Jump to content

மனமும் குணமும் மாறாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4292.jpg

நீங்கள் யார்?” பிறிடெகார்ட் இன் கேள்வியால் குமார் அதிர்ந்து போனான்.

 அவன் தன்  மனைவி சந்திராவைப் பார்த்தான். இமை வெட்டாமல் மெதுவாக திறந்திருந்த வாயுடன் அவளும் அதிர்ச்சியில் இருந்தாள்.

 கேள்வி கேட்ட  பிறிடெகார்ட் பதிலுக்காகக் காத்திருப்பது போன்ற பாவனையுடன் இருந்தார்.

 ஒருவேளை பகிடி விடுகிறாரா என்று குமார் தனக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் ஷோபாவில் அமர்ந்திருந்த  பிறிடெகார்ட்டைப் பார்த்த போது, அவனுக்கு அப்படித் தெரியவில்லை. எப்பொழுதும் மற்றவர் மனம் கவலைப்படும் அளவுக்கு நடந்து கொள்ளாதவர். ஏதோ ஒரு தவறு இருப்பது அவனுக்குத் தெரிந்தது.

 “எப்பிடி இருக்கிறீங்கள் மம்மா?”நிலமையை சீராக்க குமார் முயற்சித்தான்.

 “நீங்கள் யாரென்று இன்னும் சொல்லவில்லையே” பிறிடெகார்ட்டின் கேள்வியில் சலிப்புத் தெரிந்தது.

 நேற்றுக் காலையில் கூட தொலைபேசியில் இவருடன் உரையாடி இருந்தோமே! இப்பொழுது என்ன நடந்தது இவருக்கு? குமாரும் சந்திராவும் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள்.

 நேற்று குமார்பிறிடெகார்ட்டுடன் தொலைபேசியில் கதைக்கும் போது, “நாளைக்கு வருகிறாயா? சந்திராவும் கூட வருகிறாளா? நல்லது. நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு வா. நாங்கள் மதிய உணவுக்கு ரெஸ்ரோரண்டுக்குப் போகலாம்இப்படிச் சொன்ன பிறிடெகார்ட் இப்பொழுதுநீங்கள் யார்?” என்று கேள்வி கேட்பது அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது.

 குழப்பங்களுக்கு மத்தியில் குமார் சொன்னான், “நீங்கள்தானே இன்றைக்கு மத்தியானம் ஒரு மணிக்கு வரச் சொன்னனீங்கள்

 “ஓ.. நீங்கள்தானா அது. சரி வாங்கோ சாப்பிடப் போகலாம். கார் கொண்டு வந்தனீங்கள்தானே?”

 குமாருக்கு இப்பொழுது  நிலமை என்ன என்பது மெதுவாகப் புரிய ஆரம்பித்ததுபிறிடெகார்ட்டை அல்ஸ்கைமர் நோய் பாதித்திருக்கிறதுநினைவுகள் அவரிடத்தில் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்தது.

 மனைவி, பிள்ளைகளை நாட்டிலே விட்டு விட்டு 1984இல் தனியாக குமார் யேர்மனிக்கு வந்த  போது அவன் இருந்த அகதி முகாமின் முன்னால் உள்ள வீதியில்  இருந்த ஒரு வாங்கிலில் இருந்து புத்தகம் வாசிப்பது அவனது வழக்கம். அன்றும் அப்படித்தான் அவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான்.

 “இளைஞனே, தொந்தரவுக்கு மன்னித்துக்கொள். நான் இந்த வாங்கிலில் அமரலாமா?” ஆங்கிலத்தில் அவனிடம்  கேட்டு விட்டு ஒரு மூதாட்டி கனிவான பார்வையோடு அங்கே நின்றார்.

 “தாராளமாக உட்காருங்கள்அவரின் கனிவான பேச்சுக்கு கண்ணியமாக குமார் பதில் தந்தான்.

 வாங்கிலில் அமர்ந்த அந்த மூதாட்டி அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

 “எனது பெயர்  பிறிடெகார்ட்பிறிடெகார்ட் கிளாற்சிலே (Fridegart Glatzle). நான் ட்ராம்மில் இந்த வழியாகப் பயணிக்கும் பொழுதுகளில்   நீங்கள் இந்த வாங்கிலில் இருந்து புத்தகம் வாசிப்பதை பல தடவைகள் பார்த்திருக்கிறேன்”  

 குமார் சிரித்துக் கொண்டே தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

 “புத்தகங்கள் வாசிப்பதற்கேற்ற இடம் இதுவல்லவே. பூங்காவில் அமைதியான இடத்தில் இருந்து வாசிக்கலாம். இல்லை என்றால் வாசிகசாலைக்குப் போகலாம்

 “முன்னே  இருக்கிற அகதி முகாமில்தான் நான் இருக்கிறேன். பொழுது போகேல்லை.. ”

யேர்மனியர் ஒருவர்   தன்னுடன் உரையாடுவதில் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறிலங்காவை விட்டு யேர்மனிக்கு தான் புலம் பெயர்ந்த விபரத்தை குமார் அவருக்குச் சொன்னான்.    

 பிறிடெகார்ட்டும்  தன் பங்குக்கு, இரண்டாவது உலக யுத்தத்தில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட போர் விமானியான துணைவனை இழந்தது, உணவுக்காக எழுபது கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணித்தது, பிரான்ஸ், அமெரிக்க இராணுவ வீரர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க எப்பொழுதும் அழுக்காக இருப்பது, அழுகிய உருளைக் கிழங்கை உடலில் பூசி அவர்கள் நெருங்கி வராமல் பார்த்துக் கொள்வது என்று நிறையவே சொல்ல ஆரம்பித்தார்.

 “அகதி வாழ்க்கை இலகுவானதல்ல. பலவற்றை இழந்துதான் அந்த நிலமை வருகிறது. உங்களை நான் ஒருமையில் அழைக்கலாமா?”

 “அழையுங்கள். உங்களைப் பார்க்கும் போது எனது தாய் நினைவுக்கு வருகிறார்

 “குமார், நீ ஒரு அகதி. உனது தனிமை.. இதை எல்லாம் ட்ராம்மில் நான் பயணிக்கும் போதே ஓரளவு கணித்திருந்தேன். இன்று உன்னுடன் கதைத்து உனக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கே வந்திருக்கிறேன்

 நாட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளுடன்  தொலைபேசியில் கதைக்க வாய்ப்பில்லை. கடிதம் எழுதிப் போட்டால் பதில் வருவதற்கு ஒரு மாதமாகும். சில வேளைகளில் அனுப்பப்படும் கடிதங்கள் போய்ச் சேருமா என்ற கேள்வியும் இருக்கும். சண்டைகள் நடுவே அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு அந்தரமான நிலை. இந்த நிலையில்  பிறிடெகார்ட்டின் பேச்சும்  அவர் தானாக அவனுக்கு உதவ வந்ததும் குமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 அவனது மனைவியும் பிள்ளைகளும் யேர்மனிக்கு வருவதற்கு  பிறிடெகார்ட்தான் உதவிகள் செய்தார். அகதிக்கான அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் வேலை நிமித்தமாக குமார் வேறு நகரத்துக்கு குடும்பத்துடன் போய் விட்டான்.

 ஆனாலும்  பிறிடெகார்ட் குமாரின் குடும்பத்துடன் தொடர்பிலேயே இருந்தார். அடிக்கடி தொலைபேசியில் கதைத்துக் கொள்ளும்  பிறிடெகார்ட் 150 கிலோ மீற்றர் ரயிலில் பயணித்து வருடத்துக்கு ஒரு முறையேனும் குமார் வீட்டுக்கு வந்து  ஒரு வாரம் தங்கிப் போவார்.

 அப்படி ஒரு தடவை குமார் வீட்டில் அவர் தங்கி இருந்த போது

குமார் இங்கே வா. உன் மகள் என்னைப் பார்த்து என்ன சொன்னாள் தெரியுமா?”

ஏதோ என்னவோ என்று குமார் ஓடி வந்த போது  பிறிடெகார்ட் மலர்ந்த முகத்தோடு இருந்தார்.

 “உன் மகள் என்னைஓமா’ (பாட்டி) என அழைத்தாள்”  பிறிடெகார்ட் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார்

 “எனக்கு ஒரு இனிய குடும்பம் கிடைத்திருக்கிறதுபிறிடெகார்ட் சந்தோசமாக இருந்தார். குமாரது குடும்பத்தில்  பிறிடெகார்ட்டும் உறுப்பினராகிப்  போனார்.

 வேலைகள், வீடு மாற்றம் மற்றும் குடும்பத் தேவைகள் மத்தியில் வழமையாக இளவேனிற் காலத்தில் தங்களிடம் வரும்  பிறிடெகார்ட்   அந்த வருடம் வராமல் போனதை குமார் கவனிக்கவில்லை. நேற்று  பிறிடெகார்ட்டின் நினைவு வந்து தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைத்தால், தன்னால் இப்பொழுது பயணங்களை மேற்கொள்ள முடியாதென்றும் குமாருக்கு நேரமிருந்தால் தன்னை வந்து பார்க்கும்படியும்  அவரிடம் இருந்து பதில் வந்தது.

 இன்று குமார் தனது மனைவியுடன் வந்து பார்த்தால்நீங்கள் யார்?” என்ற கேள்வி அவரிடம் இருந்து வருகிறது

 குமார், சந்திரா இருவரது குரல்களையும் தொலைபேசியில் கேட்கும் போது இனம் காணும்  பிறிடெகார்ட்டுக்கு அவர்களது முகங்கள் மறந்து போயிற்று. நேரில் கதைக்கும் போதும் குரல்களை அவரால் இனம் காண முடியவில்லை.

  அன்றைய மதிய உணவைரெஸ்ரோரண்டில் அந்நியர்கள் இருவருடன்  இருந்து உண்ட உணர்வு கூட  பிறிடெகார்ட்டுக்கு வந்திருக்கலாம்பிறிடெகார்ட்டின் வீட்டுக்கு திரும்ப வந்த போது, “எனக்கு களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் நித்திரை கொள்ளப் போகிறேன்என்றார்.

 புறப்படச் சொல்கிறார் என்பதை குமாரும் சந்திராவும் புரிந்து கொண்டார்கள்.

 அவர்கள் விடை பெறும்போது, “காரிலே பயணிக்கப் போகிறீர்கள். அவசரம் வேண்டாம்.நிதானமாக காரைச் செலுத்துங்கள். பெற்றோலுக்கு பணம் தரவா?”   பிறிடெகார்ட் எந்தவித பாவங்களையும் முகத்தில் காட்டாமல் கேட்டார்.

 அல்ஸ்கைமர் வந்தாலும் அவரது குணம் மட்டும் மாறவில்லை.

 

உண்மைச் சம்பவம்

Fridegart Glatzle ஒரு கலைஞர். அவரது படைப்புகள்  இணைய விற்பனைத்தளத்தில் இருக்கிறது.

 https://ta.wikipedia.org/wiki/பிறீடெகார்ட்_கிளாற்சிலே

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரீடகார்ட் போன்ற சிலர் அங்கங்கே இருப்பார்கள், அப்படி நான் முன்பு இருந்த இடத்திலும் ஒருவர் இருந்தவர் .....புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்.....நாங்கள் அங்கிருக்கும்போது அவருக்கு 100 வயது கொண்டாடியவர்கள்.....அப்போதும் கார் ஓடித் திரிந்தவர்......பின் பார்வை கொஞ்சம் குறைய சக மனிதர்களின் ஆயுளை கருத்தில் கொண்டு அவரது குடும்பம் அவரை வயோதிபர் இல்லத்தில் சேர்த்து விட்டிருந்தார்கள்....இருந்தால் இப்ப அவருக்கு 103/104 வயதிருக்கலாம்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறாதபற்றுள்ளவரிற்கு அல்சைமரால் கூட தடை போடமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறதி நோய்  வந்த போதும் அவரது பண்பு மாறவில்லை. எனக்கும் ஒரு சிறு அனுபவம் உண்டு ...வேறு ஒரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்  

அண்மைக் காலங்களில் கவி அருணாசம் அவர்களின் பகிர்வுகளை அடிக்கடி காண்பதில் மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்களும்  நன்றியும். மேலும் தொடர வாழ்த்துக்கள். .  

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2023 at 18:33, suvy said:

பிரீடகார்ட் போன்ற சிலர் அங்கங்கே இருப்பார்கள், அப்படி நான் முன்பு இருந்த இடத்திலும் ஒருவர் இருந்தவர் .....புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்.....நாங்கள் அங்கிருக்கும்போது அவருக்கு 100 வயது கொண்டாடியவர்கள்.....அப்போதும் கார் ஓடித் திரிந்தவர்......பின் பார்வை கொஞ்சம் குறைய சக மனிதர்களின் ஆயுளை கருத்தில் கொண்டு அவரது குடும்பம் அவரை வயோதிபர் இல்லத்தில் சேர்த்து விட்டிருந்தார்கள்....இருந்தால் இப்ப அவருக்கு 103/104 வயதிருக்கலாம்......!  👍

இதில் நான் குறிப்பிட்ட அந்த மனிதர் சென்றவாரம் இறந்து விட்டார்.....அப்போது அவருக்கு 104 வயது.....! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.