Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் விடுத்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்- இராஜதந்திர முறுகல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

பிச்சை எடுப்பது மேற்கு நாட்டில். மேற்குலகு தடை ஒன்றும் செய்யாது என்று எப்படி சொல்கிறீர்கள்?

சரத் வீரசேகரா பிச்சை எடுக்க மேட்குலக நாட்டுக்கு போவதில்லைதானே. அதனாலதான் இவருக்கு மேட்குலக நாடுகள் தடை விதித்தாலும் பிரச்சினை இல்லை என்று எழுதினேன். இவருக்கும், விமல், கம்மன்பில போன்றவருக்கும் பணம் கொடுப்பது சீனா என்பதும், சீனாவின் ஏஜென்ட் என்பதும் அறிந்ததே.

  • Replies 61
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2023 at 17:25, vasee said:

ஒப்பீட்டளவில் கனடிய தமிழர்கள் அவுஸ்ரேலிய தமிழர்களை விட பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு செலுத்துகின்றனர், 2009 இல் அவுஸ்ரேலிய முன்னாள் இடதுசாரிக்கட்சியினை சேர்ந்த பிரதமரின் சிட்னி உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக தமிழர்கள் அமைதியான முறையில் வீதி மறியல் செய்திருந்தனர், அப்போது பிரதமர் அலுவலகம் அமைதி காத்திருந்தது, பின்னர் ஆட்சிக்கு வந்த வலதுசாரி கட்சி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையில் தமிழருக்கு எந்த பிரச்சினையுமில்லை என்ற விடயத்தினை கூறியிருந்தது, அத்துடன் நிற்காமல் இலங்கைக்கு கடற்கலஙளையும் வழங்கியிருந்தது.

உண்மை, நானும் அங்கிருந்தேன். கெவின் ரட் வெளியில் வந்துகூடப் பார்க்கவில்லை. மேலும், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு மைதானம் ஒன்றிற்குச் செல்லுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலீஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். நமது போராட்டங்கள் எதையுமே அவுஸ்த்திரேலிய அரசு அன்று கண்டுகொள்ளவில்லை. இதேவகையான பேரணிகளை கன்பராவில் பல தூதரகங்கள் முன்னிலையிலும், பாராளுமன்ற முன்றலிலும் நடத்திப் பார்த்தோம், எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குகள் தான். சிட்னி பரமட்டா சதுக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களையும் பொலீஸார் கைதுசெய்தனர். 

இனக்கொலை முடிவடைந்து சில மாதங்களின் பின்னர் தமிழர் பிரதிநிதிகளுடன் கெவின் ரட் பேசிய சந்தர்ப்பம் ஒன்று இருந்தது. அதன்போது அவுஸ்த்திரேலிய அரசு ஏன் இனக்கொலையினைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யவில்லை என்று வினவியபோது, "இந்தியாவை மீறி நாம் எதனையும் செய்யமுடியாது, போரை நடத்துவது இந்தியாதான் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்கிற ரீதியில் கெவின் ரட் கூறினார் என்று அச்சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் கூறியிருந்தார். இது தொழிற்கட்சி.

லிபரல் கட்சி பற்றிக் கேட்கவே வேண்டாம். கெவின் ரட்டிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த லிபரல் கட்சியின் அன்றைய வெளிவிவகார அமைச்சர் ஸ்கொட் மொறிசன் இலங்கைக்கு ரோந்துக்கப்பல்களை அன்பளிப்புச் செய்ததுடன், அவுஸ்த்திரேலியா நோக்கி வரும் அகதிகள் படகுகளைத் தடுக்க பல மில்லியன் டொலர்களையும் அள்ளி வழங்கியிருந்தார். 

இனக்கொலை அரங்கேறிவந்த நாட்களில் அவுஸ்த்திரேலிய வெளிவிவகாரப் பிரிவில் இலங்கையின் ஆதிக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பாலித கோகண்ண அவுஸ்த்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சில் முன்னர் தொழில் புரிந்தவர். பல அவுஸ்த்திரேலிய அதிகாரிகளுக்குப் பரீட்சயமானவர். இவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சில் பதவியேற்றபோது தனது முன்னைநாள் அவுஸ்த்திரேலிய நண்பர்களை போரில் இலங்கைக்குச் சார்பாகச் செயற்படுமாறும், போரிற்கெதிராக விமர்சனங்களை முன்வைக்காதவாறும் பார்த்துக்கொண்டார் என்று பரவலாகக் கருதப்படுகிறது. பல அவுஸ்த்திரேலிய அதிகாரிகளைப் பொறுத்தவரையில், "போர் முடியட்டும், மீதமிருப்பவர்கள் பற்றிப் பின்னர் யோசிக்கலாம்" என்கிற மனநிலையே இருந்தது. 

மேற்குநாடுகளில், மனிதநேயம் என்று வரும்போது, ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அவுஸ்த்திரேலியா இவ்விடயத்தில் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் கனடா மிக உயரத்தில் இருக்கிறது. இதற்கு அங்குவாழும் பல லட்சம் தமிழர்களின் பலம் ஒரு காரணம். அதுமட்டுமல்லாமல் அங்குவாழும் சாதாரண தமிழர்களின் உண்மையான இனப்பற்றும் இன்னொரு காரணம். அவுஸ்த்திரேலியாவில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தகைமையூடாக குடிபெயர்ந்தவர்கள். தாயகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச விரும்பாத, அல்லது எமக்கேன் தேவையில்லாத வேலை, நாமுண்டு எமது நலமுண்டு என்று வாழ்பவர்கள். இவர்கள் போன்ற மக்கள் கூட்டமொன்றினை 2009 இல் வீதிகளில் இறக்கியவர்கள் உண்மையாகவே கெட்டிக்காரர்கள் தான்.

நன்றி கனடா!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

https://youtu.be/fijJslL5jos

எப்படி இந்தப் பெண் பேசுகின்றார். அனியாயமாக நடந்த கொலைகளை மறைக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலில் குழுமிய மக்கள் மீது குண்டு பொழியும்போது இவாவுக்கு தெரியவில்லை, பாடசாலைகள், சிறுவர் இல்லங்கள், வைத்தியசாலைகளில் குண்டுகள் போட்டு குழந்தைகள் மரிக்கும்போது தெரியவில்லை, வைத்தியசாலைகளில் நோயாளிகள் மீது குண்டு பொழியும் போது பேசவில்லை, .வந்துவிட்டா வாங்கின பணத்துக்கு வக்காலத்து வாங்க. இத்தனை லட்ஷம் மக்கள் அடைக்கலம்  தேடி ஏன் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்? அவர்கள் அங்கு போனதனாற்தானே கனடா அவர்களுக்காக கதைக்கிறது. இனப்படுகொலை நடைபெறவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு செல்ல இலங்கை மறுக்கிறது? ஏன் அந்த மக்கள் தங்கள் இறந்த உறவுகளை நினைவுகூர தடை  விதிக்கிறது? அரசு கூறியது எழுபத்தையாயிரம் மக்களே வன்னி நிலப்பரப்பில் இருந்ததாக இந்தபொம்பிளை சொல்லுது இரண்டு லட்ஷத்து ஐம்பதாயிரம் மக்கள் இருந்ததாக. அப்போ, மிகுதி  மக்களுக்கு என்ன நடந்தது? யாழ்ப்பாணத்துக்கு தண்ணி  வராமல் புலிகள் தடுத்தனராம், இராணுவம் தந்ததாம். எந்தத்தண்ணியை குறிப்பிடுகிறா என்று தெரியவில்லை? தமிழே சரியாக வாயில வரவில்லை இதில தமிழர் போராட்டம் பற்றி கதைக்க வந்திட்டா, எங்கேயோ அரைக்கலப்பு! 

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி மார்! அண்ணன் தம்பி உதவமாட்டாங்கள்.  பெரியவர் போட்டார்.  ஆகவேண்டியதைப் பாருங்கோ! எத்தினையோ வழிகளிருக்கு.  நல்ல நிபுணரெல்லாமிருக்கினம்.  சைபரடியாலேயே பல நெருக்குவாரங்களைக் கொடுத்து மரத்தால விழுந்து போய்க் கிடக்கிறவைய ஏறி மிதிக்கலாம்.  அப்பதான் வழிக்கு வருவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

இனக்கொலை முடிவடைந்து சில மாதங்களின் பின்னர் தமிழர் பிரதிநிதிகளுடன் கெவின் ரட் பேசிய சந்தர்ப்பம் ஒன்று இருந்தது. அதன்போது அவுஸ்த்திரேலிய அரசு ஏன் இனக்கொலையினைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யவில்லை என்று வினவியபோது, "இந்தியாவை மீறி நாம் எதனையும் செய்யமுடியாது, போரை நடத்துவது இந்தியாதான் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்கிற ரீதியில் கெவின் ரட் கூறினார் என்று அச்சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் கூறியிருந்தார். இது தொழிற்கட்சி.

லிபரல் கட்சி பற்றிக் கேட்கவே வேண்டாம். கெவின் ரட்டிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த லிபரல் கட்சியின் அன்றைய வெளிவிவகார அமைச்சர் ஸ்கொட் மொறிசன் இலங்கைக்கு ரோந்துக்கப்பல்களை அன்பளிப்புச் செய்ததுடன், அவுஸ்த்திரேலியா நோக்கி வரும் அகதிகள் படகுகளைத் தடுக்க பல மில்லியன் டொலர்களையும் அள்ளி வழங்கியிருந்தார். 

இனக்கொலை அரங்கேறிவந்த நாட்களில் அவுஸ்த்திரேலிய வெளிவிவகாரப் பிரிவில் இலங்கையின் ஆதிக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பாலித கோகண்ண அவுஸ்த்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சில் முன்னர் தொழில் புரிந்தவர். பல அவுஸ்த்திரேலிய அதிகாரிகளுக்குப் பரீட்சயமானவர். இவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சில் பதவியேற்றபோது தனது முன்னைநாள் அவுஸ்த்திரேலிய நண்பர்களை போரில் இலங்கைக்குச் சார்பாகச் செயற்படுமாறும், போரிற்கெதிராக விமர்சனங்களை முன்வைக்காதவாறும் பார்த்துக்கொண்டார் என்று பரவலாகக் கருதப்படுகிறது. பல அவுஸ்த்திரேலிய அதிகாரிகளைப் பொறுத்தவரையில், "போர் முடியட்டும், மீதமிருப்பவர்கள் பற்றிப் பின்னர் யோசிக்கலாம்" என்கிற மனநிலையே இருந்தது.

ஜ்நன்றி இந்த விடயங்கள் அறிந்திருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

கன்பராவில் பல தூதரகங்கள் முன்னிலையிலும், பாராளுமன்ற முன்றலிலும் நடத்திப் பார்த்தோம், எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குகள் தான்.

இந்திய தூதரகத்தில் மனுவை கூட ஏற்கவில்லை என்பதாக நினவுள்ளது, 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் போராட்டம் : கனடா பிரதமர் மற்றும்பாராளுமன்ற உறுப்பினர் ஹரியின் உருவ பொம்மைகள் எரிப்பு 

24 JUN, 2023 | 07:35 PM
image
 

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிங்களம், தமிழ், இஸ்லாமிய தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (24) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்  'பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம்', 'ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா', 'படுகொலை எங்கே நடந்தது?', 'ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம்', 'எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ' போன்ற கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு 'இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள்', 'கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள்; அது குற்றம்' போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

மேலும், இந்த போராட்டத்தின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் வீதியில் வைத்து எரிக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

IMG-20230624-WA0064.jpg

IMG-20230624-WA0075.jpg

IMG-20230624-WA0071.jpg

IMG-20230624-WA0049.jpg

IMG-20230624-WA0044.jpg

IMG-20230624-WA0037.jpg

IMG-20230624-WA0034.jpg

IMG-20230624-WA0029.jpg

IMG-20230624-WA0028.jpg

https://www.virakesari.lk/article/158505

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

'படுகொலை எங்கே நடந்தது?',

படுகொலை நடக்கவில்லையென்றால் ஏன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புகிறோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள்? நாட்டிலே என்ன நடந்தது, நடக்கிறது என்று தெரியாமல் கூலிக்கு கோசம் போடும் கூட்டத்தாலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போகிறது. இவர்களுக்கு எதிராக இது கண்டிப்பாக திரும்பும், அப்போ; இவர்களுக்காக கூச்சல் போட யாரும் வரமாட்டார்கள்.

8 hours ago, ஏராளன் said:

'ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா',

என்ன சொல்கிறோம், என்ன பிடித்திருக்கிறோம், எப்படி பிடித்திருக்கிறோம் என்று அறியாத கூட்டம்!

 

8 hours ago, ஏராளன் said:

சிங்களம், தமிழ், இஸ்லாமிய தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (24) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

 

8 hours ago, ஏராளன் said:

இந்த போராட்டத்தில் தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மீண்டும் தங்கள் எரிப்பு கலாசாரத்தை தெருவில் காண்பித்துள்ளனர். உலகம் இலங்கையில் முன்னெப்போதும் காணாததையா இப்போ கண்டு மிரளப்போகுது? சிங்களத்தின் அறியாமையையும், இதில் கலந்து கொண்ட தமிழரின் தன்மானமற்று விலைபோகும் நிலையையும் எண்ணி சிரிக்கும். முப்பதுபேர் கடை வீதிக்கு வந்திருப்பார்களோ? லஞ்சம் பெற்ற கூத்தாடிகள், தங்கள் நாட்டிலேயே முகத்தை மறைத்துக்கொண்டு எதிர்ப்புத்தெரிவிக்கிறார்கள். முப்பது பேர், முப்பத்தைந்து ஆண்டுகால போரை நிறுத்த முடியவில்லை, எழுபத்தைந்து வருட அடக்குமுறையை தடுக்க முடியவில்லை, வீதியில் மக்கள், அவர்கள் நிலங்களில் இராணுவமும் விகாரைகளும் அதைக்கேக்க முடியவில்லை. ஒற்றுமைக்கு இயக்கம்! நாட்டிலே பிரச்சனை இல்லையென்றால்; ஏன் ஒற்றுமைக்கு ஒரு இயக்கம்? நாளைக்கு, இதே கூட்டம், வேறொரு இயக்கத்தின் பெயரால் கூச்சல் போடும். நடிகர் ஒன்றேயாட்கள், நாடகம், இடம், பெயர் மாற்றத்தோடு! இதுவும் ஒரு உழைப்பு, கூலிக்கு மாரடிப்பது போன்று.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

இந்த போராட்டத்தில் தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

பாவம் , எதோ தேவைகளுக்காக வந்த அப்பாவி மக்களை ஏமாற்றி கொண்டுபோன மாதிரி தெரியுது. மற்றப்படி தமிழ் முஸ்லீம் மக்கள் பங்குபற்றியதாக தெரியவில்லை. ஒரு தொப்பி மட்டும் தெரியுது. அதில் எழுதிய தமிழ் தமிழர்களால் எழுதப்பட்ட்தாகவும் தெரியவில்லை. சிங்களம் தமிழ் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில்வைத்திருப்பதாக காடும் முயட்சியில் ஒன்றுதான் இது. 

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடிகள் எழுதிக்கொடுத்த பதாதைகளை சிங்களம் தூக்கிப்பிடித்து தமிழர் என்று படம்   காட்டினாலோ, இல்லை தமிழரே காட்டினாலும், இலங்கையின் முட்டாள்தனத்தையும், பிடிவாதத்தையும்  தமிழரின் இயலாத்தன்மையை சிங்களம் அச்சுறுத்தி  எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்பதையும் அறியாத உலகமல்ல. ஒருவேளை சிங்களம் தன்னை ராஜதந்திரி என நினைத்துக்கொள்ளலாம், அவர்களின் அறிக்கை வருமளவும். "அற நனைஞ்சவனுக்கு கூதலுமில்லை காய்ச்சலுமில்லை." பாதிக்கப்பட்ட  மக்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதும் சிங்களத்தின் அடாவடியின், அடக்குமுறையின்  ஒரு கட்டமே! அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் எப்படி பேசி தம்மை பாதுகாக்க வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறார்கள் என்பதை உலகம் வெளிப்படுத்தி இதை நிறுத்த வற்புறுத்த வேண்டும். அவர்களின் நிலங்களில் இராணுவமும் முகாம்களும் விகாரைகளும்  பிக்குகளும் நிறைந்திருக்க எப்படி அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல முடியுமென்பதை அறியாததா உலகம்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாத அரசொன்றை ஏற்படுத்தினால் மட்டுமே ஆளும் சிங்கள தரப்புக்குக் கொடிபிடிக்கும் சுயநலம் பிடித்த அற்பர்களின்  இத்தகைய செயற்பாடுகளை ஒடுக்க முடியும்.  ஈழத்தமிழர்கள் ஈழத்தோடு மட்டும் நில்லாமல் வங்காள விரிகுடாவில் ஒன்றிணைந்த தமிழ்த்தேசியத்தை உருவாக்க முனையவேண்டும்.  அப்போதுதான் ஈழத்தமிழர்களுக்கான உலக செல்வாக்கு வலுப்பெறும்.

Edited by karu
ஒரு சொல் சேர்க்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.