Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Health Canada Recalls Clay Cooking Pot

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம்.

எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரோரா குக் வெயார்ஸ் (Arora cookwares) நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த வகை சட்டிகள் அடுப்பில் வைத்ததன் பின்னர் வெப்பமடைந்து வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட மண் சட்டிகளில் இந்த அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்ட இந்த மட்பாண்டங்கள் பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. 

https://canadamirror.com/article/health-canada-recalls-clay-cooking-pot-1685632518

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா சனம் மண் சட்டியிலயா சமைக்கிற?? 

கடை சாப்பாடுதான் என கேள்விப்பட்டன் 

குண்ட போட்டுத்து போயிடுவம்😛😛

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கனடா சனம் மண் சட்டியிலயா சமைக்கிற?? 

கடை சாப்பாடுதான் என கேள்விப்பட்டன் 

குண்ட போட்டுத்து போயிடுவம்😛😛

முதலில், உணவை சமைத்தா சாப்பிடுகின்றனர் எனக் கேளுங்கள். 

😉

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Health Canada Recalls Clay Cooking Pot

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம்.

எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரோரா குக் வெயார்ஸ் (Arora cookwares) நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த வகை சட்டிகள் அடுப்பில் வைத்ததன் பின்னர் வெப்பமடைந்து வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட மண் சட்டிகளில் இந்த அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்ட இந்த மட்பாண்டங்கள் பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. 

https://canadamirror.com/article/health-canada-recalls-clay-cooking-pot-1685632518

ஜேர்மனியில் உள்ள கொழும்பு உணவகத்தில்.     திருக்கை வண்டியில் [ சிறிய வண்டில்.  இலங்கையில் உண்டு ] நான்கு பக்கங்களிலும் மண் சட்டியில். தான் கறிகள். வைக்கப்பட்டிருக்கும்.   ...எவ்வளவும்  சாப்பிடலாம்    ஒரு சிங்களவரால். நடத்தப்படுகிறது.  இலங்கையில் இருந்து வரும் அமைச்சர்கள் அனேகமாக இங்கே வந்து சாப்பிடுவதுண்டு     இங்கே ஸ்பானிய  உணவகத்திலும்.  மண் சட்டியில். ஆறு  றால். பெரித்து தாருவார்கள்.....மீனும்.  பெரிப்பதுண்டு   மிளகாய் தூள் போடுவதில்லை    உப்பு   மிளகு    தூள்.  தான் போடுவது   நல்ல சுவையாகயிருக்கும். 

நிற்க   நாவற்குழியில்.   ஒருவர் மண் பானை   சட்டிகள். தயாரித்து விற்றவர்   மண் பானை சட்டிகள்.  செய்த பின். போறானையில்.  வைத்து சுட்டு. தான் விற்பது    அது ஒருபோதும் வெடிக்காது    இந்தியார்களுக்கு தெரியவில்லை போலும்” 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாங்கள்  பாவிக்கிற சட்டி வெடிக்கிறேல்லை...கனடாவிலைதான் இருக்கிறம்...சமைக்கிறனாங்கள்..

Edited by alvayan
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, alvayan said:

நாங்கள்  பாவிக்கிற சட்டி வெடிக்கிறேல்லை...கனடாவிலைதான் இருக்கிறம்...சமைௐகிறனாங்கள்..

இந்தியாவில் தயாரிக்கப் பட்ட, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மண் சட்டிகள்தான் வெடிக்கின்றனவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் ஏதோ, ஆயிரம் ஆண்டுகளா சாப்பிடும் மண் சட்டி சமையல் பிழையோ என்று பார்த்தால், வடக்கத்தி ஹிந்திக்காரன் கம்பெனி, தமிழனின் கறி சட்டி செய்ய வெளிக்கிட்டு, கையை சுட்டு இருக்கிறார்கள். 🤦‍♂️

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

நானும் ஏதோ, ஆயிரம் ஆண்டுகளா சாப்பிடும் மண் சட்டி சமையல் பிழையோ என்று பார்த்தால், வடக்கத்தி ஹிந்திக்காரன் கம்பெனி, தமிழனின் கறி சட்டி செய்ய வெளிக்கிட்டு, கையை சுட்டு இருக்கிறார்கள். 🤦‍♂️

அது வடக்கர்களின் மூளை லண்டனில் மூளைகடைகளில் ஒன்றுகொன்று அதாவது ஆயிரம் விட்டால் இரண்டாயிரம் இல்லாமல் வீட்டில் போய் நித்திரை கொள்ளமாட்டினம் .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.