Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை கைது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை கைது !

80 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சுங்கத்தினால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாமல் அவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக டி சில்வா முன்னிலையில் குறித்த பிரான்ஸ் பிரஜை நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

70 மில்லியன் ரூபாய் தண்டப்பணம் செலுத்த முடியாமைக்காக 35 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபரின் பயணப் பொதியில் 4 கிலோ கிராம் தங்கக் கட்டியை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த தங்கக் கட்டிகள் கறுப்பு பெயிண்ட் பூசி அலுமினியத் தாளில் சுற்றப்பட்டு பயணப் பொதியில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விசாரணையின் பின்னர், சுங்கத்துறையினர் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், இந்த பிரான்ஸ் நாட்டவருக்கு 70 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்தாததால் சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1333595

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@இணையவன், @விசுகு, @suvy எல்லாரும் பிரான்சில் தானே நிற்கிறீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

எட்டரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தில் கறுப்புப்பூச்சு பூசி நாட்டுக்குள் கடத்த முயற்சி : பிரான்ஸ் பிரஜை கைது!

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 12:08 PM
image
 
இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் சுமார் எட்டரைக் கோடி ரூபா  பெறுமதியான  4 கிலோ 611 கிராம்  தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றியுள்னர்.

இந்நிலையில்,  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் தங்கத்தைக்  கொண்டுவர முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில்  பிரான்ஸ் பிரஜை ஒருவரைக்  கைது செய்துள்ளனர்.

35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர்,  இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்தபோது சுங்க அதிகாரிகளால்  தங்கத்தைக கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

345204038_641914247799293_18114763744283

சந்தேக நபர் 3 ஆம் திகதி காலை  6.45 மணியளவில் பாரிஸிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே  அவரது பொதியிலிருந்து தங்கம்  கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முதல் சோதனையில் அதனைக்  கண்டுபிடிக்க முடியாத வகையில் அவற்றின் மீது  கறுப்புப்பூச்சு  பூசப்பட்டிருந்ததாகவும்  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.   

சந்தேக நபரான பிரான்ஸ் நாட்டவர் தண்டப்பணத்தை செலுத்த தவறிய நிலையில், சுங்க அதிகாரிகளால் நீர்கொழும்பு பதில் நீதிவான்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை  8  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/156945

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@இணையவன், @விசுகு, @suvy எல்லாரும் பிரான்சில் தானே நிற்கிறீர்கள். 😂

தங்கத்தை கடத்தி அதை போயும் போயும் சிறீலங்காவுக்கு கொண்டு போகிற அளவுக்கு நாங்க யாரும் இல்லை ராசா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@இணையவன், @விசுகு, @suvy எல்லாரும் பிரான்சில் தானே நிற்கிறீர்கள். 😂

நமக்கு இவ்வளவு தில் எல்லாம் கிடையாதப்பா ....... நான் போகும்போது ஏதோ எனக்கு கிடைத்த 70/75 கிலோ தங்கத்தை மட்டும் அப்படியே நடத்திக் கூட்டிக்கொண்டுபோய் கொண்டுவந்து விடுவேன்.......அவ்வளவுதான் நம்மால முடியும்.....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, ஏராளன் said:

அதிகாரிகள் குழுவினர் சுமார் எட்டரைக் கோடி ரூபா  பெறுமதியான  4 கிலோ 611 கிராம்  தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றியுள்னர்.

35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர்,  இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்தபோது சுங்க அதிகாரிகளால்  தங்கத்தைக கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2 hours ago, விசுகு said:

தங்கத்தை கடத்தி அதை போயும் போயும் சிறீலங்காவுக்கு கொண்டு போகிற அளவுக்கு நாங்க யாரும் இல்லை ராசா 🤣

நாலரை கிலோ நிறையுடைய,  எட்டரைக் கோடி ரூபா  பெறுமதியான...
தங்கத்தை கடத்தி வந்து, 24 மணித்தியாலத்தில் ஊருக்கு கொடுத்து விட்டு 
திரும்புகிறவர்  என்றால்... கடத்தலில்  பயங்கர "பிசி" ஆன ஆள் போலை இருக்கு. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நாலரை கிலோ நிறையுடைய,  எட்டரைக் கோடி ரூபா  பெறுமதியான...
தங்கத்தை கடத்தி வந்து, 24 மணித்தியாலத்தில் ஊருக்கு கொடுத்து விட்டு 
திரும்புகிறவர்  என்றால்... கடத்தலில்  பயங்கர "பிசி" ஆன ஆள் போலை இருக்கு. 😂

இந்தச் சங்கிலியை கழுத்தில் போட முடியவில்லைப் போல அண்ணை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நமக்கு இவ்வளவு தில் எல்லாம் கிடையாதப்பா ....... நான் போகும்போது ஏதோ எனக்கு கிடைத்த 70/75 கிலோ தங்கத்தை மட்டும் அப்படியே நடத்திக் கூட்டிக்கொண்டுபோய் கொண்டுவந்து விடுவேன்.......அவ்வளவுதான் நம்மால முடியும்.....!  😂

உங்கள் தங்கம்.... 70/75 கிலோ என்றபடியால், உடற் பயிற்சி செய்து 
உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். பாராட்டுக்கள். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

இந்தச் சங்கிலியை கழுத்தில் போட முடியவில்லைப் போல அண்ணை?

image

ஏராளன்... அவர் இந்த மொத்த சங்கிலியை கழுத்தில் போட்டுக் கொண்டு வந்திருந்தால்...
பிரான்ஸ் விமான நிலையத்திலேயே சந்தேகப் பட்டு ஆளை துருவி விசாரித்து 
மிகுதியையும் பிடித்து இருப்பார்கள். 

அவர் நகைகளுக்கு மேல்... தார் மாதிரி ஏதோ பொருளை பூசி கொண்டு வந்துள்ளதால்...
பிரான்சிலும், கட்டுநாயக்காவிலும் பிடிபடாமல் வந்துள்ளார்.
24 மணித்தியாலத்தில் திரும்ப ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறுகிறார் என்ற 
சந்தேகத்தில் தான்... அவரின் பொருட்கள் சோதனையிடப் பட்டு, அம்பிட வேண்டி வந்தது.

இரண்டு விமான நிலையத்திலும்... பூசிய   அந்த கறுப்பு  பொருள்
நகையை காட்டிக் கொடுக்கவில்லை என்றால்... என்ன பொருளாக அது இருக்கும் 
என்று அறிய ஆவலாக உள்ளது.

பரிசோதிக்கும் ஸ்கானர்களை ஏமாற்றியுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உங்கள் தங்கம்.... 70/75 கிலோ என்றபடியால், உடற் பயிற்சி செய்து 
உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். பாராட்டுக்கள். 🙂

அப்படியும் சொல்லலாம்

அண்ணருடைய உரசலில் சேதாரம் அடைந்ததாலும் இருக்கலாமல்லவா சகோ?🤪

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

தங்கத்தை கடத்தி அதை போயும் போயும் சிறீலங்காவுக்கு கொண்டு போகிற அளவுக்கு நாங்க யாரும் இல்லை ராசா 🤣

9 hours ago, suvy said:

நமக்கு இவ்வளவு தில் எல்லாம் கிடையாதப்பா ....... நான் போகும்போது ஏதோ எனக்கு கிடைத்த 70/75 கிலோ தங்கத்தை மட்டும் அப்படியே நடத்திக் கூட்டிக்கொண்டுபோய் கொண்டுவந்து விடுவேன்.......அவ்வளவுதான் நம்மால முடியும்.....!  😂

@இணையவன், ??? 👋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தங்க கடத்தல் என்பது சர்வதேச அளவில் நடக்கும் விடயம். இங்கே பிரான்ஸ் நாட்டு பிரஜை பிடிபட்டுவிட்டார். அது செய்தியாகி விட்டது.
அவ்வளவுதான். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.