Jump to content

தனியார் ராணுவம் என்றால் என்ன? சோழர்களும் பேரரசை விரிவாக்க அதை பயன்படுத்தினார்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வாக்னர் கூலிப்படை

பட மூலாதாரம்,CONCORD PRESS SERVICE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜுபைர் அகமது
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 53 நிமிடங்களுக்கு முன்னர்

ரஷ்ய அரசுக்கு எதிராக ஒரு தனியார் ராணுவம் படை திரட்டி கிளர்ச்சியைச் செய்து, அச்சம் காட்டிய விவகாரம் உலகையே விழி விரிந்து பார்க்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தனியார் ராணுவங்கள் பற்றிய கேள்விகளும் கிளம்பியுள்ளன.

ரஷ்ய அரசுக்கு எதிராகப் படையைத் திரட்டி அச்சம் காட்டிய வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், தங்களது கிளர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து பெலாரூஸுக்கு சென்றுவிட்டார். ப்ரிகோஜின் பெலாரூஸ் வந்துள்ளதை அந்நாட்டு தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.

வாக்னர் குழுவின் தோல்விக்குப் பிறகு கடந்த செவ்வாயன்று தனது ராணுவத்திடம் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், உள்நாட்டு யுத்தத்தை தான் நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டார்.

வாக்னர் படையினரின் கிளர்ச்சி புதினை நெருக்கடிக்கு உள்ளாக்கியது, யுக்ரேனுடனான போரில் அவர்கள் பங்கேற்றது போன்றவை தனியார் ராணுவம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

 

தனியார் ராணுவப் படைகள் தொடர்பான விவகாரங்களில் பலரும் தங்களின் கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

போர்க்களமே அவர்களது வாழ்க்கை, எங்கெல்லாம் யுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களும் இருப்பார்கள். உலகின் முக்கிய நாடுகளுக்காக அவர்கள் வேலை செய்கிறார்கள். சொல்லப்போனால், சில அரசு சாரா நிறுவனங்களும் தனியார் ராணுவப் படைகளை பயன்படுத்திக் கொள்கின்றன.

தனியார் படைகள் பல நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. எனினும், ரஷ்யாவின் வாக்னர் குழு மற்றும் அமெரிக்காவின் அகாடமி (பழைய பெயர் பிளாக்வாட்டர்) ஆகியவையே சமீப காலங்களில் செயல்படும் இரண்டு நன்கு அறியப்பட்ட தனியார் ராணுவ நிறுவனங்கள்(PMCs). இவை பல ஆண்டுகளாக சர்ச்சையிலேயே இருந்து வருகின்றன.

ஷான் மெக்ஃபீட் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பல ஆண்டுகளாக தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்த அவர், இந்த உலகத்தைப் பற்றி இரண்டு புத்தகங்களையும் சில நாவல்களையும் எழுதியுள்ளார்.

பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், தனியார் ராணுவம் அல்லது கூலிப்படை என்பது ஒரு தொழில் என்று அவர் கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், “அவர்களை பற்றி புத்தகங்களை எழுதியவன் என்ற முறையில் கூறுகிறேன், கூலிப்படையினர் அல்லது தனியார் ராணுவ வீரர்கள் என்று அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கை பெரும் ஆபத்து நிறைந்தது. பெரிய நாடுகள் இது குறித்துப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை," என்று கூறினார்.

வாக்னர் கூலிப்படை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

யெவ்கெனி ப்ரிகோஜின் தொடக்கத்தில் சமையல் தொழிலைச் செய்துள்ளார்

இந்த விவகாரம் 1990களில் தொடங்கியது, ஆனால் அரசுகள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் தாமதமாகவே செயலாற்றுகின்றன, இதே முறையை அவை பின்பற்றினால் சர்வதேச உறவுகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் ஷான் மெக்ஃபீட்.

தனியார் ராணுவத்தை அமைக்க மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். நாளை ஈலோன் மஸ்க் (ட்விட்டர் மற்றும் டெஸ்லாவின் உரிமையாளர்) தனது சொந்த ராணுவத்தை உருவாக்க முடியும். தனியார் ராணுவத்தை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இந்தப் போக்கு தொடர்ந்தால், உலகம் மாறும், அராஜகம் பரவும்," என்றார்.

யெவ்கெனி ப்ரிகோஜினுக்கு 62 வயதாகிறது. அவர், அதிபர் புதினால் உருவானவர். உலகமெங்கும் ரஷ்ய செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதின் 2014இல் வாக்னர் குழுவை உருவாக்கினார்.

வாக்னர் குழுவின் கிளர்ச்சியால், புதினின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டதாகத் தோன்றுவதாகக் கூறுகிறார் டெல்லியில் உள்ள அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை நிபுணர் டாக்டர் சுவரோக்மல் தத்தா.

இந்தக் குழுவின் வீரர்கள் எண்ணிக்கை 20,000 முதல் 35,000 வரை உள்ளது. மேலும் இது யுக்ரேனிய ராணுவத்திற்கு எதிராக யுக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்கில் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது.

கடந்த 2014இல் ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்தபோது, இந்தக் குழுவின் பங்களிப்பும் பெரியளவில் அதில் இருந்தது.

வாக்னர் கூலிப்படை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வாக்னர் படையில் உள்ள பலர் சிறைக் கைதிகள்

தனியார் ராணுவத்தின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவை. எடுத்துக்காட்டாக, செப்டம்பர் 2007இல், இராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு படுகொலை நடந்தது. இதில் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனமான பிளாக்வாட்டர் வேர்ல்டுவைடின் (தற்போது அகாடமி என்று அழைக்கப்படுகிறது) வீரர்களின் தொடர்பு உள்ளது, இது இராக்கில் பாதுகாப்பு சேவைகளை வழங்க அமெரிக்க அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எதிரே வந்த வாகனத்தின் அச்சுறுத்தலை உணர்ந்த பிளாக்வாட்டர் பணியாளர்கள் பரபரப்பான சந்திப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் ஆகியோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இராக்கைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். அவர்களில் பலர் நிராயுதபாணிகளாக இருந்தனர், வாகனத் தொடர்வரிசைக்கு வெளிப்படையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. இந்தச் சம்பவத்திற்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச அளவிலும் இச்சம்பவம் கடும் கண்டனத்தைப் பெற்றது.

பிளாக்வாட்டர் படையைப் பயன்படுத்துவது மிகையானது மற்றும் நியாயமற்றது என்று இந்தப் படுகொலை பற்றிய அமெரிக்க விசாரணை முடிவு செய்தது. அமெரிக்க நீதித்துறை பின்னர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பல பிளாக்வாட்டர் வீரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டியது.

இராக்கில் தனியார் பாதுகாப்பு வீரர்களின் சர்ச்சைக்குரிய பங்கை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

வாக்னர் கூலிப்படை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாக்தாத்தில் பிளாக்வாட்டர் படையினர்- 08 ஜூலை 2006

மேலும், இந்தச் சம்பவம் போர்க்களத்தில் இயங்கும் தனியார் ராணுவ நிறுவனங்களைக் கண்காணிப்பது குறித்துப் பரவலான விவாதத்தை கிளப்பியது.

பேராசிரியர் ஷான் மெக்ஃபீட் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். இந்த வீரர்கள் தொடர்பாக எந்தவித உரிமை கோரலும் இல்லை, எனவே அரசுகள் அவர்களைப் பயன்படுத்துகின்றன என்று அவர் கூறுகிறார்.

"கூலிப்படையைப் பணியமர்த்துவதற்கு இது ஒரு சிறப்புக் காரணம். அரசாங்கத்தைச் சேர்ந்த வீரர் யாரேனும் ஒருவரைக் கொன்றால், அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார். ஆனால் தனியார் ராணுவ குழுவைச் சேர்ந்த ஒருவர் அதே குற்றத்தைச் செய்தால் எந்த வித நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படாமல் வீடு திரும்புவார்,” என்று ஷான் மெக்ஃபீட் குறிப்பிடுகிறார்.

கூலிப்படையின் வரலாறு

ராணுவத்தில் கூலிப்படையின் பங்கு வரலாற்றில் மிகவும் பழைமையானது. தனிப்பட்ட ஆதாயங்கள், அரசியல் நலன்கள், கருத்தியல் காரணங்களுக்காக கூலிப்படையினர் பல நூற்றாண்டுகளாகப் போர்களில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாறு முழுவதும், அரசின் வழக்கமான ராணுவத்திற்கு உதவுதல், வணிக நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தனியார் படைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பண்டைய எகிப்தில், பார்வோன் அண்டைப் பகுதிகளிலிருந்து கூலிப்படையை அமர்த்தி, ஒரு நிலையான ராணுவத்தை நிர்வகித்து வந்தார்.

பண்டைய கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டா போன்ற நகர-மாநிலங்கள் தங்கள் ராணுவப் படைகளை வலுப்படுத்த "ஹாப்லைட்டுகள்"(hoplites) என்று அழைக்கப்படும் கூலிப்படையை அடிக்கடி வேலைக்கு அமர்த்தியது.

பண்டைய ரோமானியப் பேரரசு தனது படைகளுக்குத் துணையாக ஜெர்மானிய பழங்குடியினர் போன்ற கூலிப்படையினரைப் பயன்படுத்தியது. பேரரசர்கள் தங்களுக்கான தனிப்பட்ட மெய்க்காப்பாளர் பிரிவுகளையும் உருவாக்கினர்.

வாக்னர் கூலிப்படை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த வீரர்கள்

காலனித்துவ மற்றும் மறுமலர்ச்சி காலம்

ஐரோப்பிய உருவாக்கம்: டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் வணிக நலன்களைப் பாதுகாக்கத் தனியார் படைகளை நிறுவின.

இத்தாலி மறுமலர்ச்சி: வெனிஸ் மற்றும் ஃப்ளோரன்ஸ் போன்ற சக்தி வாய்ந்த நகர-மாநிலங்கள் தங்கள் சார்பாகப் போர்களை நடத்த கூலிப்படைகளைப் பயன்படுத்தின.

ஏகாதிபத்தியத்தின் சகாப்தம்

ஐரோப்பிய பேரரசுகள்: காலனித்துவம் உச்சத்தில் இருந்தபோது, ஐரோப்பிய அரசுகள் தங்கள் காலனிகளை விரிவுபடுத்தவும் கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும் தனியார் படைகள் மற்றும் கூலிப்படைகளைப் பயன்படுத்தின.

பிரிட்டிஷ் தென்னாப்பிரிக்கா கம்பெனி மற்றும் காங்கோ ஃப்ரீ ஸ்டேட்டின் ஃபோர்சஸ் பப்ளிக் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய சொந்தப் படைகளைக் கொண்டிருந்தன.

அமெரிக்க புரட்சி: அமெரிக்க புரட்சிப் போரின்போது அமெரிக்க குடியேற்றவாசிகள் மற்றும் பிரிட்டிஷ் பேரரசு ஆகிய இரு தரப்பிலும் கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டனர்.

நவீன காலத்தில் கூலிப்படைகளின் பயன்பாடு

காலனித்துவத்துக்குப் பிந்தைய மோதல்கள்: 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனியார் ராணுவ நிறுவனங்கள் (PMCs) முக்கியத்துவம் பெற்றன. அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் சார்பில் பல போர்களில் அவை பங்கேற்றன.

இராக், ஆப்கானிஸ்தான் போர்கள்: இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களின்போது, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பிளாக்வாட்டர் போன்ற தனியார் ராணுவ நிறுவனங்களைப் பெரிதும் நம்பியிருந்தன. இந்தத் தனியார் ராணுவ நிறுவனங்கள் பாதுகாப்பு, தளவாட ஆதரவு மற்றும் பிற சேவைகளை வழங்கின.

சமகால செயல்பாடுகள்: உலகெங்கிலும் மோதல்கள் மற்றும் மோதல்களுக்குப் பிந்தைய சூழல்களில் தனியார் ராணுவ நிறுவனங்கள் தொடர்ந்து பங்கு வகிக்கின்றன. இருப்பினும், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சாத்தியமான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது.

 

இந்தியாவில் தனியார் ராணுவத்தின் வரலாறு

டாக்டர் சுவ்ரோகமல் தத்தாவின் கூற்றுப்படி, விஜயநகரப் பேரரசில் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான், இரான் போன்ற நாடுகளில் இருந்து வரும் போராளிகளை உள்ளடக்கிய ராணுவத்தின் ஒரு பகுதி இருந்தது.

அவர்களுக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டது, அவர்கள் ஒப்பந்த முறையில் பணிபுரிந்தனர். விஜயநகரப் பேரரசு அகமதுநகர் சுல்தான்களுக்கு எதிராகவும் கோல்கொண்டா மற்றும் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகவும் அவர்களைப் பயன்படுத்தியது.

"சோழப் பேரரசின் விரிவாக்கத்திலும் மத்திய ஆசியாவை சேர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட தனியார் ராணுவம் முக்கியப் பங்கு வகித்தது. டெல்லி சுல்தான் மற்றும் முகலாயப் பேரரசின்போது கூட தனியார் வீரர்களின் பயன்பாடு இருந்தது,” என்று சுவ்ரோகமல் கூறுகிறார்.

காலனித்துவ சாம்ராஜ்யத்தைப் பற்றி பேசும்போது, “அவர்கள் புதிய இடங்களையும் புதிய நாடுகளையும் ஆக்கிரமித்தபோது, அந்தக் காலத்திலும் தனியார் ராணுவத்தின் பயன்பாடு பிரதானமாக இருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் பலவந்தமாக தனியார் படைகளாகப் பயன்படுத்தப்பட்டனர் மற்றும் போர்க்களத்தில் கொடூரமாகப் பயன்படுத்தப்பட்டனர்,” என்று குறிப்பிடுகிறார்.

தனியார் ராணுவத்தின் பயன்பாடு சட்டவிரோதமா, அல்லது அவை கட்டுப்படுத்தப்படுகின்றனவா?

வாக்னர் கூலிப்படை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர்களைக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும், அதற்காக சர்வதேச மாநாடு, சட்டம் போன்றவை தேவை என்றும் டாக்டர் சுவ்ரோகமல் தத்தா கூறுகிறார்.

"21ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவும், அவற்றின் அரசுகளைச் சீர்குலைக்கவும் தங்களின் கொள்கைகளைச் செயல்படுத்தவும் தனியார் ராணுவத்தைப் பயன்படுத்தின. இது சர்வதேச சட்டமான வியன்னா ஒப்பந்தத்தை மீறியது," என்றும் அவர் தெரிவித்தார்.

“இதற்கு கண்ணெதிரே உள்ள சான்றாக அமெரிக்கா உள்ளது. இராக்கில் தனியார் ராணுவத்தை அது பயன்படுத்திய விதம் அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக இருந்தது. இதன் விளைவாக மனித உரிமைகள் பெரியளவில் மீறப்பட்டுள்ளன.

தனியார் ராணுவத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஒரு சர்வதேச ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தனியார் ராணுவத்தின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று சுவரோகமல் குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் ஷான் மெக்ஃபீட் இதுகுறித்துப் பேசும்போது, "தனியார் படைகள் மற்றும் கூலிப்படைகளைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ஏற்படுத்த இரண்டு தடைகள் உள்ளன. முதலாவது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகள்தான் அதிக எண்ணிக்கையிலான தனியார் ராணுவங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடுகளாக உள்ளன.

இரண்டாவதாக, ஒரு நல்ல சர்வதேச சட்டத்தை உருவாக்கினாலும், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் சிக்கல் உள்ளது. எடுத்துக்காட்டாக, பெலாரூஸுக்குள் சென்று கூலிப்படையை யார் கைது செய்வது?

லிபியா, ஏமன், இராக் சென்று யார் கைது செய்வார்கள். ஐ.நா.வால் அதைச் செய்ய முடியாது. "சிலர் சர்வதேச சட்டங்களைக் கோருகின்றனர் ஆனால் இது வெறும் கற்பனையே," என்கிறார் அவர்.

ஷான் மெக்ஃபீட்போன்ற வல்லுநர்கள் மற்றும் தனியார் ராணுவத்தில் பணிபுரிந்தவர்களின் கருத்துப்படி, இந்தத் தொழில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்லும், இதை யாராலும் தடுக்க முடியாது என்பதுதான்.

பெரிய நாடுகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/clkd83lv2p7o

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் இராணுவ என்றாலும், தேசியஅரசு,  இராணுவத்துக்கு சண்டை / வேலை செய்யும் போது, அதன் சத்தியபிரமாணத்துக்கு கீழேயே செய்வது.

அந்த வேலை , சண்டையில் இருந்து அரசால், இராணுவத்தால் அகற்றப்படும் வரைக்கும்  

பொதுவான  பிரச்சனை, conflict of interests, மிகப் பிரமாண்ட அளவில், ஏனெனில், பிரித்தானியா பலதடவை எதிரி  மக்கள், இராச்சியங்களில்  இருந்து பாவித்த வரலாறு இருக்கிறது.

இராணுவ  நம்பிக்கை இரத்த நம்பிக்கை.

இதுவே அடிப்படை காரணம், நான் சொன்ன  கருணா, குழு  செய்தது, எமது சாதித்து உரிமை கோரும் நிலையை கீழே கொண்டு போய்விட்டது என்பதற்கு.

உ.ம். பிரெஞ்சு வெளிநாட்டு படைகள் [French Foreign Legion (French: Légion étrangère)]. இப்போதும், கூலிப்படை என்பதையும் குறிக்க  தொப்பிக்குள் சம்பளம் (கூலி) வாங்கும் முழுவதும் வெளிநாட்டவரை கொண்ட படை.

அது ஏறத்தாழபிரஞ்சு வாக்னரே தான்  - ருசியா சொல்கிறது வாக்னருக்கு முழு செலவையும் அது ஏற்றதாக.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சொல்ல மறந்துவிட்டேன்.

கருணை செய்தது எமக்கு ஏற்படுத்திய சாதித்து உரிமை கோரும் நிலையை கீழே கொண்டுபோவிட்டது என்பது - வேறு நாட்டவருடன் 2009 இல் கதைத்து  வந்த அனுபவத்தையும் சேர்த்தே சொன்னது.

மேலதிக வாதம் செய்ய நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ப்ரெஞ் பொரின் லீஜன் என்பது French Armed Forces இன் ஒரு அங்கம். முழுக்க முழுக்க பிரென்ச் அரசின் படை. 

பிரிதானியாவில் இன்றும் படைக்கு நேபாளிகளையும், கானா, நைஜீரியா ஆட்களையும் எடுக்கிறார்கள். ஆனாலும் படை கூலிப்படை அல்ல. பிரிதானிய இராணுவம்.

வாக்னர் அப்படி அல்ல, அது ஒரு கம்பெனி. அதன் உத்தரவிடும் படி நிலையில் ரஸ்ய அரசோ, அமைச்சோ இல்லை.

அரசிடம் பணம் வாங்கி கொண்டு ஓப்பந்த படி வேலை செய்வார்கள்.

வாக்னரை வேணும் எண்டால் பழைய கிழக்கிந்திய கெம்பெனி, அல்லது ஒரு காலத்தில் பிரான்சை மேற்கிந்திய கடலில் தோற்கடிக்க பிரிட்டன் பயன்படுத்திய கடற்கொள்ளை பைரேட்ஸ் உடன் ஒப்பிடலாம்.

விடுதலை புலிகள் - ஒரு அரசியல் நோக்கத்துக்காக சத்தியப்ரமாணம் எடுத்த போராளி குழு.

இலங்கை, இந்திய, ரஸ்ய இராணுவங்கள், நாட்டை அதன் அரசியல் சட்டத்தை பாதுகாக்க பிரமாணம் எடுத்த இராணுவங்கள்.

கீனி மீனி, வாக்னர், - ஒப்பந்த அடிப்படையில், லாபம் கருதி, போரிடும் தனியார் கூலிப்படைகள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

 

ப்ரெஞ் பொரின் லீஜன் என்பது French Armed Forces இன் ஒரு அங்கம். முழுக்க முழுக்க பிரென்ச் அரசின் படை. 

பிரிதானியாவில் இன்றும் படைக்கு நேபாளிகளையும், கானா, நைஜீரியா ஆட்களையும் எடுக்கிறார்கள். ஆனாலும் படை கூலிப்படை அல்ல. பிரிதானிய இராணுவம்.

வாக்னர் அப்படி அல்ல, அது ஒரு கம்பெனி. அதன் உத்தரவிடும் படி நிலையில் ரஸ்ய அரசோ, அமைச்சோ இல்லை.

அரசிடம் பணம் வாங்கி கொண்டு ஓப்பந்த படி வேலை செய்வார்கள்.

வாக்னரை வேணும் எண்டால் பழைய கிழக்கிந்திய கெம்பெனி, அல்லது ஒரு காலத்தில் பிரான்சை மேற்கிந்திய கடலில் தோற்கடிக்க பிரிட்டன் பயன்படுத்திய கடற்கொள்ளை பைரேட்ஸ் உடன் ஒப்பிடலாம்.

விடுதலை புலிகள் - ஒரு அரசியல் நோக்கத்துக்காக சத்தியப்ரமாணம் எடுத்த போராளி குழு.

இலங்கை, இந்திய, ரஸ்ய இராணுவங்கள், நாட்டை அதன் அரசியல் சட்டத்தை பாதுகாக்க பிரமாணம் எடுத்த இராணுவங்கள்.

கீனி மீனி, வாக்னர், - ஒப்பந்த அடிப்படையில், லாபம் கருதி, போரிடும் தனியார் கூலிப்படைகள்.

பிளாக்வாட்டரைப் பற்றிச் சொல்லவில்லை அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கே பதிவதன நோக்கம் வாதம் அல்ல. இங்கே வாசிப்பார்வர்கள், இராணுவ சத்திய பிரமாணத்தை வரலாற்று வலிமை தெரிய வேண்டும்.

சத்திய பிரமாணம் எவ்வாறு, முழு கூலிப்படை என்றாலும், சத்திய பிரமானத்துக்கு  கீழ் அந்தந்த படைகளின் அங்கமாக மாறி விடுகின்றன  என்பதையும் காட்ட.  

(இங்கே சொல்லுபபவர்கள் போல யதார்த்தம் இருக்கிறது என்றால் - (சண்டையில் ஈடுபட்ட) கூலிப்படை மீது யுத்தக்க குற்றம் சாட்ட முடியாது)

அவரவருக்கு  அவரவரின் அரசியல் இலட்சியங்கள், நோக்கங்கள் உன்னதம்.

எனவே அரசியல் நோக்கங்கள் அவரருகே உள்ள தகுதியை தீர்மானிக்காது - வெளிப்படை.

அந்த நோக்கங்களை  அடைவாதற்கான நடத்தையே தீர்மானிப்பது சாதித்து கோரும் (வலோற்றகரமாக எடுக்கும்)   உரிமையை. 

பிரஞ்சு legion ஏ (அதை போன்ற படைகள்), (Gurkhas)  போன்றவை   கூலிப்படைத்தன்மையை அதிகம் கொண்டது. பிரென்ச் தேசிய நலன்களை அடைய, வெளிநாட்டவர் வருவதும் (அதை பிரஞ்சு  அரசு ஊக்குவிப்பதும்),  கூலிக்காக, வருங்கால பிரஞ்சு பிரசசாவுரிமை போன்றதை அடைவதற்கான வழியாக தெரிவதும்.  பிரஞ்சு முறைசார், மரபுவழி  படைகட்டமைப்பில் ஒரு பகுதி என்றாலும்.

(தொப்பியில் சம்பளம் கொடுப்பதின் ஒரு காரணம் (வேறு நாடுகள் வேறு முறைகளை பின்பற்றலாம்) - அவர்கள் செய்வது கூலிக்காக (பிரென்சு தேசியத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது) , மற்றது இரத்த நம்பிக்கையை, ஒரு இராணுவ குடும்பம் எனும் உணர்வை ஏற்ப த்துவதற்கு -)   

வாக்னரின் தன்மை கூலிப்படை  என்பது இங்கே உள்ளவர்கள் கட்டுவது, அவர்களில் விருப்பத்துக்கு ஏற்ற  மாதிரி. 

வாக்னர், ருசியாவுக்கு வெளியில் செய்வது முழு ருசியா நலன்களை அடைய. குறிப்பாக, ருசியா அரசின் ஆணையின் கீழ் (மேற்கு சொலவ்து, வாகனரை கொண்டு ருசியா அதன் செல்வாக்கை ஆப்பிரிக்காவில் கட்டி எழுப்புகிறது, மேம்படுத்துகிறது).  

ருசியா சொல்லி இருப்பது - அதுவே முழு செலவையும் ஏற்று இருப்பது என்பது  - அது மரபுவழி படையில் இருந்து, வேறுபட்டு,  நேரடியாக  புட்டின் கீழ் இயங்கும் படை. அதை எப்படி இயக்குகிறார் என்பது அவரின் முடிவு.  

(அனால் , இதை முதலிலேயே சந்தேகித்தேன் , புடின் பிரிகோஸின் முதுகில் குதி விட்டார்  என்று சொன்ன போது).

ஒரு அதி உச்ச படை தளபதி (இதில் புட்டின், இவ்வாறே அமெரிக்க அதிபர், பிரஞ்சு அதிபர் .., uk இல் முடிக்குரியவர், அது பாராளுமன்றம் வழியாக பிரதமருக்கு ... இப்படி எல்லா நாடுகளிலும்  அவர்களின் வரலாறை அடிப்படையாக கொண்டு)   எப்படி படை கட்டமைப்பை வைத்து இறுக்கப் போகிறார் என்பது அவரின் தெரிவு 

(பல சந்தர்ப்பங்களில், அதிபரின் கீழ் நேரடியாக ஒழுங்கு படுத்தப்பட்ட நிகழ்வுகள் இருக்கிறது). 

அனால், முழு கூலிப்படை என்றாலும், சத்தியபிரமாணத்தை கீழ் அந்த படை, குறிப்பிட்ட இராணுவத்தின் ஓர் நீண்ட குடும்ப அங்கமாகவே கருதப்படும். அவர்களின் சேவையும் அப்படியே கொள்ளப்படும், இறந்தால் அவர்கள் அந்த இராணுவ குடும்பத்தின்  தியாகமாகவே கொள்ளப்படும்.

அதனால் தான், எந்த கூலிப்படை என்றாலும், முக்கியமாக சண்டைகளில் சத்தியப்பிரமாணத்துக்கு உட்படுத்துவது. ( சிறிலங்கா  இராணுவத்தில், கீனிமேனி சண்டை பிடித்தோரின் குறிப்பு இருக்கிறது; அனால் இப்போதைக்கு வெளியில் விடாது. அனால் பயிற்றசை கொடுத்தோரின் குறிப்பு இல்லை. green berets இன் குறிப்பு இல்லை, ஏனெனில் பயிற்சி  மட்டும், சத்தியப்பிரமாணம் எடுக்கவில்லை. 2009 இல் கிந்திய இராணுவத்தின் குறிப்பு இருக்கும், இப்பொது வெளிவராது.)  

இப்படியே, உக்கிரனிலும் வேறு நாட்டவர்கள் பலர் ஒன்றில்  தாமாக ஆழ்ந்து வேறு எந்த காரணத்துக்கவும் சண்டை பிடிப்போரை உக்கிரைன் அரசும் அவர்களுக்கான இடத்தை கொடுக்கிறது.   

யாழ் களதில், வரலாற்று அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட இராணுவ மரபை மாற்றி கட்டுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கைய பிடிச்சு இழுத்தியா….

The clue is in the name.

Wagner PMC.

PMC = Private Millitary Company.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பிளாக்வாட்டரைப் பற்றிச் சொல்லவில்லை அண்ணை.

ஓம்..மறந்தே விட்டேன்.   பாக்தாத் கொலைஞர்கள்.

இப்படி சிறியதும், பெரியதுமாக பல கம்பெனிகள் உள்ளன. அவை எந்த நாட்டில் தளமமைத்து செயல்படுகிறனவோ அந்த நாட்டின் நலனிற்கு அமையவே அநேகமாக செயல்படும். அவற்றின் ஸ்தாபன ஆவணங்களில் கூட இது குறிப்பிடப்படலாம். 

ஆனால் அவை இராணுவம் அல்ல. துணை இராணுவ குழு கூட அல்ல (பராமிலிட்டரி).

மேர்சினரீஸ்/கூலிப்படை அல்லது நாகரிகமாக பிரைவேட் மிலிட்டரி கொம்பனி😃.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை மட்டும் வைத்து சொல்ல முடியாது வாக்னர் தனியார் இராணுவ குழு என்று.
 
அப்படி இருக்கவும் முடியாது ரஸ்சியாவில். 

ருசியா அனுமதித்து இருக்கிறது என்றால், அதுவும் ருசியா அரசு முழு செலவையும் பொறுப்பேற்று, வாக்னர் அரச அங்கம் ஆகிறது, மரபு வழி  படை கட்டமைப்பில் இல்லாவிட்டாலும்.

(பிரிகோசினுக்கு தெரியாமல் இருக்கலாம் - அப்படி நான் நினைக்கவில்லை - பிரில்கொசின் இதை அறிந்தவர் - அதாவது வாக்னெர் அரசின் அங்கம் என்று -  மருவளமாக பிரிகோஸின் என் புடின் இடம் இராணுவ நீதி கேட்க வேண்டும்?) 

What Is Russia's Wagner Group?

 
 
 
6 Jul 2021  Private military companies are illegal in Russia, which gives the Kremlin the ability to crack down on the group should it choose to do so. It ...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே தெளிவாக சொல்லப்பட்டுள்ளது…வாக்னர் ஒரு கூலிப்படை.

அதை ரஸ்யாவில் இயங்க அனுமதிக்கும் போதே அது ரஸ்ய நலனுக்கு எதிராக செயல்படாது, ஆதரவாய் செயல்படும் என்பது தெளிவாகிறது.

ரஸ்யாவில் படை திரட்டி கொண்டு, ரஸ்யாவில் பணம் பெற்று கொண்டு அமெரிக்காவுக்கு ஒப்பந்த அடிப்படையில் யுத்த கூலி வேலை செய்ய முடியாது என்பது யாருக்கு புரியும் அடிப்படையான விடயம்.

இதை மட்டும் வைத்து அது ரஸ்ய இராணுவ அதை விட ஒரு படி மேலே போய் ரஸ்ய அரச கட்டமைப்பு என சொல்லமுடியாது.

அதே போல், அண்மைய கலகம் வரை தாம் வாக்னருக்கு பணம் கொடுப்பதை ரஸ்யா வெளிப்படையாக சொல்லவில்லை. இப்போ சொல்கிறது. சொன்னாலும் இது கூலிப்படைக்கான ஒப்பந்த கூலியே.

அதைவிட, கூர்க்கா ரெஜிமெண்ட், பிரெஞ் பொரின் லீஜன் போன்ற அரச படைகளோடு ஒரு கூலி படையை ஒப்பிடவே முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

பிளாக்வாட்டரைப் பற்றிச் சொல்லவில்லை அண்ணை.

கோசான் சொல்லியிருக்கும் தகவல்கள் சரி. பிளாக்வாரர் என்பது அமெரிக்காவினால் ஈராக் போன்ற நாடுகளில் அவர்களது பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்க என்று தான் பணிக்கமர்த்தப் பட்டது. இவர்கள் ஈராக்கில் இராணுவ முன்னகர்வில் பயன்படுத்தப் படவில்லை, அது மரபுவழி இராணுவத்தின் பணி.

ஆனால், பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியின் போதும், அதற்கு வெளியேயும் இவர்கள் ஈராக்கிய சிவிலியன்களைப் படுகொலை செய்திருக்கிறார்கள். அதே போல இவர்களை ஈராக்கிய ஆயுத தாரிகள் கொன்றிருக்கிறார்கள். பிரபலமானது, மூன்று அமெரிக்காவின் தனியார் இராணுவ ஒப்பந்தக் காரர்களைக் கொன்று ஒரு பாலத்தில் தொங்க விட்ட சம்பவம்.

பிளாக்வாரர் கம்பனியின் ஸ்தாபகர், ட்ரம்பின் ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த பெற்றி டிவோசின் சகோதரர்- குடும்பமே தீவிர ட்ரம்ப் விசிறிகள், எங்கள் யாழ் கள உறுப்பினர்கள் சிலர் போல😎!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

பெயரை மட்டும் வைத்து சொல்ல முடியாது வாக்னர் தனியார் இராணுவ குழு என்று.
 
அப்படி இருக்கவும் முடியாது ரஸ்சியாவில். 

ருசியா அனுமதித்து இருக்கிறது என்றால், அதுவும் ருசியா அரசு முழு செலவையும் பொறுப்பேற்று, வாக்னர் அரச அங்கம் ஆகிறது, மரபு வழி  படை கட்டமைப்பில் இல்லாவிட்டாலும்.

 

உங்கள் இந்த வாதத்தின் படி, வக்னர் குழுவின் கிளர்ச்சி என்பது ரஷ்யாவின் இராணுவத்தின் கிளர்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாமோ? அப்படியென்றால், இது பற்றி ஓடிய ஒரிஜினல் திரியில் "இங்கே இராணுவம் புரினுக்கு எதிராகத் திரும்பவில்லை, எனவே இது பெரிய விடயமல்ல" என்று நீங்கள் வாதாடியது "வேற வாயா"?😂

ஒரு பொயின்ற்றை நிறுவ வேண்டுமென்ற ஒரேயொரு உந்துதலால், நீங்கள் செய்யும் அலட்டல்கள் நேரத்தை வீணாக்குகின்றன. அப்ப ஏன் பதில் எழுதுகிறாய் என்று கேட்பீர்கள். எதிர்க்காமல் சும்மா இருந்தால், உங்கள் இட்லி/தோசை லொஜிக்கை உண்மையென்று நம்பும் அப்பிராணிகள் இங்கே இருக்கிறார்கள்!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

உந்துதலால்


உந்துதல், நிறுவல் எனக்கு தேவையும் இல்லை, அவசியமும் இல்லை.

ஏனெனில்,  நான் சொல்லுவது யதார்த்த அடிப்படையில், வரலாற்று அடிப்படையில், நடைமுறை அடிப்படையில்.

அதை மறுப்பது, எதிர்ப்பது, அலட்டல்கள என்பது அவரவரின்  பிரச்சனை. 

வரலாற்றிலே, சத்தியப்பிரமாணம் எடுத்த வேறு படைகள் கிளர்ந்து இருக்கிறது. அவை எல்லாம், அந்தந்த மரபு வழி  படைகள் கிளர்ந்ததா?

உ.ம். ஈரானில் உள்ள IRGC   - இது நேரடியாக அதிபருக்கு பொறுப்பு சொல்வது. 

அப்படி வைத்து இருக்க கூடாது என்பது இல்லை.

வாக்கினரை மேற்கில் இருப்போர் கூலிப்படை .. என்று சொல்வது, அவர்களின் புரிதலில்.  

எல்லவற்றுக்கும் அடிநாதம் சத்தியபிரமாணம் 

இதில் மேற்கை  விட ருசியா நேர்மையாக இருக்கிறது, மேற்கு இந்த pmc என்பது பொறுப்பை அரசிடம் இருந்து தட்டி கழிக்க.   (பிரித்தானிய கீனிமீனி தொடங்கியதில் முக்கிய நோக்கம் ஒன்று).

மருவளமாக, சட்டத்தின் அடிப்படையில், வல்லுனர்களின் கருத்து, புட்டினை வாக்னரின் யுத்த குற்றசத்துக்கு பொறுப்பாக்கலாம்  என்று.

ஆனா, US (மேற்கை) ஐ செய்ய முடியாது, ஏனெனில் குழுக்கள் pmc என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாராவது பழைய சாரணர், குருளைகள் உள்ளீர்களா?

அதில் சத்தியபிரமாணம் எடுத்துள்ளீர்களா?

காங்கிராஜுலேசன்ஸ்- நீங்கள் ஒரு அரச படையின் சிப்பாய்.

இந்தியாவில் RSS எல்லாருக்கும் அரை டிரவுசர் போட்டு - கையில் கம்பை கொடுத்து சத்தியபிரமாணம் எடுக்க வைப்பார்கள் - அதுவும் இராணுவம் தான்?

சீமானின் நெய்தல் படை - வாயிலடிங்க, வாயிலடிங்க…

அது இந்தியன் ஆமியின் நெய்தல் பிரிகேட்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kadancha said:

இதில் மேற்கை  விட ருசியா நேர்மையாக இருக்கிறது, மேற்கு இந்த pmc என்பது பொறுப்பை அரசிடம் இருந்து தட்டி கழிக்க.   (பிரித்தானிய கீனிமீனி தொடங்கியதில் முக்கிய நோக்கம் ஒன்று).

மருவளமாக, சட்டத்தின் அடிப்படையில், வல்லுனர்களின் கருத்து, புட்டினை வாக்னரின் யுத்த குற்றசத்துக்கு பொறுப்பாக்கலாம்  என்று.

ஆனா, US (மேற்கை) ஐ செய்ய முடியாது, ஏனெனில் குழுக்கள் pmc என்று. 

ஆனால், நீங்கள் இணைத்த கட்டுரையில் இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது? இப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது:Subcontracting high-risk and experimental operations in fragile states gives the Kremlin a screen of plausible deniability and avoids public scrutiny of any combat losses.

"Private military companies are illegal in Russia, which gives the Kremlin the ability to crack down on the group should it choose to do so. It also creates an accountability vacuum for victims of atrocities allegedly carried out by the network’s operatives. 
தமிழில், சுருக்கமாக: பொறுப்புத் துறப்பு/பொறுப்பேற்க மறுத்தல்

நீங்களோ, புரின் வக்னரின் குற்றங்களுக்குப் பொறுப்பாக்கப் படலாம், ஆனால், அமெரிக்கா பிளாக்வாரருக்கு பொறுப்பாக முடியாத நிலை என்கிறீர்கள். எதை நிறுவ முயல்கிறீர்கள் என்பதே தெளிவில்லாமல், சும்மா உங்கள் அபிப்பிராயங்களை தரவுகள் போல யாழில் பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

குறைந்த பட்சம், அந்த அபிப்பிராயங்களுக்கு அடிப்படையான தரவுகளை முன் வையுங்கள். யாழ் வாசகர்களை முட்டாள்களாக கருதாமல் - respect your audience!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இங்கே யாராவது பழைய சாரணர், குருளைகள் உள்ளீர்களா?

 

நான் சாரணர் படையில் இருந்தனான், அது மட்டுமல்ல: சாரணர் துருப்புத் தலைவர் சுந்தரேசன் அண்ணை நாவற்குழிக்கு ஒரு பணிக்குச் செல்லச் சொல்ல மறுத்து வேறொரு பகுதிக்குச் சென்றேன், இதுவும் mutiny தான், நானும் றௌடி தான்!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

நான் சாரணர் படையில் இருந்தனான், அது மட்டுமல்ல: சாரணர் துருப்புத் தலைவர் சுந்தரேசன் அண்ணை நாவற்குழிக்கு ஒரு பணிக்குச் செல்லச் சொல்ல மறுத்து வேறொரு பகுதிக்குச் சென்றேன், இதுவும் mutiny தான், நானும் றௌடி தான்!😂

சுந்தரேசன் அண்ணா, நாவற்குழி பாலத்தில் பள்ளம் கிண்டி, குப்பை லாரியால் மறித்தவரா🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

It also creates an accountability vacuum for victims of atrocities allegedly carried out by the network’s operatives. 

 

சொல்ல வந்தது - சட்டவிரோதம் பற்றி  - இது யதார்த்தத்தை சொல்லி இருக்கிறார்.

பிபிசி யம் 2023 (இதை வசித்து இருக்கிறேன்) அதையே சொல்கிறது. pmc ஐ உருவாகும், ஒழுங்கு படுத்தும் சட்டம் இல்லை என்று.  ஆனாலும் பிபிசி சொல்லி இருக்கிறது pmc என்று, முரணாக.

மற்றவை அவரின் பார்வையில் கருத்துக்கள். முக்கியமாக அந்த பார்வை மேற்கின் அனுபவ பார்வையான pmc  அடிப்படையில்.  

அனால், 2021 இல் அவர் எழுதியது, அந்த நேர புரிதலுக்கு சரியாக இருக்கலாம். அவ்வளவு தான் தெரிந்தது வெளியில்.     அதாவது PMC என்று கருதுகோள் அடிப்படையில்.

அனால், நான் சொல்வதை விட, சட்ட  வல்லுனருக்கு மிகவும் கூர்மையான தகுதி காரணங்கள் இருக்க வேண்டும் வாக்னர் மீது சாட்டப்பட்ட யுத்த குற்றங்களுக்கு  புட்டினை பொறுப்பாக்குவதற்கு.

வாக்னர் pmc தான்  என்றால், எப்படி சட்ட வல்லுநர்கள் இப்பொது, jUNE 2023 இல், அந்த சட்டக்  கருத்தை முன்வைத்தார்கள் என்பதை அறிந்து சொன்னால் உதவியக இருக்கும்.

அதே மேட்ற்கு சட்ட வல்லுநர்கள், மேற்கு, குறிப்பாக US ஐ pmc என்பதால் கருத்தில் கூட பொறுப்பு ஆக முடியாது உள்ளார்கள் என்பதையும்  

 

36 minutes ago, Justin said:

யாழ் வாசகர்களை முட்டாள்களாக கருதாமல்

ஒரு போதுமே எனது பதிவில் emojis ஓ  அல்லது மட்டம்  தட்டுவதோ இல்லை.

எதிர்ப்பேன், ஆமோதிப்பேன், விலத்துவேன், இல்லை ஒப்பிட்டளவிலான பார்வை முன்வைப்பேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியப்பிரமாணம் மிக மிக , மிக முக்கியம், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு 

வேறு எப்படி விளக்குவது  என்று புரியவில்லை 

சாதாரண  அணி விளைட்டுக்குப் போட்டிகளில் , குறிப்பாக துடுப்பாட்டம் (நான்  அறிந்தது), .... 

முறைசாரா அணி :

எனது அணி வெல்வதற்கு என்னாலான அனைத்தையம் செய்வேன் என்றும் , அணித்தலைமைக்கு நம்பிக்கையாக (அல்லது  ஆணைக்கு சுய விருப்பங்களை கடந்து கட்டுப்படுவேன்) என்று   என் இரத்தம் மீது சத்தியம் எடுக்கிறேன்     


முறையான கல்லூரி, ஊர் அணிகள், தேசிய அணிகள் எடுப்பது:
  

...... எனது உடல், பொருள், ஆவி மீது சத்தியம் எடுக்கிறேன்.

என்ற பொருள் பட வசன அமைப்பு இருக்கும்.

அணியில் உள்ள  எல்லோரும் , அணித்தலைவர் கை மேலே , அதன கீழ்  உப அணித்தலைவர்  கை அடுத்து  அணி உறுப்பினர்களின் கை என்று  ஒன்றன் மேல் ஒன்றாக கைகளை  குவித்து சத்யபிரமாணத்தின் பின்பு தான் 

அணியின் வியூயகம் விவாதிக்கப்படும்.

இது ஒரு  விவாதமாக ஓர்மத்தை ஏற்படுத்துவதற்கும் கூட.

அணியின் வெற்றி குறிக்கோள் என்றால், நிச்சயம் அது  இனம் புரியாத ஓர்மத்தை ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்யபிரமாணம் எல்லாம் அணியிலும் எடுக்கப்படும்.

ஒரு இராணுவத்தில்,

ஒரு போராளி குழுவில்,

ஒரு கடற்கொள்ளையர் குழுவில்,

ஒரு கூலிப்படையில்,

ஒரு விளையாட்டு அணியில்,

ஒரு சாரணர் அணியில்,

ஏன் நண்பர்கள் மத்தியில் கூட எடுக்கப்படும்.

கிறிஸ்தவ திருமணத்தில் கூட எடுக்கப்படும்.

இவ்வளவு ஏன், பிரிதானிய குடியாக முன், பிரிதானிய முடிக்கு விசுவாசமாக இருப்பேன் என சத்யபிரமாணம் எடுக்க வேண்டும்.

இப்படி பார்த்தால் பிரிதானியவின் naturalised citizens எல்லாரும் பிரிதானிய அரச படையினர் 🤪.

மேஜர் கோசான்…கேணல் கிருபன்… பிரிகேடியர் பெருமாள்…பீல்டு மார்ஷல் நாத முனி🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் army, military எனற பதங்கள் இருக்கிறது 

army of ants, army of volunteers  போன்ற  பிரயோகமும் இருக்கிறது (army ants என்பது வேறு - அப்படியான எறும்பு வகைகள்)

rss army ஆ என்றால் ஆம் என்பது தான் நான் விளங்கி கொள்வது, அதாவது ஒழுங்கமைப்பட்ட  குழு.

rss military ஆ என்றால் இல்லை என்பது (இது வரையில்)  தான் நான் விளங்கி கொள்வது.

மிலிட்டரி (இராணுவம்) என்பது சட்டத்தின் அடிப்படையில் (படை பலத்தை பிரோயோகிப்பதற்கு) அரசால் அதிகாரம் வழங்கப்பட, பயிற்றுவிக்கப்பட்டு, ஒழுங்கப்பட குழு (army)  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

நீங்களோ, புரின் வக்னரின் குற்றங்களுக்குப் பொறுப்பாக்கப் படலாம், ஆனால், அமெரிக்கா பிளாக்வாரருக்கு பொறுப்பாக முடியாத நிலை என்கிறீர்கள். எதை நிறுவ முயல்கிறீர்கள் என்பதே தெளிவில்லாமல், சும்மா உங்கள் அபிப்பிராயங்களை

நான் சொல்லவில்லை. மேற்கு சட்ட வல்லூர்களே சொல்கிறார்கள்.

guardian, reuters இல் வாசித்த நினைவு.


சுருக்கமாக சொல்லவந்தது, pmc என்றால் மேற்கு அரசுகளை பொறுப்பாக முடியாது, அதாவது மேற்கு அரசுகள் மறுக்கும் இடைவெளி, பிணைப்பை மறைக்கும் இடைவெளி மிக பெரிது.

வாக்னர்  ஐ அதே pmc என்று வகைப்படுத்தி விட்டு, பின்பு எவ்வாறு வாக்னரின் மீது சாட்டப்பட்ட யுத்த குற்றங்களுக்கு புடினை பொறுப்பாக்கும் சட்ட வரம்பு (threshold) உருவாகிறது?

எனவே, வாக்னர் pmc அல்லாத அமைப்பு, அது அரச அங்கம்.

(அனால், மேற்கில் உள்ளதும் அரசு அங்கத்தின் நீட்சியே தவிர, சட்டப்போர்வையை மேற்கு உருவாக்கி வைத்து இருக்கிறது, மறுப்பதற்கும், மறைப்பதற்கும்  )      

பின்னோட்டம் 

பொதுவாக அரசுகள் இது போன்ற விடயங்களில் பிணைப்பை மறைக்கும்,   மறுக்கும் இடைவெளியை எவ்வளவு உருவாக்க முடியுமோ, அவ்வளவு உருவாக்கும். 

fp இல் சொன்னது போல deniability ஐ உருவாக்குவது.

ருஷ்யா, uk, us .. போன்றவை செய்வது  அதுதான்.        
   
மேற்கு ஒரு படி மேலே போய் - pmc ஐ சட்டபூர்வமாகி வைத்து இருக்கிறது. தட்டி கழிக்க வசதியாக.  

அதை தான் ருசியாவும் செய்ய முனைகிறது.

உண்மையில், pmc  என்பது இவ்வளவு ஆயுதங்களுடன் இருக்க எந்த அரசாவது விடுமா?  

அதனால், pmc  என்பது ஓர் மேற்கு (இப்பொது ருசியாவும்) அரசுகள் தட்டிக் கழிக்க  சட்ட பொறியே தவிர,  தேவை என்றால் அரசு இரகசியமாக கட்டளை இடும்.  

(சில நன்மையில் முடிந்து  இருக்கிறது - 2004 இல் ருவாண்டா இல் US pmc இனப்படுகொலை ஆயத்தங்களை, US  அரசாங்கத்தின் கட்டளை படி தடுத்து நிறுத்தியது)

உ.ம். கீனிமீனி தமிழருக்கு எதிராக கொண்டு வந்தது சொறி சிங்களம் அல்ல. கொண்டு வந்தது UK - சிங்களம் தர்மருக்கு செய்யப்போகும் அழிவில், அட்டூழியத்தில்  இருந்து uk இன்  பங்கை மறைக்க.

ஆகவே, pmc என்ற (சட்ட) வெளிப்போர்வையை தொடக்கி வைத்தது மேற்கு.

(இதனால் வாக்னர் மூலம் ருசியா அரசை குற்றம் சாட்டுவதை மேற்கு அரசுகள்  சிலவேளையில் விரும்பாது - ஏனெனில் அது சட்ட முன்னோட்டத்தை உருவாக்கி விடும் - இது தான் வாக்னர் ஐ  pmc என்று மேற்கு ஊடகங்கள் அவர்களுக்கு தெரியாமல் அரச பிரசாரத்தை முன்னெடுப்பதாக இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது).       

இதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://dictionary.cambridge.org/dictionary/english/army
 

army எனும் ஆங்கில சொல்லுக்கான பொருள் மேலே.

ஒரு நாட்டின் இராணுவம் என்ற பெயரிலும்,

ஒரு குறித்த செயலில் ஈடுபடும் ஒரு பெரும் தொகுதியினர் என இரு அர்த்தங்கள் இந்த சொல்லுக்கு இருப்பது வெளிப்படை.

ஆனால் இந்த அர்த்த மயக்கம் வருவதற்கு, இங்கே நாம் வாக்னர் Army யா இல்லையா என ஆங்கில சொல்லை பாவித்து இதுவரை விவாதிக்க வில்லை.

இங்கே மிக தெளிவாக வாக்னர் அரச படையா (மேலே சொன்னதில் முதலாவது அர்த்தம்), அல்லது கூலிப்படையா என்பதே விவாதமாக இருந்தது. இருக்கிறது.

 

நான் நினைக்கிறேன் - மேலே நான் கூறிய பிரித்தானிய குடி உரிமை எடுக்கும் போதும் சத்தியபிரமாணம் செய்யபடுகிறது என்ற உதாரணம், கடைசியாக சத்யபிரமாணம் செய்யும் அனைவரும் அரச படையினர் இல்லை என்பதை விளக்கி விட்டுள்ளது.  The penny has finally dropped.

இப்போ நடப்பது தனது தர்க்கம் பிழை என்பதை ஏற்க முடியாமல் - army என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் முயற்சி🤣.

புட்டினுக்கு மட்டும் அல்ல, கஞ்சா-கப்ஸா கருத்துக்களை யாழில் எழுதுவோருக்கும் ஒரு face saving, off-ramping தேவைப்படுகிறது 😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஒருவர், மேற்கு சொல்லும் pmc என்பதை (அவைகள் நடத்தப்படும் விதத்தை)  மனதில் பதித்து, அதன் மூலம் வாக்னரை விளங்கி, வாகனரும் அது போன்றதே என்று விளக்கம் கொடுத்து விட்டு, அவரின் புரிதலில்உள்ள பிழையை ஏற்றுக்கொள்ள முடியாமல்,

சத்தியப்பிரமாணம் பற்றி அறவே தொடர்பு இல்லாத காரணத்தை / வாதத்தை  முன்வைத்து (உண்மையில் அதை பகிடி என்றே நினைத்தேன்,  அது ஆழ்ந்தே அவர் வைத்து இருக்கிறார் என்பதை பார்க்கும் போது ... என்னவென்று சொல்வது ) 

ஒவ்வொரு சத்தியபிரமாணமும் (வசனத்தில் கூட), ஏற்கும்  பொறுப்பில், சுமத்தப்படும் பொறுப்பில் , எதை பொறுப்பாக , காணிக்கையாக வைத்து சத்தியபிரமாணம் செய்யப்படுகிறது,   வேறுபட்டது, குறிப்பிட்ட உறவு, அமைப்புடன், குறிப்பிட்ட பொறுப்புகள், எந்த நிலையில் அந்த பொறுப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கூட அறியாத  கருத்தை முன்வைத்து என்பதை கூட அறியாத ஒருவரை என்னவென்று சொல்வது?

மேலே சுருக்கமாக சொன்ன சத்தியப்பிரமாணம் பற்றிய விளக்கத்தை கொண்டு, செய்வது எல்லாம் சத்திய பிரமாணம் அல்ல என்பதும் புரிய வேண்டும்.

நான் வாக்கினருக்கு சொன்னதை கூட, சிங்களம் - கீனிமீனி உ.ம். வழியாகவும், தேசிய இராணுவ சத்தியபிரமாணத்தை  (விளங்காமல்), அதுவும் குறிப்பாக சண்டையில் இறக்கப்படும் எந்த வேறு (கூலிப்) படை என்றாலும் எடுத்தே இறக்கப்படுவது என்று சொல்லியும்,  மற்ற சத்தியபிரமணத்தோடு ஒப்பிட்டு, அதை கொண்டு வாதம் செய்பவரை என்னவென்று சொல்வது?     


ஒரு அரசின் ஆளுமை வட்டத்துக்குள்  இருப்பது எல்லாமே அந்த அரசின் அங்கம், பிணைக்கப்பட்டது. அனால், சத்யமிபிராமனங்கள், சில நாடுகளில் இராணுவ  சட்டங்கள், சிவில்  சட்டங்கள் பிணைப்பின், பொறுப்பின்  ... தன்மையை  வரையறுக்கிறது.

இதில் இராணுவ சத்திய பிரமாணமே - மிகக்  கூடிய பிணைப்பையும், பொறுப்பையும் சுமத்துவதும் ....  தன்மை கொண்டது.

இது தெரியாமல், (சிவில்) பிரசவுரிமை சத்திய பிரமணத்தோடு, இராணுவ சத்யபிரமானதை ஒப்பிட்டு வாதம் முன்வைத்து தமக்கு தாமே முடி சூட்டிக் கொள்பவரை என்னவென்று சொல்வது?    

இதில்  இரண்டு விடயங்களை தெளிவாக காட்டுகிறது 

இப்படி சொல்பவர்களுக்கு எந்த சத்தியப்பிரமாணம் பற்றி புரிதல் அறவே இல்லை.

மற்றது, சத்தியபிரமாணத்தை அவர்கள் மதியில் உள்வாங்கி  கொள்ளும் விதம் - சும்மா ஒரு  காதால் கேட்டு மற்ற காதல் விடுவது போன்றதாக எடுப்பது.

எதற்குள்ளும் ஒழிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக, இதுவரை நான் சொன்னதில் இருந்து, மேற்கில் உள்ள pmc என்பதும் அரச அங்கம், அனால் மறுப்பதத்திற்கும், மறைப்பதத்திற்கும் சட்டப் போர்வை வழங்கப்பட  அரச அங்கம்.

அதை அவரவர் அவரரின் புரிதலுக்கு ஏற்ப சொல்லலாம் - அரச படை, army, para military (ஆம் அரச அங்கமாக இப்போதும் தென்னமெரிகாவில் இருக்கிறது, குறிப்பாக கொலம்பியாவில்)        

இப்படிக உண்மையில், முடியாட்சி இருந்த பொது இருந்தது. அதாவது, குழுக்கள், படைகள் அரசுக்கு உரியவை , சமாதான நேரத்தில் அவை வேறு தொழில் செய்யும்,  தேவை ஏற்றப்படும் போதே (பொதுவாக யுத்தம், சண்டைக்கு) அரச ஊழியத்துக்கு அமர்த்தப்படும். அவை எந்த தொழில் ஈடுபட்டு இருந்தாலும் அவற்றை விட்டு விட்டு அரச ஆணைக்கு கட்டுப்பட வேண்டும்.  

அனால், ரஷ்யா (ஈரான், கொலம்பியா) விடயத்தில் முழுச்செலவையும் அரசு செய்கிறது என்பதால், அவை நிரந்தர அரச அங்கம் ஆகிறது.

அனால், ஒழுங்கு முன்னேற்ற சீர்திருத்தம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் மேற்கு, முடியாட்சி படை தன்மையை கொண்டுவந்துள்ளது - ஏனெனில் மறுப்பதற்கும், மறைப்பதற்கும் என்ற வசதிக்காக.   

இதன் மேல் கூலிப்படை ஏற்பது அவரவரின் விருப்பம். என்னிடம் நேரம் இல்லை .

அனால், இதன் மூலம் சத்தியப்பிரமாணம்.  

இதை சொல்ல மறந்து விட்டேன்.

முன்பேர சொல்லி இருந்தேன், யதார்த்தம், வரலாறு, நடைமுறை என்பவற்றை அடிப்படையாக வைத்தே சொல்லுகிறேன் என்று.  

வசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.