Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத வெறியை விதைப்போர் தோல்வியே காண்பர் - சரத் பொன்சேகாவுக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

01 AUG, 2023 | 04:13 PM
image
 

இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார்.

கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா கொக்கரித்து வருகிறார். இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்போம் என்கிறார்.

போரில் வெற்றிக்குப் பின்னால் மத வெறியே வரலாறு. 

மைசூரைக் கைப்பற்றினோம். மதுரையைக் கைப்பற்றுவோம் என 725 ஆண்டுகளின் முன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் அதே மத வெறியுடன் தமிழகம் வந்தான்.

இந்துக் கோயில்களை அழித்தான். அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தான்.

தொடர்ந்து அறுபது ஆண்டுகள் தமிழகத்தில் முகமதியர் ஆட்சி. இந்துக் கோயில்கள் இடிந்தன. மசூதிகள் எழுந்தன. இராமநாதபுரத்தின் பெயரே இலாலாபாத் என மாறியது.

அயோத்தியில் பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையான இராமர் கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்பு இடித்தவன் பாபர். அங்கே மசூதியைக் கட்டினான்.

பாபர் வழிவந்த அவுரங்கசீப் காசியில் அருள்மிகு விசுவநாதர் கோயிலை முற்றாக அழித்து அங்கே மசூதியைக் கட்டினான்.

அலாவுதீன் கில்ஜி, மாலிக் கபூர், பாபர், அவுரங்கசீப் போன்றோர் வரிசையில், போரின் வெற்றியை மத வெறியாக்குகிறார். அந்தப் படைத்தளபதிகளைப் போலவே இந்துக்களை நோக்கிக் கொக்கரிக்கிறார் சரத் வீரசேகரா.

450 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் தென்கோடியில், பல்லாயிரம் ஆண்டு பழமையான, பல்லவர் திருப்பணி செய்த, சீனர் கல்வெட்டு எழுதிய, அருள்மிகு தென்னாவர நாயனார் கோயிலை கத்தோலிக்க மத வெறியோடு இடித்தவன் தளபதி தோமை சொயிசா. அங்கே உலூயிசா தேவாலயத்தைக் கட்டினான்.

416 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்கத் தளபதி கான்ஸ்டன்ட்டைன் கச்ச தீவில் அருள்மிகு கச்சாபகேச்சரர் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கினான்.

405 ஆண்டுகளுக்கு முன் இந்து அரசின் சங்கிலி மன்னனைத் தோற்கடித்த கத்தோலிக்க படைத்தளபதி இடீ லீவரா யாழ்ப்பாணத்தில் 400 சைவக் கோயில்களை இடித்தான். அங்கே தேவாலயங்களைக் கட்டுவித்தான்.

மன்னாரில் திருக்கேதீச்சரத்தைத் தடயமே இல்லாமல் முற்று முழுதாக அழித்தான்.

தோமை சொயிசா வழியில், கொன்ஸ்டன்ட்டையின் வழியில் இடி லீவரா வழியில், மத வெறியோடு இந்துக் கோயில்களைத் தாக்கியோர் அழித்தோர் கொக்கிரித்தோர் வழியில் போரில் வெற்றி பெற்ற மதகளிப்பில், வெற்றியைக் கொண்டாடும் மெய்சிலிர்ப்பில் இலங்கை, சிங்கள புத்த நாடு என்கிறார் மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா.

வெற்றியும் தோல்வியும் இரவும் பகலும் போல, மாறி மாறி வருவன அறியாரோ, மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா?

போரின் வெற்றிக்குப் பின்னால் நிதானமும் பெருந்தன்மையும் மாவீரன் அலெக்சாண்டருக்கு இருந்தது. இலங்கையில் மாவீரன் எல்லாளனுக்கு இருந்தது.

அத்தகைய நிதானமும் பெருந்தன்மையுமே இலங்கையில் புத்தர் கூறிய அன்பையும் அறனையும் அருளையும் அறிவையும் பெருக்கும். 

இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகளை, புத்த சமயத்தை, புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகரா நஞ்சாக விதைக்கிறார். படு தோல்வியையே காண்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161424

ஐயா வரலாற்று ஆதாரங்களோடு பொங்கியிருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு மாற மாட்டீர்கள் தானே, ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

பேச்சு மாற மாட்டீர்கள் தானே, ஐயா?

IMG-4317.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஐயா வரலாற்று ஆதாரங்களோடு பொங்கியிருக்கிறார்!

ஆராய்சி,

எழுத்து,

வடிவமைப்பு,

றோ

 

வெளியீடு

சச்சி ப்ரோ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

405 ஆண்டுகளுக்கு முன் இந்து அரசின் சங்கிலி மன்னனைத் தோற்கடித்த கத்தோலிக்க படைத்தளபதி இடீ லீவரா

தமிழ் அரசன் சங்கிலியனை  போத்துகல் தளபதி தோற்கடித்தான் என்ற வரலாற்றை மடை மாற்றி  எப்படி கூறியுள்ளார் பாருங்கள்.  பௌத்த ஆக்கிரமிப்பு எதிராக கூறுவதாக போக்கு காட்டிவிட்டு தமிழரிடையே மத வெறுப்பை தூண்டும் நஞ்சை அறிக்கை  முழுவதுமே கச்சிதமாக  கொட்டியுள்ளார் இந்த சச்சி என்ற மதவெறியர்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:

தமிழ் அரசன் சங்கிலியனை  போத்துகல் தளபதி தோற்கடித்தான் என்ற வரலாற்றை மடை மாற்றி  எப்படி கூறியுள்ளார் பாருங்கள்.  பௌத்த ஆக்கிரமிப்பு எதிராக கூறுவதாக போக்கு காட்டிவிட்டு தமிழரிடையே மத வெறுப்பை தூண்டும் நஞ்சை அறிக்கை  முழுவதுமே கச்சிதமாக  கொட்டியுள்ளார் இந்த சச்சி என்ற மதவெறியர்.  

இதில் வரலாறு என எமக்கு சம்பந்தமே இல்லாத அலாவுதீன் கிஜ்லி…சலாவுதீன் பஜ்ஜி என்று இவர் ஆரம்பிக்கும் போதே…மூலப்பிரதி நாக்பூரில் தயாரானது வெட்ட வெளிச்சமாகிறது🤣.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய போர்த்துகேயரின் கொடுமைக்காக, இப்போ இருக்கு கிறிஸ்தவ தமிழன் மீது வெறுப்பை உமிழும் சச்சி….

 இன்றும் எம்மை காவு கொள்ளும் பெளத்த சிங்கள பேரினவாதம் மீது ஒரு வன்சொல் சொல்லமாட்டார்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சி சீ சச்சி 

கொஞ்சநாளா ஒரு மார்க்கமா இருக்கிறியளே?

  • கருத்துக்கள உறவுகள்+

 

மத வெறியை விதைப்போர் தோல்வியே காண்பர் - சரத் பொன்சேகாவுக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் எச்சரிக்கை

 
 
 
மறுவளத்தாலை பார்த்தால் இக்கூற்று இந்தக் கிழட்டுக்கும் பொருந்தும், கண்டியளோ!
 
 

image

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிப்பது என்னவோ பௌத்தத்திற்கு எதிரானது போல, வாசகர்களை கவர்வதற்காக, தொடர்ந்து வாசிக்க வைக்க. ஆனால் உள்ளடக்கம், முடிவு எல்லாமே அப்பாவி தமிழ் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஏவும் கணை.  திஸ்ஸ மகா விகாரை கட்டப்பட்டதன் காரணத்தை இவரிடமும் கேளுங்கள் என்று சரத் வீர சேகர கூறுகிறார். இவரது கிறிஸ்தவர்களுக்கான எதிர்ப்பு, வெறுப்பு  இந்த விகாரை கட்டுமானத்தோடேயே ஆரம்பித்தது என நினைக்கிறேன். இவர் வெறுப்பை விதைக்க விதைக்க, இவர்மேல் அவமரியாதையும் மதங்களுக்குள் புரிந்துணர்வும் தமிழரிடையே ஏற்படுகிறது. அதை ஏற்படுத்தி, வளர்க்கும் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி, பௌத்தம், மதம் நல்லிணக்கத்தை  புரிந்துகொள்ளுமட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவை எங்காவது ஒரு மனோ வைத்திய நிபுணரிடம் காட்டி உடனடியாக சிகிச்சையளித்தால் நல்லது. அல்லது போகிற போக்கில் இவர் ஒரு டிமென்ஷியா வியாதிக்காரராக மாறப்போகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

ஐயாவை எங்காவது ஒரு மனோ வைத்திய நிபுணரிடம் காட்டி உடனடியாக சிகிச்சையளித்தால் நல்லது. அல்லது போகிற போக்கில் இவர் ஒரு டிமென்ஷியா வியாதிக்காரராக மாறப்போகிறார். 

மாறியே விட்டார். நேரம், இடம், ஆள் பாத்து ஒவ்வொரு அறிக்கை விடுகிறார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.