Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம்

349171941_173893155631536_52373757814475

349313577_786672276164762_38129435427507

349735326_977555097011158_80993206937148

349103346_1317619342496407_6066911310538

349319097_1236386053910364_7686133293973

 


கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கம் இதனை அனுமதிக்கின்றதா?
கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கத்தின் நீச்சல் தடாகத்தில் என்ன நடக்கின்றது?
கடந்த காலங்களில் பெரும் தொகையான மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை வழங்கிய கிளிநொச்சி நீச்சல் தடாகம் தற்போது காம களியாட்டங்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்த நீச்சல் தடாகம் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த முடியாமல் இரும்புத்திரை கொண்டு பூட்டப்பட்டுள்ளது.


சிறார்களுக்கான நீச்சல் பயிற்சிகள் யாவும் நிறுத்தப்பட்டு திறமையுடன் செயல்பட்ட பயிற்றுனர் துரத்தப்பட்டுள்ளார். தற்போது பயிற்றுநர்கள் எவரும் இல்லாமலும் உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவரும் இல்லாமலும் இந்த நீச்சல் தடாகம் இவ்வாறான நிலைமையில் உள்ளது.


இதன் நிர்வாகமானது தற்போது யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளரும், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்தியர் சத்தியமூர்த்தி, வட்டக்கட்சி ஆரம்ப வித்தியாலய அதிபர் பங்கையச்செல்வன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் தவராஜா, கரடிப்போக்கு குரு ஹாட்வெயார் உரிமையாளர் தம்பி என்று அழைக்கப்படும் சிவகுமார் ஆகியோரின் கைகளில் உள்ளது. இதற்கு மேலதிகமாக மத்திய விளையாட்டு அமைச்சின் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுராகாந்தன் அவர்களும் நீச்சல் தடாக நிர்வாகத்தினை முகாமை செய்து வருகின்றார். 


நீச்சல் தடாகத்தினை இந்தக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் முன்னர் இந்த நீச்சல் தடாகத்தில் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருந்த மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் ஆனந்தராஜா அவர்கள் ஓரம் கட்டப்பட்டு விளையாட்டுடன் சம்பந்தமே இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 


நீச்சல் பயிற்சிகளை திறம்பட நடத்தி வந்த பயிற்றுநர்கள் வெளியேற்றப்பட்டு தங்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்காத வேலையாட்கள் நியமிக்கப்பட்டு தங்களது சொந்தத் தேவைக்காகவும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகவும் கொண்டு இந்த நீச்சல் தடாகம் தற்போது செயல்பட்டு வருகின்றது. இதற்கு நல்ல உதாரணமாக இன்றைய செயல்பாடு அமைந்துள்ளது. எமது மாவட்ட சிறார்களுக்கு பயன்பட வேண்டிய இந்த நீச்சல் தடாகம் இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குவதால் கிளிநொச்சி மாவட்டத்தின் நீச்சல் ஆர்வலர்கள் கடும் விசனமும் வேதனையும் அடைந்துள்ளார்கள்.


இந்த நீச்சல் தடாகத்தின் எதேச்சதிகார செயற்பாடுகளை அவதானித்து வந்த கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு ஆர்வலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுநர் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சர் ஆகியோரிடம் இந்த எதேச்சதிகார குழுவினரிடம் இருந்து இந்த நீச்சல் தடாகத்தினை மீட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு ஒன்றினை தெரிவித்துள்ளார்கள்.


"நாய் பாக்குற வேலையை நாய் பார்க்க வேண்டும் 
கழுதை பார்க்கிற வேலையை கழுதை பார்க்க வேண்டும் என்று சும்மாவா சொல்லி இருக்கிறாங்க"

Vetri Chelvan

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரிளஞ்சோடிகள் எஞ்ஜோய்!😂👏

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தெரிச்சல் 😁

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் வெற்றி செல்வனா இதை பற்றி எழுதியது ? 

  • கருத்துக்கள உறவுகள்

பூசணிக்காய் போறது தெரியாது, கடுகை குறித்து கவலை என்று சொல்ல வருகிறது. 🤣

காதலிக்கு, நீச்சல் பழக்குகிறார் என்றும் சொல்லலாமே. சரி ஒரு கிஸ் அடித்தார்கள் என்றும் சொல்லலாமே. ஏதோ வேறு வகையில் நடந்து கொள்வார்கள் என்று, ஜொள்ளு விட்டு, படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் போட்டிருக்கிறார் போல.

அங்க வவுனியாவிலே, லண்டனில இருந்து போன அத்தார் செய்த வேலையால் மனைவியின் தங்கை உயிர் மாய்க்க முனைந்து வைத்தியசாலையில். அதை தான் பூசணிக்காய் என்று சொன்னேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கான… நீச்சல் பயிற்சி நடந்த இடத்தில்…
இப்படியான செயல்களுக்கு இடம் கொடுப்பது கண்டனத்துக்கு உரியது.
இதன் நிர்வாகத்தில் உள்ளவர்கள், உடனடியாக தலையிட்டு எதிர்கால நலன் கருதி
அதனை மீண்டும் மாணவர்களுக்கே வழங்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.