Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அரசு அனுமதியுடன் வாடகைக்கு போய் பிரண்ட் – கேர்ள் பிரண்ட் பெறலாம்’ -இந்த சிங்கிள்ஸ் பரிதாபம் எங்கே தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாடகைக்கு பாய் பிரண்ட் - கேர்ள் பிரண்ட்

கேர்ள் பிரண்ட் அல்லது பாய் பிரண்ட் இல்லையே என ஏங்கித் தவிக்கும் சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு சகியாத அரசாங்கம், வாடகைக்கு அவர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது. அவை எங்கே என்பதற்கு அப்பால், எதனால் என்பதில் நிறைய விஷயங்கள் பொதிந்திருக்கின்றன.

உருப்படியான கேர்ள் பிரண்ட் அல்லது போய் பிரண்ட் அமையாது போவதன் துயரத்தை ’2 கே கிட்ஸ்’ வசம் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஏறெடுத்து பார்க்காதவர்கள் பாதிப்பேர்; அப்படி பார்த்தாலும், பழகினாலும் பாதியிலே முட்டிக்கொண்டு விலகுவோர் மீதிப்பேர். இங்கே என்றில்லை, உலகமெங்கும் நவயுக இளசுகளின் எதிர்பால் ஈர்ப்பு என்பது சதா அக்கப்போரிலேயே இருக்கிறது.

ஜப்பான் தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரே வித்தியாசம்; அங்கே சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு அரசே மனமிரங்கி வந்திருக்கிறது. அதன்படி ஆண்/பெண் தோழமை வேண்டுவோர் மனமுடைந்து போகவேண்டாம். அதற்கென இயங்கும் அரசு அங்கீகாரம் பெற்ற இணையதளங்களை நாடி மனமும், குணமும் ஒன்றிய தோழன் அல்லது தோழியை வாடகைக்கு வார்த்துக் கொள்ளலாம்.

வாடகைக்கு பாய் பிரண்ட் - கேர்ள் பிரண்ட்

வாடகைக்கு பாய் பிரண்ட் - கேர்ள் பிரண்ட்
 கட்டணம் சற்று அதிகம்தான்.  இது தவிர்த்து பொருத்தமான ஜோடியை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக்க தனி கட்டணமும் உண்டு. அரசு அனுமதியோடு இயங்கும் இந்த இணையதளங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், போட்டிக்காக மேற்படி தெரிந்தெடுப்புக்கான கட்டணம் மட்டும் முதல்முறை இலவசம் என சில தளங்கள் அறிவித்திருக்கின்றன.
தறிகெட்டு அலையும் இளைய சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் வகையிலான இந்த முறைகேடுகளுக்கு அரசே துணைபோகலாமா என்ற அறச்சீற்றம் எழுவதற்கு முன்னர், ஜப்பானியர்களின் வெளியே அறியாத துயரங்களை சற்று புரிந்தாக வேண்டும். ஜப்பானில் திருமணத்தை தவிர்ப்போரும், தகையாதோரும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். சரியான இணை அமையவில்லை, அமைந்ததை முறையாக தொடர முடியவில்லை என்ற தனிப்பட்ட காரணங்கள் மட்டுமன்றி, நடப்பு விலைவாசிக்கு உட்பட்டு குடும்பம், குழந்தை என உறவைப் பேண முடியாதும் ஜப்பானியர்கள் தவிக்கின்றனர்.

இதன் காரணமாக காலமெல்லாம் தனியே வாழவும் தலைப்படுகிறார்கள். இப்படி வாழ்வோர் மிகுந்த மன அழுத்தம் மற்றும் சோர்வுக்கும் ஆளாகிறார்கள். ஏற்கனவே நாட்டில் அதிகரித்து வரும் தற்கொலைகள் காரணமாக ஜப்பான் விழி பிதுங்கி போயிருக்கையில், கூடுதலாக வாடி வதங்கும் சிங்கிள்ஸ் துயரத்தை போக்க தடுமாறுகிறது. அந்த வகையில் ஏற்கனவே அனுமதி பெறாது இயங்கிக்கொண்டிருந்த, வாடகைக்கு துணை தேடும் இணையதளங்களை முறைப்படுத்தி தற்போது நிபந்தனைகளுடன் அனுமதித்து வருகிறது.

அரசு அங்கீகாரம் இன்றியே டேட்டிங், மீட்டிங் என பிரத்யேக செயலிகள், இணையதளங்கள் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வெவ்வேறான போர்வைகளில் இயங்கியே வருகின்றன. ஜப்பான் தனது தனித்துவ பிரச்சினையான, அதிகரித்திருக்கும் துணையில்லாத குடிமக்களின் துயரம் போக்க பரிவுடன் முன்வந்திருக்கிறது. இதன்படி எவர் வேண்டுமானாலும், அதற்கென இயங்கும் இணையதளத்தில் பதிவு செய்து, விரும்பிய தோழன் அல்லது தோழியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு அப்பால், இணையதளங்களும் ஏகப்பட்ட நிபந்தனைகளை வைத்திருக்கின்றன. அவை வாடகைக்கு செல்லும் ஆண் அல்லது பெண்ணின் பாதுகாப்பு சார்ந்தவை.

துணை இல்லாதவர்கள், துணையுடன் உறவு முறிந்து போனவர்கள், துணையை பராமரிக்கும் அளவுக்கு வருமானம் இல்லாதவர்கள் என ஏராளமான ஜப்பானியர்கள் தற்போது இந்த வாடகை தோழமையுடன் ஓரிரு மணி நேரம் எங்கேனும் உலாத்தி, உறவு பாராட்டி விடை பெறுகிறார்கள். குறிப்பாக நேரமின்மை காரணமாக தோழமையுடன் தோள் சேர வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த ஏற்பாடுகள் வரப்பிரசாதமாகி வருகின்றன.

வெறுமனே தேக தேவைக்காக இதனை சுருக்கி விட முடியாது என்பதில், ஜப்பானியர்களின் வினோத நிதர்சனங்கள் மறைந்திருக்கின்றன. இதே தளங்களில் காதலன் காதலி மட்டுமல்ல, தாய், தந்தை, சகோதரன், சகோதரி என இதர குடும்ப உறுப்பினர்களையும் வாடகைக்கு பெற முடியும். உடைந்து போகும் குடும்பங்கள், ஒற்றைக் குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் பெற்றோர், உறவு பாராட்ட நேரம் மற்றும் மன இல்லாத நடப்பு அலுவல் சூழலின் அழுத்தங்கள் என… இவற்றின் மறுபக்கம் வேதனை சூழ்ந்தும் இருக்கிறது.

எனவே, தனிமையிலும் துயரத்திலும் தவிப்போருக்கு உதவும் வகையில் இணையதளங்களில் குடும்பமாக பதிவு செய்வோர், தங்கள் காதலன்/காதலியை தாராள மனதுடன் அனுப்பி வைப்போர் என, அரசு ஆதரவில் ஜப்பானியர்கள் ஆதுரம் பரப்பி வருகின்றனர்.

காமதேனு

https://thinakkural.lk/article/263808

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மட சங்கத்தில இணைய ஒருத்தரும் இல்லையா?!

முரட்டு சிங்கிள்ஸ் [90ஸ், 80ஸ், 70ஸ் கிட்ஸ்! (வயது வரம்பு இல்லை)]

சங்கத்தின் அனுமதியின்றி திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

 

முரட்டு சிங்கிள்ஸ் Morattu sin - Google Play இல் உள்ள ஆப்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி சப்பெண்டு போயிருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த திரி சப்பெண்டு போயிருக்கு 

எல்லோருக்கும் வயது போய் விட்டது, உங்களை போல் இளவயது ஆட்களுக்கு தான் சரி இந்த வாடகை🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

எல்லோருக்கும் வயது போய் விட்டது, உங்களை போல் இளவயது ஆட்களுக்கு தான் சரி இந்த வாடகை🤣

ஹாஹா யாழ்களம் வயோதிபர் மடமாகிவிட்டது என்று சொல்லுறீங்க 🤔😛

  • கருத்துக்கள உறவுகள்

Prakashraj.Gif GIF - Prakashraj Comedy Reactions - Discover & Share GIFs

என்ன சத்தம் அங்க ........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2023 at 13:30, suvy said:

Prakashraj.Gif GIF - Prakashraj Comedy Reactions - Discover & Share GIFs

என்ன சத்தம் அங்க ........!   😁

சும்மா பேசிட்டு இருக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.