Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரிசனம் வேற... ரிரிஎன் வேறயோ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனத்திற்கு பேசிய தொலைபேசி அழைப்பின்

சுருக்கமான வடிவம்...

வணக்கம்

வணக்கம் தரிசனம்

ஒரு கிழமையா தரிசனம் இல்லை... காட் புதுப்பிக்க வேணும்...

விபரங்கள் சொன்னீங்கள் என்டால்...

உங்கட காட் நம்பரை சொல்லுங்கோ...

(நம்பர் சொல்கிறேன்)

சரி நீங்கள் உங்கட டெலிபோன் நம்பரை தாங்கோ நாங்கள் உங்களை

நாளைக்கு தொடர்பு கொள்ளுறம்...

(tp number சொல்கிறேன்...)

சரியண்ணை நன்றி...

-----------

ஒரு நாள் பொறுத்து பார்த்துவிட்டு அடுத்தநாள் மீண்டும் தரிசனத்துக்கு

தொலைபேசினேன்..

வணக்கம்

வணக்கம் தரிசனம்

அண்ணை நான் முந்தநாள் போன் அடிச்சனான்.. எடுக்கிறதா சொன்னீங்கள்...

ஓம் அது வந்து...

சரி உங்கட போன் நம்பரை தாங்கோ... நாளைக்கு விடிய போன் எடுத்து

விபரங்கள் சொல்லுறம்..

சரி (நம்பர் சொல்கிறேன்)

-------------------

கலோ வணக்கம் விடிய போன் எடுக்கிறதா சொன்னீங்கள்?

இப்ப இரவு ஆயிட்டுது....

(மறுபக்கத்தில் பெண்ணொருவர்...)

உங்கட காட் நம்பரை தாங்கோ...

(சொல்கிறேன்...)

நீங்கள் லாசப்பல் போறனீங்களோ?

(இதென்ன சம்மந்தமில்லாமல் கதைக்கிறார் என முளிக்கிறேன்)

மறுபடியும் அவர் அதையே கேட்க

ஓமோம் போறனான்

அங்க ...... ...... கடையில உங்கட காட்டை புதுப்பிக்கலாம்...

விலை 148 ஈரோக்களோ என்னவோ சொல்கிறார்...

சரி சகோதரி மதுரமும் சேர்த்துதானே....

(;மறுமுனையில் சிரிப்பு (நக்கலா சிரிச்சாவோ தெரியாது))

இல்லை அது வேற

நீங்கள் தானே சொன்னீங்கள் ரெண்டு சனலும் ஒரே காட்டில்

பார்க்கலாம் என்டு.... :lol:

அது நாங்கள் சொல்லேல்லை ரிரிஎன் தான் சொன்னவை...

:blink: அப்ப நீங்கள்?

நாங்கள் தரிசனம் மட்டும்தான்....

அப்ப தரிசனம் வேற... ரிரிஎன் மதுரம் வேறயோ?

ஓம்

அப்ப சந்தா மட்டும் எப்படி ரிரிஎன் காட்டிலேயே புதுப்பிக்கிறீங்கள்?

மறுமுனையில் மௌனம்...

சரி சகோதரி நன்றி :rolleyes:

தங்யூ பைபை

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்துக்கு முன் தரிசனத்துக்கு போன் பண்ணி, டி.டி.என். காட் இலக்கம் சொல்ல எடுக்கிறன்.

காட் இலக்கம் ஒன்னும் தேவையில்லை . பழைய சந்தாரர் எண்டால் மாற்றம் இல்லை . தொடர்ந்து பாக்கலாம் எண்டார்கள் .

காட் இலக்கம் சொல்லாமலே தரிசனம் பார்க்கிறேன் .

மதுரம் வரவில்லை . சிலசமயம் இயந்திரத்தடையோ தெரியல .

தரிசனம் வேற ரிரிஎன் வேற ஆனா வேலை செய்பவர்கள் ????????????

தரிசன் இரவு தலைப்பு செய்தி காலை வந்த பதிவு.கொம் ல

செய்தி பிறகு??????????

இந்தப் தலைப்பு விரைவில் நீக்கப்பட இருப்பதால் கருத்து எழுத விரும்புபவர்கள் உடனடியாக தங்கள் கருத்துக்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தரிசனமும் ரிரிஎன் உம் ஒன்றா வேறையா எண்டு தெரியாது. ஆனா இருவரும் செய்யும் வேலை ஒண்டு தான் போல கிடக்கு. இணையம் ஏதிலையாவது வாற செய்தியை அப்பிடியே சுய சிந்தனை, உறுதி படுத்தல் எதுவும் இல்லாமை அப்பிடியே வாசிக்கிறது. இந்த இலட்சணத்திலை முந்தியொருக்கா ரிரிஎன் இலை வேலை செய்த ஒருதரை முந்தி ஒரு பிழையான செய்தியை வாசித்த போது கேட்டேன் ஏனப்பா தமிழ் இணைய செய்தியளிலை தான் தமிழ் நெட் இன் ஆங்கிலத்தை ஒழுங்க மொழிபெயர்க்க தெரியம பொடுறாங்கள் எண்டா ரிரிஎன் இலை கூட ஒண்டையும் யோசிக்காம அப்பிடியே பிழைய வாசிச்சு தள்ளுறியளே எண்டு. அதுக்கு அவர் சொன்ன பதில் ரிரிஎன் க்கு ஈழத்தில் இருந்து செய்தி வாற எண்டு ரிரிஎன் நிர்வாகம் சொல்லுதெண்டு. :rolleyes::lol: இந்த லட்சணத்திலை அப்ப ரிரிஎன் இன் செய்தியிருந்தது. தரிசனமும் அதை தான் செய்யுதெண்டா..... இந்த ஜென்மத்திலை எங்கடை தொலைக்கட்சியளை திருத்த ஏலாது போல. :angry: :angry:

இந்தப் தலைப்பு விரைவில் நீக்கப்பட இருப்பதால் கருத்து எழுத விரும்புபவர்கள் உடனடியாக தங்கள் கருத்துக்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
:blink::lol: :P

ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு முதல்... ரெலிபோன்...

ஹலோ.. தரிசனத்தில இருந்து கதைக்குறம்.. சந்தா புதுப்பிக்கிறியளோ.. வாற திங்களோட இலவச சேவையை பூட்டப் போறம்..

பழைய ரீரீஎன் காட்டை புதுப்பிச்சா சரிதானே..

அதுதான்.. அதில தரிசனம் வேலை செய்யும்..

அப்ப வங்கீல இருந்து 2 பிரிவா காசை எடுங்க.. அதாவது அரை அரைவாசியா..

ஓகே.. நன்றி..

தொலைபேசி வந்து ஒரு கிழமைல அரைவாசி காசு எடுத்தாச்சு.

தரிசனம் என்னவோ ஒரு மாதத்துக்கு மேலாகியும் இலவசமாகப் போய்க் கொண்டிருந்தது.

பரவாயில்லை.. ஆரம்பம்தானே..

ஒருமாதிரி தரிசனம் இலவசசேவையை நிறுத்தியாச்சு...

ஹலோ.. காசு எடுத்தாச்சு.. ஆனா காட்் வேலை செய்யேலை..

றிசீவரை ஓவ் பண்ணி கரண்ட் வயரை கழட்டிப்போட்டு.. மறுபடி போடுங்க..

அட.. இப்ப வருது... நன்றி...

அப்ப மிச்ச சந்தா காசை எடுக்கலாமோ..

எடுங்க..

இரண்டு நாள் கழித்து...

மீண்டும் வேலை செய்யவில்லை..

றிசீவரை ஓவ் பண்ணி, கரண்ட் வயரை கழட்டி, மறுபடி போட்டும் வேலை செய்யலை...

'ஹலோ.. மறுபடி காட் வேலை செய்யேலை... '

'றிசீவரை ஓவ் பண்ணி...'

'உதுகளை எல்லாம் செய்து பாத்துட்டன்...'

'காட் இலக்கத்தை சொல்லுங்க... நாங்கள் அவைக்கு அறிவிக்கிறறம்ம்.. நாளைக்கு வேலை செய்யாட்டி காட்டை அனுப்புங்க.. வேற காட் அனுப்புறம்...'

'இன்னொரு விசயம்.. மதுரமும் வேலை செய்யேலை..'

'இனி மதுரம் வராது... தரிசனம்மட்டும்தான் வரும்..'

'நன்றி..'

'அது சரி.. மிச்ச காசை எடுக்கலாமோ?'

நம்ம நிலமை இப்படியாச்சு... நாளைக்கு காட்டை அனுப்பவேணும்.. திரும்ப வரும்தானே?! :rolleyes: :P

Edited by sOliyAn

சனம் 1: இப்பதானே நாங்கள் தவழத் தொடங்கிறம்.

சனம் 2: 10 வருசத்துக்கு மேல இப்பிடித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறம்.

ஐயோ அப்படியா செய்தி? அப்ப சீரியல் இவற்றில் தினமும் பாப்பவர்களின் வாழ்க்கை நிலமை என்ன? என்றாலும் தீபம், சன்ரீவி, ஜெயா ரீவி இழுக்கிது தானே? :P அங்கு பிரச்சனை ஒன்றும் இல்லையே?

உண்மையில் அவுஸ்ரேலியா தரிசனம் ஜரோப்பாவிலும் வந்தவுடன் நான் சந்தோசப்பட்டது இந்தச் சாட்டிலாவது எமது ஊடகங்கள் ஒற்றுமையாக இயங்கத் தொடங்குது எண்டு.

முக்கியமாக உந்த செய்திப்பிரிவில் நமது ஊடகங்கள் ஒற்றுமையாக இயங்க முயற்சிகள் செய்யலாம். அதன் மூலம் வளங்களை விரயமாக்காது தரத்தைக் கூட்டலாம்.

தரிசனம் பற்றிய எதிர்பார்ப்பை கேள்வியாகவே கேக்கிறன்....

ஜரோப்பிய தரிசனத்தில் வரும் செய்திகள் அவுஸ்ரேலியா தரிசனத்தால் தயாரிக்கப்பட்டதா? அல்லது 2 தரப்பும் வேறு வேறாக தயாரித்து வழங்குகிறார்களா?

உண்மையில் அவுஸ்ரேலியா தரிசனம் ஜரோப்பாவிலும் வந்தவுடன் நான் சந்தோசப்பட்டது இந்தச் சாட்டிலாவது எமது ஊடகங்கள் ஒற்றுமையாக இயங்கத் தொடங்குது எண்டு.

முக்கியமாக உந்த செய்திப்பிரிவில் நமது ஊடகங்கள் ஒற்றுமையாக இயங்க முயற்சிகள் செய்யலாம். அதன் மூலம் வளங்களை விரயமாக்காது தரத்தைக் கூட்டலாம்.

தரிசனம் பற்றிய எதிர்பார்ப்பை கேள்வியாகவே கேக்கிறன்....

ஜரோப்பிய தரிசனத்தில் வரும் செய்திகள் அவுஸ்ரேலியா தரிசனத்தால் தயாரிக்கப்பட்டதா? அல்லது 2 தரப்பும் வேறு வேறாக தயாரித்து வழங்குகிறார்களா?

அப்பு வாங்கோ வாங்கோ உப்படி தான் ரிரின் க்கும் ஒரு தலைப்பை திறந்து அதில் வாற சரி பிழைகளை கதைக்க அவன்கள்(ரிரின்) காஅரகள் ஜய்யோ உப்படிதான் ஒரு பலஸ்தின ரிவிக்கும் விமர்சனம் என்ற பெயரில் இஸ்ரேல் காரன் ஏதோ செய்து கடைசில் அது இல்லாம போச்சுது என்று மோகன் அண்ணாக்கும் தலைஇடியை கொடுத்து அந்த தலைப்பை மூடப்பன்னி கடைசியில் தாங்கள் விட்ட மிக பெரிய தவறால் இன்று ஒரு பொருளுமே வெளியே எடுக்க முடியாத அளவுக்கு சீல் வைத்து பூட்டி இருக்கிறார்கள் இது எல்லாம் ஏன் வந்தது?

அந்த தலைப்பை பூட்டாம விட்டு இருந்தா ரிரின்னில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்து இருப்போம் கடைசில் என்ன நடந்த்து?

ச பதிவு தவறாக ஒரு செய்தி சொன்னா நிச்சையம் அதே தவறு பல மணித்தியாலம் கழித்து தரிசனத்தில் வருது என்றால் இதை என்ன என்று சொல்ல?

பதிவை தான் சொல்லலாம் மக்களுக்கு வெகுவிரவில் செய்திகளை கொடுக்கும் இனையமாக தாங்கள் இருக்கனும் என்றதுக்காக சில அவசர மொழிபெயர்ப்பு அல்லது குறுக்ஸ்.நாரதர். தயா(தலை). நெடுக்ஸ் போன்ற சிறந்த அறிவாளிகளை கொண்டு மொழிபெயர்க்காம அரைகுறை மொழி தெரிந்தவர்களை கொண்டு மொழிபெயர்ந்து இருப்பார்கள் ஆனா இந்த தரிசனம் காரருக்கு முதனால் வந்த செய்தியை அடுத்த நாள் இரவு சொல்லும் போது கூட அதை உறுதிபடுத்த முடியவில்லையா?

சரி இந்த தலைப்பு பூட்டதான் போகிறார்கள்

அதை விடுத்து வருசக்கனக்கா ரிரினை ஏற்று கொண்ட நாங்கள் தரிசனத்துக்கும் கொஞ்ச நாள் கொடுப்போம்

அவங்களுக்கு மனசோர்வு வந்துவிடும்..................................

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக உந்த செய்திப்பிரிவில் நமது ஊடகங்கள் ஒற்றுமையாக இயங்க முயற்சிகள் செய்யலாம். அதன் மூலம் வளங்களை விரயமாக்காது தரத்தைக் கூட்டலாம்.

இது வந்து நடக்கிற காரியம் இல்லையே நாங்கள் கருத்து சுகந்திரத்த பற்றி கதைபோம்,ஊடக தர்மத்தை பற்றி கதைபோம் ஒற்றுமையை பற்றி கதைபோம் தேசியதிற்கு குரல் கொடுபோம் என்போம் ஆனால் நடைமுறையில் செய்வது ரொம்ப,ரொம்ப குறைவு.

மு.கு-என்னும் இந்த பதிவை தூக்க சொல்லி ஒருத்தரும் சொல்லவில்லையா அவுஸ்ரெலியாவில் இருந்து வரும் தமிழ் ஊடகங்களை பற்றி யாழில் எழுதினால் 2 நாளைக்கு பிறகு தனிநபரின் வேண்டுகோளுக்கு இணங்க தூக்கபட்டது என்று கூறுவார்கள்.

என்னைப் போல சாதாரணமானவர்களை எல்லாம் அறிவாளி எண்டா பிறகு கொஞ்சம் அறிவுள்ளவரை கடவுளின் தூதுவனாக்கி நல்ல அறிவுள்ளவரை கடவுளே ஆக்கிப் போடுவியள் போலகிடக்கு. :angry:

இப்ப பிரச்சனை என்னவெண்டால் தரிசனம் 1 பெயரில் 1 நிறுவனமாக 2 வேறு கண்டங்களில் இயங்குகிறது. ஆனால் செய்திகளில் பெரும்பான்மையானவை தாயகச் செய்திகள், சிறீலங்காச் செய்திகள், இந்தியச் செய்திகள், பொதுவான உலகச் செய்திகள் என்று தான் இருக்கு. உள்ளூர் (அதாவது தரிசனம் இயங்கும் பிரதேசமான அவுஸ்ரேலியா அல்லது ஜரோப்பிவிற்கு உரிய) செய்திகள் மிகவும் குறைவு (கோயில் திருவிழாவுகள் விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றைத் தவிர) அல்லது இல்லை என்றே சொல்லாம். அப்பிடி இருக்கும் போது ஏன் 2 இடங்களில் ஒரே செய்திகளை வாசிக்க 2 வேறு செய்திப் பிரிவு நிகழ்ச்சித் தயாரிப்பு? அதுக்கு 2 மடங்காக ஆக்கள் நேரம் பணம் என்று விரயமடிக்கப்படுகிறது?

கோயில் திருவிழா விளையாட்டுப் போட்டி போன்றவற்றை செய்திகளிற்கு வெளியில் "நிகழ்வுகள்" ஆகக்காட்டலாம்.

ஒரு பொருளுமே வெளியே எடுக்க முடியாத அளவுக்கு சீல் வைத்து பூட்டி இருக்கிறார்கள்

நேரில் போய் பார்த்தீர்களோ சீல் வைத்து பூட்டி இருப்பதை. மற்றைய ஊடகங்கள் அவசரப்பட்டு மொழிபெயர்த்து போடுகிறது என்று சொல்கிற நீங்கள், நீங்கள் சொன்ன இந்தத் தகவலை உறுதிப்படுத்தி விட்டுத்தான் இங்கு எழுதினீர்களா? :D

அப்பிடி இருக்கும் போது ஏன் 2 இடங்களில் ஒரே செய்திகளை வாசிக்க 2 வேறு செய்திப் பிரிவு நிகழ்ச்சித் தயாரிப்பு?

தரிசனத்துக்கு இரண்டு செய்திப்பிரிவுகள் இருக்கின்றனவா?

Edited by இளைஞன்

தரிசனத்துக்கு இரண்டு செய்திப்பிரிவுகள் இருக்கின்றனவா எண்ட கேள்வியின் அர்த்தம் என்ன சார்?

பெயரளவில் 1 நடைமுறையில் 2 ஓ? அல்லது 2 விடக் கூட இருக்கோ :D

ஏன் எண்டால் அவுஸ்ரேலியா தரிசனத்து செய்தியிலும் பதிவின் செய்திகளை வாசிக்கிறார்களா என்று ஒரு சந்தேகம். :D

இல்ல... ஐரோப்பாவில ஒரு செய்திப் பிரிவும் அவுஸ்ரேலியாவில ஒரு செய்திப் பிரிவும் இயங்குதா? இல்லாவிட்டால் ஒஸ்ரேலியாவில் இருக்கும் செய்திப்பரிவு இரண்டு இடங்களுக்கும் ஏற்ப செய்திகளை வேறு வேறாகத் தயாரிக்கிறதா? செய்தி வாசிப்பவர் அவுஸ்ரேலியாவில் இருந்து தானே வாசிக்கிறார்? நான் ஒருக்கா இரண்டுதரம் தான் இந்த தரிசனத்தில் செய்தி வாசிக்கிறது பார்த்தனான்... அதான் கேட்கிறேன். :wacko:

நேரில் போய் பார்த்தீர்களோ சீல் வைத்து பூட்டி இருப்பதை. மற்றைய ஊடகங்கள் அவசரப்பட்டு மொழிபெயர்த்து போடுகிறது என்று சொல்கிற நீங்கள், நீங்கள் சொன்ன இந்தத் தகவலை உறுதிப்படுத்தி விட்டுத்தான் இங்கு எழுதினீர்களா? :D

தரிசனத்துக்கு இரண்டு செய்திப்பிரிவுகள் இருக்கின்றனவா?

ரிரின் கலையகத்தை திடீர் என்று சோதனை செய்த பின் சீல் வைத்து பூட்டியதாக செய்தி

அல்லது பாரிஸ் பொலிஸ் சீல் வைக்க போறம் எல்லா சாமன் சட்டுகளை எடுக்க சொல்லி காவல் நின்று சீல் வைதார்களா?

நான் கேள்விப்பட்டேன் கொஞ்சம் லேட் என்றால் வேலை செய்யும் சிலரை கூட உள்ள வைச்சு பூட்டி இருபார்கள் என்று. ஆனா நான் அதை நம்ப்பவில்லைஇ ஏன் என்றால் நீங்கள் வெளியில் இருப்பதால்

:3d_039: :3d_039:

ஆள் ஆளுக்கு வசதிக்கு ஏற்ப குழப்பிறியள்.

தவறுகளைப் பற்றிக் கேட்டா இப்ப தானே தொடங்கினவை தவளீனம் போகப்போக சரி வரும் எண்ணியினம் 1 தரப்பு.

அவுஸ்ரேலியா தரிசனம் பலவருடங்களாக இயங்குவதால் அவர்களின் தயாரிப்பில் செய்வது நல்லது எண்டா....

அப்பிடித்தான் நடக்குது என்றியள் :wacko:

அப்ப இத்தனைவருசமா செய்தித் திரட்டல் தொகுப்பில் கிடைச்ச அனுபவத்தை கொண்ட செய்திப் பிரிவா இப்படிப் பிளை விடுகுது?

ஜரோப்பா கலையகத்திலான் யாரோ வாசிக்கிற மாதிரி இருக்கு ஏன் எண்டால் ஆரம்பத்தில் எல்ல மிகவும் மோசமாக lighting, decoration, table layout இருந்து இப்ப கொஞ்சம் முன்னேறி இருக்கு. படங்கள் போடுவதிலும் தடுமாற்றங்கள் வாசிப்பர் தடுமாறுவார். இதுகள் எல்லாம் பலவருசமா நடத்தப்படுகிற அவுஸ்ரேலிய கலையகத்திலும் அதை நடத்துபவர்களின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது.

எனக்கும் குறுக்ஸ் சொன்ன மாதிரி செய்தி இங்கு தான் வாசிக்கிறார்கள் முந்தி ஏதோ மண்ணனை லாம்பில் வெளிச்சம் போட்ட மாதிரி இருந்து செய்தி வாசிப்பார்கள் இப்போது அதில் சின்ன மாற்றம் போக மீச்சம்????????/ :)

ரிரின் கலையகத்தை திடீர் என்று சோதனை செய்த பின் சீல் வைத்து பூட்டியதாக செய்தி

எனக்குத் தெரியாது. உறுதிப்படுத்திவிட்டு இங்கு எழுதுங்கள். எப்ப உங்களால உறுதிப்படுத்த ஏலும்?

அவுஸ்ரேலியா தரிசனம் பலவருடங்களாக இயங்குவதால் அவர்களின் தயாரிப்பில் செய்வது நல்லது எண்டா

அவுஸ்ரேலிய தரிசனம் பலவருடங்களாக இயங்குதா? :) இதென்ன புதுக் குழப்பமாக இருக்கு.

ஜரோப்பா கலையகத்திலான் யாரோ வாசிக்கிற மாதிரி இருக்கு

வாசிக்கிறவர பார்த்தால் ஐரோப்பாவில ஏற்கனவே செய்த வாசித்தவர் மாதிரி இல்லையே :wacko:

எனக்குத் தெரியாது. உறுதிப்படுத்திவிட்டு இங்கு எழுதுங்கள். எப்ப உங்களால உறுதிப்படுத்த ஏலும்?

அவுஸ்ரேலிய தரிசனம் பலவருடங்களாக இயங்குதா? :) இதென்ன புதுக் குழப்பமாக இருக்கு.

வாசிக்கிறவர பார்த்தால் ஐரோப்பாவில ஏற்கனவே செய்த வாசித்தவர் மாதிரி இல்லையே :wacko:

இளைஞன் நான் அழுதுடுவேன் உறுதிப்படுத்த சொன்னா :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் நான் அழுதுடுவேன் உறுதிப்படுத்த சொன்னா :angry:

ஆஆஆஆஆஆஆஆஆஆ அழப்போறிங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞன் நான் அழுதுடுவேன் உறுதிப்படுத்த சொன்னா :angry:

ஆஆஆஆஆஆஆஆஆஆ அழப்போறிங்களா?

எமக்கு கிடைத்த பொக்கிசமான உணர்ச்சி மிக்க கருத்துக்கள் இவைககள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹலோ.. தரிசனத்தில இருந்து கதைக்குறம்.. சந்தா புதுப்பிக்கிறியளோ.. வாற திங்களோட இலவச சேவையை பூட்டப் போறம்..

பழைய ரீரீஎன் காட்டை புதுப்பிச்சா சரிதானே..

அதுதான்.. அதில தரிசனம் வேலை செய்யும்..

'இன்னொரு விசயம்.. மதுரமும் வேலை செய்யேலை..'

'இனி மதுரம் வராது... தரிசனம்மட்டும்தான் வரும்..'

'நன்றி..'

எனக்கும் இதே நிலைதான் காட் நம்பரை கொடுத்தேன் புதுப்பிப்பதாக இருந்தால் 99 பிரித்தானி பவுண் என்று சொல்லி கிரடிற்காட் இலக்கத்தை வாங்கினார்கள். இப்போது எனது வங்கி கணக்கை பார்த்தால் 103 பவுண் எடுக்கப்பட்டுள்ளது ஏன் என தொலைபேசியில் கேட்டால் எங்களுக்கு தெரியாது அது அவுஸ்திரேலியாவில் தான் கேட்கவேண்டும் என்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் தொலைக்காட்சியை ஒழுங்கு செய்து விட்டு தரிசனம் சிவனே என்று பேசாமல் இருக்கலாம்.மக்கள் தொலைக்காட்சி எல்லோராலும் விரும்பிப்பார்க்கப்படுகின்

எனக்கும் இதே நிலைதான் காட் நம்பரை கொடுத்தேன் புதுப்பிப்பதாக இருந்தால் 99 பிரித்தானி பவுண் என்று சொல்லி கிரடிற்காட் இலக்கத்தை வாங்கினார்கள். இப்போது எனது வங்கி கணக்கை பார்த்தால் 103 பவுண் எடுக்கப்பட்டுள்ளது ஏன் என தொலைபேசியில் கேட்டால் எங்களுக்கு தெரியாது அது அவுஸ்திரேலியாவில் தான் கேட்கவேண்டும் என்றார்கள்.

ஐயையோ.. நான் அனுப்பிய காட் அவுஸ்ரேலியா போயோ வரப்போகுது.. அதுக்கிடைல கோலங்கள் முடியப் போகுது.. பிறகு வீட்டிலை தேத்தாகூட கிடைக்காது...

தரிசனம் இலவசமாக வந்த போது பக்கத்து வீட்டுக்காரரோட பிரரச்சினை.. ஒரு நிகழ்ச்சி முடியும்போது விளம்பரம் பெரிய அலறலோடு வரும்.. தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னாலை றிமோட்டோட இல்லாம எங்கையாவது போனால்.. அவளவுதான்.. பக்கத்துவீட்டுக்காரங்கள் கதவைப் பிய்ச்சுப் போடுவாங்கள்...

இப்ப ஓரளவு நிம்மதி எண்டால்.. ரீவி சீரியல் இல்லாம வீட்டிலை ஒரே பிய்ச்டுசெடுப்பு..

காப்பாத்துங்கப்பா!! :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.