Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, எவ்வளவு சந்தோசமாக இருக்குது. ஜக்கி வந்தவுடனேயே தெரிந்ததுதான்! கூட மோடியும் வந்திருக்கிறார். சொல்லவா வேணும்!!🤣

  • Replies 546
  • Views 32.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
India FlagIndia                 240
Australia FlagAustralia             (43/50 ov, T:241) 241/4

Australia won by 6 wickets (with 42 balls remaining)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ஆஹா, எவ்வளவு சந்தோசமாக இருக்குது. ஜக்கி வந்தவுடனேயே தெரிந்ததுதான்! கூட மோடியும் வந்திருக்கிறார். சொல்லவா வேணும்!!🤣

இது இவைக்கு வெக்க‌க் கேடு ந‌ண்பா...........இந்தியா க‌ப்ட‌ன் இது ஏதோ 20ஓவ‌ர் விளையாட்டு என்று நினைத்து ஆர‌ம்ப‌ம் முத‌லே அடிச்சு ஆடினார்

 

ம‌க்ஸ்வேல் ஆளை ம‌ட‌க்கி போட்டான் ந‌ண்பா ஹா ஹா...........கூடுத‌லா இன்னும் 75ர‌ன்ஸ் அடிச்சு இருக்க‌னும் அவுஸ்சின் க‌தைய‌ முடிச்சு இருப்பாங்க‌ள்

அவுஸ்ரேலியா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் குறைந்த‌ ஓட்ட‌ம் கொடுத்து எல்லாரையும் ஆட்ட‌ம் இழ‌க்க‌ செய்த‌து 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமை அலப்பறைகளில் இருந்து தப்பிச்சோம்.

அவுசுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கபில்தேவின் curse தான்! BCCI மற்றய எல்லோரையும் கூப்பிட்டுவிட்டு கபிலை மட்டும் கூப்பிடவில்லையாம்!😡

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு கிழமை அலப்பறைகளில் இருந்து தப்பிச்சோம்.

அவுசுக்கு வாழ்த்துக்கள்.

யூடுப்ப‌க்க‌ம் போய் இருக்க‌ முடியாது............2011க்கு பிற‌க்கு 50 ஓவ‌ர் 20 ஓவ‌ர் என்று எத்த‌னை உல‌க‌ கோப்பை ந‌ட‌ந்து முடிந்து விட்ட‌து இந்த‌ 12வ‌ருட‌த்தில் ஒரு உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை...........2011ம் ஆண்டு 4மாத‌ம் தான் இவ‌ர்க‌ள் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்கின‌வ‌ர்க‌ள்........பார்த்தால் 12வ‌ருட‌ம் க‌ட‌ந்து விட்ட‌து ஹா ஹா😁...........

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Eppothum Thamizhan said:

ஆஹா, எவ்வளவு சந்தோசமாக இருக்குது. ஜக்கி வந்தவுடனேயே தெரிந்ததுதான்! கூட மோடியும் வந்திருக்கிறார். சொல்லவா வேணும்!!🤣

இந்த‌ உல‌க‌ கோப்பையில் சூரிய‌ குமார் ஜ‌டாவ் 

பெரிசா ர‌ன் அடிக்க‌வும் இல்லை.........இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டுட்டு வ‌ய‌தான‌வ‌ர் ஒதுங்குவ‌து ந‌ல்ல‌ம்...........பொய் என்றால் பார் ந‌ண்பா இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌ அர‌வாசி பேர் அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்கும் 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம்😁................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் சூரிய‌ குமார் ஜ‌டாவ் 

பெரிசா ர‌ன் அடிக்க‌வும் இல்லை.........இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டுட்டு வ‌ய‌தான‌வ‌ர் ஒதுங்குவ‌து ந‌ல்ல‌ம்.

சூரியகுமார் யாதவ் சுவிங்கம் சப்பத்தான் சரி! இஷான் கிஷானையாவது விட்டிருக்கலாம்! அதுவும் அவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர்!!

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவின் இந்த‌ வெற்றியை க‌ண்டிப்பாய் இங்லாந் நாட்ட‌வ‌ர் நியுசிலாந் நாட்ட‌வ‌ர்க‌ளும் ச‌ந்தோஷ‌த்தில் கொண்டாடுவின‌ம்.............

1 minute ago, Eppothum Thamizhan said:

சூரியகுமார் யாதவ் சுவிங்கம் சப்பத்தான் சரி! இஷான் கிஷானையாவது விட்டிருக்கலாம்! அதுவும் அவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர்!!

இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரையும் விட‌ ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தானுக்கு தொட‌க்க‌ வீர‌ரா  விளையாடும் Yashasvi Jaiswal இந்த‌ உல‌க‌ கோப்பையில் தெரிவு செய்து இருக்க‌னும் அதோட‌ த‌மிழ‌க‌ வீர‌ர் அஸ்வினை அனைத்து விளையாட்டிலும் விளையாட‌ விட்டு இருக்க‌னும்..................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

சூரியகுமார் யாதவ் சுவிங்கம் சப்பத்தான் சரி! இஷான் கிஷானையாவது விட்டிருக்கலாம்! அதுவும் அவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர்!!

Axar Patel . Tilak Varma . Yashasvi Jaiswal இந்த‌ மூன்று பேரையும் உல‌க‌ கோப்பை அணியில் தெரிவு செய்து இருக்க‌னும் ஆனால் செய்ய‌ வில்லை Tilak Varma . Yashasvi Jaiswal இந்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேருக்கும் இந்தியா அணியில் இனி நிர‌ந்த‌ இட‌ம் கிடைக்கும் என்று ந‌ம்புகிறேன்..........யார் ப‌ந்து போட்டாலும் அடிக்கும் திற‌மை ப‌டைத்த‌ வீர‌ர்க‌ள் இருவ‌ரும்...........

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ரி கிரிக்கேட் திருவிழா முடிந்து விட்ட‌து 

4மாத‌ம் க‌ழித்து ஜ‌பிஎல் திருவிழாவில் ச‌ந்திப்போம்🥰🙏...........

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

Axar Patel . Tilak Varma . Yashasvi Jaiswal இந்த‌ மூன்று பேரையும் உல‌க‌ கோப்பை அணியில் தெரிவு செய்து இருக்க‌னும் ஆனால் செய்ய‌ வில்லை Tilak Varma . Yashasvi Jaiswal இந்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேருக்கும் இந்தியா அணியில் இனி நிர‌ந்த‌ இட‌ம் கிடைக்கும் என்று ந‌ம்புகிறேன்..........யார் ப‌ந்து போட்டாலும் அடிக்கும் திற‌மை ப‌டைத்த‌ வீர‌ர்க‌ள் இருவ‌ரும்...........

பையா இவர்கள் பூநுhல் போட்டிருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர்.சர்மா என்று விளையாடுனவங்களில் பலர் அதிலிலம் தமிழகப் பிராமணர் அஸ்வினைக் கழட்டி விட்டார்கள்.அனாலும் இந்த உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை லவளிக்காட்டியிருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலக சாம்பியன் - இறுதிப்போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வி

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 19 நவம்பர் 2023, 07:55 GMT

ஆமதாபாத்தில் இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே ஆடியது. 100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி காப்பாற்றியது. ஆனாலும் அந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதனைத் தொடரந்து இந்தியா நிர்ணயித்த 241 ரன் இலக்கை டிராவிஸ் ஹெட் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி எளிதாக எட்டியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இரு அணிகளிலும் மாற்றம் இல்லை

இரு அணிகளுமே எந்தவிதமான மாற்றமும் இன்றி களமிறங்கியுள்ளன. இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அஸ்வினுக்கு இடமில்லை. வழக்கம் போல், ஜடேஜா, குல்தீப் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா, டிராவிஸ் ஹெட் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது பெரிய பலம். இதில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டாலும் இருவரும் ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடியவர்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா: ரோகித், கோலி, ஷமி 20 ஆண்டு ஏக்கத்தை இன்று தீர்ப்பார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி

ஆமதாபாத்தில் இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசி ய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் மிட்விக்கெட்டிலும், கவர்ஸ் திசையிலும் 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் ஷார்ட் பாலை, ரோஹித் சர்மா கிராஸ்பேட் ஷாட் மூலம் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த பந்தை மிட்-ஆன் திசையில் பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 5வது ஓவரை ஸ்டார்க் வீசினார். 2வது பந்தை மிட்-ஆன் திசையில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஆனால், மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியில் மிரட்டினார். இதனால், இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.

ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 2வது பந்திலும் அவுட்சைட் ஆஃப்சைடில் வீசப்பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். ஸ்டார்க் வீசிய 3பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு கோலி ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். இந்திய அணி 7-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது.

மேக்ஸ்வெல் 8வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். மேக்ஸ்வெல் பந்துவீச்சை ரோஹித், கோலி நிதானமாகவே அணுகினர். 5வது பந்தில் கோலி பவுண்டரிக்கு அனுப்பினார்.

மேக்ஸ்வெல் 10வது ஓவரை வீசினார். 2வது பந்தில் ரோகித் சர்மா இறங்கிவந்து லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், மூன்றாவது பந்தில் கவர்ஸ் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால், 4வது பந்தை ரோகித் கவர் திசையில் அடித்த பந்தை ஓடிச் சென்று டிராவிஸ் ஹெட் அருமையான கேட்ச் பிடித்தார்.

ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது.

பேட் கம்மின்ஸ் 11வது ஓவரை வீசினார். முதல் பந்தை கம்மின்ஸ் லென்த்தில் வீச கோலி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஸ்ரேயாஸ் சந்தித்தார். துல்லியமாக வீசப்ப்பட்ட பந்துக்கு ஸ்ரேயாஸ் தாமதமாக ரெஸ்பான்ஸ் செய்யவே அவுட்சைட் எட்ஜ் எடுத்து கேட்சானது. 4 ரன்னில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

கோலி - லோகேஷ் ராகுல் நிதான ஆட்டம்

இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தபின் பேட்டிங்கில் சற்று நிதானம் காட்டத் தொடங்கியது. கோலி, ராகுல் இருவரும் ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் பந்துவீச்சை எச்சரிக்கையுடனே கையாண்டனர். 16.4 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு, 55 பந்துகளை எடுத்துக்கொண்டது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், ரன் ரேட் வேகமும் குறைந்தது.

இந்திய அணியின் ரன் வேகம் 10 ஓவர்களாகக் குறைந்துவிட்டது. 11வது ஓவர்கள் முதல் 20வது ஓவர்கள் வரை இந்திய அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி களத்தில் நிலைத்து ஆடியது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி அவுட்

விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த இந்திய அணியின் மந்தமான ஆட்டம் தொடர்ந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது. 20 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அடுத்த 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்தார்

இந்த உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டே ரன்களில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது நிலைத்து ஆடி இந்தியாவை கரை சேர்த்த இந்த ஜோடி இம்முறையும் சாதிக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சிறிது நேரத்தில் பொய்த்துப் போனது.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி 29-வது ஓவரில் பிரிந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தை விராட் கோலி தடுத்து ஆட, பேட்டில் பட்டு ஸ்டம்புகளை பதம் பார்த்தது.

ராகுல்-கோலி கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 67ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்ததது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரவீந்திர ஜடேஜா ஏமாற்றம்

ரவிந்திரா ஜடேஜா, ராகுலுடன் சேர்ந்து ஆடினார். சுழற்பந்துவீச்சாளர்கள் மேக்ஸ்வெல், ஆடம்ஸம்பா, ஹெட் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆட மிகுந்த சிரமப்பட்டார். பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் 86 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஹேசல்வுட் வீசிய 36-வது ஓவரில் ஜடேஜா 9 ரன்னில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய் அணி 5-வது விக்கெட்டை இழந்தது. இந்திய அணியின் ரன் ரேட் ரோஹித் சர்மா இருந்தபோது, 8 ரன்ரேட்டில் பயணித்தது, ஆனால், 35 ஓவரின்போது 4 ரன்ரேட்டாகக் குறைந்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் திணறினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

16 ஓவர்களுக்குப் பின் பவுண்டரி

இந்திய அணி கடைசியாக 10 ஓவர்களில் பவுண்டரி அடித்தது. அதன்பின் 16ஓவர்களாக பவுண்டரி அடிக்கவில்லை. ஏறக்குறைய 16 ஓவர்களுக்குப் பின் மேக்ஸ்வெல் வீசிய 27-வது ஓவரில் ராகுல் பவுண்டரி அடித்தார்.

20 ஓவர்கள் முதல் 30 ஓவர்கள் வரை இந்திய அணி, 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

28 ஓவர்களில் ஒரு பவுண்டரி

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 28 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தது. கடைசியாக 10 ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததற்கு பின், 27-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், அடுத்த 20 ஓவர்களில் ஒரு பவுண்டரியும் இந்திய அணி அடித்தது. கடைசியாக ஸம்பா வீசிய 39-வது ஓவரின் கடைசிப்பந்தில் சூர்யகுமார் பவுண்டரி அடித்தார்.

ராகுல் விக்கெட்டும் காலி

இந்திய அணி 41-வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. 42-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். ஸ்டார்ஸ் வீசிய 3-வது பந்து லேசாக லெக் கட்டராக வந்தது, இதைக் கணிக்காமல் ராகுல் பேட்டை வைக்க பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்சானது. ராகுல் 66ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி வந்த வேகத்தில் லெக்திசையில் ஒரு பவுண்டரி அடித்தார்.

ஷமியும் வீழ்ந்தார்

ஸ்டார்க் 44வது ஓவரை வீசினார். 250 ரன்கள் சேர்த்துவிட்டால் டிபெண்ட் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சூர்யகுமார், ஷமி பேட் செய்தனர். ஆனால் ஸ்டார்க் வீசிய பந்து நன்றாக ரிவர்ஸ்ஸ்விங் ஆகத் தொடங்கியது. ஸ்டார்க் வீசிய 3-வது பந்து லென்த்துக்கு மேல் வந்ததால் அதை அடிக்க முற்பட்டார் ஷமி ஆனால், பந்து அவரை ஏமாற்றிவிட்டு, பேட்டில்பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்சானது. ஷமி 6 ரன்னில் வெளியேறினார்.

37 ரன்களுக்கு 4 விக்கெட்

அடுத்து வந்த பும்ராவும் விக்கெட்டை நிலைப்படுத்தப் போராடினார். ஆனால், பும்ரா வந்தவுடன் ஆடம் ஸம்பா பந்துவீச அழைக்கப்பட்டார். ஸம்பா வீசிய 45-வது ஓவரில் பும்ரா கால்காப்பில் வாங்கி ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்திய அணி 178 ரன்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. ஆனால், அதன்பின் 37 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

குல்தீப் ஏன் முன்பே களமிறங்கவில்லை?

ஸ்டார்க் வீசிய 46-வது ஓவரில் ஒரு ரன் எடுத்து குல்தீப்பிடம் ஸ்ட்ரைக்கை சூர்யகுமார் ஒப்படைத்தார். ஸ்டார்க் ஓவரை எப்படி சமாளிக்கப் போகிறார் குல்தீப் என்று வியந்த நிலையில் அருமையாக டிபெண்ட் செய்து, ரன்களைச் சேர்த்தார். குல்தீப் யாதவ் டெய்லெண்டராக இருந்தபோதிலும் ஓரளவுக்கு சிறப்பாக பேட் செய்தார். ஆனால், ஏன் ஷமிக்கு முன்பாக குல்தீப்பை களமிறக்கவில்லை என்ற கேள்வியை வர்ணனையாளர்கள் முன்வைத்தனர்.

பந்து வராமலே ஆட்டமிழந்த சூர்யகுமார்

கம்மின்ஸ் 48-வதுஓவரை வீசினார். கம்மின்ஸ் பந்துவீச்சுக்கு சூர்யகுமார் தொடக்கத்தில் இருந்தே திணறினார். அவர் வீசிய ஸ்லோ பவுன்ஸரில் ரன் சேர்க்க முடியாமல் பேட்டை சுழற்றினார் சூர்யார். ஆடுகளம் மெதுவாக மாறிவிட்ட நிலையில் ஹேசல்வுட் ஸ்லோ பவுன்ஸர் தொடர்ந்து வீச, சூர்யகுமார் திணறினர். பந்து வருவதற்கு முன்பாகவே சூர்யகுமார் பேட்டை சுழற்றி குழப்பமடைந்தார். ஹேசல்வுட் வீசிய 3-வது பந்தில், பந்து வருவதற்கு முன்பாகவே சூர்யகுமார் பேட்டை சுழற்ற பந்து தாமதமாக வந்து கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் சென்றது. சூர்யகுமார் 18 ரன்னில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விரித்த வலையில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சூர்யகுமார் யாதவ் பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை. கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்தவில்லை. மிகவும் அருமையான வாய்ப்பாக அமைந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் 360 டிகிரி வீரர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரசிகர்களை குஷிப்படுத்திய சிராஜ்

50-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். முதல் பந்தில் குல்தீப் ஒரு ரன் எடுக்க, 2வது பந்தை சிராஜ் எதிர்கொண்டார். நீண்ட நேரத்துக்குப்பின் பவுண்டரி அடித்து சிராஜ் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசிப்பந்தில் இரு ரன்கள் எடுக்க முயன்று குல்தீப் 10 ரன்னில் ரன் அவுட்ஆகினார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்து 241 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் என்ன நடந்தது?

உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இதே மைதானத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதனை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 30-வது ஓவரில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் இந்தியா பதிலடி

241 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 1.30 லட்சம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல என்பது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்குத் தெரியும்.

இதனால் தொடக்கம் முதலே மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பந்துகளையும் எதிர்கொண்டனர். பும்ரா வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்தார்.

இந்த உலகக் கோப்பை முழுவதும் ஷமியின் பந்துவீச்சு மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியநிலையில் அவர் 2வது ஓவரை வீச வந்தார். ஷமி வீசிய ஓவரில் 2வது பந்து ஆஃதிசையில் விலகிச் செல்லவே அதை வார்னர் தொட, ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்சானது. வார்னர் 7 ரன்னில் வெளியேறினார். வார்னர் விக்கெட்டை ஷமி வீழ்த்தியவுடன் அரங்கில் இருந்த ரசிகர்களின் முழக்கம், அரங்கையே அதிரவைத்தது.

அடுத்து மிட்ஷெல் மார்ஷ் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். இருவருமே ஆபத்தான பேட்டர்கள் என்பதால், இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். பும்ரா வீசிய 3-வது ஓவரில் ஆஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே எடுத்தது.

ஷமி வீசிய 4-வது ஓவரை மார்ஷ் சந்தித்தார். 3-வது பந்தில் மிட்-ஆஃப் திசையில் மார்ஷ் சிக்ஸர் விளாச, ரசிகர்கள் அனைவரையும் நிசப்தமாக்கினார். 4-வது ஓவரை பும்ரா வீசினார். பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகத் துல்லியமாக ஈட்டிபோல் இறங்கியதால் மார்ஷ் எதிர்கொள்ளத் திணறினார். 3-வது பந்தை அடிக்க முற்பட்டு, விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிஆர்எஸ்-ஸை தவறவிட்ட ஸ்மித்

அடுத்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி, டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 6-வது ஓவரில் ஆஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே சேர்த்தது. 7-வது ஓவரை பும்ரா வீசினார். பும்ராவின் பந்துவீச்சில் அனல் தெறித்தது, துல்லியத்தன்மையும், லைன்லென்த்தும் கச்சிதமாகவும் இருந்ததால் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்டும் தடுமாறினார். இருப்பினும் 4-வது பந்தில் மிட்ஆன் திசையில் ஸ்மித் பவுண்டரி அடித்தார்.

கடைசிப் பந்தை ஸ்மித்துக்கு ஸ்லோவாக பும்ரா வீசினார். ஆனால் சற்றும் எதிர்பாராத ஸ்மித் கால்காப்பில் வாங்கினார்.இந்திய வீரர்களின் கோரிக்கையால், களநடுவரும் அவுட் வழங்கினார்.

இதற்கு டிஆர்எஸ் எடுக்காமல் ஸ்மித்தும் மவுனமாக வெளியேறினார். ஆனால், ஸ்மித் சென்றபின் பால்டிராக்கிங்கில் பார்த்தபோது பந்து ஸ்டெம்பில் படவில்லை என்பது தெரியவந்தது. டிஆர்எஸ் எடுக்காமல் ஸ்மித் தவறு செய்து, விக்கெட்டை இழந்து 4 ரன்னில் வெளியேறினார்.

பும்ரா 2வது விக்கெட்டை வீழ்த்தியதும் அரங்கில் இருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் கரகோஷத்தாலும், முழக்கத்தாலும் ஆரவாரம் செய்த சத்தம் விண்ணைப் முட்டியது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்து லபுஷேன் களமிறங்கி, டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்தார். ஷமி வீசிய 8-வது ஓவர் மெய்டனாக அமைந்தது. பும்ரா வீசிய 9-வது ஓவரும் மெய்டனாக வீசினார். இரு ஓவர்களையும் பும்ரா, ஷமியும் மெய்டன்களாக வீசி ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். ஷமி வீசிய 10-வது ஓவரில் ஹெட் 2 பவுண்டரிகளை விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தது.

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா அடுத்த 10 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது.

டிராவிஸ் ஹெட் அரைசதம்

21-வது ஓவரை குல்தீப் வீசினார். 2வது பந்தில் ஹெட் ஒரு ரன் எடுத்து, 58-பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். கடும் நெருக்கடி, அழுதத்துக்கு மத்தியில் நிலைத்து ஆடி, ஹெட் சிறப்பாக அரைசதம் அடித்தார். குல்தீப் வீசிய 3-வது பந்தில் லாபுஷேன் பவுண்டரி விளாசினார். கடைசி 5 ஓவர்களில் 24 ரன்கள்வரை ஆஸ்திரேலியா சேர்த்தால் ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஷமி வீசிய 23-வது ஓவரில் ஹெட் பவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்தார். அடுத்து, ஜடேஜா வீசிய 25-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட் பவுண்டரி விளாசினார். 25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 135ரன்கள் சேர்த்து வெற்றஇயை நோக்கி நகர்ந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உதிரிகளால் பாதிப்பு

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் உதிரிகள் எண்ணிக்கையில் 17 ரன்களை கொடுத்திருந்தது. இது இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 11 முதல் 15-ஓவர்கள் வரை குல்தீப் யாதவும், ஜடேஜாவும் மாறி, மாறி பந்துவீசினர், ஆனால், ஆஸ்திரேலிய பேட்டர்கள் விக்கெட்டை நிலைப்படுத்தும் நோக்கில் பெரிய ஷாட்களுக்கு செல்லவில்லை. ஆனால் குல்தீப் வீசிய 16-வது ஓவரின் 5-வது பந்து தவறாக வீசப்படவே காத்திருந்த ஹெட் அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

44 ஆண்டுகளுக்குப் பின்..

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் 15 ஓவர்களுக்கும் மேல் உலகக் கோப்பையில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தாமல் செல்வது ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் நடக்கிறது. கடைசியாக 1979ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் இன்றி இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகே வந்தது. பும்ரா வீசிய 40-வது ஓவரிலும், சிராஜ்வீசிய 41-வது ஓவரிலும் லாபுஷேன் பவுண்டரி விளாசி வெற்றிக்கு அருகே அணியைக் கொண்டு சென்றார்.

43-வது ஓவரை சிராஜ் வீசினார். ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்களே தேவைப்பட்டது. சிராஜ் ஓவரில் பவுண்டரி அடித்த ஹெட் 5-வது பந்தில் சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து 137 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஹெட்-லாபுஷேன் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

அடு்த்து வந்த மேக்ஸ்வெல் வெற்றிக்கான 2 ரன்களை அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார். 43 ஓவர்களில்ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண செல்லாதது ஏன்?

ஆமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க தாம் அழைக்கப்படவில்லை என்று இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்திற்கு ஏன் செல்லவில்லை என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட போது பதிலளித்த கபில்தேவிடம் ,"நீங்கள் என்னை அழைத்தீர்கள், நான் இங்கு வந்தேன், அவர்கள் என்னை அழைக்கவில்லை, நான் செல்லவில்லை" என்றார்.

"1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற எனது முழு அணியையும் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், ஆனால் நிறைய வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எவ்வளவு பேர் இருக்கிறார்கள், சில நேரங்களில் மக்கள் மறந்துவிடக்கூடிய பொறுப்புகள் அதிகம்." என்று கபில்தேவ் கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இவர்கள் பூநுhல் போட்டிருக்கிறார்களா?

தெரியாது அண்ணா...........

ஆனால் இவ‌ர்க‌ள் திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள்

வ‌ய‌து 20 . 21 சின்ன‌ப் பெடிய‌ங்க‌ள்...........

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வருத்தமாக இருந்தாலும் அயல்நாடு எமக்கு செய்த அரசியல் துரோகத்தை எண்ணி இன்று தோற்றது மகிழ்ச்சியே.......!  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

உண்மையில் வருத்தமாக இருந்தாலும் அயல்நாடு எமக்கு செய்த அரசியல் துரோகத்தை எண்ணி இன்று தோற்றது மகிழ்ச்சியே.......!  

அதே ம‌ன‌ நிலை தான் என‌க்கும்

இன‌ப் ப‌டுகொலை ந‌ட‌க்கும் போது இந்திய‌ வீர‌ர்க‌ள் இல‌ங்கைக்கு போய் கிரிக்கேட் விளையாடி அங்கு ச‌ண்டை ந‌ட‌க்க‌ வில்லை என்று வெளி உல‌கிற்க்கு காட்ட‌ தான் ம‌த்திய‌ அர‌சால் இவையை இல‌ங்கைக்கு அணுப்பி 2009ம் ஆண்டு விளையாட‌ விட்ட‌வை

 

 

அர‌சிய‌லுக்கு அப்பால் ஒருசில‌ இந்திய‌ன் வீர‌ர்க‌ளை என‌க்கு பிடிக்கும்...........ஆனால் இந்திய‌ர்க‌ளுக்குள் ஒற்றுமை இல்லை...........வ‌ட‌ நாட்டான் த‌மிழ‌னை பொருட்டா ம‌திப்ப‌தில்லை...........விளையாட்டிலும் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்...........உவ‌ள‌வு ம‌க்க‌ள் தொகைய‌ கொண்ட‌ நாடு ஒலிம்பிக்கில் இர‌ண்டு ப‌த‌க்க‌த்தோடு நாடு திரும்பின‌ம் என்றால்.............அந்த‌ நாட்டுக்கு தான் கெட்ட‌ பெய‌ர்...................

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?

என்ன‌ புல‌வ‌ர் அண்ணா இந்த‌ பாட்டு😁............

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
எல்லாம் இந்திய ரசிகர்களுக்குத்தான். இந்திய அணி வென்றால் விசாகபட்டிகம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கை விட்ட நடிகைக்கு எவ்வளவு நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

எல்லாம் கபில்தேவின் curse தான்! BCCI மற்றய எல்லோரையும் கூப்பிட்டுவிட்டு கபிலை மட்டும் கூப்பிடவில்லையாம்!😡

2027 தென் ஆபிரிக்கா

சிம்பாவே

ந‌ம்பியா

இந்த‌ மூன்று நாட்டிலும் தான் ந‌ட‌க்குது உல‌க‌ கோப்பை ப‌ங்கு பெறும் அணிக‌ள் மொத்தம் 14

2027 தென் ஆபிரிக்கா கோப்பை தூக்க‌னும்..........திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம்

அவைய‌ தேசிய‌ அணிக்குள் கொண்டு வ‌ந்தால் 2027 தென் ஆபிரிக்கா ப‌ல‌மான‌ அணியா இருக்கும்........

2 minutes ago, புலவர் said:

ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
எல்லாம் இந்திய ரசிகர்களுக்குத்தான். இந்திய அணி வென்றால் விசாகபட்டிகம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கை விட்ட நடிகைக்கு எவ்வளவு நம்பிக்கை.

யார் அந்த‌ அரை மென்ட‌ல் ந‌டிகை அண்ணா😁.............

  • கருத்துக்கள உறவுகள்

1.30 இலட்சம் இந்திய இரசிகர்களையும் மெளனமாக்குவோம். என்று நாகாரீகமான வார்த்தைகளால் இந்திய இரசிகர்களநின் வாயை அடக்குவோம் என்று சொன்ன ஆஸ்திரேலியா கப்டன் அதை செய்து காட்டியுள்ளார். இதுதான் கெத்து.

3 minutes ago, பையன்26 said:

யார் அந்த‌ அரை மென்ட‌ல் ந‌டிகை அண்ணா

402976672_24200230492958897_836863275541

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

1.30 இலட்சம் இந்திய இரசிகர்களையும் மெளனமாக்குவோம். என்று நாகாரீகமான வார்த்தைகளால் இந்திய இரசிகர்களநின் வாயை அடக்குவோம் என்று சொன்ன ஆஸ்திரேலியா கப்டன் அதை செய்து காட்டியுள்ளார். இதுதான் கெத்து.

அவுஸ் க‌ப்ட‌ன் இன்று ந‌ல்லா ப‌ந்து போட்டார்.............சில‌து தான் விட்ட‌ சவால‌ காப்பாற்ற‌ ஒழுங்காய் ப‌ந்து போட்டாரோ தெரிய‌ லொல் 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புலவர் said:

1.30 இலட்சம் இந்திய இரசிகர்களையும் மெளனமாக்குவோம். என்று நாகாரீகமான வார்த்தைகளால் இந்திய இரசிகர்களநின் வாயை அடக்குவோம் என்று சொன்ன ஆஸ்திரேலியா கப்டன் அதை செய்து காட்டியுள்ளார். இதுதான் கெத்து.

2005க‌ளில் இருந்து நான் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்க்கிறேல‌
என‌க்கு இந்த‌ ந‌டிகை யார் என்று கூட‌ தெரியாது...............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

2005க‌ளில் இருந்து நான் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்க்கிறேல‌
என‌க்கு இந்த‌ ந‌டிகை யார் என்று கூட‌ தெரியாது...

தெலுங்கு நடிகை

12 minutes ago, பையன்26 said:

005க‌ளில் இருந்து நான் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்க்கிறேல‌
என‌க்கு இந்த‌ ந‌டிகை யார் என்று கூட‌ தெரியாது...............

தெலுங்கு நடிகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.