில்லாத விடயம் உலக கிண்ணத்திற்கு முன்னர் அவர்கள் அவ்வாறான பாணியில் விளையாடவில்லை

ஏனென்றால் நாங்கள் இலங்கையில் விளையாடிய ஆடுகளங்கள் நாங்கள் அவ்வாறு விளையாடுவதற்கு அனுமதிக்கவில்லை எங்களின் ஆடுகளங்கள் அவ்வாறானவை.

இது எங்களின் பலம் என்ன நாங்கள் எவ்வாறு விளையாடப்போகின்றோம் என்பது குறித்து எங்களை நாங்களே கேள்வி கேட்பதற்கான தருணம்.

உள்ளுர் போட்டிகள் மெதுவான ஆடுகளங்களில் விளையாடப்படுகின்றன இதன் காரணமாக சிறந்த ஆடுகளங்களில் துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் சொட்களின் தெரிவுகளை நம்பமாட்டார்கள்.அவர்கள் அதற்கு பழகவில்லை.

ஆகவே உலககிண்ணத்தில் உயர்தர பந்துவீச்சிற்கு எதிராக விளையாடுவது மிகவும் சவாலான விடயமாக காணப்பட்டது.

இது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம் துடுப்பாட்ட வீரர்கள்வேகமாக ஆடுமுவதற்கு ஆடுவதற்கு அனுமதித்தோம்.

முதல் இரண்டுபோட்டிகளில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் துரதிஸ்டவசமாக நாங்கள் வெற்றிபெறவில்லை.

என்னை பொறுத்தவரை எங்களின் நிலைமைய பாதித்த முக்கியமான போட்டி பாக்கிஸ்தானிற்கு எதிரானது நாங்கள் 340 ஓட்டங்களை பெற்றோம்,ஆனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை

நாங்கள் அந்த போட்டியில் பாக்கிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியிருந்தால் அவ்வாறான ஒரு போட்டி தொடரில் நிலைமை வேறு மாதிரியானதாக இருந்திருக்கும் - நம்பிக்கை போன்றவைகள் வேறு மாதிரியானதாக காணப்பட்டிருக்கும்.

நாங்கள் ஒரு பந்து வீச்சு குழாமை உருவாக்கி பயன்படுத்த எண்ணியிருந்தோம் ஆனால் அந்த ஐந்து வீரர்களாலும் விளையாட முடியவில்லை.

அந்த ஐந்து பந்து வீச்சாளர்களும் கடந்த 16 மாதங்களில் ஒரு தொடரில் கூட ஒன்றாக எங்கள் அணிக்காக விளையாடவில்லை.

இது நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விடயம் - எங்களின் சிறந்த வீரர்களை எப்படி காயங்கள் இல்லாமல் தக்கவைப்பது என்பது நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விடயம்.

வீரர்களுக்கும் இதில் தனிப்பட்ட பொறுப்புள்ளது.

அவர்கள் தங்கள் உடற்தகுதி நிலையில் எவ்வாறு இறுக்கமான கட்டுப்பாட்டை பேணுவது என்பது குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியம்

தஷுன் சானக்கவுக்கு தலைமைத்துவம் வழங்கப்படக்கூடாது என எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169107

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பாக்கிஸ்தான் அணியை வென்றிருந்தால் உலக கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணியின் பயணம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்

குருவி இருந்த இடத்தில் இருந்திருந்தால் சூடு பட்டிருக்கும்.

இழகிய இம்பைக் கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி அடிப்பான் என்ற மாதிரி

இந்தியா வெறிகொண்டு அடித்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ 
முத‌ல் அர்சூனா ர‌ன்ன‌துங்கா சொன்னார்

1996க‌ளில் இருந்த‌ இல‌ங்கை அணிய‌ விட‌ 2023க‌ளில் இருக்கும் இல‌ங்கை  அணி மிக‌வும் ப‌ல‌மான அணி என்று ஹா ஹா

இவ‌ரின் இந்த‌ அறிக்கைக்கு ப‌ல‌ர் ந‌க்க‌லா சித்தார்க‌ள்

1996க‌ளில் விளையாடின‌
அர‌வின்த‌ டி சில்வாவை 
போல் ஒருத‌ன் கூட‌ இல்லை இப்போது உள்ள‌ இல‌ங்கை அணியில்

அர‌விந்த‌டிசில்வாக்கு நிக‌ர் அர‌விந்த‌டிசில்வா தான் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

குருவி இருந்த இடத்தில் இருந்திருந்தால் சூடு பட்டிருக்கும்.

இழகிய இம்பைக் கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி அடிப்பான் என்ற மாதிரி

இந்தியா வெறிகொண்டு அடித்திருக்கு.

ஜெவ‌த்த‌னா சொன்ன‌தில் ப‌ல‌ உண்மை இருக்கு

பாக்கிஸ்தான் கூட‌ இல‌ங்கை வென்று இருக்க‌ வேண்டும்............அந்த‌ தோல்விக்கு குட்டி ம‌லிங்கா என்று அழைக்க‌ப் ப‌டும் Matheesha Pathirana தான் கார‌ண‌ம் 10ஓவ‌ர் போட்டு 90ர‌ன்ஸ் விட்டு கொடுத்தார்

தென் ஆபிரிக்கா கூட‌ விளையாடின‌ விளையாட்டில் 95ர‌ன்ஸ் விட்டு கொடுத்தார்

முத‌ல் இர‌ண்டு ம‌ச் தோல்விக்கும் இவ‌ரே தான் கார‌ண‌ம்...........அத‌ற்கு பிற‌க்கு இவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வில்லை...............

ம‌லிங்கா சாதிச்ச‌ அள‌வு இவ‌ர் கிரிக்கேட்டில் சாதிக்க‌ போவ‌து கிடையாது இவ‌ரால் அணிக்கு தான் பின்ன‌டைவு

 

20ஓவ‌ர் விளையாட்டில் வேனும் என்றால் ப‌ய‌ன் ப‌டுத்த‌லாம் அதும் ப‌வ‌ர் பிலே ஓவ‌ரில் இவ‌ரிட்டை ப‌ந்து கொடுக்கிறேல‌ 

 

கூட‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விடுவார் என்று............

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி ட்ரீட்: டாப்-5 வீரர்களின் அதிரடியால் இந்தியா புதிய சாதனை - நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் சதம், ரோஹித், கில், கோலி அரைசதம் ஆகியோரின் பங்களிப்பால் நெதர்லாந்து அணி எட்டமுடியாத வகையில் 411 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

பெங்களூருவில் நடந்துவரும் உலகக் கோப்பைத் தொடரின் கடைசி லீக் ஆட்ட்தில் இந்திய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி ஆடி வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எனும் இமாலய ரன் குவிப்பை எட்டியுள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யர் 128(நாட்அவுட்), கே.எல்.ராகுல்(102), கில்(51), ரோஹித் சர்மா(61), கோலி(51) என 5 பேட்டர்களும் ஆகச்சிறந்த பங்களிப்பு செய்ததால் மிகப்பெரிய இலக்கை இந்திய அணி எட்டியது.

ரோஹித் - கில் கூட்டணி அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த கோலி நன்கு பயன்படுத்தி ரன்களைக் குவித்தார். தொடக்கத்தில் நிதானத்தைக் கடைபிடித்த கோலி, அதன்பின் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தார். 4வது விக்கெட்டுக்கு ராகுல், ஸ்ரேயாஸ் கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை எட்ட முடியாத நிலைக்கு கொண்டு சென்றனர்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து நன்றாக பேட்டர்களை நோக்கி எழும்பி வந்ததால், ஷாட்களை அடிக்க வசதியாக இருந்தது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாக இருந்தது.

டாஸ் வென்று இந்தியா முதல் பேட்டிங்

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயமான ஒன்றாகவே அமைந்துள்ளது. இருப்பினும் எந்த ஆட்டத்தையும் இந்திய அணி குறைத்து மதிப்பிடவில்லை என்பதால் நெதர்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்திலும் முழு பலத்துடன் களமிறங்கியது. பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஜடேஜா, குல்தீப் ஆகியோருடன் இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில், ரோஹித் விளாசல்

ரோஹித் சர்மா, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். தத் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் 2 பவுண்டரிகளை விளாசி 11 ரன்களைக் குவித்தார். ஆர்யன் தத் வீசிய 5-வது ஓவரிலும் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதன்பின் கில் அதிரடியில் இறங்கி நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

வேன் பிரீக் வீசிய 6-வது ஓவரில் கில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகல் உள்ளிட்ட 16 ரன்கள் சேர்த்தார். ஆக்கர் மேன் வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்ததால், ரன்ரேட் 9 ரன்கள் வீதத்தில் உயர்ந்தது. வேன் மீக்ரன் வீசிய 10-வது ஓவரில் கில் பவுண்டரி, சிக்ஸர் என 10 ரன்கள் சேர்த்தார்.

பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சுப்மான்கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 12வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் அரைசதம் அடித்தபின் நீண்டநேரம் நிலைக்கவில்லை.

வேன் மீக்ரன் வீசிய 12-வது ஓவரில் நிதானமானாருவிடம் கேட்ச் கொடுத்து கில் 51ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து கில்-ரோஹித் சர்மா கூட்டணி பிரிந்தனர்.

அடுத்துவந்த விராட் கோலி, ரோஹித்துடன் இணைந்தார். அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 44 பந்துகளில் வேன் மீக்கரன் வீசிய 14-வது ஓவரில் பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார்.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிக சிக்ஸர் சாதனை

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை இன்று எட்டினார். ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா எட்டினார். இதற்கு முன்2015ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஒரு காலண்டர் ஆண்டில் 18 இன்னிங்ஸில் 58 சிக்ஸர்கள் விளாசி அதிகபட்ச சிக்ஸர் சாதனையை வைத்திருந்தார், அதை முறியடித்த ரோஹித் சர்மா 24 இன்னிங்ஸில் 59 சிக்ஸர்களை விளாசினார்.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கங்குலியின் 20 ஆண்டு சாதனை தகர்ப்பு

அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 20 ஆண்டுகால சாதனையையும் ரோஹித் சர்மா தகர்த்துவிட்டார். உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்களை விளாசிய கேப்டன் என்ற வகையில் கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா தகர்த்தார். 2003 உலகக் கோப்பைத் தொடரில் கங்குலி 11 இன்னிங்ஸில் 465 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால் இந்த உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா 9 இன்னிங்ஸில் 503 ரன்கள் சேர்த்து கங்குலியின் 20 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். இதில் ஒரு சதம், 3 அரைசதங்களும் அடங்கும்.

அரைசதம் கடந்து நிதானமாக ஆடிவந்த ரோஹித் சர்மா 18-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். டீ லீட் வீசிய 18வது ஓவரில் லாங் ஆன் திசையில் பரேசியிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்னில் (2சிக்ஸர்,8பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் சேர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி அரைசதம்

தொடக்கத்தில் விராட் கோலி நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். அதன்பின் கோலி அதிரடியில் இறங்கினார். வேன் பீக்வீசிய 22-வது ஓவரில் கோலி ஒரு சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஓவருக்கு ஒரு பவுண்டரியை கோலி விளாசினார்.

நிதானமாக ஆடிய கோலி 53 பந்துகளி்ல் ஒருநாள் போட்டியில் 71-வது அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் 18 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்திருந்த கோலி அதன்பின் ரன் சேர்க்கும் கியரை மாற்றி, அடுத்த 35 பந்துகளில் 4 3ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி 29-வது ஓவரில் 200 ரன்களை எட்டியவுடன் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார். வேன் டெர் மெர்வ் வீசிய சுழற்பந்துவீச்சை கணிக்கத் தவறியதால் க்ளீன் போல்டாகி 51 ரன்னில் கோலி ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் சில நிமிடங்கள் மவுனமாகினர். அதன்பின் கோலிக்கு வழக்கம் போல் கைதட்டி வழியனுப்பினர். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸுடன் சேர்ந்தார். ராகுலுக்கு இது சொந்த மண் என்பதால் களமிறங்கும்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரேயாஸ் - ராகுல் சதம்

மிகுந்த பொறுமையாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 84 பந்துகளி்ல் சதம் அடித்தார். உலகக் கோப்பைத் தொடரில் ஸ்ரேயாஸ் அடித்த முதல் சதம் இதுவாகும். ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அடித்த 4வது சதம் இது. அது மட்டுமல்லாமல் நெதர்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய பேட்டரும் ஸ்ரேயாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டீ லீட் வீசிய 34-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி, ஸ்ரேயாஸ் அய்யர் 48 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் ஸ்ரேயாஸும், ராகுலம் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்தது.

41-வது ஓவரிலிருந்து ராகுல், ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். வேன் பீக் வீசிய 41-வது ஓவரில் ராகுல் 2 பவுண்டரிகளை விளாசினார். நிதான ஆட்டத்தைக் கையாண்ட ராகுலும், 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 42-வது ஓவரில் 300 ரன்களைக் கடந்தது.

அரைசதம் அடித்த பின் ராகுலின் பேட்டிங்கில் அனல் பறந்தது. வேன் மீக்ரன் வீசிய 44-வது ஓவரில் ஸ்குயர்லெக் திசையில் ஒரு சிக்ஸரை ராகுல் விளாசிய நிலையில் லாங்ஆன் திசையில் ஸ்ரேயாஸ் அய்யர் சிக்ஸர் விளாசினார்.

வேன் பீக் வீசிய 47-வது ஓவரில் ராகுல் ஒரு சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். 49-வது ஓவரை வீசிய வேன் பீக் ஓவரில் ஸ்ரேயாஸ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்களை வெளுத்துவாங்கினார்.

டீ லீட் வீசிய 50வது ஓவரில் ராகுல் 2 சிக்ஸர்களை விளாசி 62 பந்துகளி்ல் சதம் அடித்து 102 ரன்களில்(4சிக்ஸர், 11பவுண்டரி) ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், ராகுல் கூட்டணி 208 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் சேர்த்தது. ஸ்ரோயஸ் அய்யர் 128 ரன்களுடனும்(94 பந்துகள், 5 சிக்ஸர், 10பவுண்டரி), சூர்யகுமார் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய சாதனை படைத்த இந்திய அணி

இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனையைப் படைத்தது. ஒரு அணியில் உள்ள டாப்-5 பேட்டர்கள் அரைசதம் அடித்தது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் எந்த அணியில் உள்ள டாப்-5 பேட்டர்களும் அரைசதம் அடித்தது இல்லை.

3 பேர் 279 ரன்கள்

நெதர்லாந்து தரப்பில் பாஸ் டீ லீட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேன் டெர் மெர் மட்டுமே மிகக்குறைவாக ஓவருக்கு 5 ரன்கள் வீதம் வழங்கினார். மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் நொறுக்கி அள்ளினர். அதிலும் வேன் பீக், மீக்ரன், பாஸ் டி லீட் ஆகியோர் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இந்த 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே 279 ரன்களை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி சாதிப்பாரா?

விராட் கோலி இதுவரை 4 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் மொத்தம் லீக் போட்டிகளில் மட்டும் 29 இன்னிங்ஸ்களில் 1551 ரன்கள் சே்ரத்து 70.5 சராசரி வைத்துள்ளார். இதில் 15 முறை 50 ரன்களுக்கு அதிகமாகவும், 4 சதங்களும் அடங்கும்.

ஆனால், நாக்அவுட் போட்டிகளில் கோலி சொதப்பியுள்ளார். இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 68 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 சராசரி மட்டுமே கோலி வைத்துள்ளார். 2015, 2019 ஆகியவற்றில் 3 போட்டிகளில் 5 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்துள்ளார். இந்த முறை அரையிறுதிப் போட்டிகளி்ல் கோலி தனது வழக்கமான ஃபார்மில் விளையாடுவாரா அல்லது கடந்த காலத்தில் நிலவிய சோகம் தொடருமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c162pxjn8r4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
RESULT
45th Match (D/N), Bengaluru, November 12, 2023, ICC Cricket World Cup
India FlagIndia                                 410/4
Netherlands FlagNetherlands           (47.5/50 ov, T:411) 250

India won by 160 runs

wc.jpg

தரவரிசைப் பட்டியல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.