Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியார் ராணுவம் என்றால் என்ன? சோழர்களும் பேரரசை விரிவாக்க அதை பயன்படுத்தினார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நாம அகராதி விற்பனர்.

அண்ணர் ஐநாவில் பேர் போன இராஜதந்திரி🤣.

இவர் சொன்னா அது இராஜதந்திர வார்த்தை பிரயோகம்🤦‍♂️. இவர் இல்லை என்றால் சும்மா பிரயோகம்.

சும்மா அவரவர் மனதில் தோன்றும் வியாக்கியானத்தை எல்லாம் - இராஜதந்திர வார்த்தை - என சொல்லி விட்டால் யாழ் கள அப்பாவி கோவிந்தனுகள் நம்பிவிடுவார்கள் என நினைத்து பேய்பட்டம் கட்ட முடியாது.

இப்படி பல கஞ்சா, கப்ஸா அவியல்களை யாழ்களம் பலதடவை கண்டுள்ளது.

Wagner ரஸ்யாவின் proxy என மேற்கு நேரடியாகவே சொல்கிறது. குற்றம் சுமத்துகிறது. ரஸ்யாவோடு இந்த விடயத்தில் “இராஜதந்திரமாக” சொல்லாமல் சொல்லும், implied சொற்பிரயோகம் செய்யும் தேவை மேற்குக்கு இல்லை.

வாக்னர் = ரஸ்யாவின் proxy படை = கூலிப்படை = அரச படை அல்ல.

 

  • Replies 85
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கீழ்வரும் பதிவு எல்லோருக்கும் (குறிப்பாக Justin கேட்ட  கேள்விக்கு இதுவும் ஓர் பதிலாக அமைகிறது)

சர்வதேச உறவு, ராஜதந்திரம் யதத்தம், நடைமுறை அடிப்படையில் எல்லா அரசாலும்  அணுகப்படுகிறது, கையாளப்படுகிறது என்ற மிக வெளிப்படையான யதார்த்தம் தவிர்த்து , அகராதியை வைத்து, ரஷ்யா சொல்வதும் , US / மேற்கு சொல்வதும் ஒரு கருத்து என்று பிம்பம் கட்டி, proxy என்ற பத பிரோயகம் காரணமாக,   அகராதி உலகில் கனவு கனவு காண்பது அவரவரின் விருப்பம்.. 

 எந்த ராஜதந்திர அறிவுப்பு, வசனத்தை பார்க்காமல் கதைக்க கூடாது , proxy எனும் சொற்பிரயோகத்தை  வைத்து ருஷ்யா சொன்னதையும் பார்க்காமல், us / மேற்கு சொன்னதையும் பார்க்காமல், (பொதுவாக) அதை எவரும் வசதியாக வரித்து கொள்ள கூடாது. 

ரஷ்யா வெளிநாட்டு அமைச்சர் கூறியதாக கார்டியன் பத்திரிகை பிரசுரித்திருக்கும் வசனம் இது 

(இணையத்தில்: https://www.theguardian.com/world/2022/apr/26/russia-accuses-nato-of-proxy-war-in-ukraine-as-us-hosts-crucial-defence-summit).

Sergei Lavrov told Russian state media: “Nato, in essence, is engaged in a war with Russia through a proxy and is arming that proxy. War means war.”

இதன் ஏறத்தாழ தமிழ் மொழிபெயர்ப்பு:

"நேட்டோ சாராம்சமாக, (உக்கிரைன் என்ற) ஓர் பதில் தரப்பு ஊடக,   ருசியாவுடன் யுத்தத்தில் ஈடுபட்டு  உள்ளது, யுத்தம் என்றால் யுத்தம் தான்"

இங்கே உக்கிரைன்  என்று ருசியா வெளிநாட்டு அமைச்சர் அந்த கூற்றில் குறிப்பிடவில்லை. அனால், அவர் சொன்னது ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில், எனவே அது முதலில் குறிபிடப்பட்டு இருக்கும்.

அமெரிக்கா சொன்னது: 


"A proxy military force of the Kremlin, the Wagner Group has carried out combat operations around the world, including Russia’s brutal war in Ukraine. Wagner has also participated in a scheme to procure weapons for its operations in Ukraine, using false end-use certificates in Mali."


(இணையத்தில்: https://home.treasury.gov/news/press-releases/jy1581)

இங்கே "A proxy military force of the Kremlin" என்ற பகுதி கூற்றே இங்கே அக்கறைக்கு உட்பட்ட விடயம்.

இதன் ஏறத்தாழ தமிழ் மொழிபெயர்ப்பு: 

"(வாக்னர்) என்பது கிரெம்ளின் இன் பதில் இராணுவ படை."


எனது விளக்கம்:

ருசியா வெளிட்டமைச்சர் சொன்னது யதார்த்தம். அதில், இரு சம நிலையுள்ள (status) இரு அரச அமைப்புகள்  இருக்கிறது (nato, உக்கிரைன்) - ருசியா அமைச்சர் சொல்வது nato உக்கிரனை ஐ அதற்கு பதில் தரப்பாக   தரப்பாக 
   
மிகவும் தெளிவானது.

US சொன்னதில், "A proxy military force of the Kremlin"

முதலில் தெளிவற்ற தன்மை இருப்பது. அனால், அந்த தன்மையை வேண்டும் என்றே உருவாக்கி உள்ளது என்றே நான் நினைக்கிறன்.

முதலில், US வாகனருக்கு military force என்ற நிலையை (status) வழங்குகிறது. military force என்பதை அரசு தான் உருவாக்க முடியும், அங்கீகாரம், அதிகாரம் வழங்குவது, நிர்வகிப்பது, அது அரசின் அங்கம்.

இரண்டாவது, ஒரு அரசுக்குள், அரச அங்கத்திலும் (அதாவது அரச படையிலும்)  குறைவான நிலையுள்ள (status) ஓர்  படை அரசின் பதில் படையாக இருக்க முடியாது (வெளியில் இருக்கலாம், யதார்த்தத்தில் னேகமாக நடைபெறுவது)

US (உள்ளார்ந்த) கருத்தாக சொல்லி இருப்பது, ருசியா  (மரபுவழிக்கு படை அணிகளுக்கு, இதை சொல்லவில்லை, அனால் வாக்னரின் அளவு, ருசியா மரபுவழி இராணுவத்துடன் ஒப்பிடும் பொது, ) பதிலாக , அதே நிலை  (military force, status) உள்ள அர படை (அதாவது military force) வாக்னர்.

இதில் உள்ளார்ந்த விளக்கங்களை, யதார்த்தமே உருவாக்குகிறது 

(இதையே, army , இராணுவம் பற்றி கதைக்கும் பொது நான் சொல்லியது - அதையும் விளங்காமல் வேறு எதோ சிலரால் சொல்லப்பட்டது).

எந்தவொரு அடிப்படை ராஜதந்திர, சர்வதேச, அரச உறவுகள், அதன் தன்மை   பற்றி அறிந்தவர்களுக்கு US  சொல்லி இருப்பது என்னவென்று தெரியும்.

எவருக்கும் சந்தேகம் ஆயின், வேறு உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கவும். 

(சுளை இருக்க பழத்தை விழுங்கும், பழம் தின்று கொ.. போட்ட அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு இங்கே அகராதியை வைத்து பாடம் எடுக்கப்படுகிறது)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

ருசியா வெளிட்டமைச்சர் சொன்னது யதார்த்தம். அதில், இரு சம நிலையுள்ள (status) இரு அரச அமைப்புகள்  இருக்கிறது (nato, உக்கிரைன்) - ருசியா அமைச்சர் சொல்வது nato உக்கிரனை ஐ அதற்கு பதில் தரப்பாக   தரப்பாக 


திருத்தம்: ருசியா வெளிட்டமைச்சர் சொன்னது யதார்த்தம். அதில், யதார்த்தத்தில் இரு சம நிலையுள்ள (status) இரு வேறுபட்ட அரச அமைப்புகள்  (nato, உக்கிரைன்) - ருசியா அமைச்சர் சொல்வது nato உக்கிரனை ஐ அதற்கு பதில் தரப்பாக   தரப்பாக பாவித்து ருசியாவுடன் யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

Military Force என்றால் ஆயுதப்படை. கனரக ஆயுதம் சகிதம் போரிடும் குழுவை “வெண்ணிலா கபடி குழு” என்றா சொல்வார்கள்.

இங்கே தாமே முழுவதும் புரிந்து கொள்ளாத ஆங்கில வார்த்தைக்கு தாமாக நினைக்கும் அர்த்தங்களை கொடுத்து, அதை சுட்டியவுடன் “அது அகராதி அர்த்தம், இராஜதந்திர அர்த்தம் வேறு” என தம் மனதில் எழுந்ததை எந்த ஆதாரமில்லாமலும் கூறப்பட்டது.

ரஸ்யாவும் proxy என்ற வார்த்தையை பிரயோகித்துள்ளதை நான் முன்பே எழுதிவிட்டேன்.

இங்கே ரஸ்ய அமைச்சர் லெவெரொவும், அமெரிகாவும் proxy என்பதை ஒரே அர்த்தத்தில்தான் பாவித்துள்ளன.

லெவெரோவ்- நேட்டோ தான் யுத்தம் செய்யாமல், அந்த வேலையை உக்ரேனிடம் கொடுத்து, புரொக்சி யுத்தம் புரிகிறது.

அமெரிக்கா - ரஸ்யா சில இராணுவ நடவைக்கைகளில் தன் அரச படைகளை ஈடுபடுத்தாமல் - புரொக்சி படையான வானதை ஈடுபடுத்துகிறது.

ஒரே அர்த்தம்தான்- நான் சொன்ன அர்த்தம். அகராதி அர்த்தம்.

வாக்னர் = கூலிப்படை = அர்ச படை அல்ல.

இதில் உள்ளார்த்தம், மறைமுக அர்த்தம், இராஜதந்திர அர்த்தம் என போட்டு சலாப்புவது, கருத்தாளரின் புரிதல் இன்மை, அல்லது புரிந்தும் வரட்டு கெளரவத்துக்காக விதண்டவாதம் என்பவற்றால் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுஞ்சாங்கிடையாகக் காலில் விழலாம் என்றிருக்கிறேன்! தெய்வமே, விட்டுரு, என்னால் முடியவில்லை!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நான் நெடுஞ்சாங்கிடையாகக் காலில் விழலாம் என்றிருக்கிறேன்! தெய்வமே, விட்டுரு, என்னால் முடியவில்லை!😂

🤣🤣🤣

இந்த “இராஜதந்திர மொழி” டெக்னிக் அப்படியே கிளிஜோசியம் பார்க்கிறவன் பாவிக்கிற டெக்னிக்.

கிளி இராமர் படத்தை எடுக்கிறது….

1. கல்யாணம் ஆன ஆண்/பெண் - உங்களுக்கு ராமர் போல் மகன் பிறப்பான் என்கிறது கிளி

2.தீராத  கவலையில் இருப்போர் - ராமன் கால் பட்ட அகலிகை சாபம் போல் உங்கள் துன்பம் தீரப்போகிறது

3. கல்யாணம் ஆகாத பெண் - ஶ்ரீ இராமசந்திர மூர்த்தி போல் உங்களுக்கு கணவர் வரப்போறார்

4. கல்யாணம் ஆகாத ஆண் - ராமர் கையில் வில்லை பார்த்தீர்களா? விரைவில் நீங்கள் சிவ தனுசை உடைத்து சீதையை அடைவீர்கள் 

5. வெளிநாடு போக விரும்புவோர் - ராமன் கடல்கடந்து போனது போல் உங்களுக்கும் ஒரு யோகம் வருகிறது….

அதே கிளி…அதே ராமர் படம்…

ஆனால் கிளிஜோசியக்காரனின் கற்பனையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்த “இராஜதந்திர மொழி” டெக்னிக் அப்படியே கிளிஜோசியம் பார்க்கிறவன் பாவிக்கிற டெக்னிக்.

கிளி இராமர் படத்தை எடுக்கிறது….

5. வெளிநாடு போக விரும்புவோர் - ராமன் கடல்கடந்து போனது போல் உங்களுக்கும் ஒரு யோகம் வருகிறது….

இங்கே வெளிநாடு போக விரும்புவோர் என்பது  ரஷ்யாவுக்கோ சீனா, பெலருஸ்,  ஈரானுகக்கு போக விரும்புவோர் கிடையாது. மேற்குலகநாடுகளுக்கு போக விரும்புவோரிடம்  ராமன் கடல்கடந்து போனது போல் உங்களுக்கும் ஒரு மிக பெரிய யோகம் வருகிறது என்று ஜோசியகாரர்கள்  சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில், இங்கே வாதம் எப்போதோ முடிந்துவிட்டது, சத்தியபிரமணாத்தில் வாதம் அதுவகாகவே முறிக்கப்பட்டது  முதல்  தடவை. (அதில் எல்லா சத்யபிரமாணங்களும் ஒன்று அல்லது சாராம்சம் ஒன்று என்ற வாதத்தை நான் ஆரம்பவிக்கவில்லை). 

அகராதியை இறுதி தடவையாக கொண்டுவந்து  சாதித்த போது   எந்த விடயத்தை  பற்றி சொல்லப்படுகிறது  என்பதின் அடி  நுனி கூட தெரியவில்லை என்பது வெளிச்சம், அவற்றை சாதாரணமாக சொற்கள், கிளிச்சாத்திரத்துடன் ஒப்பிட்டு. 

முன்பே சொல்லி இருந்தேன், சூழ்நிலைகள், யதார்த்தங்கள், நடைமுறைகள் , மரபுகள் போன்றவை ஆக குறைந்தது ஒப்பிட்டளவிலான ராஜதந்திர கருத்துக்களை  மாற்றும். இது பொது அவதானம். அப்போது நானும் ருசியா வெளிநாட்டமைச்சர் சொன்னதையும் பார்க்கவில்லை, US சொன்னதையும் பார்க்கவில்லை.   

மற்றது, நிலை (status) பற்றிய புரிதல் (ஆனால், இதை முன்பே உணர்ந்து கொண்டேன், சத்யபிரமாணத்தில். அதையே எல்லாம் ஒன்று, பின் சாரத்தில் ஒன்று, அதுவும் வாதத்துக்காக, (அரசு, ராஜதந்திரம் போன்ற விடயங்களில்) status இன் முக்கியத்துவம், ஏற்படுத்தும் தாக்கதின் புரிதலை  எதிர்பார்க்க முடியாது.).

அதை (சுட்டிக்கட்டமால்),   தெரிந்து கொள்ளவும் என்று  சொன்னால், அகராதி கடந்து, கிளிச்சாத்திரம் ஊடக விளங்க US சொல்வதை விளங்க முற்படுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது.  அவர்கள், அந்த உலகில் இருக்கட்டும். 

இனி பதிவது, எல்லோரும் பொதுவாக அறிந்து  இருக்க வேண்டியது.

(எனது அடுத்த பதிவின் பின், US க்கு ஒரு (சொற்) தெரிவும் அறியாத பால்குடி குழந்தையாக, US அதை, இங்கே சொல்லப்படுவது போல சும்மா, ஒன்றும் அறியாமல்,   சொல்லி இருக்கிறதா அல்லது ஓர் குறித்த கருத்தை உருவாக்குதற்கு சொல்லி இருக்கிறதா என்பதை நீங்களே (எல்லோரும்) தீர்மானிக்கலாம்.)   
(US சொல்லியது : "A proxy military force of the Kremlin")

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாதம் எப்பவோ முடிந்து விட்டது.

எப்போது ரஸ்யாவே வாகனர் தமது அரச படை இல்லை என சொல்லி உள்ளது என நிறுவப்பட்டதோ - அத்தோடு விவாதம் முடிந்து விட்டது.

இரெண்டு பக்கமாக நீண்டது கிளிஜோசியம்🤣.

இங்கே என்னமோ தான் பெரிய இராஜதந்திரி போலவும், அவருக்கு மட்டும்தான் ரஸ்யா, அமேரிக்காவின் இராஜதந்திர மொழி விளங்கும் என்பதும் போலவும் கஞ்சா, கப்ஸா கதைகளை அவிழ்த்து விட்டதால் நேரம் செலவழித்து அதை சுட்டும் படி ஆகிற்று.

இராமர் படம் - அமெரிக்கா, மற்றும் ரஸ்யா சொன்னது

கிளி ஜோசியம் - அதற்கு கருத்தாளர் கொடுக்கும் கற்பனா-“இராஜதந்திர”-வியாக்கியானம்.

 

  • கருத்துக்கள உறவுகள்


நான் ஒரு போதும் என்னை பெரிய 'எதுவும்' என்று சொல்லவில்லை. 

எந்த அறியாமையையும் வேண்டும் என்று நான் சுட்டிக்காட்டவில்லை.

செய்யத்தவர்கள் தாம்  செய்வதை மற்றவர் மீது சுமத்துவது - சொல்லுவது  ஒன்றில்  அதுவாக முறியும் போது அல்லது  முன்வைக்கப்படும் காரணங்களால் நிலைக்காது போன போது.

மற்றவர்களை நுனிப்புல் .. என்று சொல்லி தம்மை பெரிது என்று காட்டி ...

குறித்தவரின்  பதிவுகளில் இருந்து

 

1. ருஷ்யா சொன்னதை நம்பி அப்படியே ஏற்றுக் கொண்டு, அதை இங்கே வேறு எவரும் யதார்த்த, நடை முறை  மறுக்க முடியாது என்று ஒளிந்திருந்து வாத அம்பு எய்ய காத்திருந்து, அதில் பிறழ்வு. ஏனெனில், ரஸ்சியா மறுக்கும் சூழ்நிலைகளை ஆராயாது. ருசியாவின் plausible deniability ஐயும் சொல்லி, சொன்னவரே, ருசியா, வாக்னரருக்கும் அதுக்கும் தொடர்பில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது என்ற நிலைக்கு கொண்டு வந்து ...

 

2. சத்தியப்பிரமாணம் - என்னவென்று தெரியாமல் .... எல்லாம் ஒன்று.. ஒரே சாராம்சம்  ... செய்வது  எல்லாம் சத்தியப்பிரமாணம் என்று ...   (இதில் வெறுத்தும்  போனேன்; ஆச்சரியமும்  அடைந்தேன்) 

 

3. Armed  Forces  Covenant - அதுவும் எதுக்கு என்று தெரியாமல் - அதையும் இழுத்து

 

4. நடைமுறையில், யதார்த்தத்தில், ருசியா, வாக்னர் இக்கட்டான நிலைகளில் நடந்து கொண்டதை, பல 
கோணங்களில், அடிப்படை இராணுவ உறவுகள், நடத்தைகள் போன்றதை கொண்டு  ஆராயாமல்

 

5. இங்கே இருப்பவர்களை விட துல்லிய  தகவல் பெறக் கூடிய fp சொல்லுவதையும் (இணைத்தும்)  ஆராயாமல்

 

6. proxy என்பதை கேள்விப்பட்டு - ருஷ்யா சொன்னதையும் பாராமல், us சொன்னதையும் பாராமல்,  பிம்பம் கட்டி, அதுக்கு அகராதியையும் துணைக்கு எடுத்து ..  

 

7. சர்வதேச, ராஜதந்திர, அரசு விடயஙகளுக்கு, யதார்த்தம், நடைமுறை, மரபு, சூழ்நிலை போன்றவற்றை சொல்லியும் புறக்கணித்து, அகராதி துணை கொண்டு விடை தேட புறப்பட்டு ...

 

8. இறுதியாக, ருசியா சொன்னதையும், US சொன்னதையும் எழுத்து வடிவில் இருப்பதையும் ஒன்றில் புரியாமல் (அல்லது புரிய மறுத்து), அதற்கும் அகராதி கொண்டு விளக்கம் கொடுத்து ...

 

9. மீளவும் ருசியா சொன்னதில் வந்து  ருசியாவின் plausible deniability பற்றி தொடக்கத்தில் குறித்தவரே சொல்லி, ருசியா மறுப்பதத்திற்கான , வலிமையான மூல  காரணத்தை ஏற்று, இப்பொது ருசியா சொன்னதை விதண்டாவாதத்துக்காக தூக்கி . .. , (அனால், ரஸ்சியாவின் மறுப்பை ஏற்போம்). இப்பொது ருசியா சொன்ன ஆதாரமும் இல்லை.  

 

10. கிளிசசாத்திரத்தில் வந்து நிற்கிறது. அப்போது கிளியிடம் கேட்டு US என்ன சொல்கிறது  என்பதை சொல்லலாம் தானே, எவர் தடுத்தது? 

 

மேலே சொல்லியவற்றை அறிந்து, விளங்கி, ஆராய்ந்தே எனது  காரணங்கள், வாதங்கள், முடிவுகள் - எவரையும் நுனிப்புல் என்று எடைபோடவும் இல்லை, எந்த  அறியாமையையும் வேண்டும் என்றே  சுட்டிக்காட்டவும் இல்லை. 

அனால், எவரும் அவர்களாகவே  கடைவிரித்து அறியாமை காட்டினால் அது என் தவறல்ல.

 

வாதத்துக்காக  என்றால், எல்லா வாதத்தையும் சொன்னவர் அவராகவே முன்வைத்தார், அவராகவே உடைத்தார். வாதிட வேண்டிய அவசியம் எனக்கு  இல்லை.   

 

அனால், இங்கே நான் பதிவது (விதண்டா) வாதத்துக்காக அல்ல. மற்றும் ஒருவர்  அல்லது சிலரை குறித்தும் அல்ல.  

 

எனவே, எது சரி என்பதை வாசிப்பவர்கள் முடிவு எடுக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பவர்கள் - 🤣.

அப்படி இருந்தா தானே முடிவு எடுக்க.

ஜஸ்டின் அண்ணா கூட எஸ் ஆகீட்டார்.

எதோ பாவம் எண்டு நான் மட்டும் மினெகெடுறன்.

ஒரு வழியாக ரஸ்யா plausible deniability க்கா வாக்னரை உருவாக்கியதை கருத்தாளர் ஏற்று கொண்டுள்ளார்.

அப்படி என்றால் வாக்னர் ரஸ்ய அரச படை இல்லை என்பதுதான் அர்த்தம்.

ஏனென்றால் அது அரச படை என்றால் - plausible deniability இருக்காது.  வாக்னரின் அத்தனை செயலுக்கும் ரஸ்யா பொறுப்பாகி விடும்.

இங்கே வாக்னர் ரஸ்யாவின் நலனிற்கு வேலை செய்யும் குழு என்பதை நான் மறுக்கவே இல்லை.

கேள்வி அது ரஸ்ய அரச படையா இல்லையா என்பது மட்டுமே.

பதில் - இல்லை.

பிகு

நுனிப்புல் -🤣. லின்சே கிராம்மில் தொடங்கி…இந்தியாவில் கடலுக்குள் 50,000 ஆண்டுகால துறைமுகம் இருக்கிறது, இன்னும் பல கேலிக்குரிய சதிக்கோட்பாடுகள், இப்போ proxy வரை யார் நுனிப்புல் அல்ல, புல்லே இல்லாத பாலைவனத்தில் மேய்ந்தவர்கள் என்பதை யாழ்கள முன்னைய மூக்குடைவுகள் காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதிப்பவர் செய்வதை மறவர் சொன்னதாக சுமத்துவது.

 

நான் சொல்லி இருந்தேன் deniability தேவை என்பதால் தான்  ரஷ்யா  வாக்னரின்  உறவை (எந்த உறவானாலும்) மறைக்கிறது என்றதை  சொல்லியும் விளங்காமல்.

 

பின்பு, வாக்னர் கூலிப்படை  என்று சாதித்தவரே  plausible deniability  தேவை என்பதால் ருசியா எந்த தொடர்பையும்  மறைகிக்கிறது; அனால் ருசியா முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டதை அறிவித்து இப்பொது தொடர்பு தெரிகிறது என்று  என்று சொல்லி.   

 

பின்பு,  ருசியா உறவு இல்லை என்று மறுப்பதின் ருசியா அரசு அறிவித்தலை  ஆதரமாக எடுத்து, 

 

(வேடிக்கையான வாதம்:  ருசியா அரசுக்கு  வாக்னர் உறவை மறைக்க அதீத தேவை  இருக்கிறது; அதை வெளியில் வாதம் செய்பவரால் சொல்லி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  ஆனால் , ருசியா வாக்னர் உறவை மறைப்பதற்கு வெளியிடும் மறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் (ஏனெனில் அது சொல்பவராது வாதத்துக்கு, பிம்பத்துக்கு வலுச்  சேர்க்கிறது).   வாதம் என்று எடுத்தால் கூட முட்... தனமான வாதம், எந்தவொரு விபரம் அறிந்த சிறுவயதினர் கூட ருசியா சொல்வதை நம்பமாட்டார்கள்) 

 

அனால், இங்கே சொல்லுபவர் நம்பி அல்லது நம்பும் தோற்றத்தை ஏற்படுத்தி, மற்றவர்களை நம்பவைப்பதற்கு முயற்சி  எடுக்கப்படுகிறது, ஏனெனில் சொல்லுபவரின்  வாதத்துக்கு வசதி என்பதனால்.  

இன்னும் ஒரு   அடிப்படையிலான கேள்வி, சாதிப்பவர் சொல்லுவது போல ருசியா உறவை மறுத்து, மறைத்தாலும், அது எவ்வாறு  வாக்னரை கூலிப்படை ஆக்குகிறது? ஏனெனில் ரஷ்யா வாக்கினருடன் எந்த உறவானாலும் மறைக்க வேண்டிய  அதீத தேவை   நிலையில் இருக்கிறது.

 

எனவே சாதிப்பவர் எதையும் objective ஆக நோக்காது, தனது கருத்து, நம்பிக்கை அடிப்படையில் வாக்கினரை உருவகித்து விட்டு.

 

(அது ஒன்றில் மட்டும்  தங்கியிருந்து ஒளித்து வாத அம்பு எய்யக் காத்திருந்து. அந்த வாத  அம்பு வாதத்தின் காரணம் என்ற  வில்லை விட்டு அகல முதலே ஒடிந்து விட்டது. இதற்கு நான் பொறுப்பல்ல. )

 

இங்கே உள்ளவர் சொன்னால் கணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்று எதிர்பார்த்து சொல்லப்பட்டு இருக்கிறது போல. 

 

வாக்னர் அரச படை இல்லை,   கூலிப்படை என்று இதுவரையில் ஆதாரங்கள் எங்கே என்று உடனடியாக கேட்கபப்டுவபவரால்  என்று காட்டப்பட்டவை  இரண்டு:

1) சொன்னவர் மீண்டும்  மீண்டும் அழுத்தி சொல்லிய  வாக்னர் கூலிப்படை என்று.

2) அம்பை விட்டு  அகல முதல் ஒடிந்த  ருசியா மறுக்கிறது   என்ற வாத அம்பு.

இப்பொது, 2 இல்லை. 1 மட்டும். அது  ஏன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்?

 

ஏன் (வாக்னர்) அரசபடையாய்  இருந்தால் உறவை (அரச படை என்பதை)  ருசியா   மறைக்க கூடாது? ரஷ்யாவுக்கு சொன்னவர் சொல்லிய (நானும் சொல்லிய) அதே தேவை இப்போதும் இருக்கிறது 

( Special forces இன்  தன்மை பற்றி உ.ம். ஆக சொல்லியும். அப்படி ஒரு படை இல்லை என்று us உம், மற்ற நாடுகளும் மறைக்கும், ஏனெனில் சர்சைக்குரிய படை நடவடிக்கைகளில் deniability தேவை என்பதால் என்று சொல்லியும்)

 

வாக்னர் அரசு படை என்றாலும், ருசியா உறவை மறைத்தால்   சரி, deniability உருவாகும்

 

அரச படை எனறால் எப்போதும் திறந்த வெளியில் அந்த உறவு  வெளியில் தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்கும் ... (இது எல்லாம் அலசி ஆகிவிட்டது) 

 

அடிப்படை, படை - அரச உறவுகள் தெரியாது கதைப்பது.

 

திருப்பி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  

 

முன்பே சொன்னது  போல, நான் சொல்லுவது, வெளியே அறியக் கூடிய தரவுகளின் ஆய்வை  வைத்து சாத்திய கூறுகளை  மட்டுமே. சாதாரண எவரும் செய்யக் கூடியது. (இப்பொது அறியக் கூடிய தரவுகளின் அடிப்படையில் வாக்னர் அரசு படை என்பதற்கு சாத்திய கூறுகள் மிக கூட.) 

 

வாக்னர் கூலிப்படை என்று  சாதிப்பதற்கு ஒரேயொரு சாத்திய கூறு தான் இருக்கிறது ,  சாதிப்பவர் உளவின்  மூலம் எதாவது தெரிந்து அதை வைத்து மெல்லவும் முடியாமல், தின்னவும் முடியாமல் தத்தளிப்பது.  அப்படி என்றால், அதை சொல்லிவிட்டு போவது தானே. அனால் உளவு என்றால், US ஐ விட சிறந்த உளவு இருக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது, அதாவது,  சாதிப்பவர் அமெரிக்கா உளவின் நீட்சியாக இருந்தால் அன்றி.

 

 

அகராதியைப் பற்றியும் சாதித்தவர்  - அதாவது பொது அகராதி கருத்து மட்டுமே சொற்களுக்கு உண்டு என்று சாதித்தவருக்கு, துறை சார் அகராதிகள் இருப்பது தெரியாது (போலும்). 

வெகு சிறிய உதாரணம் stay ஆங்கில சொலின் சட்டத்துறையில் இருக்கும் கருத்து. call என்பததற்கு சட்டத்துறையில், ராஜதந்த்திரத்தில் ( நிதித்துறையில் பகுதியாக) உள்ள கருத்து.    

 

  • கருத்துக்கள உறவுகள்

🤣 அதாவது வாக்னர் எமது அரச படை அல்ல என ரஸ்யா சொன்னாலும் ஏற்க மாட்டோம்.

வாக்னர் ரஸ்யாவின் proxy யாக இயங்கும் கூலிப்படை என அமெரிக்கா சொன்னாலும் ஏற்க மாட்டோம்.

அவர்கள் சொல்லாதா ஒரு வியாக்கியானத்தை கற்பனையாக நாமே உருவாக்கி ராஜதந்திர கிளிஜோசியம் சொல்வோம்🤣.

ஆனால் கோசான் உளவு பார்த்து வந்து சொன்னால் மட்டும் - வாக்னர் கூலிப்படைதான் என ஏற்று கொள்வோம்🤣🤣🤣.

பிகு

Legal dictionary உட்பட பலது உண்டு, அவற்றை எல்லாம் AL படிக்கும் போதே கடந்தாகிற்று. Proxy க்கு இங்கே சொல்லபட்ட கிளிஜோசிய விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை.

வடிவேலு தேடிய ஜாமீன் போல் கடல்லையே இல்லையாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

ருஷ்யா மறுப்பு அறிவித்தல், வாக்னரை, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, குழப்பகரமான  நிலையே உருவாக்கியது.   

 

அனால், அந்த அறிவித்தல் வாக்னரை தெளிவாக  கூலிப்படை ஆக்கவில்லை. (ஏனெனில், ருஷ்யா சட்டத்தின் படி கூலிப் படைகள் சட்டவிரோதமானவை). 

 

அதனால் , (நானும்) சொல்லலாம், வழமையாக அரசுகள் செய்வதை ருசிய செய்துள்ளது, ருசியா இந்த குழப்பகரமான நிலையை பாவித்து, வாக்னரின் (உண்மையான) அரச படை நிலையை மறைத்துள்ளது.  (அதாவது குறிப்பிட்ட அரச படை தொகுதிகள் இருப்பதை மறுப்பது ,அனல் ருசியா வாக்கினன்ர் இருப்பதாய் மறுக்கவில்லைதான், அது மிகவும் வசதி ருசியவுக்கு, சாதிப்பவர் போல ஏற்றுக்கொள்பவர்கள் இருந்தால்)  என்கிறேன். இங்கே (நான்) ருசியா சட்டத்தை ஒதுக்கவில்லை,

 

எனவே, ருசியா அறிவித்தல் வாக்னரை  நிச்சயமாக கூலிப்படை என்று ஆக்கவும் இல்லை, அரசபடை இல்லை என்று ஆக்கவும் இல்லை.    

 

ஆகவே, ருஸ்சியா  வாக்னர் அரச படை அல்ல என்று  அறிவித்ததை  எந்த வித பகுப்பாய்வு இன்றியும் ஏற்றுக் கொள்ளப்பட்டு  உள்ளது (ரஷ்யாவுக்கு கட்டாய  தேவையான, சாதிப்பவர் சொன்ன plausible deniability க்கு அந்த அறிவித்தலை வெளியிட ருசியாவுக்கு இன்றியமையாத தேவைகள் இருந்தும்).

 

ஆகவே,  கூலிப்படை என்பது,   (ருசியா சட்டத்தை ஒதுக்கி விட்டு), சாதிப்பவரின் முடிவு (காரணம் தெரியாது, தேவையும் இல்லை). (ருசியா பின்னிய வலைக்குள் அறிந்தோ, அறியாமலோ சாதிப்பவர் விழுந்துவிட்டார்.)

 

(
ஆனால், சாதிப்பவருக்கு 2 கேள்விகள் இருக்கிறது 

வாக்னர் கூலிப்படை என்பதை சாதிப்பவர் ருசியா மறுப்பு அறிவித்தலை அடிப்படையாக வைத்து முடிவு எடுக்கிறார்.

சாதிப்பவர் சொல்லுவது, வாக்கினருக்கு ருசியா காசு கொடுக்கும் இன்ன வேலையை செய்யச் சொல்லி (அதாவது தனிமனிதன் தொடக்கம் , பிரமாண்ட அமைப்புகள் செய்வது போல  ஒரு வேலையை செய்து முடிக்க கூலிக்கு அமர்த்துவது ), வாக்னர் காசுக்காக அதை செய்யும். 

அனால், வாக்னர் ருசியா மரபு வலி படைகளின் தலைமையை கடுமையாக விமர்சிக்கிறது உக்கிரைன் இராணுவநடவடிக்கையில் ருசியா இராணுவத்தின் மூலோபாயம், தந்திரங்களை பொறுத்தவரையில். 

இது தொடர்ந்து நடைபெற்றது.

எவ்வாறு, ஒரு கூலிப்படை (உண்மையில் வாக்னர்  கூலிப்படை ஆயின்) ருசியா இராணுவ அமைப்பு தலைமையை  கடுமையாக தொடர்ந்து விமர்த்சித்த போது,  கேட்டுக் கொண்டு இருந்தது, அந்த கூலிப்படையின் தலைமை ருசியா அதிபருக்கு வேண்டியவராக இருந்தாலும்?

(மிகச் சிறிய அமைப்புகளில் கூட வெளியார் கூலிக்காக வேலைக்கு வந்து, அந்த அமைப்பில் இருக்கும் தலமைகளை கடுமையாக விமர்சிப்பதை ஏற்பதில்லை.) 

அதேபோல, கிளர்ச்சியின் போது, வாக்னறால் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை, ருசியா இராணுவ தலைமையில் மாற்றத்தை கொண்டு வரும் படி  வரும் படி (விபரங்கள் இல்லை அனால் இது நடந்தது).

உண்மையான கூலிப்படை எனறால், வாக்னர் இந்த 2 ஐயும் எப்படி செய்வது?

உண்மையான கூலிப்படைய என்றால்,  இந்த 2 இலும் வாகனர்  அக்கறை செலுத்தி இருந்தாலும், வெளியே தெரியம்  அளவு  இருந்து இருக்காது.
)

 

அடிப்படையாக , சாதிப்பவர் எடுத்த முடிவுக்கு,  பக்கச்சார்பற்ற பகுப்பாய்வு இல்லை.

 

(ஆகவே , சாதிப்பவர் சொல்லும் கிளிச்சாத்திரம், இந்த வாக்னர் கூலிப்படை என்னு முடிவை அடைய பாவிக்கப்பட்டு இருக்கலாம்) 

 

எனவே, ருசியா அறிவித்தல், அதை சாதிப்பவர் மேற்கோளாக எடுத்தது பற்றி முற்றாக அலசப்பட்டு விட்டது. அதன் முடிவும் தெளிவு.

 

ஆனால், US சொல்லுவதை (நான் சொல்லுவது)  வசதிக்காக அல்ல (அதாவது சாதிப்பவரின் வார்த்தையில் கிளி ஜோசியம்). தெளிவாக எழுத்தில் உள்ளது.  அதை வேறு  பதிவில் பார்ப்போம்.

 

(அதற்கு முதல், வாக்னர் மீளஒப்படைத்து இருக்கும் ஆயுதங்களை பார்க்கவும். இவ்வளவு ஆயுதங்களை, இவ்வளவு (20, 000 - 50, 000  மனிதவலு கொண்ட , ஏறத்தாழ, சராசரியாக  2-3 (மரபு வழி) division தொகை கொண்ட படை .

உண்மையில், யதார்த்தத்தில், நடைமுறையில்  கூலிப்படை என்ற முறையில், அரசு, ஏற்கனவே உள்ள படைக்கட்டமைப்பு விட்டு வைத்து இருக்குமா? (இதைத் தான் US ம் சொல்லுகிறது நேரடியாக பொறுப்பை சுமத்தி என்பது நான் விளங்குவது)

 

https://www.theguardian.com/world/2023/jul/12/wagner-hands-thousands-of-tonnes-of-weaponry-to-russian-army

 

"The ministry said it had received more than 2,000 pieces of equipment, including hundreds of tanks and more than 2,500 tonnes of ammunition."

 

கார்களின் சராசரி  நிறை 1.5 - 2.5 தொன்கள். 18-wheeler (கனரக லொறி) சராசரி நிறை 80 தொன்கள்.

 

வாக்னர்  கிட்டத்தட்ட, US  இப்பொது பசிபிக் ஐ  குறித்து  உருவாக்கி (reshape) வரும் ஈரூடகப் படையை ஒத்தது, ஆ னால், தரையில் அதற்கு என்று வான்படையும், கடற்படையும் இல்லாமல்.  

)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சாதிப்பவர் என ஏற்று கொண்டமைக்கு நன்றி 🤣.

மேலும் பல சாதனைகளை சாதிக்க இது ஊக்கியாக அமையும்🤣.

நிற்க (உக்காந்தாலும் காரியம் இல்லை)…

வாக்னர் ரஸ்யாவை விமர்சிக்கிறது அல்லவா? உக்ரேன் நடவடிக்கைக்கு பொறுப்பான ரஸ்ய இராணுவ தளபதி கெரிஸ்மோவ், இரானுவ மந்திரி ஷிகோவை கேளா கேள்வி கேட்கிறதல்லவா? கலகம் செய்தது அல்லவா?

ஒரு மரபுவழி இராணுவ பிரிவு இப்படி நடந்தால் என்ன தண்டனை? கோர்ட் மார்ஷல் அல்லவா? வாக்னரையோ, பிரிகொசினையோ ஏன் இரஸ்ய பாதுகாப்பு அமைச்சால் கட்டுப்படுத்த முடியாமல், போனது? ஏன் சாதாரண அரச படைக்குரிய நடைமுறைகள் பின்பற்ற படவில்லை ? ஏன் பிரிகோசின் கோர்ட் மார்சலுக்கு ஆளாக வில்லை?

ஏனென்றால் வாக்னர் ரஸ்ய அரச படை அல்ல. 

பிகு

பொல்லை கொடுத்து அடிவாங்கலாம். உலக்கையை எடுத்து தந்தால் அடிக்கவே பாவமாக இருக்கிறது.

XRP குஷியில் இருப்பதால் ஊண்டி அடிக்கவும் மனம் இல்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் மரபு வழியா? 

court martial எப்போதும் நடக்கவேண்டும் என்று எவர் சொன்னது?

அது ஒரு வழக்கமே தவிர, எப்போதும் நடக்காது 

(சாதாரண சிவில் வழக்கே, cps என செய்கிறது, உ.ம். சில வயதை பார்த்து (அதாவது மிக குறைத்த வயது), குறித்தவரின் வாழ்க்கையை சீர்குலைத்து விடும், செய்ததுடன் ஒப்பிடும் பொது அது பெரிய அநீதி என்று சொல்லி கைவிடுகிறது.). 

அதே போல, எந்த அரசிலும் இராணுவதுக்கு இருக்கும் prosecuting சேவையும், பலவற்றை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கும்.   

ஒரு தேசத்தில், அரசில் ..,  மிகுதியை நான் எழுத  தேவை இல்லை.

ருசியா, அமெரிக்காவை, France  மற்றும் அவை போன்ற அரசுகளில் ஐ பொறுத்தவரை அதிபரின் முடிவு இது.(வழக்கமாக, அமெரிக்கா, france இல் தலை இடுவது இல்லை. அனால், அவர்களால் முடியும்)

அதேபோல, இங்கே uk இல் முடி தலையிடலாம் படைக்காக , ஏனெனில், படைகள் முடிக்கே (King, queen) சத்தியப்பிரமாணம் எடுக்கிறது. 

அனால், வழக்கமாக செய்வதில்லை.

(எல்லாமே பெரிய நலன்களின் வசதியை பொறுத்து). 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரச படை என்றாலும் அதில் ஒரு ஒழுங்காற்று முறை இருக்கும். இது வழக்கம் அல்ல. கட்டாய நடைமுறை. 

அது ஒவ்வொரு சிப்பாய்க்கும், தளபதிக்கும் பொருந்தும்.

ரஸ்ய அரச படைகளிலும் இந்த நடைமுறை உண்டு.

அரச இராணுவ ஒழுக்கத்தை, ஒரு அரச படையினன் மீறினால் இந்த ஒழுக்காற்று முறை கையாளப்ப்படும்.

ஒரு வழக்கை ஒழுக்காற்று முறையில் எடுத்து, பின் சில காரணங்களை சொல்லி அதை தொடர்ந்து விசாரிக்காமல் விடலாம். 

ஆனால் இங்கே ஒழுக்காற்று முறையே கையாளப்படவில்லை. 

ஏனென்றால் வாக்னர் ரஸ்ய அரசபடை அல்ல. 

மாறாக FSB தனி நபர்களுக்கான சட்ட அடிப்படையில் பிரிகோசின் மீது வழக்கு தொடர்ந்து பின் கைவிட்டது.

இது மிக தெளிவாக காட்டுகிறது, ரஸ்யாவின் அரச படைக்கான சட்டங்கள் அன்றி, தனிநபர்களுக்கான சட்டங்களையே வாக்னர்/பிரிகோசின் மீது பாவித்தது.

ஏன்? ஏனென்றால் வாக்னர் அரச படை அல்ல, தனியார் இராணுவம்.

பிகு

CPS - இங்கிலாந்து+வேல்ஸில் பொலீஸ் துப்பு துலக்கிய ஆதரங்களை வைத்து கிரிமினல் வழக்கு போட முகாந்திரம் உள்ளதா? என முடிவு செய்து, ஆம் எனில் வழக்கை கொண்டு நடத்தும் அரச அமைப்பு.

Crown Prosecution Service. ஏனைய நாடுகளில் Public Prosecutor. 

CPS எங்கே  சாதாரண சிவில் வழக்குகளில் முடிவு எடுக்கிறது?

சிவில் வழக்கு என்றால் அது கிரிமினல் குற்றம் அல்லாத பிணக்குகள் பற்றியது.

ஆனால் சிபிஎஸ் கிரிமினல் வழக்கு சம்பந்த பட்ட அமைப்பு.

வாழும் நாட்டிலேயே, கிரிமினல் வழக்கு எது? சிவில் வழக்கு எது? CPS என்றால் என்ன என்ற தெளிவில்லாத நிலையில், ரஸ்யாவில் கோர்ட் மார்ஷல் முறை, சத்யபிரமாணம், இராஜதந்திர வார்த்தை பிரயோகம் என மனம் போன போக்கில் அவித்து இறக்குவதை எங்கே போய் சொல்லுவது🤦‍♂️.

 

  • கருத்துக்கள உறவுகள்

cps இல்  நான் சொன்னது பொதுமக்களுடன் சம்பந்தப்பட்ட கிரிமினல் விடயங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்


திருப்பியும், பிம்பத்தில் இருந்து   வெளி வர முடியாததால் (அதாவது படை  - அரச உறவு, ரஸ்சியாவின் மறைப்பு ), ருசியா இராணுவதுக்குள் விடயம் கையாளப்பட்டு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு (அல்லது காரணங்களை திசை திருப்பும் நோக்கம்).

இராணுவத்துகுள் கையாண்டு இருந்தால், ருசியா மறைப்பு எங்கே? 

FSB செய்தது சரி. ரஸ்சியாவின் மறைப்பை கனகச்சிதமாக்குகிறது.

இதை விளங்கப்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் இராணுவம்/ அரச படை என்பது சும்மா லுலுலுலா விடயம் அல்ல.

அது ஒரு நாட்டின் அரசியல் சட்டம், சட்டப்படி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்படுத்திய படை. 

ஜனாதிபதியே கூட ஒரு நாட்டின் இராணுவத்தை சட்டத்துக்கு புறம்பாக பயன் படுத்த முடியாது.

இராணுவத்துக்கு என்று ஒரு தனி சட்ட நடைமுறையே இருக்கிறது.

Military Police என்பதை கருத்தாளர் வழமை போல கூகிள் பண்ணி பார்க்க வேண்டுகிறேன்.

 ஒரு இராணுவ வீரர் சேவையில் இருக்கும் போது தவறிழைத்தால் - முதலில் விசாரிக்க ஆரம்பிப்பது இராணுவ ஒழுக்காற்று கோவையின் அடிப்படையில்தான்.

அத்தோடு ஒரு இராணுவ குற்றத்தை, சாதாரண காவல்துறை விசாரிக்க கட்டுப்பாடுகளும், தடைகளும் கூட உண்டு. 

அத்தோடு பொதுவாக இராணுவ சட்ட தண்டனைகள், சிவிலியன் ஒருவருக்கு (சிவில், சிவிலியன் வேறு பட்ட பதங்கள் - ஆங்கில அகராதியை பிரட்டவும்) கொடுக்கும் தண்டனையிலும் காரமாக இருக்கும்.

இராணுவத்தில் குற்றமிழைத்தால் - dishonorable discharge உட்பட தண்டனைகள் விதிக்கப்படும். அதன் பின்னும், சாதாரண சட்டத்துக்கு அமைய வழக்கு போடலாம்.

இப்படி ஒரு இராணுவ/ அரச படையினர், தனி மனிதர்களில் இருந்து வேறுபட்டே சட்டப்படி கையாளப்படுவர் (லீவில் நிற்கும் போது மனைவியை அடிப்பது வேறு - ஆனல் இதை கூட கைது செய்யும் பொலீஸ் உடனைடியாக இராணுவ பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்). 

குறிப்பாக ஒரு இராணுவ படையணியே - அரசுக்கு எதிராக கலகம் செய்தால் - அது லேசுப்பட்ட விடயம் அல்ல.  தனியே ஒரு தளபதியில் மீது மட்டும் குற்றம் என தப்பிக்க முடியாது. இதற்குதான் armed services covenant பற்றி முன்பு எழுதினேன் (அதை புரிந்துகொள்ளவே இல்லை).

ஒவ்வொரு வீரருக்கும் அரசுக்கு/முடிக்கு விசுவாசமாக இருக்கும் கடமை உள்ளது.  

ஒரு தளபதியின் கட்டளையை மீறலாம் என வீரர்கள் அனுமதிக்கபடுவது மிக குறைவான சந்தர்பங்களில்தான். அதில் ஒன்று இராஜதுரோகம்.

ரஸ்யாவில் நடந்த விடயத்தில் - இதை செய்தது ஒரு அங்கீகரிக்கப்பட்ட இரஸ்ய அரச படையணி எனில் - அதை இராணுவ நீதிமன்றம் மூலம் கையாண்டிருப்பர். கலகத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் வகிபாகமும் கருதப்பட்டிருக்கும்.

அதன் பின் தண்டிக்க அல்லது மன்னிக்க பட்டிருப்பர்.

ஒரு அரை மரபுவழி (semi conventional), நடைமுறை (not de jure but de facto) அரச படையான த.வி.பு வில் மாத்தையா, கருணா கலகம் வந்த போது கூட இதுவே நடந்தது.

ஆனால் - வாக்னரை இப்படி எதுவும் செய்யவில்லை. செய்ய முடியாது. ஏனென்றால் இந்த இராணுவ சட்டம், நடைமுறை எல்லாம் ரஸ்ய அரச படைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வாகனர்தான் தனியார் கூலிப்படை ஆகிற்றே?

ஆகவேதான் அதை இருக்கும் சாதரண குடிகளுக்கான சட்டத்தை கொண்டு FSB டீல் பண்ணியது. 

இதில் FSB மறைக்க ஏதும் இல்லை.  புட்டினுக்கு வாக்னர்/ பிரிகோசின் மீது வழக்கு போட இருந்த ஒரே வழி FSB மூலம் மட்டும்தான். 

புட்டின் சொன்னார் வழக்கு போடப்பட்டது. புட்டின் சொன்னார் விலக்கப்பட்டது.

ஆனால் புட்டின் சொன்னாலும் கூட, இராணுவ சட்ட கோவைக்கு அமைய வாக்னர்/பிரிகோசின் மேல் வழக்கு போட்டிருக்க முடியாது. ஏனென்றால் அரச படை அல்லாத வாகனருக்கு இந்த சட்டங்கள் செல்லாது. 

இதுதான் நடந்தது.

கருத்தாளருக்கு கிளியோசிய வியாதி முற்றிப்போய் - ஒவ்வொன்றையும், நான் பிடித்த முயலுக்கு முக்கால் கால், என்ற ரீதியில் விளக்கம் கொடுக்கிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்லுவது எல்லாமே 2ம்,  3ம் பட்சம் பட்ச விடயங்கள்.
     
FSB உண்மையில் செய்ததா? அல்லது நாடகம் போட்டதா என்பதும் இருக்கிறது.

ஏனெனில், உறவு மறைக்கப்பட வேண்டும் எந்த நிலையிலும் (வாதிப்பவர் சொன்ன plausible deniability)


military force என்பதற்கு அகராதி விளக்கம் என்ன? தேசத்தின், அரசின் அல்லது அதனுடன் தொடர்பு பட்ட படைகள  (சுருக்கமாக)

அமெரிக்கா சொல்லி இருப்பது என்ன 

'A  proxy military force of  Kremlin'

 

இதற்கு பின்னும் சுருக்கமாக Kremlin இன்  பதில் படை (proxy என்பது உண்மையில் 2ம் பட்சம், வேறு என்ன படையாகவும் இருக்கட்டும்)

 

Kremlin யார், வேற்று கிரக வாசியா? ருசியா அரசு அதி உச்ச அதிகார பீடம்.

 

சொன்ன எல்லா (சட்ட) காரணங்களும்  2ம், 3ம் பட்சம், முக்கியகாரணத்தை விட்டு.

 

சனநாயகம் சொல்லும் அமெரிக்காவிலே கூட இருக்கிறது அதிபருக்கு கீழ் படை இருக்கலாம், அவருக்கு மட்டுமே accountable (2016 இல் தெரிய வந்த sac).

 

sac  மேல் என்ன ஒழுக்காற்று நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பது அமெரிக்கா அதிபரின் முடிவு.

 

படை - அரச உறவை ஒரு பிம்பம் (frame) கட்டி வைத்து கொண்டு,

military force (அல்லது military forces அல்லது armed forces)  என்பது அரசுகளை (ராஜதந்திரத்தை) பொறுத்தவரையில், அதுவும் பகிரங்க அறிவித்தலில்   முக்கியத்துவம், அது குறிக்கும் அரச (ராஜதந்திர) உணர்வு, நிலை அறியாமல் கதைப்பது (2ம், 3ம்  சட்ட நிலைகளை வைத்து கொண்டு), அனால், அமெரிக்கா (ராஜதந்திரிகளுக்கு) பாடம் எடுப்போம் என்பவர்களை என்ன செய்வது? 

 

குறிப்பு: முதலில் நான் சொல்லி இருந்தது, ருஷ்யா வேறு / புதிய படை கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது (அதன் விபரங்கள் எனக்கும்  தெரியாது அந்த நிலையில்), அனால் இதுவரை தெரிந்தவற்றில் ருசிய வாகனரை , மற்ற படைகளுடன்  கலந்து சண்டைபிடிக்கும் நிலையையும் உருவாக்கி உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. 

 

இது இந்த வாதத்தை தொடர்வோருக்கு , நான் சொல்லுவதில் (அமெரிக்கா சொல்லுவது) சந்தேகம் இருந்தால் 


வாக்கினருக்கு  அமெரிக்கா கொடுத்து இருக்கும் military  force நிலை (status), அந்த விளக்கத்தில் சொல்லப்பட்டு இருக்கும் military  forces  (வாக்கினரை ஒருமையில் military force) என்பதை விட கூட 

ஏனெனில், அமெரிக்கா பாதுகாப்பு இலாகா சொல்லும் military forces அந்த இலக்காவுக்கே பொறுப்பு சொல்ல வேண்டும்.

வாக்னர் , ருசியா அதி உச்ச அதிகார பீடத்துக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

https://www.defense.gov/About/   


"We Are Your Defense


The Department of Defense is America's largest government agency. With our military tracing its roots back to pre-Revolutionary times, the department has grown and evolved with our nation. Our mission is to provide the military forces needed to deter war and ensure our nation's security."

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் வாசிக்கும் போது, ஒரு கள உறவு  (பனங்காய் என்ற அவதாரப் பெயர்- இப்பவும் வேறு பெயரில் இருக்கிறாரோ தெரியவில்லை) தன் signature line இல் போட்டிருந்த வாசகம் நினைவுக்கு வருகிறது:

"சுட்டால் சாக வேணும், சும்மா நொட்டிக் கொண்டிருக்கப் படாது!" - பீல்ட் மார்ஷல் கந்தவனம்😂

 

  • கருத்துக்கள உறவுகள்

கிளி ப்ரோ,

இனிமேல் இல்லை - எப்போதுமே நீங்கள் இதில் சொல்ல எதுவும் இருக்க இல்லை - உங்கள் கற்பனையில், நீங்களாகவே hallucination இல் கண்டு கொண்ட கிளியோசிய வியாக்கியானங்களை தவிர.

உங்களுக்கு அடிப்படை ஆங்கில grammar, syntax இல் பிரச்சனை என்றால் அதுக்கு எமது உயிரை வாங்க கூடாது.

1. A military force of  Kremlin

2. A proxy military force of  Kremlin

இங்கே ஏன் proxy என்ற மேலதிக சொல் வருகிறது?

இதன் அர்த்தம் - Wagner ஒரு military force (அரச படை என்ற அர்த்தத்தில்)  இல்லை, மாறாக ஒரு military force/ அரசபடை செய்ய  வேண்டிய வேலையை செய்விக்க, ரஸ்யா பயன்படுத்தும் அரச படை அல்லாத, குழு.

இதுதான் இந்த வரிகளின் தார்பரியம்.

ஆங்கிலம் கூறும் நல்லுலகு proxy என்ற வார்த்தைக்கு கொடுக்கும் அர்த்தத்தின் படி இதுதான் தார்பரியம்.

மாறாக - proxyக்கு நீங்கள் புதிதாக கண்டுபிடித்த எந்த அகராதியிலும் இல்லாத “ராஜதந்திர அர்த்தம்” - உங்கள் கிளியோசியம்.  

🦜🦜🦜

# கிளிப்பேச்சு கேட்கவா

 

47 minutes ago, Justin said:

சுட்டால் சாக வேணும், சும்மா நொட்டிக் கொண்டிருக்கப் படாது!" - பீல்ட் மார்ஷல் கந்தவனம்😂

🤣 பீல்டு மார்ஷல் கந்தவனம், இன்று முதல் ரஸ்யா/அமெரிக்க இரு நாடுகளினதும் - ஐநாவுக்கான விசேட இராஜதந்திரியாக பதவி உயர்த்தப்பட்டு, சேவை நலன் பாராட்டி பொற்”கிளி” யும் வழங்கப்படுகிறது.

# சும்மா கிழி

  • கருத்துக்கள உறவுகள்

ருசியா சுத்தியதில் விழுந்து  .. எழும்ப முடியாத நிலை. 

of  Kremlin என்பதிலேயே விடயம் முடிந்து  விட்டது இன்னமும் தெரியவில்லை.

அமெரிக்கா ராஜதந்திரிகள்  அரசு, ராஜதந்திரம், முக்கியத்துவம், சிறப்பு, உணர்வு போன்றவற்றை  சிந்தித்து உருவாக்கிய வசனத்துக்கு இங்கிருக்கும் ஆங்கில வித்தகர்கள் அமெரிக்காவுக்கு பாடம் எடுக்கிறார்கள் . கலியுகத்தை விட கொடுமை  

(இவரின் அல்லாத ஆங்கிலலத்தை சிலவேளை அமெரிக்க ராஜதந்திரிகள் கிளிச்சாத்திர ஆங்கிலமாக  புதுமையாக வரவேற்க கூடும், அனால் அதுவும் , கிளி சரியாகத்தான் சொல்லி இருக்கும், அதுக்கு மனதில் வந்தது, அனால் அதை ஒருவருக்கு வேண்டிய படி மாற்றினால் வந்த வினை )

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.