Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு

மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார்.

மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சஜின் டி வாஸ் குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1337049

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

மிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பதவியில் இருந்தபோதே ஒரு துகளைகக்கூட அசைக்காதவரோடு கதைத்து என்னத்தையாம் கிழிக்கப்போறாரோ.

நல்லாட்சி(?) என்று ஆள வைத்து அழகுபார்த்த விசுவாசம் விடாதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, nochchi said:

பதவியில் இருந்தபோதே ஒரு துகளைகக்கூட அசைக்காதவரோடு கதைத்து என்னத்தையாம் கிழிக்கப்போறாரோ.

நல்லாட்சி(?) என்று ஆள வைத்து அழகுபார்த்த விசுவாசம் விடாதுதானே.

இனித்தான்.... இனப்  பிரச்சனைக்கான தீர்வு பற்றி, 
இரண்டு பேரும் ஆலோசித்து முடிவு எடுக்கப் போயினம். 😂
ம்ம்ம்ம்.... நடக்கட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மைத்திரிக்கு மலாயன் கபேயில் சோறு!

Posted

மைதிரியைச் சந்தித்த கூட்டத்தைப் பார்த்தாலே தெரிகிறது இனப்பிரச்சனையைச் சாட்டாக வைத்து வேறு ஏதோ பேசியுள்ளனர் என்பது/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இனித்தான்.... இனப்  பிரச்சனைக்கான தீர்வு பற்றி, 
இரண்டு பேரும் ஆலோசித்து முடிவு எடுக்கப் போயினம். 😂
ம்ம்ம்ம்.... நடக்கட்டும். 🤣

மக்களால் வீட்டில் இருங்கள்’   என்று  அனுப்பி வைக்கப்பட்ட  இருவர்  தமிழர் பிரச்சனை பற்றி கதைக்குமளவுக்கு தமிழர் பிரச்சனை  தரம் தாழ்ந்து விட்டது ..நானும் ஒருக்க மாவை உடன்  இனப்பிரச்சனையைக்கான தீர்வு பற்றி  கதைக்க விரும்புகிறேன்    உங்கள் அபிப்ராயத்தை கூறவும்  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Kandiah57 said:

மக்களால் வீட்டில் இருங்கள்’   என்று  அனுப்பி வைக்கப்பட்ட  இருவர்  தமிழர் பிரச்சனை பற்றி கதைக்குமளவுக்கு தமிழர் பிரச்சனை  தரம் தாழ்ந்து விட்டது ..நானும் ஒருக்க மாவை உடன்  இனப்பிரச்சனையைக்கான தீர்வு பற்றி  கதைக்க விரும்புகிறேன்    உங்கள் அபிப்ராயத்தை கூறவும்  🤣

தமிழரசுக்கட்சிக்குள் இருக்கிற பிரச்சனையை தீர்க்க முடியாமல் ஆள் திணறுது இதில நீங்கள் வேற பிரச்சினை என்று கிளம்பி ஆளை மாட்டிவிடுகிற திட்டம்! அதுவும் தேர்தல் வரப்போகிற நேரத்தில்.  அவர் இப்போதைக்கு  யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லையாம்.

2 hours ago, தமிழ் சிறி said:

இனித்தான்.... இனப்  பிரச்சனைக்கான தீர்வு பற்றி, 
இரண்டு பேரும் ஆலோசித்து முடிவு எடுக்கப் போயினம். 😂
ம்ம்ம்ம்.... நடக்கட்டும். 🤣

காலாவதியானவர்கள் தங்கள் முன்னைய அனுபவங்களை மீட்டிப்பார்த்து மகிழவும் விடுகிறார்களில்லை அநியாயத்தில போவார்.

2 hours ago, தமிழ் சிறி said:

குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தெற்கில் இவர் என்ன சொன்னார் என்பது தமிழ் மக்களுக்கு விளங்காது, வடக்கில் என்ன சொன்னார் என்று தெற்கில் உள்ளவர்களுக்கு விளங்காது என்று நினைக்கிறார் பாவம். அதையே உதயன் கம்மன்பிலவும் உளறிவிட்டு போனவர். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

இனித்தான்.... இனப்  பிரச்சனைக்கான தீர்வு பற்றி, 
இரண்டு பேரும் ஆலோசித்து முடிவு எடுக்கப் போயினம். 😂
ம்ம்ம்ம்.... நடக்கட்டும். 🤣

3 hours ago, இணையவன் said:

மைதிரியைச் சந்தித்த கூட்டத்தைப் பார்த்தாலே தெரிகிறது இனப்பிரச்சனையைச் சாட்டாக வைத்து வேறு ஏதோ பேசியுள்ளனர் என்பது/

2 hours ago, satan said:

காலாவதியானவர்கள் தங்கள் முன்னைய அனுபவங்களை மீட்டிப்பார்த்து மகிழவும் விடுகிறார்களில்லை அநியாயத்தில போவார்.

தமிழருக்கான தீர்வுக்குத் தடையாக இருப்பதே தற்போதுள்ள தலைமைகளினது செயற்றிறனற்ற போக்கே. இதிலே இவர்கள் எதையுமே கிழிக்கப்போவதில்லை. தந்தை செல்வா அவர்களுக்குப் பின்னான சனநாயக முறைமையிலான போராட்டத்தை அணிதிரட்டவோ, திட்டவட்டவட்டமான தீர்மானங்களை மக்களிடம் உண்மையவோ நேர்மையாகவோ கொண்டு செல்லத் திராணியற்றவர்கள் இன்னும் ஏன் களத்தில் நிற்கிறார்கள். கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள்  'வடக்கு-கிழக்கில் சைவ- தமிழ் வரலாற்று எச்சங்களை அழித்தலும் பௌத்த எச்சங்களாக திரித்தலும்!' என்ற கட்டுரையில் சுட்டும் விடயங்களை முதலில் செய்தாலே அரைவாசி பிரச்சினைகள் தானாகத்தீரும். அதைவிடுத்து வெறும் அர்த்தமற்ற, தாமும் இருக்கின்றோம் என்று காட்டும் முனைப்புகளால் தமிழருக்கு நன்மையுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nochchi said:

மாவை சேனாதிராஜா… வாழ்க்கையில் ஒரு நாள் கூட வேலைக்குப் போனது கிடையாது.
அப்படி இருந்தும்… இன்று அடுக்குமாடி வீட்டுக்கு அதிபதியாவும், 
பாராளுமன்ற   பென்சன் எடுக்கக் கூடிய மனுசனாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்தது
இந்தத் தமிழ் அரசியல் தானே….

சம்பந்தன் வக்கீலாக இருந்தும்…. கோட்டுப் படி ஏறினதை நான் காணவேயில்லை.
அவருக்கும்… கொழும்பு, திருகோணமலை, இந்தியாவிலும் வீடு இதுக்கு என்று சொல்கிறார்கள்.
இதுக்கெல்லாம்…. படி அளந்தது… நம்ம அரசியல் தானே… 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான்,  வாக்களிப்போர் சிந்திக்கவேண்டிய விடயம். இதுவரை இதை ஏன் எந்த அரசியல் பத்தி எழுத்தாளனோ, இங்கே அரசறிவியல் நடத்தகின்றவர்களோ எழுதவோ கேட்கவோ இல்லை.! ஆகமொத்தத்தில் மண்டையைப் போடும்வரை ஓயமாட்டார்கள்.தமிழினம் அனாதையாக அனைத்தையும் இழந்து நிற்கும் அம்மணமாக அவர்களது தேடல் தொடரும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

மாவை சேனாதிராஜா… வாழ்க்கையில் ஒரு நாள் கூட வேலைக்குப் போனது கிடையாது.
அப்படி இருந்தும்… இன்று அடுக்குமாடி வீட்டுக்கு அதிபதியாவும், 
பாராளுமன்ற   பென்சன் எடுக்கக் கூடிய மனுசனாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்தது
இந்தத் தமிழ் அரசியல் தானே….

சம்பந்தன் வக்கீலாக இருந்தும்…. கோட்டுப் படி ஏறினதை நான் காணவேயில்லை.
அவருக்கும்… கொழும்பு, திருகோணமலை, இந்தியாவிலும் வீடு இதுக்கு என்று சொல்கிறார்கள்.
இதுக்கெல்லாம்…. படி அளந்தது… நம்ம அரசியல் தானே… 🤣
 
சம்பந்தனும்.  மாவை சேனதிராசாவும். வாழ் நாள் முழுக்க  ஓய்வு ஓலிசாலின்றி  தமிழருக்குகாகவும்.  தமிழர் பிரச்சனை தீர்வுக்காகவும். கண் முழித்து உழைத்தது என்கிறார்கள்.....நீங்கள் என்னாட என்றால் இப்படி சொல்லுகிறீர்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

சம்பந்தனும்.  மாவை சேனதிராசாவும். வாழ் நாள் முழுக்க  ஓய்வு ஓலிசாலின்றி  தமிழருக்குகாகவும்.  தமிழர் பிரச்சனை தீர்வுக்காகவும். கண் முழித்து உழைத்தது என்கிறார்கள்.....நீங்கள் என்னாட என்றால் இப்படி சொல்லுகிறீர்கள்.  🤣

இவர்கள்… வாழ்க்கை முழுக்க, “அணில் ஏற விட்ட… அரசியல்” செய்த ஆட்கள்.
ஆட்கள் வளர்ந்த அளவிற்கு, இவர்களுக்கு 🧠  மூளை வளரவில்லை. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள்… வாழ்க்கை முழுக்க, “அணில் ஏற விட்ட… அரசியல்” செய்த ஆட்கள்.
ஆட்கள் வளர்ந்த அளவிற்கு, இவர்களுக்கு 🧠  மூளை வளரவில்லை. 🤣

இருத்தல் தானே வளர    🤣அவர்களை குறை சொல்லிக் கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தாள் ஐனாதிபதி தேர்தலில் நிக்கப்போறார். ராஜபக்சே கம்பனிஇவரை தான்இறக்கப் போயினம்.

அதால, தீர்வு எண்டு வாயாலவடை சுடுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

இந்தாள் ஐனாதிபதி தேர்தலில் நிக்கப்போறார். ராஜபக்சே கம்பனிஇவரை தான்இறக்கப் போயினம்.

அதால, தீர்வு எண்டு வாயாலவடை சுடுறார்.

அது தானே…. எலி ஏன், அம்மணமாய்  “மலாயன் கபே” பக்கம் போனது என யோசித்தேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

அது தானே…. எலி ஏன், அம்மணமாய்  “மலாயன் கபே” பக்கம் போனது என யோசித்தேன். 😂

முட்டாள் சனம்! சட்டையை பிடிச்சு நாலு கேள்வி கேக்கிறதை விடுத்து, கடைசி ஒரு எதிர்ப்பையாவது காட்டியிருக்கலாம், வாழையிலையிலை விருந்து வைச்சு பாத்து மகிழ்ந்திருக்குது. அவனுகள் இனி அடிக்கடி கொலிடேய் வரப்போறானுக விருந்து  சாப்பிட்டு சுகம் அனுபவிக்க. மக்கள் பாவம்! என்ன செய்வார்கள்? வந்தது எதிரியே என்று தெரிந்தாலும் வந்தவனை வரவேற்று விருந்தளிக்கும் வழமை அவர்களது பண்பாயிற்றே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

10 hours ago, தமிழ் சிறி said:

அது தானே…. எலி ஏன், அம்மணமாய்  “மலாயன் கபே” பக்கம் போனது என யோசித்தேன். 😂

மலாயன் கபே இப்ப படான்.

இவரை கொண்டு போனதே, வேண்டுமென்று தான் போல.

தின்னவேலி சந்தைக்கு முன்னால், Lavin's என்ற பெயரில், சிங்கள முதலீட்டாளர் பின்புலத்தில், தமிழக மனேஜர், சமையல் காரர் என சாப்பாடு விலை அதிகமானாலும், சிறப்பாயுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, Nathamuni said:

மலாயன் கபே இப்ப படான்.

இவரை கொண்டு போனதே, வேண்டுமென்று தான் போல.

யாரோ, மலாயன் கபேக்கு  வேண்டாதவர்கள் வேண்டுமென்றே வைச்சு செய்திருக்கிறார்கள். மைத்திரியை அங்கே கண்ட, போற சிலரும் இனிமேல் அந்தப்பக்கம் போக மாட்டார்கள். வெறுப்பு, குண்டுவெடிப்பு பயம். ஹஹ்ஹா..... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

மலாயன் கபே இப்ப படான்.

இவரை கொண்டு போனதே, வேண்டுமென்று தான் போல.

தின்னவேலி சந்தைக்கு முன்னால், Lavin's என்ற பெயரில், சிங்கள முதலீட்டாளர் பின்புலத்தில், தமிழக மனேஜர், சமையல் காரர் என சாப்பாடு விலை அதிகமானாலும், சிறப்பாயுள்ளது.

1986 காலப்பகுதியிலே தமிழகத்தவரோ மலையாளத்தவரோ தெரியவில்லை. ஆனால், முதலாளியிலிருந்து பரிமாறுபவர்வரை இந்தியர்களால் நடாத்தப்பட்ட ஒரு உணவகம் திருநெல்வேலிச் சந்தைப்பக்கமாக(திருநெல்வேலி-யாழ் திசையில் இடதுபக்கமாக) இருந்தது. நல்ல சுவையான உணவு. பெரும்பாலும் தமிழர்களிடத்தே உணவுவிற்பனையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியோர் இந்தியராகவோ அல்லது சிங்களவராகவோ(1983) இருந்ததுதான் நிலமை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/7/2023 at 13:30, தமிழ் சிறி said:

இனித்தான்.... இனப்  பிரச்சனைக்கான தீர்வு பற்றி, 
இரண்டு பேரும் ஆலோசித்து முடிவு எடுக்கப் போயினம். 😂
ம்ம்ம்ம்.... நடக்கட்டும். 🤣

சிறி அண்ணே, நீங்கள் அவதிப்படக்கூடாது. இனப்பிரச்சினை  என்பது ஆற அமர்ந்து , திடடமிட்டு பேசி முடிக்க வேண்டியதொன்று. உடனே ஒரு முடிவுக்கு வர முடியாது. மாவை அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும். சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும். இந்த இரண்டுமே மிக பிரகாசமாக இருப்பதால், நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரப்போகின்றது. தமிழருக்கு இனி விடிவுதான்.

சிறிசேன நிறைய சடட சிக்கலுக்குள் சிக்கி இருப்பதாலும், கட்சிக்குள் பிரச்சினைகளிருப்பதாலும் இவைகளிலிருந்து தப்புவதட்கு இவருக்கு ஒரு அரசியல் அதிகாரம் தேவைப்படுகின்றது. மற்றப்படி இவரெல்லாம் ஒரு செல்லா காசு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த ஆட்சியில் இருவரும் சேர்ந்து எப்படி அப்பாவி தமிழரை நம்ப வைத்து கழுத்தறுத்து அவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்பதை சிலாகித்து மீண்டும் தேரேற யோசனை செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுமா என்பதே கேள்விக்குறி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதுக்கு யாருக்காவது பிறந்த நாள் வருகுதோ..??!

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.