Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தெற்கே கடற்படையினரால் இழுவைப் படகு மூழ்கடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 11-09-2007 13:16 மணி தமிழீழம் [மயூரன்]

இலங்கையின் தெற்கே கடற்படையினரால் இழுவைப் படகு மூழ்கடிப்பு

இலங்கையின் தெற்கே மாத்தறை டென்ரா முனையில் அருகே சந்தேகத்திற்கு இடமான 70 மீற்றர் நீளம் கொண்ட இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

விபரங்கள் இங்கே.......

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Mayoshi, Seishin, Koshi ஆகிய பெயர்களைக் கொண்ட, சந்தேகத்திற்கிடமான புலிகளின் மூன்று படகுகளை மூழ்கடித்து விட்டதாக AFP தெரிவிக்கிறது.

சீனப் பெயர்கள் போல் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படகில் வெடிபொருட்கள் ஏற்றிச்சென்றதாகவும் கூறப்படுகிறது

சீனப்படகையோ அல்லது திமிங்கலம் பிடிக்க வந்த ஜப்பானிய படகையோ போட்டுத்தள்ளி விட்டார்களா???

இவை சாதாரண படகுகள் என்று சொல்லப்படவில்லை. 70 மீட்டர் நீளமான கப்பல்கள் என்றே சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இம்முறை வளமையாக இலங்கைக் கரையிலிருந்து 200 கிலோ மீட்டர்கள் தொலைவிற்குள் வைத்தே கப்பல்களைத் தாக்கியழிப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவிக்கும்.

ஆனால் இம்முறை 1200 மீற்றல்கள் தொலைவில் வைத்து மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு சங்கு ஊதினாங்களோ தெரியல பெயர்களை பார்கையில் சீன அல்லது ஜப்பான் படகுகள் போல உள்ளது

யாருக்கு தெரியும் உடைக்க வேண்டிய பழைய கப்பல்களை தான் காசு கொடுத்து வாங்கி கொண்டு உடைக்கிறார்களோ?ஏன் இலங்கை அரசால் இவைகளை கைப்பற்ற முடியவில்லை?அடுத்து எப்ப பார்த்தாலும் தாக்கி அழிக்கப்படா கப்பலில் இருந்து கடற்ப்படையை நோக்கி சுடப்பட்டாதாகவும் இதுவும் நம்ப கூடியதாக இல்லையே............இன்று பிபிசி தமிழோசைக்கு நல்ல தீனி கிடைத்து இருக்கு ஊடக விபச்சாரம் செய்வதுக்கு...............

கொஞ்ச நாளாக எதையுமே காணவில்லை என்று பார்த்தால் திரும்ப தொடங்கிட்டாங்கய்யா தொடங்கிட்டாங்கள. சசி சொன்ன மாதிரி உடைக்கிற படகைத்தான் உடைச்சு விளையாடுறாங்கள். அதிலை பகிடி என்னவென்றால் ஆயுதங்கள் தளபாடங்கள் எல்லாம் சரியாக கணக்கு வைச்சுக்கொண்டுதான் அடிக்கிறாங்கள். ஆழக்கடலிலை மூழ்கின படகிலை எப்படியப்பா அதெல்லாம் தெரியுது. அதிசயம்தான். ஒரு 20 வருடத்திற்கு பிறகு வரலாறு புத்தகம் எழுதும்போது எல்லாம் சமஸ்கிருதமாகத்தான் இருக்கப்போகுது

இலங்கையின் தென்கிழக்கு கடற்பகுதியில் 24 மணிநேரத்தில் மூன்று கப்பல்களை தாக்கி மூழ்கடித்திருப்பதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்னர்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடந்த சூழல்.. சந்தர்ப்பம்.. தேவைகள்..

1. வங்காள விரிகுடாவில்.. ஐந்து நாடுகளின் கடற்படை விமானப்படை கூட்டு ஒத்திகை.

2. சிலாவத்துறை நோக்கிய படையெடுப்பு கேலிக் கூத்து என்ற எதிர்கட்சிகள் மக்களிடம் முறையீடு. புலிகள் வேறு.. அது தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இல்லை என்றிட்டினம்.

ஆனால் அரசுத் தலைவரோ.. அதை பெரிய வெற்றிப் பிரச்சாரமாக முன்னெடுத்திருந்தார். அங்கு கடற்படை முகாம்களை நிறுவ காரணங்களை சரியாக முன் வைக்க முடியல்ல. இப்ப அதற்கு காரணம் கிடைத்திருக்கும்.

3. தாக்கி அழிக்கப்பட்ட கப்பல்கள்.. தலை மன்னார் நோக்கி வந்ததாக உள்ள கூற்றும்.. சிலாவத்துறையின் முக்கியத்துவமும்.

4. ஆனையிறவு அல்லது பூநகரி நோக்கி படைகள் நகர வேண்டின் யாழ் குடாவில் நிலை கொண்டுள்ள படையினரின் மனதில் குடிகொண்டிருக்கும்.. புலிகளின் பீரங்கள் மற்றும் விமானப்படை பற்றிய அச்சத்தை நீங்க வேண்டிய தேவை.

5. பாங்கொங் கைதிற்கு முக்கியமளித்துக் காட்டுதல். தான் சர்வதேச ஆதரவோடு புலிகளை ஒடுக்கிக் கொண்டிருப்பதாக மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சர்வதேச சமூகத்துக்கும் காட்டி.. பலவீனப்பட்டுள்ள புலிகளை ஒரேயடியாக ஒழிக்க என்று சொல்லி தனது அரசியல் தேவைகளுக்கான இராணுவ நடவடிக்கைக்கு ஆங்கீகாரம் தேடுதல்.

6. புலிகளின் 10 கப்பல்களில் இந்த 3 ஐயும் சேர்த்து 9 அழிக்கப்பட்டு விட்டதாகவும்.. அதனால் புலிகள் எனி சண்டை போட ஆயுதமின்றி இருக்க வேண்டி ஏற்படும் என்பதால் படையினர் இலகுவாக வெற்றிகளைப் பெறலாம் என்ற எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியிலும் படையினர் மத்தியிலும் ஏற்படுத்தி.. தனது அரசியல் நெருக்கடியில் இருந்து விடுபட இராணுவ முனைப்பு நோக்கி மகிந்த மேலும் நகர தேர்வு செய்த நேரம்.

7. புலிகளின் மெளனத்தால் குழம்பிப் போயுள்ள தாயக மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடல்.

8. பகிரங்க பாதுகாப்பு ஒத்துழைப்புக்குப் பின்னடிக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தனது பாதுகாப்புத் தேவை என்ன என்பதை ஏற்க நிற்பந்தித்தல்.

9. எப்போதும் போலவே இக்கப்பல்களும் சோதனையிட முனைந்த போது தாக்குத நடத்தப்பட்டதால் தாக்கி அழிக்கப்பட்டன. ஆனாலும்.. அவற்றில் இருந்த ஆயுத விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பாங்கொக் கைதில் சம்பந்தப்பட்டவர் உண்மைகளைச் சொல்லிட்டார் என்பது போல தோற்றம் காட்டுதல். இதன் மூலம் புலிகளின் ரகசிய ஆயுதக் கடத்தல் வலைப்பின்னல்.. பலவீனப்படுத்தப்பட்டு விட்டது என்பதை காட்டி.. போர் முனைப்பில் உள்ளவர்களுக்கும் படையினருக்கும் உற்சாகம் அளித்தல்.

10. இவற்றை.. எதிர்கால இராணுவ.. மற்றும் அரசியல் தேவைகளுக்கு தேவையான வடிவத்தில் பாவிக்க.... சர்வதேச உதவிகளை நாடி ஓட சான்று தேடுதல்.. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வாளர் நெடுக்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

நான் ஆய்வு எதுவும் செய்யல்லப்பா. என் மனசில தோன்றினதை எழுதினம். நீங்கள் அதை ஆய்வென்ற... பின்னர் அதை வைச்சு உங்களையும் என்னையும் பன்னாடை என்ற.. தேவையா...??! :D:D

ஓய்வாளர் சொறி ஆய்வாளர் நெடுக்ஸ சொன்னா அதில் பிழை கண்டு பிடிக்கலாமா?

ஆமா என்று சொகிறது இங்கு ஒரு செய்தி.....

Head of Thai Interpol, Col. Apichart Suribunya, told BBC Bangkok Bureau that the Thai police have not arrested Kumaran Pathmanadan.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._arrested.shtml

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வாளர் சொறி ஆய்வாளர் நெடுக்ஸ சொன்னா அதில் பிழை கண்டு பிடிக்கலாமா?

ஆமா என்று சொகிறது இங்கு ஒரு செய்தி.....

Head of Thai Interpol, Col. Apichart Suribunya, told BBC Bangkok Bureau that the Thai police have not arrested Kumaran Pathmanadan.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._arrested.shtml

குறிப்பிட்ட கைது உண்மையா பொய்யா என்பதையெல்லாம்.. சிங்கள தேசம் பிச்சு ஆராயாது. அரசாங்கம் சொன்னால் அது உண்மை என்பதுதான் சிங்கள தேசத்தின் நிலைப்பாடு. அந்த வகையில் அரசும்... சில நகர்வுகளைச் செய்து அரசியல் இலாபம் சந்திக்க உள்ள சந்தர்ப்பத்தை இழக்க விரும்பாது. அதுவும் மகிந்த குடும்பம்.. பண்டாரநாயக்கா குடும்பம் இதில் பெரும் அனுபவசாலிகள். :D

படங்களுடன் பெரிய விளம்பரம்

அரசின் தந்தரோபாயம் எனத் தோன்றுகிறது

Edited by அ

இது பழைய குருடிதான், அதில் சந்தேகமே வேண்டாம். தாக்கியழித்தபின் ஒரு பிரேதமாவது கிடைக்கவில்லையா? வங்காள விரிகுடா ஒத்திகையின் எச்சங்களிவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படகுகளில் கொடிகள், பெயர்கள், பதிவுஎண்கள் எதுவுமே இல்லையாம் என்றும், 45 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்து இருக்கின்றது.

இந்த படகுகளில் கொடிகள், பெயர்கள், பதிவுஎண்கள் எதுவுமே இல்லையாம் என்றும், 45 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்து இருக்கின்றது.

உடைக்க கொண்டு போன கப்பலை வாங்கி கொண்டு வந்து இந்த சிந்து விளையாட்டு காட்டினால் பதிவு எண் யார் கொடுப்பது?

750 கடல்மைல் தொலைவில் எண்டு யாருக்கு பூவைக்கிறாங்களோ தெரிய இல்லை... இலங்கை கடற்படையிட்ட இருக்கும் அதிவேக கப்பலான டுவேரா படகு 35 நொட்ஸ் வேகம் கொண்டது... அதிலை போனாலே 24 மணித்தியாலத்துக்கு கிட்ட போய்ச்சேர எடுத்து இருக்கும்... திரும்பி வர இன்னும் ஒரு 24 மணித்தியாலம்...

ஆனால் தாக்கி அழிச்சு 2 மணித்தியாலத்துக்கை படத்தோடை பேர் போட்டு செய்தி சொல்லுகினம்.... அவர்கள் ஈமெயிலிலை படங்களை அனுப்பி இருக்கலாம் தான்... ஆனால் ஏன் அவ்வளவு அவசரம்...???

கப்பல்களின் பேரை பாத்தால் Mayoshi, Seishin, Koshi எல்லாமே குங்பூ தற்காப்பு வகையின் பெயரா கிடக்கு..... :lol::lol::)

Edited by தயா

கப்பலில் பெயர், கொடி அடையாளங்கள் ஒண்டுமில்லை என்று அறிவித்த சிங்களவர் அழிக்கப்பட்ட மூன்று கப்பல்களிற்கும் எங்கிருந்து பெயரை எடுத்துக் கொண்டானர்?

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

டி.கே.பி.தசநாயக்கா (கடற்படை பேச்சாளர்) இவ்வாறு கூறுகிறார் - புதினம்

இக்கப்பல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எடுத்து வரப்பட்ட மூன்று இலகுரக வானூர்திகள், 120 மற்றும் 130 மில்லிமீற்றர் ஆட்லறிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குரிய குண்டு துளைக்காத கவச வாகனங்கள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்களும் எரிபொருட்களும் இருந்ததாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்தனர் என்று இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சிறிலங்கா கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க கூறினார்.

இவருக்கு( தசநாயக்கா)வுக்கு தேசியத்தலைவருக்குரிய கவசவாகனங்கள் அக்கப்பலில் இருந்தது என்று எப்படித் தெரியும்?. சிரிப்புத் தாங்கமுடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.