Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை ...நாங்கள் இருப்பது இராமர் பிராந்திஅத்தில் அது அவர்கள் கண்டு கொள்ள வில்லை போலும்

  • 2 weeks later...
  • Replies 99
  • Views 12.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை. என்ன தான் இவர்களை நோக்க

  • Kapithan
    Kapithan

    உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?   

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயம் இதனை… வெளி உலகத்துக்கு, துரித கதியில் தெரிவிக்க எமது அமைப்புகள் முன் வரவேண்டும். எமது போராளிகளை கொடூரமாக கொன்ற சிங்கள இராணுவத்தை  உலகின் முன் அம்பலப் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சடலங்களே கொக்குத்தொடுவாயில் மீட்பு – பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றுக்கு அறிக்கை

March 15, 2024
 

3 15 7 புலிகளின் சடலங்களே கொக்குத்தொடுவாயில் மீட்பு - பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றுக்கு அறிக்கை

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையவை என முல்லைத்தீவு
நீதிவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கையளித்த இந்த இடைக்கால அறிக்கை மொத்தமாக 35 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அந்த இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெறவில்லை என்பதோடு, 1996ற்குப் பின்னர் இடம்பெறவும் இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை வைத்து சடலங்கள் 1994 மற்றும் 1996ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டதெனவும், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர்க் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு தொகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2023 நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங்கள் மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அடுத்த கட்ட அகழ்விற்காக ஏப்பிரல் 4ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளபோதும் அதற்கான எந்தவொரு நிதியும் அரசு இதுவரை விடுவிக்காத நிலையில் ஏப்பிரல் 4 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

 

https://www.ilakku.org/புலிகளின்-சடலங்களே-கொக்க/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை ; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published By: DIGITAL DESK 3    04 APR, 2024 | 12:32 PM

image
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு  தொடர்பான  வழக்கு  இன்று வியாழக்கிழமை (04)  முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்  முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா,  முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி  கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிறஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை எனவும் தற்போது அகழ்வுப்பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் அவர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதீடு  சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்தோடு, குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக  40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு,  அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து, குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம்  மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பத நிலையில்  நிதி கிடைக்கப்பறாமையினால் இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.

கடந்த  வழக்கின்போது  அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180410

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பமாகுமென நீதிமன்று அறிவிப்பு

Published By: DIGITAL DESK 3   16 MAY, 2024 | 05:03 PM

image

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு விஜயரத்தினம் சரவணன் மே.16 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (16) இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது. 

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. 

அத்தோடு, இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. 

இந்நிலையில், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.ஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார். 

மேலும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனிதச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில், அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183706

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி ஆரம்பம்

Published By: VISHNU   05 JUL, 2024 | 02:21 AM

image
 

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது வியாழக்கிழமை (04)  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

IMG_20240704_17280832.jpeg

வியாழக்கிழமை (04) பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ,  தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், 

IMG_20240704_17275628.jpeg

மனித உரிமைகள் சட்டத்தரணிகளான எஸ்.ரட்ணவேல், ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

IMG_20240704_17274272.jpeg

இன்றைய அகழ்வு நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக நாளை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கின்ற அகழ்வு பணிகளுக்கு முன்னாயத்தமான நடவடிக்கைகளே இன்று இடம்பெற்றிருந்தது.

IMG_20240704_17271762.jpeg

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, நிதி ஒதுக்கீடு காலம் தாழ்த்தப்பட்டதன் காரணமாக தாமதம் ஏற்பட்டிருந்தது. இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய மனித எலும்புக்கூடு இருக்கும் பகுதி என அடையாளம் காணப்பட்ட இடங்கள் துப்பரவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

IMG_20240704_17271399.jpeg

இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

IMG_20240704_17270275.jpeg

 இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

IMG_20240704_17265522.jpeg

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. 

IMG_20240704_17263858.jpeg

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. 

IMG_20240704_17262304.jpeg

இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மூன்றாம் கட்டத்திற்கான நிதி கிடைக்கபெற்றுள்ள நிலையில் வியாழக்கிழமை (04)  ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றிருந்தது.

IMG_20240704_17261706.jpeg

IMG_20240704_17260761.jpeg

IMG_20240704_17255345.jpeg

IMG_20240704_17254468.jpeg

IMG_20240704_17253312.jpeg

IMG_20240704_17252414.jpeg

IMG_20240704_17251880.jpeg

IMG_20240704_17251066.jpeg

IMG_20240704_17243861.jpeg

IMG_20240704_17245284.jpeg

IMG_20240704_17281528.jpeg

https://www.virakesari.lk/article/187706

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணி இடம்பெற்றது

Published By: VISHNU   06 JUL, 2024 | 01:32 AM

image
 

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணியானது வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்றது.

IMG_20240705_155532.jpg

வெள்ளிக்கிழமை (5) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

IMG_20240705_160304.jpg

குறித்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியில் காப்பற் இடப்பட்ட குறிப்பிட்ட ஒரு பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இந்த பகுதிக்கு மேலாக புதிதாக தகர கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

IMG_20240705_155647_1.jpg

இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற ஆடைகள் வெளித் தெரிந்திருந்தது.. நாளைய அழ்வின் போது மிகுதி உடற்பாகங்கள் முழுமையாக எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. நாளை காலை மூன்றாம் நாள் அகழ்வு பணி நடைபெற இருக்கின்றது.

IMG_20240705_145528.jpg

கொக்குதொடுவாய் மனித புதைகுழி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பண பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் வியாழக்கிழமை (04) மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (5) இரண்டாம் நாள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

IMG_20240705_143300.jpg

IMG_20240705_144717.jpg

IMG_20240705_144525.jpg

IMG_20240705_143657.jpg

https://www.virakesari.lk/article/187793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஐந்தாம்நாள் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்; சர்வதேச கண்கணிப்பு தொடரவேண்டுமென தமிழ்தரப்புக்கள் வலியுறுத்து

Published By: VISHNU   09 JUL, 2024 | 09:12 PM

image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஐந்தாம்நாள் அகழ்வாய்வுப்பணிகள் ஜூலை.09 செவ்வாய்கிழமை செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றது.

IMG-20240709-WA0106.jpg

இந் நிலையில் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின்  அகழ்வாய்வுகள் இடம்பெறும் இடத்திற்கு ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின், மனித உரிமைக்கான அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், குறித்த அகழ்வாய்வு நிலைமைகள் தொடர்பில் பேராசியர் ராஜ்சோமதேவ, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன் ஆகியோரிடம் கேட்டறிந்துகொண்டார்.

IMG-20240709-WA0101.jpg

இந்நிலையில் இவ்வாறான சர்வதேச அமைப்புப் பிரதிநிதிகளின் கண்காணிப்பு விஜயத்தால் தமக்கு இந்த அகழ்வாய்வின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அகழ்வாய்வின்மீது தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பு அவசியமெனவும் தமிழ்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

IMG-20240709-WA0097.jpg

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம்கட்ட, ஐந்தாம்நாள் அகழ்வாய்வுப்பணிகள் தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

IMG-20240709-WA0089.jpg

அத்தோடு ஐ.நாவின் இலங்கை அலுவலக மனிதஉரிமை அலுவர் லுடியானா ஷெல்ரின் அகிலன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் உள்ளிட்ட தரப்பினரின் கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் இந்த அகழ்வாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

IMG-20240709-WA0083.jpg

இந்த ஐந்தாம் நாள் அகழ்வாய்வுப்பணிகளில் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் ஐந்தாவது மண்படை அகழப்பட்டு அகழ்வாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

IMG-20240709-WA0081_resized_1.jpg

மேலும் குறித்த ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகளில் சில மர்மப்பொருட்கள் பகுதியளவில் வெளிப்பட்டுத் தென்படுவதாக இந்த அகழ்வாய்வு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஆறாம்நாள் அகழ்வாய்வுப் பணிகளின் பின்னரே குறித்த மர்மப்பொருட்கள் என்ன என்பதை முழுமையாக இனங்காணமுடியும் எனவும் தெரிவித்தார்.

IMG-20240709-WA0076.jpg

அதேவேளை இந்த மனிதப்புதைகுழி இனங்காணப்பட்டதிலிருந்து, இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வு விவகாரத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பதை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

IMG-20240709-WA0070.jpg

இந் நிலையில் மனிதப்புதைகுழியின் முன்றாம் கட்ட, ஐந்தாம் நாள் அகழ்வாய்வுப்பணி இடம்பெறும்போது குறித்த இடத்திற்கு ஐ.நா இலங்கை அலுவலக மனித உரிமை அலுவலரின் கண்காணிப்பு விஜயம் குறித்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர்  கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான சர்வதேச பிரதிநிதிகள் கண்காணிப்பது இந்த அகழ்வாய்வின்மீது தமக்கு நம்பிக்கை ஏற்படுவதாக அமைவதாகவும், தொடர்ந்தும் இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் சர்வதேச கண்காணிப்பு தொடர்ந்தும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20240709-WA0068_resized_1.jpg

IMG-20240709-WA0066_resized_1.jpg

IMG-20240709-WA0064.jpg

IMG-20240709-WA0062_resized_1.jpg

IMG-20240709-WA0050_resized_1.jpg

IMG-20240709-WA0056.jpg

IMG-20240709-WA0053.jpg

IMG-20240709-WA0048.jpg

IMG-20240709-WA0042.jpg

https://www.virakesari.lk/article/188084

  • கருத்துக்கள உறவுகள்

 

சூடுப்பிடிக்கும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

குறித்த அகழ்வின் போது பார்வையாளராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலனும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார்.

இந்த அகழ்வு பணியின் போது 7 மனித உடல் பாகங்கள் ,சில மனித ஆடைகள் மற்றும் இராணுவத்தால் பாவிக்கப்படும் கம்பி உட்பட சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆடைகளில் பெண்களுக்குரிய உள் ஆடைகள் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் இன்று நடைபெற இருக்கின்றது.

மேலும், அகழ்வு பணிகளை பேராசிரியர் சோமதேவா குழுவினர் மேற்கொண்டனர் அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தடயவியல் பொலிஸாசார் உள்ளிட்ட தரப்பினரும் இந்த ஆய்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

 

http://www.samakalam.com/சூடுப்பிடிக்கும்-கொக்கு/
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் ஆறாம் நாள் அகழ்வுப் பணி: 7 மனித உடல் பாகங்கள், சில மனித ஆடைகள், இராணுவத்தால் பாவிக்கப்படும் கம்பிகள் மீட்பு!

Published By: VISHNU   11 JUL, 2024 | 03:03 AM

image
 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு புதன்கிழமை (10) இடம்பெற்றது.

IMG_20240710_164124.jpg

குறித்த அகழ்வின் போது பார்வையாளராக 10ஆம் திகதி புதன்கிழமையும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலன் அவர்களும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார். 

IMG_20240710_164028_1.jpg

இந்த அகழ்வு பணியின் போது 09, 10 ஆம் திகதிகளில் 7 மனித உடல் பாகங்கள் ,சில மனித ஆடைகள் மற்றும் இராணுவத்தால் பாவிக்கப்படும் கம்பி மேலும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடைகளில் பெண்களுக்குரிய உள் ஆடைகள் காணப்படுகின்றது தொடர்பான மேலதிக ஆய்வுகள் நாளை நடைபெற இருக்கின்றது.

IMG_20240710_162954_1.jpg

புதன்கிழமை (10) அகழ்வ பணிகளை பேராசிரியர் சோமதேவா குழுவினர் மேற்கொண்டனர் அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தடயவியல் பொலிஸாசார் உள்ளிட்ட தரப்பினரும் இந்த ஆய்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

IMG_20240710_163959.jpg

https://www.virakesari.lk/article/188174

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு; மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

Published By: VISHNU   11 JUL, 2024 | 09:16 PM

image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஏழாம்நாள் அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஏழாம்நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஜூலை.11 வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

IMG-20240711-WA0070_1_.jpg

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவதலைமையிலான  குழுவினர் தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரால் பங்குபற்றுதல்களுடன் இந்த ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன. 

IMG-20240711-WA0126.jpg

அதேவேளை மூன்றாவது நாளாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின், மனித உரிமைகள் அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகளும் அகழ்வு பணிகளை கண்காணிப்புச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

IMG-20240711-WA0120.jpg

அந்த வகையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வாய்வுப்பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இவ்வாறு மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

IMG-20240711-WA0118_1_.jpg

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 43மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20240711-WA0114_1_.jpg

IMG-20240711-WA0104_1__resized.jpg

IMG-20240711-WA0072.jpg

IMG-20240711-WA0070_1_.jpg

IMG-20240711-WA0064_resized.jpg

IMG-20240711-WA0058.jpg

IMG-20240711-WA0064_1__resized.jpg

IMG-20240711-WA0052.jpg

IMG-20240711-WA0044.jpg

https://www.virakesari.lk/article/188257

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு - அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்

12 JUL, 2024 | 04:43 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுபணிகளை இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதரகம் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஆதரவை வெளியிடும் விதத்தில் முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழிகளை அகழும் பணிகளை தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர் என தெரிவித்துள்ளது.

வெளிப்படைத்தன்மை, பதிலுக்காக காத்திருப்பவர்களின் காயங்களை ஆற்றுதல்  இந்த விடயத்தை முடிவிற்கு கொண்டுவருதல் ஆகியவற்றிற்கு இந்த நடவடிக்கை (மனித புதைகுழி அகழ்வு)  முக்கியமானது என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்கின்றது அங்கீகரிக்கின்றது எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/188315

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : துப்பாக்கி, சன்னங்கள் மீட்பு

news-01-6.jpg

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின், எட்டாம் நாள் அகழாய்வு செயற்பாடுகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடு ஒன்றும், துப்பாக்கி சன்னங்களும், விடுதலைப் புலிகளின் சீருடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழாய்வின்போது, மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின்போது நேற்றுடன் 45 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகளின் கண்காணிப்புகளின் கீழ் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இந்த அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் மத்தீவ் கின்சன் மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த, பணிப்பாளர் ஜெ.தர்பரன் உள்ளிட்டவர்களும் குறித்த அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/305923

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட கஜேந்திரன் எம்.பி

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

 

அகழ்வாராய்ச்சி பணிகள்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினர், தடயவியல் பொலிஸார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட கஜேந்திரன் எம்.பி | Gajendran Mp Visited Kokkuthoduwai

அத்துடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 5 எலும்புகூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மொத்தமாக 45 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் சில மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

https://tamilwin.com/article/gajendran-mp-visited-kokkuthoduwai-1720883508

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி - இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள், சையனைட் குப்பி கண்டெடுப்பு!

Published By: DIGITAL DESK 7    14 JUL, 2024 | 09:36 AM

image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று சனிக்கிழமை (13) இடம்பெற்றது.

இந்த அகழ்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளும், சையனைட் குப்பி ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

குறிப்பாக, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார் போன்றோரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன. 

அகழ்வாய்வுப் பணிகளில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இவ்வாறு இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், ஒரு சைனைட் குப்பியும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போது 40 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் மொத்தம் 47 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240713-WA0093.jpg

IMG-20240713-WA0081_resized__1_.jpg

IMG-20240713-WA0099_resized__1_.jpg

IMG-20240713-WA0101__1_.jpg

IMG-20240713-WA0089.jpg

IMG-20240713-WA0108_resized.jpgIMG-20240713-WA0097.jpg

https://www.virakesari.lk/article/188400

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ; இதுவரை 52 மனித எச்சங்கள் அகழ்வு!

Published By: VISHNU   15 JUL, 2024 | 08:59 PM

image
 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், பத்தாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் திங்கட்கிழமை (15.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG-20240715-WA0202.jpg

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 10ஆவது நாளான இன்று ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னம், திறப்பு கோர்வை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

IMG-20240715-WA0201.jpg

இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது இன்றுடன் 52 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

IMG-20240715-WA0198.jpg

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், கிராம சேவையாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

IMG-20240715-WA0194.jpg

இது தொடர்பாக விஷேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ கருத்து தெரிவிக்கும் பாேது,

IMG-20240715-WA0193.jpg

திங்கட்கிழமை (15) மூன்றாம் கட்டமாக தொடர்ந்த கொக்குதாெடுவாய் மனிதபுதைகுழி அகழ்வானது பத்தாவது நாளாவதாக இன்றைய தினம் நடைபெற்றது. இன்றுடன் அநேகமாக மனித புதைகுழியில் கிடந்த எலும்பு தொகுதிகள் முழுக்க மீட்கப்பட்டுள்ளது.

IMG-20240715-WA0190.jpg

ஒட்டுமொத்தமாக இதுவரை 52 மனித எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்றையதினம் துப்பாக்கி சன்னம், திறப்பு கோர்வைகள் என்பன மேலதிக சான்றாதார பொருட்களாக பெறப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் இப்புதைகுழி தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும்.

IMG-20240715-WA0189.jpg

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

IMG-20240715-WA0188.jpg

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

IMG-20240715-WA0187.jpg

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. 

IMG-20240715-WA0186.jpg

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. 

IMG-20240715-WA0185.jpg

இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  மீண்டும் 04.07.2024 மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகி இன்றையதினம் பத்தாம் நாள் அகழ்வுகளுடன் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240715-WA0184.jpg

IMG-20240715-WA0183.jpg

IMG-20240715-WA0182.jpg

IMG-20240715-WA0181.jpg

IMG-20240715-WA0179.jpg

IMG-20240715-WA0178.jpg

IMG-20240715-WA0177.jpg

IMG-20240715-WA0176.jpg

IMG-20240715-WA0175.jpg

IMG-20240715-WA0172.jpg

IMG-20240715-WA0171.jpg

IMG-20240715-WA0168.jpg

IMG-20240715-WA0166.jpg

IMG-20240715-WA0163.jpg

IMG-20240715-WA0161.jpg

IMG-20240715-WA0159.jpg

IMG-20240715-WA0156.jpg

IMG-20240715-WA0154.jpg

IMG-20240715-WA0153.jpg

IMG-20240715-WA0152.jpg

IMG-20240715-WA0149.jpg

IMG-20240715-WA0148.jpg

IMG-20240715-WA0144.jpg

IMG-20240715-WA0142.jpg

IMG-20240715-WA0143.jpg

https://www.virakesari.lk/article/188553

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு முடிவிற்கு வந்தது; அகழ்வாய்வில் பங்குபற்றிய சகலதரப்புக்களையும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்று

Published By: VISHNU   16 JUL, 2024 | 07:52 PM

image

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப் பணிகள் ஜூலை 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,  அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழியும் பகுதியளவில் மூடப்பட்டது.

IMG-20240716-WA0102.jpg

அதேவேளை அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழியை காணாமல்போனோர் பணியக அதிகாரிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகியதரப்புக்களின் முன்னிலையில் பிறிதொரு நாளில் முழுமையாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினர்களதும் அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இதுதொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதேதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் கடந்த 2023ஆம்ஆண்டு, ஜூன் மாதம் 29ஆம் திகதி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை அகழ்ந்தபோது மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பூர்வாங்க அகழ்வாய்ப்புப்பணிகளில் குறித்த பகுதி மனிதப்புதைகுழி என இனங்காணப்பட்டநிலையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மூன்றுகட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது மொத்தம் 52மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள், ரஷ்யத் தயாரிப்பு நீர்சுத்திகரிப்புக் கருவி, ஆடைகள், உள்ளாடைகள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகள் மற்றும், சையனைட் குப்பி உள்ளிட்ட தடையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினராலும், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, தடையவியல் பொலிசாராலும் இந்த அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த அகழ்வாய்வுப் பணிகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பான சட்டத்தரணிகள், காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்கிணித்துவந்ததுடன், ஐ.நாவின் இலங்கை அலுவலகத்தின் மனிதஉரிமை அலுவலர், அமெரிக்கத் தூதுவரக அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேசத் தரப்புக்களும் அவ்வப்போது இந்த அகழ்வுப்பணிகளை கண்காணிந்துவந்தன.

அதேவேளை ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் ஒருமுறை இந்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

அத்தோடு தமிழ் அரசியல் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆ்கப்பட்டோரின் உறவுகளும் இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் தமது கண்காணிப்புக்களைச் செலுத்திவந்தன.

இந் நிலையில் கடந்த ஜூலை.15 திங்கட்கிழமையுடன் இந்த கொக்குத்தொடுவாய் அகழ்வாய்வுகள் நிறைவிற்கு வந்ததுடன், அதனைத்தொடர்ந்து ஜூலை.16 நேற்று அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழி அளவீடுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பகுதியளவில் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிறிதொருநாளில் காணாமல்போனோர் அலுவலகப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முன்னிலையில் குறித்த புதைகுழி முழுமையாக மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிதொடர்பான வழக்கு, குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஜூலை. 16 நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினரதும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக இந்த அகழ்வாய்வு தொடர்பாக தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையும் கோரப்பட்டுட்டது. அந்த சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையிலே இறப்பிற்கான காரணம், பால், வயது, உயரம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கை தாக்கல்செய்யப்படவேண்டுமென நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்ந அகழ்வாய்வில் பங்குபற்றிய காணாமல் போனோர் ஆலுவலக்அதிகாரிகளின் அறிக்கை, கொக்குத்தொடுவாய் கிராமசேவையாளரின் அறிக்கை, கொக்கிளாய் பொலிசாரின் அறிக்கை, தடையவில் பொலிசாரின் வரைபடங்கள், புகைப்படங்கள், ஏனைய விடயங்கள் அடங்கிய அறிக்கைகள் அனைத்தும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்புக்களதும் அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பிற்பாடே ஒட்டுமொத்த அறிக்கைகளையும் வைத்தே ஒரு தீர்மானத்திற்கு வரமுடியுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேவேளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இந்த புதைகுழி மூடப்படவேண்டுமெனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/188634

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2024 at 13:05, ஏராளன் said:

இந்நிலையில், மொத்தமாக 45 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் சில மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சரத் பொன்சேகா ஒருவரும் சாகவில்லை என்று சொன்னது ???

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறப்புக்கான காரணங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்

368638191.jpg

நீதிமன்று பணிப்பு என்கிறார் சட்டத்தரணி!!!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் இறப்புக்கான காரணம், பால், வயது உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

புதைகுழி அகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட நீதிவான் த.பிரதீபன் முன்னிலையில் அவரின் பிரசன்னத்துடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித ஓட்டுத்தொகுதிகள் அதனூடான பிறசான்றுப்பொருள்கள் பாரப்படுத்தப்பட்டன. இடைக்கால அறிக்கை பேராசிரியர் றாஜ்சோமதேவவால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1994- 1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குரிய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பங்குபற்றுனர்களின் இறுதி அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும். இறப்புக்கான காரணம், பால், வயது, உயரம் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளின் அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற அறிக்கைகள் எல்லாம் கிடைக்கப்பெற்ற பின்னர் ஒட்டு மொத்த அறிக்கைகளை வைத்து தீர்மானத்துக்கு வரமுடியும் என்று நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட இருக்கின்றது.

காணாமற் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளின் பிரசன்னத்தில் புதைகுழி முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதை குழியை மூடுமாறு நீதிமன்றின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு சென்றோம். மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள். தமிழீழவிடு தலைப்புலிகளின் உறுப்பினர்களின் உடலங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. கூடுதலாக பெண்போராளிகளின் உடலங்கள்தான் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதிகமானவர்களின் உடலங்களில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குழிகளுக்குள்ளும் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அதனைவிட பிற பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
ஆடைகள் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

இங்கு ஒரு வன்முறை, துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல் நடந்தது என்று அப்பட்டமாக தெரிகின்றது. ஒட்டுமொத்த அறிக்கைகள் வந்ததன் பின்னர்தான் உண்மை துலங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். தொழில்நுட்பவசதிகள், சர்வதேச முறைகள் இலங்கையில் இல்லை என்பதை நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்றார். (ச)

 

https://newuthayan.com/article/கொக்குத்தொடுவாய்_மனிதப்_புதைகுழி_இறப்புக்கான_காரணங்களுடன்_அறிக்கை_சமர்ப்பிக்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் இறப்புக்கான காரணம், பால், வயது உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

இந்த மனித புதைகுழியைப் பற்றி எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருப்பது வேதனை தருகிறது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு; மீட்கப்பட்ட தகட்டு இலக்கங்களை பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை!

Published By: DIGITAL DESK 3  08 AUG, 2024 | 05:59 PM

image

கே .குமணன் 

இன்று வியாழக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுள்ளது. 

காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி ) சார்பில் அந்த அலுவலகத்தின்  சட்டத்தரணிகளும், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும்  ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ரட்ணவேல் மற்றும் நிரஞ்சன் ஆகியோரும்   காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் ஆஜராகி இருந்தார்கள்.

ஏற்கனவே நீதிமன்றால் இந்த புதைகுழி அகழ்வு தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிக்க கோரியிருந்தமை தொடர்பில் கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரால் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட இருபத்தைந்து வகையான எலும்புக்கூட்டு தொகுதிகள் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ பீட கட்டடத்தில் உள்ள சட்ட மருத்துவ பிரிவுக்கு இடமாற்றப்பட்டு கடந்த இரண்டாம் திகதி தொடக்கம்  அது சம்பந்தமான பகுப்பாய்வு பணிகள் இரு நாட்களாக இடம்பெற்றன. இப்பாகுப்பாய்வு பணிகளானது எதிர்வரும் வாரங்களில் தொடர்ந்தும்  நடைபெறவுள்ளது  என இந்த புதைகுழி அகழ்வில் தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.

அத்தோடு காணாமல் போனோர் அலுவலகம் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற இடத்தை பூரணமாக பொதுமக்களிடம் கையளிப்பது  சம்பந்தமாக அடுத்த வழக்கு தவணையில் முடிவுக்கு வருவதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள்.

அத்தோடு  காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் சில விண்ணப்பங்களை அவர்களது சார்பில் ஆஜரான சட்டதரணிகள் மன்றில் முன்வைத்திருந்தார்கள். 

அதாவது தடயவியல் பொலிஸாரினால் எடுக்கப்பட்ட குறிப்புகள் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள் மற்றும் சான்றுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு இந்த அகழ்வில் பொழுது பல இலக்கத்தகடுகள், இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை துலாம்பரமாக பத்திரிகைகளில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் பிரசுரிக்கப்படவேண்டும் என்றும் அந்த இலக்கங்கள் அதனோடு இணைந்த போராளிகளுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியும் என்ற அடிப்படையில் அவர்கள் அந்த தகவல்களை நீதிமன்றுக்கு தெரிவிப்பதன் மூலம் ஆய்வுப்பணிகளையும் அந்த புதைகுழி தொடர்பான காலப்பகுதியையும் கண்டுபிடிப்பதற்கு இலக்கு என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகளால் தெரிவித்ததன் அடிப்படையில் அது சம்பந்தமாகவும் கட்டளை ஆக்கப்படுள்ளது. இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சம்பந்தமான விடயங்களை கண்காணிக்க இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுசாந்தி கோபாலகிறிஸ்ணன்  நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார்.

https://www.virakesari.lk/article/190603

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முல்லைத்தீவு (Mullaitivu) நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல் போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி V.S.நிரஞ்சன் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

வழக்கு விசாரணை

வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில் ''இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை | Kokkudhuduwai Human Burial Case

இதுவரை காலமும் மனித புதைகளில் இருந்தும் எடுக்கப்பட்ட மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களம்

இதேவேளை, அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை | Kokkudhuduwai Human Burial Case

இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

 மேலும், இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது.'' என தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/kokkudhuduwai-human-burial-case-1727471213#google_vignette

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல்

12 DEC, 2024 | 02:46 PM
image

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக  இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இன்றைய வழக்கின் பின்னர் சட்டத்தரணி கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான AR 804/23 வழக்கானது, இன்று (12) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்ற அடிப்படையில் மன்றில் திகதியினை கோரியிருந்தனர்.

அதன் அடிப்படையில் மன்றானது சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்று  குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது எனக் கூறியிருந்தார்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கடந்த வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்தும் மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20241212_11334482.jpeg

IMG_20241212_11335182.jpeg

https://www.virakesari.lk/article/201088

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; சட்டவைத்திய அதிகாரி குழுவினரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Published By: DIGITAL DESK 3

29 MAY, 2025 | 02:07 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

1000296227.jpg

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா,

கொக்கு தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி தொடர்பான வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக இந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கே நீதிமன்ற நடவடிக்கையின்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம் காணும் முகமாக நீதவானால் காணாமலாக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிகள், காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் இருந்தது. சில எலும்புக்கூடுகளில் சில பகுதிகளே இருந்தமையால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

1000296222.jpg

குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாய் மனித புதகுழி வழக்கு இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே சட்ட வைத்திய அதிகாரிகளினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட இருந்தது. இன்று சட்ட வைத்திய அதிகாரியின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இறந்த மண்டை ஓட்டு தொகுதிகளில் எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? இறப்புக்கான காரணங்கள் போன்ற விவரங்களும் சம்பவத்திற்கான விடயதானங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த இறுதி அறிக்கைகளை அடுத்து காணாமல் போனோர் அலுவலகத்தின் இந்த இறுதி அறிக்கைகள் காணப்படுகின்ற இலக்கங்கள், அதாவது தமிழீழ விடுதலை புலிகளுடைய இலக்கமான கருதப்படும் இலக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க இருக்கிறார்கள். அந்த பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான , தொடர்புடைய மக்கள் நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற பதிவாளரிடம் இது சம்பந்தமாக தெரிவிக்கும் போது மேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது.

ஆகவே இந்த இறுதி அறிக்கையை வைத்துக்கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் பத்திரிகை பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/215984

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி - “மாடுகள் மேய்கின்றன, நாய்கள் அலைந்து திரிகின்றன – பாதுகாப்பு வேலி எதுவும் இல்லை”

Published By: RAJEEBAN

07 JUN, 2025 | 10:18 AM

image

Thyagi Ruwanpathirana

முன்னர் 52 மனிதஎச்சங்களுடன் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் தற்போது மாடுகள் மேய்கின்றன.நாய்கள் நடமாடுகின்றன.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவிற்கு செல்லும் வீதியின் ஓரத்தில் தற்போது குழியொன்று சொல்லக்கூடிய ஒன்றுமாத்திரம் காணப்படுகின்றன.

504897849_10162398931283673_751144715274

புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் 2024 இல் முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகின்றது.இந்த அகழ்வின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்கள் என கருதப்படுபவர்கள் 52பேரின் மனித எச்சங்களும்,சீருடைகள் போன்ற உடைகளும் தங்களை அடையாளம் காண்பதற்காக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அணியும் பட்டிகளும் மீட்கப்பட்டன.

இந்த உடல்கள் எப்போது இங்கு புதைக்கப்பட்டன என்பதை அறிய உதவும் தடயவியல் அறிக்கைகளிற்காக குடும்பத்தவர்கள் உறவினர்கள் காணப்படுகின்றனர்.

மீட்கப்பட்டவை யாருடைய உடல்கள் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை சந்தேகநபர்கள் என கருதப்படுபவர்களின் குடும்பத்தவர்கள் உறவினர்களின் மரபணுவை சேகரித்து மனித எசசங்களின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை.

493930808_10162398929978673_487438152849

மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், அந்த இடத்தை சுற்றிபாதுகாப்பு வேலியொன்று அமைக்கப்படவில்லை,அங்கு குற்றம் நடந்தது என்பதை தெரிவிக்கும் அறிவிப்புகள் எதனையும் காணமுடியவில்லை.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்கீழ் கைதிகளும் போர்க்கைதிகளும் பாதுகாக்கப்பட்டவர்கள்.

போர்க்கைதிகளை கொலை செய்வது சித்திரவதை செய்வது ஈவிரக்கமற்ற விதத்தில் நடத்துவது மோசமானவிதத்தில் நடத்துவது போன்றவை யுத்த குற்றங்களாகும்.

இந்த பதிவின் 7 இறுதி புகைப்படங்கள் கம்போடியாவின் கொலைகளங்களின் மனித புதைகுழிகள் காணப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டவை.பாரியமனித புதைகுழிகளை உலகின் ஏனைய நாடுகளில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பது குறித்த சிறந்த தெளிவுபடுத்தலை இந்த படங்கள் உங்களிற்கு வழங்குகின்றன.

494592241_10162398929333673_358018602242

அவர்களின் வீடுகள் மனித புதைகுழிகளிற்கு அருகில் இருந்தாலும் கொக்குதொடுவாயின் தமிழ் சமூகத்தினர் போரில் இழந்தவர்களை நினைவுகூருவதற்காக நடமாடும் நினைவுச்சின்னங்களை நாடவேண்டிய நிலையில் உள்ளனர்.

503970669_10162398927283673_558451864579

இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் இன்னமும் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்ற பகுதிகளில் நினைவுத்தூபிகளை ஏற்படுத்தினால் என்ன நடக்கும் என்ன அச்சம் காரணமாகவே நடமாடும் நினைவுத்தூபிகளை அவர்கள் நாடுகின்றனர்.

நாளை சிஐடியினர் இங்கு வந்து நேற்று யார் வந்தது என விசாரணை செய்வார்கள் என மனிதபுதைகுழிக்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/216841

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப்பணி நிறைவில் 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப்பணி நிறைவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றத்திற்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு சட்ட வைத்திய அதிகாரிகளால் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வுகளின் இறுதி அறிக்கையும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் குறித்த சான்றுப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு 2025.08.03 அன்று காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஊடகங்களில் குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடமிருந்து குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் இதனுடைய இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என்ற அடிப்படையில் குறித்த வழக்கு நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmev4v1a0002mqplpg6tkooff

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.