Jump to content

புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது – இராணுவ தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது – இராணுவ தளபதி

புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது – இராணுவ தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சொல்லொணா சிரமங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பெருமளவில் பங்களித்தார்கள் என்றும் இதனை இலங்கையர்கள் தொடர்ந்தும் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்தல், பேரிடர் மற்றும் கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது, தங்கள் சொந்த உயிருக்கு ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், இராணுவம், மீட்பு மற்றும் உதவிக்கு வந்தது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1332335

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

இது சிங்கள பவுத்த நாடு என்கிற கோசம் ஒரு பக்கம், தமிழருக்கு அதிகாரம்  என்பது தேவையில்லை அப்படி ஏதும் நடந்தால் கொளுத்துவோம், ரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கை மறுபக்கம், நடக்கும் கொடுமைகளை சொன்னால் நல்லிணக்கம் கெட்டுவிடும் எனும் அதட்டல் இன்னொரு புறம். இதில சமாதானம், ஒன்றிணைவு என்று ஆளாளுக்கு நாக்கூசாமல் பொய்ச்சொல்லபழகி இருக்கிறார்களோ? இது இவர்களின் பிறப்போடு வந்ததோ? ஆரம்பத்தில் பாற்சோறு பகிர்ந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள், இவருக்கும் இரண்டு நாடு தடையுத்தரவு போட மறைந்து விடுவார். ஒருநாள் இவர்களை  வெற்றிவிழா கொண்டாடுவோம் என்று அழைத்தாலும் வரமாட்டார்கள். பதின்மூன்று ஆண்டுகள் வீர முழக்கமிட்டு, தாங்களே கதாநாயகர்கள் என்று கர்சித்தவர்கள் இன்று மேடையில் இல்லை, இவர் தெரிவிக்கிறார், அடுத்த ஆண்டு எவரோ? இது நாட்டுக்கு தேவையில்லை என்று எப்போ மக்கள் ஒதுக்குகிறார்களோ அன்று பிறக்கும் இவர்கள் சொல்லிக்கொள்ளும் நல்லிணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு மட்டும் நிம்மதி போலும். நாடே பிச்சை எடுக்குது.

மேலும் புலிகள் சொந்த நிலத்தில் பூரண தாயக சுதந்திரம் வேண்டி நின்றமை ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றமை பயங்கரவாதம் என்றால்.. அடுத்தவன் நிலத்தை இராணுவ பலத்தால் ஆக்கிரமித்து.. புத்த விகாரை கட்டுவது மட்டும்.. அதுதான் மிகக் கொடிய பயங்கரவாதம். அது ஒழியும் வரை இலங்கைத் தீவுக்கு நிம்மதியில்லை. 

Link to comment
Share on other sites

நீதி வழங்காத இலங்கை – சாடுகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம் !

meenakshi-ganguly.jpg

2009 இல் முடிவடைந்த நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் மே 18 தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ‘தாக்குதலற்ற வலயங்கள்’ என்ற இடங்களை அறிவித்து பொதுமக்கள் அங்கு சென்ற பின்னர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஏராளமான போராளிகள் மற்றும் சிவிலியன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டனர் அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் நினைவூட்டியுள்ளது.

இந்தநிலையில் போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி வழங்கப்படவில்லை மாறாக இலங்கை அரசு தனது படைகள் செய்த அட்டூழியங்களை மறுத்து வருகிறது. காணாமல் போனவர்களின் தாய்மார்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதியை அறிய தொடர்ந்து முயன்று வரும் ஒரு குழுவினர், பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. மோதலின் போது, சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் படையினரைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட எண்ணற்ற உரிமை மீறல்களை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.

26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போதும் அதற்குப் பின்னரும் நடந்த பாரதூரமான உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தீவிரமாக விசாரித்து உரிய முறையில் தண்டிக்கத் தவறிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக இலங்கை நிர்வாகங்களை விமர்சித்து வருகின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சில அரசாங்க அதிகாரிகள் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக அல்லது இலங்கை இராணுவத்தில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். தமிழர்களுக்குச் சொந்தமான அல்லது இந்துக் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அதிகாரிகள் கைப்பற்றுவது அல்லது வைத்திருப்பது தொடர்கிறது. போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையை தொடர அரசாங்கம் விரும்பாததால், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் வேறு இடங்களில் நீதியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இலங்கை மற்றும் வெளிநாட்டு நீதித்துறை அதிகாரிகளின் ‘கலப்பின’ செயல்முறையை திட்டமிடும் முந்தைய ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகிய பின்னர், எதிர்கால வழக்குகளில் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஒரு பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியது.

இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை’ உருவாக்குவதற்கு முன்மொழிந்தார். ஆனால் முந்தைய அனைத்து உள்நாட்டு ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது நீதிக்கான முயற்சிகளை ஊக்குவிப்பதை விட ஓரங்கட்டுவதற்கான ஒரு வழியாகும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டை போடுவதை நிறுத்திவிட்டு, பலர் பாதிக்கப்படும் பாரதூரமான மீறல்களை விசாரித்து வழக்குத் தொடர வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும். அது வரை, இலங்கையில் வெளிநாடுகளில் நீதியை தீவிரமாக தொடர ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்துடன் ஏனைய நாடுகள் இணைந்து செயற்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்ஷி கங்குலி கோரியுள்ளார்.

https://thinakkural.lk/article/254036

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டில் தமிழருக்கெதிரான காலங்காலமாக நடந்த  ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும்  உரிமை மீறல்களையும் தடுக்க, கண்டிக்க, தண்டிக்க, தமிழின தலைவர்களும் சர்வதேசமும் மனித உரிமைகள் ஆணையம் என்று சொல்லிக்கொள்வோரும் தவறியதாலேயே, தம் இனத்தை தக்க வைக்க இளைஞர் ஆயுதம் தாங்க வேண்டிய நிலை வந்தது. அதற்கான பொறுப்பை கூற வேண்டியவர்கள், இது பயங்கரவாதம் என பெயரிட்டு தமது பொறுப்பை தட்டிக்கழித்ததாலேயே, இவர்கள் முன்னாலேயே, பார்வையிலேயே ஒரு இனத்தை அழித்து வெற்றிவிழா கொண்டாட முடிந்தது. இத்தனை கொடூரங்களை நிகழ்த்தியவர்களை பாராட்டினார்களேயொழிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவர்களின் தாக்குதலை நிஞாயப்படுத்தினார்களே அன்றி அதை தடுக்க முயற்சித்தவர்களை குற்றம் சுமத்தி ஓரங்கட்டினர், தடுப்புக்களை ஏற்படுத்தினர். இப்போ இவர்கள் கூப்பாடு போடுவதும் அறிக்கைவிடுவதும்  தங்களை நிஞாயப்படுத்தவேயன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விமோசனம்மில்லை, பாதுகாப்புமில்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.