Jump to content

போனை பறித்த திருடனுடன் காதல் வயப்பட்ட இளம்பெண் (வீடியோ இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40-2.jpg

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.

இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள். இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும், மற்றொருவர் இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் உண்மையானது என பதிவிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/265452

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடிப்படையில்   களவு எடுக்கும் குணம் கொண்டவர்  இவரை நம்பலாமா ?
படத்தை   பார்த்து மயங்கும்  குணமும் இரக்கமும் கொண்டவர் . காலம் இவருக்குப் பதில் சொல்லட்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிலாமதி said:

இவர் அடிப்படையில்   களவு எடுக்கும் குணம் கொண்டவர்  இவரை நம்பலாமா ?
படத்தை   பார்த்து மயங்கும்  குணமும் இரக்கமும் கொண்டவர் . காலம் இவருக்குப் பதில் சொல்லட்டும்.  

40-2.jpg

பிரேசிலில்... களவு, சகஜம் அக்கா.
நீங்கள், போன் கதைத்துக் கொண்டு  சிக்கனலுக்கு நிற்கும் நேரத்திலோ, 
நடந்து  செல்லும் நேரத்திலோ... பேர்ஸ், போன் எதை என்றாலும்  பறித்துக் கொண்டு 
சந்து பொந்துக்குள்ளால் ஓடி மறைந்து விடுவார்கள்.

உதைபந்தாட்டம்  பிரேசிலில் நடக்கும் நேரம்,
பிரத்தியேகமாக வெளிநாட்டில் இருந்து செல்பவர்களுக்கு இந்தக் களவைப் பற்றி அறிவுறுத்தினார்கள்.

பெரும்பாலானவர்கள்... கள்ளர் என்றால், அந்தப் பெண் பிள்ளையும் என்ன செய்யிறது.
கள்ளன் என்றாலும்... ஆள் வாட்ட சாட்டமாக இருக்க, காதல் வந்திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள்

பாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கண்ணதாசன் இப்படி எழுதியிருப்பார்,

“ அவன் தான் திருடன் என்றிருந்தேன்

அவனை நானும் திருடிவிட்டேன்

முதல்முதல் திருடும் காரணத்தால்

முழுதாய் திருட மறந்துவிட்டேன்
 
இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்வதும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது..”
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.