Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில், சமீபகாலமாகக் காலநிலை ஆர்வலர்களால்கடைசித் தலைமுறைஎன்ற அமைப்பினூடாக வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களால், மக்கள் விசனம் அடைந்திருப்பது என்னவோ உண்மைதான்.

12.07.2023 புதன்கிழமை Stralsund நகரின் பிரதான வீதியில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வீதியை மறித்துப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடந்த வீதியில் வாகனம் செலுத்தி வந்த  41 வயதான பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர்  அங்கே அமைதியை இழந்து, கோபம் கொண்டு செய்த செயல் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

பார ஊர்தி ஓட்டுனர்  தனது வாகனத்தில் இருந்து இறங்கி,போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை வீதியில் இருந்து இழுத்து நடைபாதையில் போட்டுவிட்டு மற்றொருவரை  தாக்க முயன்றிருக்கிறார். அவர் தனது கோபத்தின் உச்சமாக தனது வாகனத்தில் ஏறி அதை ஓட்டவும் செய்திருக்கிறார். இதனால் இளைஞன் ஒருவன் ஒரு மீற்றர் தூரத்துக்கு வாகனத்தால் முன் நோக்கித் தள்ளப்பட்டிருந்தான்.

உடல்ரீதியான தாக்குதல் முயற்சிக்காக ஒரு வழக்கும்,வாகனத்தை தவறாக ஓட்டினார் என்று இன்னுமொரு வழக்கும் ஓட்டுனர் மேல் பதியப்பட்டிருக்கிறது.  கடைசித் தலைமுறை உறுப்பினர்கள்,பொதுச் சட்டத்தை மீறியதாகவும், வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததாகவும் அவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

இன்று இந்த பிரச்சினையை பொலிஸார் Stralsund மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்கிறார்கள். ஓட்டுனர் தனது சாரதிப் பத்திரத்தை இழக்கப் போகிறாரா? இல்லை தக்கவைப்பாரா? என்பது கேள்வி.

https://www.ndr.de/nachrichten/mecklenburg-vorpommern/Klimaaktivist-in-Stralsund-angefahren-Gericht-prueft-Fuehrerscheinentzug,letztegeneration374.html

  • கருத்துக்கள உறவுகள்

12.07.2023 அன்று  நடந்த சம்பவத்தின், காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்

3 பேர் போராடும் போராட்டத்திற்கு 30 மீடியாஸ் இருக்குது போல

1 hour ago, தமிழ் சிறி said:

12.07.2023 அன்று  நடந்த சம்பவத்தின், காணொளி.

 

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2023 at 12:52, Kavi arunasalam said:

--- உடல்ரீதியான தாக்குதல் முயற்சிக்காக ஒரு வழக்கும்,வாகனத்தை தவறாக ஓட்டினார் என்று இன்னுமொரு வழக்கும் ஓட்டுனர் மேல் பதியப்பட்டிருக்கிறது.  கடைசித் தலைமுறை உறுப்பினர்கள்,பொதுச் சட்டத்தை மீறியதாகவும், வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததாகவும் அவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

இன்று இந்த பிரச்சினையை பொலிஸார் Stralsund மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்கிறார்கள். ஓட்டுனர் தனது சாரதிப் பத்திரத்தை இழக்கப் போகிறாரா? இல்லை தக்கவைப்பாரா? என்பது கேள்வி.

 

 

spacer.png

4rc6ekycbbil0m0bn4bmkxqziw9yntjk.jpg

Am Dienstag dann die Entscheidung vor dem Amtsgericht Stralsund: Der Lkw-Fahrer muss wegen versuchter Nötigung 1800 Euro Geldstrafe zahlen (60 Tagessätze). Zudem erhielt er vier Monate Fahrverbot. Laut Gerichtssprecher Dirk Simon könne die Zeit seit seiner Führerscheinabgabe darauf angerechnet werden. Dafür muss das Urteil aber rechtskräftig sein.

https://www.nordkurier.de/regional/mecklenburg-vorpommern/klima-kleber-angefahren-das-ist-die-strafe-fuer-den-lkw-fahrer-2086748

நேற்று முன்தினம், லொறி சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி...   
1,800 யூரோக்கள் அபராதமும்  நான்கு மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆக குறைந்த தண்டணை ஓட்டுனருக்கு கொடுத்தது கவலைக்குரியது.காலநிலை ஆர்வலர்கள் எல்லோருடைய பாதுகாப்பிற்காகவும் போராடுபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

spacer.png

4rc6ekycbbil0m0bn4bmkxqziw9yntjk.jpg

Am Dienstag dann die Entscheidung vor dem Amtsgericht Stralsund: Der Lkw-Fahrer muss wegen versuchter Nötigung 1800 Euro Geldstrafe zahlen (60 Tagessätze). Zudem erhielt er vier Monate Fahrverbot. Laut Gerichtssprecher Dirk Simon könne die Zeit seit seiner Führerscheinabgabe darauf angerechnet werden. Dafür muss das Urteil aber rechtskräftig sein.

https://www.nordkurier.de/regional/mecklenburg-vorpommern/klima-kleber-angefahren-das-ist-die-strafe-fuer-den-lkw-fahrer-2086748

நேற்று முன்தினம், லொறி சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி...   
1,800 யூரோக்கள் அபராதமும்  நான்கு மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.

நாட்டாமை தீர்ப்பு பிழை.

வழக்கினை நீதிமன்றம் கொண்டுபோன போலீசாரே அந்த அபாரதத்தினை கட்ட வேணும். போலீசார் இவர்களை அப்புறப்படுத்தி வீதியை அதுக்குரிய பாவனைக்கு திறந்து விட்டிருக்க வேணும்.

கருணாநிதியின் ரயில் மறிப்பு போராட்டம் போல, இது, பொது மக்களுக்கு அரிக்கண்டம் தரும் ஒரு போராடடம்.

எந்த ஒரு போராட்டமும், அடுத்தவர்களுக்கு இடையூறு இன்றி அரசுக்கு சொல்லப்படவேண்டும்.

அவசரமாக, ஏதோ  ஒரு காரணத்துக்காக வீதியினை பாவிப்பவர்கள், தமது போராட்டம் மூலம், உபத்திரவம் கொடுப்பது தவறு.

இந்த வாகனம், செல்லும் வழியில், எச்சிரிக்கையின மீறியும் உக்காத்திருந்தவர் மேல் தவறு. அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விட்டு, அந்த சாரதியை கோட்டுக்கு கொண்டு போன போலீசார், தாம் தமது கடமையை சரி வர செய்யாமல் இருந்த்துக்கான காரணத்தினை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்ப்பாட்டங்கள்,மறியல்கள் செய்ய ஆயிரம் வழிகள் இருக்கின்றது. சாதாரண அன்றாட வாழ்க்கை நிலையை தடை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இப்படியான போராட்டம் செய்பவர்கள் ஏதோ ஒரு அமைப்புகள் அல்லது கட்சிகளை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். இப்படியானவர்கள் பாராளுமன்றம் சென்று அங்கே கோரிக்கை வைத்து வென்றெடுக்கட்டும்.
ஒரு சில கொழுப்பெடுத்த போராட்டங்களுக்கு கொள்ளி வைக்க வேண்டும்..... 😡

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் செய்கின்ற அழிவுவேலைகளினால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு பூமியால் தாக்கு பிடிக்க முடியும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த போராடும் போராளிகள் கொள்ளி வைத்து எரிக்கபட வேண்டிய கொழுப்பெடுத்த போராட்டங்காரர்கள்.ஆனால் தங்களது மதம் இயற்கையை  வழிபடும் மதம் என்று இணையத்தில் புலுடாக்கள் வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.