Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரர்களின் நடத்தை இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது - மனோ கணேசன் எம்பி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“விகாரைகள் தொடர்பான சம்பவங்களை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை ” – புத்த சாசன அமைச்சின் செயலாளர்

விகாரைகளில் இடம்பெறும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களை சமூகத்திற்கு தேவையில்லாமல் பிரசாரம் செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

கடுவெல, நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் அறிந்தவுடன் பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் விதானபத்திரன தெரிவித்தார்.

அந்த சம்பவத்தில் பிக்குவின் நடத்தை மற்றும் பிக்கு உட்பட இரு பெண்கள் வெளி தரப்பினரால் தாக்கப்பட்டமை தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்த அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, ஏனைய பிக்குகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், அந்த விடயத்தில் புத்த சாசன அமைச்சு தலையிடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/262331

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவை காப்பாற்றுவதில் அமைச்சர் தொடக்கம் சட்டம் , பெளத்தம் என வரிசை கட்டி நிற்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின்  சாபக்கேடுகள். இது அந்த இனத்தின் பரவணிக்குணம். மதமாக இருந்தாலென்ன இனமாக இருந்தாலென்ன. எது தவறோ, எது அநாகரீகமோ, எது அசிங்கமோ அதையே போதிக்கிறார்கள், கற்பிக்கிறார்கள். இங்கே தண்டிக்கப்படவேண்டியவர்கள், திருத்தப்படவேண்டியவர்கள், துரத்தப்பட வேண்டியவர்கள் யார்? அதை விட்டு தட்டிக்கேட்டவனை தண்டிப்பதே இவர்களின் கலாச்சாரம். அதற்கு பலியானவர்கள் தமிழர், அதை தட்டி வளர்த்தவர்கள் தட்டிக்கேட்டதே இப்போ குற்றம். வளர்த்ததை அறுக்கிறார்கள். இதை சரியே என போட்டிப்போட்டு உதவிய சர்வதேசமும் இதையே போதிக்கிறது.  பிக்குவும் மனிதன்தான்! அவர் காவி போடாமல், விகாரையில் வைத்து செய்யாமல் இருந்திருந்தால்; அவரும் மனிதன்தான்! மாற்றுக்கருத்தில்லை. என்றொருக்கா தன உணர்வுகளை அடக்க முடியவில்லையோ அன்றே காவியை கழட்டி  வைத்து விட்டு இல்லறத்துக்கு போயிருந்தால்; யாரும் விமர்சிக்கப்போவதில்லை. விகாரையில் உள்ள ஏனையவர்கள் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று அறிக்கைவிடுவது; அது விகாரையா அல்லது வேறெதுமா என்று எண்ண தோன்றுகிறது. இரண்டு தோணியில் காலை வைத்து மற்றவரை அடக்குவது. அதுவும் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில். ம்.... பிக்குகள் என்றால், எல்லாமே இருந்த இடத்தில. கொழுப்பு பிடிக்காமல் என்னதான் செய்யும்? தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தி காணொளி எடுத்து பகிர்ந்து ரசித்த பலன் இப்போ அவர்களிடத்தில், இப்போ கோவம் வருகுது. அடக்கமுடியாதவர்களை இராணுவம் பிக்குகளை வடக்கில் குடியேற்றுகிறார்கள். தட்டிக்கேட்க யாருமில்லாத தோட்டம் மேயட்டுமேன் என்று, தங்கள் சீரழிஞ்ச கலாசாரத்தை பரப்பும் வழி.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

பிக்குவை காப்பாற்றுவதில் அமைச்சர் தொடக்கம் சட்டம் , பெளத்தம் என வரிசை கட்டி நிற்கிறார்கள். 

அந்த காவிகளை திருத்துவதட்கு முன்னர் இந்த அதிகாரிகளை (??) திருத்த வேண்டும். எல்லாமே ஒரே குடடயில் ஊறிய மடடைகள். 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சம்பவம் பற்றிய விரிவான காணொளி ஒன்றைப் பார்த்தேன். பிக்குவின் முறைகேடுகளை அம்பலப் படுத்தப் போனவர்கள் மிகவும் முரட்டுத்தனமாகவும் அநாகரீகமாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் செயத தவறினால் பிக்கு வின் தவறு மறைக்கப்படப் போகிறது.இவர்களின் நடவடிக்கைகளினால் பிக்குவிடம் ஆசிபெறச் சென்ற தாயையும் மகளையும் பிக்குவையும்இவர்கள் மானப்பங்கப்படுத்தி விட்டார்கள் என்ற கோணத்தில் வழக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

பிக்குவின்... மஞ்சள் அங்கியை கழட்டி,  
அம்மணமாக்கிய நல்ல செயலையும் செய்துள்ளமை பாராட்டுக்கு உரியது.

ஆனால்... அந்த 12 வயது மகளின் உடையை களைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிக்குவை தண்டிக்கச்  சென்றவர்கள்... கொஞ்சம்  நிதானமாக நடந்திருக்கலாம்.

இனி ...//“விகாரைகள் தொடர்பான சம்பவங்களை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை ” – எடுக்கப் படும் என, புத்த சாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு.... விகாரைகள், விபச்சாரக்கூடமாக மாறினாலும் ஆச்சரியப் பட முடியாது.
பிக்குகளுக்கு, இனிப்பான செய்தியை அரசு தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

பிக்குகளின்... காம களியாட்டத்துக்கு, விளக்குப் பிடிக்கும் ஸ்ரீலங்கா அரசு.   animiertes-gefuehl-smilies-bild-0119.gif

  • கருத்துக்கள உறவுகள்

g

1 hour ago, தமிழ் சிறி said:

பிக்குவின்... மஞ்சள் அங்கியை கழட்டி,  
அம்மணமாக்கிய நல்ல செயலையும் செய்துள்ளமை பாராட்டுக்கு உரியது.

ஆனால்... அந்த 12 வயது மகளின் உடையை களைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிக்குவை தண்டிக்கச்  சென்றவர்கள்... கொஞ்சம்  நிதானமாக நடந்திருக்கலாம்.

இனி ...//“விகாரைகள் தொடர்பான சம்பவங்களை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை ” – எடுக்கப் படும் என, புத்த சாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு.... விகாரைகள், விபச்சாரக்கூடமாக மாறினாலும் ஆச்சரியப் பட முடியாது.
பிக்குகளுக்கு, இனிப்பான செய்தியை அரசு தெரிவித்துள்ளது.

படம் பிடிப்பவர்கள் அந்தச் சிறுமியை துகிலுரிவதில் மிகவும் குறியாக இருந்திருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.இவர்களின் செயலால் தப்புச்செய்தஆமத்துரு தப்பப் போகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

பிக்குவின்... மஞ்சள் அங்கியை கழட்டி,  
அம்மணமாக்கிய நல்ல செயலையும் செய்துள்ளமை பாராட்டுக்கு உரியது.

ஆனால்... அந்த 12 வயது மகளின் உடையை களைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிக்குவை தண்டிக்கச்  சென்றவர்கள்... கொஞ்சம்  நிதானமாக நடந்திருக்கலாம்.

இனி ...//“விகாரைகள் தொடர்பான சம்பவங்களை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை ” – எடுக்கப் படும் என, புத்த சாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு.... விகாரைகள், விபச்சாரக்கூடமாக மாறினாலும் ஆச்சரியப் பட முடியாது.
பிக்குகளுக்கு, இனிப்பான செய்தியை அரசு தெரிவித்துள்ளது.

எல்லாம்  நன்மைக்கே! எல்லாவற்றையும் அடக்குமுறையால் நசுக்கிவிட முடியாது. 

அப்ப பிக்குவும் அந்த 2 பெண்களிலும் தப்பில்லை .வீடியோ எடுத்த ஆட்களிலதான் தப்பு அப்படித்தானே!

உலகம் இப்போ அப்படித்தான் மாறிக்கொண்டு வருகிறது என்பதை முள்ளிவாய்காலில் கண்டோமே. இருந்தாலும் சந்தர்பத்திற்கேற்ப, ஆளுக்கேற்ப அது மாறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை : விரைவில் சட்டமூலம் என்கிறது அரசாங்கம்

12 JUL, 2023 | 09:13 AM
image
 
(எம்.மனோசித்ரா)

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அண்மைக் காலங்களில் பௌத்த மதகுமார்கள் சிலர் விகாரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நேற்று செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது கேள்வியெழுப்பப்ட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நாம் இன, மத பேதங்களால் பாரிய அழிவுகளை எதிர்கொண்ட நாட்டவராவோம்.

ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் பௌத்த மதகுமார்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எதிவரும் இரு மாதங்களுக்குள் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இது தொடர்பில் புத்த சாசன , மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன திஸாநாயக்க அறிவித்துள்ளார். இறுதி சட்ட மூலம் மகா சங்கத்தினரின் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மகா நாயக்க தேரர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு , அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் புத்த சாசன அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

https://www.virakesari.lk/article/159784

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

தமிழர்களை கொல்லும்…. பொலிஸ், இராணுவத்துக்கு பதவி உயர்வும்….
அயல் நாட்டு தூதுவர் பதவியும் கொடுத்து அலங்கரிப்பது மாதிரி,
இந்தப் புக்குகளுக்கும்…. உயர் பதவி கொடுத்து அலங்கரித்தால் குறைந்த போய் விடுவீர்கள். 
-ஊர்க்கிழவி.- 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

மத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

 இவர் என்ன சொல்ல வருகிறாரென விளங்கவில்லையே.   

On 10/7/2023 at 20:18, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'M MADAWALA wE பன்சலைகளில் நடக்கும் அசம்பாவிதங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் தண்டனை; புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன எச்சரிக்கை.'

ஆசியாவின் அதிசயம்....  ஸ்ரீலங்கா. 😡

5 hours ago, ஏராளன் said:

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவர் இப்படிச்சொல்கிறார், அவர் அப்படிச்சொல்கிறார், எது உண்மை! 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

 இவர் என்ன சொல்ல வருகிறாரென விளங்கவில்லையே.   

இவர் இப்படிச்சொல்கிறார், அவர் அப்படிச்சொல்கிறார், எது உண்மை! 

பிச்சைக்காரன், சத்தி எடுத்த மாதிரி..  animiertes-kranke-smilies-bild-0057.gif
ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு விதமான அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். animiertes-kranke-smilies-bild-0036.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களை கொல்லும்…. பொலிஸ், இராணுவத்துக்கு பதவி உயர்வும்….
அயல் நாட்டு தூதுவர் பதவியும் கொடுத்து அலங்கரிப்பது மாதிரி,
இந்தப் புக்குகளுக்கும்…. உயர் பதவி கொடுத்து அலங்கரித்தால் குறைந்த போய் விடுவீர்கள். 
-ஊர்க்கிழவி.- 😂 🤣

சிங்களவனுக்கு இனவாதம் மதவாதம் மட்டுமே மூலதனம். அவை இரண்டையும் விட்டால் சிங்களவனுக்கு ஒரு கோவண துண்டும் மிஞ்சாது...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிங்களவனுக்கு இனவாதம் மதவாதம் மட்டுமே மூலதனம். அவை இரண்டையும் விட்டால் சிங்களவனுக்கு ஒரு கோவண துண்டும் மிஞ்சாது...:cool:

முந்தின காலங்களில் இனவாதத்துடன் பாணும், பருப்பையும் சேர்த்து கொள்ளுவார்கள். சிங்களவனுக்கு பாணும் பருப்பும் என்றால் உயிர். ஆனால் இப்போது பாணும் , பருப்பும் என்று சொன்னால் அடிதான் விழும்.

எனவே உணவுப்பொருட்களை பற்றி இப்போது பேசமுடியாது என்பதால், இனவாதம், மதவாதத்துடன் தங்களது தேசபக்தி (Patriot ) யையும் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த திசையில்தான் வீரசேகரா, விமல், கம்மன்பில செல்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.