Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம்பெண்ணை அடிமையாக்கி, கணவர் மூலம் பாலியல் வன்கொடுமை: ஜெர்மன் பெண்ணுக்கு சிறை தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐஎஸ் அமைப்பு

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

ஜெர்மனியை சேர்ந்த பெண்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர இராக் மற்றும் சிரியாவுக்கு பயணித்தது தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளன (கோப்பு படம்)

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 25 ஜூன் 2023, 07:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்த ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குர்தி மொழி பேசும் யாஸதி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின இளம் பெண்ணை அடிமையாக நடத்தியது, மனிதாபிமானம் அற்ற செயல்களில் ஈடுபட்டது மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் (ஐஎஸ்) உறுப்பினராகச் செயல்பட்டது, ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த 37 வயதான நாடின் கே என்ற பெண், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து, தனது கணவருடன் சிரியா மற்றும் இராக் நாடுகளில் வசித்து வந்துள்ளார்.

அப்போது அவர், 'யாசிதி இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பல்வேறு  கொடுமைகளுக்கு உள்ளாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன், தனது கணவரின் மூலம் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும், அடித்துத் துன்புறுத்தியதும் வழக்கு விசாரணையில் நிரூபணமாகி உள்ளது' என்று ஜெர்மனியின் கோப்வென்ஸ் நகர  நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, “யாசிதி இன மக்களின் மத நம்பிக்கையைச் சிதைக்க வேண்டும் என்ற ஐ.எஸ் அமைப்பின் ஒற்றை நோக்கத்தின் வெளிப்பாடாக அந்த இன மக்கள் மீது இதுபோன்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன” என்று கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

ஐஎஸ் அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யாசிதி இன பெண்ணை கொன்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த பெண்

‘மதம் மாறு அல்லது செத்துமடி’

இராக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, யாசிதி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரின் மூதாதையர்கள் வாழ்ந்த சினிஜார் பகுதியில் கடந்த 2014இல் ஐ.எஸ் அமைப்பின் போராளிகள் ஊடுருவினர்.

அங்கு அவர்கள் மதமாற்ற பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களின் இந்த நடவடிக்கையை ஐ.நா.சபை, ‘இனப்படுகொலை பிரசாரம்’ என்று அறிவித்திருந்தது.

‘மதம் மாறுங்கள் அல்லது செத்து மடியுங்கள்’ என்று யாசிதி மதத்தைச் சேர்ந்த 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் ஐ.எஸ் போராளிகள் இறுதி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த எச்சரிக்கைக்கு அடிபணியாத ஆயிரக்கணக்கான ஆண்களும், சிறுவர்களும் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். 7,000க்கும் மேற்பட்ட பெண்களும், சிறுமிகளும் அடிமைகள் ஆக்கப்பட்டதுடன், பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

அடிமையாக்கப்பட்ட இளம்பெண்

இவ்வாறு ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் அடிமையாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாசிதி இளம் பெண்களில் ஒருவரைத்தான் 2016இல் இருந்து, ஜெர்மனியை சேர்ந்த நாடின் மற்றும் அவரது கணவர் அடிமையாக்கி வைத்திருந்துள்ளனர்.

நாடின் மற்றும் அவரது கணவர் ஐ.எஸ் அமைப்பில் சேர, 2015இல் சிரியாவுக்கு பயணித்துள்ளனர். அதன் பின்னர் ஓராண்டு கழித்து அவர்கள் இருவரும் வடக்கு இராக் பகுதியில் உள்ள மொசூல் நகரத்தில் குடியேறினர்.

அப்போது 20 வயதான யாசிதி இனப்பெண்ணையும் சிரியாவில் இருந்து தங்களுடன் அவர்கள் அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நாடின் மற்றும் அவரது குடும்பத்தினர் 2019இல், சிரியாவில் குர்திஷ் படையினரிடம் சிக்கினர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டு, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை மறுத்த நாடின், தன் மீது வழக்கு தொடுத்துள்ள யாசிதி இளம்பெண்ணுக்கு, தான் நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும் கூறினார்.

ஐஎஸ் அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜெர்மனியை சேர்ந்த தம்பதியால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட யாசிதி இனப்பெண்

சாட்சியம் அளித்த இளம்பெண்

நாடின் மற்றும் அவரது கணவரின் கட்டுப்பாட்டில் இருந்த யாசிதி இன இளம்பெண் 2019இல் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி நீதிமன்றத்தில் ஆஜரான அவர், நாடினுக்கு எதிராக சாட்சியம் அளித்தார். மேலும், கடந்த புதன்கிழமை வழக்கின் தீர்ப்பு வெளியான போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

"தன்னைப் போன்றே தனது இனத்தைச் சேர்ந்த பிற இளம்பெண்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று தனது கட்சிக்காரரான இளம்பெண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்" என்று அவரது வழக்கறிஞர் கூறியதாக அசோசியேட் பிரஸ் நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

ஜெர்மனியை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், யாசிதி இன மக்களைப் படுகொலை செய்தது, கொடுமைப்படுத்தியது தொடர்பாக பல வழக்குகளின் விசாரணை, அந்நாட்டு நீதிமன்றங்களில் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.

ஐஎஸ் அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யாசிதி மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுபான்மையின பெண்களை ஐ.எஸ். அமைப்பினர் கொடுமைப்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இனப்படுகொலை என்று அறிவித்த நீதிமன்றம்

யாசிதி இனப் பெண்ணை அடிமையாக நடத்திய குற்றத்துக்காக, ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அக்டோபர் 2021இல், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜெர்மனி நீதிமன்றம் உலக அளவில் முதல்முறையாக அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

யாசிதி  மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்திய குற்றங்களை ‘இனப்படுகொலை’ என்று ஜெர்மனி நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது உலக அளவில் கவனம் பெற்றது.

https://www.bbc.com/tamil/articles/cm58x172km9o

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

இந்தத் தீர்ப்பு வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜெர்மனி நீதிமன்றம் உலக அளவில் முதல்முறையாக அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

யாசிதி  மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்திய குற்றங்களை ‘இனப்படுகொலை’ என்று ஜெர்மனி நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது உலக அளவில் கவனம் பெற்றது.

இதுபோன்றதொரு பாரிய மத ஆக்கிரமிப்புத்தானே ஈழத்திவின் தமிழ்ப்பகுதிகள் நடைபெறுகிறது. எவளவு சுட்டிக்காட்டினாலும் ஏன் மேற்குநாடுகள், யேர்மனியுட்பட சிறிலங்காவுக்கு உதவுகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2023 at 15:54, nochchi said:

இதுபோன்றதொரு பாரிய மத ஆக்கிரமிப்புத்தானே ஈழத்திவின் தமிழ்ப்பகுதிகள் நடைபெறுகிறது. எவளவு சுட்டிக்காட்டினாலும் ஏன் மேற்குநாடுகள், யேர்மனியுட்பட சிறிலங்காவுக்கு உதவுகின்றன. 

எங்கள் கஸ்ரம் மேற்குலக மீடியாக்களுக்கு எட்டவில்லையோ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2023 at 06:24, nochchi said:

இதுபோன்றதொரு பாரிய மத ஆக்கிரமிப்புத்தானே ஈழத்திவின் தமிழ்ப்பகுதிகள் நடைபெறுகிறது. எவளவு சுட்டிக்காட்டினாலும் ஏன் மேற்குநாடுகள், யேர்மனியுட்பட சிறிலங்காவுக்கு உதவுகின்றன. 

மிக கொடூரமான மண், மத ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலங்களில்கூட புலம்பெயர்ந்த நாடுகளின் அகதி விசாரணையின்போது இனிமேல் சிங்கள மண்ணில் வாழமுடியாது பாதுகாப்பே இல்லையென்று கதறி கண்ணீர்விடுவது, நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த மறுவாரமே கொழும்புக்கு டிக்கெட் போடுவது, கூலிங்கிளாசும் கட்டை கழிசானும் அணிந்தபடி கொழும்பு நகர வீதிகளில் ஜாலியாக வலம் வருவது,

ஓடி ஓடி வெள்ளைக்காரன் நாட்டில் சம்பாதிச்சதை கொடூரங்கள் புரியும் இலங்கை அரசு தேசத்தின் தென்பகுதியில்  சொத்து பத்துக்கள் வாங்கி முதலிடுவது, சிங்கள தேச வங்கிகளில் பல பில்லியன் ரூபாய்களில் நிரந்தர வைப்பிலிட்டு புலம்பெயர் நாடுகளில் அதன் வட்டியை எடுத்து செலவிடுவது, அதுபோதாதென்று சிங்கள தூரதரகங்களுடனே தாம் வாழும் நாட்டில் இருந்தபடி சுமூக உறவில் இருப்பது,

போதாகுறைக்கு தமிழர்களால் தமிழர் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அரச கார்கள், பங்களாக்கள் என்ற வசதிகளுடன் அரசுடனேயே கொழும்பில் மிக அன்னியோன்னியமாக செயல்படுவது, அந்த தமிழர் பிரதிநிதிகளையே அடுத்த தேர்தலிலும் வாக்குபோட்டு வெற்றிபெற வைப்பது

வெறும் பிரச்சாரங்கள் அற்ப சலுகைகளுக்காக இருக்கும் மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு தாவுவது, எமது நிலப்பரப்பை நம்மவர்களே ஆக்கிரமிப்பு மதக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பது என்று நம்மவர்கள் புரிவது அத்தனையும் புலம்பெயர்நாடுகளின் அரசுகளுக்கு நன்றாகவே தெரியும்,  

இத்தனையும் செய்துவிட்டு ஆக்கிரமிப்பில் இருக்கிறோம் காப்பாற்றுங்கள் என்றால் எவன் ஏத்துக்குவான்?

மாறாக அவர்கள் தம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை துளிகூட சமரசமின்றி எவ்வாறு எதிர்த்தார்களென்று உலகம் அவதானித்து அறிந்து வைத்திருக்கிறது நம்மை அவதானித்ததுபோலவே.

On 25/6/2023 at 06:10, ஏராளன் said:

‘மதம் மாறுங்கள் அல்லது செத்து மடியுங்கள்’ என்று யாசிதி மதத்தைச் சேர்ந்த 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் ஐ.எஸ் போராளிகள் இறுதி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த எச்சரிக்கைக்கு அடிபணியாத ஆயிரக்கணக்கான ஆண்களும், சிறுவர்களும் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2023 at 06:24, nochchi said:

இதுபோன்றதொரு பாரிய மத ஆக்கிரமிப்புத்தானே ஈழத்திவின் தமிழ்ப்பகுதிகள் நடைபெறுகிறது. எவளவு சுட்டிக்காட்டினாலும் ஏன் மேற்குநாடுகள், யேர்மனியுட்பட சிறிலங்காவுக்கு உதவுகின்றன. 

2009 ல் இறுதி போரில் ஈழத்தில் இருந்து ஓடிய மேற்கு நாடுகள் உக்ரேனில் சஞ்சரிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2023 at 17:14, valavan said:

மிக கொடூரமான மண், மத ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலங்களில்கூட புலம்பெயர்ந்த நாடுகளின் அகதி விசாரணையின்போது இனிமேல் சிங்கள மண்ணில் வாழமுடியாது பாதுகாப்பே இல்லையென்று கதறி கண்ணீர்விடுவது, நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த மறுவாரமே கொழும்புக்கு டிக்கெட் போடுவது, கூலிங்கிளாசும் கட்டை கழிசானும் அணிந்தபடி கொழும்பு நகர வீதிகளில் ஜாலியாக வலம் வருவது,

ஓடி ஓடி வெள்ளைக்காரன் நாட்டில் சம்பாதிச்சதை கொடூரங்கள் புரியும் இலங்கை அரசு தேசத்தின் தென்பகுதியில்  சொத்து பத்துக்கள் வாங்கி முதலிடுவது, சிங்கள தேச வங்கிகளில் பல பில்லியன் ரூபாய்களில் நிரந்தர வைப்பிலிட்டு புலம்பெயர் நாடுகளில் அதன் வட்டியை எடுத்து செலவிடுவது, அதுபோதாதென்று சிங்கள தூரதரகங்களுடனே தாம் வாழும் நாட்டில் இருந்தபடி சுமூக உறவில் இருப்பது,

போதாகுறைக்கு தமிழர்களால் தமிழர் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அரச கார்கள், பங்களாக்கள் என்ற வசதிகளுடன் அரசுடனேயே கொழும்பில் மிக அன்னியோன்னியமாக செயல்படுவது, அந்த தமிழர் பிரதிநிதிகளையே அடுத்த தேர்தலிலும் வாக்குபோட்டு வெற்றிபெற வைப்பது

வெறும் பிரச்சாரங்கள் அற்ப சலுகைகளுக்காக இருக்கும் மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு தாவுவது, எமது நிலப்பரப்பை நம்மவர்களே ஆக்கிரமிப்பு மதக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பது என்று நம்மவர்கள் புரிவது அத்தனையும் புலம்பெயர்நாடுகளின் அரசுகளுக்கு நன்றாகவே தெரியும்,  

இத்தனையும் செய்துவிட்டு ஆக்கிரமிப்பில் இருக்கிறோம் காப்பாற்றுங்கள் என்றால் எவன் ஏத்துக்குவான்?

மாறாக அவர்கள் தம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை துளிகூட சமரசமின்றி எவ்வாறு எதிர்த்தார்களென்று உலகம் அவதானித்து அறிந்து வைத்திருக்கிறது நம்மை அவதானித்ததுபோலவே.

நல்ல கருத்து.

பல கோடி செலவில் கண்ணகி ஆலயயம் ,  யானை கதவு திறக்க , ஹெலிகொப்ரர் மலர்கள் தூவ விழாநடத்தும் இலங்கை தமிழ் இந்துக்களை யாஸதி மதத்தைச சேர்ந்த சிறுபான்மையினரோடு மேற்குலகநாடுககளோ உலகமோ ஒப்பிடாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2023 at 12:24, nochchi said:

இதுபோன்றதொரு பாரிய மத ஆக்கிரமிப்புத்தானே ஈழத்திவின் தமிழ்ப்பகுதிகள் நடைபெறுகிறது. எவளவு சுட்டிக்காட்டினாலும் ஏன் மேற்குநாடுகள், யேர்மனியுட்பட சிறிலங்காவுக்கு உதவுகின்றன. 

இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு”   ஆனால் நான் சொல்ல மாட்டேன் ...நீங்கள் இன்னும் ஒருமுறை வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு”

😂

அல்ப்ஸ் மலையளவு வித்தியாசம் உள்ளது ஏன் காணமுடிவில்லை என்பது தான் விளங்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.