Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு – யாழ். ரயில் சேவைக்கான ஆசன முன்பதிவுகள் ஆரம்பம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Cruso said:

எனவே இப்போதும்கூட இந்த சொகுசு பேரூந்துகளையே மக்கள் நாடுகிறார்கள். எனவே தொடரூந்தில் செல்வதால் செலவு குறைவு என்று சொல்வதட்கில்லை.

2015 இல் குளிரூட்டிய தொடரூந்தில் கொழும்பு போவதற்கு 4-5 நாட்கள் முதலே முயற்சி செய்தும் இடம் கிடைக்கவில்லை.திரும்ப வரும்போதும் இதே நிலை தான்.

விசாரித்ததில் கூடுதலான இராணுவத்தினர் அவர்களுக்குரிய இலவச பயணச் சீட்டுக்களை பயன்படுத்துவதால் சாதாரண மக்கள் இதில் பயணிப்பது கொஞ்சம் கஸ்டம் என்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

அப்படி லாபமீட்டியது உண்மைதான். இப்போது கடடணங்களின் அதிகரிப்பால் மக்கள் அரை சொகுசு , சொகுசு பஸ் வண்டிகளை நாடுகிறார்கள்.

ஏன் என்றால் இங்கு பஸ் வண்டியில் ஏறினால் வீடிட்கோ அல்லது அந்த ஊருக்கோ போய் சேர்ந்து விடலாம். இல்லாவிட்ட்தால் கொடிகமத்திலோ, யாழ்பாணத்திலோ இறங்கி இன்னொரு பேரூந்துக்கு காத்திருக்க வேண்டும்  அல்லது முச்சக்கர வண்டிக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும்.

எனவே இப்போதும்கூட இந்த சொகுசு பேரூந்துகளையே மக்கள் நாடுகிறார்கள். எனவே தொடரூந்தில் செல்வதால் செலவு குறைவு என்று சொல்வதட்கில்லை.

இருந்தாலும் தொடரூந்தில் யாழ்மக்களைவிட அனுராதபுரம் செல்லும் மக்களே அதிகம். அரச அலுவலகங்களில் வர்றன்ட் எழுதும் வேலைகள் மும்முரமாக நடப்பதாகவும் கேள்வி.  

நன்றி.

பேரூந்தில் ஏறி கையில் உயிரை பிடித்து கொண்டு போகும் திகில் அனுபவத்தை நாடி போகிறார்களோ🤣.

நான் ஒரு தொடரூந்து காதலன். இலங்கை போகும் போது தனியே போனால் தொடரூந்து, குடும்பமாக என்றால் சிற்றூர்ந்து.

என்னை பொறுத்தவரை பலூன் பஸ்சை விட, 2ம் வகுப்பு தொடரூந்து மேல். ஆனால் எல்லா ஊருக்கும் போக பேரூந்து வசதி என்பதும் உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அது சரி ஆதவன் ஏன் ரயில், ரயில் என எழுதுகிறது. தொடரூந்து என்ற நல்ல சொல்லிருக்க.

ஆதவன் “உஜாலாவுக்கு” மாறி ரொம்ப காலமாச்சு.
தொடரூந்து என்று எழுதினால், எழுத்துப் பிழை விட்டுவிடுவார்கள்
 என்று நினைத்து, ரயில் என்று எழுதியிருக்கலாம். 😁

இப்ப எல்லா ஊடகங்களும்…. “தமிங்கிலீசில்” தான் எழுதுகின்றன.
ஊரில் இருந்து வரும், சில “யூ ரியூப்” காணொளிகளைப் பார்த்தால்,
காதால் புகை போகும் அளவிற்கு, தவறான ஆங்கில உச்சரிப்புடன் 
அதிக ஆங்கில சொற்களை கலந்து பேசுவார்கள்.

சுத்த தமிழில் வந்த செய்திகள் எல்லாம்… அவர்களின் காலத்துடன் போய் விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தொடரூந்து பயணம் செய்து இருக்கிறேன் நல்லதொரு அனுபவிப்பு.

8 hours ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை பலூன் பஸ்சை விட, 2ம் வகுப்பு தொடரூந்து மேல்.

💯

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஆதவன் “உஜாலாவுக்கு” மாறி ரொம்ப காலமாச்சு.
தொடரூந்து என்று எழுதினால், எழுத்துப் பிழை விட்டுவிடுவார்கள்
 என்று நினைத்து, ரயில் என்று எழுதியிருக்கலாம். 😁

இப்ப எல்லா ஊடகங்களும்…. “தமிங்கிலீசில்” தான் எழுதுகின்றன.
ஊரில் இருந்து வரும், சில “யூ ரியூப்” காணொளிகளைப் பார்த்தால்,
காதால் புகை போகும் அளவிற்கு, தவறான ஆங்கில உச்சரிப்புடன் 
அதிக ஆங்கில சொற்களை கலந்து பேசுவார்கள்.

சுத்த தமிழில் வந்த செய்திகள் எல்லாம்… அவர்களின் காலத்துடன் போய் விட்டது. 

அவர்களுக்கு முன்பும் ஜப்தி, தயார், ஹர்த்தால், ஜரூர், ரயில், ஏர்போர்ட் என எழுதினார்கள்.

இப்போ மறுபடியும் அதை மீள உருவாக்குகிறார்கள்.

விகாரை கட்டுறான் என எமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயத்தை இட்டு துள்ளி குதிக்கும் நாம், எமது 100% கட்டுப்பாட்டில் உள்ள சுயம் காக்கும் இப்படியான விடயங்களை தட்டி கழிக்கிறோம்.

தனிமனிதர்கள் எழுதலாம். ஊடகங்கள் பொறுப்பாக எழுத வேண்டும்.

43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் தொடரூந்து பயணம் செய்து இருக்கிறேன் நல்லதொரு அனுபவிப்பு.

💯

ஓம். நான் அநேகமாக எல்லா தடத்திலும் போயுள்ளேன். புதிதாக கட்டிய கதிர்காம தடத்தில் போகவில்லை. காலி வரைக்கும் போயுள்ளேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

தனிமனிதர்கள் எழுதலாம். ஊடகங்கள் பொறுப்பாக எழுத வேண்டும்.

உண்மைதான்... ஊடகங்கள் எழுதும் போது,
அதனை வாசிக்கும் வாசகர்களும் தங்களை அறியாமலே...  
அந்த பிறமொழி சொற்களை, தமிழ்நாட்டு மக்கள் கதைக்கும் தமிழ் போல 
பாவிக்கத் தொடங்கி விடுவார்கள். இது , மிக ஆபத்தானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

2015 இல் குளிரூட்டிய தொடரூந்தில் கொழும்பு போவதற்கு 4-5 நாட்கள் முதலே முயற்சி செய்தும் இடம் கிடைக்கவில்லை.திரும்ப வரும்போதும் இதே நிலை தான்.

விசாரித்ததில் கூடுதலான இராணுவத்தினர் அவர்களுக்குரிய இலவச பயணச் சீட்டுக்களை பயன்படுத்துவதால் சாதாரண மக்கள் இதில் பயணிப்பது கொஞ்சம் கஸ்டம் என்றார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்னரே முற்பதிவு செய்தால் தான் அண்ணை குளிரூட்டப்பட்ட தொடரூந்தில் பயணிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஒரு மாதத்திற்கு முன்னரே முற்பதிவு செய்தால் தான் அண்ணை குளிரூட்டப்பட்ட தொடரூந்தில் பயணிக்க முடியும்.

தகவலுக்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடரூந்து பற்றிய தேவையான செய்திக்கு ரயில்,  ரயில் சேவை என்று எழுதும் ஆதவன் தனது கற்பனை செய்தியில் தடகள விளையாட்டு வீரர்கள்,  வீராங்கனைகள் என்று தமிழில் எழுதுகின்றது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'யாழ் நிலா' அதி சொகுசு ரயில் சேவை ஆகஸ்ட் 04ஆம் திகதி முதல் ஆரம்பம்

Published By: DIGITAL DESK 3

26 JUL, 2023 | 02:51 PM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டின் வடக்கு பகுதியை மையமாக கொண்டு கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான 'யாழ் நிலா'  எனும் அதி சொகுசு புதிய ரயில் சேவையொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வார இறுதிகளில் செயற்படவுள்ள இந்த புகையிரத சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என்றும், காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை ரயில் நிலையத்தை வந்தடையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அதி சொகுசு ரயிலில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளதாகவும், ரயிலின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  

'யாழ் நிலா' ரயிலில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளதுடன், மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இந்த ரயில் சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/160971

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஆசனமொன்றுக்கு 4000 ரூபாவும்

வெறும் 10 பவுண்ஸ் - அடுத்த முறை யாழ்நிலாத்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வெறும் 10 பவுண்ஸ் - அடுத்த முறை யாழ்நிலாத்தான்.

அண்ணை முற்பதிவை மறக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

அண்ணை முற்பதிவை மறக்கவேண்டாம்.

ஓம். கொழும்பு பார்டியாள் எதாவது ஒன்றை கேட்டுப்பார்க்கோணும்.

முன்பதிவு ஒன்லைனோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Please note that reservations for northern line are only available up to Anuradhapura from 5th January 2023 onwards due to maintenance activities

https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/

booking.jpg

அண்ணை Srilankan railwayஇன் இந்த இணைப்பில் இருக்கும் தகவல்கள் இது தான்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கல்கிஸை - காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட சொகுசு ரயிலான யாழ் நிலாவின் முதல் பயணம் இன்று ஆரம்பம்!

04 AUG, 2023 | 01:49 PM
image
 

கல்கிஸை - காங்கேசன்துறைக்கு  இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இன்று (4) இரவு 10 மணிக்கு கல்கிஸை ரயில்  நிலையத்திலிருந்து முதல் முறையாக பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

'யாழ் நிலா' என பெயரிடப்பட்டுள்ள இந்த குளிரூட்டப்பட்ட ரயில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 10 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸையை வந்தடையும்.

யாழ் நிலா சுற்றுலா ரயிலில் பயணம் செய்வதற்கு முதல் வகுப்பு கட்டணமாக 4,000 ரூபாயும் இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3,000 ரூபாயும் மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2,000 ரூபாயும் அறவிடப்படும்.

இந்த குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தினமும் இயக்கப்படும் என்று திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கல்கிஸை - காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட சொகுசு ரயிலான யாழ் நிலாவின் முதல் பயணம் இன்று ஆரம்பம்! | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.