Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

01 JUN, 2023 | 05:26 PM
image
 

(எம்.மனோசித்ரா)

நாட்டில் வருடத்துக்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுகின்றவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் தம்மை தேசிய வருமான திணைக்களத்தில் பதிவு செய்வது வியாழக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் , முகாமைத்துவ கணக்காய்வு நிர்வாக உறுப்பினர்கள், இலங்கை பொறியியல் நிறுவன உறுப்பினர்கள், இலங்கை அளவீட்டு மற்றும் மதிப்பாய்வு நிறுவன உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள், பிரதேச செயலகங்களில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்துள்ளவர்கள் (முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரங்கள் தவிர) தம்மை வருமான திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அசையா சொத்துக்களை கொள்வனவு செய்துள்ள அல்லது உரித்தாக்கிக் கொள்வதற்கான உரிமத்தை பரிமாற்றிக் கொண்டவர்கள் , இலங்கையில் மாதாந்தம் ஒரு இலட்சம் அல்லது வருடத்துக்கு 12 இலட்சம் வருமானம் பெறுபவர்களும் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதே போன்று இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதை பூர்த்தி செய்துள்ள அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதன் பின்னர் 18 வயதாகவுள்ள அனைவரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

https://www.virakesari.lk/article/156711

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU

01 JUN, 2023 | 05:26 PM
 
 

அதே போன்று இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதை பூர்த்தி செய்துள்ள அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதன் பின்னர் 18 வயதாகவுள்ள அனைவரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

https://www.virakesari.lk/article/156711

இனிமேல் 18 வயதுக்கு மேட்படட யாவரும் வருமான வரிக்கான கோப்புகளை திறக்க வேண்டும். அதாவது இனிமேல் பிச்சைக்காரர்களும் வரி செலுத்தும் நிலைமை உருவாகின்றது. இதனால் மிகவும் பாதிப்படைவது சடடதுறையினர், வயித்தியர்கள் , பொறியியலாளர்கள் , வியாபாரிகள் போன்றோரே. அரச தனியார் துறையில் வேலை செய்பவர்கள் வரி செலுத்தினாலும், பதிவு செய்யாமல் நிறையபேர் இந்த தொழில் மூலம் நிறையவே சம்பாதிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் செயட்படுத்துவதட்கு இலகுவாக இருக்காது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரிக் கோப்பு குறித்து விளக்கம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் எதிர்கால நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 வரவு செலவு திட்டத்தில் நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என்று ஒரு முன்மொழிவு இருந்தது.

இதன் பொருள் அரசாங்கம் இவர்கள் அனைவரிடமிருந்தும் வரிப் பணத்தை வசூலிக்கப் போகிறது என்று அர்த்தமல்ல என அவர் தெரிவித்துள்ளது.

அரச வருமானத்திற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காகவே எல்லோரையும் பதிவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலருக்கு பதிவு செய்து அந்த கோப்பில் உள்ள தகவலின் படி அரசாங்கம் கொடுக்கும் உதவிகள் அவருக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/256525

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வாள் வெட்டுக் கோஸ்டிக் கம்பனியளும் பதியோனுமே? 🤔 🤑

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

உந்த வாள் வெட்டுக் கோஸ்டிக் கம்பனியளும் பதியோனுமே? 🤔 🤑

அண்ணை 18வயதுக்கு குறைந்தவர்கள் கோஸ்டியில் இருந்தால் பதிவில் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

உந்த வாள் வெட்டுக் கோஸ்டிக் கம்பனியளும் பதியோனுமே? 🤔 🤑

எங்கே இருந்து அவர்களுக்கு பணம் வருகுதென்று சொன்னால் இன்னும் இலகுவாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 16:18, ஏராளன் said:

சிலருக்கு பதிவு செய்து அந்த கோப்பில் உள்ள தகவலின் படி அரசாங்கம் கொடுக்கும் உதவிகள் அவருக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையாகவா? ம்ம் ..நம்பிட்டம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை - கல்வி அமைச்சர்

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 09:40 AM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. வரி செலுத்தவேண்டியவர்களும் அதனை புறக்கணித்து வருகின்றனர். இதனால் நலனோம்பு மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார்.

வரி செலுத்தவேண்டியவர்களின் பதவிநிலை மற்றும் வரி விதிப்புக்கு உள்வாங்கப்படுபவர்களின் பட்டியல் நிதி அமைச்சினால் கடந்த வாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வரி செலுத்துவது வரி செலுத்தவேண்டியவர்களில் மிகவும் குறைவானவர்களாகும். என்றாலும் தற்போது வரி செலுத்த வேண்டியவர்களின்  கோப்புகள்  திறக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்றில்லை.

என்றாலும் வரி  கோப்புகள்  திறப்பதன் மூலம், வரி செலுத்துவதற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு இல்லை என்றால் வரி செலுத்தவேண்டியவர்களும் வரி செலுத்தாமல் அதனை புறக்கணித்து விடுகின்றனர். 

அரசர்களது காலத்தில் இருந்து நாட்டில் வரிகளின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தின் மூலமே நலநோம்பு வேலைத்திட்டங்கள் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் எந்தவொரு நாட்டுக்கும் வரி மிகவும் முக்கியமானதாகும். கடந்த காலங்களில் நாட்டில் பாரியளவில் வரி குறைப்பு செய்தமையாலே அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்தது என்றார்.

https://www.virakesari.lk/article/156926

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் இதை வைத்திருக்க வேண்டும்! புதிய சட்டம்! | VK Karikalan

 

TIN நேரடி இணைப்பு

https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader

  • கருத்துக்கள உறவுகள்

இதை செலுத்தவும் எமக்கு அழைப்பு வரப் போகிறது 😭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இதை செலுத்தவும் எமக்கு அழைப்பு வரப் போகிறது 😭

உங்களுடைய பெயரில் சொத்துகள் இருந்தால் வரி கட்ட வேண்டி வரும் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

உங்களுடைய பெயரில் சொத்துகள் இருந்தால் வரி கட்ட வேண்டி வரும் அண்ணை.

விசுகு அண்ணா கூற வந்தது.

வரி கட்ட காசு வேண்டும் என்றும் இனி உதவி கேட்பார்கள் ஊரிலிருந்து…..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

விசுகு அண்ணா கூற வந்தது.

வரி கட்ட காசு வேண்டும் என்றும் இனி உதவி கேட்பார்கள் ஊரிலிருந்து…..

பிளீஸ் மீரா….நீங்களே ஐடியா போட்டு கொடுக்க வேண்டாம்🤣….நேற்று ஒராள் சாமம் 3 மணிக்கு கோல் எடுத்திருக்கு….

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிளீஸ் மீரா….நீங்களே ஐடியா போட்டு கொடுக்க வேண்டாம்🤣….நேற்று ஒராள் சாமம் 3 மணிக்கு கோல் எடுத்திருக்கு….

வரும் முன் மணியை அடிப்பது நம்ம கடமை 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

விசுகு அண்ணா கூற வந்தது.

வரி கட்ட காசு வேண்டும் என்றும் இனி உதவி கேட்பார்கள் ஊரிலிருந்து…..

உழைச்ச காசுக்கு வரிகட்டவும் காசு பத்தாத நிலமை வரும் என்று சொல்லுறீங்களோ அண்ணை?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TIN எண் வரி ஏய்ப்பவர்களை அடையாளம் காண உதவும் – பேராசிரியர் அத்துகோரல

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கட்டாய வருமான வரி பதிவு செய்வதை எதிர்ப்பவர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு மறைமுக ஆதரவாளர்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்பினைத் திறந்து, அதனுடன் தொடர்புடைய எண்ணை வழங்க உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் எடுத்த தீர்மானம் மிக முக்கியமான நடவடிக்கை என்றும், வரி எண்ணைக் கொண்டிருப்பது அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என அர்த்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பிரஜைகள் தொடர்பான துல்லியமான தரவு முறைமை உருவாக்கப்படும் என்றும், இதுவரை வரி செலுத்தும் கட்டமைப்பில் இல்லாதவர்கள் மற்றும் வேண்டுமென்றே வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நபர்களை அடையாளம் காண்பதற்கான பின்னணியை இது வழங்கும் என்றும் பேராசிரியர் அத்துகோரள தெரிவித்தார்.

ஒரு நாட்டில் 18 ஆண்டுகள் நிறைவடைந்த ஒவ்வொரு நபருக்கும் வரி எண் இருக்க வேண்டும் என்றும், அவர்களின் வருமானம், செலவுகள் மற்றும் சொத்துக்கள் குறித்த சரியான தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் வரி அட்டவணையை அரசு உருவாக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்திட்டம் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வரி ஏய்ப்பு செய்பவர்களை இனங்கண்டு, முறைப்படி வரி செலுத்துபவர்களாக அமைப்பதற்கான பின்னணியை இது வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஓன்லைனில் வரி எண் பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை இருப்பதாகவும், இதனால் பதிவு பெறுவதில் மக்களின் ஆர்வம் குறையலாம் என்றும் அவர் கூறினார். வரி எண்ணைப் பெற விரும்பும் கிராமப்புற மக்கள் சிரமமின்றி, வரி எண் பெறும் முறைகளை எளிமையாக்குவது வருவாய்த் துறையின் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://thinakkural.lk/article/287433

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரிக்கோப்பு இலக்கம் பெப்ரவரி முதல் அமுலுக்கு வருகிறது - நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

08 JAN, 2024 | 06:37 PM
image
 

இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 இலட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த பலம் வாய்ந்த குடிமகன் என்றும், அது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்த நாட்டு மக்களும் இத்தகைய மனப்பான்மையைக் கொண்டுவருவது நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி முதல் திகதியில் இருந்து வரிக்கோப்பு இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, 

2019ஆம் ஆண்டின் இறுதியில் 1,705,233 ஆக இருந்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் இறுதியில் 437,547 ஆகக் குறைந்துள்ளது. எமது அரசாங்கத்தின் புதிய கொள்கைகளால், டிசம்பர் 31, 2023 ஆண்டுக்குள் வரிக் கோப்புகளின் எண்ணிக்கையை 1,002,029 ஆக உயர்த்த முடிந்தது. நாம் மேலும் அந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன், கடந்த வருட இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 08% ஆக இருந்த அரச வருமானத்தை 10% ஆக அதிகரிக்க முடிந்தது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதை 12% ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். ஓரளவு நிலையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறுவதற்கு 2025 ஆம் ஆண்டளவில் 15% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும், வற் வரிக்கு சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதுவரை 15% ஆக இருந்த வற் வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 80 மில்லியன் ரூபாவாக இருந்த வற் வரி எல்லை 60 மில்லியன் ரூபாவாக அமையும். 2001 இல் வற்  சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் வற் வரிக்கு உட்பட்டது. அதில் குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு  வரி திருத்தச் சட்டத்தின் ஊடாக விலக்களிக்கப்பட்டன. விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்கள் மற்றும் சேவைகளில், 97 வகையானவை இந்தத் திருத்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

வற் வரி திருத்தத்தின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச வருமானம் 2.07% இனால் உயரும். இது 645 பில்லியன் ரூபாய். வரி விகிதங்களின் அதிகரிப்புடன் பணவீக்கம் 2.5% அதிகரிக்கும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு பகுப்பாய்வு செய்துள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மீண்டும் 5%க்குக் கொண்டு வர முடியும் என மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நம்பிக்கை  வெளியிட்டுள்ளன.

70% பணவீக்கம் இருந்த நாட்டில் தற்போது 5% பணவீக்க விகிதத்தை பேணவே நாம் முயற்சிக்கிறோம். அத்துடன், இந்த நெருக்கடி நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது எமது நிதி முகாமைத்துவத் திறன்களின் தனித்துவமான அம்சமாகும்.

இன்று நேரடி வரிகள் 30% ஆகவும் மறைமுக வரிகள் 70% ஆகவும் உள்ளது. இந்த வரி விகிதத்தை மாற்றி, நேரடி வரி விகிதத்தை 40%க்கு கொண்டு வருவதே எமது இலக்கு. உலகில் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் நிலை அதுவேயாகும். வரி செலுத்தக்கூடிய பலம் வாய்ந்த 1 மில்லியன் மக்கள் உள்ளனர், ஆனால் தற்போது 05 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை வரி வலைக்குள்ளே கொண்டு வர வேண்டும். பின்னர் மறைமுக வரிகளை குறைக்க முடியும்.

 

பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து வரிக்கோப்பு இலக்கத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறோம். தற்போது அதனைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளதால் தான் அந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. எனவே பிரதேச செயலக மட்டத்தில் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலோசித்து வருகிறோம். அதனை ஒன்லைன் முறை மூலம் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 

வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த வலிமையான பிரஜை என்பது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இவ்வாறு மக்களின் மனப்பான்மையை மாற்றுவது முக்கியம். எனவே இத்திட்டம் வெற்றியடைய அனைவரின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/173463

Edited by ஏராளன்
edit 10 million as 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதேச செயலகங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் TIN வழங்க தனி கருமபீடங்கள் அமைக்க நடவடிக்கை

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற இடங்களில் இது தொடர்பான கருமபீடங்களை திறக்க ஏற்பாடு செய்யுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.

TIN வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச நிர்வாகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகியவற்றின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அனைத்து பிரதேச செயலகங்களும் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னர் செய்தது போல், எரிபொருளுக்கான QR குறியீடுகளை வழங்குவதைப் போன்றே, TIN வழங்குவதற்கான திறமையான செயல்முறையை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஒன்லைன் பதிவு விண்ணப்பப் படிவத்தை சுருக்கவும், ஐந்து நாட்களுக்குள் எண்ணை வழங்குவதற்கான நேரத்தை விரைவுபடுத்தவும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/287577

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரிப் பதிவு தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை – சியம்பலாபிட்டிய

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் இல்லாமை இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆட்களை நியமிக்கவும் பல்கலைக்கழக பட்டதாரிகளை நியாயமான சம்பளத்துடன் பயிலுனர்களாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரி பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆட்கள் பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/289703

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்புகளைத் தயாரிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது -சம்பிக்க ரணவக்க

இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்புகளை தயாரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவையான அனைத்து அளவுகோல்களையும் கருத்திற்க் கொண்டு, ஒரு வரிக் கோப்பினைச் செயலாக்குவதற்கு தோராயமாக அரை மணித்தியாலங்கள் தேவைப்படுவதை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், கணிசமான நேரம் மற்றும் மனிதவளம் தேவை என்பதை எடுத்துரைத்தார்.

“ஒன்பது அதிகாரிகள் மட்டுமே இந்தப் பொறுப்பில் பணிபுரிவதால், தினசரி செயலாக்கத் திறன் 144 கோப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான கோப்புகளை செயலாக்குவது கடினமான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் முயற்சியாகும்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தனிநபருக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறப்பதை விட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்ட 1272 கடனை செலுத்தாதவர்களிடமிருந்து செலுத்தப்படாத வரிகளை வசூலிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் மீது தேவையற்ற சுமை மற்றும் நடைமுறைக்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் .குறிப்பிட்டார்.

மிகவும் நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறையை முன்மொழிந்த பாராளுமன்ற உறுப்பினர், மக்களின் பரிவர்த்தனைகளை துல்லியமாக கண்காணிக்க QR குறியீடுகள் போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கான QR குறியீடுகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டதை ஒரு முன்னுதாரணமாக அவர் மேற்கோள் காட்டினார், இதேபோன்ற நடவடிக்கைகள் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கும் நீடிக்கப்படலாம் என பரிந்துரைத்தார்.

“QR குறியீடுகளை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம், பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றின் மதிப்புகள் பற்றிய துல்லியமான தரவை அரசாங்கம் பெற முடியும், மேலும் முறைப்படுத்தப்பட்ட வரி வசூல் செயல்முறையை எளிதாக்குகிறது,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிநுட்ப தீர்வுகளை ஏற்றுக்கொள்வது வினைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி மிகவும் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய வரிவிதிப்பு முறைமைக்கு பங்களிப்புச் செய்வதாகவும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

https://thinakkural.lk/article/291278

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வாரம் TIN தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்

வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் அல்லது TIN இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை TIN இலக்கமாக பயன்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஆறு நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை நான்கு நிறுவனங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/292953

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கடையின் வருமானம் ரூ.166,000 ஆக இருந்தால் வரி கட்டாயம்

VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான பதிவுக்கான வருடாந்த வருமான வரம்பு 80 மில்லியன் ரூபா 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து அறுபத்தாறாயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் நாட்டிலுள்ள பெருமளவிலான வர்த்தகர்கள் வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 12,000 முதல் 13,000 வரையிலான VAT கோப்புகள் இருப்பதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 50,000ஐத் தாண்டும் என்றும் அரசின் வரித் துறைகள் ஊகித்துள்ளன.

இவ்வாறாக, 60 மில்லியன் ரூபா வருடாந்த வருமானம் ஈட்டும் அனைத்து நபர்களும் வரி செலுத்துவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/297708

  • கருத்துக்கள உறவுகள்

எனது மதம் வரி செலுத்துவதை பாவ செயலாக கருதுகிறது...ஆகவே வரி செலுத்த மாட்டேன்

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சி

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்காக மட்டும் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகளை தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திறந்துள்ளது.

இவ்வாறு திறக்கப்பட்ட கோப்புகளில் உள்ளவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த குழுவில் ஏற்கனவே சம்பளத்தில் இருந்து வரி செலுத்துபவர்களும், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களும் வேறு எந்த வருமானமும் பெறாதவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

வரிக் கோப்பு

வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பதிவு செய்துள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான வரிக் கோப்புகளைத் தங்கள் வரி இலக்குகளை அடைவதற்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் திறந்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சி | Tax Orders Per Million Tin Registered In Sri Lanka

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வரி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு வரி செலுத்துவோர் அடையாள எண்ணில் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகள் திறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வரி அடையாள எண்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி செலுத்துவோரை அடையாளம் காண மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் வழங்கப்படும் என இறைவரி திணைக்களம் அறிவித்திருந்தது.

வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சி | Tax Orders Per Million Tin Registered In Sri Lanka

மேலும், இந்த இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இலக்கம் பெற்ற அனைவருக்கும் உரிய வரிகளை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/tax-orders-per-million-tin-registered-in-sri-lanka-1719972870

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TIN வருமான வரி செலுத்தக் கோரி குறுந்தகவல் – இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

TIN இலக்கத்தை பெற்றாலும் வரி செலுத்துவதைத் தவிர்க்க முடியும்!

மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற எவரும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கமளித்துள்ளார்.

வருமான வரி அடையாளக் குறியீட்டு எண்ணான ‘டின்’ இலக்கத்தை குறிப்பிட்டு வருமான வரியைச் செலுத்துமாறு பலருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் இறைவரித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இராஜாங்க அமைச்சர், மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டாதவர்கள், இந்தத் தகவல் குறித்து அவதானம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறுகின்றவர்கள், தங்களது வருமான வரியை உரிய கணக்கிற்குச் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/305331

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.